கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மூ 1
மூக்கும் 1
மூசிய 2
மூது 1
மூதூர் 1
மூர்த்தத்து 1
மூரல் 1
மூரி 5
மூல 1
மூவெழு 2
மூழ்குவித்த 1
மூளா 1
மூன்று 4
மூன்றுக்கும் 1
மூன்றும் 1
மூ (1)
ஈர் அடியால் மூ உலகும் கொண்டானை எப்பிறப்பும் – மூவருலா:3 216/1
மூக்கும் (1)
உய்ய இரு காதும் மூக்கும் உடுபதியை – மூவருலா:2 361/1
மூசிய (2)
மூசிய மௌவல் முருகு உயிர்ப்ப தேசிக – மூவருலா:1 270/2
வீசும் மத திவலையால் மீட்டேன் மூசிய – மூவருலா:1 297/2
மூது (1)
மூது அண்டம் காக்கும் முது தண்டம் மாரவேள் – மூவருலா:3 309/1
மூதூர் (1)
திரு வீதி ஈரிரண்டும் தேவர்கோன் மூதூர்
பெரு வீதி நாண பிறக்கி வரும் நாளில் – மூவருலா:2 58/1,2
மூர்த்தத்து (1)
மூர்த்தத்து அனந்த முரசு ஆர்ப்ப காவிரி – மூவருலா:3 42/1
மூரல் (1)
திரு நகை மூரல் திகழ்ந்தான் அணங்கும் – மூவருலா:2 223/1
மூரி (5)
பங்கு உடைய மூரி பணை அணைந்து தங்கு உடைய – மூவருலா:1 147/2
முந்தும் கலை அல்குல் மூரி தடம் அகன்றும் – மூவருலா:1 177/1
வெருக்கொள்ளும் மூரி தோள் வெற்பும் உருக்கும் – மூவருலா:1 184/2
வேரி கமழ் கோதை வேறு ஒருத்தி மூரி தேர் – மூவருலா:1 228/2
மூரி களிறும் முழங்கியது வேரி தார் – மூவருலா:3 162/2
மூல (1)
காலை கடவ கடன்கழித்து மூல – மூவருலா:3 43/2
மூவெழு (2)
மூவெழு கால் எக்கோக்களையும் முடித்து அவனி – மூவருலா:3 90/1
மூவெழு கால் கொண்ட முடி பாரீர் தாவி – மூவருலா:3 90/2
மூழ்குவித்த (1)
முன்னில் கடல் அகழின் மூழ்குவித்த சென்னி – மூவருலா:3 33/2
மூளா (1)
முடியில் ஒருகாலும் மூளா வடிவில் – மூவருலா:1 123/2
மூன்று (4)
மூன்று முரசு முகில் முழங்க நோன் தலைய – மூவருலா:1 28/2
மூன்று முரசம் முகில் முழங்க வான் துணை – மூவருலா:1 121/2
முரசு ஒரு மூன்று முழங்க திரையின் – மூவருலா:3 49/2
மூன்று முரசும் முழங்கின தோன்றாத – மூவருலா:3 161/2
மூன்றுக்கும் (1)
மூன்றுக்கும் சூடி முடி பாரீர் தோன்ற – மூவருலா:3 94/2
மூன்றும் (1)
பெருமான் அனபாயன் பேர் இயம் மூன்றும்
தரும் ஆரவாரம் தழங்க ஒரு மாதர் – மூவருலா:2 315/1,2