Select Page

சிறுகாக்கைபாடினியம் — தி.வே.கோபாலையர் தொகுப்பு

** இலக்கண விளக்கம் – வைத்தியநாத தேசிகர்
** பொருளதிகாரம் – செய்யுளியல் பிற்சேர்க்கை

@1
** தற்சிறப்புப்பாயிரம்

#1
வட திசை மருங்கின் வடுகு வரம்பாகத்
தென் திசை உள்ளிட்டு எஞ்சிய மூன்றும்
வரை மருள் புணரியொடு கரை பொருது கிடந்த
நாட்டு இயல் வழக்கம் நான்மையின் நெறிக்-கண்
யாப்பினது இலக்கணம் அறைகுவன் முறையே
** அசைக்கு உறுப்பாவன

#2
குறிய நெடிய உயிர் உறுப்பு உயிர்மெய்
வலிய மெலிய இடைமை அளபெடை
மூ உயிர்க் குறுக்கமும் ஆம் அசைக்கு எழுத்தே
** அசைகள்

#3
தனி நெடில் ஆகியும் தனிக் குறில் ஆகியும்
ஒற்றொடு வருவது நேர் அசை ஆகும்

#4
குறில் இணை ஆகியும் குறில் நெடில் ஆகியும்
ஒற்றொடு வந்தும் நிரை அசை ஆகும்

#5
இடையும் கடையும் இணையும் ஐ எழுத்தே
** சீர்கள்

#6
ஈர் அசை ஆகிய மூ அசைச் சீர்தாம்
நேர் இறின் வெள்ளை நிரை இறின் வஞ்சி
** வெண்தளை

#7
இயற்சீர் ஒன்றா நிலையது வெண்தளை
உரிச்சீர் அதனில் ஒன்றுவது இயல்பே
** ஆசிரியத்தளை

#8
ஈர் அசை இயற்சீர் ஒன்றிய நிலைமை
ஆசிரியத்தளை ஆகும் என்ப
** கலித்தளை

#9
வெண்சீர் இறுதி நிரை வரின் கலித்தளை
** வஞ்சித்தளை

#10
வஞ்சி வகைமை வரம்பின்று ஆகும்
** பாக்களின் அடிகளுக்குச் சீர் வரையறை

#11
வஞ்சி அல்லா மூ வகைப் பாவும்
எஞ்சுதல் இலவே நால் சீர் அடி வகை
** தொடை

#12
முதல் எழுத்து ஒன்றி முடிவது மோனை
ஏனையது ஒன்றின் எதுகைத் தொடையே

#13
உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால்
நெறிப்பட வந்தன நேரப்படுமே
** தொடையால் பெயரிடுதல்

#14
பல் வகைத் தொடை ஒரு பாவினுள் தொடுப்பின்
சொல்லிய முதல் தொடை சொல்லினர் கொளலே
** அளபெடைத்தொடை

#15
சொல்லிசை அளபு எழ நிற்பது அளபெடை
** செந்தொடை

#16
ஒன்றிய தொடையொடும் விகற்பம் தன்னொடும்
ஒன்றாது கிடப்பது செந்தொடை ஆகும்
** பாவும் பாவினமும்

#17
பாவே தாழிசை துறையே விருத்தம் என
நால் வகைப் பாவும் நானான்கு ஆகும்
** இன்னிசை வெண்பா

#18
ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல்
இன்றி வருவன இன்னிசை வெண்பா
** பஃறொடை வெண்பா

#19
தொடை பல தொடுப்பன பஃறொடை வெண்பா
** வெள்ளொத்தாழிசை

#20
அடி மூன்று ஆகி வெண்பாப் போல
இறுவன மூன்றே வெள் ஒத்தாழிசை
** வெளி விருத்தம்

#21
நான்கும் மூன்றும் அடி-தொறும் தனிச்சொல்
தோன்ற வருவன வெளிவிருத்தம்மே
** நேரிசை ஆசிரியம்

#22
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி
பெறுவன நேரிசை ஆசிரியம்மே
** இணைக்குறள் ஆசிரியம்

#23
இடையிடை சீர் தபின் இணைக்குறள் ஆகும்
** அடிமறி மண்டில ஆசிரியம்

#24
கொண்ட அடி முதலாய் ஒத்து இறுவது
மண்டில யாப்பு என வகுத்தனர் புலவர்
** ஆசிரிய ஒத்தாழிசை

#25
அடி மூன்று ஒத்து இறின் ஒத்தாழிசையே
** ஆசிரிய விருத்தம்

#26
அறு சீர் எழு சீர் அடி மிக வரூஉம்
முறையே நால் அடி விருத்தம் ஆகும்
** நேரிசை ஒத்தாழிசைக்கலி

#27
தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம்
வருவன எல்லாம் தாழிசைக் கலியே
** அம்போதரங்க ஒத்தாழிசைக்கலி

#28
சேர்த்திய தரவொடு தாழிசைப் பின்னர்
நீர்த் திரை போல நெறிமையின் சுருங்கி
மூ வகை என்னும் முறைமையின் வழாஅ
அளவின எல்லாம் அம்போதரங்கம்
** கலித்தாழிசை

#29
அந்த அடி மிக்கு அல்லா அடியே
தம்தமுள் ஒப்பன கலித்தாழிசையே
** கலிவிருத்தம்

#30
நால் சீர் நால் அடி கலிவிருத்தம்மே
** வஞ்சித்தாழிசையும் துறையும்

#31
எஞ்சா இரு சீர் நால் அடி மூன்று எனின்
வஞ்சித் தாழிசை தனி வரின் துறையே
** வஞ்சி விருத்தம்

#32
மூச் சீர் நால் அடி ஒத்தன வரினே
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே
** ஆசிரியப்பாவிற்கு ஏற்கும் வஞ்சிச்சீர்கள்

#33
நடுவு நேர் இயலா வஞ்சி உரிச்சீர்
உரிமை உடைய ஆசிரியத்துள்ளே
** கூன்ஆமாறு

#34
தனிச்சொல் என்பது அடி முதல் பொருளொடு
தனித்தனி நடக்கும் வஞ்சியுள் ஈறே
**