அடிகள் | சொற்கள் | பிரி சொற்கள் |
கட்டு ருபன்கள் |
அடைவுச் சொற்கள் |
தனிச் சொற்கள் |
|
---|---|---|---|---|---|---|
மொத்தம் | 1630 | 11902 | 30 | 154 | 12086 | 6104 |
விளக்கம்
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை
சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2
1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள்அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
வாணுதல் என்ற சொல் வாள் நுதல் என்று பிரிக்கப்படும். ஆனால் இது ஒரே சொல்லாக ஒளிபொருந்திய நெற்றியையுடைய ஒரு பெண்ணைக் குறிக்கும். எனவே இது தனிதனிச் சொற்களாகவும், ஒரே சொல்லாகவும் கணக்கிடப்படவேண்டும். எனவே இது
வாள்_நுதல் என்று கொள்ளப்படும் . இதற்குரிய பிரிசொற்கள் வாள், நுதல் ஆகிய இரண்டும். எனவே வாள்_நுதல் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வாள், நுதல், வாள்_நுதல் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.
எ.காட்டு
நுதல் (6)
திலகம் ஆரும் நுதல் அளகபார இருள் அருளும் மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 25/2
அரி செய் நாட்டத்து அரவிந்த வாள்_நுதல் அம்மணிக்கு எதிராக வந்து ஆகத்தில் – தக்கயாகப்பரணி:8 278/1
கண் நுதல் முதல் கடவுளும் கருணைவைத்தே – தக்கயாகப்பரணி:8 289/2
விழித்தது இல்லை நுதல் திருக்கண் மிடற்றில் ஆலமும் மேல் எழ – தக்கயாகப்பரணி:8 326/1
தண்டு தோள் வளை கழுத்து நுதல் சாபம் விழி வாள் சக்ரம் ஆனனம் என தேவர் தானவர்களை – தக்கயாகப்பரணி:8 713/1
கண் நுதல் கடவுள் வென்ற களம் என்று முடிய கட்டுரைப்பது என நின்று இறைவி கண்டருளியே – தக்கயாகப்பரணி:9 728/2
வாள் (13)
பரவை ஒளி வாள் ஏறு பட நடாவி மீள் சோதி படல சூடிகாகோடி பணி மதாணி மார்பாளே – தக்கயாகப்பரணி:4 105/2
தமர நூபுராதார சரணி ஆரணாகாரி தருண வாள் நிலா வீசு சடில மோலி மா காளி – தக்கயாகப்பரணி:4 107/1
வலைய வாள் அரா மீது துயில் விடாத தான் மான மதியம் ஊர் சடா மோலி மகிணர்தாமும் மீதோடி – தக்கயாகப்பரணி:4 111/1
வயங்கு குழை மதியமோ வாள் இரவி மண்டலமே – தக்கயாகப்பரணி:4 116/1
கூறாக்குதற்கு வாள் இலரோ குத்தி நூக்க வேல் இலரோ – தக்கயாகப்பரணி:7 225/1
அரி செய் நாட்டத்து அரவிந்த வாள்_நுதல் அம்மணிக்கு எதிராக வந்து ஆகத்தில் – தக்கயாகப்பரணி:8 278/1
சாலை-வாய் வெதுப்பி வாள் எயிற்றினில் சவட்டியே – தக்கயாகப்பரணி:8 379/2
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர் – தக்கயாகப்பரணி:8 401/1
மலை கொன்று பொன்னிக்கு வழி கண்ட கண்டன் வர ராசராசன் கை வாள் என்ன வந்தே – தக்கயாகப்பரணி:8 549/2
தண்டு தோள் வளை கழுத்து நுதல் சாபம் விழி வாள் சக்ரம் ஆனனம் என தேவர் தானவர்களை – தக்கயாகப்பரணி:8 713/1
சங்கம் எங்கள் குழை வில் எமது சக்ரம் எமதே தண்டம் எங்கள் யமதண்டம் மழுவின் சாதி வாள்
பொங்கு கண்ண இவை ஐம்படையும் எங்களுடனே போதும் எங்ஙனம் இனி பொருவது என்ற பொழுதே – தக்கயாகப்பரணி:8 714/1,2
தண்டு வாள் வளை தனு திகிரி என்னும் ஒரு நின் தவிரும் ஐம்படையும் ஐய திரிய தருதுமே – தக்கயாகப்பரணி:8 724/2
இழந்த வாள் விழி போன பின்னை இறந்து வந்து பிறந்த பேய் – தக்கயாகப்பரணி:9 766/1
வாள்_நுதல் (1)
அரி செய் நாட்டத்து அரவிந்த வாள்_நுதல் அம்மணிக்கு எதிராக வந்து ஆகத்தில் – தக்கயாகப்பரணி:8 278/1
2. கட்டுருபன்
கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.
எ.காட்டு
தொட்டி-தோறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், தொட்டி-தோறும், -தோறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.
தொட்டி-தோறும் (1)
சுத்த ஞான போதர் கழல் சுட்டி யானை-தோறும் இடு தொட்டி-தோறும் ஏறி இடை தொட்ட கார்முகாசனியர் – தக்கயாகப்பரணி:8 468/1
-தோறும் (3)

அழிந்தன கற்பம்-தோறும் தொடுத்தன நகு சிரத்தில் – தக்கயாகப்பரணி:9 731/1
3. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.
4. வழக்காறு-2
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.
5. வழக்காறு-3
ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.
எ.காட்டு
நீ (10)
ஒரு நீ ஒரு மாணி இடும் பொடியால் உய்ந்தேன் உயிர் என்பது உரைத்தனையேல் – தக்கயாகப்பரணி:6 201/1
போம் ஏடு உடையாரையும் நீ கழுவில் புகுவிப்பது தெக்கண பூபதியே – தக்கயாகப்பரணி:6 203/2
மண்ணும் நீ புனலும் நீ அனலும் மாருதமும் நீ மதியும் நீ ரவியும் நீ அவை அனைத்தும் வழிபோம் – தக்கயாகப்பரணி:8 717/1

விண்ணும் நீ என அகண்டமும் விழுங்க அரி-வாய் விட்டவிட்ட அவன் ஐம்படையும் மீள விடவே – தக்கயாகப்பரணி:8 717/2
இன்னவாறு அமரர் யாகபலம் உண்டபடி என்று இறைவியை தொழுதிருந்து அழுத பேய்க்கு இதனை நீ சொன்னவாறு அழகிது என்று அருளி வென்றருளும் அ தொல்லை நாயகனை நாயகி நினைந்து தொழுதே – தக்கயாகப்பரணி:8 727/1,2
அணங்கு நீ வணங்காயாக அன்று இகழ்ந்ததற்கு தானே – தக்கயாகப்பரணி:10 793/1