கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொரிந்து 1
சொரிய 1
சொரியும் 1
சொரிவன 1
சொரிவார் 1
சொல் 2
சொல்லி 3
சொல்லு 1
சொல்லும் 2
சொல்லுவதே 1
சொல்லுவாம் 2
சொற்கிழத்தி 1
சொன்னவாறு 1
சொரிந்து (1)
நினைந்து வந்து அமுதம் சொரிந்து என மாலை வெண்குடை நிற்பவே – தக்கயாகப்பரணி:8 633/2
சொரிய (1)
வாங்கு கை துருத்தி கொண்டு அ மிடாக்களில் சொரிய வாரீர் – தக்கயாகப்பரணி:9 739/2
சொரியும் (1)
பாலை தாழ மது மாரி சொரியும் பருவ நாள் – தக்கயாகப்பரணி:3 68/1
சொரிவன (1)
கொம்பு விடுவன கொங்கு கமழ்வன கொந்து சொரிவன கொன்றையே – தக்கயாகப்பரணி:3 62/2
சொரிவார் (1)
மலை கொண்டு எழுவார் கடல் கொண்டு எழுவார் மிசை வந்து சிலாவருடம் சொரிவார்
நிலை கொண்டு எழுவார் கொலை கொண்டு எழுதற்கு இவரில் பிறர் யாவர் நிசாசரரே – தக்கயாகப்பரணி:6 205/1,2
சொல் (2)
சொல் பல சொல்லி என்-கொல் உயிர் வீசு பாசம் விடு காலன் யாவர் துணையே – தக்கயாகப்பரணி:8 444/1
வாழி தமிழ் சொல் தெரிந்த நூல் துறை வாழி தமிழ் கொத்து அனைத்து மார்க்கமும் – தக்கயாகப்பரணி:11 814/1
சொல்லி (3)
என்று சொல்லி அகிலகலாவல்லி இறைஞ்சி இருத்தலுமே – தக்கயாகப்பரணி:6 220/2
ஆதி நான்முகனொடு சுராசுரர் வரவு சொல்லி அமைந்ததோ – தக்கயாகப்பரணி:8 261/1
சொல் பல சொல்லி என்-கொல் உயிர் வீசு பாசம் விடு காலன் யாவர் துணையே – தக்கயாகப்பரணி:8 444/1
சொல்லு (1)
ஒரு கதை சொல்லு தவள ஒளி விரி செவ்வி முளரி ஒளி திகழ் அல்லி கமழும் ஒரு மனை வல்லி எனவே – தக்கயாகப்பரணி:6 169/2
சொல்லும் (2)
சொல்லும் பொருள் பகரும் குழல் மடவீர் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 12/2
மின் வெள்ளி பொன் கொல் என சொல்லும் முப்போர் விலங்கல் குழாம் ஓர் விழி சுட்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 550/1
சொல்லுவதே (1)
கெடுவீர் கெடுவீர் இவை சொல்லுவதே கெட்டேன் அடிகள் இவர் கேவலரோ – தக்கயாகப்பரணி:6 199/1
சொல்லுவாம் (2)
தொல்லை நாயகியுடைய பேய் கணங்கள் சொல்லுவாம் – தக்கயாகப்பரணி:5 120/2
சோதி நேமி வலத்தினான் ஒரு பயணம் நின்றது சொல்லுவாம் – தக்கயாகப்பரணி:8 261/2
சொற்கிழத்தி (1)
ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே – தக்கயாகப்பரணி:11 813/1
சொன்னவாறு (1)
சொன்னவாறு அழகிது என்று அருளி வென்றருளும் அ தொல்லை நாயகனை நாயகி நினைந்து தொழுதே – தக்கயாகப்பரணி:8 727/2