தூசும் (1)
அதிர் ஆக்கி தூசும் அழுக்கு ஆக்கி அங்கம் அங்காடிக்கு இட்ட – நந்திக்-:2 105/3
தூண்டினான் (1)
தூண்டினான் நந்தி இந்த தொண்டைநாடு உய கோவே – நந்திக்-:2 80/4
தூதன் (1)
பெண் என்பவன் வாயை கிழி தூதன் செவி அறடா பெண்ணும் கிடையாது இங்கு ஒரு மண்ணும் கிடையாதே – நந்திக்-:2 113/4
தூதா (2)
வம்பு ஒன்று குழலாளை மணம்பேசி வர விடுத்தார் மன்னர் தூதா
செம்பொன் செய் மணி மாட தெள்ளாற்றில் நந்தி பதம் சேரார் ஆனை – நந்திக்-:2 78/2,3
நண்ணும் பனை ஓலை சுருள் அரசன் திருமுகமோ நண்ணா வரு தூதா உனை விண்ணாட்டிடை விடுவேன் – நந்திக்-:2 113/2
தூவுமால் (1)
வாடை நோக வீசுமால் அம் மாரன் வாளி தூவுமால்
ஆடல் ஓதம் ஆர்க்குமால் என் ஆவி காக்க வல்லனோ – நந்திக்-:2 9/1,2
தூற்றும் (1)
அலர்க்கு எல்லாம் ஐங்கணைவேள் அலர் தூற்றும் காலம் அகன்றுபோனவர் நம்மை அயர்த்துவிட்ட காலம் – நந்திக்-:2 56/4