எண் | ஆசிரியர் | நூற்பாக்கள் | அடிகள் | சொற்கள் | பிரி சொற்கள் |
கட்டுருபன்கள் | அடைவுச் சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|
1. | அகத்தியம் – மயிலை.சீனி | 26 | 89 | 401 | 2 | 4 | 407 |
2. | அவிநயம் – மயிலை.சீனி | 100 | 238 | 1087 | 16 | 8 | 1111 |
3. | அவிநயம் – கோபாலையர் | 63 | 140 | 647 | 12 | 3 | 662 |
4. | காக்கைபாடினியம் – மயிலை.சீனி | 110 | 320 | 1411 | 6 | 7 | 1424 |
5. | காக்கைபாடினியம் – கோபாலையர் | 73 | 202 | 908 | 2 | 4 | 914 |
6. | காக்கைபாடினியம் – இளங்குமரனார் | 89 | 236 | 1055 | 4 | 5 | 1064 |
7. | சங்கயாப்பு – மயிலை.சீனி | 24 | 52 | 239 | 6 | 0 | 245 |
8. | சிறுகாக்கைபாடினியம் – மயிலை.சீனி | 32 | 66 | 313 | 0 | 2 | 315 |
9. | சிறுகாக்கைபாடினியம் – கோபாலையர் | 34 | 66 | 313 | 0 | 2 | 315 |
10. | நத்தத்தம் – மயிலை.சீனி | 27 | 55 | 251 | 0 | 4 | 255 |
11. | நத்தத்தம் – கோபாலையர் | 24 | 45 | 208 | 0 | 2 | 210 |
12. | பல்காயம் – மயிலை.சீனி | 46 | 109 | 492 | 16 | 3 | 511 |
13. | பல்காயம் – கோபாலையர் | 26 | 54 | 257 | 2 | 2 | 261 |
14. | மயேச்சுரம் – மயிலை.சீனி | 56 | 165 | 767 | 0 | 4 | 771 |
15. | மயேச்சுரம் – கோபாலையர் | 64 | 160 | 745 | 2 | 4 | 751 |
மொத்தம் | 794 | 1997 | 9094 | 68 | 54 | 9216 |
தனிச்சொற்கள் 2036
விளக்கம்
சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மாது_ஓர்_பாகன்)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை
சொல் = மாது_ஓர்_பாகன் (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = மாது, ஓர், பாகன் (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2
1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, குல_கொடி, துன்_அரும், ஆ_கோள் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, ஈராறு என்பது எண் பன்னிரண்டைக் குறிக்கும். இது ஈர்_ஆறு என்று கொள்ளப்படும். இந்தச் சொல்லுக்குரிய பிரிசொற்கள் ஈர், ஆறு ஆகிய இரண்டுமே. எனவே ஈர்_ஆறு என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், ஆறு, ஈர் ஈர்_ஆறு என்ற மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.
எ.காட்டு
ஆறும் (2)
இசையொடு புணர்ந்த ஈர்_ஆறும் உயிரே – சங்கயாப்பு-மயிலை:1 1/2
அ மூ_ஆறும் உயிரோடு உயிர்ப்ப – பல்காயம்-மயிலை:3 3/2
ஈர் (48)
ஈர் அடி ஆகும் இழிபிற்கு எல்லை – அகத்தியம்-மயிலை:5 2/1
ஈர் அசை சீர் நான்கு இயற்சீர் மூ அசை – அவிநயம்-மயிலை:3 16/1
ஈர் அசை சீர் பின்முன்னா வைத்து உறழ்ந்து – அவிநயம்-மயிலை:3 17/1
ஈர் அசை இயற்சீர் ஒன்றுதல் இயல்பே – அவிநயம்-மயிலை:3 23/1
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே – அவிநயம்-மயிலை:3 35/1
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே – அவிநயம்-மயிலை:3 39/1
ஈர் அசை சீர் நான்கு இயற்சீர் மூ அசையின் – அவிநயம்-கோபாலையர்:1 5/1
ஈர் அசை சீர் பின்முன்னா வைத்து உறழ்ந்து – அவிநயம்-கோபாலையர்:1 7/1
ஈர் அசை இயற்சீர் ஒன்றுதல் இயல்பே – அவிநயம்-கோபாலையர்:1 8/1
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே – அவிநயம்-கோபாலையர்:1 22/1
செந்தொடை விகற்பொடு செயிர் தீர் ஈர் அடி – அவிநயம்-கோபாலையர்:1 23/2
ஈர் அடி முக்கால் இரு வகைப்படுமே – அவிநயம்-கோபாலையர்:1 24/2
ஒன்றும் இரண்டும் மூன்றும் ஈர்_இரண்டும் – அவிநயம்-கோபாலையர்:1 57/1
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே – அவிநயம்-கோபாலையர்:1 58/1
ஒரு தொடை ஈர் அடி வெண்பா சிறுமை – காக்கை-மயிலை:2 14/1
ஈர்_இரண்டு ஆகி இயன்றன யாவையும் – காக்கை-மயிலை:2 32/2
ஒரோ அகையினால் ஆகிய ஈர் அசை – காக்கை-மயிலை:5 8/1
ஈர் ஒன்று இணைதலும் ஏனுழி ஒன்றுசென்று – காக்கை-மயிலை:5 13/2
ஒரு தொடை ஈர் அடி வெண்பா சிறுமை – காக்கை-மயிலை:5 26/1
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும் – காக்கை-மயிலை:5 62/2
ஒரோஒ அசையினால் ஆகிய ஈர் அசை – காக்கை-கோபாலையர்:1 5/1
ஈர் அசை சீர் தளைக்கு எய்தும் என்ப – காக்கை-கோபாலையர்:1 14/2
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும் – காக்கை-கோபாலையர்:1 53/2
ஈர் ஒன்று இணைதலும் ஏனுழி ஒன்றுசென்று – காக்கை-கோபாலையர்:1 63/2
ஒரு தொடை ஈர் அடி வெண்பா சிறுமை – காக்கை-கோபாலையர்:1 65/1
ஓரோ அகையினால் ஆகிய ஈர் அசை – காக்கை-இளங்குமரன்:3 8/1
ஈர் ஒன்றிணைதலும் ஏனுழி ஒன்றுசென்று – காக்கை-இளங்குமரன்:3 15/2
ஒரு தொடை ஈர் அடி வெண்பா சிறுமை – காக்கை-இளங்குமரன்:5 29/1
ய ர ல ழ என்னும் ஈர்_இரண்டு ஒற்றும் – காக்கை-இளங்குமரன்:6 34/1
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும் – காக்கை-இளங்குமரன்:9 79/2
இசையொடு புணர்ந்த ஈர்_ஆறும் உயிரே – சங்கயாப்பு-மயிலை:1 1/2
இவை ஈர்_ஒன்பதும் மெய் என மொழிப – சங்கயாப்பு-மயிலை:1 2/2
ஏழடி இறுதி ஈர் அடி முதலா – சங்கயாப்பு-மயிலை:1 16/1
ஈர் அசை ஆகிய மூ அசை சீர்தான் – சிறுகாக்கை-மயிலை:2 5/1
ஈர் அசை இயற்சீர் ஒன்றிய நிலைமை – சிறுகாக்கை-மயிலை:2 8/1
ஈர் அசை ஆகிய மூ அசை சீர்தாம் – சிறுகாக்கை-கோபாலையர்:1 6/1
ஈர் அசை இயற்சீர் ஒன்றிய நிலைமை – சிறுகாக்கை-கோபாலையர்:1 8/1
ஈர் அடி முதலா ஒன்று தலை சிறந்து – நத்தத்தம்-மயிலை:2 9/3
ஈர் அடி முதலா ஒன்று தலை சிறந்து – நத்தத்தம்-கோபாலையர்:1 16/1
உயிர் ஈர்_ஆறே மெய் மூ_ஆறே – பல்காயம்-மயிலை:3 3/1
ஈர்_இரண்டு ஆகியும் ஒரோவிடத்து இயலும் – பல்காயம்-மயிலை:3 10/1
ஈர் அடி முதலா ஏழ் அடி-காறும் – பல்காயம்-மயிலை:3 19/3
ஈர் அடி முதலா ஏழ் அடி-காறும் – பல்காயம்-கோபாலையர்:1 23/1
சீர் தளை சிதைவுழி ஈர் உயிர் குறுக்கமும் – மயேச்சுரம்-மயிலை:1 1/1
ஈர் அசை இயற்சீர் ஒன்றிய எல்லாம் – மயேச்சுரம்-மயிலை:1 11/1
ஈர் அசை இயற்சீர் ஒன்றியது எல்லாம் – மயேச்சுரம்-கோபாலையர்:1 9/1
ஈர் அடி முக்கால் இசைகொள நடந்து – மயேச்சுரம்-கோபாலையர்:1 23/1
சீர் தளை சிதைவுழி ஈர் உயிர் குறுக்கமும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 54/1
ஈர்_ஆறும் (1)
இசையொடு புணர்ந்த ஈர்_ஆறும் உயிரே – சங்கயாப்பு-மயிலை:1 1/2
2. கட்டுருபன்
கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தொறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது.
அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.
எ.காட்டு
அடியடி-தோறும் (5)
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
/தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-மயிலை:2 21/1,2
அடியடி-தோறும் ஒரூஉ தொடை அடைநவும் – காக்கை-மயிலை:5 40/5
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
/தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-மயிலை:5 44/1,2
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
/தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-கோபாலையர்:1 35/1,2
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
/தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-இளங்குமரன்:7 56/1,2
-தோறும் (6)
பால் வகை-தோறும் படுமொழி வேறே – அவிநயம்-மயிலை:4 6/2
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
/தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-மயிலை:2 21/1,2
அடியடி-தோறும் ஒரூஉ தொடை அடைநவும் – காக்கை-மயிலை:5 40/5
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
/தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-மயிலை:5 44/1,2
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
/தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-கோபாலையர்:1 35/1,2
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
/தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-இளங்குமரன்:7 56/1,2
3. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து
அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் நூலின் சுருக்கப்பெயரும் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பகுதியின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தப் பகுதியில் அச் சொல் இடம்பெறும் நூற்பாவின் எண்ணும், அந் நூற்பாவில் அச் சொல் இடம்பெறும் அடியின் எண்ணும் கொடுக்கப்படும்.
4. வழக்காறு-2
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள் அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.
எ.காட்டு
மாத்திரை (3)
மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரை – சங்கயாப்பு-மயிலை:1 5/2
குறில் ஒரு மாத்திரை நெடில் இரு மாத்திரை – பல்காயம்-மயிலை:3 4/1
குறில் ஒரு மாத்திரை நெடில் இரு மாத்திரை
/அளபெடை மூன்று என்று அறையல் வேண்டும் – பல்காயம்-மயிலை:3 4/1,2
மாத்திரை என்ற சொல் அடி இறுதியில் வந்துள்ளதால், அடுத்த அடியும் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்க.
5. வழக்காறு-3
ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.
எ.காட்டு
மாத்திரை (3)
மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரை – சங்கயாப்பு-மயிலை:1 5/2
குறில் ஒரு மாத்திரை நெடில் இரு மாத்திரை – பல்காயம்-மயிலை:3 4/1
குறில் ஒரு மாத்திரை நெடில் இரு மாத்திரை
/அளபெடை மூன்று என்று அறையல் வேண்டும் – பல்காயம்-மயிலை:3 4/1,2