Select Page

கட்டுருபன்கள்


ஈசர் (2)

எல்லை நாயக ராசராச புரேசர் ஈசர் இதற்கு எனும் – தக்கயாகப்பரணி:8 246/1
ஏறு களிறு என ஏறி எரி விழி ஈசர் பதினொரு தேசரும் – தக்கயாகப்பரணி:8 251/1

மேல்

ஈசர்-தம் (1)

இடி இருந்த கண் பதினொர் ஈசர்-தம்
குடியிருந்த ஊர் எரி கொளுத்தியே – தக்கயாகப்பரணி:8 353/1,2

மேல்

ஈசரே (1)

இரு மருங்கும் மறை தொழ எழுந்தருளி இராசராசபுரி ஈசரே – தக்கயாகப்பரணி:10 778/2

மேல்

ஈசன் (2)

என் கண்ணினில் இவை ஆயிரம் எதிராய் வரும் ஈசன்
தன் கண்ணினில் முக்கண் இனி யார் கண்ணது தாழ்வே – தக்கயாகப்பரணி:8 454/1,2
காடு கொண்ட படை கொண்டு வந்த சுரர் ஈசன் விட்டது ஒரு கற்பக – தக்கயாகப்பரணி:8 655/1

மேல்

ஈட்டத்தின் (1)

எப்பெரும் களிற்று ஈட்டத்தின் மேலினும் எண்_இல் கோடி நாராயணர் ஏறவே – தக்கயாகப்பரணி:8 275/2

மேல்

ஈடுபடும் (1)

ஈடுபடும் இறைமகள் பொறாமை-கொல் இது பொறாமை-கொல் இறைவர்-தம் – தக்கயாகப்பரணி:3 61/1

மேல்

ஈண்ட (1)

எ திசையானை ஈரெண் செவிகளும் சுளகாய் ஈண்ட
குத்திய அரிசி எல்லாம் முரி அற கொழிக்க வாரீர் – தக்கயாகப்பரணி:9 736/1,2

மேல்

ஈண்டு (2)

கொடுத்த தன் அமுதம் தானும் கொண்டனள் இறைவி ஈண்டு
படுத்த பாவாடையோடும் பரிகலம் பேர பற்றீர் – தக்கயாகப்பரணி:9 754/1,2
என்று கொண்டு அலகை எல்லாம் இமையவர் பிணம் கொண்டு ஈண்டு அ – தக்கயாகப்பரணி:9 759/1

மேல்

ஈண்டுவரால் (1)

இமையோர் இமையா பேய் ஆகி இந்த்ர லோகத்து ஈண்டுவரால் – தக்கயாகப்பரணி:8 564/2

மேல்

ஈது (2)

பரமற்கும் ஈது மிடை சடை ஒக்கும் என்பது-கொல் பறியா பெரும் சுழியும் எறியா தரங்கமுமே – தக்கயாகப்பரணி:3 77/2
வேவின் உள்-வயின் வேவது ஈது என – தக்கயாகப்பரணி:8 494/1

மேல்

ஈதே (1)

உடைக்கும் பெரு வெள்ளங்களின் உற்பத்தியது ஈதே – தக்கயாகப்பரணி:8 316/2

மேல்

ஈதோ (1)

நங்கைமீர் ஈதோ நலனே – தக்கயாகப்பரணி:8 298/2

மேல்

ஈம (2)

சூல் வறந்துபோய் மாக மேகமும் சுண்ட ஈம எரி மண்டவே – தக்கயாகப்பரணி:3 49/2
யாமும் இமையவர்தாமும் வெருவர ஈம எரி இரவு எரி-தொறும் – தக்கயாகப்பரணி:3 60/1

மேல்

ஈமம் (1)

யான் ஆள் பதி அமராபதி ஈமம் தனது எனது ஏழ் – தக்கயாகப்பரணி:8 448/1

மேல்

ஈய (1)

என்று மேருதரன் ஐம்படையும் ஈய நெடியோன் எறிய ஊதை விழ மோதி வர வெய்ய மழுவாள் – தக்கயாகப்பரணி:8 725/1

மேல்

ஈர் (8)

இரவை ஈரும் ஈர் வாள்-கொல் என விடாது பாதாள இருளை வேறுபோய் நூறி எழிலி ஏழொடு ஏழ் ஆய – தக்கயாகப்பரணி:4 105/1
மகர ஏறும் ஈர் ஆளி மதுகை ஏறு மாறாடி வதன பாக மேய் வாகுவலையம் மோது காதாளே – தக்கயாகப்பரணி:4 106/2
கட நாகத்து ஈர் உரிவை அரன் விரிப்ப கடல் திவலை – தக்கயாகப்பரணி:6 149/1
ஈர் உடம்பும் மிசைந்து இரண்டு உதிர பரப்பும் இறைத்தனம் – தக்கயாகப்பரணி:7 231/2
வயங்கும் ஈர் உரு வண்ண கலுழன் மேல் வளரும் பாற்கடல் பாழ்பட வந்தனன் – தக்கயாகப்பரணி:8 286/1
ஈர் எயிற்றினும் வயிற்றின் இரு பாலும் இட வேறு இல்லையே என வெறித்து அயன் மறித்து இரியவே – தக்கயாகப்பரணி:8 399/2
அத்த சாலம் ஈர் அருகும் அத்ரசாலம் வீசி வர அர்க்க த்வாத சாதிபர் இரட்டியாறு தேர் விடவே – தக்கயாகப்பரணி:8 467/2
பொங்க களிற்று ஈர் உரி போர்வை கொண்டும் புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தே – தக்கயாகப்பரணி:8 551/1

மேல்

ஈர (1)

ஆழி ஈர பிறை இரண்டாகவே – தக்கயாகப்பரணி:8 688/2

மேல்

ஈரல் (1)

ஈரல் சுருள முளி பேய்கள் எரி தலையொடு ஏறு சருகுடன் எடுத்து எழும் – தக்கயாகப்பரணி:3 58/1

மேல்

ஈரலை (1)

யாம் இனி உண்ணும் கூழிற்கு ஈரலை இட்டுவைத்து – தக்கயாகப்பரணி:9 744/1

மேல்

ஈரறு (1)

இரவிகள் பல்லும் தத்தம் ஈரறு தேரில் அவ் ஏழ் – தக்கயாகப்பரணி:9 732/1

மேல்

ஈராறு (2)

கவன மாவொடு ஈராறு கதிரும் வாரி ஊடாடு கனல் கடாவி ஓர் ஏழு கடலும் வாரும் ஆலாலம் – தக்கயாகப்பரணி:4 103/1
கடைக்காலம் எக்குன்றமும் சுட்டு உருக்கும் கடும் கோள்கள் ஈராறு நாண கலித்தே – தக்கயாகப்பரணி:8 542/2

மேல்

ஈரிரு (1)

ஈரிரு மறையும் தேடும் எண் பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 791/2

மேல்

ஈரும் (2)

ஈரும் மதியம் என முதிய மதி வெருவி ராசராச நாயகர் முடி – தக்கயாகப்பரணி:2 21/1
இரவை ஈரும் ஈர் வாள்-கொல் என விடாது பாதாள இருளை வேறுபோய் நூறி எழிலி ஏழொடு ஏழ் ஆய – தக்கயாகப்பரணி:4 105/1

மேல்

ஈரெண் (1)

எ திசையானை ஈரெண் செவிகளும் சுளகாய் ஈண்ட – தக்கயாகப்பரணி:9 736/1

மேல்

ஈரேழும் (1)

அதர சோதி மீதாடு குமுத வாச வாய் ஆர அமிழ்தமாக நேராக அகில லோகம் ஈரேழும்
உதர சோபிதா நாபி கமல வாயினால் மீள உமிழும் நீலி மேலாய உவண ஊர்தி ஊர்வாளே – தக்கயாகப்பரணி:4 110/1,2

மேல்

ஈரைந்து (1)

உந்தியில் முகுந்தன் முன் நாள் உயிர்த்த தாமரையும் ஈரைந்து
இந்திர தருவும் தந்த இலைச்சுருள் எடுத்து கட்டீர் – தக்கயாகப்பரணி:9 757/1,2

மேல்

ஈரைவரையும் (1)

எதிராய் அவிய கண்டு ஈரைவரையும் கொண்டு இறையோன் எதிர்சென்றான் மறையோர் இறையோனே – தக்கயாகப்பரணி:8 695/2

மேல்

ஈவாளே (1)

அமரர் வாழ்வு வாழ்வாக அவுணர் வாழ்வு பாழாக அருளும் மோகினீ ஆகி அமுத பானம் ஈவாளே – தக்கயாகப்பரணி:4 107/2

மேல்

ஈறு (2)

புயல் வாழ நெடிது ஊழி புவி வாழ முதல் ஈறு புகல் வேதநூல் – தக்கயாகப்பரணி:1 1/1
ஈறு_இல் காலமும் ஞாலமும் கொடு செய்த தேர் மிசை ஏறியே – தக்கயாகப்பரணி:8 626/2

மேல்

ஈறு-தொறும் (1)

அடி பெரும் கடவுள் ஊழி ஈறு-தொறும் ஆடும் மஞ்சனம் அவித்ததால் – தக்கயாகப்பரணி:8 656/2

மேல்

ஈறு_இல் (1)

ஈறு_இல் காலமும் ஞாலமும் கொடு செய்த தேர் மிசை ஏறியே – தக்கயாகப்பரணி:8 626/2

மேல்