Select Page

மயேச்சுரம் — மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் தொகுப்பு


&14 மயேச்சுரம் – மயேச்சுவரர் (பேராசிரியர்) இலக்கண நூல்
** மயிலை சீனி வேங்கடசாமி – மறைந்துபோன தமிழ் நூல்கள்

@1 யாப். விருத்தியுரை – மயேச்சுவரர் பெயரால் காட்டப்பட்ட சூத்திரங்கள்

#1
சீர் தளை சிதைவுழி ஈர் உயிர்க் குறுக்கமும்
நேர்தல் இலவே உயிரளபெடையும்

#2
நேர் நிரை நேர்பு நிரைபு என நான்கும்
ர ட ரு டு வடிவாக விடுவாரும் உளர்

#3
நேர் நிரை நேர்பு நிரைபு என நான்கும்
ர ட ரு டுப் போல ஒரு விரல் நேரே

#4
விரல் இடையிட்டன அசைச் சீர் நால் அசை
விரல் வரை இடையினும் மானம் இல்லை

#5
விரல் இடையிட்டன வா ட ரு வெ டி வரின்
நிரல்பட எழுதி அலகு பெறுமே

#6
ஏவல் குறிப்பே தற்சுட்டு அல் வழி
யாவையும் தனிக்குறில் முதல் அசை ஆகா
சுட்டினும் வினாவினும் உயிர் வருகாலை
ஒட்டி வரூஉம் ஒருசாரும் உளவே

#7
இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்னும்
நிகழ்ச்சிய என்ப நின்ற மூன்றும்

#8
நேரும் நிரையும் சீராய் வருதலும்
சீரும் தளையும் சிதைவுழிக் கொளலும்
யாவரும் அறிவர் நால் வகைப் பாவினும்

#9
நேர் ஈற்று இயற்சீர் கலி-வயின் சேரா
நிரை இற நிற்ற நால் அசை எல்லாம்
வரைதல் வேண்டும் வஞ்சி இல் வழியே

#10
நிரை நடு இயலா வஞ்சி உரிச்சீர்
வரைதல் வேண்டும் ஆசிரியம் மருங்கின்

#11
ஈர் அசை இயற்சீர் ஒன்றிய எல்லாம்
ஆசிரியத்தளை என்மனார் புலவர்

#12
இயற்சீர் ஒன்றா நிலையது வெண்தளை
உரிச்சீர் அதனுள் ஒன்றுதல் இயல்பே

#13
நேரும் நிரையுமாம் இயற்சீர் ஒன்றின்
யாவரும் அறிப ஆசிரியத்தளை

#14
வேறுபட வரின் இது வெண்தளை வெண்சீர்
ஆறு அறி புலவர்க்கு ஒன்றினும் அதுவே

#15
வெண்சீர்ப் பின்னர் நிரை வரும்காலைக்
கண்டனர் புலவர் கலித்தளை ஆக

#16
வஞ்சி உரிச்சீர் வந்தன வழி முறை
எஞ்சிய வரினும் வஞ்சித் தளையே

#17
இரு சீர் அடியும் முச் சீர் அடியும்
வருதல் வேண்டும் வஞ்சியுள்ளே

#18
பொருளினும் சொல்லினும் முரணத் தொடுப்பின்
முரண் என மொழிப முந்தையோரே

#19
பெற்ற அடி ஐந்தினும் பிறவினும் பாட்டாய்
இற்ற அடியும் ஈற்று அயல் அடியும்
ஒன்றும் இரண்டும் நின்ற அதன் சீர்
கண்டன குறையின் வெண் துறை ஆகும்

#20
ஈற்று அயல் குறைந்த நேர் அசை இணையாம்
ஏற்ற அடியின இடை பல குறைந்தன

#21
எவ் அடியானும் முதல் நடுவு இறுதி
அவ் அடி பொருள்கொளின் மண்டில யாப்பே

#22
ஒத்த அடியின நிலைமண்டிலமே

#23
என் எனும் அசைச்சொலும் பிறவும் ஒன்றித்
துன்னவும் பெறூஉம் நிலைமண்டிலமே
என் என்று இறுதல் வரைநிலை இன்றே
அல்லா ஒற்றினும் அதனின் இறுதி
நில்லா அல்ல நிற்பது வரையார்

#24
ஒத்த ஒரு பொருள் மூ அடி முடியின் அஃது
ஒத்தாழிசையாம் உடன் மூன்று அடுக்கின்

#25
எண் சீர் அளபு ஈற்று அயல் அடி குறைநவும்
ஐம் சீர் அடியினும் பிறவினும் இடை ஒன்ற
வந்த தொடையாய் அடி நான்கு ஆகி
உறழக் குறைநவும் துறை எனப்படுமே

#26
தளை கலி தட்டன தன் சீர் வெள்ளை
களையுந இன்றிக் கடை அடி குறையின
விரவரல் இல்லா வெண்கலி ஆகும்

#27
கூறிய உறுப்பில் குறைபாடு இன்றித்
தேறிய இரண்டு தேவபாணியும்
தரவே குறையினும் தாழிசை ஒழியினும்
இரு வகை முத் திறத்து எண்ணே நீங்கினும்
ஒருபோகு என்ப உணர்ந்திசினோரே

#28
ஐம் சீர் நால் சீர் அடி நான்கு ஆயின்
எஞ்சாக் கலியின் துறையும் விருத்தமும்

#29
இரு சீர் நால் அடி மூன்று இணைந்து ஒன்றி
வருவது வஞ்சித்தாழிசை தனி நின்று
ஒரு பொருள் முடிந்தது துறை என மொழிப

#30
தன் சீர் நிலையின் தளை தம தழீஇய
இன்பா என்ப இயல்பு உணர்ந்தோரே
ஏனையவை விரவின் இடை எனப்படுமே
தான் இடை இல்லது கடை எனப்படுமே

#31
வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சி என
நுண் பா உணர்ந்தோர் நுவலும்காலை
இரண்டு மூன்று நான்கும் இரண்டும்
திரண்ட வடியின சிறுமைக்கு எல்லை
** (யாப்பருங்கலம் செய்யுளியல் நாற்பதாம் சூத்திரம் விருத்தியுரை)

#32
நேரும் நிரையும் சீராய் இறுதலும்
சீரும் தளையும் சிதைவுழிக் கொளலும்
யாவரும் உணர்வர் யா வகைப் பாவினும்

@2 பேராசிரியர் பெயரினால் மேற்கோள் காட்டப்பட்ட சூத்திரங்கள்

#1
நெடிலும் குறிலும் ஒற்றொடு வருதலும்
கடிவரை இலவே நேர் அசைத் தோற்றம்

#2
குறிலும் நெடிலும் குறில் முன் நிற்பவும்
நெறியின் ஒற்று அடுத்து நிரை அசை ஆகும்

#3
இரு சீர் அடியும் முச் சீர் அடியும்
வருதல் வேண்டும் வஞ்சியுள்ளே

#4
அல்லாப் பாவின் அடி வகை தெரியின்

#5
பேணு பொருள் முடிபே பெருமைக்கு எல்லை
காணும்காலை கலி அலங்கடையே

#6
கலி உறுப்பு எல்லாம் கட்டளை உடைமையின்
நெறியின் வழி நிறுத்தல் வேண்டும்
கொச்சகக்கலி-வயின் குறித்த பொருள் முடிவாம்
தாழிசை பலவும் தழுவுதல் முடிபே

#7
அடுத்த அடி இரண்டு யா வகைப் பாவினும்
தொடுத்து வழங்கலில் தொடை எனப்படுமே

#8
அளபு எழுந்து யாப்பின் அஃது அளபெடைத் தொடையே

#9
ஒரு சீர் அடி முழுதும் வருவது இரட்டை

#10
ஒத்தாழிசை துறை விருத்தம் எனப் பெயர்
வைத்தார் பா இனம் என்ன வகுத்தே

#11
மூ அடி ஆகியும் நால் அடி ஆகியும்
பா அடி வீழ்ந்து பாடலுள் நயந்தும்
கடிவரைவு இல்லா அடி-தொறும் தனிச்சொல்
திருத்தகு நிலைய விருத்தம் ஆகும்

#12
இயற்சீர்த்து ஆகியும் அயல் சீர் விரவியும்
தன் தளை தழுவியும் பிற தளை தட்டும்
அகவல் ஓசையது ஆசிரியம்மே

#13
ஏ என்று இறுவது ஆசிரியத்து இயல்பே
ஓ ஆ இறுதியும் உரிய ஆசிரியம்
நின்றது ஆதி நிலைமண்டிலத்துள்
என்றும் என் என்று இறுதி வரைவு இன்றே
அல்லா ஒற்றும் அகவலின் இறுதி
நில்லா அல்ல நிற்பன வரையார்

#14
ஆறு முதலா எண் சீர்-காறும்
கூறும் நான்கு அடி ஆசிரியவிருத்தம்

#15
சீரின் கிளந்த தன் தளை தழுவி
நேர் ஈற்று இயற்சீர் சேராது ஆகித்
துள்ளல் ஓசையின் தள்ளாது ஆகி
ஓதப்பட்ட உறுப்பு வேறு பலவாய்
ஏதம் இல்லன கலி எனப்படுமே

#16
ஒத்தாழிசைக்கலி வெண்கலி கொச்சகம்
முத் திறத்து அடங்கும் எல்லாக் கலியும்

#17
தரவு ஒன்று ஆகித் தாழிசை மூன்றாய்த்
தனிச்சொல் இடைக் கிடந்து சுரிதகம் தழுவ
வைத்த மரபினது ஒத்தாழிசைக்கலி

#18
தரவின் அளவின் சுரிதகம் அயல் பா
விரவும் என்பர் ஆசிரியம் வெள்ளை

#19
வண்ணகத்து இயற்கை திண்ணிதின் கிளப்பின்
தரவொடு தாழிசை தலை அளவு எய்தித்
தாழிசைப் பின்னர்த் தனிநிலை எய்திப்
பேரெண் இட்ட எண்ணுடைத்து ஆகிச்
சிற்றெண் வழியால் அராக அடி நான்கும்
கீழளவு ஆகப் பேரளவு எட்டாச்
சீர் வகை நான்கு முதல் பதின்மூன்றா
நேரப்பட்ட இடை நடு எனைத்தும்
சீர் வகை முறைமையின் அராகம் பெற்றும்
அம்போதரங்கத்து அராக அடி இன்றி
மடக்கடி மேலே முச் சீர் எய்திக்
குறில் இணை பயின்ற அசை மிசை முடுகி
அடுக்கிசை முடுகியல் அராகம் என்னும்
உடைப் பெயர் மூன்றிற்கும் உரிமை எய்தி
விண்ணோர் விழுப்பமும் வேந்தரது புகழும்
வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப

#20
அந்தாதித் தொடையினும் அடி நடை உடைமையும்
முந்தையோர் கண்ட முறைமை என்ப

#21
தரவே தரவிணை தாழிசை சிலபல
வரன்முறை பிறழ அயல் பா மயங்கியும்
தனிச்சொல் பலவாய் இடையிடை நடந்தவும்
ஒத்தாழிசைக்கலி உறுப்பில் பிறழ்ந்தவும்
வைத்த வழி முறையால் வண்ணக இறுவாய்
மயங்கி வந்தவும் இயங்கு நெறி முறையின்
கொச்சகக்கலி எனக் கூறினர் புலவர்

#22
அடி பல ஆகியும் கடை அடி சீர் மிகின்
கடிவரை இல்லை கலித்தாழிசையே

#23
தூங்கல் ஓசை நீங்காது ஆகி
நால் சீர் நிரம்பா அடி இரண்டு உடைத்தாய்
மேல் சீர் ஓதிய ஐம் சீர் பெற்றுச்
சுரிதக ஆசிரியம் உரியதனில் அடுத்து
வந்ததாயின் வஞ்சிப்பாவே

#24
பாவும் இனமும் மேவிய அன்றி
வேறுபட நடந்தும் கூறுபட வரினும்
ஆறு அறி புலவர் அறிந்தனர் கொளலே
**
*