Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 2
பாகம்-தனில் 1
பாகர் 3
பாங்கி 1
பாங்குதனை 1
பாசியும் 1
பாட்ட 1
பாட்டப்புறவு 1
பாட்டும் 1
பாட 2
பாடகம் 2
பாடகமும் 1
பாடல்கள் 1
பாடாள் 1
பாடி 7
பாடிக்கொண்டால் 1
பாடிக்கொள்வார் 1
பாடிக்கொள்வோமடா 1
பாடிக்கொள்ள 1
பாடிய 3
பாடியே 1
பாண்டியன் 1
பாண்டியனார் 2
பாண்டிராச்சியம் 1
பாதகர் 1
பாதம் 5
பாதமும் 1
பாதர் 1
பாதலத்துளார்க்கும் 1
பாதாளகங்கை 1
பாபம் 1
பாம்பு 4
பாம்புகட்கு 1
பாம்பை 1
பாய்கின்ற 1
பாய்ந்து 1
பாய 1
பாயுதே 1
பாயும் 4
பார் 9
பார்க்க 2
பார்க்கவோ 1
பார்க்கில் 4
பார்க்கின்றானே 1
பார்த்தால் 1
பார்த்திபன் 1
பார்த்திருந்தேன் 1
பார்த்து 2
பார்ப்பவர் 1
பார்ப்பாரடா 1
பார்ப்பானுக்கு 1
பார்ப்பானேன் 1
பார்வை 2
பார்வையால் 2
பார 5
பாரடா 2
பாராய் 2
பாரில் 1
பாரிலே 1
பாருக்குள் 1
பாரைக்குளம் 1
பால் 2
பால்வண்ணச்சங்கு-தன் 1
பாலமும் 1
பாலன் 1
பாலாறு 2
பாலில் 1
பாலுக்கு 1
பாலை 1
பாவகமாக 1
பாவநாசம் 1
பாவம் 4
பாவலர் 1
பாவனை 1
பாவனையை 1
பாவி 3
பாவிக்கு 1
பாவிதானே 1
பாவியே 1
பாவியேன் 1
பாவை 1
பாவையும்-தான் 1
பாவையை 1
பாற்கடலில் 1
பாறை 1
பான்மை 1

பா (2)

இன் பா மதுரை மீனாட்சி குறி எங்களை கேட்டதும் சங்கத்தார் சாட்சி – குற்-குறவஞ்சி:2 197/4
பா மாலை திரிகூட பரமன் அருள் பெறு வசந்த பாவை கூந்தல் – குற்-குறவஞ்சி:2 249/1

மேல்

பாகம்-தனில் (1)

பாகம்-தனில் ஒரு பெண் பச்சைக்கிளி போல் வைத்து – குற்-குறவஞ்சி:2 50/3

மேல்

பாகர் (3)

மை கணாள் குழல்வாய்மொழி பாகர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 158/4
வஞ்சி பாகர் திரிகூடநாதர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 159/4
அம்பிகை பாகர் திரிகூடநாதர் அடியவர் மேல் வந்த துன்பங்கள் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/4

மேல்

பாங்கி (1)

மையல்கொண்டேன் அந்த செய்தியை கேளாய் நீ பாங்கி
செய்ய சடையும் திருக்கொன்றை மாலை அழகும் அவர் – குற்-குறவஞ்சி:2 73/2,3

மேல்

பாங்குதனை (1)

வேங்கையாய் வெயில் மறைத்த பாங்குதனை குறித்தே – குற்-குறவஞ்சி:2 150/2

மேல்

பாசியும் (1)

குல மணி பாசியும் குன்றியும் புனைந்து – குற்-குறவஞ்சி:2 115/20

மேல்

பாட்ட (1)

பாரைக்குளம் தெற்கு மேல் வழுதிக்குளம் பாட்ட பெருங்குளம் செங்குறிஞ்சிக்குளம் – குற்-குறவஞ்சி:2 273/1

மேல்

பாட்டப்புறவு (1)

வாட்டமில்லா பண்ணை பாட்டப்புறவு எல்லாம் – குற்-குறவஞ்சி:2 265/2

மேல்

பாட்டும் (1)

நாலுமறை பழம் பாட்டும் மூவர் சொன்ன திருப்பாட்டும் – குற்-குறவஞ்சி:2 103/1

மேல்

பாட (2)

கோ மலர் பாதம் போற்றி குறவஞ்சி தமிழை பாட
மா மதத்து அருவி பாயும் மலை என வளர்ந்த மேனி – குற்-குறவஞ்சி:1 1/2,3
சிலையிலே தடித்த தடம் புயத்தை வாழ்த்தி செழித்த குறவஞ்சி நாடகத்தை பாட
அலையிலே மலை மிதக்க ஏறினானும் அத்தியிலே பூவை அந்நாள் அழைப்பித்தானும் – குற்-குறவஞ்சி:1 5/2,3

மேல்

பாடகம் (2)

பாடகம் இட்டதடா சிங்கா பாடகம் இட்டதடா – குற்-குறவஞ்சி:2 364/2
பாடகம் இட்டதடா சிங்கா பாடகம் இட்டதடா – குற்-குறவஞ்சி:2 364/2

மேல்

பாடகமும் (1)

பாடகமும் சிறு பாதமும் அங்கு ஒரு பாவனை கொண்டாட நய – குற்-குறவஞ்சி:2 42/2

மேல்

பாடல்கள் (1)

ஒத்த திருச்செவி இருவர் பாடல்கள் உலக மேழையும் உருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/2

மேல்

பாடாள் (1)

ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மான் என்பார் விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் என்பார் – குற்-குறவஞ்சி:2 57/1

மேல்

பாடி (7)

முத்தர் திருமேனி எல்லாம் உருகவே தமிழ் உரைத்த முனியை பாடி
இ தனுவில் ஆத்துமம் விட்டு இறக்கும் நாள் சிலேட்டுமம் வந்து ஏறாவண்ணம் – குற்-குறவஞ்சி:1 6/2,3
நல் நகர் திரிகூடம் பாடி நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம் என – குற்-குறவஞ்சி:2 47/3
தேவர்கள் தம்பிரான் திருவருள் பாடி
இலகு நீறு அணிந்து திலகமும் எழுதி – குற்-குறவஞ்சி:2 115/18,19
அந்தர துந்துபி முழங்கும் நல் நகர் குற்றாலலிங்கர் அருளை பாடி
வந்த குறவஞ்சி-தன்னை வசந்தவல்லி கண்டு மனம் மகிழ்ச்சி கொண்டு – குற்-குறவஞ்சி:2 128/1,2
கிழங்கு கிள்ளி தேன் எடுத்து வளம் பாடி நடப்போம் – குற்-குறவஞ்சி:2 134/1
கூர் வளம் பாடி ஆடும் குறவஞ்சி கொடியே கேளாய் – குற்-குறவஞ்சி:2 193/2
காடு எல்லாம் பட்சியா கூடி வளம் பாடி கண்ணியும் தட்டி என் கண்ணிலும் குட்டியே – குற்-குறவஞ்சி:2 313/4

மேல்

பாடிக்கொண்டால் (1)

பாடிக்கொண்டால் போதும் ஆடிக்கொள்வேனடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 395/2

மேல்

பாடிக்கொள்வார் (1)

பாடிக்கொள்வார் எவர் ஆடிக்கொள்வார் எவர் சிங்கி நீதான் – குற்-குறவஞ்சி:2 395/1

மேல்

பாடிக்கொள்வோமடா (1)

பன்னகம் பூண்டாரை பாடிக்கொள்வோமடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 394/2

மேல்

பாடிக்கொள்ள (1)

பெருக்கம் பாடிக்கொள்ள மருக்கள் சூடிக்கொள்ள – குற்-குறவஞ்சி:2 353/2

மேல்

பாடிய (3)

பாடிய மறை தேடிய நாயகர் பன்னகர் பணி நல் நகர் நாயகர் – குற்-குறவஞ்சி:2 110/1
முக்கணான் விளையாடிய நாடு முதிய நான்மறை பாடிய நாடு – குற்-குறவஞ்சி:2 158/3
சிங்கியை காம பசுங்கிளி பேடையை சீர் வளர் குற்றாலர் பேர் வளம் பாடிய
சங்கீத வாரியை இங்கித நாரியை சல்லாபக்காரியை உல்லாச மோகன – குற்-குறவஞ்சி:2 328/1,2

மேல்

பாடியே (1)

தோடி முரளி வராளி பயிரவி மோடி பெற இசை பாடியே
நீடு மலை மயில் ஆடு மலை மதி சூடு மலை திரிகூடமலை குற – குற்-குறவஞ்சி:2 121/3,4

மேல்

பாண்டியன் (1)

மானவர் குழு மதுரையில் பாண்டியன் மந்திரியார் கையில் முந்தி பணம்போட்டு – குற்-குறவஞ்சி:2 289/1

மேல்

பாண்டியனார் (2)

பன்னக மா முனி போற்ற தமிழ் பாண்டியனார் முதல் சிற்றொடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/2
பாண்டியனார் மகள் வேண்டும் குறிக்காக – குற்-குறவஞ்சி:2 364/1

மேல்

பாண்டிராச்சியம் (1)

நல் பாண்டிராச்சியம் உய்ய சொக்கநாயகர் வந்து மணக்கோலம் செய்ய – குற்-குறவஞ்சி:2 197/3

மேல்

பாதகர் (1)

பாதகர் தோலால் பல தவில் அடித்து பறவைகள் படுக்கும் குறவனும் நானே – குற்-குறவஞ்சி:2 255/2

மேல்

பாதம் (5)

கோ மலர் பாதம் போற்றி குறவஞ்சி தமிழை பாட – குற்-குறவஞ்சி:1 1/2
பூ என்ற பாதம் வருடிவருடி புளக முலையை நெருடிநெருடி – குற்-குறவஞ்சி:2 330/1
பாதம் நோமே நொந்தால் மனம் பேதம் ஆமே – குற்-குறவஞ்சி:2 351/1
பாதம் நோக நிற்பது ஏது பாவம் இனி – குற்-குறவஞ்சி:2 351/2
பாதம் வருடி துடை குத்த வேண்டாமோ சிங்கி மன – குற்-குறவஞ்சி:2 389/1

மேல்

பாதமும் (1)

பாடகமும் சிறு பாதமும் அங்கு ஒரு பாவனை கொண்டாட நய – குற்-குறவஞ்சி:2 42/2

மேல்

பாதர் (1)

தேக்கு எழுந்த மறை நான்கும் சிலம்பு எழுந்த பாதர் விடை சிலம்பில் ஏறி – குற்-குறவஞ்சி:2 4/3

மேல்

பாதலத்துளார்க்கும் (1)

பூதலத்தின் முனிவருக்கும் பாதலத்துளார்க்கும் – குற்-குறவஞ்சி:2 189/2

மேல்

பாதாளகங்கை (1)

பாரிலே பாதாளகங்கை வந்தது என குதித்து பசும் தேன் கங்கை – குற்-குறவஞ்சி:2 81/2

மேல்

பாபம் (1)

கலந்து ஆடில் கழிநீராய் தொலைந்து ஓடும் பாபம் – குற்-குறவஞ்சி:2 173/2

மேல்

பாம்பு (4)

பையை விரிக்குது அம்மா பாம்பு சும்மா – குற்-குறவஞ்சி:2 51/4
பூணாக பாம்பு அணிவார் பொன் நகர் சூழ் நல் நகரின் – குற்-குறவஞ்சி:2 347/2
பத்தெட்டு பாம்பு ஏதடி சிங்கி பத்தெட்டு பாம்பு ஏதடி – குற்-குறவஞ்சி:2 375/2
பத்தெட்டு பாம்பு ஏதடி சிங்கி பத்தெட்டு பாம்பு ஏதடி – குற்-குறவஞ்சி:2 375/2

மேல்

பாம்புகட்கு (1)

பை வளைத்து கிடக்கும் இவன் மெய் வளையும் பாம்புகட்கு
பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 25/1,2

மேல்

பாம்பை (1)

பெட்டக பாம்பை பிடித்து ஆட்டவேண்டாமோ சிங்கி இந்த – குற்-குறவஞ்சி:2 385/1

மேல்

பாய்கின்ற (1)

பாலாறு நெய்யாறு பாய்கின்ற ஓட்டத்தில் பல் ஒடிக்க சிறு கல் அகப்பட்டால் போல – குற்-குறவஞ்சி:2 302/4

மேல்

பாய்ந்து (1)

ஆளி போல் பாய்ந்து சுரும்பு இசை கேட்கும் திரிகூடத்து அமலர் நாட்டில் – குற்-குறவஞ்சி:2 253/1

மேல்

பாய (1)

கூழை வாச பலாவினில் பாய கொழும் பலா கனி வாழையில் சாய – குற்-குறவஞ்சி:2 156/2

மேல்

பாயுதே (1)

திக்கு எலாம் தென்றல் புலி வந்து பாயுதே மன்மதா குயில் – குற்-குறவஞ்சி:2 69/1

மேல்

பாயும் (4)

மா மதத்து அருவி பாயும் மலை என வளர்ந்த மேனி – குற்-குறவஞ்சி:1 1/3
காடு-தொறும் ஓடி வரையாடு குதி பாயும்
காகம் அணுகா மலையில் மேகம் நிரை சாயும் – குற்-குறவஞ்சி:2 139/1,2
தழைத்த மதில் சிகரம் எங்கும் கொழுத்த கயல் பாயும் – குற்-குறவஞ்சி:2 174/2
சாயினும் ஐயே பாயும் பறவைகள் சந்தன காட்டுக்கும் செண்பக காவுக்கும் – குற்-குறவஞ்சி:2 271/1

மேல்

பார் (9)

பார் கொண்ட விடையில் ஏறும் பவனி எச்சரிக்கை கூற – குற்-குறவஞ்சி:2 1/2
வந்தது கண் அல்ல சிந்தூர ரேகை பார் மன்மதா – குற்-குறவஞ்சி:2 71/2
முன் நாளிலே குறிசொல்லி பெற்ற மோகனமாலை பார் மோகனவல்லி – குற்-குறவஞ்சி:2 196/4
ஆக்கம் வருகுது பார் வெள்ளச்சி அம்மே – குற்-குறவஞ்சி:2 203/2
செம்மை இது நல் நிமித்தம் கண்டு பார் அம்மே திரிகூடமலை – குற்-குறவஞ்சி:2 206/1
பார் ஆர் பல முகமும் பட்சி நிரை சாயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 269/4
பார் மேல் வளம்செய் அனந்தபற்பநாபன் பாலன் வயித்தியநாதன் திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 283/4
தேசத்து கொக்கு எல்லாம் கண்ணிக்குள்ளே வந்து சிக்குது பார் கறி தக்குது பார் இனி – குற்-குறவஞ்சி:2 301/4
தேசத்து கொக்கு எல்லாம் கண்ணிக்குள்ளே வந்து சிக்குது பார் கறி தக்குது பார் இனி – குற்-குறவஞ்சி:2 301/4

மேல்

பார்க்க (2)

பந்தடிக்கும் பாவனையை பார்க்க அயன் ஆயிரம் கண் படைத்திலானே – குற்-குறவஞ்சி:2 44/4
பார்க்க பொறுக்குமோ பாவி என் ஆவிதான் சிங்கி முன்னே – குற்-குறவஞ்சி:2 396/1

மேல்

பார்க்கவோ (1)

ஒக்க படுக்க ஒதுக்கிடம் பார்க்கவோ சிங்கி பரும் – குற்-குறவஞ்சி:2 391/1

மேல்

பார்க்கில் (4)

பெருக்கம் பார்க்கில் எங்கள் திருக்குற்றாலர் போலே – குற்-குறவஞ்சி:2 52/3
குலம் பார்க்கில் தேவரினும் பெரிய குலம் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 181/2
கைக்குறி பார்க்கில் இந்த கைப்பிடிப்பவர்தாம் எட்டு – குற்-குறவஞ்சி:2 222/1
பார்க்கில் அதிசயம் தோணுது சொல்ல – குற்-குறவஞ்சி:2 357/1

மேல்

பார்க்கின்றானே (1)

மாவின் மேல் ஏறி சிங்கன் வரும் பட்சி பார்க்கின்றானே – குற்-குறவஞ்சி:2 263/4

மேல்

பார்த்தால் (1)

குன்றத்தை பார்த்தால் கொடி இடை தாங்குமோ சிங்கி தன் – குற்-குறவஞ்சி:2 383/1

மேல்

பார்த்திபன் (1)

பணி ஆபரணம் பூண்ட பார்த்திபன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 227/2

மேல்

பார்த்திருந்தேன் (1)

பெட்டைக்குளத்தில் அன்ன பேடை நடை பார்த்திருந்தேன்
கட்டுற்ற நல் நகர்க்கு என் கண்ணி எலாம் கொத்தி வெற்றி – குற்-குறவஞ்சி:2 310/2,3

மேல்

பார்த்து (2)

இன் நகை மடவார்க்கு இடதுகை பார்த்து
காலம் முன் போம் குறி கைப்பலனாம் குறி – குற்-குறவஞ்சி:2 115/36,37
வாழி கொண்ட மோக வசந்தவல்லி கை பார்த்து
வீழி கொண்ட செம் கனி வாய் மிக்க குறவஞ்சி பழம் – குற்-குறவஞ்சி:2 217/2,3

மேல்

பார்ப்பவர் (1)

தம்பம் என்றே நம்பினோரை சதிபண்ணி தாம் வாழ பார்ப்பவர் செல்வங்கள் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/1

மேல்

பார்ப்பாரடா (1)

நகையும் முகமும் அவள் நாணைய கைவீச்சும் பகைவரும் திரும்பி பார்ப்பாரடா
தொகையாய் சொன்னேன் இனி சொல்லக்கூடாது ஒரு வகையாய் வருகுது என்னை மயக்குது ஐயே – குற்-குறவஞ்சி:2 336/1,2

மேல்

பார்ப்பானுக்கு (1)

பன்னரும் அன்னத்தை நல் நகர் ஈசர் பரிகலம் ஈந்திடும் பார்ப்பானுக்கு ஈந்தனர் – குற்-குறவஞ்சி:2 290/3

மேல்

பார்ப்பானேன் (1)

பொன் இட்ட மேல் எல்லாம் மின் வெட்டி பார்ப்பானேன் சிங்கி இந்த – குற்-குறவஞ்சி:2 381/1

மேல்

பார்வை (2)

மாத்திரைக்கோலது துன்ன சாத்திர கண் பார்வை பன்ன – குற்-குறவஞ்சி:2 127/1
பெண்கள் மயக்கும் அவள் விரக பார்வை சிங்கி பிடித்தால் மத பயலும் பெலப்பானோ – குற்-குறவஞ்சி:2 335/2

மேல்

பார்வையால் (2)

கண்ணுக்கு கண் இணை சொல்ல திரிகூட கண்ணுதலை பார்வையால் வெல்ல – குற்-குறவஞ்சி:2 30/1
அருள் கண் பார்வையால் என் அங்கம் தங்கம் ஆக – குற்-குறவஞ்சி:2 52/1

மேல்

பார (5)

பொன்னின் குடம் போல் புடைத்து எழுந்த பார முலை – குற்-குறவஞ்சி:2 122/3
பார மா மதி வெண்குடை மிஞ்ச பறக்கும் கிள்ளை பரிகள் முன் கொஞ்ச – குற்-குறவஞ்சி:2 154/3
பார தனத்தை திறந்துவிட்டாள் கண்டு பாவியேன் ஆவி மறந்துவிட்டேன் உடன் – குற்-குறவஞ்சி:2 329/3
பார முத்தாரமடா சிங்கா பார முத்தாரமடா – குற்-குறவஞ்சி:2 374/2
பார முத்தாரமடா சிங்கா பார முத்தாரமடா – குற்-குறவஞ்சி:2 374/2

மேல்

பாரடா (2)

நேரிழையாரையும் ஊரையும் பாரடா மன்மதா கண்ணில் – குற்-குறவஞ்சி:2 70/1
கொக்கு படுக்க குறியிடம் பாரடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 391/2

மேல்

பாராய் (2)

மிஞ்சு குறிசொல்லி பேராய் திசை வென்று நான் பெற்ற விருதுகள் பாராய் – குற்-குறவஞ்சி:2 195/4
சங்கை பாராய் காம சிங்கியாரே – குற்-குறவஞ்சி:2 350/2

மேல்

பாரில் (1)

ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மான் என்பார் விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் என்பார் – குற்-குறவஞ்சி:2 57/1

மேல்

பாரிலே (1)

பாரிலே பாதாளகங்கை வந்தது என குதித்து பசும் தேன் கங்கை – குற்-குறவஞ்சி:2 81/2

மேல்

பாருக்குள் (1)

பாருக்குள் ஏற்றமாம் காயலார் தந்த – குற்-குறவஞ்சி:2 374/1

மேல்

பாரைக்குளம் (1)

பாரைக்குளம் தெற்கு மேல் வழுதிக்குளம் பாட்ட பெருங்குளம் செங்குறிஞ்சிக்குளம் – குற்-குறவஞ்சி:2 273/1

மேல்

பால் (2)

பால் ஏறும் விடையில் திரிகூடப்பெருமானார் பவனி காண – குற்-குறவஞ்சி:2 15/1
மேன்மேலும் பால் அமுதம் அளையும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 219/2

மேல்

பால்வண்ணச்சங்கு-தன் (1)

வீறு சேர் பால்வண்ணச்சங்கு-தன் கட்டளை மிக்கான ஓமலூர் கிருஷ்ணன் வணிகேசன் – குற்-குறவஞ்சி:2 284/3

மேல்

பாலமும் (1)

பாலமும் கட்டி படித்தரம் சேர் கட்டி பக்த சனங்களை காக்க துசம் கட்டி – குற்-குறவஞ்சி:2 278/2

மேல்

பாலன் (1)

பார் மேல் வளம்செய் அனந்தபற்பநாபன் பாலன் வயித்தியநாதன் திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 283/4

மேல்

பாலாறு (2)

பாலாறு நெய்யாறாய் அபிஷேகம் நைவேத்யம் – குற்-குறவஞ்சி:2 102/1
பாலாறு நெய்யாறு பாய்கின்ற ஓட்டத்தில் பல் ஒடிக்க சிறு கல் அகப்பட்டால் போல – குற்-குறவஞ்சி:2 302/4

மேல்

பாலில் (1)

அன்பாய் வடகுண பாலில் கொல்லத்து ஆண்டு ஒரு நானூற்றிருபத்துநாலில் – குற்-குறவஞ்சி:2 197/1

மேல்

பாலுக்கு (1)

வீமப்பாகம் பெற்ற காம பாலுக்கு ஒத்த சீனியாள் – குற்-குறவஞ்சி:2 38/2

மேல்

பாலை (1)

சூழ மேதி இறங்கும் துறையில் சொரியும் பாலை பருகிய வாளை – குற்-குறவஞ்சி:2 156/1

மேல்

பாவகமாக (1)

பாவகமாக நூவன் பறவை போல் பறவை கூவ – குற்-குறவஞ்சி:2 263/3

மேல்

பாவநாசம் (1)

செல்வர் உறை சிவசயிலம் பாவநாசம் திரிகூட சிங்கி-தனை தேடுவானே – குற்-குறவஞ்சி:2 321/4

மேல்

பாவம் (4)

நீங்க காண்பது சேர்ந்தவர் பாவம் நெருங்க காண்பது கன்னலில் செந்நெல் – குற்-குறவஞ்சி:2 161/1
சேயிழை-தன் பொருட்டாலே பஞ்சாட்சரம் செபித்த மன்னவன் பாவம் போனால் போல – குற்-குறவஞ்சி:2 314/4
பம்பும் வடபால் அருவியில் தோய்ந்தவர் பாவம் கழுநீராய் போவது போலவும் – குற்-குறவஞ்சி:2 315/2
பாதம் நோக நிற்பது ஏது பாவம் இனி – குற்-குறவஞ்சி:2 351/2

மேல்

பாவலர் (1)

பாவலர் மனு காவலர் நாயகர் பதஞ்சலி பணி தாளர் – குற்-குறவஞ்சி:2 110/2

மேல்

பாவனை (1)

பாடகமும் சிறு பாதமும் அங்கு ஒரு பாவனை கொண்டாட நய – குற்-குறவஞ்சி:2 42/2

மேல்

பாவனையை (1)

பந்தடிக்கும் பாவனையை பார்க்க அயன் ஆயிரம் கண் படைத்திலானே – குற்-குறவஞ்சி:2 44/4

மேல்

பாவி (3)

விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண் நிலா கொடும் பாவி வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 62/4
செக்கரும் பாவி நிலாவுமே போதாதோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 68/2
பார்க்க பொறுக்குமோ பாவி என் ஆவிதான் சிங்கி முன்னே – குற்-குறவஞ்சி:2 396/1

மேல்

பாவிக்கு (1)

நித்திரா பாவிக்கு என்ன போட்டி நடுவே இந்த – குற்-குறவஞ்சி:2 90/2

மேல்

பாவிதானே (1)

பாவிதானே மதன் கணை ஏவினானே – குற்-குறவஞ்சி:2 352/1

மேல்

பாவியே (1)

கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/4

மேல்

பாவியேன் (1)

பார தனத்தை திறந்துவிட்டாள் கண்டு பாவியேன் ஆவி மறந்துவிட்டேன் உடன் – குற்-குறவஞ்சி:2 329/3

மேல்

பாவை (1)

பா மாலை திரிகூட பரமன் அருள் பெறு வசந்த பாவை கூந்தல் – குற்-குறவஞ்சி:2 249/1

மேல்

பாவையும்-தான் (1)

பனக மணி இரு காதும் கண்டால் பாவையும்-தான் உருகாதோ – குற்-குறவஞ்சி:2 54/4

மேல்

பாவையை (1)

காராடும்கண்டர் தென் ஆரியநாட்டு உறை காரிய பூவையை ஆரிய பாவையை – குற்-குறவஞ்சி:2 331/4

மேல்

பாற்கடலில் (1)

வெற்றி பெறும் பாற்கடலில் புற்றரவில் உறங்கும் – குற்-குறவஞ்சி:2 184/1

மேல்

பாறை (1)

ஆசார ஈன துலுக்கன் குதிரை அடி ஒட்டு பாறை அடி ஒட்டினால் போலும் – குற்-குறவஞ்சி:2 301/3

மேல்

பான்மை (1)

பருத்தி மேல் கையுமான பான்மை போல் வேட்டைபோனாய் – குற்-குறவஞ்சி:2 316/2

மேல்