Select Page

கட்டுருபன்கள்


ஈ (1)

நீ என்னாய் நின்றாய் என் நெஞ்சு அளியை ஈ என்றார்க்கு – புபொவெபாமா:11 29/2

மேல்

ஈக (1)

அன்னோர் போல அவை எமக்கு ஈக என – புபொவெபாமா:9 12/2

மேல்

ஈகல்லா (1)

இல் செல்வம் அன்றி இரந்தவர்க்கு ஈகல்லா
புன் செல்வம் பூவா புகழ் – புபொவெபாமா:13 11/3,4

மேல்

ஈகை (1)

கரவாமல் ஈகை கடன் – புபொவெபாமா:9 13/4

மேல்

ஈகையான் (1)

ஓதி அழல் வழிபட்டு ஓம்பாத ஈகையான்
ஆதி வணிகர்க்கு அரசு – புபொவெபாமா:8 21/3,4

மேல்

ஈகையும் (1)

ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்று இவை ஆய்ந்து உரைத்தன்று – புபொவெபாமா:9 2/1,2

மேல்

ஈங்கு (3)

உய்ந்து ஒழிவார் ஈங்கு இல்லை ஊழிக்-கண் தீயே போல் – புபொவெபாமா:1 17/1
விலங்குநர் ஈங்கு இல்லை வெல் வேலோய் சென்றீ – புபொவெபாமா:16 39/1
எண்ணியது என்-கொலோ ஈங்கு – புபொவெபாமா:17 23/4

மேல்

ஈட்டிய (1)

ஈட்டிய சொல்லான் இவன் என்று காட்டிய – புபொவெபாமா:9 5/2

மேல்

ஈடு (1)

ஈடு எலாம் தாங்கி இகல் அவிந்தார் நீயும் நின் – புபொவெபாமா:10 9/3

மேல்

ஈண்டி (1)

ஈண்டி எருவை இறகு உளரும் வெம் களத்து – புபொவெபாமா:9 39/1

மேல்

ஈண்டிய (2)

ஈண்டிய நிரை ஒழிவு_இன்றி – புபொவெபாமா:1 34/1
வேண்டியும் கங்குல் விடியலும் ஈண்டிய
மங்கலம் ஆய நுகர்ந்தான் மற மன்னர் – புபொவெபாமா:9 23/2,3

மேல்

ஈண்டு (4)

ஈண்டு இருள் மாலை சொல் ஓர்த்தன்று – புபொவெபாமா:1 10/2
ஈண்டு அரில் சூழ்ந்த இளையும் எரி மலர் – புபொவெபாமா:5 8/3
ஈண்டு இயம் விம்ம இன வளையார் பூண் தயங்க – புபொவெபாமா:9 82/2
பூண்டான் பொழில் காவல் என்று உரையாம் ஈண்டு
மருளன்-மின் கோள் கருதும் மால் வரை யாளி – புபொவெபாமா:10 13/2,3

மேல்

ஈது (1)

அவர் வரும் காலம் ஈது அன்று – புபொவெபாமா:17 15/4

மேல்

ஈந்த (1)

இரவாமல் ஈந்த இறைவர் போல் நீயும் – புபொவெபாமா:9 13/3

மேல்

ஈந்தன்று (4)

அவரவர் வினை-வயின் அறிந்து ஈந்தன்று – புபொவெபாமா:1 30/2
தம்மினும் மிக சிறப்பு ஈந்தன்று – புபொவெபாமா:1 36/2
சிலை உடை வேந்தன் சிறப்பு ஈந்தன்று – புபொவெபாமா:4 24/2
மற மைந்தற்கு மட்டு ஈந்தன்று – புபொவெபாமா:4 42/2

மேல்

ஈந்து (1)

ஈந்து பரிசில் இன்புற விடுத்தன்று – புபொவெபாமா:9 52/2

மேல்

ஈமத்து (1)

அகை அழல் ஈமத்து அகத்து – புபொவெபாமா:11 17/4

மேல்

ஈய (2)

கழி மகிழ் வென்றி கழல் வெய்யோய் ஈய
பிழி மகிழ் உண்பார் பிறர் – புபொவெபாமா:2 23/3,4
ஒள் வாள் அமருள் உயிர் ஓம்பான் தான் ஈய
கொள்வார் நடுவண் கொடை ஓம்பான் வெள் வாள் – புபொவெபாமா:9 15/1,2

மேல்

ஈயவும் (1)

வெள் வாள் வேந்தன் வேண்டியது ஈயவும்
கொள்ளா மறவன் கொதிப்பு உரைத்தன்று – புபொவெபாமா:8 54/1,2

மேல்

ஈயாது (1)

மாயா நிதியம் மனை செறீஇ ஈயாது
இறுக பொதியன்-மின் இன்றொடு நாளை – புபொவெபாமா:12 5/2,3

மேல்

ஈயும் (5)

வந்தார்க்கு உவந்து ஈயும் வாழ்வு – புபொவெபாமா:4 25/4
அடும் தடக்கை நோன் தாள் அமர் வெய்யோன் ஈயும்
நெடும் தடக்கை யானை நிரை – புபொவெபாமா:9 60/3,4
இருள் ஈயும் ஞாலத்து இடர் எல்லாம் நீங்க – புபொவெபாமா:9 84/3
அருள் ஈயும் ஆழியவன் – புபொவெபாமா:9 84/4
பொழில் எல்லாம் ஈயும் புலம்பு – புபொவெபாமா:17 11/4

மேல்

ஈர் (2)

ஈர் உயிர் என்பர் இடை தெரியார் போரில் – புபொவெபாமா:11 19/2
ஈர்_எண் கிளவியும் பெருந்திணை பால – புபொவெபாமா:17 1/14

மேல்

ஈர்_எண் (1)

ஈர்_எண் கிளவியும் பெருந்திணை பால – புபொவெபாமா:17 1/14

மேல்

ஈர்ம் (1)

ஈர்ம் தார் இமையோரும் எய்தி அழல் வாயால் – புபொவெபாமா:9 31/3

மேல்

ஈரா (1)

கரும் தலையும் வெள் நிணமும் செம் தடியும் ஈரா
பருந்தோடு எருவை படர அரும் திறல் – புபொவெபாமா:4 29/1,2

மேல்

ஈன்ற (1)

பவர் முல்லை தோன்றி பரியாமல் ஈன்ற
அவர் வரும் காலம் ஈது அன்று – புபொவெபாமா:17 15/3,4

மேல்