தேவையான தலைப்பின் மேல் சொடுக்கவும்
1.தெய்வப் பெயர்த் தொகுதி
2.மக்கள் பெயர்த் தொகுதி
3.விலங்கின் பெயர்த் தொகுதி
4.மரப் பெயர்த் தொகுதி
5.இடப் பெயர்த் தொகுதி
6.பல் பொருள் பெயர்த் தொகுதி
7.செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி
8.பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
9.செயல் பற்றிய பெயர்த் தொகுதி
10.ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
11.ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி
12.பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி
1 தெய்வப் பெயர்த் தொகுதி
** காப்பு
#0
தந்தி முகத்து எந்தை சதங்கைப் பதம் போற்றி
சிந்தை விளக்காம் திவாகரத்துள் வந்த
தொகுதி ஒரு பன்னிரண்டும் சோராமல் நேரே
பகுதி உற மனமே பற்று
#1
** சிவன்
சங்கரன் இறையோன் காமதகனன்
கங்காதரனே கறைமிடற்றண்ணல்
கூற்றைஉதைத்தோன் குன்றவில்லி
ஏற்றுவாகனன் திரியம்பகன் சோதி \
நக்கன் சடையோன் நாரிபாகன்
முக்கண் பகவன் பசுபதி பரமன்
கொன்றைசூடி கொலைமழுஆளி
ஈமத்துஆடி பிஞ்ஞகன் பித்தன்
ஆனைஉரித்தோன் அரன் சிவன் உருத்திரன்
காலகாலன் கபாலமூர்த்தி
நீலகண்டன் நீறுஅணிகடவுள்
அரவாபரணன் ஆர்அழல்ஆடி
பிறையதுசூடி பெருமான் உமாபதி
அழலதுஏந்தி அமலன் ஆநந்தன்
பரசுபாணி சுடலைஆடி
மான்இடம்ஏந்தி மறைமுதல் யோகி
புலித்தோல்உடையோன் புரம்மூன்றுஎரித்தோன்
பினாகபாணி பேயோடுஆடி
பூதநாதன் புணர் கங்காளன்
ஞானமூர்த்தி ஈசன் அனாதி
ஐம்முகன் பகவன் ஆதி பாண்டரங்கன்
அந்திவண்ணன் ஆல்அமர்கடவுள்
நந்தி நம்பன் நாதன் தற்பரன்
கண்ணுதல்மூர்த்தி கைலைஆளி என்று
எண்ணிய நாமம் இன்னவும் பலவே
**62 பெயர்கள் 1
#2
**திருமால்
மாயோன் மாதவன் நாரணன் கேசவன்
சீதரன் திருமகள் பூமி கொழுநன்
விண்டு விறல் அரி திரிவிக்கிரமன்
உந்திபூத்தோன் உவணம்உயர்த்தோன்
வாமனன் கண்ணன் கோவிந்தன் அச்சுதன்
ஆழ் கடல்துயின்றோன் அரவணைச்செல்வன்
சக்கராயுதனே சங்கம்ஏந்தி
கரும் கடல்வண்ணன் கமலக்கண்ணன்
சாரங்கபாணி தகு பஞ்சாயுதன்
உலகம்உண்டோன் உலகினைஅளந்தோன்
நாரசிங்கன் ஆதி வராகன்
பதுமநாபன் மதுசூதனனொடு
தாமோதரனே தகு பீதாம்பரன்
காவல்கடவுள் முராரி முகுந்தன்
பெருமான் பிரமன் தந்தை என்று இவை முதல்
திருமாற்கு அனந்தம் சிறந்த தொல் பெயரே
** 38 பெயர்கள் 2
#3
** பிரமன்
உந்தியில்உதித்தோன் ஒளி மலர்மிசையோன்
அன்னஊர்தி அன்னம்உயர்த்தோன்
நான்முகன் மால்மகன் நலம் கேழ் எண்கணன்
வானவர்முதல்வன் மண்பொதுத்தந்தை
இறைவன் குரவன் மறையோன் விரிஞ்சன்
அந்தணன் ஞானன் அயன் வரன் திசைமுகன்
பிதாமகன் விதாதா கமலயோனி
வேதா போதன் விதி பரமேட்டி
இரணியகருப்பன் படைப்போன் இவை முதல்
அரண் இயல் பிரமற்கு அனந்தம் பெயரே
**27 பெயர்கள் 3
** இந்திரன்
புரந்தரன் புனிதன் பொன்நகர்க்குஇறைவன்
வாசவன் அமரர்கோன் மால் முகில்ஊர்தி
வேள்விநாயகன் விண்முழுதுஆளி
ஆயிரம்கண்ணன் அயிராணிகேள்வன்
மருத்துவன் மகவான் வலாரி விருத்திராரி
வெள்ளைவாரணன் இமையவர்வேந்தன்
பாகசாதனன் ஆகண்டலனே
வச்சிரபாணி சதக்கிருது என்று இவை
எச்சம்இல் இந்திரற்கு இயன்ற தொல் பெயரே
** 21 பெயர்கள் 4
#5
** கணபதி
ஒற்றைக்கொம்பன் விநாயகன் ஐங்கரன்
வெற்றி யானை முகவன் கணபதி
பாசாங்குசதரன் ஆகுவாகனனே
** 6 பெயர்கள் 5
#6
** முருகன்
முருகன் சூர்ப்பகை செட்டி குமரன்
அறுமீன்காதலன் சேவலங்கொடியோன்
கார்த்திகேயன் கடம்பன் சுவாமி
வேலுடைக்கடவுள் மேலவர்க்குஇறைவன்
வரைபகஎறிந்தோன் வள்ளிமணாளன்
அரன்மகன் குறிஞ்சிமன் சரவணத்துஉதித்தோன்
அறுமுகன் விசாகன் குகன் சேய் செவ்வேள்
தேவர்சேனாபதி மயில்ஆளி சேந்தன்
கந்தன் காங்கேயன் வேள் எனச் செப்புவர்
** 26 பெயர்கள் 6
#7
** காமன்
வேனில்ஆளி வேள் மதன் அனங்கன்
மாரன் பூஆளி மன்மதன் கந்தர்ப்பன்
பஞ்சபாணன் கருப்புவில்லி
இரதிகாந்தன் மகரம்உயர்த்தோன்
திருமால்புதல்வன் வசந்தன் என்று இவை
வரு மால் காமற்கு இயன்ற வண் பெயரே
** 14 பெயர்கள் 7
#8
** வைரவன்
வைரவன் காரி வடுகக்கடவுள்
** 2 பெயர்கள் 8
#9
** ஐயன்
கோழிக்கொடியோன் சாதவாகனன்
காரிசாத்தன் கடல்நிறஐயன்
** 4 பெயர்கள் 9
#10
** வைச்சிரவண்ணன் பெயர்
மந்திரி குபேரன் நிதிக்கோன் இயக்கன்
பிங்கலன் அரற்குப்பிரியாத்தோழன்
வடதிசைத்தலைவன் இயக்கர்வேந்தன்
அளகைஆளி ஆய்முற்காவலன்
புட்பகஊர்தி தனதன் மரகதன் என
வைப்ப நாமம் வைச்சிரவணற்கே
** 13 பெயர்கள் 10
#11
** அருகன் பெயர்
அநகன் அசலன் அதிகுணன் அபயன்
அமைவன் அறிவன் அதிசயன் அமலன்
பூரணன் புங்கவன் புணர் முக்குடையோன்
அசோகுடைச்செல்வன் அண்ணல் தத்துவன்
ஆதியங்கடவுள் அறஆழிஅந்தணன்
அரியணைச்செல்வன் அருள்ஆழிவேந்தன்
பண்ணவன் பகவன் எண்குணன் மாசேனன்
விண்ணவன் தேவன் விறலோன் விளங்கு ஒளிப்
பொன்எயில்நாதன் பூமிசைநடந்தோன்
முனைவன் வீரன் முதல்வன் புனிதன்
காமன்காய்ந்தோன் கமலஊர்தி
சிநேந்திரன் திகம்பரன் சாந்தன் புண்ணியன்
மூர்த்தி ஆசான் முழுதுஒருங்குஉணர்ந்தோன்
வரதன் சினன் வரன் என்று இவை முதலா
அருகற்கு இன்னும் அனந்தம் பெயரே
** 43 பெயர்கள் 11
**புத்தன் பெயர்
#12
அண்ணல் வாமன் அருங்கலைநாயகன்
புண்ணியமுதல்வன் ஆதி புங்கவன்
பாரின்மிசையோன் சாந்தன் புனிதன்
பகவன் சைனன் அறவன் மூர்த்தி
போதிவேந்தன் சினன் வரன் புத்தன்
ஏகதேவன் முக்குற்றம் கடிந்தோன்
அருள்நெறிசுரக்கும்செல்வன் அனந்தலோசனன்
வளர்ந்த பூமிசைநடந்தோன்
அகளங்கன் முத்தன் புண்ணியமூர்த்தி
பஞ்சதாரை விட்டு அவுணர்க்கு ஊட்டிய
எஞ்சல்இல் பெருமாற்கு இன்னவும் பலவே
**25 பெயர்கள் 12
#13
** நமன் பெயர்
அந்தகன் தருமன் தென்திசைமுதல்வன்
சண்டன் மறலி கூற்று சமன் ஞமன்
செங்கோல்கடவுள் இயமன் என்று இவை
தங்கிய நமன் மேல் தரும் பெயராகும்
** 10 பெயர்கள் 13
#14
** காலன் பெயா
சண்டனும் மறலியும் கூற்றும் சமனும் என்று
இந்த வகைப் பேர் காலற்கும் ஆகும்
** 4 பெயர்கள் 14
#15
** உமையவள் பெயர்
காமக்கோட்டி அம்பிகை கெளரி
ஆரியை சத்தி அயிராணி பார்வதி
இமயவல்லி உமையவள் பேரே
** 8 பெயர்கள் 15
#16
** கங்கையின் பெயா
பகீரதி சானவி வரநதி சுரநதி
திரிபதகை மந்தாகினி இவை கங்கை
** 6 பெயர்கள் 16
** காடுகாள் பெயர்
காடுகாள் மோடி காரிதாய் கொற்றி
மாரி சூரி வடுகி மூதணங்கே
** 7 பெயர்கள் 17
#17
** திருமகள் பெயர்
பொறி மா ஆக்கம் செல்வி பொன் பூமகள்
செய்யாள் இந்திரை திருமகள் பெயரே
கமலை பதுமை விமலை கோகனகை
அனையவும் அவள் பெயர் ஆகும் என்ப
** 12 பெயர்கள் 18
#!9
** வாக்கின் செல்வியின் பெயர்
பாரதி வாணி பனுவலாட்டி
வெண்தாமரையாள் வெள்ளைமேனியாள்
நான்முகன்கிழத்தி நாமகள் கலைமகள்
உலகமாதா ஊர் பூரவாகனி
ஞானமூர்த்தி நல் பாமடந்தை
சாவித்திரியே காயத்திரி என
வாக்கின் செல்வியை நோக்கிய பெயரே
**14 பெயர்கள் 19
#20
** சேட்டையின் பெயர்
முகடி தெளவை கலதி மூதேவி
காக்கைக்கொடியாள் கழுதைவாகனி
கேட்டை கெடல்அணங்கு சேட்டை பெயரே
** 8 பெயர்கள் 20
#21
** இந்திராணியின் பெயர்
சுந்தரி சசியே அயிராணி புலோமசை
இந்திரன் தேவிக்கு எய்தும் பெயரே
** 4 பெயர்கள் 21
#22
** காளியின் பெயர்
சூலி எண்தோளி தாருகவிநாசனி
மாதரி வீரி கெளரி முக்கண்ணி
பைரவி குமாரி சாமுண்டி சண்டிகை
யோகினி வேதாளி யாமளை மா காளி
** 14 பெயர்கள் 22
#23
** பகவதியின் பெயர்
கொற்றவை ஐயை கார்த்திகை கெளரி
துர்க்கை சூலி மகிடன்காய்ந்தாள்
நீலி எண்தோளி விந்தை சயமகள்
இரும் கலைஊர்தி எழில் அரிஏறி
மேதித்தலைமிசைவிசயை அந்தரி
மாலுக்குஇளையாள் சக்கராயுதியே
பாலைக்கிழத்தி பண் அம்பணத்தி
நாராயணியே கன்னி குமரி
சீர் சால் பகவதி சிறந்த தொல் பெயரே
** 22 பெயர்கள் 23
#24
** இடாகினி பெயர்
வஞ்சனி மாயவள் வலவை இடாகினி
**3 பெயர்கள் 24
#25
** யோகினியின் பெயர்
சன்மினி சூர்மகள் யோகினி ஆகும்
**2 பெயர்கள் 25
#26
**அமரர் மாதர் பெயர்
அரம்பையர் அரமகளிர் அமரர் மாதர்
** 2 பெயர்கள் 26
#27
** தெய்வப் பெண் பொதுப் பெயர்
அணங்கும் சூரும் தெய்வப்பெண் பொதுப்பெயர்
** 2 பெயர்கள் 27
#28
** தேவர்கள் பொதுப்பெயர்
வானவர் இமையவர் விண்ணவர் கடவுளர்
அமரர் சுரர் பூலவர் அண்டர் புத்தேளிர்
ஐயர் உம்பர் தேவர்கள் பொதுப்பெயர்
பண்ணவர் பகவர் தீர்த்தர் பட்டாரகர்
புங்கவர் எனவும் கடவுளர் பொதுப்பெயர்
** 16 பெயர்கள் 28
#29
** அசுரர் பெயர்
தானவர் அவுணர் தகுவர் தைத்தியர் என்று
இனைய நான்கும் நிசாசரரும் அசுரர்
** 5 பெயர்கள் 29
#30
** மாவலியின் பெயர்
வைரோசனனே மாவலி அவுணன்
** 1 பெயர் 30
#31
** அரக்கர்
அரக்கர் இராக்கதர் நிசாசரர் நிருதர் என்று
உரைத்த நான்கும் ஒன்றன் பால
சாலகடங்கடரும் பிசிதாசனரும்
யாதுதானவரும் அவ் இனத்தவரே
** 6 பெயர்கள் 31
#32
** வித்தியாதரர் பெயர்
விஞ்சையர் கேசரர் வித்தியாதரர்
** 2 பெயர்கள் 32
#33
** கந்திருவர் பெயர்
தந்திரர் கின்னரர் வீணைவல்லவர்
கந்திருவர் பெயர் எனக் கருதல் வேண்டும்
** 3 பெயர்கள் 33
#34
** பூத கணத்தின் பெயர்
சாதகம் கிருத்திமம் குறள் கூளி பாரிடம்
பூதகணம் எனப் புகன்றனர் புலவர்
** 5 பெயர்கள் 34
#35
** பேயின் பெயா
கழுது சோகு கடி கணம் மண்ணை
அலகை கூளி பிசாசு வேதாளம்
பிரேதகம் சாவோடு இணங்கு குணபாசி என்று
இனைய ஈராறும் பேய் எனல் வேண்டும்
** 12 பெயர்கள் 35
#36
** ஆகாசத்தின் பெயர்
அந்தரம் ஆசினி அம்பரம் மங்குல்
அண்டம் வானம் ககனம் மீ வெளி
விண் நாகம் மாகம் விசும்பு தலை உம்பர்
இடம் குடில் என்று ஆங்கு இவை பதினேழும்
அடங்கல்இல் ஆகாயப் பெயர் ஆகும்
** 17 பெயர்கள் 36
#37
** காற்றின் பெயர்
வாதம் கூதிர் வங்கூழ் கால் வளி
ஊதை அனிலம் கோதை நீழல் ‘
உலவை மாருதம் மருத்து பவனம்
வாடை ஒலியே கூதை உயிர்ப்பே
வேற்றலம் கொண்டல் கோடை என்று இருபதும்
காற்றின் பெயர் எனக் கருதல் வேண்டும்
** 20 பெயர்கள் 37
#38
** பனிக்காற்றின் பெயர்
கூதிரும் ஊதையும் குளிர் பனிக்காற்றே
** 2 பெயர்கள் 38
#39
** வடகாற்றின் பெயர்
வாடை வடந்தை வடகாற்று ஆகும்
** 2 பெயர்கள் 39
#40
** மேல் காற்றின் பெயர்
கோடை மேல்காற்று
** 1 பெயர் 40
#41
** கீழ் காற்றின் பெயர்
கொண்டல் கீழ்காற்று
** 1பெயர் 41
#42
** தென்றவின் பெயர்
மந்தாநிலமே மலயக்காலே
தென்கால் வசந்தன் தென்றல் என்று இசைப்பர்
** 4 பெயர்கள் 42
#43
** சுழன்று எழு காற்றின் பெயர்
சூறை சாரிகை சுழன்றுஎழுகாற்றே
** 2 பெயர்கள் 43
#44
** நெருப்பின் பெயர்
அழல் அங்காரகன் அங்கி கனலி
எரி தழல் தபனன் பாவகன் தீ அனல்
செஞ்சுடர்ப்பகவன் ஞெகிழி உதாசனன்
உதவகன் தனஞ்சயன் வசு எழுநா அரி
தென்கீழ்த்திசையோன் வன்னி தேயு என்று
இன்னவை பிறவும் நெருப்பின் பெயரே
** 21 பெயர்கள் 44
#45
** வடவாமுகாக்கினியின் பெயர்
உத்தரமடங்கல் ஊழித்தீ என
வைத்த கடைஅனல் வடவாமுகமே
** 3 பெயர்கள் 45
#46
** விளக்கின் பெயா
தீபமும் சுடரும் விளக்கு எனச் செப்புவர்
** 2 பெயர்கள் 46
#47
** அனற்பொறியின் பெயர்
புலிங்கம் அனற்பொறி
** 1 பெயர் 47
#48
** அனல்திரளின் பெயர்
உற்கம் அனல்திரள்
** 1 பெயர் 48
#49
** காட்டு எரியின் பெயர்
தாவம் காட்டுஎரி
** 1 பெயர் 49
#50
** தீக் கடை கோலின் பெயர்
அரணி ஞெலிகோல் தீக்கடைகோலே
** 2 பெயர்கள் 50
#51
** தீக்கடவுளின் பெயர்
பாவகன் அத் தீக் கடவுள் பெயரே
** 1 பெயர் 51
#52
** நீரின் பெயர்
அறலும் புனலும் அப்பும் பாணியும்
உதகமும் கமலமும் அமுதமும் கவந்தமும்
பயமும் சலிலமும் அயமும் அளகமும்
புவனமும் வனமும் கோவும் கீலோலமும்
காண்டமும் தோயமும் நாரமும் நீரே
** 19 பெயர்கள் 52
#53
** வெள்ள நீரின் பெயர்
நீத்தம் பிரளயம் வாரி வெள்ளநீர்
** 3 பெயர்கள் 53
#54
** புனற்கு அரசன் பெயர்
மற்று அப் புனற்குஅரசன் வருணன் ஆகும்
** 1 பெயர் 54
#55
** அருக்கன் பெயர்
வெய்யோன் இருள்வலி பதங்கள் சூரியன்
சுடரவன் தரணி உதயன் ஆதவன்
எல்லை மார்த்தாண்டன் தினகரன் பனிப்பகை
பரிதி செங்கதிர் அலரி பானு
வெஞ்சுடர்க்கிரணன் பகலவன் வேந்தன்
ஆயிரம்கதிரோன் அழலவன் திவாகரன்
இரவி பாற்கரன் என்றூழ் அருணன்
ஆதித்தன் கனலி ஞாயிறு விரிச்சிகன்
சான்றோன் அரியே தபனன் என்று இனையவும்
ஆன்ற அருக்கற்கு அனந்தம் பெயரே
** 33 பெயர்கள் 55
#56
** சந்திரன் பெயர்
அம்புலி திங்கள் குபேரன் அருச்சிகன்
நிசாசரன் இமகரன் ஆலோன் களங்கன்
தண்சுடர்க்கலையோன் இராக்கதிர் தானவன்
வியோமத்து உடுபதி அமுதகிரணன்
இந்து சோமன் பிறை மதி சசி விது என
வந்தன பிறவும் நிலவும் சந்திரன்
** 20 பெயர்கள் 56
#57
** செவ்வாயின் பெயர்
அங்காரகன் குசன் ஆரல் வக்கிரன்
மங்கலன் அறிவன் செந்தீவண்ணன்
பூமகன் நிலமகன் குருதி சேய் செவ்வாய்
நாமம் என்று நவின்றனர் புலவர்
** 11 பெயர்கள் 57
#58
** புதன் பெயர்
அருணன் தூதுவன் அனுவழி மேதை
மதிமகன் பாகன் மாலவன் கணக்கன்
புந்தி புலவன் பண்டிதன் செளமியன்
சிந்தை கூரியோன் அறிவன் புதன் என
வந்த நாமம் மற்று அவற்கு ஆகும்
** 14 பெயர்கள் 58
#59
** வியாழத்தின் பெயர்
மந்திரி ஆசான் பீதகன் சுரகுரு
அந்தணன் அரசன் ஆண்டளப்பான் பிரகற்பதி
சுந்தரப் பொன் குரு மறையோன் வியாழம்
** 11 பெயர்கள் 59
#60
** சுக்கிரன் பெயர்
பளிங்கு பார்க்கவன் புகர் புயல் மழைக்கோள்
விளங்கு திங்கள் பிரசுரன் சல்லியன்
ஒள்ளியோன் சுங்கன் அசுரமந்திரி என
வெள்ளி சிதன் பிருகு சுக்கிரன் பெயரே
** 14 பெயர்கள் 60
#61
** சனியின் பெயர்
மந்தன் காரி கரியோன் முடவன்
அந்தன் நீலன் கதிர்மகன் கீழ் மகன்
பங்கு மேற்கோள் செளரி முதுமகன்
சந்தில்சாவகன் சனியின் பெயரே
** 13 பெயர்கள் 61
#62
** இராகுவின் பெயர்
இராகுக்கோள் கரும்பாம்பு
** 1 பெயர் 62
#63
** கேதுவின் பெயர்
கேதுக்கோள் செம்பாம்பு
** 1 பெயர் 63
#64
** அனந்தன் பெயர்
அனந்தன் பெயரே சேடன் ஆகும்
** 1 பெயர் 64
#65
** மேட இராசியின் பெயர்
வருடை உதள் தகர் மறி மை கொறி என
விரியும் ஆட்டின் பேர் மேட இராசி
** 6 பெயர்கள் 65
#66
** இடப இராசியின் பெயர்
பாறல் புல்லம் பாண்டில் பசு மூரி
ஏறு முதல் வந்தன இடப இராசி
** 6 பெயர்கள் 66
#67
** மிதுனத்தின் பெயர்
பாடவை ஆடவை இரட்டை சவைமகள்
மேவும் யாழ்ப் பல் பெயர் தண்டே மிதுனம்
** 6 பெயர்கள் 67
#68
** கர்க்கடகத்தின் பெயர்
அலவன் நள்ளி குளிர் ஞெண்டு ஆர் மதி
களவன் என்று இவை கர்க்கடகப் பெயரே
** 6 பெயர்கள் 68
#69
** சிங்கத்தின் பெயர்
அரி மா புலி ஐயானனம் யாளி
தெரியின் புலி சீயப் பல் பெயர் சிங்கம்
** 5 பெயர்கள் 69
#70
** கன்னியின் பெயர்
பெண்மைப் பெயரே கன்னிக்கும் ஆகும்
** 2 பெயர்கள் 70
#71
** துலாத்தின் பெயர்
நிறையே கட்டளை வாணிகன் நிறுப்பான்
துலையே கோல் எனத் துலாப் பெயர் பெறுமே
** 6 பெயர்கள் 71
#72
** விருச்சிகத்தின் பெயர்
தெறுக்கால் பறப்பன் தேளே விருச்சிகம்
நலம் என் பெயரும் தேளின் மேற்றே
** 4 பெயர்கள் 72
#73
** தனுவின் பெயர்
சாபம் காண்டீவம் தனுவின் பெயரே
** 2 பெயர்கள் 73
#74
** மகரத்தின் பெயர்
மானே கலை சுறா மகரப் பெயரே
** 3 பெயர்கள் 74
#75
** கும்பத்தின் பெயர்
குடமே சாடி பெயரே கும்பம்
** 2 பெயர்கள் 75
#76
**மீனத்தின் பெயர்
மீனம் மீனின் பல பெயர் பெறுமே
** 76
#77
** அச்சுவினியின் பெயர்
இரலை ஐப்பசி யாழ் ஏறு தலைநாள்
புரவி மருத்துவநாள் அச்சுவினி என்ப
**7 பெயர்கள் 77
#78
** பரணி நாளின் பெயா
காடு கிழவோன் பூதம் அடுப்பே
தாழி பெருஞ்சோறு தருமன்நாள் போதம் எனப்
பாகுபட்டது பரணிநாள் பெயரே
** 8 பெயர்கள் 78
#79
** கார்த்திகையின் பெயர்
அங்கி ஆரல் அளக்கர் அளகு இரால்
பொங்கிய நாடன் நாவிதன் வாணன்
தங்கு ஒளி அறுமீன் தழல்நாள் கார்த்திகை
** 10 பெயர்கள் 79
#80
** உரோகிணியின் பெயா
பண்டி பார் சகடு சாகாடு வையம்
ஒண் திறல் உருள் தேர் அயன்நாள் உரோகிணி
** 8 பெயர்கள் 80
#81
** மிருகசீரிடத்தின் பெயர்
மாழ்கு பேராளன் மான்தலை இந்திரன்
மார்கழி நரிப்புறம் மதிநாள் மும்மீன்
பாலை வெய்யோன் மிருகசீரிடப் பெயர்
** 10 பெயர்கள் 81
#82
** திருவாதிரையின் பெயர்
மூதிரை செங்கை யாழ் ஈசர்தினம் என
ஆதிரை தன் பெயராகும் என்ப
** 4 பெயர்கள் 82
#83
** புனர்பூசத்தின் பெயர்
அதிதிநாள் மூங்கில் கரும்பு ஆவணம் பாலை
புனிதம் பிண்டி புனர்தம் புனர்பூசம்
** 8 பெயர்கள் 83
#84
** பூச நாளின் பெயர்
கொடிறு காற்குளம் சுரர் குரு நாள் வண்டு
புணர்வதாகும் பூசநாள் பெயரே
** 4 பெயர்கள் 84
#85
** ஆயிலியத்தின் பெயர்
அரவின்நாள் கெளவை ஆயிலியப் பேர்
** 2 பெயர்கள் 85
#86
** மகத்தின் பெயர்
வேட்டுவன் கொடுநுகம் எழுவாய் எழும் சனி
வாய்க்கால் பிதிர்நாள் மாசி மகம் ஆகும்
** 6 பெயர்கள் 86
#87
** பூரத்தின் பெயர்
இடை அது எழும் சனி எலியே தூர்க்கை
பகவதிநாள் நாவிதன் கணையே பூரம்
** 6 பெயர்கள் 87
#88
** உத்தரத்தின் பெயர்
பங்குனி கடை அது எழும்சனி பாற்குனி
மான்ஏறு கதிர்நாள் உத்தரம் ஆகும்
** 5 பெயர்கள்
#89
** அத்தத்தின் பெயர்
கைம்மீன் காமரம் களிறு கெளத்துவம்
நவ்வி கன்னி ஐவிரல் அத்தம்
** 7 பெயர்கள் 89
#90
** சித்திரை நாளின் பெயர்
நெய்வான் மீன் சுவை பயற்றொடு நேர்வான்
செவ்விதின் துவட்டாநாள் சித்திரை என்ப
** 6 பெயர்கள் 90
#91
** சோதி நாளின் பெயர்
விளக்கே வீழ்க்கை வெறுநுகம் மரக்கால்
துளக்கம்இல் அனிலநாள் சோதிநாள் ஆகும்
** 5 பெயர்கள் 91
#92
** விசாக நாளின் பெயர்
முறமே முற்றில் வைகாசி அனிலநாள்
பெறுமே சுளகு விசாகநாள் பெயரே
** 5 பெயர்கள் 92
#93
** அனுடத்தின் பெயர்
பனை தேள் பெண்ணை புல் தாளி போந்தை
மித்திரநாள் இவை அனுடப் பெயரே
** 7 பெயர்கள் 93
#94
** கேட்டையின் பெயர்
துளங்கு ஒளி வல்லாரை வேதி எரி தழல்
கிளந்த இந்திரன்நாள் பின்றாக் கேட்டை
** 5 பெயர்கள் 94
#95
** மூலத்தின் பெயர்
கொக்கே தேட்கடை குருகு வில் அன்றில்
முற்றும் ஆனி அசுரநாள் மூலம்
** 7 பெயர்கள் 95
#96
** பூராடத்தின் பெயர்
உடைகுளம் முற்குளம் நீர்நாள் பூராடம்
** 3 பெயர்கள் 96
#97
** உத்தராட நாளின் பெயர்
ஆடி ஆனி கடைக்குளம் விச்சுவநாள்
நாடில் உத்தராடநாள் ஆகும்மே
** 4 பெயர்கள் 97
#98
** திருவோணத்தின் பெயர்
நலத்தகு வயிரம் நள்ளே சிரவணம்
உலக்கை சோனை மாயோன்நாள் ஓணம்
** 6 பெயர்கள் 98
#99
** அவிட்டத்தின் பெயர்
ஆவணி காக்கை பறவை புள் வசுநாள்
மேவிய அவிட்டமீனின் பெயரே
** 5 பெயர்கள் 99
#100
** சதயநாளின் பெயர்
குன்று போரே சுண்டன் பெரும் செக்கு
தங்கு வருணன்நாள் சதயநாள் ஆகும்
** 5 பெயர்கள் 100
#101
** பூரட்டாதியின் பெயர்
புரட்டாதி முற்கொழுங்கோல் பூரட்டாதி
உரைப்பர் நாழியும் அ நாளுடனே
** 3 பெயர்கள் 101
#102
** உத்தரட்டாதியின் பெயர்
முரசு பிற்கொழுங்கோல் மன்னன் இ மூன்றினோடு
உரைசெய் அறிவன்நாள் உத்தரட்டாதி
** 4 பெயர்கள்
#103
** இரேவதியின் பெயர்
தொழுவே நாவாய் தோணி சூலம்
பஃறி புருடநாள் கடைமீன் இரேவதி
** 7 பெயர்கள் 103
#104
** அருந்ததியின் பெயர்
அருந்ததி சாலி வடமீன் ஆகும்
** 2 பெயர்கள் 104
#105
** வான் மீன் பெயர்
உடு தாராகணம் ஒளி வான்மீனே
** 3 பெயர்கள் 105
#106
** கால நுட்பத்தின் பெயர்
துடியும் கலையும் தொடர் காலநுட்பம்
** 3 பெயர்கள் 106
#107
** நாழிகையின் பெயர்
கன்னலும் இருத்தையும் கடிகையும் பதமும்
சொன்ன விகலையும் நாழிகைத் தொல் பெயர்
** 5 பெயர்கள் 107
#106
** பொழுதின் பெயர்
வேலையும் அமையமும் காலையும் பதமும்
ஏல்வையும் காலமும் பொழுது எனப்படுமே
** 6 பெயர்கள் 108
#109
** முன்னைநாளின் பெயர்
நென்னலும் நெருநலும் முன்னைநாள் ஆகும்
** 2 பெயர்கள் 109
#110
** பின்னைநாளின் பெயர்
பிற்றையும் பின்றையும் பின்னைநாள் ஆகும்
** 2 பெயர்கள் 110
#111
** உச்சியின் பெயர்
நண்பகல் உச்சி
** 1 பெயர் 111
#112
** சந்தியின் பெயர்
அந்தி சந்தி
** 1 பெயர் 112
#113
** சாமத்தின் பெயா
யாமம் சாமம்
** 1 பெயர் 113
#114
** பகலின் பெயர்
எல்லே பகலாம்
** 1 பெயர் 114
#115
** வெயிலின் பெயா
என்றூழ் ஆதபம் வெயில் எனப்படுமே
** 2 பெயர்கள் 115
#116
** சந்திரிகையின் பெயர்
நிலவு சந்திரிகை ஆகும் என்ப
** 1 பெயர் 116
#117
** இரவின் பெயர்
எல்லியும் கங்குலும் யாமமும் மாலையும்
அல்லும் மங்குலும் இரசனியும் அல்கலும்
யாமினியும் நிசியும் எல்லும் இரவே
** 11 பெயர்கள் 117
#118
** இருளின் பெயர்
நிசியே நத்தம் நீலம் அதனொடு
திமிரமும் தமமும் இருள் ஆகும்
** 5 பெயர்கள் 118
#119
** நாளின் பெயர்
பகலும் வைகலும் திவசமும் தினமும்
ஆனியமும் திவாவும் நாள் ஆகும்மே
** 6 பெயர்கள் 119
#!20
** அருணோதையத்தின் பெயர்
வைகறை விடியல் புலரி அருணோதயம்
** 3 பெயர்கள் 120
#121
** திதியின் பெயர்
திதியே பக்கம்
** 1 பெயர் 121
#122
** மாதத்தின் பெயர்
மதியே திங்கள் மாதம் ஆகும்
** 2 பெயர்கள் 122
#123
** முதல் பக்கத்தின் பெயர்
பக்கம் முதலது நந்தை ஆகும்
** 1 பெயர் 123
#124
** இரண்டாம் பக்கத்தின் பெயர்
பத்திரை என்பது இரண்டாம் பக்கம்
** 1 பெயர் 124
#125
** மூன்றாம் பக்கத்தின் பெயர்
மூன்றே சயை பக்கம்
** 1 பெயர் 125
#126
** நான்காம் பக்கத்தின் பெயர்
நான்கே இரித்தை
** 1 பெயர் 126
#!27
** ஐந்தாம் பக்கத்தின் பெயர்
ஐந்தாம் பக்கம் பூரணை ஆகும்
** 1 பெயர் 127
#128
**பாதி நாளின் பெயர்
அரைநாளும் பானாளும் அத்தநாளும் பாதிநாள்
** 3 பெயர்கள் 128
#129
** மாத்திரையின் பெயர்
கணமே மாத்திரை
** 1 பெயர் 129
#130
** நிகழ்காலத்தின் பெயர்
வேலை என்பது நிகழும்காலம்
** 1 பெயர் 130
#131
** வெப்பத்தின் பெயர்
உருப்பம் வெப்பம் ஆகும் என்ப
** 1 பெயர் 131
#132
** கோடையின் பெயர்
வேனில் கோடை மிசைப் பேராகும்
**1 பெயர் 132
#133
** சிறு பொழுதின் பெயர்
ஒல்லை சிறுவரை சிறுபொழுது ஆகும்
** 2 பெயர்கள் 133
#134
** அறு வகைப் பருவமாவன
காரே கூதிர் முன்பனி பின்பனி
சீர் இளவேனில் முதுவேனில் என்று ஆங்கு
இருமூன்று வகைப் பருவம் அவைதாம்
ஆவணி முதலா இரண்டு இரண்டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே
** 6 பெயர்கள் 134
#135
** பனியின் பெயர்
இமமும் துகினமும் மஞ்சும் நீகாரமும்
பனியின் பெயர் எனப் பகரப்படுமே
** 4 பெயர்கள் 125
#136
** கார் காலத்தின் பெயர்
கார் எனும் காலப்பெயர் சரற்காலம்
** 1 பெயர் 136
#137
** கூதிர்க் காலத்துக்கும் பனிக் காலத்துக்கும் பெயர்
கூதிர்க்காலமும் குளிர் பனிக்காலமும்
ஆகும் என்ப சிசிரநாளே
** 1 பெயர் 137
#138
** பருவத்தின் பெயர்
ஆனியமும் இருதுவும் பருவம் ஆகும்
** 2 பெயர்கள் 138
#139
** காலமாவன
பருவமும் யாண்டும் காலம் ஆகும்
** 2 பெயர்கள் 139
#140
** உகத்தின் பெயர்
ஊழியும் உறையுளும் உகம் ஆகும்மே
** 2 பெயர்கள் 140
#141
** உகமுடிவின் பெயர்
ஊழியும் மடங்கலும் உகமுடிவு ஆகும்
** 2 பெயர்கள் 141
#142
** நான் முகன் வாழ்நாளின் பெயர்
நான் முகன் வாழ்நாள் கற்பம் ஆகும்
** 1 பெயர் 142
#143
** வாழ்நாளின் பெயர்
ஆயுள் ஆயுகம் வாழ்நாள் என்ப
** 2 பெயர்கள் 143
#144
** மேலின் பெயா
மேக்கு வலம் மீ உம்பர் மேல் ஆகும்
** 4 பெயர்கள் 144
#145
** கீழின் பெயர்
கிழக்கு கீழே
** 1 பெயர் 145
#146
** வருடத்தின் பெயர்
துவலை பெயலை துளியே மாரி
உறை பெயல் ஆலி உதகம் சிதறி
தூவல் சீகரம் தூறல் வருடம்
** 12 பெயர்கள்146
#147
** மேகத்தின் பெயர்
மேகம் சீதம் விசும்பு வான் விண் முகில்
கொண்மூ மஞ்சு கொண்டல் மை மழை
எழிலி கார் குயின் கந்தரம் விண்டு
மங்குல் மால் செல் கனமும் வரையார்
** 19 பெயர்கள் 147
#148
** இடியேற்றின் பெயர்
உருமும் செல்லும் அசனியும் உருமேறும்
இடியும் வான்ஏறும் இடியேற்றின் பெயரே
** 6 பெயர்கள் 148
#149
** மழை பெய்து விடுதலின் பெயர்
தலையல் என்பது மழைபெய்துவிடுதல்
** 1 பெயர் 149
#150
** விடாது சொரிதலின் பெயர்
சோனையும் பனித்தலும் விடாதுசொரிதல்
** 2 பெயர்கள் 150
#151
** பெரு மழையின் பெயர்
ஆசாரம் என்பது பெருமழை ஆகும்
** 1 பெயர் 151
#152
** துளியின் பெயர்
தளி பெயல் ஆலி உறை துளி ஆகும்
** 4 பெயர்கள் 152
#153
** ஆலங்கட்டியின் பெயர்
ஆலி ஆலங்கட்டி ஆகும்
** 1 பெயர் 153
#154
** துவலையின் பெயர்
சீகரம் பிதிரே சிதர் அரி சிகரம்
தூவல் என்று இவை துவலை ஆகும்
** 6 பெயர்கள் 154
#155
** மின்னின் பெயர்
தடித்து தடி மின்
** 2 பெயர்கள் 155
#156
** இடியின் பெயர்
இடிப்பெயர் இகுளே
** 1 பெயர் 156
#157
** பரிவேடத்தின் பெயர்
ஊர்கோள் வட்டம் பரிவேடப்பெயரே
** 2 பெயர்கள் 157
#158
** இந்திரவில்லின் பெயர்
வானவில் இந்திரவில் என அறைவர்
** 1 பெயர் 158
#159
** காமன் காண்டீவத்தின் பெயர்
காமன் காண்டீவம் கருப்புவில் ஆகும்
** 1 பெயர் 159
#160
** திவாகர வரலாறு
வடநூற்கு அரசன் தென்தமிழ்க்கவிஞன்
கவி அரங்கேற்றும் உபய கவிப்புலவன்
செறி குணத்து அம்பல் கிழவோன்சேந்தன்
அறிவு கரியாகத் தெரி சொல் திவாகரத்து
** முதலாவது – தெய்வப் பெயர்த் தொகுதி முற்றிற்று
@2 மக்கள் பெயர்த் தொகுதி
#1
** அருந் தவர் பெயர்
துறவோர் ஐயர் மாதவர் முனிவர்
அறவோர் நீத்தோர் அறிஞர் உயர்ந்தோர்
தாபதர் மெய்யர் தவத்தர் தபோதனர்
முனைவர் இருடிகள் படிவர் பண்ணவர்
யோகிகள் கடிந்தோர் பெரியோர் உறுவர் என்று
ஆகிய அந்தணர் அருந்தவர் பேரே
** 21 பெயர்கள் 1
#2
** சைவ தவப் பாலோர் பெயர்
மா விரதியரும் காளாமுகரும்
பாசுபதரும் சைவதவப்பாலோர்
** 3 பெயர்கள் 2
#3
** நாராயண சமயத்தோர் பெயர்
நாராயண சமயத்தோர் பாகவதரே
** 1 பெயர் 3
#4
** சமணர் பெயர்
சாவகர் அருகர் சமணர் ஆகும்
ஆசீவகரும் அத் தவத்தோரே
** 3 பெயர்கள் 4
#5
** புத்தர் பெயர்
புத்தர் சாக்கியர் தேரர் பெளத்தர்
வைத்த சீவகரும் அத் தவத்தோரே
** 4 பெயர்கள் 5
#6
** சமண முனிவர் பெயர்
சாரணர் சமண முனிவர் ஆகும்
** 1 பெயர் 6
#7
** சடை முடியோர் பெயர்
தாபதர் சடைமுடியோர்
** 1 பெயர் 7
#8
** பார்ப்பார் பெயர்
ஐயர் வேதியர் இருபிறப்பாளர்
மெய்யர் மிக்கவர் மறையோர் பூசுரர்
அந்தணர் நூலோர் அறுதொழிலாளர்
செந்தீவளர்ப்போர் உயர்ந்தோர் ஆய்ந்தோர்
ஆதிவருணர் வேதபாரகர்
விப்பிரர் தொழுகுலத்தோர் வேள்வியாளர்
முப்புரிநூலோர் முனிவர் என்று இவை
தப்புஇல் பார்ப்பார்தம் பெயர் ஆகும்
** 20 பெயர்கள் 8
#9
** நூல் உரைப்போர் பெயர்
கணக்காயர் நூல்உரைப்போர்
** 1 பெயர் 9
#10
** கலை வல்லோர் பெயர்
கவிஞர் கலைவல்லோர்
** 1 பெயர் 10
#11
** அறிவுடையோர் பெயர்
சான்றோர் மிக்கோர் நல்லவர் மேலவர்
ஆய்ந்தோர் உயர்ந்தோர் ஆரியர் உலகு என
ஆய்ந்த ஆன்றோர் அறிவுடையோரே
** 9 பெயர்கள் 11
#12
** புலவர் பெயர்
கவிஞர் கலைஞர் கற்றவர் மேதையர்
சவையே சங்கம் முதுவோர் மூத்தோர்
அவையே அறிஞர் புதரே புலவர்
** 11 பெயர்கள் 12
#13
** மிக வல்லோர் பெயா
விபுதர் நிபுணர் குசலர் மிகவல்லோர்
** 3 பெயர்கள் 13
#14
** மூத்தோன் பெயர்
அடிகள் அத்தன் ஐயன் ஆசான்
குரவன் சாமி கோமான் பெருமான்
உரவோன் ஈசன் இறைவன் தலைவன்
விரவு பதி நாதன் மூத்தோன் பெயரே
** 14 பெயர்கள் 14
#15
** பெருமையில் சிறந்தோன் பெயர்
அண்ணலும் குரிசிலும் ஏந்தலும் தோன்றலும்
செம்மலும் பெருமையில்சிறந்தோன் பெயரே
** 5 பெயர்கள் 15
#16
** எப்பொருட்கும் இறைவன் பெயர்
நாதன் நாயகன் அதிபன் காந்தன்
பதி கோன் ஈசன் செம்மல் இறையே
தலைவன் மன்னவன் பிரானே கொழுநன்
அரசன் ஆதி எனப் பதினைந்தும்
உரைசெய் எப்பொருட்கும்இறைவன் மேற்றே
** 15 பெயர்கள் 16
#17
** உயர்ந்தோர் பெயர்
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே
** 1 பெயர் 17
#18
** திரண்டோர் பெயர்
சங்கமும் குழுவும் கூட்டமும் கணமும்
தங்கிய தொகுதியும் சவையும் அவையும்
இங்கு இவை திரண்டோர் யாவர்க்கும் உரிய
** 7 பெயர்கள் 18
#19
** அரசன் பெயர்
புரவலன் கொற்றவன் பெருமான் காவலன்
அரையன் ஏந்தல் கோவே குரிசில்
தலைவன் மன்னவன் வேந்தன் முதல்வன்
நிருபன் பூபாலன் நரபதி பார்த்திவன்
இறைவன் அண்ணல் எனப் பதினெட்டும்
அரசன் தொல் பெயர் ஆகும் என்பர்
** 18 பெயர்கள் 19
#20
** குரு குலத்து அரசர் பெயர்
பரதர் கெளரவர் குருகுலத்துஅரசர்
** 2 பெயர்கள் 20
#21
** கோச் சேரன் பெயர்
பூழியன் உதியன் கொங்கன் பொறையன்
வானவன் குட்டுவன் வானவரம்பன்
வில்லவன் குடநாடன் வஞ்சிவேந்தன்
கொல்லிச்சிலம்பன் கோதை கேரளன்
போந்தின் கண்ணிக்கோன் பொருநைத்துறைவன்
சேரலன் மலயமான் கோச்சேரன் பெயரே
** 17 பெயர்கள் 21
#22
**கோச் சோழன் பெயர்
சென்னி வளவன் கிள்ளி செம்பியன்
பொன்னித்துறைவன் புலிக்கொடிப்புரவலன்
நேரியன் ஆர்த்தார்க்கோன் நேர்இறை அபயன்
நேரிவெற்பன் கோழிவேந்தன்
சூரியன் புனல்நாடன் கோச்சோழன் பெயரே
** 14 பெயர்கள் 22
#23
** கோப் பாண்டியன் பெயர்
செழியன் தமிழ்நாடன் கூடற்கோ தென்னவன்
வழுதி மீனவன் பஞ்சவன் மாறன்
கெளரியன் வேம்பின்கண்ணிக்கோ கைதவன்
பொதியப்பொருப்பன் புனல் வையைத்துறைவன்
குமரிச்சேர்ப்பன் கோப் பாண்டியனே
** 14 பெயர்கள் 23
#24
** சளுக்கு வேந்தர் பெயர்
வேள்புலஅரசர் சளுக்கு வேந்தர்
** 1 பெயர் 24
#25
** குறு நில வேந்தர் பெயர்
வேளிரும் புரோசரும் குறுநிலவேந்தர்
ஆட்டரும் குறும்பரும் ஆகும் என்ப
** 2 பெயர்கள் 25
#26
** மந்திரிக் கிழவர் பெயர்
முதுவர் குரவர் மூத்தோர் முன்னோர்
உழையோர் சூழ்வோர் நூல்வல்லோரே
அமைச்சர் தேர்ச்சித்துணைவர் என்று ஆங்கு
இசைத்த மந்திரிக்கிழவர்க்கு எய்தும்
** 9 பெயர்கள் 26
#27
** நட்பாளர் பெயர்
இனப் பெயர் தன் நட்பாளர்க்கு எய்தும்
** 1 பெயர் 27
#28
** மந்திரித் தந்திரிக்குப் பெயர்
ஏனாதி காவிதி ஆமாத்தியர் எனும் பெயர்
ஆனா மந்திரித்தந்திரிக்கு எய்தும்
** 3 பெயர்கள் 28
#29
** கருமத் தலைவர் பெயர்
வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னர்க்கு
உள்படு கருமத்தலைவர்க்கு ஒன்றும்
** 2 பெயர்கள் 29
#30
** போர்த் தலைவர் பெயர்
பெரும் போர்த்தலைவர் பொருநர் எனப்படுப
** 1 பெயர் 30
#31
** பரிவாரத்தின் பெயர்
பரியாளம் என்பது பரிவாரம் ஆகும்
** 1 பெயர் 31
#32
** செட்டிகள் பெயா
இப்பர் பரதர் வைச்சியர் கவிப்பர்
எட்டியர் இளங்கோக்கள் ஏர்த்தொழிலர் பசுக்காவலர்
ஒப்புஇல் நாய்கர் வினைஞர் வணிகர் என்று
அத் தகு சிரேட்டிகள் செட்டிகள் பெயரே
** 12 பெயர்கள் 32
#33
** காராளர் பெயா
வினைஞர் சூத்திரர் பின்னவர் சதுர்த்தர்
வளமையர் வேளாளர் மண்மகள்புதல்வர்
வார்த்தைத் தொழிலோர் வண் களமர் உழவர்
சீர்த்த ஏரின் வாழ்நர் காராளர்
** 11 பெயர்கள் 33
#34
** மிலேச்சர் பெயர்
மிலேச்சர் ஆரியர்
** 1 பெயர் 34
#35
** சோனகர் பெயா
யவனர் சோனகர்
** 1 பெயர் 35
#36
** மருத்துவர் பெயர்
ஆயுள்வேதியர் மா மருத்துநூலோர்
மா மாத்திரரே பிடகர் மருத்துவர்
** 4 பெயர்கள் 3
#37
** கைக்கோளர் பெயா
தந்துவாயர் காருகர் கைக்கோளர்
** 2 பெயர்கள் 37
#38
** குயவர் பெயர்
கும்பகாரர் குலாலர் வேட்கோவர் என்று
இங்கு இவை குயவர் மட்பகைஞர் என்ப
** 4 பெயர்கள் 38
#39
** உப்பு அமைப்போர் பெயர்
உமணர் அளவர் உப்பு அமைப்போரே
** 2 பெயர்கள் 39
#40
** சித்திரகாரர் பெயர்
ஓவியர் சித்திரகாரர் ஆகும்
** 1 பெயர் 40
#41
** கண்ணாளர் பெயர்
கம்மியர் யவனர் கொல்லர் தபதியர்
அக்கசாலையர் சிற்பியர் அதனொடு
வித்தகர் வித்தியர் புனைவர் அறிவர் என்று
அத் தகு கண்ணாளர் பெயர் என அறைவர்
** 10 பெயர்கள் 41
#41
** தச்சர் பெயர்
தபதியர் மர வினையர் தச்சர் ஆகும்
** 2 பெயர்கள் 42
#43
**கன்னார் பெயர்
கன்னுவர் கஞ்சகாரர் கன்னார்
** 2 பெயர்கள் 43
#44
** தட்டார் பெயர்
செங்கொல்லர் தட்டார் பொன்வினைசெய்வோர்
** 2 பெயர்கள் 44
#45
** வண்ணார் பெயர்
எகாலியர் தூசர் ஈரம் கோலியர்
காழியர் வண்ணார் ஆகக் கருதுவர்
** 4 பெயர்கள் 45
#46
** உறைகாரர் பெயர்
காரோடர் உறைகாரர்
** 1 பெயர் 46
#47
** ஊன் விலைஞர் பெயர்
சூனர் ஊன்விலைஞர்
** 1 பெயர்
#48
** தோல் வினைஞர் பெயர்
பறம்பர் தோல் வினைஞர்
** 1 பெயர் 48
#49
** நாவிதர் பெயர்
பெருமஞ்சிகரே மயிர்வினைஞர் நாவிதர்
** 2 பெயர்கள்
#50
** செக்கார் பெயர்
சக்கிரி நந்திகள் செக்கார் ஆகும்
** 2 பெயர்கள்
#51
** கள் விலைஞர் பெயர்
பழையர் துவசர் படுவர் கள்விலைஞர்
** 3 பெயர்கள்
#51
** சண்டாளர் பெயா
குணுங்கர் வங்கர் கவுண்டர் கனகதர்
இழிஞர் கொலைஞர் புலைஞர் என்று ஆங்கு
இசையும் பெயர் சண்டாளர்க்கு எய்தும்
** 7 பெயர்கள்
#53
**பாணர் பெயர்
சென்னியர் வைரியர் சூதர் மாகதர்
இன்னிசைகாரர் மதங்கர் பாணர்
** 6 பெயர்கள்
#54
** பாடற் கீழ் மக்கள் பெயர்
பண்டரும் ஓவரும் பாடற்கீழ்மக்கள்
**2 பெயர்கள்
#55
** தமிழ்க் கூத்தர் பெயர்
வாயிலோர் தமிழ்க்கூத்தர்
** 1 பெயர்
#56
** கழைக் கூத்தர் பெயர்
வேழம்பர் கழைக்கூத்தர்
** 1 பெயர்
#57
** தோற் கருவி இசைப்போர் பெயர்
இயவர் தோற்கருவிஇசைக்கும்மாக்கள்
** 1 பெயர்
#58
** நரப்புக் கருவி கொளற்கு உரியோர் பெயர்
குயிலுவர் நரப்புக்கருவிகொளற்குரியோர்
** 1 பெயர்
#59
** தொழில் செய்வோர் பெயர்
தொழுவர் கம்மியர் தொழில்செய்வோரே
** 2 பெயர்கள்
#60
** புதியோர் பெயர்
அதிதியர் வம்பலர் புதியோர் ஆகும்
** 2 பெயர்கள்
#61
** மீகாமன் பெயர்
நீகான் மரக்கலன்மீகாமன் ஆகும்
** 2 பெயர்கள்
#62
** அயலோர் பெயர்
நொதுமலர் வம்பலர் அயலோர் ஆகும்
** 2 பெயர்கள்
#63
** வழிச் செல்வோர் பெயர்
பதிகர் என்ப வழிச்செல்வோரே
** 1 பெயர் 63
#64
** அடிமையின் பெயா
ஆளும் தொழும்பும் அடிமை ஆகும்
** 3 பெயர்கள் 64
#65
** மடையார் பெயர்
வாலுவர் கூவியர் மடையர் ஆகும்
** 2 பெயர்கள் 65
#66
** ஏவல் செய்வோர் பெயர்
சிலதர் சிலதியர் சேடர் சேடியர்
பரிசனம் உழையோர் ஏவல்செயற்பாலோர்
** 6 பெயர்கள் 66
#67
** தூதர் பெயர்
வினை உரைப்பாரும் வழி உரைப்பாரும்
அனைய பண்பு உரைப்பாரும் தூதர்
** 3 பெயர்கள் 67
#68
** ஒற்றர் பெயர்
சாரணர் உசாவே ஒற்று எனச் சாற்றுவர்
** 2 பெயர்கள் 68
#69
** வெறியாட்டாளன் பெயர்
வேலன் முருகன் வெறியாட்டாளன்
தேவராளன் படிமத்தோனே
** 4 பெயர்கள் 69
#70
** செவிடர் பெயர்
செவிடர் வதிரர்
** 1 பெயர் 70
#71
** முடவன் பெயர்
முடவன் பங்கு
** 1 பெயர் 77
#72
** அலியின் பெயர்
பேடர் பேடியர் பெண்டகர் பெண்டர் என்று
ஆகிய நான்கும் அலிப் பெயர் ஆகும்
** 4 பெயர்கள் 72
#73
** ஊமையின் பெயர்
மூகையும் மூங்கையும் ஊமை ஆகும்
** 2 பெயர்கள் 73
#74
** குருடர் பெயர்
ஆதர் அந்தர் அந்தகர் குருடர்
** 3 பெயர்கள்
#75
** கூனின் பெயர்
கூனே கோணல் ஆம் எனக் கூறுவர்
** 1 பெயர் 75
#76
** குறளின் பெயர்
சிந்தே குஞ்சம் குறளே வாமனம்
** 3 பெயர்கள் 76
#77
** கீழ் மக்கள் பெயர்
கயவர் கனிட்டர் பூரியர் நீசர்
சுமடர் பேதையர் தீயோர் மூடர்
புல்லார் தேரார் கலர் பொறியற்றார்
சீத்தையர் சிறுமையர் கையர் கண்டகர்
மூர்க்கர் தீம்பர் மூகர் முசுண்டர் என்று
ஆக்கிய பெயர் கீழ்மக்கட்கு ஆகும்
** 20 பெயர்கள்
#78
** அறிவிலான் பெயர்
முழுமகன் சிதடன் இழுதை மூடன்
மண்ணை மடன் பேதை குதலை அஞ்ஞை
அஞரே ஆதன் ஏழை அறிவிலான்
** 12 பெயர்கள்
#79
** தரித்திரர் பெயர்
ஆதுலர் வறியோர் இல்லோர் எளியர்
உறுகணாளர் நல்கூர்ந்தோர் தரித்திரர்
** 6 பெயர்கள்
#80
** துயருறுவோர் பெயர்
ஆர்த்தர் துயருறுவோர்
** 1 பெயர்
#81
** திருடர் பெயர்
கரவடர் சோரர் கள்வர் பட்டிகள்
தேனர் புரையோர் திருடர் ஆகும்
** 6 பெயர்கள்
#82
** உரியோர்
கிழவர் உரியோர்
** 1 பெயர்
#83
** மூதுணர்ந்தோர் பெயர்
முதுவர் மூதுணர்ந்தோர்
** 1 பெயர்
#84
** வல்லாளன் பெயா
வயவன் மீளி வல்லாளன்னே
** 2 பெயர்கள்
#85
** திறலோன் பெயர்
விறலோன் விடலை திறலோன் பெயரே
** 2 பெயர்கள்
#86
** நகர்ப் பதி வாழ்நர் பெயர்
நகர்ப்பதிவாழ்நர் சதுரர் நாகரிகர்
** 2 பெயர்கள்
#87
** தூர்த்தர் பெயர்
விடரே காமுகர் மிகுபோகம்விழையுநர்
படிற்றொழுக்கர் காமத்துப்பாலோர் தூர்த்தர்
** 5 பெயர்கள்
#88
** கட்டிளைமையோன் பெயர்
குமரன் காளை மழவன் சேடன்
முருகன் கட்டிளைமையோன் என மொழிப
** 5 பெயர்கள்
#89
** ஏவுவான் பெயர்
வியவன் ஏவுவான்
** 1 பெயர் 89
#90
** புகழாளன் பெயர்
இயவுள் புகழாளன்
** 1 பெயர் 90
#91
** கரியோன் பெயர்
கள்வன் என் கிளவி கரியோன் என்ப
** 1 பெயர் 91
#92
** கொண்டோற் பிழைத்துப் பெறும் புதல்வன் பெயர்
கொண்டோற்பிழைத்துப்பெறும்புதல்வன் குண்டகன்
** 1பெயர் 92
#93
** கைம்மையிற் பெறும் புதல்வன் பெயர்
கோளில் கைம்மையிற்பெறும் புதல்வன் கோளகன்
** 1 பெயர் 93
#94
** கன்னியிற் பெறும் புதல்வன் பெயர்
கன்னியிற்பெறும்புதல்வன் கானீனன் ஆகும்
** 1 பெயர் 94
#95
** குலம் உள்ளோர் பெயர்
குலீனர் என்ப குலமுள்ளோரே
**1 பெயர் 95
#96
** வல்லோன் பெயர்
வலவை வல்லுநன் வல்லோன் பெயரே
** 3 பெயர்கள் 96
#97
** வல்லுநர் அல்லோர் பெயர்
வல்லார் மாட்டாதார் வல்லுநரல்லோர்
** 2 பெயர்கள் 97
#98
** கூவ நூலோர் பெயர்
உல்லியர் கூவநூல் உரையுணர்வோர்
** 1 பெயர் 98
#99
** கவிகள் பெயர்
நாவலர் கற்றோர் பாவலர் கவிகள்
** 3 பெயர்கள் 99
#100
** கடிகை மாக்கள் பெயர்
மங்கலப்பாடகர் எட்டர் கடிகைமாக்கள்
** 2 பெயர்கள் 100
#101
** கூத்தர் பெயர்
கோடியர் பொருநர் நாடகியர் நிருத்தர்
கண்ணுளர் வயிரியர் வினைஞர் நடர் என்று
எண்ணிய பெயர்கள் கூத்தர்க்கு எய்தும்
** 8 பெயர்கள் 101
#102
** புகழ்வோர் பெயர்
மாகதர் வந்தியர் சூதர் வேதாளியர்
பூகதர் பப்புவர் புகழ்வோர் பெயரே
** 6 பெயர்கள் 102
#103
** தேர்ப்பாகர் பெயர்
சூதரும் வலவரும் தேர்த்தொழில்பாகர்
** 2 பெயர்கள் 103
#104
** யானைப்பாகர் பெயர்
ஆதோரணர் வாதுவர் யானைப்பாகர்
** 2 பெயர்கள் 104
#105
** குதிரை வடிப்போர் பெயர்
வாதுவர் பரிமாவடிப்போரும் ஆகும்
** 1 பெயர்
#106
** இரப்போர் பெயர்
இரவலர் இரவோர் பரிசிலாளர்
யாசகர் என்று இவை இரப்போர் பெயரே
** 4 பெயர்கள் 106
#107
** வரையாது கொடுப்போர் பெயர்
வரையாதுகொடுப்போர் வள்ளியோர் ஆகும்
** 1 பெயர் 107
#108
** தானைத் தலைவர் பெயர்
மானவர் வீரர் மறவர் பொருநர்
ஆன கலியர் மண்டர் மள்ளர்
ஏனை வாள் உழவர் ஏறாளர் கூளியர்
தானைத்தறுகண்ணாளர்தம் பெயரே
** 10 பெயர்கள் 108
#109
** பகைஞர் பெயர்
தரியலர் தெவ்வர் மேவலர் செறுநர்
கருதலர் சேரலர் இரிஞர் ஒன்னார்
ஒல்லார் அரிகள் நள்ளார் அமரார்
ஒட்டார் புல்லார் நேரார் நிகரார்
ஒட்டலர் நேரலர் இகலோர் எதிர்ந்தோர்
விட்டவர் மாற்றலர் முனைந்தோர் என்று ஆங்கு
ஒட்டிய பிறவும் பகைஞர் என்று உரைப்பர்
** 23 பெயர்கள் 109
#110
** மேவினர் பெயர்
ஒல்லுநர் துன்னுநர் ஒட்டுநர் ஒன்றுநர்
நள்ளுநர் தொடர்ந்தோர் மேவினர் நாமம்
** 6 பெயர்கள் 110
#111
** உறவின் பெயர்
ஒக்கல் சுற்றம் உறவு கிளை கேள்
நட்பு மேவினர் சார்ந்தவர் உற்றார்
பந்தம் கூளி கடும்பு குடும்பம்
நம் தமர் சிறந்தோர் நட்டோர் பரிசனம்
அந்தம்இல் உறவு என்று அறைந்தனர் புலவர்
** 17 பெயர்கள் 111
#112
** ஆண் பாலின் பெயர்
ஆடவர் மைந்தர் காளை குமரர்
ஆடூஉ மாந்தர் மகன் புமான் மணாளன்
கூடிய ஆண் பெயர் ஆகக் கூறுவர்
**9 பெயர்கள் 112
#113
** பெண் பாலின் பெயர்
பேதை அங்கனை வனிதை இளம்பிடி
மாது மடவாள் மகடூஉ மங்கை
மடந்தை காரிகை மானினி வஞ்சனி
மாயோள் ஆட்டி பாவை தெரிவை
தையல் அரிவை பெதும்பை பிணா மகள்
நையும் நுண் இடை நாரி என்று ஆங்கு
இருபதும் இரண்டும் பெண்பாற்கு எய்தும்
** 22 பெயர்கள் 113
#114
** எழு வகைப் பருவப் பெண்பால் ஆவன
பேதை பெதும்பை மங்கை மடந்தை
அரிவை தெரிவை பேரிளம்பெண் என
எழு வகைப் பருவப் பெண்பாற்கு எய்தும்
** 7 பெயர்கள் 114
#115
** தலைவி பெயர்
கோமாள் பெருமாட்டி குரத்தி ஐயை
ஆசாள் சாமி இறைமையாட்டி
அடிகள் அத்தை தலைவி பெயரே
** 9 பெயர்கள் 115
#116
** அருந் தவப் பெண் பெயர்
பைம்மையும் கெளந்தியும் அருந்தவப்பெண் பெயர்
** 2 பெயர்கள் 116
#117
** கலன் கழி மகளிர் பெயர்
கைம்மையும் கைனியும் கலன்கழிமகளிர்
** 2 பெயர்கள் 117
#118
** மலடிப் பெயர்
மைம்மை வந்தி மலடிப் பெயரே
** 2 பெயர்கள் 118
#119
** பொதுப்பெண் பெயர்
பரத்தையும் கணிகையும் சூளையும் பொதுப்பெண்
** 3 பெயர்கள் 119
#120
** நாடகக் கணிகை பெயர்
நடியே கூத்தி நாடகக்கணிகை
** 2 பெயர்கள் 120
#121
** பாண் மகள் பெயா
பாடினி விறலி பாட்டி மதங்கி
பாடல்மகடூஉ பாண்மகள் ஆகும்
** 5 பெயர்கள் 121
#122
** ஆடூஉ மகடுஉப் பல பெயர்
அணியில் பண்பில் உவமையொடு அடுத்தன
வரைவுஇல் ஆடூஉ மகடுஉப் பல பெயர்
வரலாற்று முறைமையின் வந்தன கொளலே
#123
** உடன் நிகழ்வான் பெயர்
எமி உடன்நிகழ்வான்
** 1 பெயர் 123
#124
** தனியின் பெயர்
தமி தனி ஆகும்
#125
** குறிஞ்சி நில மக்கள்
குறவர் கானவர் குன்றவர் புனவர்
இறவுளர் குறிஞ்சிநிலமக்கள் பெயரே
** 5 பெயர்கள் 125
#126
** குறிஞ்சி நிலப் பெண்கள் பெயர்
கொடிச்சியர் குறத்தியர் குறிஞ்சிநிலப்பெண் பெயர்
** 2 பெயர்கள் 126
#127
** குறிஞ்சிக்கு இறைவன் பெயர்
கானகநாடன் பொருப்பன் பொருநன்
ஆன மலையன் வெற்பன் சிலம்பன்
சிறந்த நண்பன் என்று இவை முதலாக்
குறிஞ்சிக்குஇறைவன் பெயர் எனக் கூறுவர்
** 7 பெயர்கள் 127
#128
** பாலை நில மக்கள் பெயர்
மறவர் எயினர் பாலைநிலமக்கள்
** 2 பெயர்கள் 128
#129
** பாலை நிலப் பெண்கள் பெயர்
மறத்தியர் எயிற்றியர் வன்கட்பிணாக்கள்
அனைத்தும் அந் நிலத்து அரிவையர் பெயரே
** 3 பெயர்கள் 129
#130
** பாலைக்கு இறைவன் பெயர்
மீளியும் காளையும் விடலையும் என்று இவை
பாலைக்குஇறைவன் பெயர் எனக் கூறுவர்
** 3 பெயர்கள் 130
#131
** பாலை நில மக்கட்கும் அந் நிலத் தலைவர்க்கும்
** பொதுப்பெயர்
கொலைஞர் எயினர் வனசரர் சவரர்
சிலவர் கானவர் மாகுலவர் கிராதர்
புளினர் மறவர் வேடர் என்று ஆங்கு
அனையவர் பொதுப்பெயர் ஆதல் வேண்டும்
** 11 பெயர்கள் 131
#132
** முல்லை நில மக்கள் பெயர்
முல்லையாளர் கோவலர் இடையர்
சொல்லிய வண்டர் பொதுவர் ஆன்வல்லோர்
குடவர் பாலர் தொறுவர் கோவிந்தர்
அண்டர் கோபாலர் ஆயர் அமுதர்
ஒன்றிய முல்லைநிலத்தவர் பெயரே
** 14 பெயர்கள் 132
#133
** முல்லை நில மகளிர் பெயர்
ஆய்ச்சியர் தொறுத்தியர் பொதுவியர் குடத்தியர்
வாய்த்த இடைச்சியர் முல்லைநிலமகளிர்
** 5 பெயர்கள் 133
#134
** முல்லை நிலத் தலைமகன் பெயர்
அண்ணல் தோன்றல் குறும்பொறைநாடன்
கானகநாடகன் முல்லைநிலத்தலைமகன்
** 4 பெயர்கள் 134
#135
** நெய்தல் நில மக்களின் பெயர்
பரதவர் நுளையர் கடலர் வலையர்
சலவர் திமிலர் நெய்தல்நிலமாக்கள்
** 6 பெயர்கள் 135
#136
** நெய்தல் நிலப் பெண் பெயர்
நுளைச்சியர் பரத்தியர் நுரைக் கடல்பிணாக்கள்
** 3 பெயர்கள் 136
#137
** நெய்தல் நிலத்து உப்பு அமைப்போர் பெயர்
அளவர் அ நிலத்து உப்புஅமைப்போரே
** 1 பெயர் 137
#138
** நெய்தல் தலைமகன் பெயர்
கொண்கன் துறைவன் மெல்லன் புலம்பன்
தண் கடல்சேர்ப்பன் நெய்தல்தலைமகன்
** 5 பெயர்கள் 138
#139
** மருத நில மக்கள் பெயர்
களமர் தொழுவர் மள்ளர் கம்பளர்
வினைஞர் உழவர் கடைஞர் கிளைஞர் என்று
அனையவை கழனிக்கடைத்தவர் பெயரே
** 8 பெயர்கள் 139
#140
** மருத நிலப் பெண் பெயர்
உழத்தியர் கடைச்சியர் ஆற்றுக்காலாட்டியர்
அடுத்த கழனிக்கடைத்தமகளிர்
** 3 பெயர்கள் 140
#141
** மருத நிலத் தலைவன் பெயர்
ஊரன் மகிழ்நன் கிழவன் என்று இவை
சாலி மருதத்தலைவன் பெயரே
** 3 பெயர்கள் 141
#142
** மருத நிலத் தலைவி பெயர்
மனைவி கிழத்தி இல்லாள் இல் என்று
அனையவை மருதத்தலைவிக்கு ஆகும்
** 4 பெயர்கள் 142
#143
** முல்லைத் தலைவி பெயா
அனையவை முல்லைத்தலைவிக்கும் ஆகும்
** 4 பெயர்கள் 143
#144
** முன் தோன்றலின் பெயர்
முன்னை முன்இளவல் முன்தோன்றல் ஆகும்
** 2 பெயர்கள் 144
#145
** பின் தோன்றலின் பெயர்
பின்னை பின்இளவல் பின்தோன்றல் ஆகும்
** 2 பெயர்கள் 145
#146
** சேட்டையின் பெயர்
தெளவை முன்பிறந்தாள் சேட்டை ஆகும்
** 2 பெயர்கள் 146
#147
** தங்கையின் பெயர்
தங்கை பின்னை எங்கை ஆகும்
** 2 பெயர்கள் 147
#148
** வழித் தோன்றலின் பெயர்
மருமான் பிறங்கடை உம்பல் வழித்தோன்றல்
** 3 பெயர்கள் 148
#149
** இளம்பிள்ளைகள் பெயர்
குழவியும் மகவும் குட்டனும் பிள்ளையும்
மழவும் சேயும் இளைமைக்கு வகுத்தனர்
** 6 பெயர்கள் 149
#150
** பிள்ளைப் பன்மையின் பெயர்
மகாரும் சிறாரும் அவர் பன்மை வழக்கே
** 2 பெயர்கள் 150
#151
** தோழன் பெயர்
நண்பன் பாங்கன் எலுவன் கிளைஞன்
தங்கிய கேள்வன் தோழன் பெயரே
** 5 பெயர்கள் 151
#152
** தோழன் முன்னிலையின் பெயர்
ஏடா என்பது தோழன் முன்னிலைப் பெயர்
** 1 பெயர் 152
#153
** பாங்கியின் பெயர்
ஓரை பொய்தல் இகுளை ஆயம்
தோழி சேடி இணங்க பாங்கி
** 7 பெயர்கள் 153
#154
** தோழி முன்னிலையின் பெயர்
எல்லாவும் ஏடியும் தோழி முன்னிலைப் பெயர்
** 2 பெயர்கள் 154
#155
** காதலன் என்னும் பெயர்
கணவனும் தோழனும் புதல்வனும் காதலன்
** 3 பெயர்கள் 155
#156
** காதலி என்னும் பெயர்
மனைவியும் தோழியும் புதல்வியும் காதலி
** 2 பெயர்கள் 156
#157
** துணைவன் என்னும் பெயர்
தோழனும் கணவனும் துணைவன் என்று ஆகும்
** 2 பெயர்கள் 157
#158
** படையின் பெயர்
தாரே தண்டம் அனீகம் வரூதினி
தானை பதாதி பதாகினி யூகம்
வானி அதிகம் பாடி பகுதி
சேனை நிதானம் திரள் படை என்ப
** 14 பெயர்கள் 158
#159
** கொடிப் படையின் பெயர்
தார் நிரை ஆக்கம் தூசி கொடிப்படை
** 4 பெயர்கள் 159
#160
** கடைக் கூழையின் பெயர்
கூழை சூழ்தல் கடைக்கூழை ஆகும்
** 2 பெயர்கள் 160
#161
** படை வகுப்பின் பெயர்
உண்டையும் கையும் ஒட்டும் யூகமும்
வந்த அணியும் படைக்கை வகுத்தனர்
** 5 பெயர்கள் 161
#162
** மானிடர் பொதுப் பெயர்
மக்கள் மண்ணவர் மனிதர் நரர் என்று
ஒத்த மாக்கள் மானிடர்பொதுப்பெயர்
** 5 பெயர்கள் 162
#163
** மக்கள் ஆண் பொதுப் பெயர்
மாந்தர் மைந்தர் மக்கள் ஆண்பொதுப்பெயர்
** 2 பெயர்கள் 163
#164
** மக்கள் பரப்பின் பெயர்
மன்பதை பைஞ்ஞீல் மக்கள்பரப்பே
** 2 பெயர்கள் 164
#165
** மக்கள் கூட்டத்தின் பெயர்
ஓரையும் பண்ணையும் ஆயமும் குழுவும்
கூறுப மாதோ மக்கள்கூட்டம்
** 4 பெயர்கள் 165
#166
** உடலின் பெயா
சட்டகம் மெய்யே தாவரம் பூட்சி
அங்கம் காயம் புதை உறுப்பு யாக்கை
ஆதாரம் தேகம் உருவம் படிவம் என்று
ஓதினர் நூலோர் உடலின்பெயரே
** 13 பெயர்கள்
#167
** பிணத்தின் பெயர்
அழனே குணபம் களேபரம் சவம்
பிணம் என வைத்துப் பேசினர் புலவர்
** 4 பெயர்கள்
#168
** உடல் குறையின் பெயர்
யூபம் கவந்தம் மட்டை உடல்குறை
** 3 பெயர்கள்
#169
** பாதத்தின் பெயர்
சரண் பதம் கால் அடி கழல் தாள் பாதம்
** 6 பெயர்கள்
#170
** கரட்டின் பெயர்
பரடே கால் அடி மிசைத் திரள் கரடே
** 1 பெயர்
#171
** கணைக்காலின் பெயர்
சங்கம் கணைக்கால்
** 1 பெயர்
#172
** முழந்தாவின் பெயர்
சானு முழந்தாள்
** 1 பெயர்
#173
** தொடைப் பற்றின் பெயர்
வாமம் ஊரு கவான் தொடைப்பற்றே
** 3 பெயர்கள்
#174
** குறங்கின் பெயர்
ஊருவும் கவானும் சோகமும் குறங்கே
** 3 பெயர்கள்
#175
** அல்குலின் பெயர்
கடிதடம் நிதம்பம் வடிவு அகல் அல்குல்
** 2 பெயர்கள்
#176
** இடையின் பெயர்
நுசுப்பு மருங்குல் நுண் இடை ஆகும்
** 2 பெயர்கள்
#177
** மருங்குல் பக்கத்தின் பெயர்
ஒக்கலை மருங்குல்பக்கம் ஆகும்
** 1 பெயர்
#178
** வயிற்றின் பெயர்
குக்கி துத்தம் உதரம் சடரம் என்று
ஒத்த மடி வயின் அகடு ஒன்றிய வயிறே
** 7 பெயர்கள்
#179
** ஆண் குறியின் பெயர்
இலிங்கமும் கோசமும் ஆண்குறி ஆகும்
** 2 பெயர்கள்
#180
** பெண் குறியின் பெயர்
யோனியும் பகமும் பெண்குறி ஆகும்
** 2 பெயர்கள்
#181
** கொப்பூழின் பெயர்
உந்தி போகில் இலஞ்சி இதலை
வந்த நாபி கொப்பூழ் ஆகும்
** 5 பெயர்கள் 181
#182
** மார்பின் பெயா
அகலம் மருமம் நிறம் உரம் ஆகம் மார்பே
** 5 பெயர்கள்
#183
** முலையின் பெயர்
கொங்கை சுவர்க்கம் குயம் தனம் நகிலம்
தங்கிய குருக்கண் அம்மம் பயோதரம்
இங்கு இவை மாதர் முலை என விளம்புவர்
** 8 பெயர்கள்
#184
** முலைக் கண்ணின் பெயர்
சூசுகம் சிலீமுகம் முலைக்கண் சொல்லும்
** 2 பெயர்கள்
#185
** தேமலின் பெயர்
சுணங்கு தேமல் பொறி உத்தி திதலை
நுணங்கு திதனி வசந்திகை துத்தி
** 7 பெயர்கள்
#186
** கைத்தலத்தின் பெயர்
அத்தம் பாணி கரம் தோள் கைத்தலம்
** 4 பெயர்கள்
#187
** அகங்கையின் பெயர்
அங்கை குடங்கை அகங்கை ஆகும்
** 2 பெயர்கள்
#188
** விரலின் பெயர்
அங்குலி விரல் ஆம்
**1 பெயர்
#189
** நகத்தின் பெயர்
உகிர் நகம் ஆகும்
** 1 பெயர்
#190
** தோளின் பெயர்
புயமும் மொய்ம்பும் வாகுவும் தோளே
** 3 பெயர்கள்
#191
** முதுகின் பெயர்
வெரிநும் வெந்தும் புறனும் முதுகே
** 3 பெயர்கள்
#192
** தோள் மேலின் பெயர்
சுவலும் செகிலும் நிகலமும் தோள்மேல்
** 3 பெயர்கள்
#193
** கழுத்தின் பெயர்
கண்டமும் கிரீவமும் களனும் மிடறும்
கந்தரம் ஐந்தும் கழுத்து எனக் கழறுவர்
** 5 பெயர்கள்
#!94
** பிடரின் பெயா
கயிலே சிறுபுறம் எருத்தம் சுவல் பிடர்
** 4 பெயர்கள்
#195
** பிறகின் பெயர்
பிறமும் பிறக்கும் அபரமும் பிறகே
** 3 பெயர்கள்
#196
** முகத்தின் பெயர்
வதனம் ஆனனம் வத்திரம் முகமே
** 3 பெயர்கள்
#197
** உதட்டின் பெயர்
அதரம் பாலிகை இதழே ஓட்டம்
முத்தம் உதடு என மொழிந்தனர் புலவர்
** 5 பெயர்கள்
#198
** பல்லின் பெயர்
தந்தமும் எயிறும் தட்டமும் பல் ஆம்
** 3 பெயர்கள்
#199
** எயிற்றின் பெயா
முறுவலும் நகையும் மூரலும் எயிறு ஆம்
** 3 பெயர்கள்
#200
** நகுதலின் பெயர்
நகுதற்கும் அவையே நாமம் ஆகும்
** 3 பெயர்கள்
#201
** அண்ணத்தின் பெயர்
அணரி அண்ணம்
** 1 பெயர்
#202
** கீழ்வாய்ப் புறத்தின் பெயர்
அணல் கீழ்வாய்ப்புறம்
** 1 பெயர்
#203
** உள் நாவின் பெயர்
அண்ணம் உள்நா ஆகலும் உரித்தே
** 1 பெயர்
#204
** நாவின் பெயர்
தாலம் தாலு நா எனச் சாற்றுவர்
** 2 பெயர்கள்
#205
** மூக்கின் பெயர்
துண்டமும் நாசியும் கிராணமும் மூக்கே
** 3 பெயர்கள்
#206
** கதுப்பின் பெயர்
கபோலம் கவுள் அனு கொடிறு கதுப்பே
** 2 பெயர்கள்
#207
** கண்ணின் பெயர்
நாட்டம் நயனம் நேத்திரம் விலோசனம்
நோக்கம் தாரை அம்பகம் பார்வை
அக்கம் விழி கோ கண் ஆகும்மே
** 11 பெயர்கள்
#208
** நெற்றியின் பெயர்
மத்தகம் இலாடம் முண்டகம் நுதல் குளம்
நெற்றி பாலம் என நிகழ்த்தினரே
** 6 பெயர்கள்
#209
** புருவத்தின் பெயர்
புரூரம் பிருகுடி நுதலே புருவம்
** 3 பெயர்கள்
#210
** காதின் பெயர்
கன்னமும் செவியும் காதின் பெயரே
** 2 பெயர்கள்
#211
** தலையின் பெயர்
சிரமே சென்னி உச்சி முடி நவிரம்
கம்மே உவ்வி சேகரம் தலை ஆம்
** 8 பெயர்கள்
#212
** ஆண் மயிரின் பெயர்
குஞ்சி நவிர் உளை குடுமி தொங்கல்
பங்கி பித்தை ஓரி சிகை என்று
இங்கு இவை எல்லாம் ஆண்மயிர் என்ப
** 9 பெயர்கள்
#213
** பெண் மயிரின் பெயர்
கோதை நெடுமை கூந்தல் ஐம்பால்
ஓதி கூழை பரிசாரம் கதுப்பு
கேசம் அளகம் குழல் குரல் சுரியல்
பேசின் மராட்டம் பெண்மயிர் என்ப
** 14 பெயர்கள்
#214
** மைந்தர் மயிரின் பெயர்
கதுப்பே கேசம் சுரியல் மைந்தர்மயிர்க்கும்
ஒரு வழி வருதற்கும் உரிய
** 3 பெயர்கள்
#215
** பிற மயிரின் பெயர்
ஓரி பங்கி உளையே உரோமம்
கேசம் மராட்டம் பிறமயிர் ஆகும்
** 6 பெயர்கள்
#216
** மயிர்ப் பரப்பின் பெயர்
சிரோந்தம் உரோமம் செறி மயிர்ப்பரப்பே
** 2 பெயர்கள்
#217
** மயிர்க் குழற்சியின் பெயர்
கொந்தளம் அளகம் விலோதம் மயிர்க்குழற்சி
** 3 பெயர்கள்
#218
** மயிர் முடியின் பெயர்
பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை
மன்னு சிகழிகை குழல் சுடிகை மெளலி
இன்னவை மயிர்முடி ஆகும் என்ப
** 9 பெயர்கள்
#219
** சடையின் பெயர்
பின்னல் சடிலம் கோடீரம் வேணி
மன்னும் மயிர்ச் சடை என வகுத்தனரே
** 4 பெயர்கள்
#220
** உறுப்பின் பெயார்
அவயவம் காத்திரம் அங்கம் உறுப்பே
சினை என்று உரைத்தலும் ஒருவழிச் சிவணும்
** 4 பெயர்கள்
#221
** சந்தின் பெயர்
கந்தும் கொளுத்தும் கழுத்தும் சந்து ஆம்
** 3 பெயர்கள்
#222
** இறையின் பெயர்
மெய்த் தகும் இறையே பிறங்கு எனப்படுமே
** 1 பெயர்
#223
** உடல் தழும்பின் பெயர்
செதுகை அங்கிதம் செறி உடல் தழும்பே
** 2 பெயர்கள்
#224
** கழலையின் பெயர்
அரலை கழலை ஆகும் என்ப
** 1 பெயர்
#225
** நரம்பின் பெயர்
நாடியும் சிரையும் நரம்பின் நாமம்
** 2 பெயர்கள்
#226
** எலும்பின் பெயர்
என்பு அத்தி அங்கம் எலும்பு ஆகும்மே
** 3 பெயர்கள்
#227
** தலை ஒட்டின் பெயா
வெண் தலைஓடே கபாலம் ஆகும்
** 1 பெயர்
#228
** கழி உடல் முழு எலும்பின் பெயர்
கழிஉடல்முழுஎன்பு கங்காளம் ஆகும்
** 1 பெயர்
#229
** குடுமியின் பெயர்
சிமையம் சிகை சிமிலி சிக்கம் குடுமி
** 2 பெயர்கள்
#230
** உச்சியின் பெயர்
நவிரம் சுடிகை சூழி உச்சி நாமம்
** 3 பெயர்கள் 230
#231
** இந்திரியத்தின் பெயர்
கரணம் பொறி வாயில் கந்தம் இந்திரியம்
** 4 பெயர்கள் 231
#232
** சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் அறியும் கருவிகள்
கருவி நா கண் மெய் செவி மூக்கே
** 5 பெயர்கள் 252
#233
** சீவன் பெயர்
சீவன் உயிர் ஆதன் சேதனன் புற்கலன்
அணு பசு இயமானன் ஆன்மா
** 8 பெயர்கள் 233
#234
** திவாகர வரலாறு
கற்ற நாவினன் கேட்ட செவியினன்
முற்ற உணர்ந்த மூதறிவாளன்
நாகரிக நாட்டத்து ஆரியன் அருவந்தை
தேரும் காட்சிச் சேந்தன் திவாகரத்து
** இரண்டாவது மக்கள் பெயர்த் தொகுதி முற்றிற்று
@3 விலங்கின் பெயர்த் தொகுதி
#1
** சிங்கத்தின் பெயர்
ஆளி மடங்கல் அரி கண்டீரவம்
கேசரி மிருகபதி வயப்போத்து
சீயம் வயப்புலி பஞ்சானனம் வயமா
மேவிய சிங்கம் என விளம்பினரே
** 11 பெயர்கள் 1
#2
** புலியின் பெயர்
கொடுவரி உழுவை குயவரி வேங்கை
வல்லியம் வயமா சார்த்தூலம் வியாக்கிரம்
புல்லு புண்டரீகம் வயவரி என்று இவை
பல் பொறிப் புலியின் பெயர் எனப் பகர்வர்
** 17 பெயர்கள் 2
#3
** யானை யாளிப் பெயர்
அறுகு பூட்கை யாளி எனவே
பெறுமே யானை யாளி பெயரே
** 3 பெயர்கள் 3
#4
** யானையின் பெயர்
தும்பி கடிவை புகர்முகம் தோல் கரி
உம்பல் வயமா பகடு நால்வாய்
கரிணி குஞ்சரம் கயமே களபம்
மருண்மா தந்தி மாதங்கம் ஒருத்தல்
களிறு சிந்துரம் கறைஅடி எறும்பி
வழுவை வாரணம் வேழம் வல்விலங்கு
நாகம் மதகயம் அத்தி இபம் கும்பி
போதகம் உவாவே தூங்கல் மாதிரம்
மறம் மலி கைம்மா ஆம்பல் கோட்டுமா
பிறவும் புழைக்கையோடு யானைப் பெயரே
** 38 பெயர்கள் தீ
#5
** கவிற்றியானையின் பெயர்
மதகரி தந்தி வன் களிற்றியானை
** 2 பெயர்கள் 5
#6
** பெண் யானையின் பெயர்
கரேணு பிடி பெண்யானைப் பெயரே
** 2 பெயர்கள் 6
#7
** யானைக் கன்றின் பெயர்
போதகம் துடியடி கயமுனி கன்று ஆம்
** 3 பெயர்கள் 7
#8
** பிறந்த நிலப் பெயரை அடுத்து
** யானை பெறும் பெயர்
கிரிசரம் வனசரம் நதிசரம் அடுத்துப்
பெறுமே யானை பிறந்த நிலப்பெயர்
** பெயர்கள் 8
#9
** குதிரையின் பெயர்
துரகதம் துரங்கம் வாசி பாய்மா
குரகதம் கிள்ளை கந்தருவம் கற்கி
மண்டிலம் துரகம் மாவே இவுளி
ஒண் திறல் உன்னி உத்தரி கோணம்
குந்தம் கொய்யுளை கொக்கு பரி அயம்
அச்சுவம் வயமா புரவி அரியோடு
இத்திறம் அத்திரி குதிரையின் இயற்பெயர்
#10
கனவட்டம் பாடலம் கோரம் கந்துகம்
எனவும் பண்பு அடுத்து எண்ணவும் படுமே
** 29 பெயர்கள் 10
#11
** பாண்டியன் குதிரைப் பெயர்
அவற்றுள் கனவட்டம் என்பது வழுதிஊர்மா
** 1 பெயர் 11
#12
** சேரன் குதிரைப் பெயர்
பாடலம் என்பது சேரன்ஊர்மா
**1 பெயர் 12
#13
** சோழன் குதிரைப் பெயா
கோரம் என்பது சோழன்ஊர்மா
** 1 பெயர் 13
#14
** குறுநில மன்னர் குதிரையின் பெயர்
கந்துகம் குறுநிலமன்னர்ஊர்மா
** 1 பெயர் 14
#15
** குதிரைக் குளம்பின் பெயர்
குரமே அவற்றின் குளம்பு ஆகும்மே
** 1 பெயர் 15
#16
** குதிரை மார்க்கத்தின் பெயர்
மாதிகம் அவற்றின் மார்க்கம் ஆகும்
** 1 பெயர் 16
#17
** பசுவின் பொதுப் பெயர்
ஆவும் பெற்றமும் பசுவும் ஆனும்
கோவும் குடஞ்சுட்டும் சாதிப்பொதுப்பெயர்
** 5 பெயர்கள் 17
#18
** பெண் பசுவின் பெயர்
சுரபி தேனு சுரை கபிலை சேதா
கரமே கோமளம் பெண்பால் மேன
** 7 பெயர்கள் 18
#19
** ஆண் பசுவின் பெயர்
பாறல் புல்லம் பாண்டில் பசு மூரி
ஏறு பூணி இருலே பெற்றம்
எருது சே விடை இடபம் என்று இவை
கருதின் போத்தின் பெயர் எனக் கருதுவர்
** 13 பெயர்கள் 19
#20
** எருமை எனும் பெயர்
எருமைச் சாதி இரு பாற்கும் உரித்தே
#21
** எருமைப் பொதுப் பெயா
மேதி காரான் மகிடம் கவரி என்று
ஓதிய நான்கும் எருமைப் பெயரே
**4 பெயர்கள் 21
#22
** எருமை ஆணின் பெயர்
பகடும் கடாவும் அவற்றின் போத்து ஆம்
** 2 பெயர்கள் 22
#23
** மலட்டு எருமையின் பெயர்
மைம்மை என்பது மலட்டின் கிளவி
** 1 பெயர் 28
#24
** காட்டு ஆவின் பெயர்
ஆமா கவயம் காட்டுஆ ஆகும்
** 2 பெயர்கள் 24
#25
** ஆட்டின் பொதுப் பெயர்
மறி உதள் மோத்தை மேழகம் வருடை
கொறியே தகர் கடா கொச்சை மேடம்
துருவை செம்மறி பள்ளை வெள்ளை
புருவை வற்காலி மை ஆடு எனப் புகல்வர்
** 17 பெயர்கள் 25
#26
** துருவாட்டின் பெயர்
துருவை கொறி மை துருவாடு ஆகும்
** 3 பெயர்கள் 26
#27
** வெள்ளாட்டின் பெயர்
வெள்ளை வற்காலி மை கொச்சை வெள்ளாடே
** 4 பெயர்கள் 27
#28
** துருவாட்டு ஏற்றின் பெயர்
ஏழகம் தகரே மேழகம் கடா என
ஆகும் துருவாட்டுஏற்றின் பெயரே
** 4 பெயர்கள் 28
#29
** வெள்ளாட்டு ஏற்றின் பெயர்
உதளே செச்சை மோத்தை வெள்ளாட்டின்
நிகர்இல் ஏறு என நிகழ்த்தவும்படுமே
** 3 பெயர்கள் 29
#30
** துருவாடாவது
துருவை செம்மறியாடு எனச் சொல்லுவர்
** 1 பெயர் 30
#31
** ஆட்டுக் குட்டியின் பெயர்
குட்டன் சோரன் மணங்கு மறி பறழ்
குட்டிப் பெயர் எனக் கூறினர் புலவர்
** 5 பெயர்கள் 31
#32
** வரையாட்டின் பெயர்
வருடை சரபம் வரையாடு ஆகும்
** 2 பெயர்கள் 32
#33
** கவரி மாவின் பெயர்
மானமா பட்டம் எகினம் அன்னம்
ஊனம்இல் கவரிமா என உரைப்பர்
** 4 பெயர்கள் 33
#34
** கழுதையின் பெயர்
கத்தபம் கோகு வேசரி கழுதை
அத்திரி கரம் வாலேபமும் ஆகும்
** 6 பெயர்கள் 34
#35
** பன்றியின் பெயர்
இருளி கனலி ஏனம் சூகரம்
கருமா மோழல் வல்லுளி கேழல்
வன் திறல் வராகம் எறுழி கோலம்
ஒன்றிய களிறு இவை பன்றி ஆகும்
** 12 பெயர்கள் 38
#36
** மருட்டுப் பன்றியின் பெயர்
கிருட்டி போத்து கோலம் கிரி கிடி
மருட்டுப்பன்றிக்கு மாட்சிப் பெயரே
** 5 பெயர்கள் 36
#37
** முட் பன்றியின் பெயர்
எய்யே முள்மா சல்லியம் முட்பன்றி
** 3 பெயர்கள் 37
#38
** மானின் பெயர்
சாரங்கம் நவ்வி மறி பிணை அரிணம்
உழை எனச் சொல்லிய ஆறும் மானின் பெயர்
** 6 பெயர்கள் 38
#39
** மான் ஏற்றின் பெயர்
இரலையும் கலையும் அவற்றின் ஏறு ஆம்
** 2 பெயர்கள் 39
#40
** புல்வாயின் பெயர்
இரலை புல்வாய் ஆகலும் உரித்தே
** 1 பெயர் 40
#41
** பூஞையின் பெயர்
விலாளம் பவனம் வெருகு விடருகம்
பூசை பாக்கன் மார்ச்சாலம் பூஞை
** 7 பெயர்கள் 41
#42
** ஆண் பூனையின் பெயர்
விலாளமும் கடுவனும் வெருகும் ஆண் பெயர்
** 3 பெயர்கள் 42
#43
** கரடியின் பெயர்
உளியம் எண்கு பல்லம் கரடி
குடாவடி என்றும் கூறவும் படுமே
** 4 பெயர்கள் 43
#44
** நரியின் பெயர்
இகலன் சம்பு கோமாயு நரியே
** 3 பெயர்கள் 44
#46
** ஓரியின் பெயர்
இகலன் ஓரி என்றும் ஆகும்
** 1பெயர் 45
#47
** கீரியின் பெயர்
நகுலம் காத்திரம் தீர்வை கீரி
** 3 பெயர்கள் 46
#48
** முயலின் பெயர்
சசம் முயல் என்று சாற்றப்படுமே
** 1 பெயர் 47
#49
** கத்தூரியின் பெயர்
மறுவி நாவி மான்மதம் துருக்கம்
நரந்தம் நானம் மறி கத்தூரி
** 7 பெயர்கள் 48
#49
** குரங்கின் பெயர்
அரியே கோகிலம் கடுவன் கோடரம்
கவியே யூகம் மந்தி மர்க்கடம்
நிரந்தரம் வானரம் என்று இவை பத்தும்
குரங்கின் பெயர் எனக் கூறல் வேண்டும்
** 10 பெயர்கள் 49
#50
** பெண் குரங்கின் பெயர்
மந்தி யூகம் மற்று அதன் பெண் பெயர்
** 2 பெயர்கள் 50
#51
** கருங்குரங்கின் பெயர்
காருகம் யூகம் கருங்குரங்கின் பெயர்
** 2 பெயர்கள்
#52
** முசுவின் பெயர்
ஓரியும் கலையும் கடுவனும் முசுவே
** 3 பெயர்கள்
#53
** நாயின் பெயர்
எகினன் சூரன் முடுவல் சுணங்கன்
ஞமலி குக்கல் ஞாளி சுவா நாய்
** 8 பெயர்கள்
#54
** பெண் நாயின் பெயர்
முடுவல் பெண்நாய் ஆகலும் உரித்தே
** 1 பெயர்
#55
** உடும்பின் பெயர்
உடும்பே முசலிகை கோதா ஆகும்
** 2 பெயர்கள்
#56
** அணிலின் பெயா
வெளிலே அணில் ஆம் என விளம்பினரே
**1 பெயர்
#57
** ஒந்தியின் பெயர்
எழில் தண்டு கோம்பி ஓந்தி என்று இசைப்பர்
** 3 பெயர்கள்
#58
** பச்சோந்தியின் பெயா
பச்சோந்தி காமரூபிப் பெயரே
** 1 பெயர்
#59
** மூஞ்சூறின் பெயர்
சுண்டன் சூறன் சுசுந்தரி மூஞ்சூறு
** 3 பெயர்கள்
#60
** எலியின் பெயர்
சிகரி எலி இரும்பன்
**2 பெயர்கள்
#61
** காரெலியின் பெயர்
கருப்பை காரெலி
** 1 பெயர்
#62
** பெருச்சாளியின் பெயர்
ஆகு மூடிகம் ஆம் பெருச்சாளி
** 2 பெயர்கள்
#63
** ஒருசார் விலங்கு ஏற்றின் பெயர்
களிறும் மாவும் ஒருத்தலும் ஏறும்
போத்தும் பகடும் கலையும் உம்பலும்
கடுவனும் சேவலும் தகரும் ஏட்டையும்
ஒருசார் விலங்கின் ஏற்றிற்கு உரிய
** 12 பெயர்கள்
#64
** மேல் சொல்வியவற்றுள் கவிறு என்னும் பெயர்
அவற்றுள்
வேழமும் கேழலும் விதந்து களிறு என்ப
** 2 பெயர்கள்
#65
** மா என்னும் பெயர்
குதிரையும் யானையும் பன்றியும் மாவே
** 3 பெயர்கள்
#66
** ஒருத்தல் என்னும் பெயர்
புலி உழை புல்வாய் மரையே எருமை
கவரி யானை பன்றி கரடி
உரிய ஆகும் ஒருத்தல் பெயர்க் கொடை
** 9 பெயர்கள்
#67
** ஏறு எனும் பெயா
கவரி பன்றி மரை உழை புல்வாய்
எருமை பெற்றம் சுறவு ஏறு எனப்படுமே
** 8 பெயர்கள்
#68
** போத்து எனும் பெயர்
புலியே மரையே புல்வாய் பெற்றம்
எருமை என்று இவற்று ஏற்றைப் போத்தே
#69
பூஞையும் நீர் வாழ் சாதியும் போத்தே
#70
** குதிரை ஆணும் போத்து எனப்படுமே
** 8 பெயர்கள்
#71
** பகடு எனும் பெயர்
யானை பெற்றம் எருமை ஏற்றைத்
தானே பகடு என்று உரைக்கத்தகுமே
** 3 பெயர்கள்
#72
** கலை எனும் பெயர்
மானே முகவே கலையொடு வருமே
** 2 பெயர்கள்
#73
** உம்பல் எனும் பெயர்
யானையும் யாட்டின் ஏற்றையும் உம்பல்
** 2 பெயர்கள்
#74
** கடுவன் எனும் பெயர்
குரங்கும் வெருகும் கடுவன் என்ப
** 2 பெயர்கள்
#75
** சேவல் எனும் பெயர்
கோழியும் அன்னமும் சேவல் ஆகும்
** 2 பெயர்கள்
#76
** தகர் எனும் பெயர்
சுறவு களிறு ஆளி துருவாட்டுஏற்றை
தகர் எனும் நாமம் தக்கது என்ப
** 4 பெயர்கள்
#77 ஏட்டை எனும் பெயர்
எருமைப் பகடும் வெருகின் ஏற்றையும்
வருப ஏட்டை என வகுத்தனரே
**2 பெயர்கள் 77
#78
** சே எனும் பெயர்
எருமை புல்வாய்ஏற்றை சேவும்
துருவாடுஏறும் வெருகும் போத்து
ஒருசார் விலங்கின் ஏற்றிற்கு உரிய
** 5 பெயர்கள் 78
#
** ஒருசார் விலங்கின் பெண் பெயர்
பெட்டையும் பிணையும் பிணாவும் ஆனும்
நாகும் மூடும் கடமையும் பாட்டியும்
மந்தியும் ஒருசார் விலங்கின் பெண் பெயர்
** 9 பெயர்கள் 79
#80
** அவற்றுள் பெட்டை எனும் பெயர்
அவற்றுள்
ஒட்டகம் குதிரை கழுதை மரை இவை
பெட்டை என்னும் பெயர்க் கொடை பெறுமே
** 2 பெயர்கள் 80
#81
** பிணை எனும் பெயர் ‘
புலி உழை புல்வாய் கவரி என்று இவை
பிணை எனும் பெயரில் பேசப்படுமே
** 4 பெயர்கள்
#82
** பிணா எனும் பெயர்
பன்றி புல்வாய் நாய் என மூன்றும்
பின்றாக் காட்சிப் பிணாவொடு வருமே
** 3 பெயர்கள் 82
#83
** ஆன் எனும் பெயர்
எருமையும் பசுவும் மரையும் என்ன
வருபவை மூன்றும் ஆன் எனப்படுமே
** 3 பெயர்கள் 84
#84
** நாகு எனும் பெயர்
மரையும் பெற்றமும் எருமையும் நாகே
#85
நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே
** 4 பெயர்கள் 85
#86
** மூடு எனும் பெயரும் கடமை எனும் பெயரும்
மூடும் கடமையும் ஆடு அல பெறா
** 2 பெயர்கள் 86
#87
** பாட்டி எனும் பெயர்
பாட்டி என்ப பன்றியும் நாயும்
** 2 பெயர்கள் 87
** 88
** மந்தி எனும் பெயர்
குரங்கும் ஊகமும் முசுவும் என்று இவை
வருங்கால் பெண் பெயர் மந்தி என்று ஆகும்
** 3 பெயர்கள் 88
#89
** பிணை எனும் பெயர்
ஆனை குதிரை ஒட்டகம் கழுதை
ஆன பிணை மறு! அறைதற்கும் உரிய
** 4 பெயர்கள் 69
#90
** பாட்டி எனும் பெயர்
நரியின் பாட்டி நடைபெற்று இயலும்
ஒருசார் விலங்கின் பெண் பெயர்க்கு உரைப்பர்
** 1 பெயர் 90
#91
** பெண் எனும் பெயர்
பெண்பால் எவையும் பெண் எனப்படுமே
** 1 பெயர் 9
#92
** பிணா எனும் பெயர்
பெண்பால் எவையும் பிணா என்ப ஒருசார்
** 1 பெயர் 92
#93
** ஆண் எனும் பெயர்
ஆண்பால் எவையும் ஆண் எனப்படுமே
** 1 பெயர் 93
#94
** போதகம் எனும் பெயர்
அரிமா யானை புலியே அனைய
இனைய ஏற்றைப் போதகம் என்ப
** 3 பெயர்கள் 94
#95
** விலங்கின் பிள்ளை பெறும் பெயர்
குருளையும் குட்டியும் பறழும் பார்ப்பும்
பிள்ளையும் மறியும் கன்றும் குழவியும்
பெறுமே விலங்கின் பிள்ளைப் பெயரே
** 8 பெயர்கள் 95
#96
** குருளை பறழ் என்னும் பெயர்
அவற்றுள்
புலியே பன்றி முயல் நாய் நரியே
குருளை பறழ் எனக் கூறினர் புலவர்
** 6 பெயர்கள் 96
#97
** பிள்ளை என்னும் பெயர்
பிள்ளைப் பெயரே நாய் அன்றிப் பெறுமே
** 1பெயர் 97
#98
** மறி எனும் பெயர்
ஆடு மான் குதிரை அழுங்கு மறி என்ப
** 4 பெயர்கள் 98
#99
** குழவி மகவு குட்டி பிள்ளை பறழ் பார்ப்பு
** என்னும் பெயர்கள்
குழவியும் மகவும் குட்டியும் பிள்ளையும்
பறழும் பார்ப்பும் பகரப்படுமே
குரங்கு முதலாயின கோடு வாழ் விலங்கே
** 6 பெயர்கள் 99
#100
** கன்று எனும் பெயர்
கடமையும் யானையும் குதிரையும் கழுதையும்
மரையும் எருமையும் மானும் ஒட்டகமும்
கவரியும் கராமும் கன்று எனப்படுமே
** 10 பெயர்கள் 100
#101
** குழவி எனும் பெயர்
யானையும் கடமையும் எருமையும் மரையும்
மானும் குழவிப் பெயரோடு அடையும்
** 5 பெயர்கள் 101
#102
** பறழ் – குட்டி – என்னும் பெயர்
வெருகே மூங்கா அணில் இ மூன்றும்
பறழே குட்டிப் பால ஆகும்
** 3 பெயர்கள் 102
#103
** குருளை – சன்று – குழவி – எனும் பெயர்கள்
குருளையும் கன்றும் ஆனின் கொளலும்
குழவியும் குருளையும் முசுவின் பெறலும்
ஒரு சார் விலங்கின் பிள்ளைப் பெயரே
** 5 பெயர்கள் 103
#104
** பிள்ளை – பார்ப்பு – எனும் பெயர்கள் ஏற்றை எனும்
** பெயர்
பிள்ளையும் பார்ப்பும் தவழ் சாதி பெறுமே
நந்தின் ஏற்றையும் அரவின் குருளையும்
வந்துழி ஒருசார் வழங்குதற்கு உரிய
#105
** விலங்கின் பொதுப் பெயர்
மாவும் மானும் விலங்கின் பொதுப் பெயர்
** 2 பெயர்கள் -105
#106
** காலியினம் – அல்லது – பசுக் கூட்டத்தின் பெயர்
காலிஇனம் நிரை தொறுவும் ஆகும்
** 3 பெயர்கள் 106
#107
** விலங்கின் கூட்டத்தின் பெயர்
கணமும் சாலமும் வியூகமும் குலமும்
விருந்தமும் கூட்டம் எனப் பெயர் பெறுமே
வந்துழி பெறுதற்கு உரிய என்ப
** 5 பெயர்கள் 107
#108
** வால் உறுப்பின் பெயர்
வாலதி தோகை கூலம் இலாங்கூலம்
வால் உறுப்பாக மதித்தனர் புலவர்
** 4 பெயர்கள் 108
#109
வால் கீழ் இடத்தின் பெயர்
வெருகம் என்பது வால்கீழ்இடம் ஆம்
** 1 பெயர் 109
#110
** யானைச் செவியின் பெயா
யானைச் செவியே கன்னதாலம்
** 1 பெயர் 110
#111
** யானை முதுகின் பெயர்
மஞ்சு முதுகு என வகுத்தனர் புலவர்
** 1 பெயர்
#112
** யானை வாலின் பெயர்
வால் தாலவட்டம் ஆகும் என்ப
** 1 பெயர்
#113
** யானை மதத்தின் பெயர்
கடமும் தானமும் மதம் ஆகும்மே
** 2 பெயர்கள் 113
#114
** மதம் பாய் கவுள் சுவட்டின் பெயா
கரடம் மதம்பாய்கவுள்சுவடு ஆகும்
** 1 பெயர் 114
#115
** மும் மதம் ஆவன
கன்னமதம் கோசமதம் கைம்மதம் மூவகையே
** 3 பெயர்கள் 115
#116
** யானைத் தாளின் பெயர்
காத்திரம் அங்கிதம் தாள் ஆகும்மே
** 2 பெயர்கள் 116
#117
** குதிரை வாயினும் யானைக் கையினும்
** உமிழ் நீரின் பெயர்
இவுளி வாயினும் யானைக் கையினும்
உமிழ் நீர் விலாழி என்று உரைக்கத் தகுமே
** 1 பெயர் 117
#118
** எருத்தின் முரிப்பின் பெயர்
இமிலே ஏற்றின் திரள் முரிப்பு ஆகும்
** 1 பெயர் 118
#119
** பசு – முலை மேல் திரள் சுரப்பு வடிவின் பெயர்
செருத்தல் முலை மேல் திரள் சுரப்பு வடிவே
** 1 பெயர் 119
#120
** பசு முலையின் பெயர்
சுரை என் பெயரே முலையிற்கு ஆகும்
** 1 பெயர் 120
#121
** கொம்பின் பெயர்
கோடும் மருப்பும் உலவையும் கொம்பே
** 3 பெயர்கள் 72
#122
** தோலின் பெயர்
வடகம் கிருத்திமம் சருமம் துவக்கு
பச்சை புறணி உரி போர்வை அதள்
ஒத்த துருத்தியொடு பத்தும் தோலே
** 10 பெயர்கள் 122
#123
** ஊனின் பெயர்
தசை தடி விடக்கு தூ வள்ளூரம்
பிசிதம் புலால் புண் புலவும் ஊனே
** 9 பெயர்கள் 123
#124
** ஆவின் இறைச்சியின் பெயர்
ஆவின் இறைச்சி வள்ளூரம் ஆகும்
** 1 பெயர் 124
#125
** உதிரத்தின் பெயர்
எருவை செந்நீர் இரத்தம் புண்நீர்
குருதி சோரி நெய்த்தோர் சுடுவன்
கறை சோணிதம் என ஈர்ஐங் கிளவியும்
உதிரம் என்ப உணர்ந்திசினோரே
** 10 பெயர்கள் 125
#126
** நிணத்தின் பெயர்
நெய்யும் இழுதும் விழுக்கும் நிணப் பெயர்
** 3 பெயர்கள் 126
#127
** முடையின் பெயர்
பூதி ஊழ்த்தல் தசை புலவு முடையே
** 4 பெயர்கள் 127
#128
** சூலின் பெயர்
பீளும் சினையும் கருவும் சூலே
** 3 பெயர்கள்
#129
** பாம்பின் பெயர்
அரவே நாகம் அங்கதம் புயங்கம்
உரகம் மராளம் அரி அகி போகி
பன்னகம் கட்செவி பணி வியாளம் பாம்பே
** 13 பெயர்கள் 129
#130
** பெரும் பாம்பின் பெயர்
பாந்தள் மாசுணம் பெரும்பாம்பு ஆகும்
** 2 பெயர்கள் 130
#131
** பாம்பின் படத்தின் பெயர்
பையும் பணமும் பாம்பின்படமே
** 2 பெயர்கள் 131
#132
** பாம்பின் படப் பொறியின் பெயர்
உத்தியும் துத்தியும் உரக படப்பொறி
** 2 பெயர்கள் 132
#133
** நஞ்சின் பெயர்
கடுவே ஆலம் காளகூடம் விடம்
காளம் கரளம் காரி நஞ்சே
** 7 பெயர்கள் 133
#134
** கருடன் பெயர்
வைனதேயன் உவணன் பன்னகவைரி
கலுழன் புள்அரசு கருடன் ஆகும்
** 5 பெயர்கள் 134
#135
** கழுகின் பெயர்
எருவையும் உவணப்புள்ளும் கழுகே
** 2 பெயர்கள்
#136
** சரபத்தின் பெயா
சிம்புள் வாருண்டகம் சம்பரம் துரோணம்
எண் கால் சரபத்தின் பெயர் ஆகும்மே
** 4 பெயர்கள்
#137
** பருந்தின் பெயர்
பாறும் சேனமும் கங்கமும் பருந்தே
** 3 பெயர்கள்
#138
** சாதகப் புள்ளின் பெயர்
வானம்பாடி சாதகப்புள்ளே
**7 பெயர்
#139
** கேகமயப் புள்ளின் பெயர்
அசுணமாவே கேகயப்புள்ளே
** 1 பெயர்
#140
** குயிலின் பெயர்
கோகிலம் களகண்டம் பிகம் குயில்
** 3 பெயர்கள்
#141
** செம்போத்தின் பெயர்
குக்கில் செம்போத்து சகோரமும் அதற்கே
** 2 பெயர்கள்
#142
** கோழியின் பெயர்
குக்குடம் சேவல் வாரணம் கோழி
** 3 பெயர்கள்
#143
** கூகையின்பெயர்
கூகை குடிஞை குராலே கோட்டான்
** 3 பெயர்கள்
#144
** மயிலின் பெயர்
கேகயம் சிகண்டி சிகியே மயூரம்
தோகை மேகாரம் மஞ்ஞை பிணிமுகம்
ஆயின எல்லாம் மயில் என அறைவர்
** 8 பெயர்கள்
#145
** மயில் பீலியின் பெயர்
தொங்கலும் கலாபமும் இறகும் கூழையும்
இங்கு இவை மயிலின் பீலி என்ப
தங்கிய ஒருவழிக் கூந்தல் எனத் தகும்
** 5 பெயர்கள்
#146
** இறகின் அடி முள்ளின் பெயர்
முருந்தே இறகின்முதல்முள் ஆகும்
** 1 பெயர்
#147
** மயில் சிகையின் பெயர்
அனந்தமயூரம் விரிசிகை ஆகும்
** 1 பெயர் 147
#148
** காக்கையின் பெயர்
காரி வாயசம் கொடி கரும்பிள்ளை
தேரின் நான்கும் காக்கை ஆகும்
** 4 பெயர்கள்
#149
** வலியன் பெயர்
வலியன் பாரத்துவாசன் வயவன்
** 2 பெயர்கள்
#150
** கரிக் குருவியின் பெயர்
கஞ்சனம் வலியன் கயவாய் கரிக்குரீஇ
** 3 பெயர்கள்
#151
** கிளியின் பெயர்
வன்னி தத்தை சுகம் அரி சுவாகதம்
கிள்ளை அவந்திகை கீரம் கிளியே
** 8 பெயர்கள்
#152
** கருங்கிளியின் பெயர்
தீரம் கிள்ளை கருங்கிளி ஆகும்
** 2 பெயர்கள்
#153
** புறாவின் பெயர்
தூதுணமும் களரவமும் பாராவதமும்
சீர் கால் கபோதமும் புறவு எனப்படுமே
** 4 பெயர்கள்
#154
** மாடப் புறவின் பெயர்
காளபதமே மாடப்புறவு ஆம்
** 1 பெயர்
#155
** கரும் புறவின் பெயர்
கபோதம் பாராவதம் கரும்புறவு ஆகும்
** 2 பெயர்கள்
#160
** கவுதாரியின் பெயர்
இதலே பூழான் சிவல் கவுதாரி
** 3 பெயர்கள்
#157
** அன்றிலின் பெயர்
கிரவுஞ்சம் அன்றில்
** 1 பெயர்
#158
** ஊர்க் குருவியின் பெயர்
சகடம் ஊர்க்குருவி
** 1 பெயர்
#159
** சிவலின் பெயர்
இதலே பகண்டை சிவல் ஆகும்மே
** 2 பெயர்கள்
#160
** பகண்டையின் பெயா
சில்லை பகண்டை ஆம் எனச் செப்புவர்
** 1 பெயர்
#161
** நாகணவாய்ப் புள்ளின் பெயர்
பூவை சாரிகை நாகணவாய்ப்புள்
** 2 பெயர்கள் 161
#162
** காடையின் பெயர்
குறும்பூழ் காடையின் பெயர் எனக் கூறுவர்
** 1 பெயர் 162
#163
** மீன் எறி சிறு பறவையின் பெயர்
சிரலே சிச்சிலி மீன்எறிசிறுபறவை
** 2 பெயர்கள் 163
#164
** பறவைப் பொதுப் பெயர்
புள்ளு போகில் சகுனம் பிணிமுகம்
ஒள்ளிய பறவைக்கு எல்லாம் பொதுப் பெயர்
பதங்கமும் ககமும் விகங்கமும் ஆகும்
** 7 பெயர்கள் 164
#165
** அன்னத்தின் பெயர்
ஓதிமம் அஞ்சம் எகினம் அன்னம்
நீதியின் உன்னமும் அவ் இனப் பறவை
** 4 பெயர்கள் 165
#166
** அன்னச் சிறகின் பெயர்
தூவி அன்னச்சிறகு எனச் சொல்லுவர்
** 1 பெயர் 166
#167
** சக்கரவாகத்தின் பெயர்
நேமிப்புள்ளும் சகோரமும் என்று இவை
ஆகும் சக்கரவாகப்பெயரே
** 2 பெயர்கள் 167
#168
** பெருங் குருகின் பெயர்
யானைஉண்குருகு பெருங்குருகு ஆகும்
** 1 பெயர் 168
#169
** கொய்யடி நாரையின் பெயர்
குருகு வண்டானம் கொய்யடி நாரை
** 2 பெயர்கள் 169
#170
** பெரு நாரையின் பெயர்
பெருநாரை போதா பிதாவும் ஆகும்
** 2 பெயர்கள் 170
#171
** வெண் நாரையின் பெயர்
வெண்நாரை சாரசம்
** 1 பெயர் 171
#172
** கருநாரையின் பெயர்
கருநாரை சிகரி
** 1 பெயர் 172
#173
** நிலாமுகியின் பெயர்
சகோரம் பேராந்தை தண் நிலாமுகியே
** 2 பெயர்கள் 173
#174
** நீர்க்காக்கையின் பெயர்
கரண்டம் நீர்க்காக்கை
** 1 பெயர் 174
#175
** சம்பங்கோழியின் பெயர்
கம்புள் சம்பங்கோழி
** 1 பெயர்175
#176
** கொக்கின் பெயர்
குரண்டமும் பகமும் கொக்கின் பெயரே
** 2 பெயர்கள் 176
#177
** வண்டின் பெயர்
அளியே கேசரம் அறுபதம் கழுதொடு
வரியே சுரும்பு கீதம் சூதம்
அரி மா பிரமரம் அராபதம் வரிக்கடை
பிரசம் தும்பி மதுகரம் மிஞிறு
விரவிய தேனீ வண்டு எனப்படுமே
** 12 பெயர்கள் 177
#178
** ஆண் வண்டின் பெயர்
சுரும்பு அவற்று ஆண் எனச் சொல்லவும் படுமே
மதுகரம் தும்பி ஆகவும் வைப்பர்
** 3 பெயர்கள் 178
#179
** இந்திரகோபத்தின் பெயர்
ஈயல் மூதா இந்திரகோபம்
**2 பெயர்கள் 179
#180
** விட்டில் பறவையின் பெயர்
பதங்கமும் சலபமும் விட்டில்பறவை
** 2 பெயர்கள் 180
#181
** சிள்வீட்டின் பெயர்
சிதடி நெடி சில்லிகை சிள்வீடு ஆகும்
** 3 பெயர்கள் 181
#182
** நுளம்பின் பெயர்
அஞலமும் ஞலவலும் நொள்ளலும் நுளம்பே
** 3 பெயர்கள் 182
#183
** கொசுகின் பெயர்
மசகம் கொசுகு என வகுத்தனர் புலவர்
** 1 பெயர்
#184
** துருஞ்சிலின் பெயர்
துருஞ்சில் ஆலாலம்
** 1 பெயர் 184
#185
** வாவலின் பெயர்
அஞ்சலிகை வாவல்
** 1 பெயர் 185
#186
** சேவல் எனும் பெயர்
மயில் ஒழித்து எல்லாப் பறவையின் ஆண்பெயர்
பயிலும் சேவல் எனும் மொழிப் பால
#187
** போத்து எனும் பெயர்
மயிலே எழாலொடு போத்து எனப்படுமே
** 2 பெயர்கள் 187
#188
** புள்ளின் பெண் பெயர்
பெட்டை பெடை பேடை புள்ளின் பெண்பெயர்
** 3 பெயர்கள் 188
#189
** அளகு எனும் பெயர்
கோழி கூகை பெண் பெயர் அல்லன
ஆயுங்காலை அளகு என அறையார்
#190
** பார்ப்பு – பிள்ளை – எனும் பெயர்
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை
** 2 பெயர்கள் 190
#191
** பறவை முட்டையின் பெயர்
அண்டமும் சினையும் அவற்றின் முட்டை
** 2 பெயர்கள் 191
#192
** வாய் அலகின் பெயர்
துண்டமும் மூக்கும் வாய் அலகு ஆகும்
** 2 பெயர்கள் 192
#193
** இறகின் பெயர்
பறையும் தூவியும் சிறையும் பிச்சமும்
இறகின் பெயர் குரல் கூழை என்று இவை
அருகி ஒருவழி ஆகு இடன் உடைய
** 6 பெயர்கள் 193
#194
** புள் ஒலிக் கூட்டத்தின் பெயர்
துழனி புள்ஒலிக்கூட்டம் ஆகும்
** 1 பெயர் 194
#195
** புள் ஈட்டத்தின் பெயர்
தொழுதி புள்ஈட்டம்
** 1 பெயர் 195
#196
** முதலையின் பெயர்
கிஞ்சுமாரமும் இடங்கரும் கராமும்
இங்கு இவை வன்மீனும் முதலை ஆகும்
**பெயர்கள் 196
#197
** ஆண் முதலையின் பெயர்
கராம் அவற்று ஆண் எனக் கருதல் வேண்டும்
** 1 பெயர் 197
#198
** சுறாமீனின் பெயர்
மகரம் சுறாமீன் ஆக வைப்பர்
** 1 பெயர் 198
#199
** இறால் மீனின் பெயர்
இறவே இறால்மீன்
**1 பெயர் 199
#200
** கெளிற்று மீனின் பெயர்
கெடிறு கெளிற்றுமீன்
** 1 பெயர் 200
#201
** மீன் பொதுப் பெயர்
மயிலை மீனம் மற்சம் மீன்பொதுப்பெயர்
** 3 பெயர்கள் 201
#202
** பெரு மீனின் பெயர்
யானை மீன் திமி பெருமீன் ஆகும்
** 2 பெயர்கள் 202
#203
** யானையை விழுங்கும் மீனின் பெயர்
யானையைவிழுங்கும்மீன் திமிங்கிலம் என்ப
** 1 பெயர்
#204
** திமிங்கிலத்தை விழுங்கும் மீனின் பெயர்
அ மீனை விழுங்கும் மீன் திமிங்கிலகிலமே
** 1 பெயர்
#205
** மலங்கின் பெயர்
ஏனை மலங்கு நூறை என்று ஆகும்
** 1 பெயர்
#206
** சங்கின் பெயர்
நந்து பணிலம் வளை நாகு சுரிமுகம்
கம்பு கோடு சங்கு எனப்படுமே
** 7 பெயர்கள்
#207
** சிறந்த சங்கின் பெயர்
சங்கில் சிறந்தது சாதி வலம்புரி
பொங்கிய கொக்கரை என்றும் புகல்வர்
** 2 பெயர்கள்
#208
** வலம்புரியில் சிறந்த சங்கின் பெயர்
அங்கு அதில் சிறந்தது சலஞ்சலம் என்ப
** 1 பெயர்
#209
** சலஞ்சலத்தில் சிறந்த சங்கின் பெயர்
அதிலும் சிறந்தது பாஞ்சசன்னியம்
**1 பெயர்
#210
** நத்தையின் பெயர்
கருநந்து நாகு சுரிமுகம் கூன் நத்தை
** 4 பெயர்கள்
#211
** கிளிஞ்சிலின் பெயர்
இறல் எருந்து ஏரல் கிளிஞ்சில் என்ப
** 3 பெயர்கள்
#212
** சிப்பியின் பெயர்
இப்பி சுத்தி சிப்பி ஆகும்
** 2 பெயர்கள்
#213
** பல்லியின் பெயர்
புள்ளி கெளளி கோகிலம் பல்லி
** 3 பெயர்கள்
#214
** தவளையின் பெயர்
அரி மரை நீகம் தேரை மண்டூகம்
வருபவை ஐந்தும் தவளைப் பெயரே
** 5 பெயர்கள்
#215
** ஆமையின் பெயர்
கச்சபம் கூர்மம் கமடம் ஆமை
** 3 பெயர்கள்
#216
** பெண் ஆமையின் பெயர்
துளி பெண்ஆமை
** 1 பெயர்
#217
** அட்டையின் பெயர்
சளுகம் அட்டை
** 1 பெயர்
# 218
** ஞெண்டின் பெயர்
அலவன் நள்ளி குளிர் ஞெண்டு ஆர்மதி
களவன் என்று இவை கர்க்கடகப் பெயரே
** 6 பெயர்கள்
#219
** ஆண் ஞெண்டின் பெயர்
அலவன் ஆண் என்று அறைதற்கும் உரித்தே
** 1 பெயர்
#220
** உளுவின் பெயர்
உளு உசு ஆகும்
** 1 பெயர்
#221
** எறும்பின் பெயர்
உறவி எறும்பே
** 1 பெயர்
#222
** தேளின் பெயர்
தெறுக்கால் பறப்பன் தேளே விருச்சிகம்
அலம் என் பெயரும் தேளின் மேற்றே
** 4 பெயர்கள் ‘
#223
** சிலந்தியின் பெயர்
சிலம்பியும் உலூதையும் சிலந்தி என்று ஆகும்
** 2 பெயர்கள்
#224
** நாகர வண்டின் பெயர்
நாகரவண்டின் நாமம் நொள்ளை
** 1 பெயர்
#225
**கறையான் பெயர்
சிதலை ஆழல் செல்லே கறையான்
** 3 பெயர்கள்
#226
** புழுவின் பெயா
கிருமியும் கீடமும் புழுவின் பெயரே
** 2 பெயர்கள்
#227
** கோல் தேனின் பெயா
கோல்தேன் பிரசம்
** 1 பெயர்
#228
** தேன் கூட்டின் பெயர்
இறால் தேன்கூடே
** 1 பெயர்
#229
** கோற்புழுவின் பெயர்
கோற்புழு உலண்டு கீடமும் ஆகும்
** 2 பெயர்கள்
#230
காதல் ஈகையில் போதிப் பெருந்தவன்
தெவ் அடு கால வை வேல் எழிலி
அவ்வை பாடிய அம்பல் கிழவன்
தேன் தார்ச் சேந்தன் தெரி சொல் திவாகரத்து
** மூன்றாவது விலங்கின் பெயர்த் தொகுதி முற்றிற்று
@4 மரப் பெயர்த் தொகுதி
#!
** தருவின் வருக்கமாவன
சந்தானம் தேவதாரம் தருக் கற்பகம்
மந்தாரம் பாரிசாதம் அவற்றின் வருக்கம்
** 5 பெயர்கள்
#2
** சந்தனத்தின் பெயர்
சாந்தம் மலயம் சந்திரதிலகம்
ஏய்ந்த ஆரம் சந்து இவை சந்தனம்
** 5 பெயர்கள்
#3
** அகிலின் பெயர்
அகருவும் பூழிலும் அகில் என அறைவர்
பகரின் காகதுண்டமும் ஆகும்
** 3 பெயர்கள்
#4
** ஆச்சா மரத்தின் பெயர்
சாலம் மராமரம் ஆவே ஆச்சா
** 3 பெயர்கள்
#5
** மகிழ் மரத்தின் பெயர்
வகுளம் இலஞ்சி மகிழ்மரம் என்ப
** 2 பெயர்கள்
#6
** தேக்கின் பெயர்
சாதி தேக்கே
** 1 பெயர்
#7
** சண்பகத்தின் பெயர்
சம்பகம் சண்பகம்
** 1 பெயர்
#8
** ஆலின் பெயா
பூதவம் கான்மரம் வடமரம் தொன்மரம்
ஓதிய பழுமரம் கோளி ஆலே
** 6 பெயர்கள்
#9
** அரசின் பெயர்
கணவம் பணையே மராமரம் போதி
அச்சுவத்தம் பிப்பிலம் அரசே
** 6 பெயர்கள்
#10
** அசோகின் பெயர்
பிண்டி செயலை காகோளி அசோகு
** 3 பெயர்கள்
#11
** இரத்தியின் பெயர்
இரத்தி இறலி
** 1 பெயர்
#12
** மருதின் பெயர்
அருச்சுனம் மருதே
** 1 பெயர்
#13
** கொன்றையின் பெயர்
இதழி கடுக்கை ஆரக்குவதம் கொன்றை
** 3 பெயர்கள்
#14
** குராவின் பெயர்
கோட்டம் குடிலம் குரா எனக் கூறுவர்
**2 பெயர்கள்
#15
** நாவலின் பெயர்
சம்பு நாவல்
** 1 பெயர்
#16
** வேம்பின் பெயர்
நிம்பம் வேம்பே
** 1 பெயர்
#17
** அத்தியின் பெயர்
அத உதும்பரம் அத்தி ஆகும்
** 2 பெயர்கள்
#18
** புளி மாவின் பெயர்
ஆம்பிரம் சூதம் மாழை புளிமா
** 3 பெயர்கள்
#19
** தேமாவின் பெயர்
சூதம் சேதாரம் ஆம்பிரம் கொக்கு
தீதுஇல் மரத்து இவை தேமா ஆகும்
** 4 பெயர்கள்
#20
** இருப்பையின் பெயர்
மதூகம் இருப்பை என வகுத்தனரே
** 1 பெயர்
#21
** செருந்தியின் பெயர்
பஞ்சரம் செங்கோடு செருந்தி ஆகும்
** 2 பெயர்கள்
#22
** கோங்கின் பெயர்
துருமோற்பலம் கன்னிகாரம் கோங்கே
** 2 பெயர்கள்
#23
** பச்சிலை மரத்தின் பெயா
பசும்பிடி தமாலம் பச்சிலை ஆகும்
** 2 பெயர்கள்
#24
** வன்னியின் பெயர்
கலிகம் சமியே குலிசம் வன்னி
** 3 பெயர்கள்
#25
** கருங்காலியின் பெயர்
கதிரம் கருங்காலி
**1 பெயர்
#26
** எட்டியின் பெயர்
காஞ்சிரை எட்டி
**1 பெயர்
#27
** செங் கருங்காலியின் பெயர்
சிறுமாரோடம் செங்கருங்காலி
** 1 பெயர்
#28
** புன்னையின் பெயர்
புன்னை புன்னாகம்
**1 பெயர்
#29
** சுரபுன்னையின் பெயா
வழை சுரபுன்னை
** 1 பெயர்
#30
** புனமுருங்கையின் பெயர்
புன்கு என்கிளவி புனமுருங்கைப் பெயர்
** 1 பெயர்
#31
** ஆத்தியின் பெயர்
ஆரே தாதகி ஆத்தி ஆகும்
**2 பெயர்கள்
#32
** மஞ்சாடி மரத்தின் பெயர்
திலகம் மஞ்சாடி
** 1 பெயர்
#33
** இலவ மரத்தின் பெயர்
இலவம் பொங்கர்
**1 பெயர்
#34
** நெல்லியின் பெயர்
ஆமலகம் நெல்லி
**1 பெயர்
#35
** கடு மரத்தின் பெயர்
அரிதகி கடுமரம்
** 1 பெயர்
#36
** புளியின் பெயர்
சிந்தம் சிந்துரம் சிறந்த ஆம்பிரம்
வந்த திந்திருணி எகினம் புளியே
** 5 பெயர்கள்
#37
** குருந்தின் பெயர்
குருந்து குந்தம்
** 1 பெயர்
#38
** வெட் பாலையின் பெயா
குடசம் வெட்பாலை
** 1 பெயர்
#39
** குமிழின் பெயர்
கூம்பல் கடம்பல் குமிழ் எனக் கூறுவர்
** 2 பெயர்கள்
#40
** குடைவேலின் பெயர்
உடை குடைவேலே
** 2 பெயர்
#41
** பாதிரி மரத்தின் பெயர்
பாடலம் பாதிரி
** 1 பெயர்
#42
** முருக்கின் பெயர்
கவிரே கிஞ்சுகம் முருக்கு எனக் கருதுவர்
** 2 பெயர்கள்
#43
** தேற்றின் பெயர்
இல்லம் தேறு ஆம்
** 1 பெயர்
#44
** விளாவின் பெயர்
வெள்ளில் விளா ஆம்
** 1 பெயர்
#45
** வில்வத்தின் பெயர்
கூவிளம் வில்வம் மாலூரம் கூவிளை
** 3 பெயர்கள்
#46
** வேங்கையின் பெயர்
திமிசும் திமிலும் கணியும் வேங்கை
** 8 பெயர்கள்
#47
** கடம்பின் பெயர்
கதம்பம் விசாலம் நீபம் கடம்பே
** 3 பெயர்கள்
#48
** வெண் கடம்பின் பெயர்
மரா வெண்கடம்பின் பெயர் ஆகும்மே
** 1 பெயர்
#49
** பலாவின் பெயா
பனசம் வருக்கை பலா எனப் பகர்வர்
** 2 பெயர்கள்
#50
** ஈரப் பலாவின் பெயர்
ஆசினி ஈரப்பலா ஆகும்மே
** 1 பெயர்
#51
** அழிஞ்சிலின் பெயர்
அழிஞ்சில் சேமரம் அங்கோலம் ஆகும்
** 2 பெயர்
#52
** மாதுளையின் பெயர்
மாதுளம் கழுமுள் மாதுளை ஆகும்
** 2 பெயர்கள்
#53
** தாது மாதுளையின் பெயர்
தாடிமம் தாதுமாதுளை என்ப
** 1 பெயர்
#54
** எலுமிச்சையின் பெயர்
சம்பீரம் முருகு எலுமிச்சை ஆகும்
** 2 பெயர்கள்
#55
** நாரத்தையின் பெயர்
நரந்தம் நாரத்தை ஆகும் என்ப
** 1 பெயர்
#56
** குருக்கத்தியின் பெயர்
குருகே மாதவி குருக்கத்தி ஆகும்
** 2 பெயர்கள்
#57
** அகத்தியின் பெயர்
அச்சம் கரீரம் முனியே அகத்தி
** 3 பெயர்கள்
#58
** எருக்கின் பெயர்
அருக்கம் எருக்கே
**1 பெயர்
#59
** களாவின் பெயர்
கள களாவே
** 1 பெயர்
#60
** இலந்தையின் பெயர்
இரத்தி வதரி இலந்தை ஆகும்
** 2 பெயர்கள்
#61
** காயாவின் பெயா
காசை பூவை காயா ஆகும்
** 2 பெயர்கள்
#62
** ஞாழலின் பெயர்
நறவம் சுள்ளி நாகம் ஞாழல்
** 3 பெயர்கள்
#63
** புன்கின் பெயர்
நத்தமாலம் புன்கு என நவில்வர்
** 1 பெயர்
#64
** குங்கும மரத்தின் பெயர்
மரவம் துருக்கம் குங்குமம் ஆகும்
** 2 பெயர்கள்
#65
** சதுரக் கள்ளியின் பெயர்
வச்சிராங்கம் கண்டீர்வத்தொடு
வச்சிரம் சதுரக்கள்ளிக்கு வைப்பர்
** 3 பெயர்கள்
#66
** அனிச்சத்தின் பெயர் ‘
நறவம் சுள்ளி அருப்பலம் அனிச்சம்
** 3 பெயர்கள்
#67
** தணக்கின் பெயர்
நுணவு தணக்கே
** 1 பெயர்
#68
** ஓடையின் பெயர்
உலவை ஓடை
#69
** ஒடுவின் பெயர்
ஒடுவே உடுப்பை
** 1 பெயர்
#70
** உழிஞ்சிலின் பெயர்
உன்னம் உழிஞ்சில்
** 1 பெயர்
#71
** சே மரத்தின் பெயர்
எகினம் சேமரம் ஆண்மரம் என்ப
** 2 பெயர்கள்
#72
** கமுகின் பெயர்
கந்தி பூகம் பூக்கம் கமுகே
**3 பெயர்கள்
#73
** பனையின் பெயர்
பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று
எண்ணிய நாமம் பனை என இசைப்பர்
** 5 பெயர்கள்
#74
** இளம்பனையின் பெயர்
போந்தை இளைம்பனை ஆகவும் புகல்வர்
** 1 பெயர்
#75
** தெங்கின் பெயர்
நாளிகேரம் தெங்கு தாழை என நவில்வர்
**2 பெயர்கள்! 75
#76
** மூங்கிலின் பெயர்
காம்பு திகிரி கண் வேழம் சந்தி
தூம்பு முளை வெதிர் விண்டு வேரல்
முந்தூழ் தட்டை கீசகம் வேய் பணை
அம்பு வரை வேணு கழை அமை ஓங்கல்
பாதிரி கிளை அரி பாண்டில் உள்பட
வருபவை மூங்கில் என வகுத்தனரே
** 25 பெயர்கள் 76
#77
** கரும்பின் பெயர்
கழை வேழம் இக்கு கன்னல் கரும்பே
** 4 பெயர்கள் 77
#78
** தாழையின் பெயர்
கண்டல் கேதகை மடி கைதை முடங்கல்
வண்டு அமர் தாழை என வகுத்தனரே
** 5 பெயர்கள் 78
#79
** வாழையின் பெயர்
கதலியும் அரம்பையும் வாழை ஆகும்
** 2 பெயர்கள் 79
#80
** பூவாது காய்க்கும் மரத்தின் பெயர்
கோளி பூவாதுகாய்க்கும்குளிர்மரம்
** 1 பெயர் 60
#81
** வண்டு உணா மலர் மரமாவன
சண்பகமும் வேங்கையும் வண்டுஉணாமலர்மரம்
**2 பெயர்கள் 81
#82
** மரப் பொதுப் பெயர்
பாதவம் தாரு தருவே தாவரம்
ஓதிய மூலம் மரப்பொதுப்பெயரே
** 5 பெயர்கள்
#83
** மரச் செறிவின் பெயர்
பொதும்பர் மரச்செறிவு
** 1 பெயர் 83
#84
** மரப் பொதும்பின் பெயர்
கோடரம் பொதும்பே
** 1 பெயர் 84
#85
** நந்தன வனத்தின் பெயர்
தேம் பொழில் மரக்கா தோட்டம் துடவை
உய்யானம் சோலை வனம் உத்தியானம்
தண்டலை கானம் அடவி பதினொன்றும்
ஈண்டிய நந்தனவனம் என இசைப்பர்
** 11 பெயர்கள் 85
#86
** காட்டின் பெயர்
கடம் வியல் பழுவம் கட்சி குறும்பொறை
கடறு காந்தாரம் அடவி கான் வனம்
ககனம் காண்டம் கட்டம் முளரி
கரம் அத்தம் ஆரணியம் கானம் களரி
சீரணி பொச்சை விடர் தில்லம் காடே
** 23 பெயர்கள்
#87
** இலை உதிர்ந்த முதுகாட்டின் பெயர்
முதை இலை உதிர்வு பிறங்கிய முதுகாடே
** 1 பெயர்
#88
** கரிகாட்டின் பெயர்
பொச்சையும் சுரமும் பொது கரிகாடே
** 3 பெயர்கள்
#89
** காவற்காட்டின் பெயர்
அரண் இளை காவற்காடு என அறைவர்
** 2 பெயர்கள்
#90
ஒரு மரம் ஒரு பெயர் உரைக்கும் கிளவி
வரைவு இல என்மனார் வள்ளியோரே
#91
** தூற்றின் பெயர்
இறும்பே மிடை தூறு
** 1 பெயர்
#92
** இண்டையின் பெயர்
இண்டை ஈங்கை
** 1 பெயர்
#93
** முள்ளுடை மூலத்தின் பெயர்
முண்டகம் முள்ளுடைமூலம் என்ப
** 7 பெயர்
#94
** முள்ளின் பெயர் ‘
கண்டகம் கடுவே முள் எனக் கருதுவர்
** 2 பெயர்
#95
** மரக் காழின் பெயர்
ஆசினி கரியே அரியே வைரம்
சேகே மரத்தின்காழ் எனச் செப்புவர்
** 5 பெயர்கள்
#96
** பிரம்பின் பெயர்
வேத்திரம் சாதி சூரல் பிரம்பே
** 2 பெயர்கள்
#97
** ஆண் மரத்தின் பெயர்
அகக்காழ் வன்மரம் ஆண்மரம் ஆகும்
அவை கருங்காலி முதலாய் உள்ளன
** 2 பெயர்கள்
#98
** பெண்மரத்தின் பெயர்
புறக்காழ் வன்புல் பெண்மரம் ஆகும்
அவைதாம் தெரிக்கின் பனை கமுகு தெங்கு மூங்கில்
** 4 பெயர்கள்
#99
** அலி மரத்தின் பெயர்
முருக்கு நார் பால் மரம் முதலாயின
வெளிறு அலிமரம் எனும் விகற்பம் பெறுமே
** 1 பெயர் 99
#100
** சிறு தூற்றின் பெயர்
அறலே பதுக்கை சிறுதூறு ஆகும்
** 2 பெயர்கள்
#101
** மருந்து எனும் பெயா
புல்லும் மரனும் புதலும் பூடும்
வல்லியும் பெயர்க் கொடை மருந்து எனப்படுமே
** 5 பெயர்கள் 101
#102
** அத்திர சத்திரம் தைத்த
** புண் மாற்றும் மருந்தின் பெயர்
தைத்த அத்திரம் சத்திரம் தணிக்கும்
மெய்த்த நன் மருந்தே சல்லியகரணி
** 1 பெயர் 102
#103
** துணிபட்ட உறுப்பினைப் பொருத்தும் ‘
** மருந்தின் பெயர்
துண்டம் ஆன உறுப்புத் துணியினைச்
சந்துசெய் மருந்தே சந்தானகரணி
** 1 பெயர் 103
#104
** விரணம் தழும்புகளை நீக்கும்
** மருந்தின் பெயர்
விரணமும் தழும்பும் நீக்கி மெய்யினைத்
தகைமை செய் மருந்தே சமனியகரணி
** 1 பெயர் 104
#105
** உயிர் தரும் மருந்தின் பெயர்
உயிர்தரும்மருந்தே மிருதசஞ்சீவினி
** 1 பெயர் 105
#106
** மரம் முதல் இளமையின் பெயர்
பிள்ளை குழவி கன்று போத்து எனக்
கொள்ப மரம்முதல்இளமைப்பெயர்க் கொடை
** 4 பெயர்கள் 106
#107
** நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே
#108
** மரக் கொம்பின் பெயர்
பொங்கர் காம்பு சாகை உறுப்பு
கோடு பிறக்கம் சினை பணை உலவை
கோடரம் விடபம் தரு மரக்கொம்பே
** 12 பெயர்கள் 108
#109
** தழையின் பெயர்
உலவை தழையே
** 1 பெயர் 109
#110
** இளங் கொம்பின் பெயர்
வளார் இளங்கொம்பே
** 1பெயர் 110
#111
** இலையின் பெயர்
பத்திரம் ஓலை பாசடை தண்ணடை
சாகம் தமாலம் தழை பாசிலை அடை
பேசிய பன்னம் இலை எனப்படுமே
** 10 பெயர்கள்
#112
** தளிரின் பெயர்
வல்லரி குழை முறி மஞ்சரி கிசலயம்
பல்லவம் அலங்கல் கிளை தளிர் ஆகும்
** 8 பெயர்கள்
#113
** தளிர்த்தலின் பெயர்
இலிர்த்தலும் சிலிர்த்தலும் குழைத்தலும் தளிர்த்தல்
** 3 பெயர்கள் 113
#114
** அடி வெண் குருந்தின் பெயர்
முருந்தே முதலில் செறி வெண்குருத்தே
** 1 பெயர் 114
#115
** கொத்தின் பெயர்
தொத்தும் இணரும் துணரும் மஞ்சரியும்
கொத்தின் தொடர்ச்சியைக் கூறும் கிளவி
** 4 பெயர்கள் 115
#116
** பசுங் காயின் பெயர்
பசுங்காய் தீவிளி
** 1 பெயர் 116
#117
** பழத்தின் பெயர்
பலம் கனி பழமே
** 2 பெயர்கள்
#118
** பரலின் உட்படு குருத்தின் பெயர்
பயினே பரலின்உட்படுகுருத்தே
** 1 பெயர் 118
#119
** வெட்டுக் குருத்தின் பெயர்
பிசினே ஆனி வெட்டுக்குருத்தே
**
** 2 பெயர்கள்
#120
** நந்தியாவர்த்தத்தின் பெயர்
வலம்புரி நந்தியாவர்த்தம் ஆகும்
** 1 பெயர் 120
#121
** கஞ்சாவின் பெயர்
கஞ்சம் குல்லை கஞ்சா ஆகும்
** 2 பெயர்கள் 121
#122
** நொச்சியின் பெயர்
சிந்துவாரம் நிர்க்குண்டி நொச்சி
** 2 பெயர்கள் 122
#123
** காந்தளின் பெயா
காந்துகம் தோன்றி பற்றை கோடல் என்று
ஆய்ந்த நான்கும் காந்தள் ஆகும்
** 4 பெயர்கள் 123
#124
** செங்காந்தவின் பெயர்
காந்தள் தோன்றி பற்றை செங்காந்தள்
** 3 பெயர்கள் 124
#125
** கோடை என்னும் பெயர்
வெண்காந்தள் செங்காந்தள் என்று இரு விகற்பமும்
கொண்டே வழங்கும் கோடைப் பெயரே
** 2 பெயர்கள்
#126
** ஊமத்தையின் பெயர்
உன்மத்தம் மத்தம் ஊமத்தைப் பெயரே
** 2 பெயர்கள்
#127
** ஆமணக்கின் பெயா
ஏரண்டம் ஆமணக்கு
** 1 பெயர்
#128
** குறிஞ்சியின் பெயர்
கோரண்டம் குறிஞ்சி
** 1 பெயர்
#129
** அலரியின் பெயர்
கரவீரம் அலரி கணவீரமும் ஆம்
** 2 பெயர்கள்
#130
** வெட்சியின் பெயர்
செச்சை சிந்தூரம் வெட்சி ஆகும்
** 2 பெயர்கள்
#131
** சிறு பூளையின் பெயர்
உழிஞை சிறுபூளை என உரைத்தனரே
** 1 பெயர்
#132
** பருத்தியின் பெயர்
பரியே பன்னல் கார்ப்பாசம் பருத்தி
** 3 பெயர்கள்
#133
** திப்பிலியின் பெயர்
திப்பிலி காமன் சிறுமூலகமே
** 2 பெயர்கள்
#134
** துளசியின் பெயர்
துளசி குல்லை துளபம் வனம் துழாய்
** 4 பெயர்கள்
#135
** மிளகின் பெயர்
மரீசி கறி இவை மிளகு என வைப்பர்
** 2 பெயர்கள்
#136
** மஞ்சளின் பெயர்
மஞ்சள் அரிசனம்
** 1 பெயர்
#137
** கருணையின் பெயர்
கந்தம் கருணை
** 1 பெயர்
#138
** சிறுகிழங்கின் பெயர்
சுரசம் சிறுகிழங்கு ஆகும் என்ப
** 1 பெயர்
#139
** வாசம் தரு பல பண்டத்தின் பெயர்
தகரம் தக்கோலம் கோட்டம் சாதிக்காய்
இலவங்கம் மாஞ்சி கச்சோலம் ஏலம் எனப்
பகரும் வாசம்தருபண்டப்பெயரே
** 8 பெயர்கள்
#140
** வெட்டி வேரின் பெயர்
மூலகந்தம் பீதகத்தொடு
வேரி இருவேலி வெட்டிவேர் என்ப
** 4 பெயர்கள்
#141
** இலாமிச்சையின் பெயர்
வேர் வாசம் இலாமிச்சை மேல் ஆகும்
** 2 பெயர்கள்
#142
** கடுகின் பெயர்
கடிப்பகை ஐயவி கடுகின் பெயரே
** 2 பெயர்கள்
#143
** கொத்துமலியின் பெயர்
உருளரிசி கொத்துமலி என உரைப்பர்
** 1 பெயர்
#144
** கழங்கு – அல்லது – கழற்காயின் பெயர்
கழங்கே மூழல்
** 1 பெயர்
#145
** கழங்கின் கொடியின் பெயர்
கொடி கழல் ஆகும்
** 1 பெயர்
#146
** கிலுகிலுப்பையின் பெயர்
பகன்றை கிலுகிலுப்பை
** 1 பெயர்
#147
** சேம்பின் பெயர்
சகுடம் சேம்பே
**1 பெயர்
#148
** சிறுகீரையின் பெயர் –
சில்லி சாகினி சிறுகீரைப் பெயரே
** 2 பெயர்கள்
#149
** கொத்தான் பெயர்
நந்தை கொத்தான் நரந்தையும் ஆகும்
** 2 பெயர்கள்
#150
** பாற் சொற்றியின் பெயர்
பாயசம் பாற்சொற்றி பனசமும் ஆகும்
** 2 பெயர்கள்
#151
** குன்றியின் பெயர்
குருவிந்தம் குஞ்சம் குன்றிப் பெயரே
** 2 பெயர்கள்
#152
** கொளிஞ்சியின் பெயர்
கோளி கொளிஞ்சி
**1 பெயர்
#153
** நாயுரீஇயின் பெயர்
கரமஞ்சரி நாயுரீஇ என்ப
** 1 பெயர்
#154
** இஞ்சியின் பெயா
இஞ்சி நறுமருப்பு அல்லம் என்ப
** 2 பெயர்கள்
#155
** கற்றாழையின் பெயர்
குமரி கற்றாழை ஆகக் கூறுவர்
** 1 பெயர்
#156
** வழுதலையின் பெயர்
வங்கம் பிருகதி வழுதுணை வழுதலை
** 3 பெயர்கள்
#157
** மலைச் சாரல் விளை நெல்லின் பெயர்
ஐவனம் மலைச்சாரல்விளைநெல் ஆகும்
** 1 பெயர்
#158
** குள நெல்லின் பெயர்
நீவாரம் குளநெல்
** 1 பெயர்
#159
** செய்ந் நெல்லின் பெயர்
சாலி செய்ந்நெல்லே
** 1 பெயர்
#160
** செந்நெல்லின் பெயர்
செந்நெல் விரீகி செஞ்சாலி ஆகும்
** 2 பெயர்கள்
#161
** நெற் போரின் பெயர்
சும்மை குவால் போர்
** 2 பெயர்கள்
#162
** அரிசியின் பெயர்
அரியே தண்டுலம் அரிசி ஆகும்
** 2 பெயர்கள்
#163
** வேய் அரிசியின் பெயர்
இயவை தோரை எனும் வேய்அரிசி
** 2 பெயர்கள்
#164
** சோளத்தின் பெயர்
சொன்னலும் இறுங்கும் சோளம் ஆகும்
** 2 பெயர்கள்
#165
** கருந்தினையின் பெயர்
இறடி கருந்தினை
** 1 பெயர்
#166
** செந்தினையின் பெயர்
ஏனல் செந்தினை
** 1 பெயர்
#167
** உழுந்தின் பெயர்
மாடம் உழுந்தே
** 1 பெயர்
#168
** துவரையின் பெயா
ஆடகம் துவரை
** 1 பெயர்
#169
** காராமணியின் பெயர்
கூலம் இதை காராமணிக் கூற்றாம்
** 2 பெயர்கள்
#170
** கடலையின் பெயர்
மஞ்சூரம் கடலை
** 1 பெயர்
#171
** பயற்றின் பெயர்
முற்கம் பயறே
** 1 பெயர்
#172
** கம்பின் பெயர்
கவலை புல் செந்தினை கம்பு ஆகும்மே
** 3 பெயர்கள்
#173
** கோதுமையின் பெயர்
கோதி கோதுமை
** 1 பெயர்
#174
** கொள்ளின் பெயர்
குலுத்தம் காணம் கொள் ஆகும்மே
** 2 பெயர்கள்
#175
** வரகின் பெயர்
வரகு கோத்திரவம்
** 1 பெயர்
#176
** அவரை துவரை முதலியவற்றின் பெ17யர்
முதிரை அவரை துவரை முதலாயின
** 1 பெயர்
#177
** விதையின் பெயா
பரல் காழ் வீசம் வித்து விதையாம்
** 4 பெயர்கள்
#178
** எள்ளின் பெயர்
எண்ணும் திலமும் எள் என இசைப்பர்
** 2 பெயர்கள்
#179
** எள் இளங் காயின் பெயர்
கவ்வை எள்இளங்காய் ஆகும்மே
** 1 பெயர்
#180
** கதிரின் பெயர்
குரல் கதிர் ஆகும்
** 1 பெயர்
#181
** பதரின் பெயர்
பதடி பதரே
** 1 பெயர்
#182
** தினைத் தாளின் பெயர்
இருவியும் அருவியும் தினைத்தாள் ஆகும்
** 2 பெயர்கள்
#183
** வைக்கோலின் பெயர்
வையே பலாலம் வைக்கோல் ஆகும்
** 2 பெயர்
#184
** மற்றும் வைக்கோலின் பெயர்
வழுதும் ஒரோவழி வையும் பெறுமே
** 3 பெயர்கள் 184
#185
** தூற்றா நெற் கூட்டின் பெயர்
பொங்கழி தூற்றாநெற்கூடு ஆகும்
** 1 பெயர்
#186
** பயிரின் பெயர்
பயிரே பசும்புல் பைங்கூழ் ஆகும்
** 2 பெயர்கள் 186
#187
** புல் பிறப்பின் பெயர்
புதல் புல் என வரு புல் பிறப்பு ஆகும்
** 2 பெயர்கள் 187
#188
** பச்சறுகின் பெயர்
பதமும் தூர்வையும் பச்சறுகு ஆகும்
** 2 பெயர்கள் 188
#189
** இளம் புல்லின் பெயர்
சட்டம் இளம் புல்
** 1 பெயர் 189
#190
** தெங்கின் நார்ப் பாளையின் பெயர்
நாரி நெய்யரி தெங்கின்நார்ப்பாளை
** 2 பெயர்கள்
#191
** கிழங்கின் பெயர்
மூலம் கந்தம் கிழங்கு என மொழிப
** 2 பெயர்கள்
#192
** கோற் கொடியின் பெயர்
இலதை எனும் பெயர் கோற்கொடிக்கு எய்தும்
** 1 பெயர்
#193
** கொடிப் பிறப்பின் பெயா
கோற்கொடி மென்கொடி கொடியின் பிறப்பே
** 2 பெயர்கள் 193
#194
** கற்பகம் சேர் கொடி
கற்பகம்சேர்கொடி காமவல்லி
** 1 பெயர் 194
#195
** கொடியின் பெயர்
வல்லியும் நூழிலும் வள்ளியும் கொடியே
** 3 பெயர் 195
#196
** மல்லிகையின் பெயர்
மல்லிகை மெளவல்
** 1 பெயர் 196
#197
** இருவாட்சியின் பெயர்
மயிலை இருவாட்சி
** 1 பெயர் 197
#198
** முல்லையின் பெயர்
மெளவலும் தளவமும் கற்பும் முல்லை
** 3 பெயர்கள் 198
#199
** சிறுசண்பகத்தின் பெயர்
பித்திகை சாதி கருமுகை மூன்றும்
ஒத்த சிறுசண்பகம் ஆகும்மே
** 3 பெயர்கள் 199
#200
** மெளவலின் பெயா
மாலதி மௌவல் ஆகும் என்ப
** 1 பெயர் 200
#201
** மாலதி என்னும் பெயர்
மாலதி சிறுசண்பகமும் ஆகும்
** 1 பெயர் 201
#202
# மருக்கொழுந்தின் பெயர்
தமனகம் மருக்கொழுந்து
** 1 பெயர்
#203
** கூதாளியின் பெயர்
துடி கூதாளம் கூதாளி என்ப
** 2 பெயர்கள் 203
#204
** கொவ்வையின் பெயா
விம்பமும் தொண்டையும் கொவ்வைப் பெயரே
** 2 பெயர்கள் 304
#205
** வள்ளையின் பெயர்
வள்ளை நாளிகம்
** 1 பெயர் 205
#206
** காக்கணத்தின் பெயர்
கன்னி கிகிணி கருவிளை காக்கணம்
** 3 பெயர்கள் 206
#207
** முந்திரிகையின் பெயர்
மதுரசம் கோத்தனிகை முந்திரிகை ஆகும்
** 2 பெயர்கள் 207
#208
** மலைப் பச்சையின் பெயர்
குளவி மலைப்பச்சை
** 1 பெயர் 208
#209
** இசங்கின் பெயர்
குண்டலி முத்தாபலம் இசங்கு எனக் கூறுவர்
** 2 பெயர்கள் 209
#210
** வேரின் பெயர்
சடை தூர் சிவை வேர்
** 3 பெயர்கள் 210
#211
** அடம்பின் பெயர்
அடம்பு சோபாலிகை
** 1 பெயர் 211
#212
** விரிதூற்றின் பெயர்
அதிரல் விரிதூறு
** 1 பெயர் 212
#213
** பீர்க்கின் பெயர் ன
பீரம் பீர்க்கு
** 1 பெயர் 213
#214
** பெரும் பீர்க்கின் பெயர்
பெரும்பீர்க்கு படலிகை
** 1 பெயர்
#215
** பாகலின் பெயர்
கூலம் பாகல்
**1 பெயர்
#216
** சிவேதையின் பெயர் ‘
சிவேதை பகன்றை
** 1 பெயர்
#217
** சீந்திவின் பெயர்
அமுதவல்லி சீந்தில்
** 1 பெயர்
#218
** காஞ்சொறியின் பெயர்
கண்டூரம் காஞ்சொறி
** 1 பெயர்
#219
** தாளியின் பெயர்
பஞ்சிகம் தாளி
** 1பெயர்
#220
** நறையாலின் பெயர்
பகன்றை நறையால் என்னவும் பகர்வர்
** 1 பெயர்
#221
** வெற்றிலைமின் பெயர்
நாகவல்லி தாம்பூலம் வெற்றிலை
** 2 பெயர்கள்
#222
** பிரண்டையின் பெயர்
வச்சிரவல்லி பிரண்டை ஆகும்
** 1 பெயர்
#223
** அவுரியின் பெயர்
நீலி அவுரி
** 1 பெயர்
#224
** குறிஞ்சியின் பெயர்
குறிஞ்சி சகசரி
** 1 பெயர்
#225
** தும்பையின் பெயர்
துரோணம் தும்பை ஆகச் சொல்லுவர்
** 1 பெயர்
#226
** தருப்பையின் பெயர்
குசையே தருப்பை என்னக் கூறுவர்
** 1 பெயர்
#227
** பஞ்சாய்க்கோரையின் பெயர்
எருவை பஞ்சாய்க்கோரை என்ப
** 1 பெயர்
#228
** வாட்கோரையின் பெயர்
செருந்தி வாட்கோரை
** 1 பெயர்
#229
** நாணலின் பெயர்
காசை நாணல்
** 1 பெயர்
#230
** விழற் புல்லின் பெயர்
விரணம் விழற்புல்
** 1 பெயர்
#231
** சுரையின் பெயர்
புற்கொடி மென் பூச் சுரை எனப் புகல்வர்
** 1 பெயர்
#232
** நீர்முள்ளியின் பெயர்
நீர்முள்ளி முண்டகம் ஆகும் என்ப
** 1 பெயர்
#233
** பாசியின் பெயர்
நாரம் செவிரம் பதிகம் சைவலம்
பாசி என்று பகரப்படுமே
** 4 பெயர்கள்
#234
** நீர்க் குளிரியின் பெயர்
கல்காரம் நீர்க்குளிரி என்ப
** 1 பெயர்
#235
** தாமரையின் பெயர்
புண்டரீகம் பதுமம் நளினம் சரோருகம்
முண்டகம் அம்போருகம் அரவிந்தம்
பங்கயம் அம்புயம் வாரிசம் சலசம்
கஞ்சம் வனசம் கோகனதம் கமலம்
முளரி நீரோருகம் திருமால் கொப்பூழ்
திருமலர் இண்டை சதபத்திரி என
வருபவை தாமரை வண் பெயர் ஆகும்
** 21 பெயர்கள்
#236
** தாமரைக் காயின் பெயர்
வராடகம் தாமரைக்காய் என வகுப்பர்
** 1 பெயர்
#237
** தாமரைச் சுருளின் பெயர்
சுருள் விசி வளயம்
** 2 பெயர்கள்
#238
** குவளைப் பொதுப் பெயர்
உற்பலம் குவலயம் கழுநீர் குவளை
** 3 பெயர்கள்
#239
** கருங்குவளையின் பெயர்
நீலோற்பலம் இந்தீவரம் குவலயம்
நீலம் பானல் காவி கருங்குவளை
கல்லாரமும் எனக் கழறல் ஆகும்
** 7 பெயர்கள்
#240
** செங்குவளையின் பெயர்
செங்குவளை அரத்தம் உற்பலம் செங்கழுநீர்
** 3 பெயர்கள்
#241
** குவலயம் எனும் பெயர்
குவலயம் நெய்தல் ஆகவும் கூறுவர்
** 1 பெயர்
#242
** செவ்வாம்பலின் பெயர்
கைரவம் செவ்வல்லி செவ்வாம்பல் ஆகும்
** 2 பெயர்கள் 242
#243
** குமுதம் என்னும் பெயர்
வெள்ளாம்பல் சேதாம்பல் என்று இரு விகற்பமும்
கொள்ப என்பன குமுதப் பெயர்க் கொடை
** 2 பெயர்கள் 243
#244
** குமுதத்தின் பெயர்
ஆம்பலும் நெய்தலும் அல்லியும் குமுதம்
** 3 பெயர்கள்
#245
** அகவிதழின் பெயர்
** அல்லி அகவிதழ்
** 1 பெயர் 245
#246
** புறவிதழின் பெயர்
புல்லி புறவிதழ்
** 1 பெயர் 246
#247
** பூவினுள் கொட்டையின் பெயர்
பொகுட்டே கன்னிகை பூவினுள்கொட்டை
** 2 பெயர்கள் 247
#248
** பூவின் வகையாவன
கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூ நிலப்பூ
தோற்றம் உடைய பூவின் தொடர்பே
** 4 பெயர்கள் 248
#249
** மொட்டின் பெயர்
முகை நனை கலிகை முகிழ் சினை கோரகம்
நகை கன்னிகை போகில் அரும்பு மொட்டே
** 10 பெயர்கள் 249
#250
** பூவின் பெயர்
அலர் தார் அலரி போது வீ துணர்
மலரொடு இணர் இவை மலர்ந்த பூவே
** 8 பெயர்கள் 250
#251
** பூங்கொத்தின் பெயர்
துணரே மஞ்சரி வல்லரி தொத்தோடு
இணரே குலை இவை பூங்கொத்து என்ப
** 6 பெயர்கள் 251
#252
** வெற்றிப் பூவின் பெயர்
நல் இசை அம்பல் செல்வச் சேந்தனில்
வரைவுஇல் கல்வியில் படையில் கொடையில்
வெல்லுநர் அணி வாகை வெற்றிப்பூவே
** 1 பெயர் 258
#253
** பழம்பூவின் பெயர்
செம்மல் பழம்பூ ஆகச் செப்புவர்
** 1 பெயர் 253
#254
** மலர்த் தாதின் பெயர்
மகரந்தம் கேசரம் கொங்கு மலர்த்தாதே
** 3 பெயர்கள்
#255
** பூ இதழின் பெயர்
ஏடும் தோடும் பூவின்இதழே
** 3 பெயர்கள்
#256
** மாலையின் பெயர்
தொடையல் வாசிகை சிகழிகை கோதை
படலை அலங்கல் கத்திகை பிணையல்
அணியல் சுருக்கை தொடலை தாமம்
தொங்கல் தெரியல் கண்ணி தார் சூட்டு
மஞ்சரி ஒலியல் இலம்பகம் மாலை
** 20 பெயர்கள்
#257
** பின்னிய மாலையின் பெயர்
பிணையல் பின்னியமாலைப் பெயரே
** 1 பெயர்
#258
** நுதல் அணி மாலையின் பெயர்
சூட்டு உடன் இலம்பகம் நுதல்அணிமாலை
#259
** வாசிகையின் பெயர்
மாலை சிகழிகை வாசிகை தொடையல்
ஆகும் என்ப அறிந்திசினோரே
** 3 பெயர்கள்
#260
நாடே பிறர் நாட்டிற்கு உவமை ஆறே
காலம் அறிந்து உதவும் காவிரி தானே
ஆடவர் திலகன் அம்பல் மன்னன்
நீடு இசைத் தலைவன் அருவந்தைச் சேந்தன்
ஆய்ந்த திவாகரத்து அரும் பொருள் விளக்கும்
** நான்காவது மரப் பெயர்த் தொகுதி முற்றிற்று
@5 இடப் பெயர்த் தொகுதி
#1
** மோக்கத்தின் பெயர்
அமுதம் கேவலம் அபவருக்கம் வீடு
சிவம் கைவல்லியம் சித்தி மீளாக்கதி
பரகதியோடு முத்தி பஞ்சமகதி
நிர்வாணம் மோக்கம் என நிகழ்த்தினரே
** 12 பெயர்கள் 1
#2
** தெய்வ லோகத்தின் பெயர்
தானம் துறக்கம் பொன்னுலகு உம்பர்
வானகம் அமருலகு உயர்நிலை புத்தேள்
வியன் உலகு விசும்பு விண்ணுலகு நாகம்
பவனம் மா சுவர்க்கம் தெய்வலோகப் பெயரே
** 13 பெயர்கள் 2
#3
** நாக லோகத்தின் பெயர்
பவனம் நாகலோகப் பாலது ஆம்
** 1 பெயர் 3
#4
**விஞ்சையர் உலகத்தின் பெயர்
சேணியும் சேடியும் விஞ்சயர் சேர்விடம்
** 2 பெயர்கள் 4
#5
** திசையின் பெயர்
மாதிரம் ஆசை வம்பல் திசைப்பெயர்
#6
** மற்றும் திசையின் பெயர்
ககுபம் மிசை புலம் தேம் திக்கு அரிதம்’
விசும்பும் உலகும் கோ காட்டையும் ஆம்
** 13 பெயர்கள் 6
#7
** கீழ்த்திசையின் பெயர்
குணக்கே பூருவம் இந்திரி பிராசி
கிழக்கு கீழ்த்திசை கிளக்குங்காலே
** 5 பெயர்கள் 7
#8
** தெற்கின் பெயர்
அவாசி தக்கணம் யாமியம் தெக்கு
சிவேதை மற்று இவை தெற்கு எனல் ஆகும்
** 5 பெயர்கள் 8
#9
** மேற்கின் பெயர்
மேக்கு பச்சிமம் குடக்கு இவை மேற்கே
#10
** மற்றும் மேற்கின் பெயர்
வாருணம் பிரத்தியக்கும் அதுவே
** 5 பெயர்கள் 10
#11
** வடக்கின் பெயர்
உதக்கே உதீசி உத்தரம் என்ன
வடக்கின் பெயர் இவை வைக்குங்காலே
** 3 பெயர்கள் 11
#12
** பூமியின் பெயர்
அவனி காசினி மேதினி அளக்கர்
தரணி தாரணி தராதலம் குவலயம்
புடவி பூதலம் தரை படி ஞாலம்
வையம் அகிலம் கு மண் புவி பார்
நாடு உலகு புவனி பாரி யுகம் நேமி
அகலிடம் பொறை அரண் மண்டிலம் பூ திணை
தலம் பொழில் பிருதிவி வேலாவலயம்
நிலம் சகம் தாலம் பூமி என நிகழ்த்தினர்
** 38 பெயர்கள் 12
#13
** நரகின் பெயர்
நிரயம் துருக்கம் பாதாளம் கும்பி
அள்ளல் அளறே அருஞ்சிறை இருள்நிலம்
எரியும் திமிரமும் இரெளரவம் என்று இவை
நரகின் பெயர் என நவிலப்படுமே
** 11 பெயர்கள் 13
#14
** உலகின் பொதுப் பெயர்
புவனம் நாடு பொழில் தலம் புடவி
பவனம் உலகின்பொதுப்பெயர்ப் பால
** 6 பெயர்கள் 4
#15
** நாட்டின் பெயர்
பைதிரம் மண்டிலம் பாண்டில் தேயம்
தண்ணடை சனபதம் அகலுள் சும்மை
கண்டம் ஏணி உலகு என்று இவை நாடே
** 11 பெயர்கள் 15
#16
** மலையின் பெயர்
விலங்கல் அடுக்கல் வெற்பு பருப்பதம்
சிலம்பு நாகம் குறும்பொறை சிகரம்
வேதண்டம் வேரம் கிரி திகிரி சையம்
தரணி பூதரம் ஓங்கல் பிறங்கல்
குவடு குன்று ஓதி பறம்பு வரை விண்டு
போதி கோ சிலை இறும்பு தடம் மாதிரம்
பொச்சை நவிர் கல்லகம் பொருப்பு நகம் அசலம்
சாரல் சிலோச்சயம் சைலம் மலை என்ப
** 38 பெயர்கள் 16
#17
** மேருவின் பெயர்
பொன்மலை மேரு
** 1 பெயர் 17
#18
** வெள்ளி மலையின் பெயர்
வெண்மலை வேதண்டம் விசயார்த்தம் வெள்ளிமலை
** 3 பெயர்கள் 18
#19
** பொதிய மலையின் பெயர்
பொதிய மலை மலயம்
** 1 பெயர் 19
#20
** கொல்லி மலையின் பெயர்
வல்லியம் பொருப்பே கொல்லிமலை ஆகும்
** 1 பெயர் 20
#21
** குன்றின் பெயர்
இறும்பு பொச்சை குவடு பதலை
பிறங்கல் பொற்றை குறும்பொறை குன்றே
** 7 பெயர்கள் 21
#22
** மலை உச்சியின் பெயர்
கோடு கொடுமுடி குவடு சிகரம்
சிமையம் ஐந்தும் மலையின்உச்சி
** 5 பெயர்கள் 88
#23
** மலைப் பக்கத்தின் பெயர்
வாரமும் தடமும் சாரலும் மலைப்பக்கம்
** 3 பெயர்கள் 28
#24
** பாறையின் பெயர்
அறையே பாறை
** 1 பெயர் 24
#25
** துறுகல்லின் பெயர்
பொறையே துறுகல்
** 1 பெயர் 25
#26
** மலை முழையின் பெயர்
முடுக்கர் கந்தரம் மலைமுழை என்ப
** 2 பெயர்கள் 26
#27
** கீழ் அறையின் பெயர்
பிலமே கீழ்அறை
** 1 பெயர் 27
#28
** குகையின் பெயர்
நிகுஞ்சம் குகை ஆம்
** 1 பெயர் 28
#29
** கற்புழையின் பெயர்
கண்டறை கற்புழை
#30
** மற்றும் கற்புழைமின் பெயர்
கற்பாழி காண்டையும் கருதுவர் அதற்கே
** 3 பெயர் 30
#31
** கல்லின் பெயர்
சிலையே கல்லே
** 1 பெயர்
#32
** திரள்கல்லின் பெயர்
உலமே திரள்கல்
** 1 பெயர் 32
#33
** நுழை வாயிலின் பெயர்
நூழையும் சுருங்கையும் நுழைவாயில் ஆகும்
** 2 பெயர்கள் 33
#34
** மலைப்பிளப்பின் பெயர்
விடர் மலைப்பிளப்பு என விளம்பினர் புலவர்
** 1பெயர் 34
#35
** வெடிப்பின் பெயர்
விடரும் கமரும் வெடிப்பின் பெயரே
** 2 பெயர்கள் 35
#36
** திடரின் பெயர்
திட்டை திடரே
** 1 பெயர்
#37
** சிறுதிட்டையின் பெயர்
பதுக்கை சிறுதிட்டை
** 1 பெயர் 37
#38
** பரல் அடுத்து உயர் நிலத்தின் பெயர்
பரல்அடுத்துஉயர்நிலம் முரம்பு எனப்படுமே
** 1 பெயர் 38
#39
** மேட்டின் பெயர்
திட்டை திடறு சுவல் வல்லை வன்பால்
மெட்டு திடர் படர் குப்பை குவால் குவை
ஒட்டிய பதினொன்றும் மேடு என உரைப்பர்
** 11 பெயர்கள் 39
#40
** பாதாளத்தின் பெயர்
அரம் பிலம் பாதலம் பாதாளப் பெயரே
** 3 பெயர்கள் 40
#41
** கடலின் பெயா
அத்தி பெளவம் அளக்கர் ஆர்கலி
ஆழி பெருநீர் அம்பரம் முந்நீர்
உப்பு வீரை சக்கரம் சாகரம்
வேலை வெள்ளம் மகராலயம் நேமி
சலநிதி வாரி சலதி அலையே
பாராவாரம் உததி சமுத்திரம்
பரவை உவர் நரலை புணரி வாரிதி
வேலாவலயம் கார்கோள் ஓதம்
வாருணம் சிந்து வாரம் அம்புராசி
கார்மலி உவரி கடல் எனக் கருதுவர்
** 36 பெயர்கள் 41
#42
** கடல் திரையின் பெயர்
ஓதமும் புணரியும் கடல்திரை ஆகும்
** 2 பெயர்கள் 48
#43
** புனல் திரைப் பொதுப் பெயா
சீகரம் தரங்கம் அறல் கல்லோலம்
அலை புனல் திரைக்கு வரும் பொதுப் பெயரே
** 5 பெயர்கள் 43
#44
** கடற் கரையின் பெயர்
வேலையும் பாராவாரமும் கடற்கரை
** 2 பெயர்கள் 44
#45
** புனற் கரைப் பொதுப் பெயர்
தீரம் பாரம் வரை அணை கோடு
கூலம் வாரம் புனற்கரைப் பொதுப் பெயர்
** 7 பெயர்கள் 45
#46
** செய்கரையின் பெயர்
குலையும் சேதுவும் குரம்பும் செய்கரை
** 3 பெயர்கள் 46
#47
** மலைச் சாரல் வரும் யாற்றின் பெயர்
அருவி மலைச்சாரல்வரும்யாறு ஆகும்
** 1 பெயர் 47
#48
** முல்லைக் கான்யாற்றின் பெயர் ‘
கலுழியும் உயவையும் முல்லைக்கான்யாறு
** 2 பெயர்கள் 48
#49
** ஆற்றின் பொதுப் பெயர்
உந்தி நதி துறை வருபுனல் குடிஞை
சிந்துவோடு ஒலியல் ஆறு எனச் செப்புவர்
** 7 பெயர்கள் 49
#50
** கழியின் பெயர்
கானல் முரம்பு காயல் முகம் கழி
** 4 பெயர்கள்
#51
** கழிமுகத்தின் பெயர்
அதோமுகம் புகாரோடு அழிவுஇல் கூடல்
கழிமுகம் என்று கருதல் வேண்டும்
** 3 பெயர்கள்
#52
** உப்பளத்தின் பெயர்
உப்பளம் காயல் உவளகம் அளக்கர்
** 3 பெயர்கள்
#53
** காவிரி நதியின் பெயர்
பொன்னி காவிரி
** 1 பெயர்
#54
** பொருநை ததியின் பெயர்
பொருநை தண் பொருந்தம்
** 1 பெயர்
#55
** கன்னி நதியின் பெயர்
குமரி கன்னி ஆகக் கூறுவர்
** 1 பெயர்
#56
** வையை நதியின் பெயர்
வேகவதியே வையை ஆகும்
** 1 பெயர்
#57
** ஆன் பொருந்த நதியின் பயர்
ஆனி வானி ஆன் பொருந்தம் ஆகும்
** 2 பெயர்கள்
#58
** கெளதமை நதியின் பெயர்
கோதை கெளதமை ஆகக் கூறுவர்
** 1 பெயர்
#59
** கோதாவிரி நதியின் பெயர்
விருத்தகங்கை விமலை கோதாவிரி
** 2 பெயர்கள்
#60
** பால் யாற்றின் பெயர்
பாலி கீரநதி பால்யாறு ஆகும்
** 2 பெயர்கள்
#61
** வாவியின் பெயர்
அலந்தை பண்ணை கோட்டகம் கிடங்கோடு
இலஞ்சி தாங்கல் சுனை ஏல்வை ஓடை
வட்டம் தடாகம் மடு குளம் வலயம்
குட்டம் குண்டம் பட்டம் சூழி
பொய்கை கேணி ஆவி தடம் படுகர்
ஏரி கயம் பயம் உவளகம் வாவி
** 27 பெயர்கள்
#62
** எந்திர வாவியின் பெயர்
இலவந்திகையே எந்திரவாவி
**1 பெயர்
#63
** ஆற்றிடைக் குறையின் பெயர்
இலங்கையும் துருத்தியும் என வரும் பெயரோடு
அரங்கமும் ஆற்றிடைக்குறை என அறைவர்
** 3 பெயர்கள் 63
#64
** ஊர் உணும் நீரின் பெயர்
ஊர்உணும்பொதுநீர் ஊருணி ஆகும்
** 1 பெயர் 64
#65
** கிணற்றின் பெயர்
கூவலும் அசும்பும் கூபமும் குழியும்
பூவலும் கேணியும் துரவும் கிணறே
** 7 பெயர்கள் 65
#66
** ஊறலின் பெயர்
அஃகும் உறவியும் அசும்பும் ஊறல்
** 3 பெயர்கள் 66
#67
** நீர்க் குமிழியின் பெயர்
புற்புதம் மொக்குள் பெளவம் நீர்க்குமிழி
** 3 பெயர்கள் 67
#68
** நுரையின் பெயர்
நுரையே பேனம் ஆகும் என்ப
** 1 பெயர் 68
#69
** ஆழத்தின் பெயர்
அழுந்தும் குண்டும் கயமும் ஆழம்
** 3 பெயர்கள் 69
#70
** நிறை புனவின் பெயர்
வழாறும் பிராறும் வாரியும் நிறைபுனல்
** 3 பெயர்கள் 70
#71
** நீந்து புனலின் பெயர் ‘
அகாதம் என்பது நீந்துபுனல் ஆகும்
** 1 பெயர் 71
#72
** கொழுந்து நீரோட்டத்தின் பெயர்
கோலம் என்பது கொழுந்துநீரோட்டம்
** 1 பெயா 72
#73
** தெளி நீரின் பெயர்
சற்சலம் என்பது தெளிநீர் ஆகும்
** 1 பெயர் 79
#74
** கலங்கல் புனலின் பெயர்
விலங்கல் கலுழி கலங்கல் புனலே
** 2 பெயர்கள் 4
#75
** சேற்றின் பெயர்
அள்ளல் அசறோடு அளக்கர் அஞறு
கொள்ளம் அளறு குழம்பு காலாழ்
தொள்ளி பங்கம் பூழி குழை சேறே
#76
** மற்றும் சேற்றின் பெயர்
தொய்யில் தொளியே செதும்பு சேதகம்
செய்யல் என்று இவை சேறு எனத் தகுமே
** 17 பெயர்கள்
#77
** வழுக்கு நிலத்தின் பெயர்
அருப்பம் அசடம் அழுவம் வழுக்குநிலம்
** 3 பெயர்கள்
#78
** பொல்லா நிலத்தின் பெயர்
அசும்பும் அயசும் அசுபாகம் தன்னுடன்
அங்கணமும் சகதியும் பொல்லா நிலமே
** 5 பெயர்கள்
#79
** வெண் மணலின் பெயர்
வாலுகம் வெண்மணல்
** 1 பெயர்
#80
** மணற் குன்றின் பெயர்
புளினம் மணற்குன்றே
**1 பெயர்
#81
** நுண் மணலின் பெயர்
அதர் அயிர் நுண்மணல்
** 2 பெயர்கள்
**82
**புழுதியின் பெயர்
பொடி பூழ்தி புழுதி ஆகும் என்ப
** 2 பெயர்கள்
#83
** அலை கொழித்தநுண் மணலின் பெயர்
அறலே அலைநுண்மணல் ஆகும்
** 1 பெயர்
#84
** குறிஞ்சி என்பது
மலைச்சார்பு குறிஞ்சி நிலம்
**1 பெயர்
#85
** நெய்தல் என்பது
கடல்சார்பு நெய்தல் நிலம்
**1 பெயர்
#86
** முல்லை என்பது
காடுசார்நிலம் முல்லை
** 1 பெயர்
#87
** மருதம் என்பது
நாடுசார்நிலம் மருதம்
** 1 பெயர்
#88
** பாலை என்பது
நீர் இன்றி வேனில் தெறு நிலம் பாலை
** 1 பெயர்
#89
** மருத நிலத்தின் பெயர்
அகணி பணை பண்ணை பழனம் கழனி
பானல் கம்பலை படுகர் வயல் மருதம்
** 9 பெயர்கள்
#90
** முல்லை நிலத்தின் பெயர்
புறவம் புறம்பணை முல்லை நிலப் பெயர்
** 2 பெயர்கள்
#91
** குறிஞ்சி நிலத்தின் பெயர்
அறைவர் குறிஞ்சிக்கும் அப் பெயர்தானே
** 2 பெயர்கள்
#92
** வன் பால் எனும் பெயர்
வன்பால் குறிஞ்சியும் பாலையும் ஆகும்
** 2 பெயர்கள்
#93
** மென் பால் எனும் பெயர்
மென்பால் என்பது மருதம் மேற்றே
** 1 பெயர்
#94
** சமப் பால் எனும் பெயர்
முல்லையும் நெய்தலும் மொழி சமப்பாலே
** 2 பெயர்கள்
#95
** ருநிலம் என்பது
மலையின் நீரில் வனத்தில் வந்த மற்று
இனைய மிகுதி சொல் கருநிலப்பெயரே
#96
** துருக்கத்தின் பெயர்
அழுவம் துருக்கம் ஆகும் என்ப
** 1 பெயர்
#97
** ஊரின் பெயர்
பாக்கம் பட்டினம் பதி நகர் சும்மை
பூக்கம் சேரி புரம் முட்டம் பூண்டி
அகரம் குடியே குறிச்சி கோசரம்
அகலுள் நொச்சி இருக்கை வேலி
குப்பம் பாடி குறும்பு பாழி
சிறுகுடி தண்ணடை உறையுள் எயிலொடு
வாழ்க்கை உட்படுத்து இருபத்தேழும்
நாடில் ஊர் என நவின்றிசினோரே
** 27 பெயர்கள்
#98
** நீரும் வயலும் சூழ்ந்த ஊரின் பெயர்
சுரந்த நீரும் வயலும் சூழ்ந்த ஊர்
கிராமம் ஆகக் களக்கப்படுமே
** 1 பெயர்
#99
** ஐஞ்ஞூறு குடி நிறைந்த ஊரின் பெயர்
குடி ஐஞ்ஞூறு குறைவு அற நிறைந்தது
பெருங் கிராமம் எனப் பேசப்படுமே
** 1 பெயர்
#100
** மலை சூழ்ந்த ஊரின் பெயர்
கிரி பல சூழ அடுத்த ஊர் கேடகம்
** 1 பெயர் 100
#101
** மலையும் ஆறும் சூழ்ந்த ஊரின் பெயர்
மலையும் ஆறும் அடுத்த ஊர் கர்வடம்
** 1 பெயர்
#102
** பல பண்டம் பகரும் கடற் கரை
** ஊரின் பெயர்
பண்டம் பல கொடு பகரும் கடற்கரை
மன்னும் பதியே பட்டினம் ஆகும்
** 1 பெயர் 102
#103
** சிற்றூரின் பெயர்
பட்டும் நொச்சியும் பள்ளியும் சிற்றூர்
** 3 பெயர்கள் 103
#104
** குறிஞ்சி நிலத்து ஊரின் பெயர்
குறிச்சி சீறூர் குறிஞ்சிநிலத்துஊர்
** 2 பெயர்கள் 104
#105
** முல்லை நிலத்து ஊரின் பெயர்
பாடி முல்லைப்பதி
** 1 பெயர் 105
#106
** நெய்தல் நிலத்து ஊரின் பெயர்
பட்டினம் நெய்தல்பதி
** 1 பெயர் 106
#107
** பாலை நிலத்து ஊரின் பெயர்
முனையிடம் குறும்பு முது பாலைநிலத்துஊர்
** 2 பெயர்கள் 107
#108
** மருத நிலத்து ஊரின் பெயர்
பூக்கம் குடிக்காடு பூரியம் உறையுள்
பாக்கம் அருப்பம் அகலுள் பதியே
கோட்டம் வசதி தாவளம் நியமம்
வாழ்க்கை தண்ணடை மருதநிலத்துஊர்ப் பெயர்
** 14 பெயர்கள் 108
#109
** நகரப் பதியின் பெயர்
பாடியும் புரமும் நகரப்பதியே
** 2 பெயர்கள் 109
#110
** சூழ் கழி இருக்கையின் பெயர்
சூழ்கழிஇருக்கை கோணாமுகமே
** 1 பெயர் 110
#111
** மருங்கில் ஊர் சூழ் பெரும் பதியின் பெயர்
மருங்கில்ஊர்சூழ்பெரும்பதி மடப்பம்
** 1 பெயர் 111
#112
** கொடுங் குறும்பர் அரண் இருக்கையின் பெயர்
கொடுங் குறும்பர்அரண்இருக்கை குறும்பு என்று ஆகும்
** 1 பெயர் 112
#113
** முனை மேல் சென்றோர் உறைபதியின் பெயர்
பாசறை முனைமேல்சென்றோர்உறைபதி
** 1 பெயர் 113
#114
** உறையூரின் பெயர்
கோழி உறையூர்
** 1 பெயர் 114
#115
** மதுரையின் பெயர்
கூடல் மதுரை
** 1 பெயர் 115
#116
** சிதம்பரத்தின் பெயர்
மன்றம் சிதம்பரம்
** பெயர் 116
#117
** திருவாரூரின் பெயர்
கமலை திருவாரூர்
** 1 பெயர் 117
#118
** கருவூரின் பெயர்
கருவூர் வஞ்சி
** 1 பெயர் 118
#119
** காவரிப் பூம்பட்டினத்தின் பெயர்
காகந்தி புகார் காவிரிப்பூம்பட்டினம்
** 2 பெயர்கள் 119
#120
**அவந்தியின் பெயர்
உஞ்சை அவந்தி
** 1 பெயர் 720
#121
** காசியின் பெயர்
காசி வாரணாசி
** 1 பெயர் 121
#122
** காஞ்சியின் பெயர்
கச்சி காஞ்சி
** 1 பெயர் 122
#123
** மிதிலையின் பெயர்
விதேகை என்பது மிதிலை ஆகும்
** 1பெயர் 123
#124
** அயோத்தியின் பெயர்
விதேகை சாகேதம் கோசலை அயோத்தி
** 3 பெயர்கள் 124
#125
** புரி எனும் பெயர்
புரி என் கிளவி புரம் என்று ஆகும்
** 1 பெயர் 125
#126
** பாடி எனும் பெயர்
பாடி என்பது சேரி ஆகும்
** 1 பெயர் 126
#127
** கடாரத்தின் பெயர்
காழகம் கடாரம் ஆகக் கருதுவர்
** 1பெயர் 127
#128
** சிங்களத்தின் பெயர்
சிங்களம் ஈழம் ஆகச் செப்புவர்
** 1 பெயர் 128
#129
** நெல்லும் புல்லும் நிறைந்த மலையூரின் பெயர்
நெல்லும் புல்லும் நிறைந்த மத்தகம்
புல்லும் மலையூர் சம்வாகம் ஆகும்
** 1 பெயர் 129
#130
** அரித்துவாரத்தின் பெயர்
அரித்துவாரம் மாயாபுரி ஆம்
** 1 பெயர்
#131
** கடையின் பெயர்
கூலம் அங்காடி கடை ஆகக் கூறுவர்
** மற்றும் கடையின் பெயர்
#132
ஆவணம் நியமம் ஆகலும் உரித்தே
** 4 பெயர்கள்
#133
** தெருவின் பெயர்
ஆவணம் வீதி ஞெள்ளல் மறுகு
கோசம் நியமம் மார்க்கம் தெருவே
#134
** மற்றும் தெருவின் பெயர்
சிறகு என ஒருவழிச் செப்பவும் படுமே
** 8 பெயர்கள்
#135
** நெடுந்தெருவின் பெயர்
மன்றம் மார்க்கம் நியமம் நெடுந்தெருவே
** 3 பெயர்கள்
#136
** குறுந் தெருவின் பெயர்
குறுந்தெரு மறுகே
** 1 பெயர்
#137
** குதிரை வையாவி வீதியின் பெயர்
செண்டுவெளி வையாளிவீதி
புரவிவட்டம் திருமுற்றம் ஆகும்
** 3 பெயர்கள்
#138
** வேந்தர் வீதியின் பெயர்
பூரியம் வேந்தர்வீதி ஆகும்
** 1 பெயர்
#139
** முடுக்குத் தெருவின் பெயர்
கோணம் முடுக்குத்தெரு ஆகும்மே
** 1 பெயர்
#140
** முச்சந்தியின் பெயர்
அந்தி முச்சந்தி
** 1 பெயர்
#141
** சந்தியின் பெயர்
அந்தி கவலை வரியே சந்தி
** 3 பெயர்கள்
#142
** நாற்சந்தியின் பெயர்
முந்தையோர் சதுக்கம் நாற்சந்தி என்ப
** 1 பெயர்
#143
** சிரேணியின் பெயர்
சேடியும் வாடையும் சிரேணி ஆகும்
#144
** மற்றும் சிரேணியின் பெயர்
ஆலிடம் எனவும் அறையப்படுமே
** 3 பெயர்கள்
#145
** அக்க சாலையர் வீதியின் பெயர்
ஆவேசனம் அக்கசாலையர் வீதி
** 1 பெயர்
#146
** வேடர் விதியின் பெயர்
பக்கணம் வேடர்வீதி ஆகும்
** 1 பெயர்
#!47
** சந்தின் பெயர்
சந்து சதுக்கம்
** 1 பெயர்
#148
** கோயிலின் பெயர்
சினகரம் சேதிமம் தேவர்ஆலயம்
நிலயம் பாழி பள்ளி நிகேதனம்
மந்திரம் ஆலயம் தேவகுலம் கோட்டம்
நகர் தளி வானவர்உறையுள் கோயில்
** 14 பெயர்கள்
#149
** அறச் சாலையின் பெயா
சத்திரம் சாலை அறச்சாலை ஆகும்
** 2 பெயர்கள்
#150
** ஒதும் பள்ளியின் பெயர்
அறப்புறம் ஓதும்பள்ளி ஆகும்
** 1 பெயர்
#151
** ஓம மண்டபத்தின் பெயர்
சமித்தம் ஓமமண்டபம் சாரும்
** 1 பெயர்
#!52
** மன்னர் இல்லின் பெயர்
சாலை மாளிகை பவனம் கோயில்
குலமும் மன்னர்இல் ஆகக் கூறுவர்
** 5 பெயர்கள்
#153
** மன்னன் தேவி இருக்கையின் பெயர்
கந்தவாரமும் உவளகமும் அந்தப்புரமும்
தேவியர்மனை ஆகும் என்ப
** 3 பெயர்கள்
#154
** வீட்டின் பெயர்
மாடம் மனை உறையுள் புக்கில் பதி வசதி
இடமே பாத்தி அகம் வயின் இல்லம்
இடவகை சேர்வு வீடு என்று இசைப்பர்
** 13 பெயர்கள்
#155
** சிற்றிலின் பெயர்
கூரை குரம்பை குடில் சிற்றில் ஆகும்
** 3 பெயர்கள்
#156
** பண்ட சாலையின் பெயா
புனைகலன்இருக்கை பண்டசாலை
** 1 பெயர்
#157
** வீட்டு இறப்பின் பெயர்
வளவி இறையே வீட்டுஇறப்பு ஆகும்
** 2 பெயர்கள்
#158
** தாழ்வாரத்தின் பெயர்
சோபானம் தாழ்வாரம் ஆகும்
** 1 பெயர்
#159
** முகட்டின் பெயர்
விடங்கம் முகடே
** 1 பெயர்
#160
** வேயுளின் பெயர்
வேயுள் வேய்தல்
** 1 பெயர்
#161
** பலகணியின் பெயர்
சாலகம் சாளரம் நூழை சாலேகம்
வாதாயனம் பலகணி எனப்படுமே
** 5 பெயர்கள்
#162
** மடைப் பள்ளியின் பெயர்
அட்டில் அடுக்களை மடைப்பள்ளி ஆகும்
** 2 பெயர்கள்
#163
** கல்வியூரி – அன்றிக் கல்வி பயில் இடத்தின் பெயர்
கல்வியூரி கல்லூரி ஆகும்
** 1 பெயர்
#164
** சுவர்த் தலத்தின் பெயர்
பித்திகை சுவர்த்தலம்
** 1 பெயர்
#165
** பீடத்தின் பெயர்
பீடிகை பீடம்
**1 பெயர்
#166
** சலதாரையின் பெயர்
அங்கணம் தூம்புவாய் சலதாரை ஆகும்
** 2 பெயர்கள்
#167
** முற்றத்தின் பெயர்
முன்றில் அங்கணம் முற்றம் ஆகும்
** 2 பெயர்கள்
#168
** நிலா முற்றத்தின் பெயர்
அரமியம் நிலாமுற்றம் ஆகும் என்ப
** 1 பெயர்
#169
** திண்ணையின் பெயர்
தட்டை மண்ணீடு தெற்றி வேதிகை
தண்டே ஆகும் என்மனார் புலவர்
** 4 பெயர்கள்
#170
** கல் படுத்த பூமியின் பெயர்
கல்படுத்தபூமி குட்டிமம் ஆகும்
** 1 பெயர்
#171
** சித்திர கூடத்தின் பெயர்
தெற்றிஅம்பலம் சித்திரகூடம்
** 1 பெயர்
#172
** அம்பலத்தின் பெயர்
பொதியிலும் மன்றமும் பொதுவும் அம்பலம்
** 3 பெயர்கள்
#173
** கழகம் எனும் பெயர்
செல்லல் தீர்க்கும் பல் புகழ்ச் சேந்தனில்
வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும்
மல்லும் சூதும் படையும் மற்றும்
கல்வி பயில் களமும் கழகம் ஆகும்
** 5 பெயர்கள்
#174
** அரசிருக்கையின் பெயர்
அரசிருக்கைப்பெயர் அத்தாணி வேத்தவை
** 2 பெயர்கள்
#175
** அரங்கம் எனும் பெயர்
போரின் இடமும் வட்டு ஆடு இடமும்
ஆடல் இடமும் அவையும் அரங்கம்
** 4 பெயர்கள்
#176
** ஒருசிறை அல்லது ஒதுக்கிடத்தின் பெயர்
ஒருசிறை துச்சில்
**1 பெயர்
#177
** ஏகாந்தத்தின் பெயர்
ஒருவந்தம் ஏகாந்தம் கொட்டில் வேறு இடம்
** 3 பெயர்கள்
#178
** கற்படையின் பெயர்
சுருங்கை கற்படை ஆகும் என்ப
** 1 பெயர்
#179
** உறைவிடத்தின் பெயர்
ஆகரம் பிறப்பிடம் உறைவிடம் ஆகும்
** 2 பெயர்கள்
#180
** அடுப்பின் பெயர்
குமுதம் சுல்லி காமரம் அடுப்பு
முத்தானம் எனவும் மொழியப்படுமே
** 4 பெயர்கள்
#181
** கூட்டின் பெயர்
குடம்பை பஞ்சரம் கட்சி கூடு ஆகும்
** 3 பெயர்கள்
#182
** பண்ணும் கூட்டின் பெயர்
குலாயனம் பஞ்சரம் பண்ணும் கூடே
** 2 பெயர்கள்
#183
** குதிரைப் பந்தியின் பெயர்
மந்திரம் சாலை குதிரைப்பந்தி
**3 பெயர்கள்
#184
** யானை சேர்விடத்தின் பெயர்
நீடிய வாரியும் சேவகமும் தண்டமும்
கூடமும் ஒளியும் யானைசேர்விடம்
** 5 பெயர்கள்
#185
** யானை செல் வழியின் பெயர்
தண்டம் யானைசெல்வழி என்ப
** 1 பெயர்
#186
** யானை துயில் இடத்தின் பெயர்
சேவகம் யானைதுயில்இடம் ஆகும்
** 1 பெயர் 186
#187
** மக்கள் கிடப்பிடத்தின் பெயர்
கட்சி அமளி சேக்கை உறையுள்
சட்டகம் சேர்விடம் பள்ளி சயனம்
பட்டம் பாழி பாயல் அரி துயிலிடம்
ஒட்டிய உயர்திணைக்கிடப்பிடம் ஆகும்
** 13 பெயர்கள் 187
#188
** விலங்கு துயில் இடத்தின் பெயர்
பட்டம் போத்து பண்ணை சேக்கை
விலங்குதுயிலும்இடம் ஆகும்மே
** 4 பெயர்கள் 188
#189
** வேள்விக் குண்டத்தின் பெயர்
வேதியும் நித்தமும் வேள்விக்குண்டம்
** 2 பெயர்கள் 189
#190
** முனிவர் வாசத்தின் பெயர்
தாபதம் பாழி கரண்டை பள்ளி
முனிவர்வாசம் என மொழியப்படுமே
** 2 பெயர்கள் 190
#191
** மட் கலம் சுடும் இடத்தின் பெயர்
சுள்ளையும் சூளையும் மட்கலம்சுடுமிடம்
** 2 பெயர்கள் 191
#!92
** சுடு காட்டின் பெயர்
சுடுகாடு ஈமம் மயானம் சுடலை
சுடுநிலம் புறங்காடு இடுகாடு முதுகாடு
வனம் எரிவனம் பிதிர்வனம் பிணக்காடே
** 11 பெயர்கள் 192
#193
** பொரு களத்தின் பெயர்
களரி பறந்தலை செம்புலம் படுகளம்
பொருகளம் களம் எனப் புகன்றனர் புலவர்
** 5 பெயர்கள் 193
#194
** வழுக்கு நிலத்தின் பெயர்
அருப்பம் ஆரிடம் அஞர் இழுக்கு வழுக்குநிலம்
** 4 பெயர்கள் 194
#195
** தொழுவத்தின் பெயர்
தொழுவம் ஆவேலி தோழம் ஆனிலையே
** 3 பெயர்கள் 195
#196
** மதிலின் பெயர்
இஞ்சி நொச்சி எயில் சுற்று புரிசை
பந்தம் வரைப்பு காப்பு அரண் காவல்
ஆரல் ஓதை பிராகாரம் வேலி
சர் சாலம் வேணகை மதில் எனச் செப்புவர்
#197
** மற்றும் மதிலின் பெயர்
வன்சிறை உவளகம் ஆதலும் வரையார்
** 18 பெயர்கள் 197
#198
** மதிலுள் உயர் மேடையின் பெயர்
பரிகம் அகப்பா பதணம் மூன்றும்
உரிய மதிலுள்உயர்மேடைக்கே
** 3 பெயர்கள் 198
#199
** மதில் சுற்றின் பெயர்
தொடையும் தகைப்பும் வாரியும் சுற்றே
** 3 பெயர்கள் 199
#200
** மதில் உறுப்பின் பெயர்
பதப்பாடு எந்திரம் கோசம் தோணி
விதப்பு ஞாயில் நாஞ்சில் மதில்உறுப்பே
** 7 பெயர்கள் 200
#201
**அகழின் பெயர்
அகழி கிடங்கு அகப்பா பரிகம் அகழே
** 4 பெயர்கள் 201
#202
** குதிரின் பெயர்
புகல் குதிர் ஆகும்
** 1பெயர் 202
#203
** வாயிலின் பெயர்
தோட்டி துவாரம் வாரி கடை வாயில்
** 4 பெயர்கள் 203
#204
** கோபுரம் அல்லது கோபுர நிலையின் பெயர்
சிகரி கோபுரம்
** 1 பெயர் 204
#205
** பெரு வாயிலின் பெயர்
கோபுரம் என்பது பெருவாயில் ஆகும்
** 1 பெயர் 205
#206
** கோபுர வாயிலில் புகும் புழையின் பெயர்
புதவு வாயில்புகுபெரும்புழையே
**1 பெயர் 206
#207
** கோபுர வாயில் திண்ணையின் பெயர்
அளிந்தம் அவ்வழி சார் திண்ணை ஆகும்
** 1 பெயர் 207
#208
** கோபுர வாயில் படிச் சுருவின் பெயர்
அத்தினகம் வாயில்படிச்சுருள் ஆகும்
** 1 பெயர் 208
#209
** வயலின் பெயர்
விளையுளும் பண்ணையும் செய்யும் கழனியும்
தடியும் பாத்தியும் செறுவும் வயலே
** 7 பெயர்கள் 209
#210
** சிறு வயலின் பெயர்
குண்டில் பாத்தி சிறுசெய் ஆகும்
** 2 பெயர்கள் 210
#211
** புனத்தின் பெயர்
குறிஞ்சி நிலச் சார்பும் கொல்லையும் புனமே
** 2 பெயர்கள்
#212
** தினைப்புனத்தின் பெயர்
ஏனலும் வளாகமும் தினைப்புனம் என்ப
** 3 பெயர்கள் 218
#213
** பழங் கொல்லையின் பெயர்
முதைப்புனம் பழங்கொல்லை
** 1 பெயர் 213
#214
** புதுக் கொல்லையின் பெயர்
இதைப்புனம் புதுக்கொல்லை
** 1 பெயர் 312
#215
** தோட்டத்தின் பெயர்
தோட்டம் துடவை படப்பை இ மூன்றும்
தோட்டப்பெயர் எனச் சொல்லினர் புலவர்
** 3 பெயர்கள் 215
#216
** உழவின் பெயர்
துடவை தொய்யில் உழவின் பெயரே
** 2 பெயர்கள் 216
#217
** உழுதொழில் வளைப்பின் பெயர்
தொடுப்பே உழுவோர்தொழில்வளைப்பு ஆகும்
** 1 பெயர் 217
#218
** புது வரம்பின் பெயர்
மரிசி புதுவரம்பு
** 1 பெயர் 218
#219
** புற்றின் பெயர்
வன்மீகம் புற்று
**1 பெயர் 219
#220
** வரம்பு அருகின் பெயர்
கங்கு வரம்பு அருகே
** 1 பெயர் 220
#221
** பள்ளத்தின் பெயர்
உவளகம் பயம்பே அவல் குழி தாழ்வே
இழிவு கிழக்கு படுகர் பள்ளம்
**8 பெயர்கள் 221
#222
** புற்றஞ் சோற்றின் பெயர்
குரும்பி புற்றஞ்சோறே
** 1 பெயர் 222
#223
** முது நிலத்தின் பெயர்
களரி கரம்பே பெரும்பாழ் முதுநிலம்
** 3 பெயர்கள் 223
#224
** வழியின் பெயர்
சரி நெறி ஒழுக்கம் தாரை ஆறு
வதி அதர் மார்க்கம் இயவை நடவை
பதவை செப்பம் அயனம் இடவை
வாரி வட்டை வரி வயவை வகுந்து
செலவு சிறுபதம் வழிக் கிளவி ஆகும்
** 21 பெயர் 224
#225
**அரு நெறியின் பெயர்
அத்தம் கடம் கடறு தூம்பு சுரம் அருநெறி
** 5 பெயர்கள்
#226
** கவர்த்த நெறியின் பெயர்
கவலை கவர்த்தநெறி எனக் கருதுவர்
** 1 பெயர் 226
#227
** சிறு வழியின் பெயர்
விடங்கர் சிறுவழி ஆகும் என்ப
** 1 பெயர் 227
#228
** பெரு வழியின் பெயர்
பாதை பெருவழி
** 1 பெயர் 228
#229
** இழிந்து ஏறப்படு வழியின் பெயர்
படுகர் மடு இழிந்துஏறப்படுநெறி
** 2 பெயர்கள் 229
#230
** கல் படியின் பெயர்
ஆரோகணம் சோபானம் கல்படி
** 2 பெயர்கள் 220
#231
** நீள் வழியின் பெயர்
அளக்கர் நீள்வழியே
** 1 பெயர் 231
#232
** இடத்தின் பெயர்
வாய் புலம் பாங்கர் வயின் களம் வைப்பு
தேயம் வழி உழி திணையே மருங்கு
பால் நிலம் தலமே வளாகம் பட்டி
சூழல் தானம் இடப்பெயர் தொடர்பே
#233
** மற்றும் இடப் பொதுப் பெயர்
கண் கால் புறம் அகம் உள் உழை கீழ் மேல்
பின் சார் அயல் புடை தேவகை எனாஅ
முன் இடை கடை தலை வலம் இடம் எனாஅ
அன்ன பிறவும் அதன் பால என்மனார்
** 37 பெயர்கள் 233
#234
** பக்கத்தின் பெயர்
மாடு சிறை உழி மருங்கு ஞாங்கர் முன்
பால் புடை பாங்கர் பக்கம் ஆகும்
** 9 பெயர்கள் 234
#235
** நடுவின் பெயர்
நனந்தலை நாப்பண் மத்திமம் நள்ளு
வயங்கு இடை ஒத்தல் நாவோடு அணவு
நலம் திகழ் கூழையும் நடு என்று ஆகும்
** 9 பெயர்கள் 235
#236
** உயர்ச்சியின் பெயர்
உம்பர் மீப்புலம் வலமே ஓக்கம்
துங்கம் உவணம் பருமம் உந்தி
மேடு மோடு தூக்கு மேக்கு
நிவப்பு இவை உயர்ச்சி ஆக நிகழ்த்துவர்
** 13 பெயர்கள்
#237
** ஞாங்கர் என்னும் பெயர்
ஞாங்கர் முன்னும் மேலும் ஆகும்
** 2 பெயர்கள்
#238
** முன்னரின் பெயர்
முதலும் தலைத்தாளும் முன்னர் ஆகும்
** 2 பெயர்கள்
#239
** இம்பர் எனும் பெயர்
இம்பர் இவணே
** 1 பெயர்
#240
** உம்பர் எனும் பெயர்
உம்பர் உவணே
** 1 பெயர்
#241
** ஆண்டு என்னும் பெயர்
ஆண்டு அவ்விடம்
** 1 பெயர்
#242
** ஈண்டு எனும் பெயர்
ஈண்டு இவ்விடம்
** 1 பெயர்
#243
** கூப்பிடுதூரத்தின் பெயர்
எல்லை குரோசம் கூப்பிடுதூரம்
** 2 பெயர்கள்
#244
** கோழிப் பறவை அளவின் பெயர்
கிரவுஞ்சம் கோழிப்பறவைஅளவு ஆகும்
** 1 பெயர்
#245
** யோசனை தூரத்தின் பெயர்
புகை யோசனை ஆம்
** 1 பெயர்
#246
** காதத்தின் பெயர்
காவதம் காதம் ஆகக் கருதுவர்
** 1 பெயர்
#247
ஒருவற்கு ஒருவன் ஆகி உதவியும்
பரிசில் மாக்கள் பற்பலர் ஆயினும்
தான் ஒருவன்னே தரணி மானவன்
செந்தமிழ்ச் சேந்தன் தெரிந்த திவாகரத்து
** ஐந்தாவது இடப் பெயர்த் தொகுதி முற்றிற்று
@6 பல் பொருள் பெயர்த் தொகுதி
#1 பொன்னின் பெயர்
ஆடகம் மாசை ஈழம் ஏமம்
மாடு காணம் கனகம் தமனியம்
வெறுக்கை சொன்னம் பொருளோடு அரியே
ஈகை நிதியே கருந்தனம் காஞ்சனம்
பீதகம் மாடை தொடுக்கம் அருத்தம்
சாமீகரம் பூரி சந்திரம் மாழை
நிதானம் தேசிகம் செந்தாது வித்தம்
திரவியம் வேங்கை சாம்பூனதம் உறை
சாதரூபம் உடல் பண்டம் இரணியம்
பொலம் என்று இன்னவை பொன் எனப்படுமே
** 37 பெயர்கள்
#2
** ஐவகை உலோகம் ஆவன
பொன்னும் வெள்ளியும் செம்பும் இரும்பும்
அன்ன ஈயமும் ஐவகை உலோகம்
** 5 பெயர்கள்
#3
** எழு வகை உலோகம் ஆவன
தராவொடு கஞ்சம் தானும் கூட்டி
எழு வகை உலோகம் என்னவும்படுமே
** 7 பெயர்கள்
#4
** நவ மணி – கடவுள் மணியின் பெயர்
நவமணி கடவுள்மணி என்று இவற்றின்
நிகழ் பெயர் நிதியும் நிதானமும் என்ப
** 2 பெயர்கள்
#5
** பொற் காசின் பெயர்
காணம் பொற்காசு
** 1 பெயர்
#6
** மணிப் பொதுப் பெயர்
மனவும் காசும் மணியின்பொதுப்பெயர்
** 2 பெயர்கள்
#7
** அகன் மணிப் பொதுப் பெயர்
அரதனம் சலாகை அகன்மணிக்கு ஆகும்
** 2 பெயர்கள்
#8
** மாணிக்கத்தின் பெயர்
மாமணி பதுமராகம் மாணிக்கம்
** 2 பெயர்கள்
#9
** முத்தின் பெயா
நித்திலம் தரளம் ஆரம் முத்தே
**3 பெயர்கள்
#10
** தரளம் என்பது
தரளம் திரட்சி ஆகவும் சாற்றுவர்
** 1 பெயர்
#11
** பவளத்தின் பெயர்
வித்துருமம் துகர் துப்பே அரத்தம்
ஒத்த பிரவாளம் துவர் இவை பவளம்
** 6 பெயர்கள் 11
#12
** மரகதத்தின் பெயர்
அரி பச்சை மரகதம் மரதகமும் ஆகும்
** 3 பெயர்கள் 12
#13
** வச்சிர மணியின் பெயர்
வச்சிரம் வயிரம்
** 1 பெயர் 13
#14
** வைடூரியத்தின் பெயர்
வாலவாயம் வைடுரியமே
** 1 பெயர்
#15
** நீல மணியின் பெயர்
மணி நீலமணியே
** 1 பெயர் 15
#16
** சங்க நிதியின் பெயர்
செங்கை நிதி அம்பல் சேந்தன் செங் கையில்
சங்கின் வடிவினது சங்கநிதியே
#17
** பதும நிதி என்பது
தே மலர் அலங்கல் சேந்தன் செங்கையில்
தாமரை வடிவினது பதுமநிதியே
#18
** பதினான்கு வகையின் பெயர்
பதினால் வகையும் நிதியம் எனப்படும்
** 1 பெயர் 18
#19
** பண்டாரகத்தின் பெயர்
கோசம் தண்டம் பண்டாரம் ஆகும்
** 2 பெயர்கள் 19
#20
** வெள்ளியின் பெயர்
இரசதம் தாரம் களதெளதம் வெள்ளி
** 3 பெயர்கள் 20
#21
** வெண்கலத்தின் பெயர்
கஞ்சம் வெண்கலம் ஆகக் கருதுவர்
** 1 பெயர் 21
#22
** பித்தளையின் பெயர்
மாயாபுரி ஆரகூடம் பித்தளை
** 2 பெயர்கள் 22
#23
** செம்பின் பெயர்
சீருணம் தாம்பிரம் சுற்பம் செம்பே
** 3 பெயர்கள் 23
#24
** இரும்பின் பெயர்
கருந்தாதும் அயமும் இரும்பு எனக் கருதுவர்
**2 பெயர்கள் 24
#25
** எஃகின் பெயர்
சத்தி எஃகே
** 1 பெயர்
#26
** ஈயத்தின் பெயர்
வங்கமும் சீருளும் ஈயம் ஆகும்
** 2 பெயர்கள் 26
#27
** காரீயத்தின் பெயர்
நாகம் காரீயம் ஆகக் கருதுவர்
** 1 பெயர் 27
#28
** தராவின் பெயர்
மதுகம் தரா என வைக்கப்படுமே
** 1 பெயர் 28
#29
** இரும்பு உள் வாங்கும் காந்தமணியின் பெயர்
வலித்து இரும்பு உள்ளே வாங்கும் காந்தம்
சொலத் தகும் சலாகை சும்பகம் என்ப
** 2 பெயர்கள் 29
#30
** சந்திரன் ஒளியில் தண்ணீர் காலும்
** மணியின் பெயர்
சந்திரன் ஒளியில் தண்ணீர்கால்மணி
சந்திரகாந்தம் எனப் பெயர் சாரும்
** 1 பெயர் 30
#31
** சூரியன் ஒளியில் தக் காலும்
** மணியின் பெயர்
சூரியன் ஒளியில் தீக்கால்சலாகை
சூரியகாந்தம் எனப் பெயர் சொல்லும்
** 1 பெயர் 31
#32
** பளிங்கின் பெயர்
படிகம் பளிங்கு பருக்கை காழ் ஆகும்
** 3 பெயர்கள் 32
#33
** சங்கு மணியின் பெயர்
அக்கு சங்குமணி ஆகும் என்ப
** 1 பெயர் 39
#34
** பலகறையின் பெயர்
வட்டி கவடி பலகறை சோகி
வெள்வரி அலகு என விளம்பவும் படுமே
** 5 பெயர்கள் 34
#35
** பல பண்டத்தின் பெயர்
பண்ணியம் கூலம் வளமே பண்டம்
பண்ணிகாரம் பலபண்டப்பெயரே
** 5 பெயர்கள் 35
#36
** அரும் பண்டத்தின் பெயர்
அரும்பண்டப்பெயர் தாரம் என்று ஆகும்
** 1 பெயர் 36
#37
** கருப்பூரத்தின் பெயர்
கருப்பூரம் பாளிதம்
** 1 பெயர்
#38
** கத்தூரியின் பெயர்
கத்தூரி மான்மதம்
** 1 பெயர் 38
#39
** நால்வகைச் சாந்தின் பெயர்
பீதம் காலேகம் வட்டிகை புலி என
நால் வகைச் சாந்தின் நாமம் ஆகும்
** 4 பெயர்கள் 39
#40
** சாந்தின் பொதுப் பெயர்
கலவைச்சேறும் காலேகவண்ணமும்
தளம் விரை களபமும் சாந்தின் பொதுப் பெயர்
** 5 பெயர்கள் 40
#41
** செஞ்சாந்தின் பெயர்
குங்குமம் செஞ்சாந்து
** 1 பெயர் 41
#42
** பூசுவனவற்றின் பெயர்
அங்கராகம் பூசுவன
** 1 பெயர் 42
#43
** மயிர்ச் சாந்தின் பெயர்
தகரம் ஏலம் காசறை மயிர்ச்சாந்தே
** 3 பெயர்கள் 43
#44
** செறி குழம்பு அல்லது சந்தனக் குழம்பின் பெயர்
தேய்வையும் செச்சையும் செறிகுழம்பு ஆகும்
** 2 பெயர்கள் 44
#45
** அப்புதலின் பெயர்
கொட்டலும் சதுர்த்தலும் அப்புதல் ஆகும்
** 2 பெயர்கள் 45
#46
** பூசுதலின் பெயர்
புலர்த்தலும் வரித்தலும் பூசல் ஆகும்
** 2 பெயர்கள் 46
#47
** மகளிர் ஆகத்து எழுது கோலத்தின் பெயர்
எழுதுகோலான் மகளிர் ஆகத்துத்
தொழில் பெற வரிப்பது தொய்யில் ஆகும்
** 1 பெயர் 47
#48
** திலகத்தின் பெயர்
சுடிகையும் திலதமும் சுட்டியும் திலகம்
** 3 பெயர்கள் 48
#49
** நுதல் புனை குறியின் பெயர்
புண்டரம் திலகம் நுதல்புனைகுறியே
** 2 பெயர்கள் 49
#50
** சிந்தூரத்தின் பெயர்
சேலேகம் சிந்தூரம்
**1 பெயர் 50
#51
** சாதிலிங்கத்தின் பெயர்
இங்குலிகம் சாதிலிங்கம்
** 1 பெயர் 51
#52
** குங்கிலியத்தின் பெயர்
குங்குலுவும் குக்குலுவும் குங்கிலியம் ஆகும்
** 2 பெயர்கள்
#53
** பெருங்காயத்தின் பெயர்
இங்கு பெருங்காயம் என்று இசைத்தனரே
** 1 பெயர்
#54
** அரக்கின் பெயர்
அரத்தமும் துப்பும் அரக்கின் பெயரே
** 2 பெயர்கள்
#55
** சுக்கின் பெயர்
சுண்டி சுக்கு
**1 பெயர்
#56
** ஏலத்தின் பெயர்
துடியே ஏலம்
** 1 பெயர்
#57
** அதிமதுரத்தின் பெயர்
அதிங்கம் அட்டி அதிமதுரம் ஆகும்
** 2 பெயர்கள்
#58
** சாமரையின் பெயர்
சாமரை கவரி சவரி சீகரம்
** 3 பெயர்கள்
#59
**அச்சுதம் என்பது
அறுகு வெள்ளரிச் கூட்டியது அச்சுதம்
**1 பெயர்
#60
** பிரப்பு என்பது
கொள்கலம் ஒன்றில் குறுணியாகப்
பல் உணவு பெய்து பாரிப்பது பிரப்பே
** 1 பெயர்
#61
** விறகின் பெயர்
இந்தனம் காட்டம் துவர் இவை விறகே
** 3 பெயர்கள்
#62
** ஓமவிறகின் பெயர்
சமிதை ஓமவிறகு எனச் சாற்றுவர்
** 1 பெயர்
#63
** நெருப்பு உறு விறகின் பெயர்
ஞெகிழி கொள்ளி நெருப்புறுவிறகு ஆம்
** 2 பெயர்கள்
#64
** கடைக் கொள்ளியின் பெயர்
முளரி அலாதம் உற்கம் கடைக்கொள்ளி
** 3 பெயர்கள்
#65
** கரியின் பெயா
கந்துளும் இருந்தையும் கரி எனக் கூறுவர்
** 2 பெயர்கள்
#66
** சாம்பரின் பெயர்
அடலை வெண்பலி சாம்பர் ஆகும்
** 2 பெயர்கள் 66
#67
** திருநீற்றின் பெயர்
காப்பும் பொடியும் பற்பமும் விபூதியும்
திருநீறு அதனைச் செப்பும் கிளவி
** 4 பெயர்கள் 67
#68
** சாணியின் பெயா
சாணி புண்ணியசாந்தம் எனப்படும்
** 1 பெயர் 68
#69
** சுடு சுண்ணச் சாந்தின் பெயர்
சுதையும் களபமும் சுடுசுண்ணச்சாந்தே
** 2 பெயர்கள் 69
#70
** புகையின் பெயர்
தூமமும் அரியும் தூபமும் புகையே
** 3 பெயர்கள் 70
#71
** மணப்புகையின் பெயர்
குரூஉப்புகை நறை படு கொழும் புகை ஆகும்
** 1 பெயர் 71
#72
**பனி நீரின் பெயர்
இமசலம் சீதநீர் பனிநீர்க்கு எய்தும்
** 2 பெயர்கள் 72
#73
** பொடியின் பெயர்
பிதிர் சிதர் பராகம் தகர் சின்னபின்னம்
துகளும் நீறும் சுண்ணமும் தாதும்
பொடியின் பெயரே புழுதியும் ஆகும்
** 9பெயர்கள் 73
#74
** காவிக் கல்லின் பெயர்
காவிக்கல் செங்கல் கைரிகம் தாது
** 3 பெயர்கள் 74
#75
** கழிப்புறு குறு மலத்தின் பெயர்
கழிப்புறுகுறுமலம் காட்டம் எனப்படும்
** 1 பெயர் 75
#76
** இலவின் பஞ்சின் பெயர்
இலவின் பஞ்சின் பெயர் பூளை ஆகும்
** 1 பெயர் 76
#77
** பருத்திப் பஞ்சின் பெயர்
கார்ப்பாசம் பரி பன்னல் பருத்தி
** 3 பெயர்கள் 77
#78
** பஞ்சியின் நுனியின் பெயர்
துய்யே பஞ்சில்தொடர்நுனி ஆகும்
** 1 பெயர் 78
#79
** சோற்றின் பெயர்
புன்கம் மிதவை பொம்மல் போனகம்
அன்னம் ஓதனம் அயினி அடிசில்
பாளிதம் பொருகு மிசை பதம் பால் புகா
அமலை உணவு துப்பு அசனம் கவளம்
சொன்றி நிமிரல் மடை கூழ் புழுக்கல்
ஒன்றிய மூரல் சோறு என உரைப்பர்
** 25 பெயர்கள் 79
#80
** பொதி சோற்றின் பெயர்
பொதிசோறு ஆற்றுணா தோட்கோப்பு ஆகும்
** 2 பெயர்கள் 80
#81
** உண் தொழிலின் பெயர்
உண்டி பதம் வல்சி உணா மிசைதல் பக்கித்தல்
அயின்றல் நுங்கல் விழுங்கல் துய்த்தல்
மேய்தல் அயிறல் நுகர்தல் அருந்தல்
உண்டல் தின்றல் பருகுதல் என்று இவை
பண்பின் தொழிலைப் பகரும் கிளவி
** 17 பெயர்கள் 81
#82
** கூழ் எனும் பெயர்
கூழ் எனும் பெயர் எப்பொருளிற்கும் ஆகும்
#83
** அடிசில் என்பது
அடப்படுவது அடிசில்
#84
** புழுங்கல் என்பது
புழுக்குவது புழுங்கல்
#85
** தெய்வ உணவின் பெயர்
அமிழ்தும் அவியும் தெய்வஉணவே
#86
** மற்றும் தெய்வ உணவின் பெயர்
பலியும் சருவும் அப் பெயர்ப் பால
** 2 பெயர்கள் 86
#87
** பொரிக் கறியின் பெயர்
கருனை பதன் அமைத்துப் பொரிக்கும் சிற்றுணவு
** 7 பெயர் 87
#88
** பிட்டின் பெயர்
ஆவி வெந்தை பிட்டு
** 2 பெயர்கள் 88
#89
** உக்காரியின் பெயர்
அஃகுல்லி உக்காரி
** 1 பெயர்
#90
** மோதகத்தின் பெயர்
மோதகம் இலட்டுகம்
** 7 பெயர் 90
#91
** பில்லடையின் பெயா
பில்லடை சஃகுல்லி
** 1 பெயர் 91
#92
** அப்ப வர்க்கத்தின் பெயர்
பூரிகம் நொலையல் கஞ்சம் தோசை
பேத வகைப் பெயர் அப்பம் ஆகும்
** 4 பெயர்கள் 92
#93
** தினை மாவின் பெயர்
நுவணையும் இடியும் தினை நுண் பிண்டி
** 2 பெயர்கள் 93
#94
** சிற்றுண்டி எனும் பெயர்
அப்பம் பிட்டோடு அஃகுல்லி இடி எனச்
செப்பிய எல்லாம் சிற்றுண்டி ஆகும்
** 4 பெயர்கள் 94
#95
** வறையலின் பெயர்
வறையல் ஓச்சை
** 1 பெயர் 95
#96
** பிண்ணாக்கின் பெயர்
மலாவகம் பிண்ணாக்கே
** 1 பெயர் 96
#97
** புளிங்கறியின் பெயர்
துவையே கூட்டு அமைத்து அடும் தொடர் பிறவும்
பருகுவன் அவப் புளிங்கறி ஆகும்
** 2 பெயர்கள் 97
#98
** கறியின் பெயா
கறி நீடாணம்
** 1 பெயர்
#99
** குழம்பின் பெயர்
பாகே குழம்பு
** 1 பெயர் 99
#100
** கஞ்சியின் பெயர்
கஞ்சி காடி மோழை
** 2 பெயர்கள்
#101
** தயிரின் பெயர்
ததியும் அளையும் தயிர் என மொழிப
** 2 பெயர்கள் 107
#102
** பாவின் பெயர்
பயமும் கீரமும் அமுதமும் பாலே
** 3 பெயர்கள் 102
#103
** நெய்யின் பெயர்
இழுதும் கிருதமும் துப்பும் நெய்யே
#104
** மற்றும் நெய்யின் பெயர்
ஆச்சியம் என்றும் அதன் பெயர் ஆகும்
** 4 பெயர்கள் 104
#105
** மோரின் பெயா
முசரே தக்கிரம் மோர் என்று ஆகும்
** 2 பெயர்கள் 105
#106
** வெண்ணெய்யின் பெயர்
ஐயங்கவீநம் நவநீதம் வெண்ணெய்
** 2 பெயர்கள்
#107
** தேனின் பெயர்
பிரசமும் மதுவும் தேன் எனப் பேசுவர்
** 2 பெயர்கள் 107
#108
** சருக்கரையின் பெயர்
கட்டியும் விசயமும் குளமும் கன்னலும்
ஒட்டிய பாகும் அக்காரமும் சருக்கரை
** 6 பெயர்கள் 108
#109
** கண்ட சருக்கரையின் பெயர்
கண்டம் பாளிதம் கண்டசருக்கரை
#110
** மற்றும் கண்ட சருக்கரையின் பெயர்
உண்டை அயிர் புல்லகண்டம் ஒரு விகற்பம்
** 5 பெயர்கள் 110
#111
** கள்ளின் பெயர்
இக்கு நனை தேன் முருகு தோப்பி
நறவு பிரசம் தணியல் சுரை படு
வேரி மட்டு தேறல் சாறு
பானம் வடி பிழி மது வழி தொண்டி
ஆன அரிட்டமும் சாதியும் கள் ஆம்
#112
** மற்றும் கள்ளின் பெயர்
அருகிக் கெளவையும் விளம்பியும் ஆகும்
#113
** மற்றும் கள்ளின் பெயர்
பாலி சுமாலி ஆலி மருட்டம்
மாலி முண்டகம் சாலி மாரி
பாடலி மெளலி சிக்கர் ஞாளி
பாணி குந்தி மதுகரம் சுவிகை
ஆசவம் ஆம்பல் அம்பி அம்பதை
மேதை கஞ்சா விகுணி சுலோகி
பேத வகை கள் பெயர் என அறைவர்
** 48 பெயர்கள்
#114
** பானம் என்பது
பானம் பருகுவன எவற்றிற்கும் பெயரே
#115
** அமிழ்தின் பெயரே
அமிழ்தின் பெயரே மருந்து எனல் ஆகும்
** 1 பெயர்
#116
** நஞ்சின் பெயர்
ஆலம் காரி கடு விடம் நஞ்சே
** 4 பெயர்கள் 116
#117
** உண்பனவற்றின் பெயர்
துற்றி உண்பன
** 1 பெயர்
#118
** தின்பனவற்றின் பெயர்
திற்றி தின்பன
** 1 பெயர்
#119
** இலைநுகர் விலங்கின் உணவின் பெயர்
இலை நுகர் விலங்கின் உணவு குளகு என்ப
** 1 பெயர்
#120
** பறவை உணவிற்கும் ஒரு சார்
** விலங்கின் உணவிற்கும் பெயர்
பறவைக்கும் ஒருசார் விலங்கிற்கும் உணவு
இரையும் உண்டியும் எனப் பெயர் பெறுமே
** 2 பெயர்கள்
#121
** ஒழி பொருளின் பெயர்
மிச்சில் எச்சில் உச்சிட்டம் ஒழிபொருள்
** 3 பெயர்கள்
#122
** துணைக் காரணத்தின் பெயர்
துப்பே சாதனம் துணைக்காரணம் ஆம்
#123
** மற்றும் துணைக் காரணத்தின் பெயர்
ஒக்கும் அதற்கே உபகரணப் பெயரே
** 3 பெயர்கள்
#124
** இரண்டின் பெயர்
உபயமும் உகளமும் ஓர் இரண்டு ஆகும்
** 2 பெயர்கள்
#125
** பேய்த்தேரின் பெயர்
வெண்டேர் கானல் பேய்த்தேர் ஆகும்
** 2 பெயர்கள்
#126
** சல்லியின் பெயர்
துணை அறை தூக்கம் சல்லி ஆகும்
** 3 பெயர்கள்
#127
** அலகு எனும் பெயர்
மகிழின் பரலும் நெல்லின் மணியும்
அனையவை அலகு எனும் பெயர் ஆகும்
** 2 பெயர்கள்
#128
** நிரையின் பெயர்
ஒளியும் பந்தியும் ஒழுங்கும் நிரை ஆகும்
** 3 பெயர்கள்
#129
வரு நல் கங்கை வட திசைப் பெருமையும்
தென் திசைச் சிறுமையும் நீக்கிய குறுமுனி
குண்டிகைப் பழம் புனல் காவிரிப் பெரும் பதி
அம்பற்கு அதிபதி சேந்தன் திவாகரத்து
** ஆறாவது பல் பொருள் பெயர்த் தொகுதி முற்றிற்று
@7 செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி
#1
** செயற்கை வடிவாவன
எண்ணிய எழு வகை உலோகத்தின் மரத்தின்
மண்ணின் தோலின் நூலின் மற்றும்
திண்மை செய் வடிவே செயற்கை வடிவு ஆகும்
#2
** சூலப் படையின் பெயர்
கழுமுள் மூவிலைவேல் முத்தலை கழு சத்தி
வருபவை சூலப்படை என வழங்கும்
** 5 பெயர்கள் 2
#3
** மழுவின் பெயர்
பரசு கணிச்சி நவியம் தண்ணம்
பாலம் என்று ஐந்தும் மழுவின் பெயரே
** 5 பெயர்கள் 3
#4
** சக்கரத்தின் பெயா
திகிரி நேமி ஆழி வளை எஃகம்
சுதரிசனம் பரிதி சக்கரத்து உறு பெயர்
** 7 பெயர்கள் 4
#5
** வில்லின் பெயர்
சிலை தனு வேணு கார்முகம் சாபம்
முனியே சார்ங்கம் சராசனம் பினாகம்
கோதண்டம் தவர் கொடுமரம் துரோணம்
வார் வில் என்ப மதி நூல் புலவர்
** 13 பெயர்கள் 5
#6
** சிவன் வில்லின் பெயர்
பிநாகம் பிஞ்ஞகன் பெரும் சிலைப் பெயரே
** 1 பெயர்
#7
** மாயோன் வில்லின் பெயர்
சார்ங்கம் மாயோன் தனுவின் பெயரே
** 1 பெயர் 7
#8
** அம்பின் பெயர்
பகழி வாளி வண்டு பாணம்
நிகழ் சரம் பத்திரி சிலீமுகம் பல்லம்
புங்கம் கணை குதை கங்கபத்திரம்
அத்திரம் தோணி கோல் விசிகம் அம்பே
** 16 பெயர்கள் 8
#9
** அம்புத் தலையின் பெயர்
உடு அம்புத்தலை
** 1 பெயர் 9
#10
** மொட்டம்பின் பெயர்
உதண் மொட்டம்பே
** 1 பெயர் 10
#11
** அம்பின் குதையின் பெயர்
புங்கம் அம்பின் குதை
** 1 பெயர் 11
#12
** அம்புக் கட்டின் பெயர்
புதை அம்புக்கட்டே
** 1 பெயர்
#13
** வேலின் பெயர்
சத்தி எஃகம் உடம்பிடி குந்தம்
விட்டேறு அரணம் ஞாங்கர் அயில் வேல்
** 8 பெயர்கள்
#14
** கை வேலின் பெயர்
கப்பணம் தோமரம் கைவேல் விகற்பம்
** 2 பெயர்கள்
#15
** வச்சிரப் படையின் பெயர்
சம்பம் வயிரப்படை குலிசம் வச்சிரம்
** 3 பெயர்கள்
#16
** வாளின் பெயர்
நாந்தகம் கட்கம் நவிர் ஏதி கண்டகம்
ஏய்ந்த வேணு வஞ்சம் நாட்டம்
கடுத்தலை உவணி கரவாளம் கோணமோடு
அடுத்தன வசியே வாள் என அறைவர்
** 13 பெயர்கள்
#17
** ஈர் வாளின் பெயர்
வேதினம் கரபத்திரம் இவை ஈர்வாள்
** 2 பெயர்கள்
#18
** உடை வாளின் பெயர்
சுரிகை உடைவாள்
** 1 பெயர்
#19
** கழுக்கடையின் பெயர்
கழுமுள் கழுக்கடை
** 1 பெயர்
#20
** அரிவாளின் பெயர்
குயமும் புள்ளமும் கொடுவாளும் அரிவாள்
** 3 பெயர்கள்
#21
** பிண்டிவாலத்தின் பெயர்
பீலித்தண்டு எஃகம் பிண்டிவாலம்
** 2 பெயர்கள்
#22
** கணையப் படைக் கலத்தின் பெயர்
பரிகமும் எழுவும் கணையப்படைக்கலம்
** 2 பெயர்கள்
#23
** தண்டாயுதத்தின் பெயர்
கதை தடி தண்டு ஆம்
**2 பெயர்கள்
#24
** இருப்பு உலக்கையின் பெயர்
முசலம் இருப்புஉலக்கை
** 1 பெயர்
#25
** மட்டிப் படைக்கலத்தின் பெயர்
முற்கரம் காத்திரம் கூர்த்திகை முசுண்டி
பட்டம் சங்கு மட்டிப்படைக்கலம்
** 6 பெயர்கள்
#26
** உளிக்கும் தறிகைக்கும் பெயர்
உளிக்கருவி தறிகைக்கருவி என்று இசைப்பன
கணிச்சிப் பெயரின் வழங்கும் கருவி
** 1 பெயர்
#27
** இலை மூக்கு அரி கத்தியின் பெயர்
குளிர் இலைமூக்குஅரிகத்தி ஆகும்
** 1 பெயர்
#28
** நாராசத்தின் பெயர்
சலாகை நாராசம்
** 1 பெயர்
#29
** இருப்பு முள்ளின் பெயர்
தாறு இருப்புமுள்ளே
** 1 பெயர்
#30
** கவணின் பெயர்
தழல் தட்டை கவணை கல் எறி கவணே
** 3 பெயர்கள்
#31
** ஆயுதப் பொதுவின் பெயர்
படைக்கலம் தானை கடுமுள் சுதனம்
படையே துப்பு கழுமுள் ஏதியோடு
அடல் வெம் கருவி ஆயுதப்பொதுப்பெயர்
** 9 பெயர்கள்
#32
** ஆயுதக் கூர்மையின் பெயர்
வள் அயில் நுதி நுனை வை ஆர் நிசிதம்
வசி வயிரம் பூ அவற்றின் கூர்மை
** 10 பெயர்கள்
#33
** நுனியின் பெயர்
நுதியும் நுனையும் நுனி ஆகும்மே
** 2 பெயர்கள்
#34
** படை உறையின் பெயர்
தடறும் கருவிப் புட்டிலும் படைஉறை
** 2 பெயர்கள்
#35
** அம்புக் கூட்டின் பெயர்
ஆவமும் தூணியும் ஆவ நாழியும்
அம்புபெய்கூடு என்று அறையல் வேண்டும்
** 3 பெயர்கள்
#36
** கவசத்தின் பெயர்
அரணம் சாலிகை ஆசு பரணம்
கவசம் கண்டம் மெய்யுறை தம்பம்
கசையே சுரிகை மெய்புகுகருவி
#37
** மற்றும் கவசத்தின் பெயர்
பாரமும் பரமும் அப் பெயர்ப் பால
** 12 பெயர்கள்
#38
** தலைக் கருவியின் பெயர்
கீசகம் சிரகம் தலைக்கருவி ஆகும்
** 2 பெயர்கள் 38
#39
** பலகையின் பெயர்
சேடகம் வட்டம் தோலே வேதிகை
கேடகம் பலகை ஆம் எனக் கிளப்பர்
** 5 பெயர்கள் 39
#40
** மாவட்டணத்தின் பெயர்
தட்டியம் பலகை தட்டு மாவட்டணம்
** 3 பெயர்கள் 40
#41
** தோல் பலகையின் பெயர்
தோல்பரம் தோல்பலகை தோலும் ஆகும்
** 2 பெயர்கள்
#42
** கைக் கட்டியின் பெயர்
கைப்புடை கோதை கைக்கட்டி ஆகும்
** 3 பெயர்கள்
#43
** பக்கறையின் பெயர்
சுவடு பக்கறை என்னச் சொல்லுவர்
** 1 பெயர் 43
#44
** குதிரைக் கலணையின் பெயர்
பல்லணம் பருமம் படை பரம் கருவி
சொல்லற்கு உரிய பண் கலணைத் தொடர்பே
** 6 பெயர்கள் 44
#45
** குதிரை வாய்க் கருவியின் பெயர்
கலினமும் கறுழும் குதிரைவாய்க்கருவி
** 2 பெயர்கள் 45
#46
** குசைக் கயிற்றின் பெயர்
வற்கம் குசைக் கயிறு
** 1 பெயர் 46
#47
** குதிரைச் சம்மட்டியின் பெயர்
மத்திகை சம்மட்டி
** 1 பெயர் 47
#48
** கழுத்திடு கயிற்றின் பெயர்
கவடும் புரோசையும் கழுத்திடு கயிறே
** 2 பெயர்கள் 48
#49
** தளையின் பெயர்
நிகளமும் விலங்கும் தொடரும் தளையே
** 3 பெயர்கள் 49
#50
** வலி பற்று இரும்பின் பெயர்
பறை கற்பொறி அள்ளு வலிபற்றுஇரும்பே
** 3 பெயர்கள் 50
#51
** பாத கிங்கிணியின் பெயர்
பரிபுரம் நூபுரம் பரியகம் என்ன
வருபவை பாதகிங்கிணி மணியே
** 3 பெயர்கள்
#52
** சிலம்பின் பெயர்
பரிபுரம் அரவம் பைம்பொன் ஞெகிழி
அரி பெய் சிலம்பு என்று அறையல் வேண்டும்
** 3 பெயர்கள் 52
#53
** அரக்கு உடைச் சிலம்பின் பெயர்
அரதனம் ஞெகிழி அரக்கு உடைச் சிலம்பு அணி
** 2 பெயர்கள்
#54
** கால் அணி மணி வடத்தின் பெயர்
பாதசாலம் கால் அணி மணி வடம்
** 1 பெயர் 54
#55
** பாடகத்தின் பெயர்
பாதகடகம் பாடகம் ஆகும்
** 1 பெயர் 55
#56
** ஆடவர் கால் அணி வடத்தின் பெயர்
கெழு தகை அம்பல் கிழவோன் சேந்தனில்
விழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய
கழலே ஆடவர் கால் மிசை அணி வடம்
** 1 பெயர் 56
#57
** மேகலை முதவியவை வகையாவன
மேகலை காஞ்சி கலாபம் பருமம்
விரிசிகை ஏழும் ஓர் எட்டும் ஈர் எட்டும்
மூவாறும் நால்எட்டும் முறைக் கோவை மணியே
** 5 பெயர்கள் 57
#58
** அரைப் பட்டிகையின் பெயர்
மனாவே கலை அரைப்பட்டிகை ஆகும்
** 2 பெயர்கள் 58
#59
** அரை நாணின் பெயர்
இரதனம் அரைநாண்
** 1பெயர் 59
#60
** சதங்கையின் பெயா
சதங்கை கிங்கிணியே
** 1 பெயர் 60
#61
** பதக்கத்தின் பெயர்
பதக்கம் கண்டிகை ஆரம் எனப் பகர்வர்
** 2 பெயர்கள் 61
#62
** முலை அணி வடத்தின் பெயர்
ஆரம் பதக்கம் கண்டிகை மாலை
கோவை காசு காழ் தாமம் என்று இவை
மாதர் முலை மேல் அணி வடம் ஆகும்
** 8 பெயர்கள் 62
#63
** பூண் கடைப் புணாவின் பெயர்
கடையும் கயிலும் பூண்கடைப்புணர்வே
#64
** மற்றும் பூண் கடைப் புணர்வின் பெயர்
மடையும் அதற்கு வகுக்கப்படுமே
** 3 பெயர்கள் 64
#65
** ஆபரணத் தொங்கலின் பெயர்
தொங்கலும் உத்தியும் அவற்றின் தூக்கம்
** 2 பெயர்கள் 65
#66
** துடக்கு வடிவின் பெயர்
மதலிகை தூக்கம் துடக்கு வடிவே
** 2 பெயர்கள் 66
#67
** தோள் அணியின் பெயர்
அங்கதம் கேயூரம் தோள்அணி ஆகும்
** 2 பெயர்கள்
#68
** கங்கணத்தின் பெயர்
கடகமும் தொடியும் கங்கணம் ஆகும்
** 2 பெயர்கள்
#69
** கைவளையின் பெயர்
சங்கும் தொடியும் சூடகமும் சரியும்
கன்றும் குருகும் வண்டும் கைவளை
** 7 பெயர்கள் 69
#70
** குண்டலத்தின் பெயர்
குழையே மிஞ்சிகை காதணி குண்டலம்
** 3 பெயர்கள் 70
#71
** காதணியின் பெயர்
கடிப்பிணை வல்லிகை வேடகம் காதிற்கு
அணிப் பெயர் தோடும் ஆகும் என்ப
#72
** மற்றும் காதணியின் பெயர்
கொட்டையும் அதனைக் கூறும் கிளவி
** 5 பெயர்கள் 72
#73
** நுதல் சுடிகையின் பெயர்
சுட்டி நுதல் சுடிகை
** 1 பெயர் 73
#74
** பட்டத்தின் பெயர்
பட்டம் ஓடை
** 1 பெயர் 74
#75
** நுதல் அணியின் பெயர்
புல்லகம் இலம்பகம் நுதல் மிசை அணி பூண்
** 2 பெயர்கள் 75
#76
** சிர மாலையின் பெயர்
கரோடிகை சிரமாலைப் பெயர் எனக் கருதுவர்
** 1 பெயர் 76
#77
** மணி முடியின் பெயர்
சுடிகை மெளலி முடியே சேகரம்
மகுடம் கிரீடம் மணிமுடி என்ப
** 6 பெயர்கள் 77
#78
** பேர் அணிகலத்தின் பெயர்
பெரும் பூண் மதாணி பேர் அணிகலமே
** 2 பெயர்கள் 78
#79
** ஆபரணப் பொதுப் பெயர்
பொலம் கலன் நாண் இழை பூண் அணி மதாணி
பொன்னினும் மணியினும் செய் ஆபரணம்
** 7 பெயர்கள் 79
#80
** உண் கலத்தின் பெயர்
தாலம் தட்டம் தளிகை உண்கலம்
** 2 பெயர்கள் 80
#81
** கிண்ணம் அல்லது சிறு வட்டிலின் பெயர்
வள்ளம் கண்ணம்
** 1 பெயர் 81
#82
** முடி உறுப்பின் பெயர்
தாமம் முகுடம் பதுமம் கோடகம்
கிம்புரி முடிஉறுப்பு ஐந்து எனக் கிளப்பர்
** 5 பெயர்கள்
#83
** தோட்டின் பெயர்
தோடு தாடங்கம்
** 1 பெயர்
#84
** பிள்ளைக் கைவளையின் பெயர்
பிடிகம் என்பது பிள்ளைக்கைவளை
** 1 பெயர்
#85
** ஒசை செய் தளையின் பெயா
குடச்சூல் ஞெகிழம் ஓசைசெய்தளை
** 2 பெயர்கள் 85
#86
** செவி மலர்ப் பூவின் பெயர்
கன்னாவதஞ்சம் செவிமலர்ப்பூவே
** 1 பெயர்
#87
** சரிமணியின் பெயர்
கலாபம் தோரை சரிமணிப் பெயரே
** 2 பெயர்கள் 87
#88
** மோதிரத்தின் பெயர்
விரல் அணி ஆழி வீகம் இலச்சினை
மோதிரம் என்ன மொழியற்பால
** 4 பெயர்கள் 88
#89
** வயிரச் சங்கிலியின் பெயர்
சங்கிலி வயிரச்சங்கிலி சாரும்
** 1 பெயர்
#90
** பூணு நூலின் பெயர்
உபவீதம் பூணுநூல்
** 1 பெயர் 90
#91
** தெய்வ உத்தியின் பெயர்
திரு தெய்வஉத்தி
** 1 பெயர்
#92
** தலைக் கோலத்தின் பெயர்
பிஞ்ஞகம் தலைக்கோலம்
** 1 பெயர் 92
#93
** தலைப் பாளையின் பெயர்
தலைப்பாளை தொய்யகம்
** 1 பெயர் 93
#94
** கல் அழுத்தும் குழி வட்டத்தின் பெயர்
கல்அழுத்தும்குழிவட்டம் கேவணம்
** 1 பெயர் 94
#95
** பூணின் பெயர்
கோளகை தாங்கி வயிரம் கிம்புரி
பூணின் பெயர் எனப் போற்றல் வேண்டும்
** 4 பெயர்கள் 95
#96
** வட்டிலின் பெயர்
கோரம் வட்டில்
** 1 பெயர் 96
#97
** நாழிகை வட்டிலின் பெயர்
கன்னல் நாழிகைவட்டில் ஆகும்
** 1 பெயர் 97
#98
** சட்டுவத்தின் பெயர்
தவ்வி சிலகம் தருவி சட்டுவம்
** 3 பெயர்கள் 98
#99
** கண்ணாடியின் பெயர்
ஆடி படிமக்கலம் தருப்பணம் கஞ்சனம்
ஆதரிசனம் முகுரம் கண்ணாடி ஆகும்
** 6 பெயர்கள் 99
#100
** பெரு மணியின் பெயர்
கண்டை யானைமணி பெருமணித் தொடர்பே
** 2 பெயர்கள் 100
#101
** கைம்மணியின் பெயர்
பரந்தவட்டம் படலிகை கைம்மணி
** 2 பெயர்கள் 101
#102
** சேகண்டியின் பெயர்
எறிமணி சேகண்டி ஆம் என உரைப்பர்
** 1 பெயர் 102
#!03
** கலசப் பானையின் பெயா
கஞ்சனை கலசப்பானை என்ப
** 1 பெயர்
#!04
** படிக்கத்தின் பெயர்
படியகம் படிக்கம்
** 1 பெயர்
#105
நெய்த் துடுப்பின் பெயர்
சுருக்கு சுருவம் நெய்த்துடுப்பு ஆகும்
** 2 பெயர்கள் 105
#106
** தூப முட்டியின் பெயர்
தூபமுட்டி இந்தளம் தடவு எனச் சொல்ப
** 2 பெயர்கள் 106
#107
** தாளத்தின் பெயர்
கிட்டி பாண்டில் கஞ்சம் தாளம்
** 3 பெயர்கள் 107
#108
** தூப மணியின் பெயர்
கைம்மணி தூபமணி
** 1 பெயர் 108
#109
** பூண் கொள்கலத்தின் பெயர்
பீடிகை துமானம் காண்டம் கண்டிகை
கோடிகம் கடிப்பம் பூண்கொள்கலமே
** 6 பெயர்கள்
#110
** பரணியின் பெயர்
கோயம் பரணி
** 1 பெயர்
#111
** காளத்தின் பெயர்
காகளம் காளம்
** 1 பெயர் 111
#112
** சிறு சின்னத்தின் பெயர்
பீலி சிறுசின்னம்
** 1 பெயர் 112
#113
** குறிஞ்சிப் பறையின் பெயர்
தொண்டகம் முருகியம் துடி இவை மூன்றும்
வென்றி கொள் குறிஞ்சிப்பறை என விளம்புவர்
** 3 பெயர்கள் 113
#114
** பாலை நிலப் பறையின் பெயர்
துடியே பாலை வேடர் தொல் பறை
** 1 பெயர்
#115
** ஏறங் கோட் பறையின் பெயர்
முல்லையாளர் ஏறங்கோட்பறை
சொல்லிய பம்பை ஆகலும் உரித்தே
** 1 பெயர்
#116
** மருத நிலப் பறையின் பெயா
கிணையே மருதக் கிளர் பறை ஆகும்
** 1 பெயர் 116
#117
** நெய்தற்பறையின் பெயர்
சாபறை நெய்தற்பறை எனச் சாற்றுவர்
** 1 பெயர் 117
#118
** உவகைப் பறையின் பெயர்
தூரியம் உவகைப்பறை எனச் சொல்ப
** 1 பெயர்
#119
** சிறுபறையின் பெயர்
ஆகுளி சிறுபறை
**1 பெயர் 119
#120
** ஒரு கண் பறையின் பெயர்
ஒருகண்பறை மொந்தை
** 1பெயர் 120
#121
** உடுக்கையின் பெயர்
தண்ணுமை உடுக்கை
** 1 பெயர் 121
#122
** இடை சுருங்கு சிறு பறையின் பெயர்
துடி இடை சுருங்கு வடிவின் சிறுபறை
** 1 பெயர்
#123
** மார்ச்சனையின் பெயர்
மண்ணே மார்ச்சனை
** 1 பெயர்
#124
** பரந்த வாய்ப் பறையின் பெயர்
பதலை பரந்தவாய்ப்பறை எனப் பகர்வர்
** 1 பெயர்
#125
** முழவத்தின் பெயர்
முழவம் குளிர் என மொழியவும் படுமே
** 1 பெயர்
#!26
** குட முழவின் பெயர்
மண்கணை முழவம் குடமுழவின் பெயர்
** 2 பெயர்கள்
#127
** கடிப்பின் பெயர்
குணில் கடிப்பு ஆகும்
**1 பெயர்
#128
** திமிலையின் பெயர்
சல்லரி திமிலை
** 1 பெயர்
#129
** பேரிகையின் பெயர்
சகண்டை முழவம் பணையே சகடம்
துந்துபி பேரிகைத் தொகு பெயர் ஆகும்
** 5 பெயர்கள்
#130
** நிசாளத்தின் பெயர்
தண்ணுமை நிசாளம்
** 1 பெயர்
#131
** பன்றிப் பறையின் பெயா
குடப்பறை பன்றிப்பறை எனக் கருதுவர்
** 1 பெயர்
#132
** கரடிப் பறையின் பெயர்
தட்டை கரடிப்பறை எனக் கூறுப
** 1 பெயர்
#133
** இடக்கையின் பெயர்
இடக்கை ஆமந்திரிகை எய்தும்
** 1 பெயர்
#134
** படகத்தின் பெயர்
பணவம் திண்டிமம் ஆனகம் படகம்
** 3 பெயர்கள்
#135
** பல்வகைப் பறையின் பெயர்
சல்லரி பம்பை தடாரி தக்கை
பல்வகைப் பறையின் பெயர்ப்பால ஆகும்
** 4 பெயர்கள்
#136
** வாச்சியப் பொதுவின் பெயர்
முரசு தாளம் பீலி முருகு பொரு கோடணை
முழவு தூரியம் பணை இயப்பொதுப்பெயர்
** 8 பெயர்கள்
#137
** கொம்பின் பெயர்
வயிரே இரலை ஆம்பல் கோடு என்று
இனைய தான்குடி கொம்பு என இசைப்பர்
** 4 பெயர்கள்
#138
** யாழின் பெயர்
தந்திரி வீணை கின்னரம் விபஞ்சி
கருவி கோடவதி அறுசரம் வல்லகி என
வருபவை ஓசை யாழின் பெயரே
** 8 பெயர்கள்
#139
** யாழ் முறுக்காணியின் பெயர்
மாடகம் முறுக்காணி
** 1 பெயர்
#140
** யாழ் வலிக் கட்டின் பெயர்
திவவு யாழ்வலிக்கட்டு
** 1 பெயர்
#141
** யாழ் நரம்பின் பெயர்
கோலே தந்திரி குரல் யாழ்நரம்பே
** 3 பெயர்கள்
#142
** ஆதி யாழாவது
ஆயிரம் நரம்பிற்று ஆதியாழ் ஆகும்
#143
** தேரின் பெயர்
கவரி இயந்திரம் திகிரி சயந்தனம்
இரதம் வையம் கொடிஞ்சு கூவிரி தேர்
** 8 பெயர்கள்
#144
** தேர்க் காலின் பெயர்
உருளி நேமி பரிதி உந்தி
திகிரி ஆழி சில்லி தேர்க்கால்
** 7 பெயர்கள்
#145
** தேரின் அகத்தில் செறி கதிரின் பெயர்
ஆரே உருளின் அகத்தில் செறி கதிர்
** 1 பெயர்
#146
** தேர் நடுவின் பெயர்
நாப்பணும் தட்டும் தேர்நடு ஆகும்
** 2 பெயர்கள்
#147
** தேர்க் கொடிஞ்சியின் பெயர்
கூவிரம் கொடிஞ்சி
** 1 பெயர்
#148
** தேர் மொட்டின் பெயர்
கூம்பு தேர்மொட்டே
** 1 பெயர்
#149
** பாண்டில் பூண்ட ஊர்தியின் பெயர்
சிவிகை பாண்டில்பூண்டஊர்தி
சகடம் வையம் எனப் பெயர் சாரும்
** 3 பெயர்கள்
#150
** பரி பூண்டு ஈர்க்கும் ஊர்தியின் பெயர்
பாண்டில் கஞ்சிகை வையம் என்பன
பரி பூண்டு ஈர்க்கும் ஊர்திப் பால
** 3 பெயர்கள் 150
#151
** பண்டியின் பெயர்
வையம் உருள் ஒழுகை சாகாடு சகடம்
எய்திய சாடு பண்டி என்று இசைப்பர்
** 6 பெயர்கள்
#152
** பண்டியுள் இரும்பின் பெயர்
இருசும் கந்தும் பண்டியுள்இரும்பாம்
** 2 பெயர்கள்
#153
** தேர் மேல் இடு பரப்பின் பெயர்
பலகைப் பாவே தட்டுப்பா என
இலகு தேரின்மேல்இடுபரப்பே
** 2 பெயர்கள்
#154
** தேர்மேல் மரச் சுற்றின் பெயர்
கிடுகு தேர் மேல் புடை சூழ் மரச்சுற்று
** 1 பெயர்
#155
** கலப்பையின் பெயர்
நாஞ்சில் அலம் படை கலனை என்ன
வாய்ந்த நான்கொடு மேழியும் கலப்பை
** 5 பெயர்கள் 155
#156
** ஒன்றிற்கு அமைந்த பல் வகை உறுப்பின் பெயர்
கலப்பையும் கலனையும் என்ன வரும் பெயர்
உரைக்கில் ஒன்றிற்கு அமைந்த பல் உறுப்பே
** 2 பெயர்கள்
#157
** கொழுவின் பெயா
கோளே கொழு ஆம்
** 1 பெயர்
#158
** தூணின் பெயர்
கந்து எழு வெளிலே ஆளானம் தறி
கம்பம் தம்பம் மதலை பற்று தூணே
** 9 பெயர்கள்
#159
** யானைத் தூணின் பெயர்
ஆளானம் வெளில் யானை அணை தறி
** 2 பெயர்கள் 159
#160
** குறுந் தறியின் பெயர்
போதிகை குறுந்தறி
** 1 பெயர்
#161
** வேள்வித் தூணின் பெயர்
யூபம் வேள்வித்தூண்
**1 பெயர்
#!62
** கணைய மரத்தின் பெயர்
எழுவே கணையமரம்
** 1 பெயர்
#163
** தொழு மரத்தின் பெயர்
தொழுவே தொழுமரம்
** 1 பெயர்
#164
** கதவின் பெயர்
கவாடமும் புதவும் வாரியும் கதவே
** 3 பெயர்கள்
#165
** கதவில் செறி தாழின் பெயர்
சீப்பு காழ் கதவில்செறிதாழ் ஆகும்
** 2 பெயர்கள்
#166
** யானைத் தோட்டியின் பெயர்
அங்குசம் கோணம் யானைத்தோட்டி
** 2 பெயர்கள்
#167
** சுட்டுக் கோலின் பெயர்
சுட்டுக்கோல் உலையாணிக்கோல் எனச் சொல்ப
** 2 பெயர்
#168
** சம்மட்டியின் பெயர்
கூடம் சம்மட்டி
** 1 பெயர்
#169
** உரலின் பெயர்
உலூகலம் கறை இவை இரண்டும் உரலே
** 2 பெயர்கள்
#170
** உலக்கையின் பெயா
முசலமும் தடியும் உலக்கை ஆகும்
** 2 பெயர்கள்
#171
** அஞ்சனக் கோலின் பெயர்
கோல் அஞ்சனக்கோல்
** 1 பெயர்
#172
** எழுதுகோலின் பெயர்
துகிலிகை எழுதுகோல்
** 1 பெயர்
#173
** ஊசியின் பெயா
ஊசி சூசி
**1 பெயர்
#174
** ஊசித் துளையின் பெயர்
பாசம் ஊசித்துளை
** 1 பெயர்
#175
** ஓலை தீட்டும் படையின் பெயர்
ஊசி கண்டம் ஆணி ஓலைதீட்டும்படை
** 3 பெயர்கள்
#176
** சங்கிலியின் பெயர்
சங்கிலி தொடர் துவக்கு இடங்கணி சாலும்
** 3 பெயர்கள்
#177
** உறியின் பெயர்
சிமிலி சிக்கம் சிதர் தூக்கு உறியே
** 4 பெயர்கள் 177
#178
** ஊஞ்சலின் பெயர்
ஊசல் விண்டாண்டு ஊஞ்சல் ஆகும்
** 2 பெயர்கள்
#179
** கட்டிலின் பெயர்
மஞ்சம் பாரி அரி பரியங்கம்
இங்கு இவை கட்டில் என மொழிந்தனரே
** 4 பெயர்கள்
#180
** விசியின் பெயர்
விசி அரி ஆகும்
**1 பெயர்
#181
** தவத்தோர் பீடத்தின் பெயர்
விட்டரம் பீடிகை தவத்தோர்பீடம்
** 2 பெயர்கள்
#182
** சிங்காசனத்தின் பெயர்
பத்திராசனம் சிங்காதனம் பகரும்
** 1 பெயர்
#183
** அளவைக் காலின் பெயர்
குளகம் அம்பணம் தூம்பு கச்சம்
அளவைக்கால் என்று அறையல் வேண்டும்
** 4 பெயர்கள்
#184
** நாழிமின் பெயர்
குஞ்சம் நாழி
** 1 பெயர்
#185
** கொத்தளிப் பாயின் பெயர்
ஆரை கொத்தளிப்பாய்
** 1 பெயர்
#186
** புற்பாயின் பெயர்
சாப்பை புற்பாய்
** 1 பெயர்
#187
** பிரப்பம் பாயின் பெயா
சாதிப்பாய் பிரப்பம்பாய் எனச் சாற்றுவர்
** 1 பெயர்
#188
** தோற் பாயின் பெயர்
சருமம் தோற்பாய்
** 1 பெயர்
#!89
** தடுக்கின் பெயர்
தவிசு தடுக்கே
** 1 பெயர்
#190
** குழாயின் பெயர்
தண்டு குழாய் ஆம்
** 1 பெயர்
#191
** பூந் தட்டின் பெயர்
பூந்தட்டு கோடிகம்
** 1 பெயர்
#192
** பூப் பெட்டியின் பெயர்
பூப்பெட்டி மூழிவாய்
** 1 பெயர்
#193
** கிடுகின் பெயர்
சட்டம் கிடுகே
**1 பெயர்
#194
** விளக்குத் தண்டின் பெயர்
தம்பம் கெளசிகம் மத்திகை விளக்குத்தண்டின்
பெயர் எனச் சாற்றப்பெறுமே
** 3 பெயர்கள்
#195
** முறத்தின் பெயர்
சின்னம் தட்டு சேட்டை முற்றில்
முன்னிய முறம் என மொழியற்பால
** 4 பெயர்கள்
#196
** புட்டிலின் பெயர்
புட்டில் இறைவை
** 1 பெயர்
#197
** கூடையின் பெயர்
கூடை வட்டிகை
** 1 பெயர்
#198
** சுளகின் பெயர்
சுளகே சூர்ப்பம்
** 1 பெயர்
#199
** துடைப்பத்தின் பெயர்
சோதினி மாறு துடைப்பம் ஆகும்
** 2 பெயர்கள்
#200
** மூழையின் பெயர்
மூழை மூழி
** 1 பெயர்
#201
** மத்தின் பெயர்
மத்து மத்தம்
** 1 பெயர்
#202
** தயிர் கடை தறியின் பெயர்
வெளில் தயிர்கடைதறி
** 1 பெயர்
#203
** பாவாற்றியின் பெயர்
பாவாற்றி குச்சு
** 1 பெயர்
#204
** நூல் நாழியின் பெயர்
நூல்நாழி நாடா
** 1 பெயர்
#205
** காராம்பியின் பெயா
காராம்பி பூட்டை கிழார் அம்பி காம்பி
** 4 பெயர்கள்
#206
** இறை கூடையின் பெயர்
இறைகூடை பிழார் இடார் ஆகும்மே
** 2 பெயர்கள்
#207
** நீர்ப் பத்தரின் பெயர்
நீர்ப்பத்தர்க்கு அம்பணம் தூம்பு நேர்ப
** 2 பெயர்கள்
#208
** பரணின் பெயா
பணவை இதணம் கழுது பரணே
** 3 பெயர்கள் 208
#209
** ஏணியின் பெயர்
ஏணி கடவை இறைவை சேணி
** 3 பெயர்கள் 209
#210
** கண்ணேணியின் பெயர்
மால்பு கண்ணேணி என வகுத்தனரே
** 1 பெயர்
#211
** கிளி கடி கருவியின் பெயர்
குளிரும் தழலும் தட்டையும் மூன்றும்
கிளிகடிகருவி எனக் கிளத்தினரே
** 3 பெயர்கள் 211
#212
** குறுந் தடியின் பெயர்
குணிலே குறுந்தடி
** 1 பெயர் 212
#213
** நெய்த் துடுப்பின் பெயர்
துடுவை நெய்த்துடுப்பே
** 1 பெயர் 213
#214
** அடை குறட்டின் பெயர்
பட்டடை அடைகுறடு
** 1 பெயர் 214
#215
** பருங் குறட்டின் பெயர்
முருடு பருங்குறடே
** 1 பெயர் 215
#216
** மரக் கலத்தின் பெயர்
வங்கம் பாதை தோணி யானம்
தங்கு மதலை திமில் பாறு அம்பி
பஃறி சதாவே பாரதி நவ்வே
போதம் தொள்ளை நாவாய் என்று இவை
மேதகு நீர் மேல் ஓடும் மரக்கலம்
** 15 பெயர்கள் 216
#217
** மரக்கலப் பாயின் பெயர்
இதையே மரக்கலப்பாய் என இசைப்பர்
**1 பெயர்
#218
** தோணியின் பெயர்
பகடு பஃறி அம்பி ஓடம்
திமிலே தோணி எனச் செப்பினரே
** 5 பெயர்கள்
#219
** தெப்பத்தின் பெயர்
பகடு பட்டிகை யானம் அம்பி
படுவை தொள்ளம் புணை மிதவை தெப்பம்
** 8 பெயர்கள் 219
#220
** பேழையின் பெயர்
மஞ்சிகம் மஞ்சிகை பேழை என்று இசைப்பர்
** 8 பெயர்கள் 220
#221
** கெண்டிகையின் பெயர்
காண்டம் கரகம் கமண்டலம் குண்டிகை
கடிப்பம் கெண்டிகை ஆம் எனக் கருதுவர்
** 5 பெயர்கள் 221
#222
** பீடிகை அல்லது பூண் கொள் களத்தின் பெயர்
பீடிகை துமானம் எனப் பெயர்பெறுமே
** 1 பெயர்
#223
** கொள் கலம் என்பது
மாலையும் சாந்தும் மடியும் பெய்த
கோல விகற்பம் கொள்கலம் ஆகும்
**3 பெயர்கள் 223
#224
** பகுவாய் கொள் சுலத்தின் பெயர்
பகுவாய்கொள்கலம் பிழா எனப்படுமே
** 1 பெயர் 224
#225
** ஒலைக் குடையின் பெயர்
குடைஓலை ஏனம் பொதி முடை என்ப
** 3 பெயர்கள் 225
#226
** பொற் கொல்லன் சின்னத் தட்டின் பெயர்
கன்னம் பொற்கொல்லன்சின்னத்தட்டே
** 1 பெயர் 226
#227
** மயில் பீலிக் குடையின் பெயர்
கலாபம் தழையே தொங்கல் என்று இவை
கலாபப் பீலியில் கட்டிய கவிகை
** 3 பெயர்கள் 227
#228
** வெண் குடையின் பெயர்
தொங்கல் கவிகை சத்திரம் பிச்சம்
இங்கு இவை வெண் குடைப் பெயர ஆகும்
** 4 பெயர்கள் 228
#229
** சிற்றால வட்டத்தின் பெயர்
பீலி சாந்தாற்றி சிற்றாலவட்டம்
** 2 பெயர்கள் 229
#230
** கால் செய் வட்டம் அல்லது
** பேராலவட்டத்தின் பெயர்
விசிறி வீசனம் சாந்தாற்றி என்று இவை
வகுத்த கால்செய்வட்டம் ஆகும்
** 2 பெயர்கள் 230
#231
** சீப்பின் பெயர்
சிக்கம் மயிர்வாரி சீப்பு என்று ஆகும்
** 2 பெயர்கள் 231
#232
** மகளிர் ஆடும் களத்தின் பெயர்
ஓரை மகளிர்ஆடும்களம் ஆம்
** 1 பெயர்
#233
** சூதாடு கருவியின் பெயர்
காசும் வல்லும் சூதாடுகருவி
** 2 பெயர்கள் 233
#234
** கவற்றின் தாயத்தின் பெயர்
ஆயம் கவற்றின் தாயம் ஆகும்
** 1 பெயர்
#235
** சாரியின் பெயர்
சாரி நாய் ஆம்
** 1 பெயர்
#236
** பந்தின் பெயர்
கந்துகக் கிளவி பந்து எனப்படுமே
** 1 பெயர்
#237
** சும்மாட்டின் பெயர்
சுமடு சுமையடை சும்மாடு ஆகும்
** 2 பெயர்கள்
#238
** கண்டத்தின் பெயர்
கடிகை துண்டம் கண்டம் ஆகும்
** 2 பெயர்கள்
#239
** நூலின் பெயா
பனுவலும் தந்தும் நூல் எனப்படுமே
** 2 பெயர்கள்
#240
** தைத்தலின் பெயர்
பொல்லம் தைத்தல் புரை அறு துன்னம்
** 2 பெயர்கள்
#241
** வாரின் பெயர்
வள்ளும் வகிரும் வார் அது ஆகும்
** 2 பெயர்கள்
#242
** கயிற்றின் பெயர்
பாசமும் நாணும் குணமும் கயிறே
** 3 பெயர்கள்
#243
** தாமணியின் பெயர்
தாமணி தாம்பே
** 1 பெயர்
#244
** காற்றாடியின் பெயர்
கழல் கழங்கு கதலி காற்றாடிக்கு ஆம்
** 3 பெயர்கள்
#245
** கயிற்று வலையின் பெயர்
சாலம் என்பது கயிற்றுவலையே
** 1 பெயர்
#246
** செருப்பின் பெயர்
தொடுதோல் கழல் இவை தோல் செருப்பு ஆகும்
** 2 பெயர்கள்
#247
** அடியில் தொடுவனவற்றின் பெயர்
அடியில்தொடுவன பாதுகை மிதியடி
** 2 பெயர்கள்
#248
** மிதியடிக் கொட்டையின் பெயர்
குடை மிதியடி மேல் இட்ட கொட்டை
** 1 பெயர்
#249
** பல் சீவும் கோலின் பெயர்
மெல்கோல் பல்சீவும்கோலின் மேற்றே
** 1 பெயர் 249
#250
** தூண்டிவின் பெயா
தூண்டில் வனிசம்
** 1 பெயர் 250
#251
** அம்மானையின் பெயர்
அம்மானை அம்மனை
** 1 பெயர் 251
#252
** தவிட்டின் பெயர்
முட்டை தவிடு முடையும் ஆகும்
** 2 பெயர்கள் 252
#253
** நொய்யின் பெயர்
நொய் நொறுங்கு நுவலும்
** 1 பெயர் 253
#254
** உலைத்துருத்தியின் பெயர்
அத்திரி உலைத்துருத்திக்கு அடைத்த பெயரே
** 1 பெயர் 254
#255
** கொல்லுலை மூக்கின் பெயர்
குருகும் சிவையும் கொல் உலை மூக்கே
** 2 பெயர்கள் 255
#256
** செத்தையின் பெயர்
துரால் நரல் காடு மயல் செத்தை சொல்லும்
** 4 பெயர்கள்
#257
** பாடையின் பெயர்
பாடை வெள்ளில்
**1 பெயர் 257
#258
** சாணைக் கல்லின் பெயர்
சிலாவட்டம் சாணைக்கல்
** 1 பெயர் 258
##259
** நீர் தூஉம் துருத்தியின் பெயர்
சிவிறி சிறுதாரை நீர் தூஉம் துருத்தி
** 2 பெயர்கள் 259
#260
** குடத்தின் பெயர்
இடங்கர் தசும்பு கடம் கும்பம் குடம்
கன்னல் என்றும் கருதுவர் புலவர்
** 5 பெயர்
#261
** கரகத்தின் பெயர்
கன்னல் சிரகம் கரகம் ஆகும்
** 2 பெயர்கள் 261
#262
** பானையின் பெயர்
தடாவும் குழிசியும் மிடாவும் பானை
** 3 பெயர்கள் 262
#263
** மிடாவின் பெயா
அகளமும் தசும்பும் தடாவும் மிடாவே
** 3 பெயர்கள் 263
#264
** தாழியின் பெயர்
சாடி அகளம் பதலை தாழி
** 3 பெயர்கள்
#265
** நீர்ச் சாலின் பெயர்
இடங்கர் வட்டம் நிறை நீர்ச்சாலே
** 3 பெயர்கள்
#266
** கொப்பரியின் பெயர்
கொப்பரி கடாரம் தசும்பும் கூறுப
** 2 பெயர்கள்
#267
** தயிர் கடை தாழியின் பெயர்
குடாரம் மந்தினியொடு தயிர்கடைதாழி
** 2 பெயர்கள்
#268
** அகலின் பெயர்
சராவம் சுத்திகை அகல் எனச் சாற்றுவர்
** 2 பெயர்கள்
#269
** தகழி
இடிஞ்சில் பாண்டில் தகழிக்கு இயம்புவ
** 2 பெயர்கள்
#270
** குடுவை
குண்டம் குடுவை
**1 பெயர்
#271
** சட்டி
சட்டி விசளை
** 1 பெயர்
#272
** இரப்போர் கலம்
கடிஞை ஐயம் இரப்போர்கலமே
** 2 பெயர்கள்
#273
** கொள் கலம் எவற்றிற்கும் பெயர்
இடும்கலம் பாண்டம் என்ப இரண்டும்
கொள்கலம் எவற்றிற்கும் கூறும் கூற்றே
** 2 பெயர்கள்
#274
** மண்ணரி நார்
மட்பகை குயவர் மண்ணரி நாரே
** 1 பெயர்
#275
** கூறை
மடியே புட்டம் மாறுகம் கலை உடை
இலக்கர் கலிங்கம் சேலை காடகம்
காழகம் அறுவை வட்டம் சாடி
தானை வாதனம் கோடிகம் அம்பரம்
ஆசாரம் ஆடை தூசு துகில் நீவி
சம்படம் பட்டம் படாம் புடைவை கூறை
** 26 பெயர்கள்
#276
** நல் ஆடை
எடகம் புங்கம் பங்கம் இடையல்
வேதகம் சில்லிகை சித்திலிகை கத்தியம்
நாகம் தூரியம் கருள் பாரி நல்ஆடை
** 12 பெயர்கள்
#277
** பட்டு ஆடை
பாளிதம் கோசிகம் நேத்திரம் பட்டுஆடை
** 3 பெயர்கள்
#278
** பட்டு விகற்பம்
காம்பு பட்டுவிகற்பம் கழறும்
** 1 பெயர்
#279
** நற்பணித்தூசு
தேவாங்கம் நற்பணித்தூசிற்குச் செப்புப
** 1 பெயர்
#280
** மயிர்ப் படாம்
மயிரகம் முரிகம் மயிர்ப்படாம் ஆகும்
** 2 பெயர்கள்
#281
** மரவுரி
வற்கலை சீரை இறைஞ்சி மரவுரி
** 3 பெயர்கள்
#282
** செம்படாம்
கம்பளம் சிம்புளி செம்படாம் ஆகும்
** 2 பெயர்கள்
#283
** முக படாம்
சூழி முகபடாம்
** 1 பெயர்
#284
** மேற் போர்வை
மீக்கோள் மேற்போர்வை
** 1 பெயர்
#285
** முன் தானை
முன்தானை தோகை
** 1 பெயர்
#286
** கொய்சகம்
நீவி என் கிளவி மாதர் கொய்சகம்
** 1 பெயர்
#287
** கம்பளிப் படாம்
கம்பலம் கம்பளம் என்ப இரண்டும்
கம்பளிப் படாத்தின் கண்ண ஆகும்
** 2 பெயர்கள்
#288
** கச்சு
வம்பு பிணிகை பட்டிகை வார் வடம்
என்று இவை ஐந்தும் கச்சு என இசைப்பர்
** 5 பெயர்கள்
#289
** கச்சின் கடைக் கயிறு
சார்வாரம் கச்சின் கடைக் கயிறே
** 1 பெயர்
#290
** உடுத்தல்
சுற்றல் உடுத்தல்
** 1 பெயர்
#291
** உத்தரீயம்
உத்தரீயம் ஏகாசம்
**1 பெயர்
#292
** அத்தவாளம்
வடகம் அத்தவாளம்
** 1 பெயர் 292
#293
** மேற் கட்டி
கம்பலம் விதானம் மேற்கட்டி ஆகும்
#294
** மற்றும் மேற்கட்டி
வானி படங்கு எனவும் வகுத்தனர் புலவர்
** 4 பெயர்கள் 294
#295
** சட்டை
மெய்ப்பை கஞ்சுளி கஞ்சுகம் வாரணம்
குப்பாயம் அங்கி சட்டை ஆகும்
** 6 பெயர்கள் 295
#296
** இடு திரை
கண்டம் ஏமம் படாம் கஞ்சிகை கழனி என்று
இங்கு இவை எழினியொடு படம் இடுதிரை
** 7 பெயர்கள் 296
#297
** கொடி
பதாகை கேதனம் விலோதனம் கதலிகை
படாகை துவசம் துகிலிகை வானி
படங்கும் சத்தியும் பாற்படுத்து இன்னவை
நுடங்கிய கொடி என நுவன்றிசினோரே
** 10 பெயர்கள் 297
#298
** சிறு கொடி
கத்திகை சிறுகொடி ஆகக் கருதுவர்
** 1 பெயர்
#299
** சீரை
சிதவல் சிதர் துணி சீரை ஆகும்
** 3 பெயர்கள் 299
#300
** மெத்தை
அணையும் தவிசம் தளிமம் இ மூன்றும்
புனையும் மெத்தை எனப் புகன்றனரே
** 3 பெயர்கள் 300
#301
** தலையணை
உபதானம் தலையணை உள்ளும் கிளவி
** 1 பெயர் 301
#302
** வீதியில் கட்டிய கொடி
வீதியில் கட்டிய கொடிப் பெயர் விடங்கம்
** 1 பெயர் 302
#303
** தேர்க் கொடி
கூவிரம் தேரில் திகழ் கொடிக் கூற்றாம்
** 1 பெயர்
#304
** சித்திரப் படாம்
சித்திரப்படாமே பொத்தகம் ஆகும்
** 1 பெயர் 304
#305
** சித்திரம்
ஓவியம் வட்டிகை துகிலிகை என்று இவை
மேவிய சித்திரம் என்மனார் புலவர்
** 3 பெயர்கள் 305
#306
** எழுதல்
வரைதல் தீட்டல் பொறித்தல் இரேகை
எழுதல் பெயர் என இயம்பினர் புலவர்
** 4 பெயர்கள் 306
#307
** இறுக்கல்
தற்றல் இறுக்கல்
** 1 பெயர் 307
#308
முற்றவப் பயனோ கற்றவப் பயனோ
சாபத்து இழுக்கிய தேவ சாதரில்
தோற்றம் உடையன் என அம்பல் தோன்றிய
இயற்கைச் சேந்தன் திவாகரத்து
** ஏழாவது – செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி முற்றிற்று
@8 பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
#1
** பண்பு
வடிவின் அளவின் வண்ணத்தின் வரூஉம்
கடன் இயல் மரபில் காட்சிப் பொருளினும்
உணர்வில் புலப்படும் உண்மைப் பொருளினும்
பகர் குணத் தொடர்பு பண்பு எனப்படுமே
** 4 பெயர்கள் 1
#2
** வட்ட வடிவு
வலயம் நேமி திகிரி மண்டிலம்
பரிதி ஆழி பாண்டில் விருத்தம்
கோளகை கடகம் பாலிகை கொம்மை
தட்டு வலயம் சக்கரம் சில்லி
வட்ட வடிவிற்கு ஒட்டிய பெயரே
** 16 பெயர்கள் 2
#3
** வளைதல்
குடிலம் தட்டு வாங்கல் குலாவல்
கோட்டம் வணரே வளாவல் வளைதல்
** 7 பெயர்கள் 3
#4
** திரள் வடிவு
பந்தம் சேடு கொம்மை குவவு
புஞ்சம் தொகுதி சோகம் துறுமல்
உண்டை மாழை குவிதல் கணை குழியம்
பிண்டம் ஏழ் இரண்டும் திரள் வடிவு என்ப
** 14 பெயர்கள் 4
#5
** குவிந்த வடிவு
குவையும் குவாலும் குப்பையும் இராசியும்
குவவும் குவிதல் பொருள ஆகும்
** 5 பெயர்கள் 5
#6
** தொகுதி
தொழுதியும் மொய்யும் தோடும் குழுமலும்
கருவியும் தொகுதிப் பெயர் கட்டுரைக்கும்
** 5 பெயர்கள் 6
#7
** துறுவல்
துறுவும் துற்றுவும் துறுவல் ஆகும்
** 2 பெயர்கள் 7
#8
** ஐம்மை வடிவு
அடரே தகடு முதல் ஐம்மை வடிவின
** 2 பெயர்கள் 8
#9
** பரந்த வடிவு
படலை படர்ச்சி பரந்தவடிவின
** 2 பெயர்கள் 9
#10
** குமிழ்ப்பு வடிவு
குமிழ்ப்புறு வடிவே புளகப் பெயர்க் கொடை
** 1 பெயர் 10
#11
** மொக்குள் வடிவு
மொக்குள் வடிவே கொப்புளம் ஆகும்
** 1 பெயர் 11
#12
** உண்டை
குழியம் திரள் உண்டைக்கு உரிய ஆகும்
** 2 பெயர்கள் 18
#13
** உள்துளை வடிவு
தூம்பு நாழி புழை உள்துளைவடிவின
#14
** மற்றும் உள்துளை வடிவு
சுரையும் உள்துளைவடிவு எனல் ஆகும்
** 2 பெயர்கள் 74
#15
** துளையுடைப் பொருள்
புழையும் குழலும் துளையுடைப்பொருளே
** 2 பெயர்கள் 15
#16
** துவாரம்
சுரியும் மடையும் துவாரம் ஆகும்
** 2 பெயர்கள் 16
#17
** சர்ச்சரை வடிவு
பிணரே சர்ச்சரை வடிவினது ஆகும்
** 1 பெயர் 17
#18
** கதிர்த் தொகுதி மயிர்த் தொகுதி
கதிர்த்தொகுதி மயிர்த்தொகுதி போல்வன கற்றை
** 1 பெயர் 18
#19
** இடன் உடைமை
நாடு என் கிளவி இடன் உடைமை ஆகும்
**1 பெயர் 19
#20
** பெருமை
தடம் தடவு விபுலம் வியலிகை வியன் விறல்
முடலை அகலுள் மோடு செம்மை
பீடு கண் பாழி பின் முன்பு மால் மா
வந்தை கலந்தை பரி பணை அழுவம்
பிறங்கல் படு நனி இயக்கம் வியம் தகை
செம்மல் அணி நன்று அருமை இருமை
கருமை கதழ்வு கயவு மூரி
பெருமை பாடும் அண்ணலும் அதற்கே
** 39 பெயர்கள் 20
#21
** பருமை
பரூஉம் பீனமும் பருமை ஆகும்
** 2 பெயர்கள் 31
#22
** சிறுமை
இறை அணு வஞ்சம் சிறிது சின்னம்
வறிது ஆசு என்ப சிறுமை பின்னம்
கன்று கணம் தனு இட்டிமை அற்பம்
தன்னமும் அதற்கே சாற்றப் பெறுமே
** 14 பெயர்கள் 22
#23
** சிறிது
கிலமே சிறிது ஆம்
** பெயர் 23
#24
** முழுவது
அகிலம் முழுவதும்
#25
** மற்றும் முழுவது
அகண்டம் சமத்தம் அடங்கல் யாவும்
முடிய அனைத்து எல்லாம் முற்றும் முழுவது ஆம்
அடைய என்பதும் அதன்பாற்று ஆகும்
** 10 பெயர்கள் 25
#26
** மிகுதி
அமலை உறு தவ நனி உருப்பு ஆற்றல்
கழிவு விதப்பு இறப்பு கதழ்வு கடுமை
பெருமை சிறப்பு ஆன்றல் மதர்வு பிறங்கல்
அதிகம் புதுமை கயவு பரம் பொற்பு
பொக்கம் பொம்மலொடு எழு மூன்று இரண்டும்
மிக்கோர் மிகுதி என விளம்பினரே
** 23 பெயர்கள் 26
#27
** உயர்ச்சி
உகப்பே துங்கம் உன்னதம் மோடே
நிவப்பே சேணே பிறங்கல் ஏந்தல்
ஓங்கல் நிமிர்தல் புரை பரி ஈர் ஆறும்
பாங்கின் நல்லோர் உயர்ச்சி ஆகப் பகர்வர்
** 12 பெயர்கள் 27
#28
** தூரம்
சேணும் நீளிடையும் சேய்த்தும் தூரம்
** 3 பெயர்கள் 28
#29
** விசாலம்
விசாலம் விபுலம் விரிவு இடம்பாடே
** 3 பெயர்கள் 29
#30
** பரப்பு
பாய்தலும் ஞெமிர்தலும் பப்பும் பரவையும்
பரவலும் தாவலும் அழுவமும் பரப்பே
** 7 பெயர்கள் 30
#31
** கூடல்
கூடல் குவிதல் பயினி சங்கம்
** 3 பெயர்கள் 31
#32
** நீளம்
வார்தல் போகல் சேண் வரி உறையே
நீக்கம் தீர்தல் நேர்பாடு ஒழுகல்
நெடுமை வடிதல் நெடில் இவை நீளம்
** 12 பெயர்கள் 32
#33
** செவ்வை
செவ்வனும் இருசும் செப்பமும் செம்மையும்
செவ்வை மற்று அதற்கு நேரும் செப்புப
** 5 பெயர்கள் 33
#34
** நுண்மை
நுவணை நொய்வு நுழை அயிர் நுணங்கு
சாயல் முளரி நுணுகு நுணுக்கம்
ஆய்தல் நிழற்றல் நொசிவு நுனி கூர்மை
ஆய ஈர் ஏழும் நுண்மை ஆகும்
** 14 பெயர்கள் 34
#35
** அகலம்
அகறல் பாழி ஆய்வு பரப்பு அகலுள்
கண்ணறை படர்தல் வியல்இடம் ஆன்றல்
பயன் நனவு விரிவு மேல் நளி என்று இவை
அகலம் என்பர் அறிந்திசினோரே
** 14 பெயர்கள் 35
#36
** சிறுகல்
அஃகலும் அருகலும் அவிதலும் குறைதலும்
சுருங்கலும் குன்றலும் சிறுகல் ஆகும்
** 6 பெயர்கள் 36
#37
** உள்ளது சிறத்தல்
கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறத்தல்
** 2 பெயர்கள் 37
#38
** மேன்மை
கயவு சாயல் சால்பு மேம்பாடு என்று
உயர்வில் நான்கும் மேன்மை ஆகும்
** 4 பெயர்கள் 38
#39
** செறிவு
விறப்பும் உறப்பும் வெறுப்பும் நளியும்
செற்றலும் பொதுளலும் ஞெமுங்கலும் இவர்தலும்
துற்றும் சடிலமும் செறிவு எனச் சொல்வர்
** 10 பெயர்கள் 39
#40
** மிடைதல்
துதைதலும் ததைதலும் மிடைதல் ஆகும்
** 2 பெயர்கள் 40
#41
** நிறைவு
மலிதல் பெருகல் மல்கல் ஆர்தல்
நெகிழ்தல் துவன்றல் கெழுமல் தெவுளல்
பழுதுஇல் நிறைவின்பால ஆகும்
** 8 பெயர்கள் 41
#42
** பாதி
பாலும் பயலும் அருத்தமும் கூறும்
பாகமும் பாதிப்பெயர் எனப் பகர்வர்
** 5 பெயர்கள் 42
#43
** பாரம்
சீரும் குருவும் கனமும் ஞாட்பும்
பாரப்பால பொறையும் அதற்கே
** 5 பெயர்கள் 43
#44
** மென்மை
மிருது சுகுமாரம் மென்மை மேன
** 2 பெயர்கள் 44
#45
** நொய்ம்மை
இலகும் நொவ்வும் இலேசும் நொய்ம்மை
** 3 பெயர்கள் 45
#46
** சலியா நிலை
துவம் சலியாநிலை துருவமும் சொல்ப
** 2 பெயர்கள் 46
#47
** அளவின்மை
அபாரம் அனந்தம் அபரிமிதம் அளவுஇன்மை
** 3 பெயர்கள் 47
#48
** ஐவகை வண்ணம்
செம்மையும் கருமையும் பொன்மையும் பசுமையும்
வெண்மையும் ஐவகை வண்ணத்தின் மேன
** 5 பெயர்கள் 48
#49
** சிவப்பு
அரக்கு செம்மை துப்பு துவர் சோணம்
அரத்தம் சேத்து பூவல் பாடலம்
சிந்துரம் அத்து படீரம் அருணம்
சேந்து செக்கர் குலிகம் சேப்பு என
வந்த பதினேழும் சிவப்பு என அறைவர்
** 17 பெயர்கள் 49
#50
** பொன் நிறம்
பீதம் பிங்கலம் புற்கு எனல் பொன்நிறம்
** 3 பெயர்கள் 50
#51
** புகர் நிறம்
கபிலம் குரால் நிறம் புகர் புற்கும் ஆமே
** 3 பெயர்கள் 51
#52
** வெண்மை
வால் பால் சுவேதம் தவளம் பாண்டு
நரை விளர் சுக்கிலம் குருகு வெண்மை
** 9 பெயர்கள் 52
#53
** பச்சை நிறம்
பாசும் பைம்மையும் சாமமும் பைத்தும்
பேசின் பசுமையும் சாமளமும் பச்சை
** 6 பெயர்கள் 53
#54
** கருமை
காளிமம் களங்கம் கார் களம் நீலம்
காளம் அஞ்சனம் கருள் கறை மாசொடு
காளகம் எனப் பதினொன்றும் கருமை
** 11 பெயர்கள் 54
#55
** மாசு
களங்கம் மலினம் கசடு கறை மாசே
** 4 பெயர்கள் 55
#56
** நிறத்தின் பொதுப் பெயர்
புகரே மேனி மாமை கேழ் வண்ணம்
குருவே கொழுமை கெழுவே சந்தம்
உரு எனப் பத்தும் நிறத்தின் பொதுப் பெயர்
** 10 பெயர்கள் 56
#57
** ஒளி
வில்லே வாள் வெயில் நிலவு கதிர் கிரணம்
எல்லே சேடி சுடர் கனல் கேழ் நகை
தாமம் விரியல் விளக்கம் நிழல் துளக்கம்
வாமம் நீமம் வளர் ஒளி ஆகும்
** 19 பெயர்கள் 57
#58
** ஒளி விடுதல்
அலங்கல் சுடர்தல் அவிர்தல் இமைத்தல்
வயங்கல் தயங்கல் ஒளிர்தல் நகுதல்
இலங்கல் ஒன்பதும் ஒளிவிடுதல் இசைக்கும்
** 9 பெயர்கள் 58
#59
** மிகச் சிவத்தல்
சேத்தலும் சேப்பும் மிகச் சிவத்தல் ஆகும்
** 2 பெயர்கள் 59
#60
** கட்டழகு
ஏர் வனப்பு எழில் யாணர் மாமை கேழ் தையல்
காரிகை தோட்டி கவினே விடங்கம்
வாமம் வகுப்பு ஒப்பு மஞ்சு பொற்பு
காமர் அணி இவை கட்டழகு ஆகும்
** 18 பெயர்கள் 60
#61
** அழகு
நவ்வி அந்தம் பை பூ பொலம் அற்புதம்
செவ்வி ஒண்மை மாண்பு ஐ சித்திரம் அழகே
** 11 பெயர்கள் 61
#62
** பேரழகு
விசித்திரம் பேரழகு
** 1 பெயர் 62
#63
** வடிவு
செண்ணம் வடிவே
** 1 பெயர் 63
#64
** வண்ணம்
வண்ணம் சந்தம்
** 1 பெயர் 64
#65
** வலி
மிடலே உம்பல் ஆற்றல் வீரம்
முடலை பீடு மள்ளல் மதுகை
வாய்மை மல்லல் தோற்றம் மதம் எறுழ்
மூரி முடுகல் முரண் வயம் பாழி
மைந்து திண்மை மீளி துப்பு ஊக்கம்
ஏணே நோன்மை முன்பு மொய்ம்பு வலம்
தாவு தானம் மானம் உரம் வலி
** 32 பெயர்கள் 65
#66
** மதர்த்தல்
மதர்வு மதர்த்தல்
** 1 பெயர் 66
#67
** நொய்து
நொய்வு நொய்து ஆதல்
** 1 பெயர் 67
#68
** குறைபாடு
குறையே நிரப்பே ஈனம் குறைபாடு
** 8 பெயர்கள் 68
#69
** எளிமை
எண்மையும் தஞ்சமும் தண்மையும் எளிமை
** 3 பெயர்கள் 69
#70
** புல்லறிவு
வெண்மையும் வெளிறும் தண்மையும் புல்லறிவு
#71
** மற்றும் புல்லறிவு
புல்லறிவிற்குப் புகல்ப சிற்றறிவும்
** 4 பெயர்கள் 71
#72
** இழிதகவு
இளிவே பரிபவம் இழிதகவு ஆகும்
** 2 பெயர்கள் 72
#73
** மானம்
மானம் பெருந்தன்மை குற்றப்பாடும் வரையார்
** 2 பெயர்கள் 73
#74
** வெப்பம்
அழலே உருப்பம் வெப்பம் ஆகும்
** 2 பெயர்கள் 74
#75
** குளிர்ச்சி
சீதளம் நளியே சீதம் தண் குளிர்ச்சி
** 4 பெயர்கள்
#76
** வீரம்
விறலே கொற்றம் வீரம் ஆகும்
** 2 பெயர்கள் 76
#77
** வெற்றி
வலனே கொற்றம் ஆடு வாகை
விசயம் புகல் என ஆறும் வெற்றி
** 6 பெயர்கள் 77
#78
** தோல்வி
தொலைவு நிலைஅழிவு தோற்றல் தோல்வி
** 3 பெயர்கள் 78
#79
** அளவு
தாறு கால் மாத்திரை வரை துணை நேரம்
காறு பரிமாணம் அவதி அளவு ஆகும்
** 9 பெயர்கள் 79
#80
** எல்லை
ஏணியும் வரைப்பும் வரம்பும் எல்லை
** 3 பெயர்கள்
#81
** வரையறை
அளவு நிறை எண் வரையறை ஆகும்
** 3 பெயர்கள் 81
#82
** அளவை
கச்சம் அளவை கடனும் ஆகும்
** 8 பெயர்கள் 82
#83
** கூறுபாடு
வகையும் திறனும் கூறுபாடு ஆகும்
** 2 பெயர்கள்
#84
** முதுக்குறைவு
தெட்பம் முதிர்ச்சி ஒட்பம் முதுக்குறைவே
**3 பெயர்கள் – 84
#85
** அறிவு
உரனே காட்சி உணர்வே ஒண்மை
புலனே ஞானம் அறிவு எனப் புகல்வர்
** 6 பெயர்கள்
#86
** கருத்து
எண்ணல் பேணல் ஏடல் சேத்து
கண்ணுதல் குறிப்பு விரும்பல் வினையே
உன்னம் மதமே இங்கிதம் சிந்தை
வன்மை மெய்ம்மை ஏமாப்பு உள்ளல்
கவிஞர் எண் இரண்டும் கருத்து எனக் கருதுவார்
** 16 பெயர்கள் 86
#87
** கருதல்
கண்ணல் நுதலல் புகறல் கருதல்
** 3 பெயர்கள் 87
#88
** நல் உணர்வு
ஞானமும் சீலமும் நல்லுணர்வு ஆகும்
** 2 பெயர்கள் 88
#89
** விருப்பு
மாதர் காதல் ஆதரவு ஆர்வம்
காமர் வெப்பம் பற்றே காமம்
வீழ்தல் வேட்கை தாழ்தல் வெஃகல்
நசையே நம்பு மேவு நயப்பு
பிணையே பேணல் பெட்பே பெட்டல்
இவறல் அவாவே இவர்தல் கவர்தல்
விழைவே விருப்பின் பொருள் கட்டுரையே
** 25 பெயர்கள் 89
#90
** அவா இன்மை
வெறுப்பு ஒல்லாமை வேண்டாமை முனைவொடு
உவர்ப்பு அறுத்திடல் மா உரைப்ப அவாஇன்மை
** 7 பெயர்கள் 90
#91
** அமையும் என்றல்
அலம் என் கிளவி அமையும் என்றல்
** 1 பெயர் 91
#92
** அன்பு
பரிவும் ஆர்வமும் ஈரமும் பற்றும்
அளியும் நாரும் புரிவும் அன்பே
** 7பெயர்கள் 92
#93
** எழுமையும் தொடர்ந்த அன்பு
உழுவல் எழுமையும் தொடர்ந்த அன்பு உரைக்கும்
** 1 பெயர் 93
#94
** இரக்கம்
அருளும் கருணையும் இரக்கம் ஆகும்
** 2 பெயர்கள் 94
#95
** மனம்
உன்னம் அகம் சித்தம் உள்ளம் இதயம்
முன்னம் நெஞ்சு மொழிப மனக்கே
** 7 பெயர்கள் 95
#96
** ஒரு தலைக் காமம்
கைக்கிளை ஒருதலைக்காமம் ஆகும்
** 1 பெயர் 96
#97
** வழுவுடைக் காமம்
பெருந்திணை வழுவுடைக்காமப்பெயரே
** 1 பெயர் 97
#98
** அன்புடைக் காமம்
ஐந்திணை உடையது அன்புடைக்காமம்
** 1 பெயர் 98
#99
** காமக் கவலை
மதனம் காமம் விரகம் காமக்கவலை
** 3 பெயர்கள் 99
#100
** ‘வேட்கைப் பெருக்கம்
வேணவா என்பது வேட்கைப்பெருக்கம்
** 1 பெயர் 100
#101
** தக்கது
தகவும் தகுதியும் தக்கது ஆகும்
** 2 பெயர் 101
#102
** மாட்சி
மாணே மாண்டல் மாட்சி ஆகும்
ஆன்றலும் சால்பும் நிறைவும் அமைதியும்
வாயத்தலும் செழுமையும் வளமும் வரையார்
** 9 பெயர்கள் 102
#103
** சனம்
சினம் மறம் முனிவு செயிர் கறுவு சீற்றம்
வெகுளி கதம் வைரம் வேரம் செற்றம்
** 10 பெயர்கள் 103
#104
** சினக் குறிப்பு
கறுப்பு சிவப்பு கஞறல் கன்றல்
வியர்ப்பு புழுங்கல் புகைதல் வெய்துறல்
சினத்தின் குறிப்பில் தெரிக்கும் கிளவி
** 8 பெயர்கள் 104
#105
** முன் கோபம்
கோம்பல் வெம்பல் கொந்தல் முன்கோபம்
கனிதலும் அதற்கே கழறல் ஆகும்
** 4 பெயர்கள் 105
#106
** பெருங் கோபம்
உருத்தல் சீறல் உலறல் முனைதல்
உடற்றல் காய்தல் விடைத்தல் தீவிரத்தொடு
தொடுத்த எட்டும் பெருத்தகோபம்
** 8 பெயர்கள் 106
#107
** வைரம்
செற்றம் சலம் பவம் தொந்தம் வேரம்
உற்ற வைரம் மொழியும் கிளவி
** 5 பெயர்கள் 107
#108
** அதிசயம்
வியப்பு இறும்பூது விம்மிதம் விபரீதம்
அச்சோ ஐந்தும் அதிசயம் ஆகும்
** 5 பெயர்கள் 108
#!09
** அதிசயம் உற இரங்குதல்
ஐயோ அந்தோ அன்னோ ஆ ஓ
என்னும் இவ் அதிசயம்உறஇரங்கற்கு உரிய
** 5 பெயர்கள் 109
#110
** கண்ணோட்டம்
நயப்புணர்வு நாகரிகம் கேண்மை கண்ணோட்டம்
** 3 பெயர்கள் 110
#111
** உள்ளக் களிப்பு
மதர்ப்பு பெருமிதம் பாடவம் மத்தம்
செருக்கு மதம் உள்ளக்களிப்பின் திறத்த
** 6 பெயர்கள் 111
#112
** கருதல்
சுட்டலும் குறித்தலும் கருதல் ஆகும்
** 2 பெயர்கள் 112
#113
** அழுக்காறு
அழுக்காறு மனச்சழுக்கம்
#114
** மற்றும் அழுக்காறு
கூரம் பொறாமை நோணாமையும் அழுக்காறு
** 2 பெயர்கள் 114
#115
** மனக் கோட்டம்
ஒளவியம் மனக்கோட்டம்
** 1 பெயர் 115
#116
** மறத்தல்
இழுக்கு சோர்வு பொச்சாப்பு இகழ்ச்சி
வழுக்கு மறல் மறவி மறத்தல் ஆகும்
** 7 பெயர்கள் 116
#117
** கொடுமை
கோரம் சண்டம் கடினம் கடுமை
கூரம் கொடுமை ஆகக் கூறுவர்
** 5 பெயர்கள் 117
#118
** உள்ள மிகுதி
ஊக்கமும் உரனும் உள்ளமிகுதி
** 2 பெயர்கள் 118
#119
** இறுமாப்பு
இறுமாப்பு ஏக்கழுத்தம்
** 1 பெயர் 119
#120
** அகமலர்ச்சி
செம்மாப்பு அகமலர்ச்சி
** 1 பெயர் 120
#121
** பேர் அறிவின் முதிர்ச்சி
முதுக்குறைவு பேரறிவின்முதிர்ச்சி ஆகும்
** 1 பெயர் 121
#122
** கொடுங்கோன்மை
கோணே கொடுங்கோன்மை
** 1 பெயர்
#123
** நிலையுடைமை
ஏணே நிலையுடைமை
** 1 பெயர் 123
#124
** நாணம்
மானமும் வெள்கலும் வட்கலும் சமழ்ப்பும்
நாணம் உணர்த்தும் நடைய ஆகும்
** 4 பெயர்கள் 124
#125
** மதித்தல்
பேணலும் கருதலும் மதித்தல் ஆகும்
** 2 பெயர்கள்
#126
** தீது
ஊறும் கோளும் தீது ஆகும்மே
#127
** மற்றுத் தீது
அந்தராயம் தீங்கு அலாபம் முட்டுப்பாடு
அந்தரம் விக்கினம் தட்டும் தீது ஆம்
** 9 பெயர்கள்
#128
** இன்பம்
நயனும் மகிழ்வும் நகையும் இன்பம்
#129
** மற்றும் இன்பம்
ஏமமும் அதற்கே இயம்பும் கிளவி
** 4 பெயர்கள் 129
#130
** தளர்வு
ஏட்டை தளர்வே
#131
** மற்றும் தளர்ச்சி
அசா என் கிளவியும் தளர்ச்சிக்கு அறைப
** 2 பெயர்கள் 131
#132
** குறிப்பு
நாட்டியம் குறிப்பே
** 1 பெயர் 132
#133
** சுழற்சி
அலமரல் கொட்பு கறங்கு சுழல்வு
தெருமரல் சுழற்சி ஆம் எனச் செப்புவர்
** 5 பெயர்கள் 133
#134
** இரங்கல்
இனைதல் எற்றித்தல் இரங்கல் ஆகும்
** 3 பெயர்கள் 134
#135
** ஐயம்
கொல்லே மானுதல் அனுமானம் ஆசங்கை
ஐயம் என்பர் அறிந்திசினோரே
** 4 பெயர்கள் 135
#136
** இகழ்ச்சி
எள்ளல் நகை இகழ்வு உவர்ப்பு ஒல்லாமை இகழ்ச்சி
** 5 பெயர்கள் 136
#137
** நன்மை
மண்ணல் மணி சீர் யாணர் மாசறல்
நன்னர் நறுமை உறுதி நயம் என்று
இன்னவை நன்மைக்கு எய்தும் பெயரே
** 9 பெயர்கள் 137
#138
** அக மகழ்ச்சி
ஆனந்தம் இன்பம் அகமகிழ்ச்சி ஆகும்
#139
** மற்றும் அக மகழ்ச்சி
தொய்யலும் கட்டியும் அப் பெயர் சிவணும்
** 8 பெயர்கள் 139
#140
** உவகை
ஓகை மாராயம் உவகை ஆகும்
** 2 பெயர்கள் 140
#141
** நிச்சயம்
தீர்க்கமும் தரிப்பும் தேறும் நிச்சயம்
மன்ற என் கிளவியும் வகுப்ப அதற்கே
** 4 பெயர்கள் 141
#142
** ஆக்கம்
நந்தல் ஆக்கம்
** 1 பெயர் 142
#143
** பெயர்
நாமம் அபிதானம் நாட்டும் பெயரே
** 2 பெயர்கள் 143
#144
** அறியாமை
எய்யாமை அறியாமை ஆகும் என்ப
#145
** மற்றும் அறியாமை
மருட்சி மடம் பேதைமை மற்றும் அறியாமை
** 4 பெயர்கள் 145
#146
** அறிவின் திரிவு
துயவு என் கிளவி அறிவின் திரிவே
** 1 பெயர் 146
#147
** அறிமடம்
பெருஞ் சேந்தன் அம்பல் பெருமான் போல
தெரிந்து பிறர் அறிவின் சோர்வு புறம் மறைத்து
அறிந்தும் அறியார் போறல் அறிமடம்
** 1 பெயர் 147
#148
** மறவாக் கடன்
கடைப்பிடி கொண்டது மறவாக்கடனே
** 1 பெயர் 148
#149
** நோய்
மடங்கல் நீழல் மடி அஞர் அழுங்கல்
முடங்கு குத்து பிணி பையுள் சூர் நோய்
** 10 பெயர்கள் 149
#150
** நரக நோய்
நரகநோய் யாதநை
** 1 பெயர் 150
#151
** வேதனை பண்ணும் நோய்
வாதை பீதி வேதனைபண்ணும்நோய்
** 2 பெயர்கள்
#152
** உன்மத்தம்
மான்றல் மாழ்கல் கழுமல் களி மறல்
மால் மாழாத்தல் மையல் மைந்து உணராமை
மருள் மயல் மயக்கம் அனந்தர் இளைமை
இருள் மயர்வு ஏமம் பித்து உன்மத்தம் ஆகும்
** 19 பெயர்கள் 152
#153
** தெளிவு
நனவு உணர்வு தேற்றம் துணிவு தெளிவு ஆகும்
** 4 பெயர்கள் 153
#154
** பொறாமை
நோனாமை பொறாமை ஆம் என நுவல்வர்
** 1 பெயர் 154
#155
** நீங்காமை
ஆனாமை தண்டாமை ஆயிரண்டும் நீங்காமை
** 2 பெயர்கள் 155
#156
** பொறை
நோன்மை நோன்றல் பொறை என நுவல்வர்
#157
** மற்றும் பொறை
கமித்தலும் ஆற்றலும் சகித்தலும் ஓர்ப்பும்
மற்று அப் பொறையை வகுக்கும் கிளவி
** 6 பெயர்கள் 157
#158
** வறுமை
அல்கல் ஒற்கம் இலம்பாடு இன்மை
நல்குரவு வறுமை ஆம் என நவில்வர்
#159
** மற்றும் வறுமை
குறைவு மிச்சை குறவாழ்க்கை அஃகல்
சிறுமை மிடி வறுமை நிரப்பும் செப்புப
** 12 பெயர்கள் 159
#160
** தனிமை
புலம்பே தனிமை
#161
** மற்றும் தனிமை
கேவலத்தோடு ஏகம் களத்துப தனிமை
** 3 பெயர்கள் 161
#162
** பொலிவு
துப்பு கலித்தல் பம்பல் துவன்றல்
பொற்பு கஞறல் உவப்பே அமரல்
அதிகம் மங்கலம் மலர்ச்சி என்று இவை
பொலிவின் பெயர் எனப் புகன்றனர் புலவர்
** 11 பெயர்கள் 162
#163
** பொலிவு அழிதல்
புல்எனல் மழுங்கல் பொலிவுஅழிதல் ஆகும்
** 2 பெயர்கள் 165
#164
** வருத்தம்
உயவே அனுக்கம் கவறல் உயங்கல்
அயர்வே ஆகுலம் அணங்கு கசிவே
வயாவு என்று இன்னவை வருத்தம் ஆகும்
** 9 பெயர்கள் 164
#165
** சோம்பல்
ஆஞ்சி அழுங்கல் அலைசல் மாழ்கல்
அஞர்தல் ஞொள்கல் அஞ்சல் ஆழ்தல்
தூங்கல் அசைதல் மடி சோம்பல் ஆகும்
#166
** மற்றும் சோம்பல்
மூரி மந்தமும் மொழிப சோம்பல்
** 13 பெயர்கள் 166
#167
** ஒண்மை
நன்மையும் மிகுதியும் அறிவும் ஒழுங்கும்
ஒண்மை என்னும் சொல்லிற்கு உரிய
** 4 பெயர்கள் 167
#168
** நயன்
பயனும் மகிழ்வும் இன்பமும் நன்கும்
நயன் என் கிளவி நடைபெற்று இயலும்
** 4 பெயர்கள் 168
#169
** அச்சம்
அதிர்ப்பு கம்பலை வெருவு அஞர் அழுங்கல்
பொதிர்ப்பு துணுக்கம் இரிதல் கூசுதல்
வெடிப்பு துளக்கம் கரிப்பே தெருமரல்
விதிர்ப்பு பனித்தல் அலமரல் வெம்மை
வெறி புலம்பு பீதி கவலை சூர் பிறக்கம்
நடுக்கம் இடும்பை மிறையே உலைதல் என்று
அடுத்தன எல்லாம் அச்சம் ஆகும்
#170
** மற்றும் அச்சம்
பேஎ நாம் உரும் என வரூஉம் கிளவி
ஆம் முறை மூன்றும் அச்சப் பொருள
** 30 பெயர்கள் 7170
#171
** அச்சக் குறிப்பு
திட்கல் ஓடல் தேங்கல் ஞெரேலெனல்
நுட்கல் உலமரல் துடுக்கெனல் வெய்துறல்
அளுக்கல் ஞொள்கல் அச்சக்குறிப்பு ஆம்
குலைதலொடு துண்ணெனல் கூறுப அதற்கே
** 12 பெயர்கள் 171
#172
** கூம்புதல்
சாம்புதல் ஒடுக்கம் கூம்புதல் ஆகும்
** 2 பெயர்கள்
#173
** மெலிவு
தேம்புதல் ஞொள்கல் சிக்கம் முசிப்பு என்று
ஆம் புகல் நான்கும் மெலிவு என இசைப்பர்
** 6 பெயர்கள்
#174
** மற்றும் மெலிவு
பழங்கணும் புன்கணும் மெலிவின் பால
#175
** துன்பம்
இன்னல் அழுங்கல் வருத்தம் பிணி இடுக்கண்
அல்லல் நோய் இன்னா அரந்தை இடும்பை
படர் துனி துக்கம் அஞர் புலம்பு எவ்வம்
நடலை கம்பலை செல்லல் பாசறை
பையுள் சூர் துயர் பைதல் இரக்கம்
சிறுமை விழுமம் கவலை பீழை
வறுமை பருவரல் புன்கண் நோ ஆகுலம்
உறுவல் கவ்வை பனி வெய்துறல் மம்மர்
உறுகண் அலத்தல் துன்பம் என்று உரைப்பர்
#176
** மற்றும் துன்பம்
இடர் கோட்டாலை ஏதம் கேதம்
அலக்கண் பீடையோடு அல்லகண்டமும்
துன்பப் பொருளைச் சொல்லும் கிளவி
** 48 பெயர்கள் 176
#177
** குற்றம்
காசு நவை தவறு கசடு வசை வடு
மாசு மானம் அரில் செயிர் புகர் பழுது
ஏதம் ஆசு போக்கு புரை பழி
கோது தோம் இழிவு குற்றம் ஆகும்
மிறை அரிப்பு ஏசு இவை மூன்றும் வரையார்
#178
** மற்றும் குற்றம்
அழிப்பு குறை கழிப்பு கொழிப்பும் அதற்கு ஆம்
** 27 பெயர்கள் 178
#179
** அருவருப்பு
பயிர்ப்பு குற்சிதம் அருவருப்பு ஆகும்
** 2 பெயர்கள் 179
#180
** பகை
முனை உறழ்வு துப்பு முரண் படி தெவ்வோடு
இகல் பகை ஆகும் என்றிசினோரே
** 7 பெயர்கள்
#181
** வஞ்சனை
கூடம் புள்ளுவம் குடிலம் குத்திரம்
கைதவம் மாயம் பட்டிமை வஞ்சனை
#182
** மற்றும் வஞ்சனை
படிறு குய்யம் பகர்வ வஞ்சனை
சாட்டியப் பெயரும் சாற்றப் பெறுமே
** 10 பெயர்கள்
#183
** நட்பு
கேண்மையும் தொடர்பும் கேளும் நட்பே
** 3 பெயர்கள்
#184
** ஒழுக்கம்
கையே ஒழுக்கம்
** 1 பெயர் 184
#185
** ஒழுக்காறு
கையாறு ஒழுகலாறு
** 1 பெயர் 185
#186
** செயல் இன்மை
கையறல் செயல்இன்மை
** 1 பெயர் 186
#187
** அடைக்கலம்
கையடை அடைக்கலம்
** 1 பெயர் 187
#188
** கையொழியாமை
கைதூவாமை கையொழியாமை
** 1 பெயர் 188
#189
** மேற்கோள்
பூட்கைக் கிளவி மேற்கோள் ஆகும்
** 1 பெயர்
#190
** பழமை
தொன்மை தொடர்பு தொத்து தொண்டு
முறையே முன்பு தொன்று பூருவம்
தொல்லை மூரி விருத்தம் மூது
முந்து புராதனம் புராணம் முதுமை என
வந்தவை பழைமை ஆம் என வைப்பர்
** 16 பெயர்கள்
#191
** புதுமை
புத்தேள் யாணர் புனை புணர் விருந்து
நூதனம் வம்பு கடி நவம் புதுமை
** 9 பெயர்கள்
#192
** ஈன்றணிமை
புனிறு ஈன்றணிமை
** 1 பெயர்
#193
** நிலையின்மை
நிலையின்மை வம்பே
**1 பெயர்
#194
** பிறப்பு
சூதகம் பிறந்தை பயம் சனிப்பு சனனம்
ஒதிய தோற்றம் யோனி பவம் பிறப்பே
#195
** மற்றும் பிறப்பு
சன்மமும் உற்பத்தியும் சாற்றுப அதற்கே
** 10 பெயர்கள்
#196
** கழி பிறப்பின் பெயர்
உம்மை கழிபிறப்பே
** 1 பெயர்
#197
** இப் பிறப்பு
இம்மை இப் பிறப்பே
** 1 பெயர்
#198
** வரு பிறப்பு
அம்மையும் மறுமையும் வருபிறப்பு ஆகும்
** 2 பெயர்கள்
#199
** ஒரு பிறப்பு
ஒருபிறப்பு ஒருமை
** 1 பெயர்
#200
** எப் பிறப்பு
எப்பிறப்பு எம்மை
** 1 பெயர்
#201
** எழு பிறப்பு
எழுபிறப்பு ஏழ்பவம்
#202
** பின்
வழி பின் ஆகும்
**1 பெயர்
#203
** முறைமை
மரபு பாரம்பரியம் முறைமை
** 2 பெயர்கள்
#204
** இளைமை
மழவு நவ்வி சேய் போதகம் மஞ்சு
குழவு குருளை கயம் இளை புருவை
முருகே தருணம் பீழே பருவம்
சேடு கொம்மை என ஈர் எட்டும்
நாடில் இளைமைப் பெயர் என நவில்வர்
#205
** மற்றும் இளைமை
வெண்மையும் நாகும் விளம்புவ இளைமை
** 18 பெயர்கள் 205
#206
** இளைமைச் செவ்வி
கோமளம் இளைமைச்செவ்வியைக் கூறும்
** 1 பெயர் 206
#207
** காரணம்
நிபமும் பொருட்டும் ஏதுவும் நிமித்தமும்
திறனும் வாயிலும் காரணம் தெரி சொல்
** 6 பெயர்கள் 207
#208
** பற்றுக் கோடு
கந்தும் ஆலம்பனமும் பற்றுக்கோடே
#209
** மற்றும் பற்றுக்கோடு
தஞ்சம் தூ ஊற்றமும் சாற்றுப அதற்கே
** 5 பெயர்கள் 209
#210
** உரிமை
பாங்கு பால் கிழமை தாயம் ஆட்சி
ஈங்கு இவை ஐந்தும் உரிமை ஆகும்
#211
** மற்றும் உரிமை
காணி கெழுதகைமையும் கழறுப உரிமை
** 7 பெயர்கள் 211
#212
** இலாபம்
ஊதியம் பசை பயன் பலித்தல் ஆக்கம் என்று
ஓதிய ஐந்தும் இலாபம் ஆகும்
#213
** மற்றும் இலாபம்
பேறும் அதிகமும் பேசுப இலாபம்
** 7 பெயர்கள் 213
#214
** மகளிர் கையுறாப் பொருட்டு
பூப்பு மகளிர்கையுறாப்பொருட்டே
** 1 பெயர் 214
#215
** அசுத்தம்
தூய்தன்மை வாலாமை சூதகம் அசுத்தம்
** 3 பெயர்கள் 215
#216
** அழுக்கு இன்மை
அமலமும் விமலமும் அழுக்குஇன்மை ஆகும்
** 2 பெயர்கள் 216
#217
** தூய்மை
புனிதம் பவித்திரம் தூய்மை ஆகும்
#218
** மற்றும் தரய்மை
துப்பு தூ பாவனம் வாலும் தூய்மை
** 6 பெயர்கள் 218
#219
** தருமம்
சீலம் அருள் மங்கலம் சுபமே சுகிர்தம் என
நாலும் ஒன்றும் தருமம் ஆகும்
** 5 பெயர்கள்
#220
** அறிவு
சேதனம் அறிவே
** 1 பெயர்
#221
** அறிவின்மை
அசேதனம் அறிவின்மை
** 1 பெயர்
#222
** மேல்
ஆணே தலைமை தலை மேல் ஆகும்
** 3 பெயர்கள்
#223
** அழிவு இன்மை
குமரி கன்னி கோணை அழிவுஇன்மை
** 3 பெயர்கள்
#224
** எண்
கரணம் கணிதம் கணக்கு அலகு எண் ஆம்
** 4 பெயர்கள்
#225
** நானாவிதம்
பரியாயம் பன்முறை பல்விதம் நானாவிதம்
** 3 பெயர்கள்
#226
** முதல்
ஆதியும் மோனையும் தொடக்கமும் முதல் ஆம்
** 3 பெயர்கள்
#227
** நடு
இடையே சமன் பகல் நாப்பண் மத்திமம்
நள்ளே நடு என்று ஓதினர் நயந்தோர்
** 6 பெயர்கள்
#228
** ஈற்றின் பெயர்
அந்தம் தீர்தல் முடிவே இறுதி என
வந்த நான்கும் ஈற்றின் பால
** 4 பெயர்கள்
#229
** அனுபவம்
துவ்வே துப்புரவு அனுபவம் ஆகும்
** 6 பெயர்கள்
#230
** வன்மை
கொழுமை யாணர் மல்லல் வண்மை
செழுமை வாய்ப்பு வளமை ஆகும்
** 6 பெயர்கள்
#231
** செழுமை
செழுமை செழித்தல்
** 1 பெயர்
#232
** கொழுமை
கொழுமை கொழுப்பே
** 1 பெயர்
#233 வேறுபாடு
விகிர்தமும் விகடமும் வேறுபடல் பொருட்டே
** 2 பெயர்கள்
#234
** குணம் இன்மை
சீரணம் சிதம்பு சீத்தை குணம்இன்மை
** 3 பெயர்கள் 234
#235
** தாமதம்
விளம்பனம் தாமதம் விளம்பும் கிளவி
** 1 பெயர் 235
#236
** கேடு
இழிவு நந்தல் இறுதல் திரிதல்
வழு அழுங்கல் முறிதல் மடி கயம் கேடே
சுதமும் கந்தலும் சொல்ப அதற்கே
** 11 பெயர்கள் 236
#237
** பாவம் என்னும் பெயர்
பாவமும் மறமும் பாவையும் செடியும்
அகமும் ஒரு பொருள் கிளவி ஆகும்
** 4 பெயர்கள் 237
#238
** உறவு
உறவி உறவே
**1 பெயர் 238
#239
** துறவு
துறவி துறவே
** 1 பெயர் 239
#240
** செல்வம்
வெறுக்கை மா பொறி சீர் விபவம் செல்வம்
#241
** மற்றும் செல்வம்
விருத்தி ஆக்கம் திரு மாடு இடம் வாழ்க்கை
பெருக்கமும் செல்வப்பெயர் எனப் பேசுப
** 12 பெயர்கள் 241
#242
** மணப் பொது
கமழ்தல் கந்தித்தல் நாறுதல் மணப்பொது
** 3 பெயர்கள் 242
#243
** நறுநாற்றம்
மணமே வசந்தம் முருகு மன்றல்
வாசம் விரையே கந்தம் வதுவை
நானம் தேம் வெறி ஆமோதம்மே
கடியே வம்பு கானம் பரிமளம்
நறை நறுநாற்றம் ஆகும் என்ப
** 17 பெயர்கள் 243
#244
** துர்க்கந்தம்
பூதி துர்க்கந்தம் ஆகப் புகல்வர்
**1 பெயர் 244
#245
** இனிமை
சுவையே சாரம் இரதம் இனிமை
#246
** மற்றும் இனிமை
சேறு அமுது தீமொடு தேமும் இனிமை
** 7 பெயர்கள் 246
#247
** தித்திப்பு
தீமூம் மதுரமும் தேமும் தேக்கும்
ஆய நான்கும் தித்திப்பு ஆகும்
** 4 பெயர்கள் 247
#248
** காழ்த்தல்
காயமும் கரிலும் கடுகமும் காழ்த்தல்
** 3 பெயர்கள் 248
#249
** கைத்தல்
கைத்தல் தித்தம்
** 1 பெயர் 249
#250
** புளித்தல்
புளித்தல் ஆமிலம்
** 1 பெயர் 250
#251
** ஒரு பலம்
ஒருபலப்பெயர் தொடி
** 1 பெயர்
#252
** கால் பலம்
கஃசு கால்பலம்
** 1 பெயர் 252
** நூறு பலம்
தூக்கும் காவும் துலாமும் நூற்று நிறை
** 3 பெயர்கள் 253
#254
** ஒன்று
ஒன்று ஏகம்மே
** 1 பெயர் 254
#255
** பத்து
தசம் பத்து ஆகும்
** 1 பெயர்
#256
** நூறு
நூறு சதமே
** 1 பெயர்
#257
** ஆயிரம்
நூறுபத்து ஆயிரம்
** 1 பெயர் 257
#258
** பல் குணம்
மாலை பெற்றி தன்மை மரபு
பால் ஊழ் பான்மை பண்பு முறை உழுவல்
தகவு தகை இயல்பு குணம் நுனித்தல் உரிமை
நிலைமை நீர்மை பரிசு கிழமை
விதி அதிகாரம் ஒரு பொருள் ஆகும்
** 21 பெயர்கள்
#259
** குணம் முழுது
ஊழ் என் கிளவி குணம்முழுது ஆகும்
** 1 பெயர் 259
#260
** பண்பு
பண்பு நிறனும் குணனும் ஆகும்
** 2 பெயர்கள் 260
#261
** கொள்கை
குணனும் அறிவும் கொள்கை ஆகும்
** 2 பெயர்கள் 261
#262
** தகை
தகையே இயல்பும் அழகும் ஆகும்
** 2 பெயர்கள் 262
#263
** உவமம்
சேத்து பொரு உறழ்வு போல் புரை கடுப்ப
ஒப்பு துணை இணை மான நிகர் நேர்
ஏய உவமம் என்ன உரைப்பர்
** 13 பெயர்கள் 263
#264
** உவமத்து இயல்பு
வினைஉவமம் பயன்உவமம் மெய்உவமம் உருஉவமம்
என நான்கு வகைத்தே உவமத்து இயல்பே
** 4 பெயர்கள் 264
#265
** உவமம்
உவமம் ஒன்றோடு ஒன்றை ஒப்புறுத்தல்
#266
மறக் குறும்பு ஓட்டி அறத்தின் வழி நின்று
கவிகைத் தண்ணளி புவி பெற ஆணையின்
ஐம்புலன் ஆளும் அம்பல் கோமான்
திண் பெரும் சேந்தன் திவாகரத்து
** எட்டாவது பண்பு பற்றிய பெயர்த் தொகுதி முற்றிற்று
@9 செயல் பற்றிய பெயர்த் தொகுதி
#1
** செயல்
கருமமும் செயலும் தருமமும் தொழிலும்
வினையும் ஒரு பொருள் விதியும் ஆகும்
** 5 பெயர்கள் 1
#2
** தொழில் பயில்வு
தொறு என் கிளவி தொழில் பயில்வு ஆகும்
** 1 பெயர் 2
#3
** செய்தல்
அயர்தல் குயிற்றல் ஆற்றல் இழைத்தல்
வனைதல் செய்தல் மாற்றம் ஆகும்
** 5 பெயர்கள்3
#4
** மகளிர் விளையாட்டு
ஓரை பண்ணை கெடவரல் பொய்தல்
உண்டாட்டு கிரீடை உப்பு கேளி
வண்டல் தொடலை மகளிர் விளையாட்டு
விலாசனை என்பதும் அவர் விளையாட்டே
** 11 பெயர்கள்
#5
** பிறப்பித்தல்
நியமித்தல் விதித்தல் நிருமித்தல் சிட்டித்தல்
படைத்தல் பிறப்பித்தல் பாரித்தலும் ஆம்
** 6 பெயர்கள் 5
#6
** கொண்டாடல்
பாராட்டல் மெச்சல் பரிந்து கொண்டாடல்
** 2 பெயர்கள் 6
#7
** பொழுது கழித்து விளையாடல்
விநோதம் பொழுதுகழித்துவிளையாடல்
** 1 பெயர் 7
#8
** புது மணம்
வதுவை கடியே மன்றல் இ முன்றும்
புதுமணப் பெயர் எனப் புகல்வர் புலவர்
** 3 பெயர்கள் 8
#9
** கைப் பற்றல் திருமணம்
கடியும் தீவேள்வியும் கைப்பற்றல் ஆகும்
#10
** மற்றும் கைப்பற்றல்
விதியுளி வேட்டல் மணம் கல்யாணம்
தீ வலம் செய்தலும் செப்பற்பால
** 7 பெயர்கள் 10
#11
** விழா
முருகும் சாறும் சேறும் விழாவே
உயர் துணங்கறலும் உற்சவமும் ஆகும்
** 5 பெயர்கள் 11
#12
** ஒப்பனை
மண்ணல் கைசெய்தல் பொற்பு அலங்கரித்தல்
புனைதல் மிலைதல் வேய்தல் அணிதல்
வனைதல் ஒப்பனை மாற்றம் ஆகும்
** 9 பெயர்கள் 12
#13
** சூடுதல்
மிலைதலும் மலைதலும் வேய்தலும் சூடுதல்
** 3 பெயர்கள் 13
#14
** சொருகுதல்
அடைச்சல் செருகுதல் ஆம் சொருகுதற்கே
** 2 பெயர்கள் 14
#15
** அடிசில் உண் தொழில்
அயிறலும் மிசைதலும் அடிசில் உண்தொழில்
பகரில் கைதொட்டலும் பாரணமும் ஆகும்
** 4 பெயர்கள் 15
#16
** உண்ணும் பண்பின் தொழில்
துய்த்தல் அருந்தல் ஆர்தல் துவ்வுதல்
துற்றல் நுகர்தல் மாந்தல் அயிறல்
உண்டல் தின்றல் பருகுதல் இவை உணும்
பண்பின் தொழிலைப் பகரும் கிளவி
** 11 பெயர்கள் 16
#17
** நுகர்தல்
நுங்கல் விழுங்கல் நொண்டல் நுகர்தல்
** 3 பெயர்கள் 17
#18
** துயிறல்
கண்படை கண்வளர்தல் கனவோடு அனந்தர்
துஞ்சல் பள்ளி துயிறல் ஆகும்
#19
** மற்றும் துயிறல்
உறங்கலும் படையும் உரைப்பர் அதற்கே
** 8 பெயர்கள் 19
#20
** நிரம்பாத் தூக்கம்
தூங்கல் நிரம்பாத்தூக்கம் என்ப
** 1 பெயர் 20
#21
** களவு
கரப்பு கட்டல் கள்ளல் கரவு
கரவடத்தோடு பட்டிமை களவே
#22
** மற்றும் களவு
தேயம் தேநு செளரியம் சோரம்
பட்டி திருட்டு படிறு மற்று அதுவே
** 13 பெயர்கள் 22
#23
# சித்து
சம்பிரதம் சித்தின் பெயர் மேற்றே
** 1 பெயர்
#24
** ஏறுதல்
எஃகலும் எக்கலும் இவர்தலும் ஏறுதல்
** 3 பெயர்கள் 24
#25
** முறித்தல்
ஒசித்தல் கோடல் ஒடித்தல் அகைத்தல்
ஞெமிர்த்தல் இறுத்தல் முறித்தல் ஆகும்
#26
** மற்றும் முறித்தல்
இசித்தல் என்றும் இயம்பற்பாற்றே
** 7 பெயர்கள் 26
#27
** வெறுப்பு
ஒறுத்தலும் செறுத்தலும் வெறுப்பின் மேன
** 2 பெயர்கள் 27
#28
** ஓய்தல்
ஒசிதலும் தளர்தலும் ஓய்தலை உரைக்கும்
** 2 பெயர்கள் 28
#29
** தாழ்தல்
இறைஞ்சல் குரங்கல் தாழ்தல் ஆகும்
** 2 பெயர்கள் 29
#30
** துவளல்
திவளல் திவண்டல் துவண்டல் துவளல்
** 3 பெயர்கள் 30
#31
** அழுதல்
கலுழே கலக்கம் கசிதல் அழுதல்
#32
** மற்றும் அழுதல்
விம்மல் பொருமல் ஏங்கல் உரோதனம்
இரங்கல் என்றும் இசைக்கற்பாற்றே
** 8 பெயர்கள் 32
#33
** ஊடல் முதிர்வு
ஊடலின் முதிர்தல் புலவி ஆகும்
** 1 பெயர் 33
#34
** புலவி நீடுதல்
அதனின் நீடுதல் துனி எனப்படுமே
** 1 பெயர் 34
#35
** முடிவு இடம்
ஒல்லும் சிரலும் முடிவு இடன் உரைக்கும்
** 2 பெயர்கள் 35
#36
** கடத்தல்
இகத்தல் உகளுதல் தாவுதல் வாவுதல்
குவித்தல் அகறல் குப்புறல் நீடுதல்
தத்தல் என ஒன்பதும் தாண்டலும் கடத்தல்
#37
** மற்றும் கடத்தல்
பரிகரி சேறல் பாறுதல் ஓவல்
மீளலும் அதற்கே விளம்பலாகும்
** 15 பெயர்கள் 37
#38
** போகல்
படர்தல் தீர்தல் பிரிதல் சேறல்
இயங்கல் விடுதல் வழங்கல் நீங்கல்
இறத்தல் தணத்தல் இகத்தல் ஏகல்
கடத்தல் பெயர்தல் செலவு என இவற்றொடு
நடத்தல் ஈர் எட்டும் போகல் ஆகும்
#39
** மற்றும் போகல்
இல்லல் ஒதுக்கம் கழிதல் இவறல்
சொல்லிய நான்கும் தொடரும் மற்று அதற்கே
** 20 பெயர்கள் 39
#40
** விரைவு
கதழ்வும் வல்லையும் ஒல்லையும் கடுகலும்
துனைவும் நொறிலும் தவறலும் முடுகலும்
விரைவின் கிளவி வேகமும் ஆகும்
#40
** மற்றும் விரைவு
கவனம் தாரை சடிதி சீக்கிரம்
ஈண்டு விதுப்பு விசையும் அதுவே
** 16 பெயர்கள்
#41
** விரைவுக் குறிப்பு
ஞெள்ளல் சண்டம் குத்திரம் வெம்மை
பொள்ளே கோரம் என இரு மூன்றொடும்
ஐஎனல் கதும்எனல் நொய்துஎனல் பொருக்குஎனல்
வெய்துஎனல் இன்னவும் விரைவுக்குறிப்பே
** 11 பெயர்கள்
#42
** கடுப்பு
கதனம் துரிதம் கவனம் கடுப்பே
** 3 பெயர்கள் 43
#44
** திருகல்
திருகல் முறுகல் கஞறல் கன்றல்
** 3 பெயர்கள் 44
#45
** நெருங்குதல்
நிமிர்தல் மிடைதல் நெருங்குதல் ஆகும்
** 2 பெயர்கள் 45
#46
** திரிதரல்
உழிதரல் கொட்பு திரிதரல் ஆகும்
** 2 பெயர்கள் 46
#47
** நீர்ச் சுழி
உந்தியும் சுரியலும் நீர்ச்சுழி ஆகும்
** 2 பெயர்கள் 47
#48
** மீளுதல்
மறிதரல் என்பது மீளுதல் ஆகும்
** 1 பெயர் 48
#49
** கொடு போதல்
போதரல் கொடுபோதல்
**1 பெயர் 49
#50
** உலாப் போதல்
பவனி உலாப்போதல்
** 1 பெயர் 50
#51
** ஓடல்
நெரிதரல் பாறல் இரிதல் ஓடல்
#52
** மற்றும் ஒடல்
நிமிர்தல் நீளுதல் நிகழ்த்துப அதற்கே
** 5 பெயர்கள் 52
#53
** பிறகிடல்
பின்றலும் பிறக்கிடலும் பிறகிடல் ஆகும்
** 2 பெயர்கள் 53
#54
** உராய்ப் போதல்
உராய்ப்போதல் உரோஞ்சல் உரிஞ்சல்
** 2 பெயர்கள் 54
#55
** வழிப்படுத்தல்
ஆற்றுப்படையே வழிப்படுத்தல் ஆகும்
** 1 பெயர் 55
#56
** வழி அழித்தல்
ஆற்றறுத்தலே வழிஅழித்தல் ஆகும்
** 1 பெயர் 56
#57
** பாய்தல்
குப்புறல் உகளுதல் குதித்தல் பாய்தல்
#58
** மற்றும் பாய்தல்
உறுக்கலும் மிதித்தலும் உரைப்பர் அதற்கே
** 5 பெயர்கள் 58
#59
** மண்டிலமா ஓடல்
மாதியும் சுற்றும் சாரிகை தன்னொடு
வாளியும் மண்டிலமாஓடல் ஆகும்
** 4 பெயர்கள் 59
#60
** நேர் ஓடல்
ஆதியும் வீதியும் நேர்ஓடல் ஆகும்
** 2 பெயர்கள் 60
#61
** செலுத்தல்
செலுத்தல் கடத்தல் துரத்தல் தூண்டல்
உகைத்தல் ஊர்தல் உய்த்தல் ஒரு பொருள்
#62
** மற்றும் செலுத்தல்
நடவல் எய்தல் ஒட்டலும் அதுவே
** 9 பெயர்கள் 62
#63
** அணுகுதல்
நண்ணல் நேர்தல் நணுகல் குறுகல்
துன்னல் சார்தல் அண்ணல் அணுகுதல்
#64
** மற்றும் அணுகுதல்
மருவுதல் புல்லல் அருகுறல் சிவணல்
அப் பெயர்க்கு உரிய என்று அறைந்தனர் புலவர்
** 11 பெயர்கள் 64
#65
** கூடுதல்
மணத்தல் கூடுதல்
** 1 பெயர் 65
#66
** பிரிதல்
தணத்தல் பிரிதல்
** 1 பெயர் 66
#67
** நீங்குதல்
நீத்தலும் துறத்தலும் ஒருவலும் நீங்குதல்
** 3 பெயர்கள் 67
#68
** தங்கல்
அசைதல் தெவுட்டல் ஆர்தல் இறுத்தல்
வதிதல் வைகல் தங்கல் ஆகும்
** 6 பெயர்கள் 68
#69
** நிலைபேறு
புரத்தல் துஞ்சல் அற்கல் மன்னல்
நிலைத்தல் ஐந்தும் நிலைபேறு ஆகும்
** 5 பெயர்கள் 69
#70
** சுமத்தல்
பரித்தலும் பொறுத்தலும் சுமத்தல் ஆகும்
** 2 பெயர்கள் 70
#71
** முயற்சி
உஞற்று உழப்பு தாளாண்மை ஆள்வினை ஊக்கம்
இயற்றல் என்று இவை முயற்சி ஆகும்
** 6 பெயர்கள் 71
#72
** மிக்க செயல்
ஊராண்மை மிக்கசெயல்
** 1 பெயர் 72
#73
** அரிய செயல்
பேராண்மை அரியசெயல்
** 1 பெயர் 73
#74
** எண்ணல்
சூழ்ச்சி உசாவே தேர்ச்சி நூல் என
யாப்பு உற எண்ணல் கிளவி ஆகும்
** 4 பெயர்கள் 74
#75
** ஆராய்தல்
தேர்தல் தூக்கல் ஆய்தல் தெரிதல்
ஓர்தல் தெளிதல் ஆய்வு ஆராய்தல்
** 7 பெயர்கள் 75
#76
** தேடல்
நாடலும் நேடலும் தேடல் ஆகும்
கூடும் கையரிக் கொள்ளலும் அதற்கே
** 3 பெயர்கள் 76
#77
** ஒற்றுமை
ஒற்றுமை குறிக்கோள்
** 1 பெயர்
#78
** ஒற்று
ஒற்று வேவு வேய்
** 2 பெயர்கள் 78
#79
** வரையறுத்தல்
கணித்தலும் குணித்தலும் வரையறுத்தல் ஆகும்
** 2 பெயர்கள் 79
#80
** விலை
விற்றல் பகர்தல் நொடை விலை ஆகும்
** 3 பெயர்கள் 80
#81
** கலக்கம்
வெறுப்பு வெதிர் துருமம் புலம்பு கவனம்
முதிர்ப்பு கலங்கல் கலக்கம் ஆகும்
** 7 பெயர்கள் 81
#82
** நடுக்கம்
விதிர்ப்பு பனிப்பு விதலை கம்பம்
அதிர்ப்பு பொதிர்ப்பு நடுக்கம் ஆகும்
** 6 பெயர்கள் 82
#83
** தியாகம்
வேள்வி வண்மை வேளாண்மை உதவி
கொடை உபகாரம் கவிகை பொழிதல்
இடுதல் இகுத்தல் பணித்தல் ஈதல்
தருதல் வழங்கல் வீசல் நல்கல்
அருளல் அளித்தல் புரத்தல் தியாகம்
** 19 பெயர்கள் 83
#84
** வரையாது கொடுத்தல்
திடமொழி அம்பல் சேந்தனை ஏய்ந்த
கொடைமடம் வரையாது கொடுத்தல் ஆகும்
** 1 பெயர்
#85
** வேள்வி
ஓமம் கிருது எச்சம் யாகம்
இட்டி யூபம் மகம் இவை வேள்வி
** 7 பெயர்கள் 85
#86
** பாதுகாத்தல்
போற்றலும் ஓம்பலும் பாதுகாத்தல்
** 2 பெயர்கள் 86
#87
** தலைக் காவல்
இளை என் கிளவி தலைக்காவல் ஆகும்
** 1 பெயர் 87
#88
** அகத்திடுதல்
கவவு அகத்திடுதல்
** 1 பெயர்
#89
** கொளற்பொருட்டு
தெவு கொளற்பொருட்டே
** 1 பெயர் 89
#90
** பிச்சை
பலியும் ஐயமும் பிண்டமும் பாகமும்
சரிதையும் பிச்சையின் பெயர் எனச் சாற்றுவர்
** 5 பெயர்கள் 90
#91
** இரத்தல்
இரவே இரத்தல்
** 1 பெயர் 91
#92
** கரத்தல்
கரவே கரத்தல்
** 1 பெயர்
#93
** தொழுதல்
வணங்கல் பணிதல் அஞ்சலி வந்தனை
இறைஞ்சல் பரவுதல் தாழ்தல் தொழுதல்
** 7 பெயர்கள்
#94
** பூசனை
ஆராதனையே அருச்சனை வழிபாடு
பூசனை என்னப் புகன்றனர் புலவர்
** 3 பெயர்கள்
#95
** பெறுதல்
வாய்த்தலும் பயத்தலும் பெறுதல் மாற்றம்
#96
** மற்றும் பெறுதல்
கிடைத்தலும் அது எனக் கிளத்தற்பாற்றே
** 3 பெயர்கள்
#97
** உண்டாதல்
பூத்தலும் பயத்தலும் உண்டாதல் பொருள்
** 2 பெயர்கள்
#98
** புணர்வு
இணை விழைச்சு மைதுனம் புணர்வுப்பெயரே
** 3 பெயர்கள்
#99
** தீவினைத் தொடர்பு
காதரம் தீவினைத்தொடர்பது ஆகும்
** 1 பெயர்
#100
** கலத்தல்
கலவியும் புணர்ச்சியும் கலத்தல் ஆகும்
#101
** மற்றும் கலத்தல்
கலாவல் கலம்பகம் அளாவல் சங்கீரணம்
நிலாவும் அதற்கே நிகழ்த்துப மேலோர்
** 6 பெயர்கள்
#102
** பயிறல்
நவிறல் கெழுமல் பயிறல் ஆகும்
** 2 பெயர்கள்
#103
** அறுத்தல்
வகிர்தல் பிளத்தல் துமித்தல் துணித்தல்
அரிதல் துண்டித்தல் அகைத்தல் பரிதல்
அறுத்தல் நகக் என்று அறைந்தனர் புலவர்
** 8 பெயர்கள்
#104
** பறித்தல்
களைதல் குற்றல் கட்டல் பறித்தல்
** 3 பெயர்கள்
#105
** பித்தல்
புய்த்தலும் பூய்த்தலும் பித்தல் ஆகும்
** 2 பெயர்கள் 105
#106
** நெரித்தல்
நெரித்தல் தெறுதல்
** 1 பெயர் 106
#107
** அழுந்தல்
ஞெமுங்கல் அழுந்தல்
** 1 பெயர் 107
#108
** கொல்லுதல்
எருக்குதல் காதுதல் எற்றுதல் தேய்த்தல்
முருக்குதல் ஒழித்தல் கோறலை மொழிப
#109
** மற்றும் கொல்லுதல்
வெட்டல் வீட்டுதல் படுத்தல் மாரணமும்
அ மொழிப்பால என்று அறையல் வேண்டும்
** 10 பெயர்கள் 109
#110
** அழித்தல்
சவட்டல் செகுத்தல் தெறுதல் சட்டித்தல்
செவிட்டல் சிதைத்தல் அழித்தல் ஆகும்
** 6 பெயர்கள் 110
#111
** வீசுதல்
வீசுதல் எறிதல் ஓச்சல் செலவிடல்
** 3 பெயர்கள் 111
#112
** வெட்டல்
துமித்தல் துணித்தல் துழாவல் வெட்டல்
#113
** மற்றும் வெட்டல்
பரிதல் கண்டித்தல் பகுத்திடல் தடிதல்
எற்றல் தறித்தலும் ஏற்கும் என்ப
** 9 பெயர்கள் 113
#114
** கிளறுதல்
கிண்டல் கிளைத்தல் கிளறுதல் ஆகும்
** 2 பெயர்கள் 114
#115
** போழ்தல்
கீழ்தல் என்பது போழ்தல் ஆகும்
** 1 பெயர் 115
#116
** கிழித்தல்
கீழ்தல் கீண்டல் கீறல் கிழித்தல்
** 3 பெயர்கள் 116
#117
** குலைதல்
குலைதல் குன்றல்
** 1 பெயர் 117
#118
** தோண்டல்
சூறல் சூன்றல் தோண்டல் ஆகும்
#119
** மற்றும் தோண்டல்
தொட்டலும் தொடுதலும் அகழ்தலும் அதற்கே
** 5 பெயர்கள் 119
#120
** துளைத்தல்
தொள்ளல் குயிற்றல் துளைத்தல் ஆகும்
** 2 பெயர்கள் 120
#121
** கொழித்தல்
வரன்றல் வாருதல் வார்தல் கொழித்தல்
#122
** மற்றும் கொழித்தல்
தெள்ளுதல் எனவும் செப்பற்பாற்றே
** 4 பெயர்கள்
#123
** தெரிதல்
வரன்றல் என்பது தெரிதல் ஆகும்
** 1 பெயர்
#124
** தூய்மை செயல்
உவளித்தல் தூய்மை செயலை உணர்த்தும்
#125
** மற்றும் தூய்மை செய்தல்
உபலாளனம் என்று உணர்த்தவும்படுமே
** 2 பெயர்கள் 125
#126
** கடைதல்
கவர்தல் குடைதல் ஞெலிதல் கடைதல்
** 3 பெயர்கள்
#127
** சிந்துதல்
சிதர்தலும் தூவலும் சிந்துதல் ஆகும்
#128
** மற்றும் சிந்துதல்
உகுத்தலும் உளர்தலும் உரிய மற்று அதற்கே
** 4 பெயாகள் 128
#129
** வடுப்படுதல்
கதுவாய் வடுப்படுதல்
** 1 பெயர் 129
#130
** தினவு
கண்டூதி தினவே
#131
** மற்றும் தினவு
சொறி என் கிளவியும் சொல்லுப அதற்கே
** 2 பெயர்கள் 131
#132
** அடுத்தல்
அடுத்தல் கூடுதல்
** 1 பெயர்
#133
** வழிப்பறித்தல்
ஆறலை வழிப்பறி
#134
** மற்றும் வழிப்பறி
அதர்கோளும் மற்று அதற்கு ஆகும் என்ப
#135
** மீதூரல்
இடங்கழிமை நெருங்கல் மீதூரல் ஆகும்
** 2 பெயர்கள்
#136
** உலைப்பின் பெயர்
உலைத்தல் ஒறுத்தல் உயங்கல் மிறைசெயல்
அகைத்தல் வேதனை உலைப்பாம் என மொழிப
** 6 பெயர்கள்
#137
** மடங்கலின் பெயர்
நுணங்கே முடங்கல் மடங்கல் ஆகும்
** 2 பெயர்கள்
#138
** சாதலின் பெயர்
துஞ்சல் பொன்றல் விளிதல் வீதல்
முஞ்சல் துவன்றல் முடிவு உலத்தல் வீடல்
மாய்தல் இறத்தல் மாளம் தபுதல்
சாதல் என்னச் சாற்றினர் புலவர்
** 13 பெயர்கள்
#139
** கொலைசெய்தலின் பெயர்
அடுதல் வீட்டல் அணங்கல் வெட்டல்
படுத்தல் என்று இவை கொலைசெயற்பால
** 5 பெயர்கள்
#140
** வேறுபாட்டின் பெயர்
வீற்றும் பேதமும் விள்ளலும் திரிபும்
வேற்றுமையும் கொள்ப வேறுபடற்பொருட்டே
** 5 பெயர்கள்
#141
** குன்றலின் பெயர்
சிங்கலும் எஞ்சலும் தவறலும் குன்றல்
** 3 பெயர்கள்
#142
** அழிதலின் பெயர்
உலைதலும் முருக்கலும் அழிதல் ஆகும்
** 2 பெயர்கள்
#143
** தளர்தலின் பெயர்
ஒல்கலும் இழுக்கலும் தளர்தலை உரைக்கும்
** 2 பெயர்கள்
#144
** வளைத்தலின் பெயர்
சுற்றுதல் கோலல் சூழ்போதல் வரையறுத்தல்
முற்றுதல் சூழ்தல் வளாவல் வளைத்தல்
** 7 பெயர்கள்
#145
** கட்டலின் பெயர்
தொட்டல் பிடித்தல் வளைத்தல் பந்தித்தல்
விசித்தல் சிமிழ்த்தல் வீக்கல் சுருக்கல்
அசைத்தல் இசைத்தல் யாப்பே இமிழ்த்தல்
தொடுத்தல் ஆத்தல் யாத்தல் தொடர்தல்
ஆர்த்தல் பிணித்தல் கட்டல் ஆகும்
** 18 பெயர்கள்
#146
** சுற்றுதலின் பெயர்
சுலவல் சுற்றுதல்
** 1 பெயர்
#147
** நிணத்தலின் பெயர்
வலத்தல் நிணத்தல்
** 1 பெயர்
#148
** விடுதலின் பெயர்
தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டு ஆகும்
** 2 பெயர்கள்
#149
** பூசலின் பெயர்
உறழ்வு வெஞ்சமம் மொய் செரு ஞாட்பு
இரணம் தாக்கே இகல் ஆயோதநம்
அமர் போர் உடன்றல் ஆர்ப்பு நிகர்ப்பு
மலைதல் நேர்தல் குறும்பே உடலுதல்
ஆகவம் மண்டலம் தெவ்வு வினை ஆடல்
திறல் மறல் மறம் முரண் சினம் சமர் சமீரம்
ஆர்த்தல் சங்கிராமம் தும்பை கூட்டம் என்று
ஈது எண்ணான்கோடு இரண்டும் பூசல்
** 34 பெயர்கள்
#150
** தோற்றுதலின் பெயர்
பாரித்தல் தோற்றுதல்
** 1 பெயர்
#151
** மிகுத்தலின் பெயர்
பூரித்தல் மிகுத்தல்
** 1 பெயர்
#152
** தடுத்தலின் பெயர்
வாரித்தல் வாரணம் தடுத்தல்
** 2 பெயர்கள்
#153
** மற்றூம் தடுத்தலின் பெயர்
ஆணை தட்டல் தகத்தலும் அதுவே
** 3 பெயர்கள்
#154
கூடலர் நாடழிவின் பெயர்
கூடலர்நாடழிவு கொற்றவள்ளை
** 1 பெயர்
#155
** சாய்ந்தார்மேற்படாமையின் பெயர்
சாய்ந்தார்மேற்படாமை தழிஞ்சி
** 1 பெயர்
#156
** பாதீட்டின் பெயர்
அளித்தல் பெய்தல் பாதீடு ஆகும்
** 2 பெயர்கள்
#157
** மற்றும் பாதீட்டின் பெயர்
செறித்தலும் அது எனச் செப்பற்பாற்றே
** 1 பெயர்
#158
** கொட்டாவியின் பெயர்
ஆவித்தல் கொட்டாவி
** 1 பெயர்
#159
** வருத்தம் தீர்தலின் பெயர்
அயர்வுயிர்த்தல் வருத்தம்தீர்தல் ஆகும்
** 1 பெயர்
#160
** உயிர்ப்பின் பெயர்
ஆவி உயிர்ப்பே
** 1 பெயர்
#161
** வெயர்வு அரும்பலின் பெயர்
வியர்த்தல் வெயர்வு அரும்பல்
** 1 பெயர்
#162
** வாய்விடலின் பெயர்
உயிர்த்தல் வாய்விடல்
** 1 பெயர்
#163
** காய்தலின் பெயர்
முனிதல் வறத்தல் உலறுதல் காய்தல்
** 3 பெயர்கள்
#164
** மற்றும் காய்தலின் பெயர்
முதிர்ந்திடல் என்பதும் ஒழியும் மற்று அதற்கே
** 4 பெயர்கள்
#165
** தூவுதலின் பெயர்
பிலிற்றலும் பில்கலும் தூவுதல் பொருள்
** 2 பெயர்கள்
#166
** சொரிதலின் பெயர்
பொழிதல் பனித்தல் இடுதல் எக்கர்
சொரிதலாகச் சொல்லுவர் புலவர்
** 4 பெயர்கள்
#167
** தெவிட்டலின் பெயர்
உமிழ்தலும் இமிழ்தலும் தெவிட்டலை உரைக்கும்
** 2 பெயர்கள்
#168
** துவலைவிடுதலின் பெயர்
துவறல் துவலைவிடுதல் ஆகும்
** 1 பெயர்
#169
** உடன்படலின் பெயர்
ஒட்டலும் வலித்தலும் நேரலும் உடன்படல்
** 3 பெயகள்
#170
** பொழுதுநீட்டித்தலின் பெயர்
நெடித்தல் பாணித்தல் பொழுதுநீடித்தல்
** 2 பெயர்
#171
** ஒருங்கின் பெயர்
உடங்கு ஒருங்கு ஆகும்
** 1 பெயர்
#172
** உறுத்தலின் பெயர்
ஒற்றுதல் உறுத்தல்
** 1 பெய்ர்
#173
** எழுப்பலின் பெயர்
எற்றல் உணர்த்தல் எடுப்பல் எழுப்பல்
** 3 பெயர்கள்
#174
** சோர்வின் பெயர்
கயக்குச் சோர்வு
** 1 பெயர்
#175
** வழுவின் பெயர்
பிறக்கு வழுவே
** 1 பெயர்
#176
** இசைவின் பெயர்
இயைவே புணர்ச்சி இயைப்பு இசைவு ஆகும்
** 3 பெயர்கள்
#177
** மூடுதலின் பெயர்
மூய்தலும் கவித்தலும் மூடுதல் ஆகும்
** 2 பெயர்கள்
#178
** மொய்த்தலின் பெயர்
மூழ்த்தலும் மூசலும் மூஞ்சலும் மொய்த்தல்
** 3 பெயர்கள்
#179
** அரசிறையின் பெயர்
அரசிறை திறையே
** 1 பெயர்
#180
** மற்றும் அரசிறையின் பெயர்
கப்பமும் இறையும் காட்டும் அதுவே
** 2 பெயர்
#181
** சுங்கஇறையின் பெயர்
உலகு சுங்கஇறை
** 1 பெயர்
# 182
மற்றும் சுங்க இறையின் பெயர்
ஆயம் சாரிகை அஃது என மொழிப
** 2 பெயர்கள்
#183
** குடியிறையின் பெயர்
கரமும் கடனும் கறையும் குடியிறை
** 3 பெயர்கள்
#184
** மற்றும் குடியிறையின் பெயர்
இறப்பும் வரியும் ஏற்கும் அதற்கே
** 2 பெயர்கள்
#185
** தேய்த்தலின் பெயர்
பாற்றல் தேய்த்தல்
** 1 பெயர்
#186
** பிறக்கலின் பெயர்
போற்றல் பிறக்கல்
** 1 பெயர்
#187
** எழுச்சியின் மிகுதிப்பெயர்
கதித்தல் பம்பல் கஞறல் கன்றல்
எழுச்சியின்மிகுதிக்கு எய்தும் பெயரே
** 4 பெயர்கள்
#188
** எழுதலின் பெயர்
ஆக்கம் மலர்ச்சி உறுமல் இவர்தல்
ஒழுக்கல் உகைத்தல் எழுதல் ஆகும்
** 6 பெயர்கள்
#189
** தழீஇக் கோடல்
விள்ளல் விளாவல் முயங்கல் தழீஇக்கோடல்
** 3 பெயர்கள்
#190
** சார்தல்
அண்ணுதல் தோய்வு சார்ச்சி அணவுதல்
நண்ணுதல் தொடல் புல்லல் நணுகுதல்
புணர்தல் என்று எண்ணிய ஒன்பதும் படிதலும் சார்தல்
#191
** மற்றும் சார்தல்
மருவுதல் அணுகல் அருகுறல் சிவணல்
துன்னலும் அது எனச் சொல்லற்பால
** 15 பெயர்கள்
#192
** கலத்தல்
கலாவலும் துழாவலும் வளாவலும் கலத்தல்
** 3 பெயர்கள்
#193
** தடவுதல்
தைவரல் வருடல் நீவுதல் தடவுதல்
** 3 பெயர்கள்
#194
** திமிர்தல்
துவருதல் திமிர்தல்
** 1 பெயர்
#195
** வளைதல்
வக்கிரம் வளைதல்
** 1 பெயர்
#196
** வற்புறுத்தல்
வருட்டல் தெருட்டல் வற்புறுத்தல்
** 2 பெயர்கள்
#197
** ஒழுக்கம்
இயல்பும் மாலையும் நிழலும் நடையும்
செயலும் சரிதையும் கையாறும் ஒழுக்கம்
** 7 பெயர்கள்
#198
** நெல் முதலிய குற்றுதல்
அவைத்தல் குற்றுதல்
** 1 பெயர்
#199
** அடைவு
ஆம்பல் அடைவே
** 1 பெயர்
#200
** முளைத்தல்
உருத்தல் நாறுதல் பொடித்தல் தோற்றல் என
வடித்த நான்கும் முளைத்தல் ஆகும்
** 4 பெயர்கள்
#201
** விரிதல்
எதிர்தல் மலர்தல் அலர்தல் விரிதல்
விள்ளலும் அவிழ்தலும் விளம்பும் அதற்கே
** 6 பெயர்கள்
#202
** பதன் அழிவு
ஊழ்த்தல் செவ்வி உறு பதன்அழிவே
** 2 பெயர்கள்
#203
** அமைத்தல்
சமைத்தல் சேர்த்தல் அமைத்தல் ஆகும்
** 2 பெயர்கள்
#204
** மறித்தல்
இகுத்தல் வீழ்த்தல் விளித்தல் மறித்தல்
** 3 பெயர்கள் 204
#205
** மேவுதல்
வீழ்தலும் அமர்தலும் மேவுதல் ஆகும்
** 2 பெயர்கள் 205
#206
** அசைதல்
அசைதல் துயல்வரல்
** 1 பெயர்
#207
** எட்டுதல்
அணவுதல் எட்டுதல்
** 1 பெயர் 207
#208
** கூடுதல்
ஒல்லல் சிவணல் பொருந்தல் கூடுதல்
** 3 பெயர்கள் 208
#209
** சரண் புகல்
மறைபுகல் கிளவி சரண்புகல் ஆகும்
** 1 பெயர் 209
#210
** காவல்
சிறையும் அரணமும் சேமமும் ஏமமும்
கடியும் கதவும் கட்டும் காவல்
** 7 பெயர்கள் 210
#211
** ஏவல்
வியங்கோள் ஏவல்
** 1 பெயர் 211
#212
** வறுமை
வீதல் வறுமை
** 1 பெயர் 212
#213
** அவித்தல்
நதுத்தலும் நொதுத்தலும் நுதுத்தலும் அவித்தல்
** 3 பெயர்கள் 213
#214
** மூட்டுதல்
மாட்டலும் பொருத்தலும் மூட்டுதல் ஆகும்
** 2 பெயர்கள் 214
#215
** செறித்தல்
குளித்தலும் மூழ்கலும் செறித்தலைக் கூறும்
** 2 பெயர்கள் 215
#216
** கூட்டம்
யோகம் கூட்டம்
** 1 பெயர் 216
#217
** விடுதல்
வியோகம் விடுதல்
#218
** மற்றும் விடுதல்
மோசனம் மோக்கம் வீதலும் அதுவே
** 4 பெயர்கள் 218
#219
** கடுமை
வேகம் கடுமை என விளம்பினரே
** 1 பெயர் 219
#220
** செய்கடன்
நியமமும் நியதியும் நிகழும் செய்கடன்
** 2 பெயர்கள்
#221
** குயிலுவத் தொழில்
குயிலுவத்தொழிலே நரப்புக் கருவி
பயிலும் பாடல் பண்பிற்று ஆகும்
** 1 பெயர் 221
#222
** கூத்து
நடமே நாடகம் கண்ணுள் நட்டம்
படிகம் ஆடல் தாண்டவம் பரதம்
ஆலுதல் தூங்கல் வாணி குரவை
இலயம் நிலயம் நிருத்தம் கூத்தே
#223
** மற்றும் கூத்து
நடனம் தூக்கு நாட்டியம் நட்டணம்
நடையும் அதற்கே நவிலலும் ஆகும்
** 20 பெயர்கள் 223
#224
** மாயோன் ஆடல்
அல்லியம் குடமாடல் மல்லே மரக்கால்
எல் ஒளி மாயோன் ஆடல் ஆகும்
** 4 பெயர்கள் 224
#225
** சிவன் ஆடல்
பாண்டரங்கம் கபாலம் கொடுகொட்டி
என்று இவை மூன்றும் முக்கணன் ஆடல்
** 3 பெயர்கள் 225
#226
** முருகன் ஆடல்
கொட்டியும் குடையும் குமரன்ஆடல்
** 2 பெயர்கள் 226
#227
** திருமகள் ஆடல்
பரவை என்பது திருமகள்ஆடல்
**1 பெயர்
#228
** இந்திராணி ஆடல்
அயிராணிஆடல் பெயர் கடையம் ஆகும்
** 1 பெயர்
#229
** துர்க்கை ஆடல்
மரக்கால்கூத்தே துர்க்கைஆடல்
** 1 பெயர் 229
#230
** சத்த மாதர் ஆடல்
எழுவர் மங்கையர் ஆடலும் துடியே
** 1 பெயர் 230
#231
** காமன் ஆடல்
பேடுஆடல் காமனதுஆடல் ஆகும்
** 1 பெயர் 231
#232
** கூத்தின் விகற்பம்
கரணம் பித்தம் மலைப்பு பவுரி
பிரமரி வீரட்டானம் குனிப்பே
உள்ளாளனம் கடகம் எனவே ஒன்பதும்
ஒள்ளிய கூத்தின் விகற்பம் ஆகும்
#233
** மற்றும் கூத்தின் விகற்பம்
உம்பிதம் புரியம் இலயம் பரதமும்
அப் பெயர்க்கு ஆம் என்று அறைந்தனர் புலவர்
** 13 பெயர்கள் 233
#234
** கைகோத்து ஆடல்
குரவைக்கூத்தே கைகோத்துஆடல்
** 1 பெயர் 234
#235
** முடக்கிய இருகைப் பழுப்புடை ஒற்றி ஆடல்
முடக்கிய இரு கைப் பழுப்புடை ஒற்றித்
துடக்கிய நடையது துணங்கை ஆகும்
** 1 பெயர் 235
#236
** வேலன் ஆடல்
அணங்கும் வெறியும் கழங்கும் வேலன்ஆடல்
** 3 பெயர்கள் 236
#237
** ஒற்றறுத்தல்
வட்டித்தல் தட்டல் வட்டணை ஒற்றறுத்தல்
** 3 பெயர்கள் 237
#238
** கை குவித்துக் கொட்டல்
கொம்மை கொட்டல் கைகுவித்துக்கொட்டல்
** 1 பெயர் 238
#239
** ஆர்த்து வாய் புடைத்தல்
ஆவலம் கொட்டல் ஆர்த்துவாய்புடைத்தல்
** 1 பெயர் 239
#240
** குந்தி நிற்றல்
குந்திய கால் நிலை குஞ்சித்தல் ஆகும்
** 1 பெயர் 240
#241
** கை கூப்பி மெய் கொட்டி நிற்றல்
குடந்தம் கை கூப்பி மெய் கொட்டி நிற்றல்
** 1பெயர் 241
#242
** தாள ஒற்று
சதியும் சீரும் தாளஒற்றின் பெயர்
** 2 பெயர்கள் 242
#243
** கீறல்
கீளல் கீண்டல் கிழித்திடல் கீன்றல்
கீழ்தல் பீறல் கீறலின் பெயரே
** 6 பெயர்கள்
#244
** கிளைத்தல்
பிளிறல் ஞெண்டல் கிண்டல் கிளைத்தல்
** 3 பெயர்கள்
#245
** கத்தரித்தல்
கொய்தல் கத்தரித்தல்
** 1 பெயர்
#246
** குட்டுதல்
தகர்த்தல் குட்டுதல் உடைத்தலும் ஆகும்
** 2 பெயர்கள்
#247
** அடுக்குதல்
எற்றல் அடுக்குதல்
** 1 பெயர்
#248
** ஒழிதல்
ஓவல் ஒழிதலின் பெயர்
** 1 பெயர்
#249
** மாற்றல்
** விலக்கல் மாற்றல்
** 1 பெயர்
#250
** மிசை
மீமிசை மிசையே
** 1 பெயர்
#251
** தாபித்தல்
நிலைபடச்செய்தல் தாபித்தல் ஆகும்
**1 பெயர்
#252
** நிறுத்தல்
நோன்றல் தானே நிறுத்தல் என்ப
** 1 பெயர்
#253
** சொலித்திடல்
இடத்தல் சொலித்திடல் என்னற்பாற்றே
** 1 பெயர்
#254
** வகிர்தல்
துவர்தல் வகிர்தலாகச் சொல்லுவர்
** 1 பெயர்
#255
** குத்தல்
புடைத்தல் எறிதல் எற்றல் இ மூன்றும்
குத்தல் என்னக் கூறப்படுமே
** 3 பெயர்கள்
#256
** அடித்தல்
கொட்டல் மொத்தல் அறைதல் அகைத்தல்
எற்றல் அதுக்கல் மோதல் வழுக்கல்
என்று இவை எட்டும் அடித்தல் என்ப
** 8 பெயர்கள்
#257
** வசமாக்குதல்
வடித்தல் வசமாக்குதலின் மாற்றே
** 1 பெயர்
#258
** முண்டிதமாக்கல்
மழித்தல் முண்டிதமாக்கல் என்ப
** 1 பெயர்
#259
** வாருதல்
வளைத்தல் கவர்தல் வௌவல் கொளல் இவை
வாருதல் என்ன வகுக்கற்பால
** 4 பெயர்கள்
#260
** கொள்ளை
கொண்டி சூறை கொள்ளை ஆகும்
** 2 பெயர்கள்
#261
** பரத்தல்
பாரித்தல் விரியல் பரத்தல் என்ப
** 2 பெயர்கள்
#262
** முகத்தல்
தோண்டல் நோண்டல் முகத்தல் என்ப
** 2 பெயர்கள்
#263
** காத்தல்
திதி நிலைபெறுத்தல் நோக்கல் புரத்தல்
காத்தல் என்னக் கழறப்படுமே
** 4 பெயர்கள்
#264
** பங்கீடு
** பகுத்தல் பாத்தல் பாகம் பாதி
பங்கீடு என்னப் பகரப்படுமே
** 4 பெயர்கள்
#265
** விரித்தல்
இகுத்தல் விரித்தல்
** 1 பெயர்
#266
** பொதிதல்
வீக்கம் பொதிதல்
** 1 பெயர்
#267
** சித்து
சம்பிரதம் சித்தின் மேற்றே
** 1 பெயர்
#268
** அருவல்
பருவரல் அருவல்
** 1 பெயர்
#269
** நீக்கல்
வரைவு நீக்கல்
** 1 பெயர்
#270
** மாறுபாடு
தெற்றல் என்பது மாறுபாடு என்ப
** 1 பெயர்
#271
** சுடல்
தூபிதம் சண்நாபம் சுடல் எனப்படுமே
** 2 பெயர்
#272
** மறைப்பு
மாய்தல் ஆவரணம் மறைப்பின் பெயரே
** 2 பெயர்கள்
#273
** தள்ளல்
நூக்கல் ஊன்றல் நோன்றல் தள்ளல்
** 3 பெயர்கள்
#274
** அவமதிச் சிரிப்பு
அசி அவமதிச்சிரிப்பாம் என அறைவர்
** 1 பெயர்
#275
** பிணக்கு
மறல் அரில் அபரம் துவக்குப் பிணக்கே
** 4 பெயர்கள்
#276
** கொப்பளித்தல்
பிளிற்றல் பில்கல் காலல் கொப்பளித்தல்
உமிழ்தலுமாம் என உரைக்கற்பாற்றே
** 4 பெயர்கள்
#277
** அலையல்
அலைசல் ஞெகிழ்தல் ஞொள்கல் ஆஞ்சி
அலையலின் பெயர் என அறைதற்கு உரிய
** 4 பெயர்கள்
#278
** சத்திசெயல்
உமிழ்தல் கான்றல் உற்காரம் சத்தி
** 3 பெயர்கள்
#279
** மூச்சு
தும்மல் சுவாசம் மூச்சு எனச் சொல்லும்
** 2 பெயர்கள்
#280
** தாழ்தல்
குரங்கல் இறைஞ்சல் கூறுப தாழ்தல்
** 2 பெயர்கள்
#281
** இறக்குதல்
இறக்குதல் இறங்குதல் குனிவும் ஆகும்
** 2 பெயர்கள்
#282
** அதனின் நடித்தல்
அதனின் நடிப்பது நடம் ஆகும்
** 1 பெயர்
#283
அண்ணல் செம்பாதிக் காணியாட்டியைப்
பெண்ணணங்கை மூவுலகும் பெற்ற அம்மையைச்
செந்தமிழ் மாலை அந்தாதி புனைந்த
நாவலன் நம்பற்காவலன் சேந்தன்
இயல்வுற்ற திவாகரத்து ஒன்பதாவது
செயல் பற்றிய பெயர்த் தொகுதி முற்றிற்று
@10 ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
#1
** சொல்லுதல்
விரித்தல் கதைத்தல் உரைத்தல் கூறல்
தெரித்தல் ஆடல் நொடித்தல் நவிலல்
சாற்றல் பணித்தல் மொழிதல் வலித்திடல்
ஏற்ற முந்நான்கும் சொல்லுதற்கு இயையும்
** 12 பெயர்கள்
#2
** சொல்லின் பெயர்
பகர்தல் செப்பல் இயம்பல் பரவல்
குயிறல் இறுத்தல் கூறல் புகறல்
கட்டுரை விளம்பல் கரைதல் ஓதல்
சொற்றல் வழங்கல் வசநம் காதை
பேசல் பேச்சு கிளப்பு அறைதல்
இசைப்புத் தேர்தல் மிழற்றல் வாணி
அசைப்பு என்று இன்னவை சொல் என அறைகுவர்
** 25 பெயர்கள்
#3
** மற்றும் சொல்லின் பெயர்
குயில் வினா எதிர்ப்புக் கீர் நுவல் பாணி
இயம் வாக்கு என்பவும் சொல்லின் பால
** 8 பெயர்கள்
#4
** பதம்
பாழியும் உரையும் பதம் என உரைப்பர்
** 2 பெயர்கள்
#5
** வாசகம்
வார்த்தை வசநம் வசித்தல் பாசுரம்
சேர்த்த நான்கும் வாசகம் செப்பும்
** 4 பெயர்கள்
#6
** பல்கால் விளம்புதல்
மீதுரை பல்கால் விளம்புதல் ஆகும்
** 1 பெயர்
#7
** சத்தியம்
ஆணை விரதம் வட்டித்தல் சூள் பிரமாணம்
வஞ்சினம் சபதம் சத்தியமே
** 7 பெயர்
#8
** மெய்
வாய்மை சாதம் சரதம் உண்மை வாய்
ஆணை திடமும் மெய் என அறைவர்
** 7 பெயர்
#9
** மற்றும் மெய்
சத்தியம் மன்ற நிலைமை வேளாண்மை
நிச்சயம் என்பவும் மெய் என நிற்கும்
** 5 பெயர்கள்
#10
** பொய்
மடி வஞ்சம் மாயம் அநுசிதம் படிறு
சடம் வக்கிரம் விகிர்தம் நிசிதம் பொய்யே
** 9 பெயர்கள்
#11
** மற்றும் பொய்
மிச்சை வலக்காரம் தள்ளல் வழுது
பெட்டு சாதனை பொய்யின் கூற்றே
** 15 பெயர்கள்
#12
** குறளை
குஞ்சம் பிசுனம் குறளை ஆகும்
** 2 பெயர்கள்
#13
** புறங்கூறல்
கொடுவாய் என்பது புறங்கூறல் ஆகும்
** 1 பெயர்
#14
** வெறும் புறங்கூறல்
கொண்டியம் தொடுப்பு வெறும் புறங்கூறல்
** 2 பெயர்கள்
#15
** ஆசில் வாழ்த்து
ஆசிடை வாழ்த்தே
#16
** மற்றும் வாழ்த்து
பல்லாண்டு ஆசிகை வாரம் சோபனம்
சொல்லிய நான்கும் வாழ்த்தினைச் செப்பும்
** 5 பெயர்கள்
#17
** திசைச் சொல்
தேசிகம் திசைச்சொல்
** 1 பெயர்
#18
** துதித்தல்
வழுத்தல் பரவுதல் ஏத்தல் துதித்தல்
#19
** மற்றும் துதித்தல்
போற்றல் பரசுதல் தோத்திரம் மெச்சல்
சாற்றிய நான்கும் அதன்பால் சாரும்
** 7 பெயர்கள்
#20
** வாழ்த்து
பழிச்சல் புகழ்தல் வாழ்த்து எனப்படுமே
** 2 பெயர்கள்
#21
** பெருஞ் சொல்
பலர் அறி சொல் பெருஞ்சொல்
** 1 பெயர்
#22
** சிறு சொல்
சிறுசொல் பழித்தல்
** 1 பெயர்
#23
** பழிச்சொல்
அம்பல் கெளவை ஏச்சு அலர் பழிச்சொல்
#24
** மற்றும் பழிச் சொல்
பரிவாதம் தீச்சொல் பழிச்சொல் ஆகும்
** 6 பெயர்கள்
#25
** விடாது பேசுதல்
பிதற்றுதல் விடாதுபேசல் ஆகும்
** 1 பெயர்
#26
** சிலர் அறிந்து தம்முள் புறங்கூறல்
அம்பல் சிலர் அறிந்து தம்முள் புறங்கூறல்
** 1 பெயர்
#27
** பலரும் அறிந்து பழி தூற்றுதல்
அலரே பலரும் அறிந்து அலர் தூற்றல்
** 1 பெயர்
#28
** இகழ்ச்சிச் சொல்
ஏயே சீச்சீ என் இளி ஏளனம்
ஆய ஐந்தும் இகழ்ச்சியின் ஆகும்
** 5 பெயர்கள்
#29
** அதட்டல்
அதிர்த்திடல் தெழித்தல் உரப்பல் அதட்டல்
** 3 பெயர்கள்
#30
** மறைத்து மொழியும் சொல்
இடக்கர் என்பது மறைத்து மொழி கிளவி
#31
** மற்றும் மறைத்து மொழியும் சொல்
மற்றும் கூதனம் மறைத்து உரைக்கும் சொல்
** 2 பெயர்கள்
#32
** புகழ்
கீர்த்தி மேம்பாடு மீக்கூற்று ஒளி இசை
சீர்த்தி என்று இவை புகழ் எனச் செப்பினர்
** 6 பெயர்கள்
#33
** ஏற்ற மொழி
தோற்றமும் சொல்மாலையும் ஏற்றம் ஆகும்
#34
** மற்றும் ஏற்ற மொழி
மெய்ப்பு சுலோகம் சீர் ஏற்ற மொழி என்ப
** 5 பெயர்கள்
#35
** ஏற்றம்
கியாதக்கிளவி ஏற்றம் கிளக்கும்
** 1 பெயர்
#36
** மிகுபுகழ்
சீர்த்தியும் கீர்த்தியும் மிகுபுகழ் ஆகும்
** 2 பெயர்கள்
#37
** மேம்பாடு
ஊற்றம் மேம்பாட்டின் பெயர் ஆகும்மே
** 1 பெயர்
#38
** தேற்றம்
ஓர்ப்பு கடைப்பிடி குறிக்கோள் தேற்றம் என்று
ஆர்த்த புலவர் அறிந்து உரைத்தனரே
** 3 பெயர்கள்
#39
** தேற்ற மொழி
மற்று என கிளவியும் மன்ற என் கிளவியும்
தெற்று என் கிளவியும் தேற்றம் ஆகும்
** 3 பெயர்கள்
#40
** உறுதிக் கட்டுரை
கழறலும் இடித்தலும் உறுதிக்கட்டுரை
** 2 பெயர்கள்
#41
** நிரம்பா மென் சொல்
நிழற்றலும் மிழற்றலும் நிரம்பாமென்சொல்
#42
** மற்றும் நிரம்பா மென் சொல்
மழலை கொஞ்சல் குதலை உல்லாபம்
மிழலை எனவும் விளம்பும் அதற்கே
** 7 பெயர்கள்
#43
** புனருத்தி
கூறியதுகூறல் புனருத்திக் கூற்றே
**1 பெயர்
#44
** சூளுறவு
சூளே வஞ்சினம் சபதம் சூளுறவே
** 3 பெயர்கள்
#45
** பேசா என்பது
வாளா என் கிளவி பேசா என்று ஆகும்
** 1 பெயர்
#46
** நன்னிமித்தம்
விரிச்சியும் வாய்ப்புள்ளும் நற்சொல் நிமித்தம்
** 2 பெயர்கள்
#47
** அழைத்தல்
கூவலும் விளித்தலும் உளைத்தலும் கரைதலும்
வா எனலும் அழைத்தல் மாற்றம் ஆகும்
** 5 பெயர்கள்
#48
** கமை இலாது அழைத்தல்
கத்தல் கூப்பிடல் கதறல் அலறல்
ஒத்த நான்கும் கமைஇலாதுஅழைத்தல்
#49
** மற்றும் கமை இலாது அழைத்தல்
இகுத்தல் கேதல் ஆகருடணை
அகவல் நான்கும் அழைத்தல் ஆகும்
** 8 பெயர்கள்
#50
** பொர அழைத்தல்
அறைகூவல் பொரஅழைத்தல்
** 1 பெயர்
#51
** கீழ் அறுத்தல்
அறைபோதல் கீழ்அறுத்தல்
** 1 பெயர்
#52
** முது சொல்
மொழிமை முதுசொல்
** 1 பெயர்
#53
** காரணச் சொல்
கதை காரணச்சொல்
** 1 பெயர் 53
#54
** உபசாரச் சொல்
முகமனும் நன்னயக் கிளவியும் உபசாரம்
#55
** மற்றும் உபசாரச் சொல்
சம்மானமும் உபசாரச் சொல்லே
** 3 பெயர்கள் 55
#56
** நயச் சொல்
அசதி நகை நயக்கிளவி ஆகும்
** 2 பெயர்கள்
#57
** வினாவல்
வினாவல் கடாவல்
** 1பெயர் 57
#58
** வினாவிற்கு எதிர் மொழி
விடை அதற்கு எதிர்மொழி
** பெயர் 58
#59
** வினாவும் விடையும் கூடிய பொருள்
சல்லாபம் வினா விடை தழுவும் பொருளே
** 1பெயர்
#60
** பொருள் இன்மை
அனர்த்தம் பொருள்இன்மை ஆகும் என்ப
** பெயர்
#61
** நெடுமொழி
நெடுமொழி தன் மேம்பாடு தான் நிகழ்த்தல்
** 1 பெயர் 61
#62
** அசைச் சொல்
அன்று என் கிளவியும் இன்று என் கிளவியும்
ஆம் என் கிளவியும் ஆகும் அசைச்சொல்
** 3 பெயர்கள் 62
#63
** கேட்பிக்கும் உரையசைச் சொல்
அம்ம கேட்பிக்கும்
** 1பெயர் 63
#64
** உரையசைச் சொல்
ஆங்க உரையசை
** 1 பெயர் 64
#65
** முன்னிலை அசைச் சொல்
மியா இக மோ மதி இகும் சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்
** 6 பெயர்கள் 65
#66
** அசை நிலைச் சொல்
யா கா பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம்
ஆ ஏழ் சொல்லும் அசைநிலைக்கிளவி
** 7 பெயர்கள் 66
#67
** இசைநிறை அசை நிலை
ஏயும் குரையும் இசைநிறைஅசைநிலை
#68
** மற்றும் இசை நிறை அசை நிலை
ஒப்பில் போலியும் அப் பொருட்டு ஆகும்
** 3 பெயர்கள் 68
#69
** உடன் நிகழ்வு இடைச் சொல்
ஒடு என் கிளவி உடன்நிகழ்வு ஆகும்
** 1 பெயர் 69
#70
** சாரியை மொழி
இன்னே வற்றே அற்றே அம்மே
ஒன்னே ஆனே அக்கே இக்கே
அன் என் கிளவி உளப்படப் பிறவும்
அன்ன என்ப சாரியை மொழியே
** 9 பெயர்கள் 70
#71
** இடைச் சொல்
அம் ஆம் எம் ஏம் தம் நம் நும் ஏ
உம்மே அன் ஆன் உறை கெழு ஞான்றே
அல் ஆல் அன்றே எனவே மன்னே
தில்லை வான் பாக்கு தெய்யவும் இடைச்சொல்
** 23 பெயர்கள் 71
#72
** எழுத்தின் சாரியை
காரமும் கரமும் கானொடு சிவணி
நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை
** 3 பெயர்கள் 72
#73
** வேற்றுமை
ஐ ஒடு கு இன் அது கண் என்னும்
அவ் ஆறு என்ப வேற்றுமைஉருபே
** 6 பெயர்கள் 73
#74
** சுட்டு
அ இ உ அ மூன்றும் சுட்டே
** 3 பெயர்கள் 74
#75
** வினா
ஆ ஏ ஓ அ மூன்றும் வினா
** 3 பெயர்கள் 75
#76
** ஐயுற்ற சொல்
யாதும் எவனும் கொல்லும் என்னையும்
ஆகும் என்ப ஐயுற்ற கிளவி
** 4 பெயர்கள் 76
#77
** இடத்தினை உற்ற சொல்
யாண்டையும் யாங்கும் இடத்தினை உற்ற சொல்
** 2 பெயர்கள் 77
#78
** கல்வி
உறுதியும் சால்பும் ஓதியும் அறிவும்
கலையும் கேள்வியும் கல்வி ஆகும்
#79
** மற்றும் கல்வி
வித்தை சாலம் விஞ்சை ஊதியம்
மற்று இ நான்கும் கல்வியின் நாமம்
** 10 பெயர்கள் 79
#80
** கற்றல்
நவிலல் கெழுமல் பயிலலும் கற்றல்
** 3 பெயர்கள் 80
#81
** படித்தல்
பாடல் வாசித்தல் பயிலல் கற்றல்
ஓதல் அத்தியயனமும் படித்தல்
** 6 பெயர்கள் 81
#82
** எழுதாக் கேள்வி
சுருதி மறை சாகை எழுதாக்கேள்வி
** 3 பெயர்கள் 82
#83
** வேத நூல்
ஆதிநூல் என்பது வேதநூல் பெயரே
#84
** மற்றும் வேத நூல்
இருக்கு ஓத்து ஆரணம் வேதம் என்ப
** 4 பெயர்கள் 84
#85
** வேத நூலின் இருவகைப் பொருள்
ஞானபாகையும் கருமபாகையும்
ஆ இருபால் பொருள் வேதநூற்கே
** 2 பெயர்கள்
#86
** வேதத்தின் ஞான பாகை
ஆரணம் வேதத்தின் ஞானபாகை
** 1 பெயர் 86
#87
** உபநிடதம்
உபநிடதம் வேதத்தின் உட்பொருள் நுட்பம்
#88
** வைதீகம்
வைதீகம் வேதம் மொழி மார்க்கம் ஆகும்
#89
** முதல் வேதம்
இருக்கு முதல் வேதம் பெளடிகம் எனப்படும்
** 2 பெயர்கள் 89
#90
** இரண்டாம் வேதம்
இரண்டாம் வேதம் தைத்திரியம் என்ப
** 1 பெயர் 90
#91
** மூன்றாம் வேதம்
மூன்றாவது சாமம் கீத நடை சாரும்
** 2 பெயர்கள் 91
#92
** நான்காம் வேதம்
நான்காம்வேதம் அதர்வணம் என்ப
** 1 பெயர் 92
#93
** பனுவல்95
*
அதிகாரம் ஆரிடம் பனுவல் ஆகும்
** 2 பெயர்கள் 93
#94
** நூல்
பிடகம் தந்திரம் நூலின் பெயரே
#95
** மற்றும் நூல்
ஆகமம் பனுவல் ஆரிடம் சமயம்
சூத்திரம் ஐந்தும் நூலினைத் துலக்கும்
** 7 பெயர்கள்
#96
** நூல் முடிபு
படலம் சருக்கம் பரிச்சேதம் காண்டம்
இலம்பகம் அத்தியாயம் எய்து நூல் முடிபே
** 6 பெயர்கள் 96
#97
** பாயிரம்
பாயிரம் நூல்முகம் புறவுரை எனப்படும்
#98
** மற்றும் பாயிரம்
பதிகம் புனைந்துரை தந்துரையும் அதுவே
** 5 பெயர்கள் 98
#99
** மூதுரை
மூதுரை பழமொழி முதுமையும் எனப்படும்
#100
** மற்றும் மூதுரை
மொழிமை முன்சொல் முதுசொல் பழஞ்சொல்
மொழிந்த நான்கும் அ மூதுரை என்ப
** 6 பெயர்கள் 100
#101
** பாடம்
ஓதன்மையாடல் பாடம் ஆகும்
** 1 பெயர் 101
#102
** நூற்பா அகவல்
நூற்பா அகவல் நுணங்க நாடின்
சூத்திரம் குறித்த யாப்பிற்று ஆகி
அடி வரை இன்றி விழுமிதின் நடக்கும்
#103
** ஓத்து என்பது
நேர் இன மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓர் இனப் பொருளை ஒருவழி வைப்பது
ஓத்து என மொழிப உயர் மொழிப் புலவர்
#104
** படலம்
ஒரு நெறி அன்றி விரவிய பொருளால்
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும்
#105
** வேற்றிசைப் பா
சருக்க முடிவினும் இலம்பக முடிவினும்
விருத்த நடையது வேற்றிசைப் பாவே
** 2 பெயர்கள் 105
#106
** உரைப் பொருள்
விரித்துரை மெய்உரை உரைப்பொருள் ஆகும்
** 2 பெயர்கள் 106
#107
** பொழிப்பு என்பது
பொழிப்பு எனப்படுவது பொருந்திய பொருளைப்
பிண்டமாகக் கொண்டு உரைப்பதுவே
** 1 பெயர் 107
#108
** பதிகம்
பதிகக்கிளவி பல வகைப் பொருளைத்
தொகுதியாகச் சொல்லுதல் ஆகும்
** 1 பெயர் 108
#109
** இலக்கியம்
இலக்கியம் உதாரணம் எடுத்துக்காட்டல்
#110
** மற்றும் இலக்கியம்
இதிகாசமுமே இலக்கியம் ஆகும்
** 3 பெயர்கள் 110
#111
** அரும் பொருள்
ஞாபகமும் பிசியும் அரும்பொருள் நடைய
** 2 பெயர்கள் 111
#112
** பா
தூக்கும் யாப்பும் செய்யுளும் கவியும்
பாட்டும் கவிதையும் பா எனப்படுமே
** 6 பெயர்கள் 112
#113
** வெண்பா
முதற்பா வெண்பா
** 1 பெயர் 113
#114
** கலிப்பா
முரட்கை கலிப்பா
** 1 பெயர் 114
#115
** ஆசிரியப்பா
அகவலும் தொகையும் ஆசிரியப்பாவே
** 2 பெயர்கள் 115
#116
** வண்ணகம்
அராகம் முடுகியல் வண்ணகம் ஆகும்
** 2 பெயர்கள் 116
#117
** குளகச் செய்யுள்
குற்றெழுத்துத் தொடரின் அது குளகச்செய்யுள்
** 1 பெயர் 117
#118
** சந்தப் பாட்டு
இருபதின் மேலும் இரு மூன்று எழுத்து நான்கு
அடியும் வருவது சந்தப்பாட்டே
** 1 பெயர் 118
#119
** தாண்டகம்
மற்று அதன் மிகுதிச் சொல் பெயர் தாண்டகம்
#120
** கணக்கு
எழுத்தும் எண்ணும் கணக்கு எனப்படுமே
** 2 பெயர்கள் 120
#121
** எண்
எண்ணே கரணம் கணிதம் அலகே
** 3 பெயர்கள்
#122
** எழுத்து ஆவன
பெயர்எழுத்து முடிவுஎழுத்து வடிவுஎழுத்து தன்மைஎழுத்து
என எழுத்தின் பெயர் இயம்பினரே
** 4 பெயர்கள் 122
#123
** ஒற்று எழுத்து
விராமமும் புலுதமும் மெய்யும் ஒற்றுஎழுத்தே
#124
** மற்றும் ஒற்று எழுத்து
தனிநிலை புள்ளி ஆய்தம் ஒற்றுஎழுத்தே
** 6 பெயர்கள் 124
#125
** உயர் மொழிக் காஞ்சி
நல்லவர் உறை உலகம் எய்த புலவர்
ஒழுக்கம் கொளுத்தும் முறை உயர்மொழிக்காஞ்சி
** 1 பெயர் 125
#126
** முது மொழிக் காஞ்சி
கழிந்தோர் ஏனை ஒழிந்தோர்க்குக் காட்டிய
முறைமை ஆகும் முதுமொழிக்காஞ்சி
#127
** பேர் இயல் காஞ்சி
கேட்டியல்பு உரைத்தது பேர்இயல்காஞ்சி
#128
** பொருள் மொழிக் காஞ்சி
அருள் மொழி மெய்ப் பொருள் பொருள்மொழிக்காஞ்சி
#129
** முது பாலை
நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனி மகள் புலம்பல் முதுபாலை ஆகும்
#130
** குறுங் கலி
நன்னுதலைத் துறந்து அவட்கு உற்று இசைப்புழி அவள்
முன் நின்று உரைத்தல் குறுங்கலி ஆகும்
#131
** பாசறை முல்லை
பாசறைமுல்லை தலைவன் பாசறைக்கண்
மாதரை உள்ளும் மரபிற்று ஆகும்
#132
** இல்லாள் முல்லை
இல்லாள்முல்லை பாசறைத் தலைவனை
நல்லாள் நினையும் நலத்தது ஆகும்
#133
** வள்ளைப் பாட்டு
ஊழ்முறை உலக்கை ஓச்சி வாழிய
தகு மனைக் கிழவர்தம் வளம் கூறி
மகளிர் பாடுவது வள்ளைப்பாட்டே
#134
** இசைப் பாட்டு
பாணி வரி பண் இசை கானம் தொளையே
பாணே தம் கந்தருவம் கேயம்
காமரம் என்று இவை இசைப்பாட்டு ஆகும்
** 11 பெயர்கள்
#135
** ஏனை என்பது
ஏனை என்பது ஓர் இசை விகற்பம் ஆகும்
#136
** வல் இசை
உச்சம் தாரம் ஓங்கும் வல்இசை
** 2 பெயர்கள் 136
#137
** மந்த இசை
காகுளி மந்தஇசை
** 1பெயர் 137
#138
** இன் இசை
இராகம் இன்னிசை
** 1 பெயர் 138
#139
** சமன் இசை
மந்தம் மத்திமம் வழங்கும் சமன்இசை
** 2 பெயர்கள் 139
#140
** பல்லியம் தழுவு பாடல்
சங்கீதம் பல்லியம்தழுவுபாடல்
**1 பெயர் 140
#141
** நரம்பின் ஒசை
எழாலே தந்திரி நரம்பின்ஓசை
**2 பெயர்கள்
#142
** பண் என்பது
நிறை நரம்பிற்றே பண் எனல் ஆகும்
** 1 பெயர் 142
#143
** திறம் என்பது
குறை நரம்பிற்றே திறம் எனப்படுமே
** 1 பெயர் 143
#144
** நால் வகை யாழ்
பேரியாழ் சகோடயாழ் மருதயாழ் செங்கோட்டுயாழ்
எனும் நான்கும் நால் வகை யாழ்ப் பெயர்
** 4 பெயர்கள் 144
#145
** நாற் பெரும் பண்
யாமை யாழ்ப் பெயர் குறிஞ்சி யாழும்
செவ்வழி யாழ்ப் பெயர் முல்லை யாழும்
பாலை யாழும் மருத யாழும் என
நால் வகை யாழும் நாற்பெரும்பண்ணே
** 4 பெயர்கள் 145
#146
** நெய்தல் யாழ்
திறன் இல் யாழே நெய்தல்யாழ் ஆகும்
** 1 பெயர் 146
#147
** குறிஞ்சி யாழ்த் திறன்
நைவளம் காந்தாரம் மெய்படு மலையம்
பஞ்சுரம் மருள் அயிர்ப்பு ஆற்று செந்திறம்
என்று இவை எட்டும் குறிஞ்சியாழ்த்திறனே
** 8 பெயர்கள் 147
#148
** முல்லை யாழ்த் இறன்
நேர்திறம் பெயர்திறம் யாமையாழ் சாதாரி
என்று இவை நான்கும் முல்லை யாழ்த் திறனே
** 4 பெயர்கள் 148
#149
** பாலை யாழ்த் இறன்
அராகம் நேர்திறம் உறுப்பு குறுங்கலி
ஆசான் ஐந்தும் பாலையாழ்த்திறனே
படுமலைப்பாலை செவ்வழிப்பாலை
செம்பாலை விளரிப்பாலை கொடிப்பாலை
மேல்செம்பாலை அரும்பாலை என்று இவை
ஏழும் பாலையாழ்த்திறன் என்ப
** 12 பெயர்கள் 149
#150
** மருத யாழ்த் திறன்
நவிர் படு குறிஞ்சி பியந்தை இ நான்கும்
மருதயாழின்திறன் ஆகும்மே
** 4 பெயர்கள் 150
#151
** நெய்தல் யாழ்த் திறன்
திறனில்யாழ் விளரி நெய்தல் நிலம் சிவணும்
** 2 பெயர்கள் 151
#152
** பாடல் ஆடல் துறைப் பாட்டிற்கு ஏற்பன
செந்துறை வெண்துறை பாடற்கு ஏற்பன
** 2 பெயர்கள்
அ மென்பாட்டே ஆடற்கு ஏற்பன
** 1 பெயர் 152
#153
** அக மார்க்கம் என்பது
அருமையின் பாடல் அமார்க்கம் ஆகும்
** 1 பெயர் 153
#154
** ஏழ் இசை
குரலே துத்தம் கைக்கிளை உழையே
இனியே விளரி தாரம் என்று இவை
எழு வகை இசைக்கும் எய்தும் பெயரே
** 7 பெயர்கள் 154
#155
** அவற்றின் ஓசை
சங்கு குயில் மயில் யானை புரவி
அங்க அன்னம் காடை அவற்று ஓசை
** 7 பெயர்கள் 155
#156
** மற்றும் ஏழ் இசை ஒசை
வண்டு கிள்ளை வாசி மதயானை
தவளை தேனு ஆடு ஏழ்இசைஓசை
** 7 பெயர்கள்
#157
** அவற்றின் எழுத்து
சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும்
பவ்வும் தவ்வும் நிவ்வும் என்று இவை
ஏழும் அவற்றின் எழுத்தே ஆகும்
** 7 பெயர்கள்
#158
** மற்றும் ஏழ் இசை ஒசை
வண்டு கிள்ளை வாசி மால் யானை
தவளை தேனுவோடு ஆடு இசை ஓசை
** 7 பெயர்கள்
#159
** இவற்றின் எழுத்து
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனும்
இவ் ஏழ் எழுத்தும் ஏழ் இசைக்கு உரிய
** 7 பெயர்கள்
#160
** இவற்றின் பிறப்பு இடம்
மிடறும் தாலும் அண்ணமும் சிரமும்
நெற்றியும் நெஞ்சும் நாசியும் முறையே
குரல் ஆதி ஏழ் இசைக்குப் பிறப்பு இடமே
** 7 பெயர்கள்
#161
** இவற்றின் மாத்திரை
இளி துத்தம் குரற்கு ஏற்கும் நந்நான்கே
கிளையும் விளரியும் மும்மூன்று உழையும்
தாரமும் இவ் இரண்டு ஏழ் இசை மாத்திரை
#162
** வெற்றியின் மணம்
மெளவல் முல்லை கடம்பு வஞ்சி
நெய்தல் வீரை புன்னையும் இசை மணம்
** 7 பெயர்கள்
#163
** இவற்றிற்கு ஈசர்
விசுவாமித்திரன் இயமன் அங்கி
சசியே வெய்யோன் கெளதமன் காசிபன்
இவ் ஏழ் பெயரும் ஏழ் இசைக்கு ஈசர்
** 7 பெயர்கள்
#164
** இராகம்
தக்கராகம் துக்கராகம்
பழந்தக்கராகம் நட்டராகம்
கின்னராகம் சங்கின்னராகம்
நிருபதுங்கராகம் என்ன வருபவை
இராகப்பெயர் என இசைத்தனர் புலவர்
** 7 பெயர்கள்
#165
** கொல்லி வகை
சாயவேளர்கொல்லி சித்திரவேளர்கொல்லி
இத் திறம் கொல்லிப் பெயர் என இசைப்பர்
** 2 பெயர்கள் 165
#166
** வராடி வகை
ஆரியவராடி கொல்லிவராடி
தீபவராடி என்னும் திறமும்
ஆகும் வராடிக்கு அமைந்த பல் பெயரே
** 3 பெயர்கள் 166
#167
** குறிஞ்சி வகை
சாவகன்குறிஞ்சி மேகராகக்குறிஞ்சி
வியாழக்குறிஞ்சி அந்தாளிக்குறிஞ்சி
ஆகும் குறிஞ்சிக்கு அடுத்த பல் பெயரே
** 4 பெயர்கள் 167
#168
** பஞ்சமம்
காந்தாரபஞ்சமம் உருத்திரபஞ்சமம்
** 2 பெயர்கள் 168
#169
** தக்கேசி
பஞ்சமம் காம்போதி பாண்டி தக்கேசி
** 3 பெயர்கள் 169
#170
** இந்தளம்
இந்தளம் மருள் இந்தளமே ஆகும்
** 1 பெயர் 170
#171
** பண்
இராமக்கிரி தேசாக்கிரி கொண்டைக்கிரி
மகுடராமக்கிரி அந்தாளி
பாடை நட்டபாடை அருமவதி
செந்துருதி சிகரமாம் சிகண்டி
காந்தாரம் புறநீர்மை குறண்டி கெளசிகம்
நாட்டை சாதாரி சாயரி குச்சரி
நளுத்தை பழம்பஞ்சுரம் பஞ்சுரம் கவ்வாணம்
கொல்லி கவ்வாணம் காஞ்சிக்கவுடிகம்
மலகரி பயிரவி காம்போதி என்னப்
பண்ணும் திறமும் பிறவும் பண்ணே
** 26 பெயர்கள் 171
#172
** ஒலித்தல்
கலித்தல் சும்மை கம்பலை அழுங்கல்
சிலைத்தல் துவைத்தல் சிலம்பல் இரங்கல்
இமிழ்த்தல் விம்மல் இரட்டல் ஏங்கல்
கனைத்தல் தழங்கல் கறங்கல் அரற்றல்
இசைத்தல் என்று இவை ஒலித்தலை இசைக்கும்
#173
** மற்றும் ஒலித்தல்
சிரற்றல் தொனித்தல் தெழித்தல் குமுறல்
உரற்றல் உளைத்தல் உரைத்தல் ஏங்கல்
இரைத்தல் உலம்பல் இடித்தல் முழக்கல்
குரைத்தல் தெவிட்டல் குளிறல் இயம்பல்
சிலம்பல் அலம்பல் சிதைத்தல் புலம்பல்
இலங்கு இ நால்ஐந்து ஒலித்தலுக்கு ஏற்கும்
** 37 பெயர்கள் 173
#174
** ஒலி
ஓதை நாதம் கம்பலை ஓலே
ஆகுலம் புலம்பல் கோடணை அரவம்
ஓசை கர்ச்சனை ஒலி என் கிளவி
#175
** மற்றும் ஒலி
சுருதி துழனி தொனி ஆரவாரம்
இரை உரை சும்மை இசை களன் வகுணி
பாட்டு இடி ஆறுஇரண்டு ஒலியினைப் பகரும்
** 12 பெயர்கள் 175
#176
** சிலை ஒலி
மருமராஞ்சம் வழங்கும் சிலைஒலி
** 1 பெயர் 176
#177
** உள் ஒசை
முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும்
உழைவும் நுணுக்கமும் உள்ஒசை ஆகும்
** 6 பெயர்கள் 177
#178
** எழுத்து இலா ஒசை
பிளிறலும் குளிறலும் பிரற்றலும் சிரற்றலும்
மருளலும் பயிறலும் குரைத்தலும் கனைத்தலும்
முளைத்தலும் அகவலும் எழுத்துஇலாஓசை
** 10 பெயர்கள் 178
#179
** ஆரவாரம்
அதிர்ச்சி அழுங்கல் ஞெள்ளல் உரற்றல்
குரைத்தல் தழங்கல் பிளிறல் துவைத்தல்
கலித்தல் கரைதல் ஓதை பராரை
தெளித்தல் புலம்பல் பூசல் தமரம்
கனைத்தல் சிள்எனல் ஒலி கோலாகலம்
அனைத்தும் திமிலமொடு ஆரவாரம்
** 21 பெயர்கள் 179
#180
** ஒன்று அலாப் பேர் ஒலி
தமரம் பூசல் ஆர்ப்பு கர்ச்சனை
குமுறல் உலம்பல் கோடணை கோலா
கலமே தெழித்தல் கலகம் ஆகுலமோடு
உளறுதல் முந்நான்கு ஒன்றுஅலாப்பேர்ஒலி
** 12 பெயர்கள் 180
#181
** அனுகரண ஓசை
இம்எனல் கல்எனல் இழும்எனல் வல்எனல்
பொம்எனல் ஒல்எனல் பொள்எனல் ஞெள்எனல்
அன்ன அனுகரணஓசை ஆகும்
#282
** மற்றும் அனுகரண ஒசை
கொம்எனல் விடேல்எனல் நெரேல்எனல் முகேர்எனல்
அம்எனல் சரேல்எனல் அனுகரணஓசை
** 14 பெயர்கள் 182
#183
** உபய ஒசை
படபடெனல் களகளெனல் பதபதெனல் கொளகொளெனல்
மொடுமொடெனல் திடுதிடெனல்
மொகமொகெனல் கலகலெனல்
நெடநெடெனல் கடகடெனல் நிறை உபயஓசை
** 10 பெயர்கள் 183
#184
அரக்கரைப் பொருத முரண் போர் வில்லும்
பாரதம் பொருத பேர் இசைச் சிலையும்
தாருகன் கடிந்த வீரத்து அயிலும்
பாடிய புலவன் பதி அம்பல் சேந்தன்
பயில்வுற்ற திவாகரத்துப்
** பத்தாவது ஒலி பற்றிய பெயர்த் தொகுதி முற்றிற்று
@11 ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி
** ஆதியில் பொருள்
#1
** அங்கதம்
அங்கதம் தோள்அணி அரவும் ஆகும்
** 2 பெயர்கள்
#2
** அசைதல்
அசைதல் ஆடலும் தங்கலும் உரித்தே
** 2 பெயர்கள் 2
#3
** அடுதல்
அடுதல் மிறைசெயலும் கோறலும் ஆகும்
** 2 பெயர்கள் 3
#4
** அணி
அணியே பூணும் அழகும் ஆகும்
** 2 பெயர்கள் 4
#5
** அண்டர்
அண்டர் தேவரும் ஆயரும் ஆகும்
** 2 பெயர்கள் 5
#6
** அண்ணல்
அண்ணல் பெருமையும் தலைவனும் அணுகலும்
** 3 பெயர்கள் 6
#7
** அந்தம்
அந்தம் ஈறும் அழகும் ஆகும்
** 2 பெயர்கள் 7
#8
** அந்தில்
அந்தில் அவ்விடமும் அசைநிலைக்கிளவியும்
** 2 பெயர்கள் 8
#9
** அமர்தல்
அமர்தல் மிகுதியும் பொலிவும் ஆகும்
** 2 பெயர்கள் 9
#10
** அம்பரம்
அம்பரம் கூறையும் கடலும் ஆகாயமும்
** 3 பெயர்கள் 10
#11
** அயில்
அயிலே வேலும் கூர்மையும் ஆகும்
** 2 பெயர்கள் 11
#12
** அரணம்
அரணம் மதிலும் கவசமும் ஆகும்
** 2 பெயர்கள் 12
#13
** அரலை
அரலை கழலையோடு அரும் கனிக்காழே
** 2 பெயர்கள் 13
#14
** அரில்
அரிலே பிணக்கமும் சிறுதூறும் குற்றமும்
** 3 பெயர்கள் 14
#15
** அருகல்
அருகல் சுருங்கலும் சாதலும் ஆகும்
** 2 பெயர்கள் 15
#16
** அருணம்
அருணம் சிவப்பும் ஆனும் ஆகும்
** 2 பெயர்கள் 16
#17
** அலரி
அலரி பூமரனும் அருக்கனும் ஆகும்
** 2 பெயர்கள் 17
#18
** அழுங்கல்
அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்
** 2 பெயர்கள் 8
#19
** அள்
அள்ளே கூர்மையும் செறிவும் ஆகும்
** 2 பெயர்கள் 19
#20
** அறல்
அறலே அறுதலும் நீரும் நீர்த்திரையும்
திரை அலைத்து உறு நுண்கருமணலும் ஆகும்
** 4 பெயர்கள் 20
#21
** அற்றம்
அற்றம் மறைபொருளும் சோர்வும் ஆகும்
** 2 பெயர்கள் 21
#22
** ஆகம்
ஆகம் மார்பும் உடலும் ஆகும்
** 2 பெயர்கள் 22
#23
** ஆசு
ஆசு சிறுமையும் குற்றமும் விரைவும்
பேசின் மெய்புகுகருவியும் ஆகும்
** 4 பெயர்கள் 23
#24
** ஆயம்
ஆயம் கூட்டம் சூதுக்கருவி
**2 பெயர்கள் 24
#25
** ஆய்தல்
ஆய்தல் நுணுக்கமும் தெரிதலும் ஆகும்
** 2 பெயர்கள் 25
#26
** ஆரல்
ஆரல் செவ்வாய்க்கோளும் கார்த்திகைநாளும்
** 2 பெயர்கள் 26
#27
** ஆர்
ஆரே கூர்மையும் ஆத்தியும் ஆகும்
தேர் ஆழி அகத்தில் செறி உறுப்பும் ஆகும்
** 3 பெயர்கள் 27
#28
** ஆர்தல்
ஆர்தல் நிறைதலும் உண்டலும் ஆகும்
** 3 பெயர்கள் 28
#29
** ஆலுதல்
ஆலுதல் ஆடல் ஒலித்தலும் ஆகும்
** 2 பெயர்கள் 29
#30
** இகுத்தல்
இகுத்தல் செகுத்தலும் வீழ்த்தலும் ஆகும்
** 2 பெயர்கள் 30
#31
** இதை
இதையே மரக்கலப்பாய் புதுப்புனமே
** 2 பெயர்கள் 31
#32
** இயல்
இயலே சாயல் நடை என்று ஆகும்
** 2 பெயர்கள் 38
#33
** இரங்கல்
இரங்கல் அரவமும் அழுங்கலும் இசைக்கும்
** 2 பெயர்கள் 33
#34
** இரலை
இரலைக் கிளவி தலைநாள் பெயரும்
ஊதுகொம்பும் புல்வாயும் கலையும்
** 4 பெயர்கள் 34
#35
** இழும் எனல்
இழும்எனல் ஓசையும் இனிமையும் ஆகும்
** 2 பெயர்கள் 35
#36
** இளைமை
இளைமை இளைமைத்தன்மையும் மத்தமும்
** 2 பெயர்கள் 36
#37
** இறுத்தல்
இறுத்தல் தங்கலும் சொல்லலும் ஆகும்
** 3 பெயர்கள் 37
#38
** இறை
இறையே கடனும் இல்லின் இறப்பும்
சிறுமையும் தங்கலும் உயர்ந்தோரும் சிறக்கும்
** 5 பெயர்கள் 38
#39
** உடு
உடுவே நாள்மீன் பகழியும் ஆகும்
** 2 பெயர்கள் 39
#40
** உணர்தல்
உணர்தல் கருதல் தெளிவும் ஆகும்
** 2 பெயர்கள் 40
#41
** உந்தி
உந்தி கொப்பூழும் தேர்உருளும் யாறும்
வந்துழி யாழ்க்கண்ணது ஓர் உறுப்பும் வரையார்
** 4 பெயர்கள் 41
#42
** உம்பர்
உம்பர் மேல்இடம் அமரர்க்கும் உரித்தே
** 2 பெயர்கள் 48
#43
** உருத்தல்
உருத்தல் தோன்றல் வெகுட்சியும் ஆகும்
** 2 பெயர்கள் 45
#44
**உழை
உழையே மானும் யாழின்ஓர்நரம்பும்
அருகில்இடனும் அறைதற்கும் உரித்தே
** 3 பெயர்கள் 44
#45
** உறழ்வு
உறழ்வே இடையீடும் உணர்வும் ஒத்தலும்
செறிவும் என்று இவை தெரிதற்கும் உரித்தே
** 4 பெயர்கள் 45
#46
** ஊறு
ஊறு இடையூறும் உற்றிடு கொலையும்
** 2 பெயர்கள்
#47
** எஃகு
எஃகே வேலொடு கூர்மையும் இசைக்கும்
** 2 பெயர்கள்
#48
** எதிரி
எதிரி இரு பெயர்ப் படைக்கும் எய்தும்
**1 பெயர்
#49
** எல்
எல்லே ஒளியும் இரவின்பொழுதும்
** 2 பெயர்கள்
#50
** எல்லை
எல்லை பகலவனும் அளவையும் இசைக்கும்
** 2 பெயர்கள்
#51
** எள்ளல்
எள்ளல் நகையும் இகழ்ச்சியும் ஆகும்
** 2 பெயர்கள்
#52
** எற்றுதல்
எற்றுதல் புடைத்தலும் எறிதலும் ஆகும்
** 2 பெயர்கள்
#53
** எற்று எனல்
எற்றுஎனல் எறிஎனல் என்எனலும் ஆகும்
**2 பெயர்கள்
#54
** ஏணி
ஏணி உலகமும் எல்லையும் ஆகும்
** 2 பெயர்கள்
#55
** ஏண்
ஏணே வலியும் நிலையுடைமையும் ஆகும்
** 2 பெயர்கள்
#56
** ஏவல்
ஏவல் வியங்கொளும் ஆணையும் ஆகும்
** 2 பெயர்கள்
#57
** ஏற்றல்
ஏற்றல் கோடலும் எதிர்ந்துபொருதலும்
** 2 பெயர்கள்
#58
** ஏனை
ஏனை மீன்விகற்பமும் ஒழிவும் ஆகும்
** 2 பெயர்கள்
#59
** கடி
கடி என் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்கம் அச்சம் சிறப்பே
வரைவே மிகுதி புதுமை தோற்றம்
மெய்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே
ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே
** 12 பெயர்கள்
#60
** கடிகை
கடிகை பேதம் சமயங்கள் நாழிகை
** 3 பெயர்கள்
#61
** கடு
கடுவே கடுமரம் விடமும் ஆகும்
** 2 பெயர்கள்
#62
** கணை
கணையே திரட்சியும் பகழியும் ஆகும்
** 2 பெயர்கள்
#63
** கண்டம்
கண்டம் மெய்புகுகருவி கழுத்து
துண்டம் திரை வாள் தேசம் ஆகும்
** 6 பெயர்கள்
#64
** கதலி
கதலி வாழையும் துகிற்கொடியும் ஆகும்
** 2 பெயர்கள்
#65
** கதழ்வு
கதழ்வு வேகமும் சிறத்தலும் காட்டும்
#66
** கனம்
கனமே வட்டமும் திரட்சியும் ஆகும்
கனமொடு செறிவும் மேகமும் ஆகும்
** 5 பெயர்கள்
#67
** கந்தம்
கந்தம் புலனே கிழங்கும் கடியும்
** 3 பெயர்கள்
#68
** கந்தரம்
கந்தரம் மலைமுழை கழுத்தும் ஆகும்
வந்துழி மேகப்பெயரும் வரையார்
** 3 பெயர்கள்
#69
** கயம்
கயமே ஆழமும் யானைக்கன்றும்
** 2 பெயர்கள்
#70
** கய
கயவே பெருமையும் மேன்மையும் காட்டும்
** 2 பெயர்கள்
#71
** கரில்
கரிலே கொடுமையும் குற்றமும் கார்ப்பும்
** 3 பெயர்கள்
#72
** கரைதல்
கரைதல் மொழிதலும் கூவலும் ஆகும்
** 2 பெயர்கள்
#73
** கலித்தல்
கலித்தல் எழுச்சியும் ஒலித்தலும் ஆகும்
** 2 பெயர்கள்
#74
** கலுழி
கலுழி கலங்கல்நீர் முல்லைநிலக்கான்யாறு
** 2 பெயர்கள்
#75
** கலை
கலையே நூல் கல்வி காஞ்சி ஆடையும்
முசுவும் ஆன்ஏறும் காலநுட்பமும்
** 7 பெயர்கள்
#76
** கவனம்
கவனம் கலக்கம் காடும் ஆகும்
** 2 பெயர்கள்
#77
** கவலை
கவலை துன்பமும் கவர்த்த வழியும்
** 2 பெயர்கள்
#&8
** கழங்கு
கழங்கு ஓர் ஆடலும் கொடிக் கழலும் ஆகும்
** 2 பெயர்கள்
#79
** கழிதல் – இறத்தல்
கழிதலும் இறத்தலும் என இரு கிளவியும்
மிகுத்தலும் கடத்தலும் சாதலும் விளம்பும்
** 3 பெயர்கள்
#80
** கற்பம்
கற்பம் ஊழியும் கமலத்தோன்ஆயுளும்
** 2 பெயர்கள்
#81
** கனலி
கனலி தீபழும் கதிரவனும் ஆகும்
** 2 பெயர்கள்
#82
** கனவு
கனவே மயக்கமும் துயிலும் ஆகும்
** 2 பெயர்கள்
#83
** கா
காவே காத்தலும் காவும் ஆகும்
** 2 பெயர்கள்
#84
** காசு
காசு மணியும் குற்றமும் ஆகும்
** 2 பெயர்கள்
#85
காசை
காசை நாணலும் காயாமரமும்
**2 பெயர்கள்
#86
** காதை
காதை மொழியும் கதையும் ஆகும்
** 2 பெயர்கள்
#87
** காயம்
காயம் யாக்கையும் கார்ப்பும் ஆகும்
** 2 பெயர்கள்
#88
** கார்
காரே மேகமும் மாரிக்காலமும்
நீரும் கருமையும் நிகழ்த்தும் கிளவி
** 4 பெயர்கள்
#89
** காலம்
காலம் நாள்கூறும் காலமும் ஆகும்
** 2 பெயர்கள்
#90
** கானல்
கானல் கதிர்ஒளியும் கடல் சார்பின் மலைச் சார்பின்
தான் எழு நல் மரச்சோலையும் தழுவும்
** 3 பெயர்கள்
#91
** கான்
கானே விரையும் காடும் ஆகும்
** 2 பெயர்கள்
#92
** குயிறல்
குயிறல் கூறலும் செறிதலும் குடைதலும்
** 3 பெயர்கள்
#93
** குரல்
குரலே கதிரும் யாழின்ஓர்நரம்பும்
** 2 பெயர்கள்
#94
** குரை
குரையே ஒலியும் இடைச்சொல்லும் ஆகும்
** 2 பெயர்கள்
#95
** குலம்
குலமே இல்லமும் குடிமையும் கூட்டமும்
** 3 பெயர்கள்
#96
** குழல்
குழலே மயிரும் துளையும் கூறும்
** 2 பெயர்கள்
#97
** குழை
குழையே குண்டலம் தளிர் சேறும் ஆகும்
** 3 பெயர்கள் 97
#98
** கூலம்
கூலப்பெயர் பண்டமும் பலபண்டத்தெருவும்
வார் புனற்கரையும் வந்துழிக் கொளலே
** 3 பெயர்கள் 98
#99
** கேவலம்
கேவலம் தனிமையும் முத்தியும் ஆகும்
** 2 பெயர்கள் 99
#100
** கேள்வி
கேள்வி கல்வியும் செவியும் கிளக்கும்
** 3 பெயர்கள் 100
#101
** கொண்டல்
கொண்டல் மேகமும் கூதிர்க் கீழ்காற்றும்
** 2 பெயர்கள் 101
#102
** கொற்றம்
கொற்றம் அரசியலும் வெற்றியும் ஆகும்
** 2 பெயர்கள் 102
#103
** கோடரம்
கோடரக் கிளவி கொம்பொடு மரத்தின்
கோடும் பொதும்பும் கூறும் என்ப
** 3 பெயர்கள் 103
#104
** கோடு
கோடே சங்கும் ஊதுகொம்பும்
மாவின் மருப்பும் மரத்தின் பணையும்
நீள் புனல் கரையும் நிகழ்த்தும் கிளவி
** 5 பெயர்கள்
#105
** கோள்
கோளே குணமும் கோட்பாடும் கோளும்
** 3 பெயர்கள் 05
#106
** சிரகம்
சிரகம் துவலையும் கரகமும் ஆகும்
** 2 பெயர்கள் 106
#107
** சிலம்பு
சிலம்பே மலையும் ஒலியும் ஆகும்
பொலம் செய் காலணியும் புணர்தற்கும் உரித்தே
** 3 பெயர்கள் 107
#108
** சிறை
சிறையே காவலும் இறகும் செப்பும்
** 2 பெயர்கள் 108
#109
** சினை
சினையே கருவும் உறுப்பும் மரக்கோடும்
** 3 பெயர்கள் 109
#110
** சுடிகை
சுடிகை சுட்டி மயிர்முடியும் ஆகும்
** 2 பெயர்கள் 110
#111
** சூர்
சூர் தெய்வம் அச்சம் நோய் அஞ்சாமையும் சொல்லும்
** 4 பெயர்கள் 111
#112
** சூழி
சூழி முகபடாம் வாவியும் சொல்லும்
** 2 பெயர்கள் 112
#113
** செயிர்
செயிரே குற்றமும் சினவலும் ஆகும்
** 2 பெயர்கள் 113
#114
** செழுமை
செழுமை வளனும் கொழுப்பும் ஆகும்
** 2 பெயர்கள் 114
#115
** சேண்
சேணே உயர்வும் நீளமும் ஆகும்
** 2 பெயர்கள் 115
#116
** சேத்து
சேத்து என் கிளவி கருத்தோடு ஒப்பே
** 2 பெயர்கள் 116
#117
** ஞென்ளல்
ஞெள்ளல் தெருவே மேன்மையும் நிகழ்த்தும்
** 2 பெயர்கள் 117
#118
** தடம்
தடமே பெருமை கோட்டம் மலை ஆகும்
** 3 பெயர்கள் 118
#119
** தண்ணடை
தண்ணடை நாடும் ஊரும் ஆகும்
** 2 பெயர்கள் 119
#120
** தபுதல்
தபுதல் கெடுதலும் சாதலும் ஆகும்
** 2 பெயர்கள் 120
#121
** தரணி
தரணி நிலனும் மலையும் இரவியும்
** 3 பெயர்கள் 121
#122
** தவ
தவ என் கிளவி மிகுதலும் குறைதலும்
** 2 பெயர்கள் 122
#123
** தளிமம்
தளிமம் அழகொடு மெத்தையும் ஆகும்
** 2 பெயர்கள் 123
#124
** தன்மை
தன்மை இயல்பும் தன்மையுடைப் பொருளும்
** 2 பெயர்கள் 124
#125
** தா
தாவே வலியும் வருத்தமும் ஆகும்
தா என் கிளவி இடையீடும் ஆகும்
** 3 பெயர்கள் 125
#126
** தாமம்
தாமம் ஒளியும் தார் மாலையும் ஆகும்
** 2 பெயர்கள் 126
#127
** தாயம்
தாயம் உரிமையும் தம் குடித் தமரும்
** 2 பெயர்கள் 127
#128
** தாரம்
தாரம் அரும்பண்டம் வெள்ளியதனொடு
சேரும் ஏழ் நரம்பில் ஓர் நரம்பும் செப்பும்
** 3 பெயர்கள் 128
#129
** தாலம்
தாலம் தரை பனை நாவும் உண்கலனும்
** 4 பெயர்கள் 129
#130
** துணங்கை
துணங்கை ஆடலும் திருநாளும் விழாவும்
** 3 பெயர்கள் 130
#131
** துன்னல்
துன்னல் குறுகலும் செறிவும் சொல்லும்
** 2 பெயர்கள் 131
#132
** தூங்கல்
தூங்கல் ஆடலும் தாழ்வும் சொல்லும்
** 2 பெயர்கள் 132
#133
** தேசிகம்
தேசிகம் திசைச்சொல்லும் அழகும் செப்பும்
** 2 பெயர்கள் 133
#134
** தோடு
தோடே தொகுதியும் பனைஇதழ் போல்பவும்
பூவின்இதழும் புகலும் கிளவி
#135
** தோல்
தோலே யானையும் வனப்பும் தோல்பலகையும்
** 3 பெயர்கள் 135
#136
** நந்தல்
நந்தல் கேடும் ஆக்கமும் ஆகும்
** 2 பெயர்கள் 136
#137
** நவம்
நவமே புதுமையும் ஒன்பதும் ஆகும்
** 2 பெயர்கள் 137
#138
** நளி
நளியே பெருமையும் சீதமும் செறிவும்
** 3 பெயர்கள் 138
#139
** நனவு
‘நனவே உணர்ச்சியும் அகலமும் ஆகும்
தெளிவும் அதனொடு செப்பற்கும் உரித்தே
** 3 பெயர்கள் 149
#140
** நனை
நனை பூமொட்டிற்கும் கள்ளிற்கும் நாமம்
** 2 பெயர்கள் 140
#141
** நியமம்
நியமம் அங்காடியும் நியதியும் தெருவும்
** 3 பெயர்கள் 141
#142
** நிழற்றல்
நிழற்றல் நுணுக்கமும் நிழற்செயலும் ஆகும்
** 2 பெயர்கள் 142
#143
** நீவல்
நீவல் என்பது தடவலும் துடைத்தலும்
** 2 பெயர்கள் 143
#144
** நீவி
நீவி ஆடையும் கொய்சகமும் ஆகும்
** 2 பெயர்கள் 144
#145
** நூல்
நூலே எண்ணும் பனுவலும் ஆகும்
** 3 பெயர்கள் 145
#146
** நூறு
நூறே பொடியும் நூறும் ஆகும்
** 3 பெயர்கள் 146
#147
** நெய்தல்
நெய்தல் ஆம்பலும் கடல் சார் நிலனும்
** 2 பெயர்கள் 147
#148
** நொறில்
தொறிலே அடக்கமும் விரைவும் ஆகும்
** 2 பெயர்கள் 148
#149
** படர்
படரே கருத்து நெறியொடு பரிவே
** 3 பெயர்கள் 149
#150
** படி
படியே பாரும் பகையும் ஆகும்
** 2 பெயர்கள் 150
#151
** படிவம்
படிவம் விரதமும் வடிவும் ஆகும்
** 2 பெயர்கள் 151
#152
** படு
படுவே படுதலும் படுகலைவல்லோனும்
** 2 பெயர்கள் 152
#153
** பட்டிகை
பட்டிகை கச்சும் பணையிரதமும் ஆகும்
** 2 பெயர்கள் 153
#154
** பணை
பணையே பருத்தலும் பிழைத்தலும் பழனமும்
முரசும் மரக்கோடும் புரவியின் பந்தியும்
** 6 பெயர்கள் 54
#155
** பதங்கம்
பதங்கம் விட்டிலொடு பறவையின் பொதுப் பெயர்
** 2 பெயர்கள் 155
#156
** பதலை
பதலை தாழியும் பரந்த வாய்ப் பறையும்
** 3 பெயர்கள் 156
#157
** பதி
பதியே உறைவிடம் தலைவனும் ஆகும்
** 2 பெயர்கள் 157
#158
** பரவை
பரவை கடலும் பரப்பும் ஆகும்
** 2 பெயர்கள் 158
#159
** பரிவு
பரிவு துன்பமும் இன்பமும் ஆகும்
** 2 பெயர்கள் 159
#160
** பலி
பலியே ஐயமும் சோறும் ஆகும்
** 2 பெயர்கள் 160
#161
** பள்ளி
பள்ளி இடனும் துயிலும் ஆகும்
** 2 பெயர்கள்
#162
** பாங்கு
பாங்கு அழகு உரிமை பக்கம் ஆகும்
** 3 பெயர்கள்
#!63
** பாசம்
பாசம் ஊசித்துளையொடு கயிறே
ஆசை பிசாசம் ஓர் ஆயுதம் ஆகும்
** 5 பெயர்கள்
#164
** பாடலம்
பாடலம் சிவப்பும் பாதிரியும் ஆகும்
** 2 பெயர்கள்
#165
** பாடி
பாடி நகரமும் நாடும் படைவீடும்
** 3 பெயர்கள்
#166
** பாடு
பாடே பெருமையும் ஒலியும் படுதலும்
** 3 பெயர்கள்
#167
** பிரசம்
பிரசம் தேன் கள்ளே தேனீப் பெயரே
** 3 பெயர்கள்
#168
** பிறங்கல்
பிறங்கல் உயர்வும் மலையும் பெருமையும்
** 3 பெயர்கள்
#169
** பிறழ்தல்
பிறழ்தல் ஒளிவிடலும் பெயர்தலும் ஆகும்
** 2 பெயர்கள்
#170
** புணரி
புணரி கடலும் திரையும் ஆகும்
** 2 பெயர்கள்
#171
** புண்டரீகம்
புண்டரீகம் தாமரை புலியே
** 2 பெயர்கள்
#172
** புதை
புதை கணைக்கட்டே புதுமையும் ஆகும்
** 2 பெயர்கள்
#173
** புரிதல்
புரிதல் விரும்பலும் செய்தலும் ஆகும்
** 2 பெயர்கள்
#174
** புலம்பு
புலம்பே தனிமையும் நடுக்கமும் புலம்பலும்
** 3 பெயர்கள் 174
#175
** பூ
பூவே அழகும் கூர்மையும் பொலிவும்
** 3 பெயர்கள் 175
#176
** பொழில்
பொழிலே சோலையும் உலகமும் புகலும்
** 2 பெயர்கள் 176
#177
** பொறை
பொறையே சுமத்தலும் பரித்தலும் பொறுத்தலும்
** 3 பெயர்கள் 177
#178
** போற்றல்
போற்றல் பாதுகாத்தலும் புகழ்தலும்
** 2 பெயர்கள் 178
#179
** மகரம்
மகரம் மீன்ஏறும் தாதும் ஆகும்
** 2 பெயர்கள் 179
#180
** மஞ்சு
மஞ்சு மேகமும் இளைமையும் வனப்பும்
** 3 பெயர்கள் 180
#181
** மதர்வு
மதர்வு என் கிளவி மகிழ்வும் மிகுதியும்
** 2 பெயர்கள் 181
#182
** மதலை
மதலைக் கிளவி தூணே மரக்கலம்
புதல்வன் பெயர் கொடுங்கை பாவை போல்வன
தகவிற்று ஆகும் சார்பின் எவையும்
** 5 பெயர்கள் 182
#183
** மலர்தல்
மலர்தல் தோன்றலும் எதிர்தலும் விரிதலும்
** 3 பெயர்கள் 183
#184
** மலைதல்
மலைதல் பொருதலும் மலர் சூடுதலும்
** 2 பெயர்கள் 184
#185
** மறலி
மறலி கூற்றும் மயக்கமும் ஆகும்
** 2 பெயர்கள் 185
#186
** மறை
மறையே வேதமும் மறைத்து மொழி கிளவியும்
** 2 பெயர்கள்
#187
** மற்று
மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை
** 2 பெயர்கள் 187
#188
** மனவு
மனவே அக்குமணி சங்கு மணிப் பொது
** 3 பெயர்கள் 188
#189
** மா
மாவே பெருமையும் கருமையும் சூதமும்
மேவிய நாற்கால் உடையவும் வண்டும்
பூஉறைதிரு என ஆறையும் பொருந்தும்
** 6 பெயர்கள் 189
#190
** மாதர்
மாதர் காதலும் மகளிரும் ஆகும்
** 2 பெயர்கள் 190
#191
** மானுதல்
மானுதல் ஒப்பும் மயக்கமும் ஆகும்
** 3 பெயர்கள் 191
#192
** முடலை
முடலை திரட்சியும் முருகும் ஆகும்
** 2 பெயர்கள் 192
#193
** முரண்
முரணே வலியும் பகையும் ஆகும்
** 2 பெயர்கள் 193
#194
** முற்று
முற்றே முழுவதும் வளைத்தலும் மொழியும்
** 2 பெயர்கள் 194
#195
** முனை
முனையே இறையும் பகையும் ஆகும்
** 2 பெயர்கள் 195
#196
** மூரல்
மூரல் நகை எயிறும் சோறும் ஆகும்
** 3 பெயர்கள் 196
#197
** மூரி
மூரி பெருமையும் ஆன்ஏறும் ஆகும்
** 2 பெயர்கள் 197
#198
** மூலம்
மூலம் ஓர் நாளும் வேரும் முதலும்
** 3 பெயர்கள் 198
#199
** மெய்
மெய்யே உடம்பும் உண்மையும் மெய்யெழுத்தும்
** 3 பெயர்கள் 199
#200
** வசி
வசியே வசியமும் வாளும் கூர்மையும்
** 3 பெயர்கள் 200
#201
** வடிவு
வடிவே மேனியும் உருவும் அல்குலும்
** 3 பெயர்கள் 201
#202
** வண்ணம்
வண்ணம் ஓசையும் வடிவும் ஆகும்
** 2 பெயர்கள் 202
#203
** வதுவை
வதுவை மன்றலும் மணமும் ஆகும்
** 2 பெயர்கள் 203
#204
** வனம்
வனமே காடும் நீரும் அழகும்
** 3 பெயர்கள் 204
#205
** வயா
வயாவே வேட்கைப்பெருக்கமும் வருத்தமும்
** 2 பெயர்கள் 205
#206
** வரி
வரியே பாடலும் எழுத்தும் வண்டும்
** 3 பெயர்கள் 206
#207
** வரைதல்
வரைதல் நீக்கலும் கொள்ளலும் ஆகும்
** 2 பெயர்கள் 207
#208
** வலன்
வலனே வென்றியும் வலமும் மேலிடமும்
** 3 பெயர்கள் 208
#209
** வல்லை
வல்லை விரைவு மதிலும் ஆகும்
** 2 பெயர்கள் 309
#210
** வழங்கல்
வழங்கல் கொடை சேறல் சொல்லலும் வரையார்
** 3 பெயர்கள் 310
#211
** வழி
வழியே இடனொடு பின்னும் வரையார்
** 2 பெயர்கள் 211
#212
** வள்
வள்ளே கூர்மையும் வாரும் வலியும்
** 3 பெயர்கள் 212
#213
** வறிது
வறிது சிறிது ஆகும் அருகலும் உரித்தே
** 2 பெயர்கள் 213
#214
** வாயில்
வாயில் பொறியும் வாயிலும் தாதும்
** 3 பெயர்கள் ரசி
#215
** வாய்
வாயே இடனும் மெய்யும் வாக்கும்
** 3 பெயர்கள் 215
#216
** வாரம்
வாரக் கிளவி ஏழ் கிழமையும் மலைச் சார்பும்
** 2 பெயர்கள் 216
#217
** வாழி
வாழி இடைச்சொல்லும் வாழ்க எனும் சொல்லும்
** 2 பெயர்கள் 217
#218
** வாள்
வாளே ஒளியும் வாள் படையும் ஆகும்
** 2 பெயர்கள் 318
#219
** விடங்கம்
விடங்கம் முகடும் அழகும் ஆகும்
** 2 பெயர்கள் 219
#220
** விண்டு
விண்டு மாயோனும் வெற்பும் வேயும்
** 3 பெயர்கள் 220
#221
** விம்மல்
விம்மல் ஒலித்தலும் விம்முதலும் ஆகும்
** 2 பெயர்கள் 221
#222
** விரை
விரை என் கிளவி சாந்தும் விரையும்
** 2 பெயர்கள் 222
#223
** வில்
வில்லே ஒளியும் வில் படையும் மூலமும்
** 3 பெயர்கள் 228
#224
** விளக்கு
விளக்கே ஒளியும் விளக்கும் ஆகும்
** 2 பெயர்கள் 224
#225
** விறப்பு
விறப்பே செறிவும் வெருவலும் பெருக்கமும்
** 3 பெயர்கள் 225
#226
** வீசுதல்
வீசுதல் கொடுத்தலும் எறிதலும் ஆகும்
** 2 பெயர்கள் 226
#227
** வெடி
வெடியே வெள்ளிடை வெருவும் ஆகும்
** 2 பெயர்கள் 227
#228
** வெம்மை
வெம்மை வேட்கை விரைவ என விளம்புவர்
** 2 பெயர்கள் 228
#229
** வெறி
வெறியே நாற்றம் வேரியோடு அணங்குஆட்டு
** 3 பெயர்கள் 229
#230
** வெறுக்கை
வெறுக்கை செல்வமும் விழுப்பொருளும் ஆகும்
** 2 பெயர்கள் 230
#231
** வேய்
வேயே மூங்கிலும் ஒற்றும் ஆகும்
** 2 பெயர்கள் 231
#232
** வேலன்
வேலன் முருகன் வெறியாட்டாளன்
** 2 பெயர்கள் 232
#233
** வேலி
வேலி மதிலும் காவலும் ஆகும்
** 2 பெயர்கள் 233
#234
** வேலை
வேலை தானே கடலும் கடற்கரையும்
காலமும் கூறும் கருவியது ஆகும்
** 3 பெயர்கள்
#235
** வேளாண்மை
வேளாண்மை உபகாரம் ஈகையும் விளம்பும்
** 2 பெயர்கள் 235
** ஆதியில் பொருள் முற்றிற்று
** அந்தத்துப் பொருள்
#236
** அணங்கு
தெய்வமும் தெய்வத்து உவமை மாதரும்
மையலும் நோயும் வருத்தமும் கொலையும்
ஐயம் என்று உரைக்கும் அணங்கு என் கிளவி
** 7 பெயர்கள் 236
#237
** அரி
கண்வரி கடல் பொன் கிண்கிணிப்பெய்பரல்
நல் நிறம் குதிரை தவளை குரங்கு
பகை வாள் சயனம் வலி வண்டு அம்பு
புகை எனப் பதினைந்தும் அரி எனப் புகல்ப
#238
** மற்றும் அரி
சிங்கம் திருமால் திகிரி இரவி
இந்திரன் காற்றே யமனே அங்கி என்று
அங்கண் வடமொழிச் சிதைவின் அரி ஆகும்
** 23 பெயர்கள் 238
#239
** அளகம்
மாதர்மயிரையும் மாவின்முள்ளையும்
நீரையும் அளகம் என நிகழ்தீதுவரே
** 3 பெயர்கள் 239
#240
** அளக்கர்
கடலும் நிலனும் சேறும் அளக்கர்
** 3 பெயர்கள்
#241
** அளி
வண்டின் பெயரும் மதுவும் கொடையும்
அன்பும் கூறும் அளி என் கிளவி
** 4 பெயர்கள் 241
#242
** ஆணை
ஏவல் மெய்ப்பாடு இலாஞ்சனை சூளே
ஆவயின் விறல் செயலும் ஆணைக் கிளவி
** 5 பெயர்கள் 242
#243
** ஆரம்
சந்தனம் மாலை பூண் ஆத்து முத்து என
வந்தன ஐந்தும் ஆரம் ஆகும்
**5 பெயர்கள்
#244
** ஆற்றல்
வலியும் செயலும் வல்லார் ஆற்றலும்
அளவினையும் உரைக்கும் ஆற்றல் கிளவி
** 4 பெயர்கள்
#245
** இடி
தகரமும் சுண்ணமும் தருப்பணப்பிண்டியும்
இனையவை இடி என இசைத்தல் வேண்டும்
** 3 பெயர்கள் 245
#246
** இதழ்
பூவின் தோடும் பனை இதழ் போல்பவும்
வாயின் அதரமும் இதழ் என வைப்பார்
** 3 பெயர்கள் 246
#247
** இராகம்
கீதமும் நிறமும் செந்நிறக் கெழுவும்
ஆதரவும் முடுகியலும் இராகம் எனப்படுமே
** 5 பெயர்கள் 247
#248
** இவர்தல்
சேறலும் எழுச்சியும் செலுத்தலும் விரும்பலும்
ஏறலும் இவர்தல் கிளவி கூறும்
** 5 பெயர்கள் 248
#249
** இறும்பூது
வியப்பு இராசீவம் சிறுதூறு மலை என
நயப்புடை நான்கும் இறும்பூது ஆகும்
** 4 பெயர்கள் 249
#250
** உலவை
மரத்தின் கோடும் மருப்பும் காற்றும்
உணர்த்தும் என்ப உலவைக் கிளவி
** 3 பெயர்கள் 250
#251
** உறை
நீர் முதலாகிய துளியும் மருந்து முதல்
நோய் நீக்கி இன்பம் கொடுக்கும் பொருளும்
கூறை மாசு கழுவு உவர் நீரும்
பால் உறு பிரையும் காரமும் ஒழுகலும்
ஓர் இடைச்சொல்லும் உறை எனற்கு உரிய
** 8 பெயர்கள் 251
#252
** ஊக்கம்
வண்மையும் முயற்சியும் மனத்தின் மிகுதியும்
உண்மையும் உரைக்கும் ஊக்கக் கிளவி
** 4 பெயர்கள் 252
#253
** ஊர்தி
தேரும் மாவும் சிவிகையும் என்று இவை
ஊர்தி என்னும் பெயரின் தோன்றும்
** 3 பெயர்கள் 253
#254
** எதினம்
கவரிமாவும் அன்னமும் நாயும்
எகினம் என்பர் இயல்பு உணர்ந்தோரே
** 3 பெயர்கள் 254
#255
** ஏமம்
சேமம் காவல் இன்பம் இரவு பொன்
ஏமாப்பு மயக்கம் ஏமம் ஆகும்
** 7 பெயர்கள்
#256
** ஓதி
மாதர்மயிரும் மாலையும் அன்னமும்
ஓதி என்பர் உணர்ந்திசினோரே
** 3 பெயர்கள்
#257
** ஓரி
ஆடவர்மயிரும் முசுவும் ஓரி
** 3 பெயர்கள்
#258
** ஓரை
கூட்டமும் மகளிர்விளையாட்டும் இராசிக்
கூற்றையும் ஓரைக் கிளவி கூறும்
** 3 பெயர்கள் 2848
#259
** கடி
வாசமும் பேயும் மணம்புணர்வும் என்று இவை
காசு இன்று உரைக்கும் கடி என் கிளவி
** 3 பெயர்கள் 259
#260
** கட்சி
காடும் கூடும் கட்சி ஆகும்
** 2 பெயர்கள் 260
#261
** கட்டளை
நிறை அறி கருவியும் உரை அறி கருவியும்
பிற வினை ஒப்பும் கட்டளைப் பெயரே
** 3 பெயர்கள் 261
#262
** கண்டகம்
சுரிகை உடைவாள் முள் இவை மூன்றும்
கருதின் கண்டகம் என்னக் கருதுவர்
** 3 பெயர்கள் 262
#263
** கம்பலை
இன்னாங்கோசை நடுக்கம் அச்சம்
கன்னித் தமிழோர் கம்பலை என்ப
** 3 பெயர்கள் 263
#264
** கரணம்
சொல்லிய முதற்பொருள் துணைக்காரணமும்
பல் வகை ஆடலும் மனத்தின் பகுதியும்
கல்வியும் எண்ணும் கரணம் என்று ஆகும்
** 5 பெயர்கள் 264
#265
** கருங் கை
கொன்று வாழ் தொழிலினும் வன் பணித் தொழிலினும்
கன்றிய தொழின்மை கருங்கை எனப்படும்/
** 2 பெயர்கள் 265
#266
** கருவி
கவசம் பல்லியம் தொடர்பு யாழ் படைக்கலம்
கனகம்முதற்பூண் தொகுதி மேகம்
கல்லணை உபகரணம் கழறும் கருவி
** 10 பெயர்கள் 266
#267
** கழல்
காலின்அடியும் கால்தொடுதோலும்
காலின்அணியும் கழல் எனக் கருதுவர்
** 3 பெயர்கள் 267
#268
** கழுது
வண்டும் பேயும் இதணமும் கழுது ஆம்
** 3 பெயர்கள் 268
#269
** களம்
மிடறு பொருநிலம் கருமை இ மூன்றும்
களம் என்று உரைப்பர் கருதும் காலே
** 3 பெயர்கள் 269
#270
** களரி
கருமம்செய்இடமும் களமும் பொருநிலனும்
களரி என்பர் கற்று உணர்ந்தோரே
** 3 பெயர்கள் 270
#271
** களன்
பொய்கையும் தொடர்பும் மருத நிலனோடு
எய்திய களனொடு நான்கும் களனே
** 2 பெயர்கள் 271
#272
** கறை
நிறமும் உதிரமும் உரலும் திறையும்
கறை என் கிளவி ஆம் எனக் கருதுவர்
** 4 பெயர்கள் 273
#273
** கன்னல்
சருக்கரை கரகம் நாழிகைவட்டில்
உரைக்கின் குடமும் நாழிகையும் கன்னல்
** 5 பெயர்கள்
#274
** காஞ்சி
எதிர்ஊன்றுதலும் நிலையின்மையும் ஆம்
அணி மேகலையும் ஒரு மரப்பெயரும்
கருதும் காஞ்சி என்னும் கட்டுரை
** 4 பெயர்கள் 274
#275
** காரி
ஆலம் நஞ்சே சனிக்கோள் மாசாத்தன்
ஆர் இருள் நிறத்தனவும் காரி எனப்படுமே
** 4 பெயர்கள்
#276
** காரிகை
அழகும் அழகுடைமாதரும் அதனொடு
கட்டளைக்கலித்துறையும் காரிகை என்ப
** 3 பெயர்கள் 276
#277
** காழ்
கொல்பரல் சேகு மணியின்கோவை
மாலையும் ஒளியும் காழ் என்று ஆகும்
** 5 பெயர்கள் 277
#278
** கிழி
எழுது படமும் இரு நிதிப்பொதியும்
கிழிபடு துகிலும் கிழி எனற்கு உரிய
** 3 பெயர்கள் 278
#279
** குயம்
அரிவையர் முலையும் கொடுவாளும் இளைமையும்
கருதில் இ மூன்றும் குயம் எனக் கருதுவர்
** 3 பெயர்கள் 279
#280
** குவலயம்
நெய்தலும் நிலனும் குவலயம் என்ப
** 2 பெயர்கள் 280
#281
** குளிர்
கிளிகடிகருவி இலைமூக்குஅரிகருவி
குளிரே குடமுழவு ஞெண்டும் ஆகும்
** 4 பெயர்கள் 281
#282
** குறிஞ்சி
மலைச்சார்நிலனும் செம்மலர் முள்ளியும்
குறிஞ்சி நிலப் பாடலும் குறிஞ்சி என்று ஆகும்
** 3 பெயர்கள் 282
#283
** கூழ்
பல் வகை உணவும் பயிரும் பொன்னும்
கொள்ப மாதோ கூழ் என் கிளவி
** 3 பெயர்கள் 283
#284
** கூளி
நட்பு தொகுதி பேய் என மூன்றும்
வைத்தனர் கூளி ஆக வகுத்தே
**3 பெயர்கள் 284
#285
** கைக்கிளை
ஒருதலைக்காமமும் யாழில் ஓர் நரம்பும்
தெரியின் கைக்கிளை எனப் பெயர் சிவணும்
** 2 பெயர்கள் 285
#286
** கொன்
அச்சம் பயன்இலி காலம் பெருமையோடு
அப் பெயர் நான்கும் கொன் என அறைவர்
** 4 பெயர்கள் 286
#287
** கோ
அந்தரம் குலிசம் பாரினோடு அத்திரம்
வந்தநீர் திசை மலை வேல் மன்னவன்
விழி பசு கோ என வேண்டினர் புலவர்
** 17 பெயர்கள் 287
#288
** கோதை
பூப் புனை மாலையும் மாலை புனை மாதரும்
தோல் புனை வில் நாண் தொடர் கைக்கட்டியும்
கோச் சேரன் பெயர் மயிர் காற்றும் கோதை
** 6 பெயர்கள் 288
#289
** கோல்
நிறை அறி துலாமும் அஞ்சனம் எழுது கருவியும்
இறைவன் முறை நடாத்தலும் யாழ் நரம்பும் அம்பும்
குதிரை மத்திகையும் கோல் என்று ஆகும்
** 6 பெயர்கள் 289
#290
** கோள்
அலர் கதிர் முதலாம் அமரரும் நாளும்
கொலையும் இடையூறும் கோள் என்று ஆகும்
** 2 பெயர்கள் 290
#291
** சாமம்
யாமம் ஓர் வேதம் உபாயம் சாமம்
** 3 பெயர்கள்
#292
** சாறு
விழவும் கள்ளும் சாறு என விளம்புவர்
** 2 பெயர்கள் 292
#293
** சிக்கம்
உச்சியும் மயிர் வார் சப்பும் உறியும்
சிக்கம் என்னும் பெயரொடும் சிவணும்
** 3 பெயர்கள் 293
#294
** சித்திரம்
மெய்யே போலப் பொய்யை உரைத்தலும்
செய்கோல் வடிவும் அழகும் சித்திரம்
** 3 பெயர்கள் 294
#295
** சிலை
வில்லையும் மலையையும் சிலை என விளம்புவர்
** 2 பெயர்கள் 295
#296
** சீர்
பல் வகை இயங்கல் ஓசை பாரம்
ஒல்லுதல் கால்தண்டை ஒண் புகழ் அழகு
செல்வம் சீர்மை சீர் என்று ஆகும்
** 8 பெயர்கள் 296
#297
** சுடர்
மதியும் ஞாயிறும் கனலியும் மற்றைப்
பொது உறும் ஒளியும் சுடர் என்று ஆகும்
** 8 பெயர்கள்
#298
** செச்சை
வெட்சியும் வெள்ளாட்டுஏறும் செச்சை
** 2 பெயர்கள் 298
#299
** செம்மல்
இறைவன் பழம்பூ வீரர் புத்திரர்
அறையின் செம்மையோடு ஐந்தும் செம்மல்
** 5 பெயர்கள் 299
#300
** சேய்
செவ்வாய் முருகன் இளைமை புத்திரர்
இவ்வாறு எல்லாம் சேய் என இசைப்பர்
** 2 பெயர்கள் 300
#301
** ஞெள்ளல்
சோர்வு மிகுதல் உடன்படல் படுகர்
நாலினோடு ஒலியும் தெருவும் ஞெள்ளல்
** 6 பெயர்கள் 301
#302
** தண்டு
தண்டும் ஊன்றும் தடியும் தண்டு ஆகும்
** 2 பெயர்கள் 302
#303
** தபனன்
அனலும் அருக்கனும் தபனன் என்று ஆகும்
** 2 பெயர்கள் 303
#304
** தாணு
குற்றியையும் தூணையும் தாணு என்ப
** 2 பெயர்கள் 304
#305
** தார்
பூவும் பூமாலையும் போர் முன் செல் கொடிப் படையும்
மாவினுக்கு அணியும் கிண்கிணி மாலையும்
தாவில் பெயர்க் கொடை தார் என்று ஆகும்
** 4 பெயர்கள் 305
#306
** தாவரம்
மரமும் மலையும் போல நிற்பன
தரு பெயர் தானே தாவரம் ஆகும்
** 2 பெயர்கள் 306
#307
** தானை
கைப்படை காலாள்படையே ஆடை
தப்புஇல் மூன்றும் தானை என்று ஆகும்
** 3 பெயர்கள் 307
#308
** திணை
குலமும் ஒழுக்கமும் ஒழுக்கம் நிகழ்ந்த
நிலமும் திணை என நிகழ்த்தும் களவி
** 3 பெயர்கள் 308
#309
** துஞ்சல்
சாதலும் நிலைத்தலும் உறங்கலும் துஞ்சல்
** 3 பெயர்கள் 309
#310
** துத்தி
சுணங்கும் பொறியும் துய்ப்பனவும் துத்தி
** 3 பெயர்கள் 310
#311
** துப்பு
வண்ணம் பவளம் வலியோடு அரக்கு என்று
எண்ணிய நான்கும் துப்பு என இசைப்பர்
** 4 பெயர்கள் 311
#312
** தூவி
பசையும் தசையும் பறவைஇறகும்
தொகு பெயர் தாமே தூவி என்று ஆகும்
** 3 பெயர்கள் 312
#313
** தொடி
ஒரு பலம் வளையே தொடி என்று ஆகும்
** 2 பெயர்கள் 313
#314
** தொய்யில்
உழவு நிலத்தில் எழுவது ஓர் புதலும்
குழையும் மகிழ்ச்சியும் அழகும் என்று இவை
துயரும் கூறும் தொய்யில் கிளவி
** 5 பெயர்கள் 314
#315
** நகை
மகிழ்ச்சியின் விளையாட்டின் வரும் நகை தானே
இகழ்ச்சி இடத்தும் எய்தற்கு உரித்தே
** 3 பெயர்கள் 315
#316
** நவம்
ஒன்பதும் கேண்மையும் புதுமையும் நவமே
** 3 பெயர்கள் 316
#317
** நவிரம்
மலையும் உச்சியும் மருதயாழ்த்திறனும்
நவிரம் எனும் பெயர் நடைபெற்று இயலும்
** 3 பெயர்கள் 317
#318
** நாகம்
அரவும் காரீயமும் அமரர் நாட்டு ஒரு பெயரும்
மலையும் யானையும் ஒரு மரப் பெயரும்
தெரியின் நாகம் எனப் பெயர் சிவணும்
** 6 பெயர்கள் 318
#319
** நாகு
கோடும் எருமையும் மரையும் நந்தும்
ஈனாஇளைமையும் கெழுமையும் இளைமரமும்
நாகு எனும் பெயரின் நடைபெற்று இயலும்
** 7 பெயர்கள் 319
#320
** நாஞ்சில்
எயில்உறுப்பு உழுபடை நாஞ்சில் ஆகும்
** 3 பெயர்கள் 320
#321
** நாண்
மாதர்மங்கலமும் அணியும் மானமும்
பாசமும் நாண் எனும் சொல்லில் பயிலும்
** 4 பெயர்கள் 321
#322
** நீலம்
நீலமலரும் நீலநிறத்தனவும்
நீலம் என்னும் பெயரொடு நிகழும்
** 2 பெயர்கள்
#323
** நூழில்
குவவிற்படரோர் கொடிப்புல்லு நூழில்
** 2 பெயர்கள் 323
#324
** நேர்
உடன்படல் கொடை ஒத்தல் மாறுதல் நுட்பம்
சமன் பாதி மிகுதி தலைப்பாடு தனிமை என
திகழ்ந்த ஈர் ஐந்தும் நேர் என் கிளவி
** 10 பெயர்கள் 324
#325
** பகல்
நாளும் ஒளியும் நடுவும் பிளத்தலும்
பாகுபடுத்தலும் பகல் என் கிளவி
** 5 பெயர்கள் 3225
#326
** படை
சயனம் பல்லணம் தானை உழு நாஞ்சில்
பயன் என்று உரைக்கும் படை என் கிளவி
** 4 பெயர்கள்
#327
** பண்ணை
ஆயமும் மகளிர்விளையாடல் தொழிலும்
பாய் புனல் படுகரும் பண்ணை என்று ஆகும்
** 3 பெயர்கள் 327
#328
** பதம்
சோறும் வழியும் சொல்லும் காலும்
ஈரமும் சேமமும் புனலும் காலையும்
பாவலர் எட்டையும் பதம் எனப் பகர்வர்
** 8 பெயர்கள்
#329
** பயிர்
விதந்து கட்டிய வழக்கும் விலங்கொடு புள்குரலும்
பசும்புல்லும் பைங்கூழும் பயிர் என்று ஆகும்
** 5 பெயர்கள் 329
#330
** பரி
வருத்தமும் செல்வமும் மாவின் நாமமும்
பாதுகாத்தலும் பரி என் கிளவி
** 4 பெயர்கள் 330
#331
** பல்லம்
கரடியின் பெயரும் கணக்கில் ஓர் குணிப்பும்
பகழியின் பெயரும் பல்லம் என்று ஆகும்
** 3 பெயர்கள் 331
#332
** பற்றல்
தொடலும் வளைத்தலும் பிணித்தலும் பற்றல்
** 3 பெயர்கள் 332
#333
** பனி
அச்சமும் துன்பமும் நடுக்கமும் துகினமும்
பற்றிய சதமும் பனி எனப்படுமே
** 5 பெயர்கள்
#334
** பாணி
நெடித்தற்பொழுதும் நீரொடு கையும்
பாடல் பல்லியமும் பாணி என்று ஆகும்
** 4 பெயர்கள்
#335
** பாலை
நீர் இன்றி வேனில் தெறு நிலனும் அ நிலப்
பாடலும் பாடல் சுவையும் பாலை
பொருள்வயின் பிரிதலும் புணர்ந்து உடன்போதலும்
அது பிரிவுணர்த்தலும் பாலை ஆகும்
** 6 பெயர்கள் 335
#336
** பால்
பகுத்தல் பக்கம் திசை இயல்பு என்ன
வகுத்த நான்கும் பால் என்று ஆகும்
** 4 பெயர்கள் 336
#337
** பாழி
ஊரும் வலியும் உறையுளும் சயனமும்
பாழி என்று பகரப்படுமே
** 4 பெயர்கள்
#338
** புரை
உயர்வும் குற்றமும் உவமைச்சொல்லும்
புரை என் களவிப் பொருளொடு புணரும்
** 3 பெயர்கள் 328
#339
** புலவர்
அமரரும் கவிஞரும் ஆடுநரும் பாடுநரும்
பொருநரும் அறிஞரும் புலவர் எனப்படுமே
** 6 பெயர்கள் 339
#340
** பூவை
காயாமரமும் நாகணவாய்ப்புள்ளும்
பூவை என்னும் பொருளொடு புணரும்
** 2 பெயர்கள் 340
#341
** பொதி
நிதியும் சொற்பயனும் நிகழ் பலபண்டமும்
பொதி என் கிளவிப் பொருளொடு புணரும்
#341
** பொருநர்
பொரும் போர்த்தலைவரும் பெருங்கூத்தின் கொடியரும்
பொரும் படைவீரரும் பொருநர் எனப்படுமே
#342
** 3 பெயர்கள் 342
#343
** பொறி
திரு ஐம்பொறி யந்திரம் இலாஞ்சனையே
புகழ்ச்சிப் புலவர் பொறி எனப் புகல்வர்
** 2 பெயர்கள்
#344
** பொறை
மலை சுமை பாரம் அம்பல் சேந்தனோடு
உலவிய பொறுமை பார் ஐந்தும் பொறையே
** 5 பெயர்கள் 344
#345
** மடங்கல்
ஊழித்தீ சிங்கம் உகமுடிவு இடி என
வாழித் தமிழோர் மடங்கல் என்ப
கொடுங் கூற்றின் பெயரும் நோயும் கூறும்
** 6 பெயர்கள் 345
#346
** மடல்
பூவின் இதழும் பனை இதழ் போல்பவும்
வாய்பாடு உரைக்கின் மடல் என் கிளவி
** 2 பெயர்கள் 346
#347
** மது
தேனும் தேறலும் மது எனச் செப்புவர்
** 2 பெயர்கள் 347
#348
** மருதம்
பழன நிலனும் அ நிலப் பாடலும்
மருதம் என்னும் பெயரின் வழங்கும்
** 2 பெயர்கள் 348
#349
** மள்ளர்
அருந் திறல் வீரர்க்கும் பெருந் திறல் உழவர்க்கும்
வரும் தகைத்து ஆகும் மள்ளர் எனும் பெயர்
** 2 பெயர்கள் 349
#350
** மறம்
கொலையும் சேவகமும் கொடு வினைச் செயலும்
வலியும் செற்றமும் மறம் எனப்படுமே
** 5 பெயர்கள் 350
#351
** மன்
மன்னலும் இடைச்சொல்லும் இறையும் மன்னே
** 3 பெயர்கள் 351
#352
** மாடு
மணியும் செல்வமும் நிரையும் பக்கமும்
தனமும் மாடு என்று உரைக்கத் தகுமே
** 5 பெயர்கள் 352
#353
** மாலை
பொன்னில் மணியில் பூவில் சொல்லில்
இன்னுறத் தொடுத்தலும் இரவும் அந்தியும்
மன்னும் இயல்பும் மாலை என்று ஆகும்
** 4 பெயர்கள் 353
#354
** மால்
மாயோன் பெயரே மயக்கம் வேட்கை
மேகம் காற்று பெருமை கருநிறம்
சோழன் புதன் எனச் சொற்றிடும் மாலே
** 9 பெயர்கள் 354
#355
** மாழை
ஆய மடமை பொன் உலோகக்கட்டி
ஓலை புளி மா மாழை என்று உரைக்கும்
** 6 பெயர்கள் 355
#356
** முருகு
விழவும் குமரவேளும் இளைமையும்
நறையும் நாற்றமும் அகிலும் எழுச்சியும்
வெறியாட்டாளனும் முருகு என இசைப்பர்
** 8 பெயர்கள் 356
#357
** முல்லை
காடு சார் நிலனும் கான மல்லிகையும்
மோடு படு வென்றியும் கற்பும் முல்லை
** 4 பெயர்கள் 357
#358
** முளரி
எரியும் தாமரையும் நுட்பமும் முள்மரமும்
உரிய காடும் என்று ஐந்தும் முளரி
** 5 பெயர்கள் 358
#359
** மை
குற்றமும் ஆடும் கருமையும் கொண்டலும்
மற்று இவை மை எனும் சொல்லொடு வருமே
** 4 பெயர்கள் 359
#360
** வஞ்சி
மேற்செலவும் பா விகற்பத்து ஒரு பாவும்
ஓர் கொடிப் பிறப்பும் அதன் உவமை மாதரும்
மாற்றரும் பெயர்க் கொடை வஞ்சி என்று ஆகும்
** 4 பெயர்கள் 360
#361
** வம்பு
கச்சு நிலையின்மை புதுமை கந்தம்
ஒத்த நான்கும் வம்பு என உரைப்பர்
** 4 பெயர்கள் 361
#362
** வயிரம்
செற்றமும் கூர்மையும் சேகும் மணியும்
வச்சிரமும் வன்மையும் வயிரக் கிளவி
** 6 பெயர்கள் 362
#363
** வயின்
வயிறே இடம் மனை மூன்றும் வயின் ஆம்
** 3 பெயர்கள் 363
#364
** வளம்
பண்டமும் வளப்பாடும் வளம் எனப்படுமே
** 2 பெயர்கள் 364
#365
** வாகை
ஆள்வினை முதலாம் செய்கையும் நலனும்
கைவலம் முதலாம் கல்வியும் ஆண்மையும்
சால்பு முதலாம் பண்பும் ஈகையும்
ஒழுக்கம் முதலாம் தவமும் மறத்துறையும்
ஒருவரின் ஒருவர் வென்றியும் மிகுதியும்
வருவன எல்லாம் வாகை எனும் பெயர்
** 10 பெயர்கள் 365
#366
** வாமம்
குறளே அழகு குறங்கே இடப்பால்
இவை ஒரு நான்கும் வாமம் என்ப
** 4 பெயர்கள் 366
#367
** வாரணம்
யானையும் கோழியும் சங்கும் வாரணம்
** 3 பெயர்கள்
#368
** வாரி
கடலும் நீர்மிகுதியும் கதவும் வாயிலும்
மடையும் என்று இவை வாரி என்ப
** 5 பெயர்கள்
#369
** விதி
இயல்பும் செயலும் விதி என்று ஆகும்
** 2 பெயர்கள்
#370
** வியங்கோள்
எண்ணில்கொளலும் ஏவலும் வியங்கோள்
** 2 பெயர்கள்
#371
** விருத்தி
உரிய சொல்லும் உரிய பொருளும்
விரிய உரைப்பது விருத்தி ஆகும்
** 2 பெயர்கள்
#372
** விழுமம்
சிறப்பு சீர்மை இடும்பை இ மூன்றும்
விரிக்கின் மேலோர் விழுமம் என்ப
** 3 பெயர்கள்
#373
** விளரி
யாழின்ஓர்நரம்பும் திறனில்யாழும்
வேட்கைமிகுதியும் இளைமையும் விளரி
** 4 பெயர்கள்
#374
** வெள்ளை
வெள்ளாடு வெண்பா வெள்ளைவடிவின
வெள்ளை என்னும் பெயரின் விளம்புவர்
** 3 பெயர்கள்
#375
** வேழம்
யானையும் கரும்பும் கொறுக்கச்சியுடனும்
வேயும் கூறும் வேழக் கிளவி
** 4 பெயர்கள்
#376
** வை
நெல்லின்தாளும் புல்லும் கூர்மையும்
சொல்லின் மூன்றும் வை என்று ஆகும்
** 3 பெயர்கள்
#377
** வைகல்
கழியும்நாளும் புலரிக் காலையும்
தழுவும் வைகல் தங்கலும் உரித்தே
** 3 பெயர்கள்
#378
** வையம்
சிவிகையும் ஆன்ஏறும் சகடமும் தேரும்
அவனியும் வையம் எனப் பெயர் ஆகும்
** 5 பெயர்கள் 378
#379
புலவி நீக்கிய கல்விச் செல்விக்கு
அமிழ்து சுவை ஈந்த அரும்பெறல் இன்பத்து
ஒரு பெரும் செல்வன் அருவந்தைச் சேந்தன்
பகர்வுற்ற திவாகரத்து
** பதினொன்றாவது ஒரு சொல் பல் பொருள் பெயர்த்
** தொகுதி முற்றிற்று
@12 பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி
#1
கூறியது கூறினும் குற்றம் இல்லை
வேறு ஒரு பொருளை விளக்குமாயின்
முன்னர் எய்திய பதினொரு தொகுதியுள்ளும்
வந்தனவால் ஒரு சொல் பல் பொருள் பெயர்த்
தொகுதியின் வந்த சொற்கள் என் எனில்
ஆண்டுச் சிறப்பு வகைக்கு எய்தியவை
ஈண்டுப் பொது வகைக்கு எய்தவும்படுமே
#2
** ஒன்று
ஒன்று என்பதுவே வீடுபேறு ஆகும்
#3
** இருமை
இருமை என்பது இம்மையும் மறுமையும்
#4
** இருவினை
இருவினை நல்வினை தீவினை ஆகும்
#5
** இருவகைத் தோற்றம்
இருவகைத் தோற்றம் சர அசரம் என்ப
#6
** இருவகை அறம்
இருவகை அறமே இல்லறம் துறவறம்
#7
** இருவகைக் கந்தம்
இருவகைக் கந்தம் நற்கந்தம் துர்க்கந்தம்
#8
** இரு சுடர்
இருசுடர் சந்திர சூரியர் ஆகும்
#9
** இரு மரபு
இருமரபு தாய் வழி தந்தை வழியே
#10
** இரு வகைப் பொருள்
இருவகைப் பொருள் கல்விப்பொருள் செல்வப்பொருள்
#11
** இருவகை இன்பம்
இருவகை இன்பம் இல்லதும் உள்ளதும்
#12
** இரு வகை வீடு
இருவகை வீடு பற்றுவீடு பொருள்வீடு
#13
** மும்மை
மும்மை உம்மையும் இம்மையும் மறுமையும்
#14
** முப் பொறி
மனமும் வாக்கும் காயமும் முப்பொறி
#15
** முச் செய்கை
படைத்தல் காத்தல் அழித்தல் முச்செய்கை
#16
** முக் குற்றம்
முக்குற்றம் காமம் வெகுளி மயக்கம்
#17
** முக் காலம்
இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என
மொழிந்த மூன்று காலம் ஆகும்
#18
** மூவிடம்
முன்னிலை படர்க்கை தன்மை மூவிடம்
#19
** மூவுலகு
பூமி ஆகாயம் சுவர்க்கம் என்ப
தாம் ஒரு மூன்று நிலம் எனும் தகைய
#20
** மூ வகை மொழி
பட்டாங்குபேசல் பழித்தல் புகழ்தல் என
முட்டு இன்று ஆகும் மூவகை மொழியே
#21
** முச் சுடர்
முச்சுடர் ஆதித்தன் சந்திரன் அங்கி
#22
** முத் தீ
அந்தணர் முத்தீ காருகபத்தியம்
தென் திசை அங்கி ஆகவனீயம்
#23
** முச் சீவ அனல்
உதரம் விந்து பூதஅனல் என
ஒரு மூன்று ஆகும் சீவஅனலே
#24
** முக் குணம்
முக்குணம் சாத்துவிதம் இராசதம் தாமதம்
#25
** சாத்துவித குணம்
சாத்துவிதம் ஞானம் தவம் உண்மை நல் அருள்
ஆர்த்த மோனமோடு ஐம்புலன்அடக்கல்
#26
** இராசத குணம்
தானம் தவமே தருமம் பேணல்
ஞானம் கல்வி நலன் இவை தெரிதல்
ஈனம் இல்லா இராசத குணமே
#27
** தாமத குணம்
தாமதம் நிறை பேர் உண்டி மடி வஞ்சம்
காமம் நீதிக்கேடு உறக்கம் சலமே
#28
** மூவகைத் தானம்
முதல் இடை கடை என மூவகைத் தானம்
#29
** மூவகைத் தியாகம்
தியாகத்து இனமே மூவகை அதனோடு
உத்தமம் மத்திமம் அதமம் என்ன
முற்றியது ஆங்கு மூவகைத் தானம்
வலியும் மெலியும் சமனும் ஆகும்
#30
** உத்தம தானம்
அறத்தின் ஆற்றிய அரும் பெரும் பொருளைப்
புறத் துறைக் குற்றம் மூன்று அறுத்த நல் தவர்க்குக்
கொள்க எனப் பணிந்து குறையிரந்து அவர் வயின்
உள்ளம் உவந்து ஈவது உத்தம தானம்
#31
** மத்திம தானம்
ஆதுலர் அந்தகர் ஊமர் உறுப்பிலிகள்
செவிடர்க்கு ஈவது மத்திமதானம்
#32
** கடைப்படு தானம்
ஆர்வம் புகழே அச்சம் கைம்மாறு
காரணம் கண்ணோட்டம் கடப்பாடு என்று இவை
ஏழும் கடைப்படு தான உதவி
#33
** திரிகடுகம்
திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி
#34
** திரிபலை
திரிபலையாவது கடு நெல்லி தான்றி
#35
** திரிபுரம்
மும்மதில் பொன்னும் வெள்ளியும் இரும்பும்
அன்ன சிவன் முன் அழித்த முப்புரமே
#36
** சூரியன் மூவகை வீதி
திருத் தகு மேடம் இடபம் மிதுனம்
#37
** நானிலம்
நானிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
#38
** சதுரங்கம்
சதுரங்கம் யானை தேர் குதிரை காலாள்
#39
** நாற் கரணம்
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் நாற்கரணம்
#40
** நாற் கதி
நாற்கதி உம்பர் மக்கள் விலங்கு நரகர்
#41
** நால் வகை இழிச் சொல்
பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என
இ வகை நான்கும் இழித்த சொல்லே
#42
** நால் வகை வேதம்
நால் வகை வேதம் இருக்கு தைத்திரியம்
சாமவேதம் அதர்வணம் தானே
#43
** நால்வகை அரண்
மலைஅரண் காட்டுஅரண் மதில்அரண் நீர்அரண்
நவை அறு சிறப்பின் நால் வகை அரணே
#44
** நால் வகைக் கேள்வி
அறம் பொருள் இன்பம் வீடு என நான்கும்
திறம் தெரிந்து கேட்டல் நால்வகைக்கேள்வி
சொன்ன நான்கினும் ஒத்தே ஒழுகுதல்
ஐவகைக் கேள்வி ஆம் என அறைவர்
#45
** நால் வகைப் புலமை
கவியே கமகன் வாதி வாக்கி என
இவை ஒரு நான்கே புலமைக்கு இயல்பே
#46
** கவியின் வகை
ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் எனும்
பா வகை பாடுவோன் கவி எனப்படுமே
#47
** மகன் வகை
ஞாபகம் செம்பொருள் நடையின் எப்பொருளும்
காசு இன்று உரைப்போன் கமகன் ஆகும்
#48
** வாதி வகை
ஏதுவும் மேற்கோளும் எடுத்துக் காட்டிப்
போதினளவும் செய்து தன் சொல் நிறீஇ
வாதில் பிறர் சொல் மறுப்போன் வாதி
#49
** வாக்கி வகை
அறம் பொருள் இன்பம் வீடு எனும் திறங்கள்
கேட்க வேட்க இனியன கூறும்
மாற்றம் உடையோன் வாக்கி ஆகும்
#50
** ஆசு கவி வகை
கொடுத்த பொருளில் தொடுத்த இன்பத்தின்
அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி
#51
** மதுர கவி வகை
பொருளின் பொலிவும் சொல்லின் செல்வமும்
தொடையும் தொடைக்கண் விகற்பமும் துதைந்து
உருவகம் முதலாம் அலங்காரம் உட்கொண்டு
ஒசை பொலிவுற்று உணர்வோர் உளங்கட்கும்
மா கடல் அமிழ்தம் போல் பாடுதல் மதுரகவி
#52
** சித்திர கவி வகை
மாலைமாற்றே சக்கரம் சுழிகுளம்
ஏகபாதம் எழுகூற்றிருக்கை
காதை கரப்பே கரந்துறைப்பாட்டே
பாதமயக்கே பாவின்புணர்ப்பே
கூடசதுக்கம் கோமூத்திரியே
ஓர் இனத்து எழுத்தால் உயர்ந்தபாட்டே
ஒற்றுப்பெயர்த்தல் ஒருபொருட்பாட்டே
சித்திரப்பாவே விசித்திரப்பாவே
விகற்பநடையே வினாவுத்தரமே
சருப்பதோபத்திரம் சார்ந்தஎழுத்தே
வருக்கமும் மற்றும் வடநூல் கடலுள்
ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி
விரித்து மறைத்தும் மிறைக் கவிப் பாட்டுத்
தெரித்துப் பாடுவது சித்திரகவியே
** 21 பெயர்கள்
#53
** வித்தார கவி வகை
மும்மணிக்கோவையும் பன்மணிமாலையும்
மறமும் கலிவெண்பாட்டும் மடலூர்ச்சியும்
கிரீடையும் கூத்தும் பாசாண்டத்துறையும்
விருத்தகவிதையும் இயல் இசை நாடகத் தொடு
விரித்துப் பாடுவது வித்தாரகவியே
** 9 பெயர்கள்
#54
** நால் வகைப் புண்ணியத் தோற்றம்
நால் வகைப் புண்ணியத் தோற்றம் தவத்துடன்
மேலாம் ஒழுக்கம் தானம் கல்வி
#55
** நால் வகை நில்
சிலையோர் நால்வகை நிலை பைசாசம்
ஆலீடம் மண்டிலம் பிரத்யாலீடம்
#56
** பைசாச நிலை வகை
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும்
பரியாயம் என்பது பைசாசநிலையே
#57
** ஆலீட நிலை வகை
வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறும்
அதன் பெயர் ஆலீடநிலையது ஆகும்
#58
** மண்டில நிலை வகை
இரு கால் மண்டலித்திடுதல் மண்டிலநிலை
#59
** பிரத்யாலீட நிலை வகை
வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டலிப்பின்
பிரத்யாலீடம் எனப் பெயர் பெறுமே
#60
** நான்கு உயிர்த் தோற்ற வகை
பை போல் குடரில் முட்டையில் நிலத்தில்
மெய்யக வியர்வையில் நான்கு உயிர்த் தோற்றம்
#61
** ஐந் திணை வகை
ஐந்திணை குறிஞ்சி பாலை முல்லை
வந்த நெய்தல் மருதம் ஆகும்
#62
** பஞ்ச வாச வகை
தக்கோலம் ஏலம் இலவங்கம் சாதிக்காய்
கர்ப்பூரம் என்று இவை கமழ் பஞ்ச வாசம்
#63
** பஞ்சாங்க வகை
திதியே வாரம் நாள் யோகம் கரணம் எனப்
பகரும் சோதிடப் பஞ்சாங்கம் ஆகும்
#64
** பஞ்ச மா சத்த வகை
பஞ்சமாசத்தம் தோல் துளை நரம்பு
கஞ்சனை பாடல் எனக் கழறினரே
#65
** மதனன் பஞ்ச பாண வகை
மதனன் பஞ்சபாணமாவன
முல்லை அசோகு முழு நீலம் சூதப்பூ
அல்லி முளரியோடு ஐந்து என மொழிப
#66
** பஞ்ச பாணச் செயல் வகை
மதன் பஞ்சபாணச்செயல் உன்மத்தம்
தீரம் சந்தாபம் வசீகரணம் மோகனம்
#67
** பஞ்ச சயன வகை
மயிர்ச்சேணம் பஞ்சுமெத்தை வண் படாம் தூவி
பயிற்றும் தண் வீ பாய் பஞ்சசயனம்
#68
** சயன வகை
மலர்ச்சயனம் சலசயனம் தோல்சயனம் மற்றும்
பழிப்பில் பதினைந்தும் சயனம் என்ப
#69
** பஞ்ச பாதக வகை
பஞ்சபாதகம் கொலை களவு கள்உண்டல்
எஞ்சல்இல் குருநிந்தை பொய்யும் என்ப
#70
** ஐம் பால் வகை
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என
அறியக் கூறிய பால் ஐந்து ஆகும்
#71
** ஐம் பால் முடிவகை
ஐம்பால்முடியே கொண்டை சுருள் குழல்
வம்பு ஆர் பனிச்சை வார்மயிர் முடியே
# 72
** ஜந்து உண்டிவகை
கடித்து பருகி விழுங்கி நக்கி
எடுத்துச் சுவைத்தல் இவை ஐந்துஉண்டி
#73
** குதிரை நடைவகை
மல்லகதி மயூரகதி வானரகதியொடு
சொல்லிய சசகதி சரகதி என்னப்
பல் இயல் பரிமாவிற்கு ஐந்தொழில் நடையே
#74
** ஐவகை வினா
அறியான்வினாவல் அறிவுஒப்புக்காண்டல்
ஐயம்அறுத்தல் அவன் அறிவுதான்கோடல்
மெய்அவர்க்குக்காட்டலோடு ஐவகைவினாவே
#75
** ஈசன் ஐம் முக வகை
சத்தியோசாதம் வாமம் அகோரம்
தற்புருடம் ஈசானம் என ஈசர்க்கு ஐம்முகம்
#76
** பஞ்ச பூத வகை
மண்ணும் நீரும் கனலும் காற்றும்
விண்ணும் பஞ்சபூதம் என்ப
#77
** ஐம்பொறி
மெய் வாய் கண் மூக்கு செவி ஐம்பொறியே
#78
** ஐவகைத்தாயர்
பாராட்டும்தாய் ஊட்டும்தாய் முலைத்தாய்
கைத்தாய் செவிலித்தாய் ஐந்து எனக் கழறுவர்
#79
** அந்தணர் அறு தொழில் வகை
ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல்
ஈதல் ஏற்றல் என்று இருமூ வகை
ஆதிக் காலத்து அந்தணர் அறுதொழில்
#80
** அரசர் அறுதொழில் வகை
அரசர்அறுதொழில் ஓதல் வேட்டல்
புரை தீரப் பெரும் பார்ப்புரத்தல் ஈதல்
கரை அறு படைக்கலம்கற்றல் விசயம்
#81
** வணிகர் அறுதொழில் வகை
வணிகர்அறுதொழில் ஓதல் வேட்டல்
ஈதல் உழவு பசுக்காவல் வாணிகம்
#82
** வேளாளர் அறு தொழில் வகை
வேளாளர்அறுதொழில் உழவு பசுக்காவல்
தெள்ளிதின் வாணிபம் குயிலுவம் காருகவினை
ஒள்ளிய இருபிறப்பாளர்க்குஏவல்செயல்
#83
** குயிலுவத் தொழில் வகை
குயிலுவம் வாத்தியம் கொட்டுதல் அகும்
#84
** காருக வினை வகை
பருத்திநூல் பட்டுநூல் அமைத்து ஆடைஆக்கலும்
சுமத்தலும் பிறவும் காருகவினைத்தொழில்
#85
** ஆறு அங்க வகை
ஆறுஅங்கம் மந்திரம் வியாகரணம் நிகண்டு
சந்தோபிசிதி நிருத்தம் சோதிடம்
#86
** அறு சமய வகை
அறுசமயம் வைசேடிகம் நையாயிகம்
மறுஇல் மீமாஞ்சை ஆருகதம் பெளத்தம்
பிரதிலோகாயதம் என்னும் பெற்றிய
#87
** பாடாண்டத் துறை வகை
பாடாண்டத்துறையும் இவற்றுள் பலவாம்
பேசில் தொண்ணூற்றுஅறு வகைப்படுமே
#88
** ஆறு உட்பகை வகை
ஆறுஉட்பகை காமம் வெகுளி உலோபம்
மாறு கொள் மோகம் மகம் மாற்சரியம்
#89
** அறு வகைத் தானை
வேல்தானை வாள்தானை வில்தானை மேலோர்
தேர்த்தானை பரித்தானை களிற்றுத்தானை என
ஆற்றல் சான்ற அறுவகைத்தானை
#90
** நல் நாட்டு அமைதி அறுவகை
செல்வம் விளைவு பல்வளம் செங்கோன்மை
கொல் குறும்புஇன்மை கொடும்பிணிஇன்மை
இ வயின் ஆறும் நல்நாட்டுஅமைதி
#91
** அறு சுவை வகை
அறுசுவை தித்தித்தல் புளித்தல் கைத்தல்
மறு அறு துவர்த்தல் கூர்த்தல் காழ்த்தல்
#92
** அரசியல் அறு வகை
படையும் குடியும் கூழும் அமைச்சும்
அரணும் நட்பும் அரசியல் ஆறே
#93
** அறுவகை உலக நடை
அறநிலைஅறமும் மறநிலைஅறமும்
அறநிலைப்பொருளும் மறநிலைப்பொருளும்
அறநிலைஇன்பமும் மறநிலைஇன்பமும் என
ஆறு வகைத்தே உலகின் நடையே
#94
** அற நிலை அறத்தின் வகை
வருணக் காப்பில் பிறழா நெறி நிலை
பெறுதல் பொருளால் பேணும் பெற்றி
அற நிலை அறம் என்று அறைந்தனர் புலவர்
#95
** மற நிலை அறத்தின் வகை
ஆநிரை மீட்டல் அரும் பகை தெறுதல்
ஊனம்இல் செஞ்சோற்று உதவிப் போர்வயின்
ஈனம் செய்தலும் மறநிலைஅறமே
#96
** அற நிலைப் பொருள் வகை
நெறிவழி நின்று நெறியால் உழந்து
பெறும் பொருள் என்ப அறநிலைப் பொருளே
#97
** மற நிலைப் பொருள் வகை
அமர் உழந்து கொண்டவும் அருந் திறை கொண்டவும்
தவறு செய் தயோர் தண்டப் பொருளும்
கவர் சூது வென்றவும் மறநிலைப்பொருளே
#98
** அற நிலை இன்ப வகை
ஒத்த குலமும் ஒத்த ஆயுளும்
ஒத்த செல்வமும் ஒத்த நலனும்
அத்தக உடையது அறநிலைஇன்பம்
#99
** மறநிலை இன்ப வகை
ஏறுதழுவல் இலக்கம்எய்தல்
கூறு பொருள்கொடுத்தல் வலிதில்கோடல்
மாறு படு நிலைய மறநிலைஇன்பம்
#100
** கரும பூமி ஆறு வகை
உழவு தொழிலே வரைவு வாணிகம்
விச்சை சிற்பம் என்று இத் திறத்து அறுதொழில்
கற்ப நடையது கருமபூமி
#101
** போக பூமியின் வகை
பதினாறு ஆட்டைக் குமரனும் விதி வழிப்
பன்னீர் ஆட்டைக் குமரியும் ஆகி
ஒத்த அன்பினும் ஒத்த நலத்தினும்
கற்பக நல் மரம் நல் பயன் உதவ
ஆகிய செய் தவத்தளவும் அவ் வழிப்
போகம் நுகர்வது போகபூமி
#102
** போக பூமி அறுவகை
ஆதிஅரிவஞ்சம் நல்அரிவஞ்சம்
ஏமதவஞ்சம் இரணவஞ்சம்
தேவகுருவம் உத்தரகுருவம் எனப்
போகபூமி அறுவகைப்படுமே
#103
** அறுவகைச் சக்கரவர்த்திகள் வகை
அரிச்சந்திரன் நளன் முசுகுந்தன் புரூரவா
சகரன் கார்த்தவீரியன் என்ன
அறுவகைச் சக்கரவர்த்திகளாகும்
#104
** ஏழு தீவின் வகை
முதலது நாவலந்தீவு இறலித்தீவே
குசையின்தீவே கிரவுஞ்சத்தீவே
சான்மலித்தீவே தெங்கின்தீவே
புட்கரத்தீவே எனும் ஓர் ஏழும்
ஏத்திய பெரும் தீவு ஏழிற்கும் பெயரே
ஏழ் பெரும் தீவிற்கும் ஏழ் பொழில் எனப்படும்
#105
** ஏழு சமுத்திர வகை
உவரோடு கரும்பு மது நெய் தயிர் பால் புனல்
மா கடல் ஏழ் என வகுத்தனர் புலவர்
#106
** மேல் ஏழ் உலக வகை
உலகு ஏழ் பூலோகம் புவலோகம்
சுவலோகம் மகலோகம் சனலோகம்
தவலோகம் சத்தியலோகம்
#107
** கீழ் ஏழ் உலக வகை
அதல விதல சுதல நிதல
தராதல ரசாதல மகாதலம் என்னப்
பாதலம் ஓர் ஏழ் உலகு எனப் பகர்வர்
இரு வகை ஏழ் பதினால் உலகு என்ப
#108
** சத்த குல பருப்பத வகை
இமயம் மந்தரம் கைலை வடவிந்தம்
நிடதம் ஏமகூடம் நீலகிரி எனக்
குல வரை ஏழும் கூறும் என்ப
#109
** எழு மேக வகை
புட்கலம் மாவணி புட்கலதரணி
சலாநிதி சலநிதி சகலவருணி
நீலி என்ப ஏழு முகிலின் பெயர்
#110-
** ஏழு மழை வகை
பொன்னும் பூவும் புனலும் செந்நெலும்
மண்ணும் கலனும் சோரியும் அதன் பெயல்
#111
** எழு நரக வகை
பெருங்களிற்றுவட்டம் பெருமணல்வட்டம்
எரியின்வட்டம் புகையின்வட்டம்
இருளின்வட்டம் பெருங்கீழ்வட்டம்
அரிபடைவட்டம் என்று எழு வகை நரகம்
#112
** சத்த மாதர்கள் வகை
பிரமாணி இந்திராணி வைணவி வராகி
கெளமாரி மாயேசுரி மாகாளி எழுவர்
#113
** எழு வகைத் தாது
இரதம் உதிரம் என்பு தோல் தசை
மூளை சுக்கிலம் எழுவகைத்தாதே
#114
** செங்கோல் வேந்தன் எழு வகைப் பேறு
அறம் பொருள் இன்பம் அன்பு மறுமை
திறம்பாப் புகழ் மதி என்று இவை ஏழும்
பெறும் செங்கோலின் நெறிச் செல் வேந்தன்
#115
** அட்டமா நாக வகை
அட்டமாநாகம் வாசுகி அனந்தன்
விட்டபற்பன் மகாபற்பன் சங்கபாலன்
தக்கன் கார்க்கோடகனே
ஏலுமாகுளிகன் என்று எண்வகை நாகம்
#116
** அட்ட திக்குப் பாலகர் வகை
இந்திரன் அங்கி யமன் நிருதி வருணன்
வந்த வாயு குபேரன் ஈசானன்
என்ன எண் திசை உலோக பாலகர்
#117
** அட்ட திக்குப் பாலகர் சார் தசை வகை
கீழ்த்திசை முதலாச் சார்ச்சி உடைமையின்
அவ்வவர் பெயரொடும் அத் திசை மொழிப
#118
** சூரிய சந்திரர் சார் திசை
கீழ்த்திசை அருக்கற்கு வடதிசை சோமற்குச்
சார்ச்சியாகச் சாற்றினர் புலவர்
#119
** எண் திசைக் கிறிப்பின் வகை
கொடியும் பூனையும் சீயமும் ஞாளியும்
இடபமும் கழுதையும் யானையும் காகமும்
என்ப எண் திசை குறிப்பினது ஆகும்
#120
** அட்டமங்கல வகை
கவரி நிறைகுடம் கண்ணாடி தோட்டி
முரசு விளக்கு பதாகை இணைக்கயல்
அளவுஇல் சிறப்பின் அட்டமங்கல வகை
#121
** அட்ட மூர்த்த வகை
பார் நீர் தேயு வாயு ஆகாயம்
சூரியன் இந்து இயமானன் அட்டமூர்த்தம்
#122
** அட்டமாசித்திவகை
அணிமா மகிமா கரிமா இலகிமா
பிராத்தி பிராமியம் ஈசத்துவம் வசித்துவம்
ஆம் பெறற்கு அரிய அட்டமாசித்தி
#123
** அட்டாங்கயோக வகை
இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம்
பிரத்தியாகாரம் தாரணை தியானம்
சமாதி என்ப எண் வகை யோகம்
#124
** இவற்றுள் இயமத்தின் வகை
கொல்லாவிரதம் மெய்ம்மைகூறல்
கள்ளாமை பிறர்பொருட்காதலினம்
இவ்வயின் இந்தியம் அடக்கலும் இயமம்
#125
** நியமத்தின் வகை
தவமொடு தூய்மை தத்துவநூல் ஓர்தல்
மனம் உவந்து இருத்தல் தெய்வம் வழிபடல்
நினையுங்காலை நியமம் ஆகும்
#126
** சிறப்பிலா எண்பேரெச்ச வகை
சிறப்புஇல் சிதடும் உறுப்புஇல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமையும் செவிடும்
முடமும் உறுப்பு மருளும் மக்கட்கு
திண் சிறப்பில்லா எண்பேரெச்சம்
#127
** எண்வகைக் காட்சி
ஐயப்படாமை அவாவொன்றின்மை
அறிவு உவர்ப்பின்மை மூடம் அறுத்தல்
அறப்பழி அழித்தல் அழிந்தோரை நிறுத்தல்
அறத்தை விளக்கல் அறுசமயத்தவர்க்கு அன்புறல்
ஆகும் என்ப எண்வகைக்காட்சி
#128
** எண் குணம்
அனந்தஞானம் அனந்ததரிசனம்
அனந்தஈரியம் அனந்தசுகியே
நாமமின்மை கோத்திரமின்மை
ஆயுவின்மை அழியா இன்பம் என்று
ஏயுங்காலை இறைவன் எண்குணம்
#129
** எண்வகைக் குற்றம்
ஞாநாவரணியம் தரிசநாவரணியம்
வேதநீயம் மோகநீயம்
ஆயுநாமம் கோத்திரம் அந்தராயம்
என்ப எண்வகைக் குற்றம்
#130
** வணிகர் எண்குணம்
தனிமையாதல் முனிவிலனாதல்
இடனறிந்து ஒழுகல் பொழுதொடு புணர்தல்
உறுவது தெரிதல் இறுவது அஞ்சாமை
ஈட்டல் பகுத்தல் என்று இவை எட்டும்
வாட்டம் இல்லா வணிகரது இயற்குணம்
#131
** எண்வகைக் கணம்
நீரின்கணமும் தீயின்கணமும்
அந்தரகணமும் இயமானன்கணமும்
மதியின்கணமும் எரிகதிர்க்கணமும்
மாருதகணமும் மாநிலக்கணமும்
எட்டுமுன்னச் சீர்க்கு வரும் கணம்
#132
** முதற்சீர் இலக்கணம்
அசை மூன்றதுவே முதற்சீர் இலக்கணம்
#133
* இவற்றுள் நீரின் கணம்
நேர் முதல் ஆகி நிரையிணை பின்வரின்
நீரின் கணம் என நிக்ழும் சீரே
#134
** தீயின் கணம்
நேர் நடுவாகி நிரை இருபாலும்
சேரும் சீரது செந்தீக்கணமே
#135
** அந்தர கணம்
இறுதி நேராய் இணைநிரை முன்னர்
வரும் சீர் அந்தரகணம் என வழங்கும்
#136
** இயமானன் கணம்
நேர் மூன்று ஆகிய சீரியமானன்
#137
** மதியின் கணம்
முந்து நிரையாய் இணைநேர் பின்வரின்
இந்துவின்கணம் என்று இயம்பப்படுமே
#138
** எரிகதிகணம்
நிரை நடுவாகி நேர் இருபால் வரின்
எரிகதிர்க்கணம் என்று இயம்பல்வேண்டும்
#139
** மாருதகணம்
இறுதி நிரையாய் இணைநேர் முன்னர்
வருசீர் மாருதகணம் என வைப்பர்
#140
** நிலத்தின் கணம்
நிரை மூன்றது சீர் நிலத்தின்கணமே
#!41
** அவ் எட்டினுள் நற் கண வகை தீக் கண வகை
நிலனும் நீரும் மதியும் இயமானனும்
நலம் மிகும் முதல் வரில் பிற நால் ஊனம்
#142
** எண் வகை மெய்ப் பரிசம்
ஒட்டுதல் பிடித்தல் தீண்டல் தடவுதல்
கட்டுதல் வெட்டல் குத்தல் ஊன்றல் என்று
எட்டும் தக்க மெய்ப்பரிசம் என்ப
#143
** எண் வகைக் கணிதம்
சங்கலிதம் விபகலிதம் குணனம் பாகாரம்
வர்க்கம் வர்க்கமூலம் கனமொடு
கனமூலம் என்னக் காட்டும் எண் கணிதம்
#144
** எண் வகை மணம்
பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம்
தெய்வம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம்
பைசாசம் என்னப் பகரும் எண் மணமே
#145
** எண் வகை வெற்றி
வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சியாம் உட்கார்
எதிர் ஊன்றல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை
அதிரப் பொருவது தும்பை ஆகும்
போர்க்களத்து மிக்கார் செரு வென்றது வாகையாம்
அத் திணைத் தொழிலும் அத் திணைப் பூவும்
அப் பெயர் பெறுவது அந் நிலத்து உரித்தே
#146
** எண் திசை யானை
ஐராவதம் புண்டரீகம் வாமனம் குமுதம்
அஞ்சனம் புட்பதந்தம் சார்வபூமம்
சுப்பிரதீபம் என்னச் சொல்லும்
எண் திசை யானைக்கு இயலும் பெயரே
#147
** நவ கண்டம்
வடபால்விதேகம் தென்பால்விதேகம்
கீழ்பால்விதேகம் மேல்பால்விதேகம்
வடபால்இரேவதம் தென்பால்இரேவதம்
வடபால்பரதம் தென்பால்பரதம்
மத்திமகண்டம் என்று இத் திறம் என்ப
நாவலந்தீவின் நவகண்டப்பெயரே
#148
** நவ புண்ணியம்
எதிர்கொளல் பணிதல் இருக்கை கால்நீர்
புதுமலர் தூபம் விளக்கே புகழ்தல்
அறு சுவை உண்டி அமைந்தோர்க்கு ஆற்றுதல்
நவபுண்ணியத்தின் நாமம் ஆகும்
#149
** நவ தாரணை
நாமதாரணை வச்சிரதாரணை
மாயாதாரணை சித்திரதாரணை
செய்யுள்தாரணை நிறைவு குறைவாகிய
எண்பொருள்தாரணை சத்ததாரணை
வத்துதாரணை சதுரங்கதாரணை
நவதாரணையின் நாமம் ஆகும்
#150
** நவ தாளம்
அரிதாளம் மருமதாளம் சமதாளம் சயதாளம்
சித்திரதாளம் துருவதாளம்
நிவிர்ததாளம் படிமதாளம்
விடதாளம் இவையே நவதாளம் என்ப
#151
** நவ மணி
வைரம் வைடூரியம் முத்து மாணிக்கம்
பவளம் கோமேதகம் இந்திரநீலம்
மரகதம் புட்பராகம் நவமணிப்பெயரே
#152
** நாடக நவ ரசம்
சிங்காரம் பெருநகை கருணை வீரியம்
அற்புதம் பயம் ரெளத்திரம் குற்சை சாந்தம்
என்ன நாடகத்து இயலும் நவரசம்
#153
** பத்துத் திசை
கிழக்கும் தெற்கும் மேற்கும் வடக்கும் என
நடக்கும் என்ப நாற்பெரும் திசையும்
அந்தராளம் திசை நாற்கோணம்
கீழ் மேல் திசையொடு பத்து எனக் கிளப்பர்
#154
** தசாங்கம்
ஆறும் மலையும் யானையும் குதிரையும்
நாடும் ஊரும் கொடியும் முரசும்
தாரும் தேரும் தசாங்கம் எனப்படும்
தேரின் அதற்குச் சின்னமும் என்ப
#155
** அருச்சுனன் தச நாமம்
பற்குனன் சுவேதவாகனன் பார்த்தன்
சவ்வியசாசி கிரீடி தனஞ்சயன்
விசயன் வீபற்சு காண்டிவன் கிருட்டினன்
அருச்சுனன் தச நாமங்கள் ஆகும்
#156
** வேளாளர் பத்து வகைத் தொழில்
ஆணைவழிநிற்றல் அழிந்தோரைநிறுத்தல்
கைக்கடன் ஆற்றல் கசிவு அகத்து உண்மை
ஒக்கல் போற்றல் ஓவா முயற்சி
மன் இறை தருதல் ஒற்றுமை கோடல்
விருந்து புறந்தருதல் திருந்திய ஒழுக்கம்
வேளாண்மை மைந்தர்க்கு ஓர் ஈர்ஐந்தே
#157
** அரி தசாவதாரம்
மீனே ஆமை வராகம் நரசிங்கம்
வாமனன் பரசுராமன் இராமன்
பலதேவன் வசுதேவன் வரு கற்கி என்று
ஆகும் ஈர்ஐந்தும் அரி அவதாரம்
#158
** கற்பத் தொழில் பத்து உறுப்பு
கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்டசருக்கரையும் மெழுகும் என்று இவை
பத்தே சிற்பத்தொழிற்கு உறுப்பு ஆவன
#159
** ஏகாதச உருத்திரர்
மாதேவன் சிவன் உருத்திரன் சங்கரன்
நீலலோகிதன் ஈசானன் விசயன்
வீமதேவன் பவோற்பவன் காபாலி
செளமியன் ஏகாதச உருத்திரர் ஆகும்
#160
** துவாதச ஆதித்தர்
வைகத்தன் விவச்சுதன் மார்த்தாண்டன் பாற்கரன்
இரவி உலோகப்பிரகாசன் உலோகசாட்சி
திரிவிக்கிரமன் ஆதித்தன் சவித்திரன் துவட்டா
பங்கிசமாலி எனப் பன்னிரண்டு ஆதித்தர்
#161
** உயிர் வேதனை பன்னிரண்டு வகை
அனலும் சீதமும் வாதமும் பனியும்
புனலும் ஆயுதமும் விடமும் விடமருந்தும்
பசியும் நீர்வேட்கையும் பிணியும் முன் வறுமையும்
உயிரின் வேதனை ஓர் ஈர்ஆறே
#162
** பதினெண் பாடை
அங்கம் வங்கம் கலிங்கம் கெளசிகம்
சிந்து சோனகம் திரவிடம் சிங்களம்
மகதம் கோசலம் மராடம் கொங்கணம்
துளுவம் சாவகம் சீனம் காம்போசம்
அருணம் பப்பரம் எனப் பதினெண்பாடை
#163
** தேவர் பதினெண் கண வகை
அமரர் சித்தர் அசுரர் தைத்தியர்
கருடர் கின்னரர் கிம்புருடர் காந்தருவர்
இயக்கர் விஞ்சையர் இராக்கதர் பூதர்
பைசாசர் அந்தரர் முனிவர் உரகர்
ஆகாயவாசியர் போகபூமியர் எனப்
பதினெண்கணத்தின் பகுதி ஆகும்
#164
** அரசர்க்கு மூவகையிற் பதினெண் கிளை வகை
அமாத்தியர் புரோகிதர் சேனாபதியர்
தவாத் தொழில் தூதர் சாரணர் என்று இவை
அரசர்க்கு ஆகும் ஐம்பெருங்குழுவும்
காரணக்கிளைஞரும் கருமவிதிகாரரும்
கனகச் சுற்றமும் கடைகாப்பாளரும்
நகரமாக்களும் நனி படைத்தலைவரும்
இவுளிமறவரும் யானைவீரரும்
அரசர்க்கு எண்பெயர்ஆயம் என்ப
அடுத்த நட்பாளரும் அந்தணாளரும்
மடைத்தொழிலாளரும் மருத்துவக்கலைஞரும்
நிமித்தகாரரும் நீள் நில வேந்தர்க்கு
உரைத்த ஐம் பெயர் உறுதிச் சுற்றம்
உரைத்த முப்பாலும் உயர் குடை வேந்தர்க்குப்
பகுத்த பதினெண் கிளைப்பாலோரே
#165
** யாக்கையிற் பதினெண் குற்றம்
பசியும் நீர்வேட்டலும் பயமும் வெகுளியும்
உவகையும் வேண்டலும் நினைப்பும் உறக்கமும்
நரையும் நோய்படுதலும் மரணமும் பிறப்பும்
மதமும் இன்பமும் அதிசயமும் வியர்த்தலும்
கேதமும் கையறவும் ஆகும் என்ப
மாய யாக்கைக்குப் பதினெண்குற்றம்
இக் குற்றம் நீக்கியோர் வச்சிரயாக்கையோர்
#166
** பதினெண் புராணம்
மச்சியம் கூர்மம் வராகம் வாமனம்
பிரமம் வைணவம் பாகவதம் சைவம்
இலைங்கம் பெளடிகம் நாரதீயம் காரூடம்
பிரமகைவர்த்தம் மார்க்கண்டேயம் காந்தம்
பிரமாண்டம் ஆக்கினேயம் பதுமம் என்று இவை
பாற்படு பதினெண்புராணம் ஆகும்
#167
** உப புராணம் பதினெண் வகை
உசனம் கபிலம் காளி சனற்குமாரம்
சாம்பவம் சிவதன்மம் செளரம் தாருவாசம்
நந்தி நாரசிங்கம் நாரதீயம்
பராசரம் பார்க்கவம் ஆங்கீரம் மாரீசம்
ஆனவம் வாசிட்டலைங்கம் வாருணம்
ஆம் உபபுராணம் அறுமூன்று என்ப
#168
** தரும நூல் பதினெண் வகை
மனுவே அத்திரி விண்டு வாசிட்டம்
இயமம் ஆபத்தம்பம் இரேவதம் சுரலைவம்
கோசம் அங்கிராமம் பராசரம் வியாசம்
துவாத்தராம் கவுத்துவம் காத்திகேயம் திசாகரம்
பிரகற்பதியே மங்குலீயம் என்னத்
தருமநூல் பதினெட்டு ஆகும் என்ப
#169
** பதினெண் யாக வகை
சோதிட்டோமம் அக்கினிட்டோமம்
அத்தியக்கினிட்டோமம் வாசபேயம்
அத்திராத்திரம் சோமயாகம் காடகம்
சாதுர்மாசியம் சவித்திராமணியே
புண்டரீகம் சிவகாமம் மயேந்திரம்
அங்கிசசனே இராசசூயம்
அச்சுவமேதம் விச்சுவதித்து
நரமேதம் பிரமமேதம் என்னப்
பதினெட்டு யாகப் பல பெயராகும்
#170
** இருபத்தைந்து தத்துவம்
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என
அளவின் நின்ற ஐம்பெரும்பூதமும்
ஐந்து வாயிலும் அவற்றின் புலனும்
கை கால் குதம் வாய் மானுடக்குறி எனக்
கருமேந்திரியங்கள் ஐந்தும் அவற்றொடு
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் நான்கும்
இயமானனோடு இருபத்தைந்து தத்துவம்
#171
** இருபத்தெட்டு அலங்காரம்
உருவகம் உவமை வழிமடக்கு நிலைமடக்கு
விரி சுடர் விளக்கு என விரவி வருவனவும்
வேற்றுமைநிலையே வெளிப்படுநிலையே
வார்த்தை தன்மை பிறபொருள்வைப்பு எனப்
பால் படக் கிளந்த பகுதியின் வருவனவும்
சிறப்புமொழி சிலேடை மறுத்துமொழிநிலையே
நோக்கே உள்தொடர் தொகைமொழி மிகைமொழி
உடன்நிலைக்கூட்டம் உவமான உருவகம்
நுவலா நுவற்சி தலைக்கட்டியமொழி
நிதரிசனம் பாராட்டு ஒருங்கிய நிலையே
ஐயம் உயர்வே விரவு இயல் வாழ்த்து என
எய்தக் கூறிய எழுநான்கு அலங்காரம்
#172
** முப்பத்திரண்டு அறம்
ஆதுலர்சாலை ஓதுவார்க்குஉணவு அறுசமயத்தோர்க்குஉணவு
பசுவுக்கு வாயுறை
சிறைச் சோறு ஐயம் தின்பண்டம் மகச்சோறு
மகப்பெறுவித்தல் மகவளர்த்தல் மகப்பால்
அறவைப் பிணம் சுடுதல் அறவைத் தூரியம்
வண்ணார் நாவிதர் வதுவை பூணூல் நோய்மருந்து
கண்ணாடி காதுஓலை கண்மருந்து தலைக்கு எண்ணெய்
பெண்போகம் சுண்ணம் பிறர் துயர் காத்தல்
தண்ணீர்ப்பந்தர் மடம் தடாகம் கா
ஆ உரிஞ்சு நடு தறி ஏறு விடுத்தல்
விலை உயிர் விடுத்துக் கொலை உயிர் மீட்டல்
இச் செயல் முப்பத்திரண்டு அறம் என்ப
#173
** முப்பத்து முத் தேவர் வகை
ஆதித்தர் பன்னிருவர் அச்சுவினிகள் இருவர்
ஈசர் பதினொருவர் எண்மர் வசுக்கள்
ஆக முப்பத்துமுத்தேவர் என்ப
#174
** ஓர் அறி உயிர் வகை
ஒன்றே புலனது ஒன்றே உடைமையின்
மற்றைப் புல்லும் மரனும் ஓர் அறிவே
#175
** ஈர் அறி உயிர் வகை
உற்று அறி புலனும் நாவும் உடைமையின்
அட்டையும் நந்துவும் போல்வது ஈர் அறிவே
#176
** மூவறி உயிர்வகை
உற்று அறி புலனாம் மூக்கும் உடைமையின்
முன் பெறு சிதல் எறும்பு இனைய மூவறிவே
#177
** நான்கு அறி உயிர்வகை
உற்று அறி புலனாம் மூக்கொடு கண்ணும்
பெற்ற வண்டும் ஞெண்டும் நால் அறிவே
#178
** ஐந்து அறி உயிர்வகை
உற்று அறி புலனாம் மூக்கொடு கண் செவி
மக்களும் மாவும் ஐந்து அறிவினவே
#179
** ஆறு அறி உயிர்வகை
மனத்தோடு ஆறு அறிவினரே மக்கள்
ஒரு சார் விலங்கும் அது பெறற்கு உரிய
#180
** காவிய இயற்கை வகை
காவிய இயற்கை விரிக்கும் காலை
ஆரியம் தமிழால் நேரிதின் அடக்கி
உலகின் தோற்றமும் ஊழியின் இறுதியும்
வகை சால் தொண்ணூற்றுஆறு வாதியரும்
வேத நாவினர் வேதியர் ஒழுக்கமும்
ஆகிக் காலத்து அரசர் செய்தியும்
அவ்வவர் நாட்டால் அறியும் ஆற்றலும்
ஆடியும் பாடியும் அறிவு வரக் கிளத்தல்
#181
** ஆண்பால் பிள்ளைப் பாட்டின் வகை
திங்கள் இரண்டில் தெய்வக் காப்பும்
ஐந்தாம் திங்களில் செங்கீரையும்
ஏழாம் திங்களில் தாலப்பாட்டும்
எட்டாம் தங்களில் இன் அழுது ஊட்டலும்
ஒன்பதாம் திங்களில் சப்பாணியும்
பத்தாம் திங்களில் முத்தம் கூறலும்
ஆண்டு வரை அகவயின் ஈண்டு வருக என்றலும்
ஈர்எண் திங்களின் அம்புலி காட்டலும்
இரண்டாம் ஆண்டில் சிறுபறை கொட்டலும்
மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும்
நாலாம் ஆண்டில் சிறுதேர் உருட்டலும்
வைத்த முந்நான்கு ஆண்டு எல்லை வரையில்
கச்சில் சுரிகை காமுறப் புனைதலும்
பெற்றி ஆண்பால் பிள்ளைப்பாட்டே
#182
** பெண் பால் பிள்ளைப் பாட்டு வகை
ஆண்டு வரை அகவயின் முன் உரைத்தனவும்
மூன்றாம் ஆண்டில் குழ மண மொழிதலும்
ஐந்தின் முதலா ஒன்பதின் காறும்
ஐங்கணைக் கிழவனை ஆர்வமொடு நோற்றலும்
பனி நீர் தோய்தலும் பரவை ஆடலும்
சிறுசோறு அடுதலும் சிற்றில் இழைத்தலும்
ஊசல் ஆட்டும் என்று இவை உள்ளிட்டுப்
பேசிய பெண்பால் பிள்ளைப்பாட்டே
#183
** பேடியின் இலக்கண வகை
பேடியின் இலக்கணம் பேசும் காலை
நச்சுப் பேசலும் நல்லுரை ஓதலும்
அச்சு மாறி ஆண் பெண் ஆகியும்
கைத் தலம் ஒன்றைக் கடுக வீசியும்
மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தலும்
விலங்கி மிதித்தலும் விழி வேறு ஆகியும்
துளங்கித் தூங்கிச் சுழன்று துணிந்தும்
நக்கும் நாணியும் நடம் பல பயின்றும்
பக்கம் பார்த்தும் பாங்கு திருத்தியும்
காரணம் இன்றிக் கடி பல கொண்டும்
வார் அணி கொங்கையை வலிய நலித்தும்
இரங்கியும் அழுதும் அயர்ந்து அருவருத்தும்
குரங்கியும் கோடியும் கோதுகள் செய்தும்
மருங்கில் பாணியை வைத்தும் வாங்கியும்
இரங்கிப் பேசியும் எல்லேல் என்றும்
இன்னவை பலவும் இயற்றுதல் இயல்பே
#184
** கரந்து உறை கோளின் வகை
அரவுக் கோள் இரண்டும் பருதியும் சூரியனும்
பரிவேடமும் தூமமும் இந்திரவில்லும்
பெருகு வான் மீனும் கரந்து உறை கோளே
#185
** திருப் பொறி வகை
சங்கு சக்கரம் மதியம் அரிமா விடபம்
வேழம் ஆசனம் நிறைகுடம் தோட்டி
விளக்கு முடி கடல் சூலம் கொடியே
தாமரை செயிர் தீர் இரேகை திருப்பொறி
ஆகும் என்பர் அறிந்திசினோரே
#186
** ஐம் புலத்து உயிர் இழக்கும் வகை
யானை ஊற்றில் மீன் அது சுவையில்
அசுணம் இசையில் அளி நாற்றத்தில்
ஏனைப் பதங்கம் உருவம் கண்டு உயிர்
இழப்ப ஆகும் என்மனார் புலவர்
#187
** அரன் ஊர்தி ஆயுத வகை
அரனுடை ஊர்தி இடபம் ஆகும்
பரசு சூலம் பினாகவில் படையே
#188
** அரி ஊர்தி ஆயுத வகை
அரியுடை ஊர்தி கருடன் ஆகும்
சக்கரம் சங்கு தண்டு வாள் சாரங்கம்
பலம் மிக்க மாயோன் பஞ்சாயுதமே
#189
** பலதேவன் படை கொடி வகை
பல தேவன் படை கலப்பை ஆகும்
கொடி பனை ஆம் எனக் கூறினர் புலவர்
#190
** அயன் ஊர்தி படை கொடி வகை
அயனுடை ஊர்தி அன்னப்புள்ளு
படை பாசம் அங்குசம் கொடி வேதம் என்ப
#191
** குமரன் ஊர்தி கொடி படை வகை
குமரன் ஊர்தி மயிலும் யானையும்
கொடியே கோழி படை வேல் ஆகும்
#192
** சாத்தாவின் ஊர்தி கொடி தார வகை
காரி ஊர்தி யானை ஆகும்
கோழி அவர்க்குக் கொடி ஆகும்மே
பூரணை புட்கலை அவர் தாரம் ஆகும்
#193
** காமன் கொடி படை வகை
காமன் கொடி சுறவு கரும்பு வில்லு
பூ அவன் வாளி பொரு படை ஆகும்
#194
** இயமன் எர்தி ஆயுத வகை
இயமனுடை ஊர்தி எருமைஏறு
படை பாசம் தண்டும் ஆகும்
#195
** காலன் ஆயுத வகை
கூற்றின் படை கொடும் கணிச்சி ஆகும்
#196
** குபேரன் ஊர்தி வகை
குபேரன் ஊர்தி புட்பகவிமானமும்
நரவாகனமும் ஆம் என நவில்வர்
#197
** சூரியன் ஊர்தி வகை
தனிக் கால் பொன் தேர் அருக்கன் ஊர்தி
#198
** சந்திரன் ஊர்தி வகை
வெண்மதி ஊர்தி விமானம் ஆகும்
#!99
** இந்திரன் ஊர்தி படை கொடி வகை
இந்திரன் ஊர்தி வெள்ளைவாரணம்
படையே வச்சிரம் இடி கொடி ஆகும்
#200
** காளி ஊர்தி கொடி வகை
காளி ஊர்தி யாளி ஆகும்
பேய் அது ஆகும் அவள் பெரும் கொடியே
#201
** மூதேவி ஊர்தி கொடி வகை
கழுதை ஊர்தியும் காக்கைக் கொடியும்
மொழியும் காலை மூதேவிக்கு ஆகும்
#202
** சேரன் கொடி பாண்டியன் கொடி வகை
சேரற்கு வில் கொடி தென்னற்குக் கயல் கொடி
#203
** சோழன் கொடி வகை
சோழற்குப் புலிக் கொடி ஆகும் என்ப
#204
** வேள் புல அரசர் கொடி வகை
கேழல் வேள் புல அரசர் கொடியே
அவ்வவர் பெயரும் கொடியும் படையும்
அவ்வவர் தம்மோடு அறிந்து உணர்ந்து கொளுமே
#205
** அரசுவாவின் குறி வகை
கால் ஓர் நான்கும் தனிக் கையும் கோசமும்
வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்ந்து
பாலும் சங்கும் போலும் கால் உகிரது
காலினும் ஞான்ற ஒரு தனிக் கையினும்
வாயினும் வாலினும் மருப்பினும் கோறல்
வல்லது பதின்மூன்று முழச் சுற்று உடைத்தாகி
ஏழு முழம் உயர்ந்து ஒன்பது முழம் நீண்டது
தீ உமிழ் சிறு கண்ணும் செம் புகரும் உடைத்தாய்
முன்பு உயர்ந்து பின் பணிந்தது ஆயின்
அவ் இயல் யானையை அரசுவா என்ப
#206
** அனுலோமர் வகை
பார்ப்பார் அரசர் வணிகர் வேளாளர் என
நாற்குலத்து வரூஉம் தம் குல நடையின்
உயர்ந்த ஆணினும் இழிந்த பெண்ணினும்
பிறந்த கூட்டத்தவர் அனுலோமர்
#207
** பிரதிலோமர் வகை
இழிந்த ஆணினும் உயர்ந்த பெண்ணினும்
பிறந்த கூட்டத்தவர் பிரதிலோமர்
#208
** அந்தராளர் வகை
அனுலோம நலத்து ஆணினும் அவ்வழிப்
பிரதிலோம குலப் பெண்ணினும் ஆகி
அடுத்த கூட்டத்தவர் அந்தராளர்
#209
** விராத்தியர் வகை
பிரதிலோம குலத்து ஆணினும் பின்னின்
அனுலோம குலப் பெண்ணினும் ஆகி
வியந்தோர் கூட்டத்துப் பிறந்தோர் விராத்தியர்
#210
** பல்லக் கணக்கு வகை
இரு விரல் அகலத்து அறு விரல் ஆழத்து ஒரு
குழி நிறையப் பள்ளை ஆட்டு மயிர்த் தொகை
பற்றியது ஆகும் பல்லம் என் கணக்கே
#211
** பதாதி வகை
ஒரு பெரும் களிறும் ஒரு பெரும் தேரும்
புரவி நான்கும் படைஞர் ஐம்பதின்மரும்
பதாதி என்று பகரப்படுமே
#212
** சேனாமுக வகை
பதாதி மும்மடி சேனாமுகமே
#213
** குமுதவகை
சேனாமுகம் மும்மடி தான் ஆம் குமுதம்
#214
** கண வகை
குமுதம் மும்மடி கொண்டது கணமே
#215
** வாகினி வகை
கணம் மும்மடியின் பெயர் வாகினியே
#216
** பிரதனை வகை
வாகினி மும்மடி ஆகும் பிரதனை
#217
** சமூக வகை
பிரதனை மும்மடி ஆகும் சமூகம்
#218
** அனீக வகை
சமூகம் மும்மடி அனீகம் ஆகும்
#219
** அக்குரோணி வகை
அனீகம் ஐயிருமடி அக்குரோணி
#220
** ஒன்று பத்து
ஏகம் ஒன்றே தசம் பத்து ஆகும்
#221
** நூற்றின் பெயர் – ஆயிரத்தின் பெயர்
நூறு சதமே சகசிரம் ஆயிரம்
#222
** பதினாயிரத்தின் பெயர்
பதினாயிரம் பெயர் அயுதம் ஆகும்
#223
** நூறு ஆயிரத்தின் பெயர்
அயுதம் பத்தே நியுதம் நூறு ஆயிரம்
#224
** பத்து நாறு ஆயிரத்தின் பெயர்
நியுதம் பத்தே பிரயுதம் ஆகி
இயலும் பத்து நூறு ஆயிரமே
#225
** நூறு நூறு ஆயிரத்தின் பெயர்
பிரயுதம் பத்தே கோடி என்ப
வரைந்த நூறு நூறு ஆயிரம் மன்னும்
#226
** அற்புதம்
கோடி பத்தே அற்புதம் ஆகும்
#227
** சமுத்திர வகை
அற்புதம் பத்தே சமுத்திரம் ஆகும்
#228
** அத்திய வகை
சமுத்திரம் பத்தே அத்தியம் ஆகும்
#229
** மத்திய வகை
அத்தியம் பத்தே மத்தியம் ஆகும்
#230
** பாரத வகை
மத்தியம் பத்தே பாரதம் ஆகும்
#231
** மகா கும்பம்
நூறு கோடி மகாகும்பம் ஆகும்
#232
** நிகர்வ வகை
மகாகும்பத்து நூறு ஆயிரம் கோடி நிகர்வம்
#233
** மகாபற்பம்
நிகர்வ நூறு ஆயிரம் கோடி மகாபற்பம்
#234
** பிரமகற்பம்
சங்கம் பாரதம் பத்தே பிரமகற்பம்
#235
செம்பொன் கிடையான் அம்பல் சேந்தன்
நன்னராளன் நலம் மிகு நாட்டத்தன்
பன்னிய சிறப்பின் பன்னிரண்டாவது
பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியொடு
பன்னிரு தொகுதியும் பண்பொடு முற்றின
** பன்னிரண்டாவது
** பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி
** முற்றிற்று

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)