Select Page

கட்டுருபன்கள்


சூட்டினர் (1)

திருவும் இமையவர் தருவும் அர ஒலி செய வலவர் கொள நல்குகை தீட்டினர் சிறிய எனது புன்மொழியும் வடி தமிழ் தெரியும் அவர் முது சொல் என சூட்டினர்
பகரும் இசை திசை பரவ இருவர்கள் பயிலும் இயல் தெரி வெள் வளை தோட்டினர் பசிய அறுகொடு வெளிய நில விரி பவள வனம் அடர் பல் சடை காட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/2,3

மேல்

சூட்டு (8)

மணி கொண்ட நெடு நேமி வலயம் சுமந்து ஆற்று மாசுண சூட்டு மோட்டு மால் களிறு பிடர் வைத்த வளர் ஒளி விமானத்து வால் உளை மடங்கல் தாங்கும் – மீனாட்சிபிள்ளை:1 2/1
வெம் சூட்டு நெட்டு உடல் விரிக்கும் பட பாயல் மீமிசை துஞ்சும் நீலமேகத்தின் ஆகத்து விடு சுடர் படலை மணி மென் பரல் உறுத்த நொந்து – மீனாட்சிபிள்ளை:1 8/1
செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடை கரு மிடற்று தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலை திருவை புரக்க என்றே – மீனாட்சிபிள்ளை:1 8/4
கிள்ளைக்கு மழலை பசும் குதலை ஒழுகு தீம் கிளவியும் களி மயிற்கு கிளர் இளம் சாயலும் நவ்விக்கு நோக்கும் விரி கிஞ்சுக சூட்டு அரசு அன – மீனாட்சிபிள்ளை:1 9/3
குடமொடு குடவியர் பாணி கை கோத்திடு குரவையும் அலது ஒர் பணா முடி சூட்டு அருள் குதிகொள நடமிடும் ஆடலுக்கு ஏற்ப ஒர் குழல் இசை பழகு அளி பாடிட கேட்டு உடை – மீனாட்சிபிள்ளை:1 11/3
பொன் அம் கமல பசும் தோட்டு பொன் தாது ஆடி கற்றை நிலா பொழியும் தரங்கம் பொறை உயிர்த்த பொன் போல் தொடுதோல் அடி பொலன் சூட்டு
அன்னம் பொலியும் தமிழ் மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள் சூல் கொண்ட அம் கயல் கண் அமுதே தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 23/3,4
சீக்கும் சுடர் தூங்கு அழல் மணியின் செம் தீ மடுத்த சூட்டு அடுப்பில் செழும் தாள் பவள துவர் அடுக்கி தெளிக்கும் நறும் தண் தேறல் உலை – மீனாட்சிபிள்ளை:3 24/2
தூர்க்கும் பொதும்பில் முயல் கலை மேல் துள்ளி உகளும் முசுக்கலையின் துழனிக்கு ஒதுங்கி கழினியின் நெல் சூட்டு படப்பை மேய்ந்து கதிர் – மீனாட்சிபிள்ளை:3 27/2

மேல்

சூட்டுதும் (1)

இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும்
குடமொடு குடவியர் பாணி கை கோத்திடு குரவையும் அலது ஒர் பணா முடி சூட்டு அருள் குதிகொள நடமிடும் ஆடலுக்கு ஏற்ப ஒர் குழல் இசை பழகு அளி பாடிட கேட்டு உடை – மீனாட்சிபிள்ளை:1 11/2,3

மேல்

சூர் (1)

துடிபட்ட கொடி நுண் நுசுப்பிற்கு உடைந்து என சுடு கடைக்கனலி தூண்டும் சுழல் கண் முடங்கு உளை மடங்கலை உகைத்து ஏறு சூர் அரி பிணவு காக்க – மீனாட்சிபிள்ளை:1 10/2

மேல்

சூல் (10)

பமரம் அடுப்ப கடாம் எடுத்து ஊற்றும் ஓர் பகடு நடத்தி புலோமசை சூல் புயல் பருகியிட கற்பகாடவிப்-பால் பொலி பரவையிடை பத்ம மாது என தோற்றிய – மீனாட்சிபிள்ளை:1 5/1
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முக சூல் புயல் வர வரும் இளைய குமாரியை கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 11/4
அன்னம் பொலியும் தமிழ் மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள் சூல் கொண்ட அம் கயல் கண் அமுதே தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 23/4
ஆக்கும் பெரும் தண் பணை மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள் சூல் கொண்ட அம் கயல் கண் அமுதே தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 24/4
ஓடும் படலை முகில் படலம் உவர் நீத்து உவரி மேய்ந்து கரு ஊறும் கமம் சூல் வயிறு உடைய உகைத்து கடவுள் கற்பக பூம் – மீனாட்சிபிள்ளை:3 25/1
பழன தமிழ் மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள் சூல் கொண்ட அம் கயல் கண் அமுதே தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 25/4
ஆறு மடுக்கும் தமிழ் மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள் சூல் கொண்ட அம் கயல் கண் அமுதே தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 26/4
ஆர்க்கும் பழன தமிழ் மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள் சூல் கொண்ட அம் கயல் கண் அமுதே தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 27/4
உழுத பொலன் சீறடிக்கு உடைந்த செந்தாமரையும் பசும் கழுத்துக்கு உடைந்த கமம் சூல் சங்கும் ஒழுகு ஒளிய கமுகும் அழகு தொய்யில் – மீனாட்சிபிள்ளை:5 45/2
முயல் பாய் மதி குழவி தவழ் சூல் அடி பலவின் முள் பொதி குட கனியொடு முடவு தடம் தாழை மு புடை கனி சிந்த மோதி நீர் உண்டு இருண்ட – மீனாட்சிபிள்ளை:6 55/1

மேல்

சூலுடை (1)

துகிலொடு சோர்தரு கொடி நுண் மருங்குல் துவண்டுதுவண்டு ஆட தொந்தி சரிந்திட உந்தி கரந்து ஒளிர் சூலுடை ஆல் அடை மற்று – மீனாட்சிபிள்ளை:2 18/3

மேல்

சூழ்ந்து (1)

கரைக்கும் கடாம் இரு கவுள் குடம் உடைந்து ஊற்று களிறு பெரு வயிறு தூர்ப்ப கவளம் திரட்டி கொடுப்பது எனவும் சூழ்ந்து ஒர் கலை மதி கலச அமுதுக்கு – மீனாட்சிபிள்ளை:8 73/1

மேல்

சூழிய (1)

தார் ஆட்டு சூழிய கொண்டையும் முடித்து தலை பணி திருத்தி முத்தின் தண் ஒளி ததும்பும் குதம்பையொடு காதுக்கு ஒர் தமனிய கொப்பும் இட்டு – மீனாட்சிபிள்ளை:2 13/2

மேல்

சூழியம் (1)

முக மதி ஊடு எழு நகை நிலவு ஆட முடி சூழியம் ஆட முரி புருவ கொடி நுதல் இடு சுட்டி முரிப்பொடு அசைந்து ஆட – மீனாட்சிபிள்ளை:2 18/1

மேல்