1. யாப்பருங்கல விருத்தியுரை (எழுத்தோத்து 1-ஆம் சூத்திர உரை) மேற்கோள்
2. குணசாகரர் – யாப்பருங்கலக்காரிகை உரை மேற்கோள்
3. யாப்பருங்கல விருத்தியுரைகாரர் – மேற்கோள்
4. பன்னிரு பாட்டியல்
@1 யாப்பருங்கல விருத்தியுரை (எழுத்தோத்து 1-ஆம் சூத்திர உரை) மேற்கோள்
#1
தொல்காப்பியப் புலவோர் தோன்ற விரித்துரைத்தார்
பல்காயனார் பகுத்துப் பன்னினார் நல் யாப்புக்
கற்றார் மதிக்கும் கலைக் காக்கைபாடினியார்
சொற்றார் தம் நூலுள் தொகுத்து
@2 குணசாகரர் – யாப்பருங்கலக்காரிகை உரை மேற்கோள்
#1
முதல் எழுத்து ஒன்றின் மோனை எதுகை
முதல் எழுத்து அளவோடு ஒத்தது முதலா
அது ஒழித்து ஒன்றின் ஆகும் என்ப
#2
இயற்சீர் நேர் இறல் தன் தளை உடைய
கலிக்கு இயல்பு இலவே காணும்காலை
வஞ்சியுள்ளும் வாரா ஆயினும்
ஒரோவிடத்து ஆகும் என்மனார் புலவர்
#3
வஞ்சி விரவல் ஆசிரியம் உரித்தே
வெண்பா விரவினும் கடிவரை இலவே
#4
அடி முதல் பொருளைத் தான் இனிது கொண்டு
முடிய நிற்பது கூன் என மொழிப
#5
வஞ்சி இறுதியும் ஆகும் அதுவே
அசை கூன் ஆகும் என்மனார் புலவர்
@3 யாப்பருங்கல விருத்தியுரைகாரர் – மேற்கோள்
#1
இமிழ் கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத்
தமிழ் இயல் வரைப்பின் தாம் இனிது விளங்க
யாப்பியல் தானே யாப்புற விரிப்பின்
எழுத்து அசை சீர் தளை அடி தொடை தூக்கொடு
இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும்
ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசினோரே
#2
தூக்கும் பாட்டும் பாவும் ஒன்று என
நோக்கிற்று என்ப நுணங்கியோரே
#3
உயிர் ஈர்_ஆறே மெய் மூ_ஆறே
அ மூ_ஆறும் உயிரோடு உயிர்ப்ப
இருநூற்றொருபத்தாறு உயிர்மெய்யே
#4
குறில் ஒரு மாத்திரை நெடில் இரு மாத்திரை
அளபெடை மூன்று என்று அறையல் வேண்டும்
#5
எழு வகை இடத்தும் குற்றியலுகரம்
வழு இன்றி வரூஉம் வல் ஆறு ஊர்ந்தே
#6
யகரம் முதல் வரின் உகரம் ஒழிய
இகரமும் குறுகும் என்மனார் புலவர்
#7
தற்சுட்டு ஏவல் குறிப்பு இவை அல்வழி
முற்றுத் தனிக் குறில் முதல் அசை ஆகா
#8
நெடில் குறில் தனியாய் நின்றும் ஒற்று அடுத்தும்
குறில் இணை குறில் நெடில் தனித்தும் ஒற்று அடுத்தும்
நடைபெறும் அசை நேர் நிரை நால்_இரண்டே
#9
அசையே இரண்டும் மூன்றும் தம்முள்
இசையே வருவன சீர் எனப்படுமே
#10
ஈர்_இரண்டு ஆகியும் ஒரோவிடத்து இயலும்
#11
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே
#12
நால் அசைச் சீரும் ஒரோவிடத்து இயலும்
பாவொடு பாவினம் பயிலல் இன்றி
#13
ஓசையின் ஒன்றி வரினும் வெண் சீரும்
ஆசிரிய அடியுள் குறுகும் என்ப
#14
அகவலுள் தன் சீர் வெண் சீர் ஒருங்கு
புகலின் கலியுடன் பொருந்தும் என்ப
#15
வஞ்சியுள் ஆயின் எஞ்சுதல் இலவே
#16
இயற்சீர் இறுதி நேர் உற்ற காலை
வஞ்சியுள்ளும் வந்தது ஆகா
ஆயினும் ஒரோவிடத்து ஆகும் என்ப
#17
ஆசிரியத்தொடு வெள்ளையும் கலியும்
நேரடி தன்னால் நிலைபெற நிற்கும்
#18
வஞ்சி விரவல் ஆசிரிய உரித்தே
வெண்பா விரவினும் கடிவரை இன்றே
#19
ஆயிரம் இறுதி மூ அடி இழிபா
ஆசிரியப்பாட்டின் அடித்தொகை அறிப
ஈர் அடி முதலா ஏழ் அடி-காறும்
திரிபு இல வெள்ளைக்கு அடித்தொகை தானே
#20
முதல் எழுத்து அளவு ஒத்து அயல் எழுத்து ஒன்றுவது
எதுகை அதன் வழி இயையவும் பெறுமே
#21
முதல் எழுத்து ஒன்றுவது மோனை எதுகை
முதல் எழுத்து அளவோடு ஒத்தது முதலா
அது ஒழித்து ஒன்றின் ஆகும் என்ப
#22
இவ் இரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய
#23
சொல்லினும் பொருளினும் மாறுகோள் முரணே
#24
இயைபே இறு சீர் ஒன்றும் என்ப
#25
அளபெடைத் தொடைக்கே அளபெடை ஆகும்
#26
மோனை எதுகை முரணே அளபெடை
ஏனைச் செந்தொடை இயைபே பொழிப்பே
ஒரூஉவே இரட்டை ஒன்பதும் பிறவும்
வருவன விரிப்பின் வரம்பு இல என்ப
#27
அசையினும் சீரினும் இசையினும் எல்லாம்
இசையாது ஆவது செந்தொடை தானே
#28
முழுவதும் ஒன்றின் இரட்டை ஆகும்
#29
விகற்பம் கொள்ளாது ஓசையின் அமைதியும்
முதல்-கண் அடி-வயின் முடிவது ஆகும்
#30
உரையொடு நூல் இவை அடி இல நடப்பினும்
வரைவு இல என்ப வாய்மொழிப் புலவர்
#31
மொழி பிசி முதுசொல் மூன்றும் அன்ன
#32
செயிர் தீர் செய்யுள் தெரியும்காலை
அடியின் நீட்டத்து அழகுபட்டு இயலும்
#33
ஒரோ அடியானும் ஒரோவிடத்து இயலும்
#34
அவைதாம்
பாட்டு உரை நூலே மந்திரம் பிசியே
முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும்
ஆக்கின என்ப அறிந்திசினோரே
#35
அடியினில் பொருளைத் தான் இனிது கொண்டு
முடிய நிற்பது கூன் என மொழிப
வஞ்சிக்கு இறுதியும் ஆகும் அதுவே
அசை கூன் ஆகும் என்மனார் புலவர்
#36
இயற்சீர் நேர் இறல் தன் தளை உடைய
கலிக்கு இயல்பு இலவே காணும்காலை
வஞ்சியுள்ளும் வந்தது ஆகா
ஆயினும் ஒரோவிடத்து ஆகும் என்ப
@4 பன்னிரு பாட்டியல்
#1
இரண்டு பொருள் புணர் இருபத்தெழு வகைச்
சீரிய பாட்டே தாரகை மாலை
#2
எப்பொருளேனும் இருபத்தெழு வகை
செப்பிய நெறியது செந்தமிழ் மாலை
#3
மூ_இரண்டேனும் இரு_நான்கேனும்
சீர் வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர்
கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்
அறு சீர்க் குறியது நெடியது எண் சீராம்
#4
அறு சீர் எண் சீர் அடி நான்கு ஒத்து அங்கு
இறுவது தாண்டகம் இரு_முச் சீர் அடி
குழியது திரு நால் சீரே
**