கீழ் (6)
பால் வறந்து கீழ் நின்ற கள்ளியும் பசை வறந்துபோய் மீமிசை – தக்கயாகப்பரணி:3 49/1
வாய் எழ புகைந்து கீழ் வயிற்று எரிந்து மண்டு செந்தீ – தக்கயாகப்பரணி:5 121/1
அப்படி அது ஒரு கடவுள் ஆலின் கீழ் அமளியா – தக்கயாகப்பரணி:6 153/1
அடைய பிலநதி கீழ் விழ அண்டத்து அடி இடை போய் – தக்கயாகப்பரணி:8 311/1
போழும் மின்னின் முன் புகுந்து எழுந்து கீழ்
வீழும் முன் பிடித்து இடி விழுங்கியே – தக்கயாகப்பரணி:8 355/1,2
மேல் விசும்பு உடையவும் கீழ் நிலம் கரையவும் மிடை விலங்கல் இறவும் குல விலங்கல் எவையும் – தக்கயாகப்பரணி:8 721/1
கீழும் (3)
கீழும் ஏழு நிலை மேலும் ஏழு நிலை கோயில் வாயில் இரு கிரியுமே – தக்கயாகப்பரணி:6 137/1
விழவிடும் கிரிகள் கீழும் உள்ள பிலம் ஏழும் ஊடுருவ வீழவே – தக்கயாகப்பரணி:8 418/1
மேலும் கீழும் வெளிப்பட வான் விடும் – தக்கயாகப்பரணி:8 569/1
கீழை (1)
மேலை நாகர் கீழை நாகர் போல் மயங்கி வீழவே – தக்கயாகப்பரணி:8 510/2
கீள்வன (1)
வரையை பாய்வன சூல் முதிர் மழையை கீள்வன கால் கொடு மதியை காய்வன பேரொளி வயிர தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 268/2