கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நெகிழ்த்து 1
நெகிழ்ந்த 1
நெகிழ்ந்தன 1
நெகிழ்ந்தனர் 1
நெகிழ்ந்து 5
நெகிழ 4
நெஞ்ச 1
நெஞ்சகத்து 1
நெஞ்சகம் 1
நெஞ்சத்து 3
நெஞ்சம் 1
நெஞ்சம்-அது 1
நெஞ்சமும் 1
நெஞ்சன் 1
நெஞ்சில் 15
நெஞ்சின் 7
நெஞ்சு 4
நெஞ்சே 2
நெஞ்சை 1
நெட்டு 1
நெடிதின் 1
நெடிது 7
நெடிதுடன் 1
நெடிய 6
நெடியது 2
நெடியர் 1
நெடியவன் 4
நெடியளோ 1
நெடியனேனும் 1
நெடியான் 3
நெடியானே 1
நெடு 58
நெடுஞ்சேந்தன் 1
நெடுந்தகை 1
நெடுந்தகை-தன் 1
நெடுந்தகையோர்க்கு 1
நெடும் 74
நெடும்_கண்ணவள் 1
நெடும்_கண்ணார் 1
நெடும்_கண்ணினாள் 1
நெடும்_கணவள் 1
நெடும்_கணாய் 1
நெடும்_கணார் 2
நெடும்_கணார்-தம் 3
நெடும்_கணாள் 2
நெடும்_கணாளும் 3
நெடும்_கணீர் 1
நெடுமால் 4
நெதி 5
நெதிகள் 1
நெதியம் 1
நெதியும் 1
நெய் 30
நெய்த்-தலை 1
நெய்தல் 1
நெய்தலின் 1
நெய்தலும் 1
நெய்யால் 1
நெய்யின் 1
நெய்யினால் 1
நெய்யுற்ற 1
நெய்யொடு 1
நெரி 2
நெரித்து 1
நெரிதர 2
நெரிந்த 2
நெரிந்தன 1
நெரிந்தார் 1
நெரிந்து 4
நெரிய 2
நெரிவதே 1
நெரிவுற்ற 1
நெரிவுற்று 1
நெரிவுற 1
நெரிவொடு 1
நெருக்குப்பட்டு 1
நெருங்க 2
நெருங்கலும் 1
நெருங்கு 2
நெருங்குபு 1
நெருங்கும் 1
நெருநல் 2
நெருப்பிடை 1
நெருப்பின் 2
நெருப்பு 3
நெருப்பொடு 2
நெரேலென 1
நெல் 3
நெல்லியின் 2
நெல்லின் 1
நெல்லும் 1
நெல்லுமே 1
நெலிடை 1
நெளி 1
நெளித்து 1
நெளிவுற 1
நெற்றி 15
நெற்றிய 1
நெற்றியும் 1
நெறி 63
நெறி-கண் 4
நெறி-தலை 1
நெறி-தாம் 1
நெறி-வயின் 1
நெறி_இன்மை 1
நெறிக்-கண் 1
நெறிக்கு 1
நெறிக்கும் 2
நெறிகள்-தம்மே 1
நெறிகள்-தாம் 1
நெறித்த 1
நெறிப்பட்டு 1
நெறிப்பர் 1
நெறிபடு 1
நெறிமைப்படுதலும் 1
நெறிமைய 1
நெறிமையினால் 2
நெறியது 1
நெறியாக 2
நெறியில் 6
நெறியின் 3
நெறியினாலே 1
நெறியினில் 1
நெறியும் 1
நெறியே 1
நெறியை 2
நெகிழ்த்து (1)
புரைசை தான் நெகிழ்த்து மற்றோர் புது வடம் புரள வீக்கி – சூளாமணி:8 927/2
மேல்
நெகிழ்ந்த (1)
நெகிழ்ந்த காதலால் நேமி செல்வனும் – உதயணகுமார:5 299/2
மேல்
நெகிழ்ந்தன (1)
எடுத்த மாருதம் எறிதலின் நெகிழ்ந்தன சிகழிகை இணரோடும் – சூளாமணி:8 886/1
மேல்
நெகிழ்ந்தனர் (1)
நினைவன நினைந்து நெஞ்சின் நெகிழ்ந்தனர் புலம்பி வாட – யசோதர:2 157/2
மேல்
நெகிழ்ந்து (5)
விதுவிது விதிர்த்து அகம் நெகிழ்ந்து மிகை சோரா – யசோதர:5 300/3
காவியும் குவளையும் நெகிழ்ந்து கள் உமிழ் – சூளாமணி:1 11/1
கலைத்-தலை தொடுத்த கோவை கண் நெகிழ்ந்து சிந்தலான் – சூளாமணி:6 484/3
தோ மறிந்த சூழ் துகில் நெகிழ்ந்து உடுத்து வீழ்ந்து அசைஇ – சூளாமணி:6 487/2
புறவின் மா மரை முலை பொழிந்த பால் நெகிழ்ந்து எழ – சூளாமணி:7 798/2
மேல்
நெகிழ (4)
முந்தை வினை நெகிழ முனி மொழியும் வதம் மருவி – யசோதர:5 299/3
தேம் துணர் கொடுப்ப மூழ்கி தேறல் வாய் நெகிழ மாந்தி – சூளாமணி:4 162/2
மிடைந்த தோள் தழூஉ பிணை நெகிழ மெல்லவே – சூளாமணி:8 1059/3
மிடைந்த தோள் நெகிழ விம்மி மெல்_இயல் வெருவலோடும் – சூளாமணி:10 1707/2
மேல்
நெஞ்ச (1)
நிறை கடல் நிரம்பிய நெஞ்ச தீக்கலுள் – சூளாமணி:7 681/2
மேல்
நெஞ்சகத்து (1)
நேரின் அது முடியாது எனின் நெஞ்சகத்து
ஈரம் உடைமை அருளின் இயல்பே – சூளாமணி:11 2009/3,4
மேல்
நெஞ்சகம் (1)
நின்று தன் நெஞ்சகம் நிறைய வீழ்வன – சூளாமணி:7 689/3
மேல்
நெஞ்சத்து (3)
என மனத்து எண்ணி நெஞ்சத்து இரங்கியும் மன்னன் ஏவல்-தனை – யசோதர:1 30/1
இன் இசை அவனை நெஞ்சத்து இருத்தினள் இருந்த எல்லை – யசோதர:2 97/2
ஒர் உயிர் போல நெஞ்சத்து உருகி நைந்து உய்ய நிற்றல் – யசோதர:4 247/2
மேல்
நெஞ்சம் (1)
ஒருவரும் ஏற்பார் இன்றி ஓர்ந்து அவள் நெஞ்சம் கூர்ந்து – உதயணகுமார:4 228/1
மேல்
நெஞ்சம்-அது (1)
நின்று நெஞ்சம்-அது உள் சுட நின்றது – யசோதர:3 222/2
மேல்
நெஞ்சமும் (1)
நின்று செய்பயனும் நல்லார் நெஞ்சமும் பெறுதல் அன்றோ – யசோதர:2 107/4
மேல்
நெஞ்சன் (1)
கேட்டலும் அஞ்சும் நெஞ்சன் கேடு எனக்கு எய்திற்று என்றே – யசோதர:2 112/1
மேல்
நெஞ்சில் (15)
மிஞ்சி நெஞ்சில் அன்புடன் மீண்டுவர எண்ணினன் – உதயணகுமார:2 126/1
அங்கபூ ஆதி நூலுள் அரிப்பு அற தெளிந்த நெஞ்சில்
தங்கிய கருணை ஆர்ந்த தவ முனி அவர்கள் சொன்ன – நாககுமார:1 2/2,3
சிரிதரன் கேட்டு நெஞ்சில் செய்பொருள் என் என்று ஏகி – நாககுமார:2 61/1
நெஞ்சில் அன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்த பின் – நாககுமார:4 139/2
அன்பினால் ஐயன் தங்கை அஞ்சுதல் அஞ்சி நெஞ்சில்
தன் கையால் முன்கை பற்றி தான் அவள்கொண்டு செல்வான் – யசோதர:1 31/3,4
நங்கை அஞ்சல் நெஞ்சில் நமக்கு இவண் அழிவு ஒன்று இல்லை – யசோதர:1 32/1
புஞ்சிய பொருளும் நாடும் புணர் திறம் புணர்ந்து நெஞ்சில்
துஞ்சுதல்_இலாத கண்ணன் துணிவன துணிந்து நின்றான் – யசோதர:2 87/3,4
இனையன பலவும் சிந்தித்து இழிப்பொடு பழித்து நெஞ்சில்
புனை வளையவர்கள் போகம் புறக்கணித்திட்டு மீண்டே – யசோதர:2 125/1,2
பிணி என எனது நெஞ்சில் பெரு நவை உறுக்கும் ஐய – யசோதர:2 133/3
ஈங்கு அருள்செய்தது என்-கொல் இது புதிது என்று நெஞ்சில்
தாங்கலன் உருகி தாய் முன் தகுவன செப்புகின்றான் – யசோதர:2 138/3,4
நெடிதுடன் இருந்து நெஞ்சில் நினைவதோர் நினைவு-தன்னால் – யசோதர:4 231/3
பிறவிகள் அனைத்தும் நெஞ்சில் பெயர்ந்தன நினைத்து முன்னர் – யசோதர:4 255/1
கன்றிய வினைகள் தீர கருணையின் உருகி நெஞ்சில்
சென்றனன் அறிவு காட்சி திருவறத்து ஒருவன் ஆனான் – யசோதர:5 310/2,3
பார் இயல் பொறையை நெஞ்சில் பரிந்தனன் மன்னன் ஆனான் – யசோதர:5 312/4
ஆதரம்பண்ணல் போகத்து அஞ்சினர் நெஞ்சில் நஞ்சாய் – யசோதர:5 315/3
மேல்
நெஞ்சின் (7)
பண்ணினுக்கு ஒழுகும் நெஞ்சின் பாவை இ பண் கொள் செவ்வாய் – யசோதர:2 95/1
நீ தவிர்ந்திட்டு நெஞ்சின் நிறையினை சிறைசெய்க என்றாள் – யசோதர:2 106/3
மெய் பலி கொண்டு நெஞ்சின் விரும்பினள் உவக்கும் என்றாள் – யசோதர:2 136/4
கண்களுக்கு இசைவு இலாத கடையனை கருதி நெஞ்சின்
மண்களுக்கு இறைவன் ஆய வரனுக்கு மரணம் செய்தாள் – யசோதர:2 154/2,3
நினைவன நினைந்து நெஞ்சின் நெகிழ்ந்தனர் புலம்பி வாட – யசோதர:2 157/2
ஆர் அருள் புரிந்த நெஞ்சின் அ முனி அவனை நோக்கி – யசோதர:4 232/1
நேயம் மிகு நெஞ்சின் இடையாளும் மடவாளாய் – சூளாமணி:10 1796/2
மேல்
நெஞ்சு (4)
நெஞ்சு நொந்து அழும் நெடும் கண் நீர் உகும் – உதயணகுமார:6 327/1
நீல வாள் நெடும்_கணார் நிரந்து நெஞ்சு தாழ் ஒரீஇ – சூளாமணி:6 486/3
நிலவிய மது உண்டார் போல் நெஞ்சு உண மயங்கியிட்டார் – சூளாமணி:8 1113/4
வீடு தலைபெற வெந்து நெஞ்சு ஆண்டிட – நீலகேசி:7 775/1
மேல்
நெஞ்சே (2)
மறைந்து உயிர் வாழாநின்றார் இல்லையால் வாழி நெஞ்சே
சிறந்தது தவத்தின் மிக்கது இன்மையே சிந்தி கண்டாய் – சூளாமணி:11 1847/3,4
நகை பெரிது உடைத்து நாணாம் இதனை நாம் மகிழ்தல் நெஞ்சே – சூளாமணி:11 1849/4
மேல்
நெஞ்சை (1)
ஆ தகாது அழிந்த புள் வாய் அரி குரல் அரியும் நெஞ்சை
ஆ தகாது அமிர்தம் முன்னா மதி-அவள் களவு கொல்லும் – யசோதர:2 148/2,3
மேல்
நெட்டு (1)
புலப்-பாலும் நெட்டு உயிரின் போக்கு இல்லாப்-பாலும் – நீலகேசி:6 687/2
மேல்
நெடிதின் (1)
நெடிதின் அது அறும் நீர்மையும் ஓரான் – சூளாமணி:11 1918/3
மேல்
நெடிது (7)
மன்னனும் முடி அசைத்து அமைச்சனை நெடிது நோக்கி – உதயணகுமார:4 213/3
நிலத்து இறை மன்னன் வாழ்க நெடிது என உரை-மின் என்றார் – யசோதர:1 59/3
நீ உயர் குடையின் வைகி நெடிது உடன் வாழ்க என்றாள் – யசோதர:2 132/4
நிலை_இலா உடம்பின் வாழ்க்கை நெடிது உடன் நிறுவ என்று இ – யசோதர:4 249/1
நெடிது என நிறுத்தி நீர் உகுத்து நீள் செவி – சூளாமணி:9 1249/3
நெடிது உடன் ஆய தெவ்வர் நால்வரை நீறுசெய்திட்டு – சூளாமணி:12 2120/1
நெடிது ஆய தீம் கரும்பும் நெல்லுமே போல – நீலகேசி:5 644/3
மேல்
நெடிதுடன் (1)
நெடிதுடன் இருந்து நெஞ்சில் நினைவதோர் நினைவு-தன்னால் – யசோதர:4 231/3
மேல்
நெடிய (6)
நீல நல் கிரி நெடிய யானையும் – உதயணகுமார:6 316/1
வேல் அவாய நெடிய கண் விலங்கி நின்று இலங்கலால் – சூளாமணி:6 480/2
கடி படு நெடிய மாடம் கன்னியோடு ஏறினானால் – சூளாமணி:8 1108/3
நீங்க எறிந்தான் நெடிய மாற்கு இளைய காளை – சூளாமணி:9 1294/3
பட்டு அடி நெடிய வீங்கு பரட்டின நொடிக்கும் கால – சூளாமணி:9 1429/1
அம்பு என நெடிய கண் கணிகையார்-தமை – சூளாமணி:12 2085/1
மேல்
நெடியது (2)
லோசனை_இல் நெடியது ஓர் உயிர் உரைத்தாய் ஆகாயோ – நீலகேசி:2 201/4
நெடியது ஓர் கொம்பினை நீ மறந்தாயோ – நீலகேசி:5 610/2
மேல்
நெடியர் (1)
வாலும் நெடியர் வளைந்த எயிற்றினர் – சூளாமணி:11 1974/1
மேல்
நெடியவன் (4)
செம் கண் கார் ஒளி நெடியவன் விசையினால் சிறந்தான் – சூளாமணி:7 714/4
வரம் மிகு நெடு வரை மணி முடி நெடியவன்
உரம் மிகு படை எழு உரை நனி அரிதே – சூளாமணி:8 943/3,4
நீ பெரிது இனியை என்னா நெடியவன் அதனை நோக்கி – சூளாமணி:9 1436/2
நின்றனன் நெடியவன் நீல மா மணி – சூளாமணி:9 1517/3
மேல்
நெடியளோ (1)
குறியளோ நெடியளோ நூல் ஒழிப்பாய் கூறிக்காண் – நீலகேசி:4 300/4
மேல்
நெடியனேனும் (1)
கோல் வளைவுறாமல் காக்கும் கொற்றவன் நெடியனேனும்
மேல் விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார் – சூளாமணி:5 243/2,3
மேல்
நெடியான் (3)
செம் கண் நெடியான் சரிதம் இது செப்பலுற்றேன் – சூளாமணி:0 2/4
செம் கண் நெடியான் திறம் பேசிய சிந்தைசெய்த – சூளாமணி:0 5/1
செம் கண் நெடியான் கடி காவில் செய்குன்றே – சூளாமணி:10 1650/4
மேல்
நெடியானே (1)
நீடு நீடு முடியால் நெடியானே – சூளாமணி:10 1567/4
மேல்
நெடு (58)
நீலம் காய்ந்த நெடு வேல் விழி நுதல் – உதயணகுமார:4 218/2
கரும் குழல் நெடு வேல்_கண்ணாள் காரிகை பந்து எடுத்து – உதயணகுமார:4 226/1
நெடு வரை போல நின்ற நீர்மையை வாயிலாளர் – உதயணகுமார:6 328/3
சொல்ல உலவா ஒழிக சுடரும் நெடு முடியோய் – யசோதர:5 296/4
பைந்துணர் நெடு முடி பயில ஏற்றினார் – சூளாமணி:3 89/2
தொங்கல் ஆர் நெடு முடி சுடர தூக்கினான் – சூளாமணி:3 111/4
வாம வாள் நெடு நோக்கி மடம் கனி – சூளாமணி:4 157/1
கொடி ஆடும் நெடு நகர கோமான்-தன் குணம் பரவி – சூளாமணி:4 171/1
கரு வடி நெடு நல் வேல்_கண்ணி இன்னணம் – சூளாமணி:4 217/1
கை அணி நெடு நல் வேல் காளைமார்களுள் – சூளாமணி:4 229/2
சே அரி நெடு மலர் கண்கள் சேந்து என – சூளாமணி:5 369/2
மந்தர நெடு மலை நடுவின் வாய்ந்தது – சூளாமணி:5 389/1
சுமை தகை நெடு முடி சுடர தூக்கினான் – சூளாமணி:5 410/4
நிலத்தின் கம்பமும் நெடு வரை அதிர்ச்சியும் எழுவ – சூளாமணி:7 718/3
படர் ஒளி நெடு வாயில் பள்ளியம்பலங்கள் சேர்ந்தார் – சூளாமணி:7 826/4
பளிங்கின் ஒள் அறை பரப்பிடை பாய்வித்த பரு மணி நெடு மான் தேர் – சூளாமணி:8 885/3
பன்னும் ஆயிடை பழனங்கள் வளாவிய படு கலி நெடு நீத்தம் – சூளாமணி:8 889/2
நீங்க அரும் திறலினான்-தன் நெடு நகர் நிறைக்க என்றான் – சூளாமணி:8 918/4
திரை செறி நெடு வரை கடை-தொறு திசைதிசை – சூளாமணி:8 935/3
வரம் மிகு நெடு வரை மணி முடி நெடியவன் – சூளாமணி:8 943/3
நிலை பெரிது அரிது இபம் நெடு வரை நிரையே – சூளாமணி:8 945/4
மை மலர் நெடு வரை மன்னன் மற்றவன் – சூளாமணி:8 959/3
எழில் விரி நெடு வரை இறைவன்-தன் மகன் – சூளாமணி:8 962/1
இரையும் நெடு வீதி நிறைத்தனவே – சூளாமணி:8 1072/4
நில மன்னவரும் நெடு மால் வரை மேல் – சூளாமணி:8 1079/3
நெடு நாண் அற விற்கள் நிமிர்ந்தனவே – சூளாமணி:9 1239/4
மதி தொடு நெடு வரை மான விஞ்சையர் – சூளாமணி:9 1381/1
திண்ணிய நெடு வரை சென்னி மீமிசை – சூளாமணி:9 1401/3
அரு மணி நெடு வரை அதனை ஏந்தினான் – சூளாமணி:9 1512/3
திரு மணி நெடு முடி செல்வன் என்பவே – சூளாமணி:9 1512/4
மை நில நெடு வரை மறிய மற்று அதன் – சூளாமணி:9 1513/2
கரு மால் நெடு வரையோர் கைத்தலத்தின் ஏந்தி – சூளாமணி:9 1518/3
திரு மணி நிழற்றும் செம்பொன் நெடு முடி முகட்டு ஓர் தெய்வ – சூளாமணி:10 1557/1
நிலத்தவள்-கொல் அன்றி நெடு மால் வரை_உளாள்-கொல் – சூளாமணி:10 1606/1
கொடி படு நெடு நகர் கோயில் வீதி-வாய் – சூளாமணி:10 1767/1
திரு மணி நிழற்றும் செம்பொன் நெடு முடி திரு வில் வீச – சூளாமணி:10 1784/3
இருள் ஆழி நிழல் துளும்பும் எரி பொன் மணி நெடு முடி சாய்த்து இறைஞ்சப்பட்டான் – சூளாமணி:10 1806/3
கோடு இலங்கும் நெடு வரை மேல் குடை வேந்தர் இவர் குணங்கள் கூற கேட்பின் – சூளாமணி:10 1821/3
நெய்த்-தலை பால் உக்காங்கு நெடு வரை உலகின் வந்த – சூளாமணி:10 1828/1
எரி மணி நெடு முடி இமைப்பின் செம் கண் அ – சூளாமணி:11 1900/1
செம் கண் நெடு மாலே செறிந்து இலங்கு சோதி திரு முயங்கு மூர்த்தியாய் செய்ய தாமரையின் – சூளாமணி:11 1912/1
முத்தகையர் ஆவர் அவர் மூரி நெடு வேலோய் – சூளாமணி:11 2024/2
குரு மணி கொள் நெடு முடியாய் கூறுபாடு உடையவரே – சூளாமணி:11 2042/4
மந்தர மா நெடு மலையின் மத்தகத்து மேல் கூற்றின் – சூளாமணி:11 2048/1
பொன் மாட நெடு நிலத்தார் புகல் அமளி அணை மேலார் – சூளாமணி:11 2051/1
சுமை ஆகி மணி மாலை சுடர்ந்து இலங்கு நெடு முடியார் – சூளாமணி:11 2055/3
துணிவு அமையும் நெடு வேலோய் சுரர் உடைய குணங்களே – சூளாமணி:11 2056/4
வளம் கெழு நெடு மதில் வாயில் யாவையும் – நீலகேசி:1 24/1
மலங்க நின்று தன் மடல் நெடு மயிர் கை இட்டு உயிர்க்கும் – நீலகேசி:1 51/4
மணி நகு நெடு முடி மற வேல் மன்னவன் மகள் எனின் மடவாய் – நீலகேசி:1 68/1
நிருமித்த வகையினதாம் நெடு நகரை வலம்செய்து – நீலகேசி:2 165/2
மஞ்சு தோய் நெடு மாடமும் வீதியும் – நீலகேசி:3 232/3
கொடி மகர கோபுரமும் நெடு மதிலும் குடிஞைகளும் – நீலகேசி:4 268/1
கொல் நாணும் நெடு வேல் கண் குண்டலமாகேசியும் – நீலகேசி:4 285/3
நெறி என்னை இந்திரன்-தன் நெடு நகர்க்கு அவன் தேவி – நீலகேசி:4 300/3
விண் உயர் நெடு வரை வீற்றுவீற்று வீழ்தலும் – நீலகேசி:4 352/3
நெடு வெண் திரை மேல் நிமிரும் திமிலும் – நீலகேசி:5 466/1
நிலம் பொய் நீர் பொய் நெடு நகர்-தாமும் பொய் – நீலகேசி:5 534/1
மேல்
நெடுஞ்சேந்தன் (1)
தேம் மாண் அலங்கல் திருமால் நெடுஞ்சேந்தன் என்னும் – சூளாமணி:0 4/2
மேல்
நெடுந்தகை (1)
நீங்கலன் இருந்தனன் நெடுந்தகை இது என்றான் – சூளாமணி:6 447/4
மேல்
நெடுந்தகை-தன் (1)
மடங்கலை அடும் திறல் நெடுந்தகை-தன் மாறாய் – சூளாமணி:6 446/1
மேல்
நெடுந்தகையோர்க்கு (1)
தெளிதரு நல் காட்சியது திருந்திய மேல் நெடுந்தகையோர்க்கு
எளி தகவும் பெரும்பாலும் பெறல் ஏனோர்க்கு அரியவே – சூளாமணி:11 2057/3,4
மேல்
நெடும் (74)
திரு நெடும் கண் சிவப்ப வடி சிலம்பு ஓசைசெய்ய – உதயணகுமார:4 204/3
நெடும் கரை மிசை நீர்மையின் நின்றனன் – உதயணகுமார:5 276/1
நெஞ்சு நொந்து அழும் நெடும் கண் நீர் உகும் – உதயணகுமார:6 327/1
மாழை வாள் நெடும் கணும் மயங்கி வந்து சென்று – சூளாமணி:2 44/2
விளிம்பு தோய் நெடும் கடை வீதி வாய் எலாம் – சூளாமணி:2 45/2
கொற்றவன் நெடும்_கணார்-தம் குவி முலை தடத்து மூழ்கி – சூளாமணி:2 69/3
மை துழாம் நெடும்_கணார் மனத்துள் காமனார் – சூளாமணி:3 74/3
ஏர் வளர் நெடும் கணுக்கு இலக்கம்_அல்லனால் – சூளாமணி:3 82/2
முன்னிய நெடும் கடை முற்றம் முன்னினான் – சூளாமணி:3 91/4
மூசு தேன் நெடும் கடை மூன்றும் போய் புறத்து – சூளாமணி:3 93/3
காவி வாள் நெடும் கண்ணி அ காவலற்கு – சூளாமணி:4 148/2
மால் அமர் நெடும் கடல் மதலை மாசு_இலா – சூளாமணி:4 235/1
நிறம் தலைமயங்க வெம்பி நெடும் கடல் சுடுவது ஆயின் – சூளாமணி:5 263/1
மை வாள் நெடும் கண் மலக்கம் பெரிதே – சூளாமணி:5 290/4
வம்பில் நீண்ட மை வாள் நெடும்_கண்ணினாள் – சூளாமணி:5 343/4
அம்பின் நீள் அரி வாள் நெடும்_கண்ணவள் – சூளாமணி:5 345/3
செங்கயல் நெடும் கண் செவ்வாய் பிரீதிமதி பயந்த காளை – சூளாமணி:5 353/3
வலை திரை நெடும் கடல் அவனிவட்டமே – சூளாமணி:5 390/4
ஓங்கிய நெடும் குடை ஒருவன் ஆயினான் – சூளாமணி:5 397/3
மை அலர் நெடும் கண் இவை வல்ல கொலை என்பார் – சூளாமணி:6 458/2
நீல வாள் நெடும்_கணார் நிரந்து நெஞ்சு தாழ் ஒரீஇ – சூளாமணி:6 486/3
கரு வடி நெடும் கண் நல்லார் கலந்த தோள் வல்லி புல்ல – சூளாமணி:6 556/2
வடி கயல் நெடும்_கணார்-தம் வளை கையால் வளைத்த மார்பில் – சூளாமணி:6 558/2
மூடிய மூரி நெடும் தெரு ஒப்பவும் – சூளாமணி:7 655/3
பட்டம் ஆர் நெடும் தேர் பைம்பொனால் மிடை – சூளாமணி:8 894/1
மேல் அவாம் நெடும் கண் ஓட மீட்டு அவை விலக்க மாட்டாள் – சூளாமணி:8 979/3
வாள் நின்ற நெடும் கண் காளை வடிவினுக்கு இவர மற்றை – சூளாமணி:8 982/3
மை வழி நெடும்_கணாளும் மனம் புக்க குரிசில்-தன்னை – சூளாமணி:8 983/3
மைப்பு உடை நெடும்_கணாளும் மருங்கு நின்றவரை நீக்கி – சூளாமணி:8 1016/2
நிழல் அவாம் பகழி போலும் நெடும் கண் நோக்கு என்னும் வெய்ய – சூளாமணி:8 1022/3
வாளை ஆம் நெடும் கண் நல்லாள் மணவினை தொடங்கும் காலம் – சூளாமணி:8 1025/1
மை பருகும் நெடும்_கண்ணார் மணி மாடம் மிசை இட்ட வளை வாய் பாண்டில் – சூளாமணி:8 1033/1
வாளையாம் நெடும்_கணீர் மயங்கி என்னை இ – சூளாமணி:8 1053/2
செங்கயல் நெடும்_கணவள் வேள்வி நகர் சேர்ந்தாள் – சூளாமணி:8 1093/4
என்பு உருக வேவ இணை நெடும் கண் பூம் பாவை – சூளாமணி:8 1116/2
பானல் நெடும் கண் இவையே பகழியா – சூளாமணி:8 1117/1
மான் அமர் நெடும்_கணார்-தம் மனம் என வெஃகி மைந்தர் – சூளாமணி:9 1193/1
நீள் ஒளி தவழ்ந்தது நெடும் கண் ஏழையர் – சூளாமணி:9 1218/2
நிரை சுடர் நெடும் குடை அகடு நெய் கனி – சூளாமணி:9 1219/3
முரிந்தன மணி நெடும் தேர்கள் முத்து உக – சூளாமணி:9 1395/1
நெதி சொரி சங்கம் ஏந்தி நெடும் சிலை இடம் கை கொண்டு – சூளாமணி:9 1438/1
நீல மா மணி குன்று ஒப்பான் நெடும் சிலை இடம் கை கொண்டான் – சூளாமணி:9 1442/4
நெருநல் நெடும் குடை கீழ் நேமி முன் செல்ல – சூளாமணி:9 1465/1
வெண் தாரை வேல் நெடும் கண் நீர் மூழ்கி மேல் பிறழ – சூளாமணி:9 1470/3
நீர் மேக முத்தின் நெடும் தண் குடை கீழ் நிழல் துளும்பும் நேமி தாங்கும் – சூளாமணி:9 1530/3
நிரல் கால மணி நிரைத்த நெடும் குடை கீழ் முடி நிழற்ற நெடுமால் பின்னே – சூளாமணி:9 1532/2
தூ நீல வாள் நெடும் கண் குழை முகத்தின் உள் இலங்க தோன்றுகின்ற – சூளாமணி:9 1536/3
குரு மணி கொம்பர் அன்ன கொழும் கயல் நெடும்_கணாளும் – சூளாமணி:10 1622/2
அம் கயல் நெடும் கண் என்னும் பகழியால் அழுத்தப்பட்டான் – சூளாமணி:10 1624/4
வடி நெடும் கண் நோக்கம் மணி வண்டாய் ஓட – சூளாமணி:10 1643/2
மை வரு நெடும் கண் நல்லார் நடுங்க வந்து அணைந்தது அன்றே – சூளாமணி:10 1664/4
நீர் புனை தடத்தின் உள்ளால் நிலை கொண்டு நெடும் கண் சேப்ப – சூளாமணி:10 1674/2
வடி கலந்து இலங்கு வாள் நெடும் கண் மை குழம்பு – சூளாமணி:10 1682/3
பந்து ஆடும் மாடே தன் படை நெடும் கண் ஆட பணை மென் தோள் நின்று ஆட பந்து ஆடுகின்றாள் – சூளாமணி:10 1754/4
மை வரை நெடும் கண் அம் மடந்தை-தன்னொடும் – சூளாமணி:10 1770/3
மன் ஏர் செய் அயில் நெடும் கண் மங்கைமார் போற்று இசைப்ப மாடம் புக்காள் – சூளாமணி:10 1799/4
விண் சுடரும் நெடும் குடை கீழ் விறல் வேந்தன் திறம் இதனை விளம்ப கேளாய் – சூளாமணி:10 1814/2
கய மலர் நெடும்_கணாள் ஓர் காரிகை காட்டினாளே – சூளாமணி:10 1833/4
வரி கழல் மன்னர் என்னும் மணி நெடும் குன்றம் எல்லாம் – சூளாமணி:10 1834/1
காவி ஆய் நெடும் கணீர் கருதிற்று என் என – சூளாமணி:12 2095/3
மருள் திறம் இலன் அறி இனி அரு வரை நெடும் கோட்டு – நீலகேசி:1 47/3
போது அன புணர் அரி நெடும் கண் புனல் வர பூம் துகில் புடையா – நீலகேசி:1 73/3
நீலமும் வேலும் கயலும் நிகர்த்த நெடும் கண்ணினாய் – நீலகேசி:1 85/4
மட்டு ஆர் மலர் புனைவும் வாள் நெடும் கண் மை அணிவும் – நீலகேசி:1 130/1
நெருங்குபு போய் நீர் உண்ணா தேர் பண்ணா நெடும் கடைக்கு – நீலகேசி:2 167/2
நினைப்பது ஒன்று உடைத்து அவன் செய் நெடும் பாவம் நிச்சலும் – நீலகேசி:2 185/3
நீலகேசி நெடும்_கணாள் சொல்லும் – நீலகேசி:2 207/2
முரைசொடு நெடும் கொடி முழங்க நாட்டுக – நீலகேசி:2 226/3
கட்டுரை பல சொல்லி காவல் நெடும் கடை நாவலை முன் – நீலகேசி:2 228/1
அயில் தெறும் நெடும்_கணாய் ஆவது இல்லை அல்லதும் – நீலகேசி:4 350/4
நெடும் காலம் பல் பிறவி நின்றன எல்லாம் – நீலகேசி:6 695/3
மான் நின்ற நோக்கின் மற வேல் நெடும் கண்ணின் நல்லாய் – நீலகேசி:6 725/1
நித்தியன் எங்கும் உளன் நெடும் காட்சியன் – நீலகேசி:7 736/3
என்றாள் எழில் நெடும் கண் இணை நல்லாள் – நீலகேசி:7 759/4
மேல்
நெடும்_கண்ணவள் (1)
அம்பின் நீள் அரி வாள் நெடும்_கண்ணவள்
வம்பு சேர் முலை வாரி வளாகமே – சூளாமணி:5 345/3,4
மேல்
நெடும்_கண்ணார் (1)
மை பருகும் நெடும்_கண்ணார் மணி மாடம் மிசை இட்ட வளை வாய் பாண்டில் – சூளாமணி:8 1033/1
மேல்
நெடும்_கண்ணினாள் (1)
வம்பில் நீண்ட மை வாள் நெடும்_கண்ணினாள் – சூளாமணி:5 343/4
மேல்
நெடும்_கணவள் (1)
செங்கயல் நெடும்_கணவள் வேள்வி நகர் சேர்ந்தாள் – சூளாமணி:8 1093/4
மேல்
நெடும்_கணாய் (1)
அயில் தெறும் நெடும்_கணாய் ஆவது இல்லை அல்லதும் – நீலகேசி:4 350/4
மேல்
நெடும்_கணார் (2)
மை துழாம் நெடும்_கணார் மனத்துள் காமனார் – சூளாமணி:3 74/3
நீல வாள் நெடும்_கணார் நிரந்து நெஞ்சு தாழ் ஒரீஇ – சூளாமணி:6 486/3
மேல்
நெடும்_கணார்-தம் (3)
கொற்றவன் நெடும்_கணார்-தம் குவி முலை தடத்து மூழ்கி – சூளாமணி:2 69/3
வடி கயல் நெடும்_கணார்-தம் வளை கையால் வளைத்த மார்பில் – சூளாமணி:6 558/2
மான் அமர் நெடும்_கணார்-தம் மனம் என வெஃகி மைந்தர் – சூளாமணி:9 1193/1
மேல்
நெடும்_கணாள் (2)
கய மலர் நெடும்_கணாள் ஓர் காரிகை காட்டினாளே – சூளாமணி:10 1833/4
நீலகேசி நெடும்_கணாள் சொல்லும் – நீலகேசி:2 207/2
மேல்
நெடும்_கணாளும் (3)
மை வழி நெடும்_கணாளும் மனம் புக்க குரிசில்-தன்னை – சூளாமணி:8 983/3
மைப்பு உடை நெடும்_கணாளும் மருங்கு நின்றவரை நீக்கி – சூளாமணி:8 1016/2
குரு மணி கொம்பர் அன்ன கொழும் கயல் நெடும்_கணாளும்
பரு மணி பதித்த பைம்பொன் வேதிகை பாரிசாதம் – சூளாமணி:10 1622/2,3
மேல்
நெடும்_கணீர் (1)
வாளையாம் நெடும்_கணீர் மயங்கி என்னை இ – சூளாமணி:8 1053/2
மேல்
நெடுமால் (4)
கொற்றங்கொள் நேமி நெடுமால் குணம் கூற இப்பால் – சூளாமணி:0 3/1
ஒழுக நெடுமால் முனிவு என்னும் ஊழி_தீயும் அவிந்ததே – சூளாமணி:9 1482/4
நிரல் கால மணி நிரைத்த நெடும் குடை கீழ் முடி நிழற்ற நெடுமால் பின்னே – சூளாமணி:9 1532/2
மற்று அ நெடுமால் மகர மா முடி வணங்க – சூளாமணி:10 1612/1
மேல்
நெதி (5)
நெதி இரண்டு என நீடிய தோளினான் – நாககுமார:1 21/3
கொற்ற வேலவன் கோயில் மா நெதி
முற்று வான் கடை மூன்றும் சென்று கோன் – சூளாமணி:7 573/2,3
இரவலர் இரு நெதி கவர்க ஈண்டு இயல் – சூளாமணி:8 903/1
சங்கநிதி என்ன நெதி மாரி தருவித்தார் – சூளாமணி:8 1105/4
நெதி சொரி சங்கம் ஏந்தி நெடும் சிலை இடம் கை கொண்டு – சூளாமணி:9 1438/1
மேல்
நெதிகள் (1)
ஈங்கு இவை நெதிகள் ஆக ஏழரதனங்கள் எய்தி – சூளாமணி:10 1558/2
மேல்
நெதியம் (1)
பொன் எலாம் நெதியம் ஆர பொழிந்திடுகின்ற பூமி – சூளாமணி:5 302/3
மேல்
நெதியும் (1)
தோகை அம் சாயலார்-தம் குழாங்களும் நெதியும் சொல்லி – சூளாமணி:7 692/4
மேல்
நெய் (30)
படுகளத்தின் நொந்தவர்க்கு பல கிழி நெய் பற்றுடன் – உதயணகுமார:3 185/1
நால்வரும் துணைவர் ஆகி நறு நெய் பாலுடன் அருந்தி – உதயணகுமார:5 254/1
தேன் நெய் தோய்ந்த திரு மொழி மா தவர் – உதயணகுமார:6 352/2
பால் அடிசில் நெய் அருந்தி பார் அரசன் செலும் நாள் – உதயணகுமார:6 353/4
சார நெய் பெய் சலாகை கடைந்த பின் – யசோதர:3 211/3
நெய் விரிந்தன நீள் இரும் குன்று எலாம் – சூளாமணி:1 17/4
கொடிச்சியர் புனத்து அயல் குறிஞ்சி நெய் பகர் – சூளாமணி:1 33/1
நெய் உற நிழற்றும் வேலோய் இனைத்து என நினைக்கல் ஆமோ – சூளாமணி:4 198/4
நெய் அணி குழல் இவட்கு உரிய நீர்மையான் – சூளாமணி:4 229/3
நெய் இலங்கு எஃகினர் நிறைந்த விஞ்சையர் – சூளாமணி:5 376/1
நெய் அலர் குழல் தொகை நெருப்பின் அடும் என்பார் – சூளாமணி:6 458/1
நீங்கு_அரு நறு நெய் தீம் பால் சொரிந்தது ஓர் நீர்மைத்து என்றான் – சூளாமணி:6 549/4
அடுத்து எழு சுடரகத்து உக்க நெய் துளி – சூளாமணி:7 682/3
தேன் நெய் பாலொடு கலந்தன சில் மொழி சிறு நுதல் திருவே நம் – சூளாமணி:8 880/1
நெய் பருகு கொழும் சுடரின் அகில் ஆவியிடை நுழைந்து நிழல் கால் சீப்ப – சூளாமணி:8 1033/2
நிரை சுடர் நெடும் குடை அகடு நெய் கனி – சூளாமணி:9 1219/3
ஊழி பேர் எரியுள் நெய் சொரிந்தது ஒப்பவே – சூளாமணி:9 1257/4
நெய் வேல் பெயர்த்து நிருமித்து அஃது ஏந்தி உரும் ஒத்து நேர்ந்து பொருதான் – சூளாமணி:9 1333/2
நெய் வரை நீள் நில தலத்து மேல் பல – சூளாமணி:9 1405/3
துறை நகர் சுண்ணம் நெய் நாவி தூங்கின – சூளாமணி:10 1716/3
சுண்ணம் நெய் எழு பகல் ஆடி தொல் நகர் – சூளாமணி:10 1717/1
மலிதரு நறு நெய் அ மகளிர் பெய்தலும் – சூளாமணி:10 1726/2
நாவி கால் தழுவி மன் நறு நெய் ஆடிய – சூளாமணி:10 1727/1
நெய் ஆர் செவ் வேல் நீள் ஒளி நேமி படையானே – சூளாமணி:10 1743/4
எரிகின்ற சுடரில் நெய் பெய்து இடு திரி தூண்டியாங்கு – சூளாமணி:11 1863/1
நெய் வகை வேலவன் நிலைமை கேட்கவே – சூளாமணி:11 1888/4
ஊன் நெய் உருகும் உழக்கும் ஒரு பால் – சூளாமணி:11 1960/4
சுக்கிலமும் சோணிதமும் தழீஇ சுதையுள் நெய் அனைத்தாய் – நீலகேசி:4 310/3
சொல்லாயே நெய் சுடராய் சுட்டிடும் ஆறு என்றேனுக்கு – நீலகேசி:6 698/2
உரியது ஓர் நீர் அணைந்து உப்பு அது ஆகும் நெய்
எரி எழும் உளர்ச்சியால் இரைக்கும் காற்றது ஆம் – நீலகேசி:8 792/1,2
மேல்
நெய்த்-தலை (1)
நெய்த்-தலை பால் உக்காங்கு நெடு வரை உலகின் வந்த – சூளாமணி:10 1828/1
மேல்
நெய்தல் (1)
நிரை தழுவிய நெறி கழியிடை நிகர் அலரன நெய்தல் – நீலகேசி:1 14/4
மேல்
நெய்தலின் (1)
தண் நிற தண் கழுநீரின் நெய்தலின்
கள் நிற கரும் கடை இதழும் பெய்து இடை – சூளாமணி:10 1689/1,2
மேல்
நெய்தலும் (1)
நாற விண்டன நெய்தலும் நாள்_மது – சூளாமணி:1 19/1
மேல்
நெய்யால் (1)
மந்திர நறு நெய்யால் வளர்ந்து மாசு_இலா – சூளாமணி:4 211/3
மேல்
நெய்யின் (1)
அன்னம் பால் நெய்யின் அன்புடன் ஊட்டு எனும் – உதயணகுமார:6 340/4
மேல்
நெய்யினால் (1)
நெய்யினால் நிழன்று நீர் நின்ற நீள் ஒளி – சூளாமணி:9 1384/1
மேல்
நெய்யுற்ற (1)
நெய்யுற்ற வேலும் ஒரு தோளும் வீழ ஒரு தோளின் நீடு செருவை – சூளாமணி:9 1334/1
மேல்
நெய்யொடு (1)
நெய்யொடு வந்தனன் நிலைமை இன்னதே – சூளாமணி:10 1736/4
மேல்
நெரி (2)
நிகர் இகந்து அழகிது ஆகி நெரி வடுப்படாத வேழ – சூளாமணி:6 513/1
குங்கும குளிர் பூ நெரி தூளி மேல் – சூளாமணி:8 893/1
மேல்
நெரித்து (1)
புலம் கொண்டது அதனை காப்பான் பூ ஒன்று நெரித்து மோந்தாள் – சூளாமணி:8 998/4
மேல்
நெரிதர (2)
அழல் நகுவன அலர் நெரிதர அசை நிலைய அசோகம் – சூளாமணி:6 432/4
பேய் மையானம் கொண்டு இருந்து அன்ன பெரு வரை நெரிதர திரை சிந்தி – சூளாமணி:8 881/1
மேல்
நெரிந்த (2)
நெரிந்த நுண் குழல் நேர் இமையார் உழை – யசோதர:1 10/1
கோதலால் நெரிந்த தாது கால் குடைந்து கொண்டு உறீஇ – சூளாமணி:6 492/2
மேல்
நெரிந்தன (1)
நெரிந்தன களிறு உடை மருப்பு நேர் முகம் – சூளாமணி:9 1395/2
மேல்
நெரிந்தார் (1)
நிழலான் தமர் கரிந்தார் சிலர் இரிந்தார் பலர் நெரிந்தார்
தழல் ஆர் அயில் வலன் ஏந்துபு சார்ந்தார் தலை சரிந்தார் – சூளாமணி:9 1295/3,4
மேல்
நெரிந்து (4)
பொடி தலை புலம்பி கானம் போழ்ந்து மா நெரிந்து வீழ – சூளாமணி:7 699/1
முதிர்வு_இல் கோளரி முனிந்து எதிர் முழங்கலின் நெரிந்து
பிதிர்வு சென்றது பெரு வரை பிளந்தது அ பிலமே – சூளாமணி:7 720/3,4
எற்றிய வயிர திண் தூண் நெரிந்து இடை கிடந்த ஆறும் – சூளாமணி:9 1151/3
புடைத்திட நெரிந்து பொங்கி சரங்கள் போய் புரள நோக்கி – சூளாமணி:9 1450/2
மேல்
நெரிய (2)
எங்கு போவது என்று உடை நெறி இறுவரை நெரிய
பைங்கண் கோளரி உருவுகொண்டவன் மிசை படர்ந்து – சூளாமணி:7 714/1,2
புருவங்கள் நெரிய ஏற்றி புகுந்து நாம் வெருட்டும் போழ்தில் – சூளாமணி:9 1191/2
மேல்
நெரிவதே (1)
அடித்தனன் அசனி வீழ அரு வரை நெரிவதே போல் – சூளாமணி:9 1139/2
மேல்
நெரிவுற்ற (1)
களிறு காத்திரம் உறுத்தலின் நெறி தலை கரு முகில் நெரிவுற்ற
குளிறும் இன்னியம் குழுமலில் செழு மலை கொடுமுடி உடன் ஆர்த்த – சூளாமணி:8 874/2,3
மேல்
நெரிவுற்று (1)
பிடியும் களிறும் பிறவும் நெரிவுற்று
அடியும் இட ஆம் இடம் இன்று இலகும் – சூளாமணி:8 1073/1,2
மேல்
நெரிவுற (1)
மலை_மிசையவர் படை மலை நெரிவுற வரும் – சூளாமணி:8 945/2
மேல்
நெரிவொடு (1)
பொடிந்து போயின பொரி என நெரிவொடு புரளா – சூளாமணி:7 712/4
மேல்
நெருக்குப்பட்டு (1)
திரு தகு குமரன் செல்வ செருக்கினால் நெருக்குப்பட்டு
மருத்து எறி கடலின் பொங்கி மறுகிய மனத்தன் ஆகி – யசோதர:2 86/1,2
மேல்
நெருங்க (2)
முலை முகம் நெருங்க புல்லி முருகு வேய் கோதை சூட்டி – சூளாமணி:10 1667/2
பொங்கிய அமளி மேலால் புணர் முலை நெருங்க புல்லி – சூளாமணி:10 1706/2
மேல்
நெருங்கலும் (1)
நெருங்கலும் நிரலும் இன்றி நிமிர்ந்து உள சில பல் என்றாள் – யசோதர:2 105/4
மேல்
நெருங்கு (2)
நெருங்கு ஒளி நிறைந்த மிகு சோதி நிழல் சூழ – சூளாமணி:8 871/3
நெருங்கு ஒளி உருவம் கொண்டு நின்னை யான் நினைந்து வந்தேன் – சூளாமணி:8 1015/4
மேல்
நெருங்குபு (1)
நெருங்குபு போய் நீர் உண்ணா தேர் பண்ணா நெடும் கடைக்கு – நீலகேசி:2 167/2
மேல்
நெருங்கும் (1)
அரசு உடை பெரும் கடை நெருங்கும் ஆர்கலி – நீலகேசி:1 25/3
மேல்
நெருநல் (2)
நெருநல் நெடும் குடை கீழ் நேமி முன் செல்ல – சூளாமணி:9 1465/1
என் ஒக்கும் எனின் நெருநல் இல் புகுந்தான் இடை இரா – நீலகேசி:2 195/3
மேல்
நெருப்பிடை (1)
நெருப்பிடை விழுந்தமை நினைப்ப மாயம் அன்று என – உதயணகுமார:2 141/3
மேல்
நெருப்பின் (2)
தில_பொறியின் இட்டனர் திரிப்புவும் நெருப்பின்
உலை பெருகு அழல் தலை உருக்கவும் உருத்து – யசோதர:5 294/1,2
நெய் அலர் குழல் தொகை நெருப்பின் அடும் என்பார் – சூளாமணி:6 458/1
மேல்
நெருப்பு (3)
நீள் கதிர் இமைக்கும் ஒள் வாள் முகம்பெற நெருப்பு சிந்தி – சூளாமணி:9 1166/3
நெருப்பொடு நெருப்பு எதிர் எறிப்ப யானைகள் – சூளாமணி:9 1275/2
நெருப்பு நீரவர் வீசலும் – சூளாமணி:9 1361/2
மேல்
நெருப்பொடு (2)
நெருப்பொடு நெருப்பு எதிர் எறிப்ப யானைகள் – சூளாமணி:9 1275/2
நீ தின்னும் தோலை நெருப்பொடு கூட்டத்தின் – நீலகேசி:4 365/2
மேல்
நெரேலென (1)
நின்று அகம் சுழிந்த தெள் நீர் நெரேலென இழிந்தது அன்றே – சூளாமணி:10 1678/4
மேல்
நெல் (3)
உக்க நெல் பொரியுற்று ஒரு சார் எலாம் – சூளாமணி:7 780/3
கரும்பொடு முடித்த காய் நெல் கதிர் அணி கவள கற்றை – சூளாமணி:8 929/1
நெல் பிறிது போன்ம் எனவும் நீ உரைத்தாய் அஃது ஒழிந்து – நீலகேசி:5 650/2
மேல்
நெல்லியின் (2)
அற்ற நீர் அழுவத்திடை நெல்லியின்
வற்றல் அம் சினை ஊடு வலித்து அரோ – சூளாமணி:7 782/1,2
வண்டு ஆயும் கோதாய் வரை நெல்லியின் காயது அங்கை – நீலகேசி:4 398/1
மேல்
நெல்லின் (1)
நெல்லின் வழி கரும்பும் நீள் கரும்பினால் நெல்லும் – நீலகேசி:5 651/1
மேல்
நெல்லும் (1)
நெல்லின் வழி கரும்பும் நீள் கரும்பினால் நெல்லும்
சொல்லு நீ சொல்லாயேல் சொல்லிய நின் சொல் எய்தா – நீலகேசி:5 651/1,2
மேல்
நெல்லுமே (1)
நெடிது ஆய தீம் கரும்பும் நெல்லுமே போல – நீலகேசி:5 644/3
மேல்
நெலிடை (1)
அவை அ நெலிடை கழுநீர் அழுவம் – சூளாமணி:7 805/2
மேல்
நெளி (1)
நீர் அணி கடல் அம் தானை நிலம் நெளி பரப்பி நின்றான் – சூளாமணி:8 845/4
மேல்
நெளித்து (1)
மொள்ளும் ஆறும் முதுகு நெளித்து உண்டு ஊன் – நீலகேசி:3 237/2
மேல்
நெளிவுற (1)
நிலம்_மிசையவர் படை நிலம் நெளிவுற வரும் – சூளாமணி:8 945/1
மேல்
நெற்றி (15)
கால்களின் விரலின் நெற்றி கனக்க நன்கு ஊன்றி நின்று – உதயணகுமார:1 101/2
பாக நேர் பிறையா நெற்றி பதுமையும் இதனை சொல்வாள் – உதயணகுமார:4 200/3
சிறு மலர் நெற்றி கண்ணும் சேரவே மறைய கண்டு – நாககுமார:3 81/3
மஞ்சு உடை மதர்வை நெற்றி வான் உழு வாயில் மாடத்து – சூளாமணி:2 38/2
சந்திரன் தவழ நீண்ட தமனிய சூலம் நெற்றி
அந்தரம் திவளும் ஞாயில் கோயில் புக்கு அருளுக என்றார் – சூளாமணி:5 361/3,4
கதிர் நகை கபாட வாயில் கதலிகை கனக நெற்றி
மதி நக உரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதி – சூளாமணி:6 504/1,2
ஆரியன் அலர்ந்த சோதி அரும் கல பீடம் நெற்றி
தாரகை அணிந்து தோன்றும் சந்திர சவியன் ஆனான் – சூளாமணி:6 510/3,4
கண் உயர் கதலி வேலி கார் கயிலாய நெற்றி
புண்ணிய கிழவன் போகி பொலம் கலம் புலம்ப நீக்கி – சூளாமணி:6 554/2,3
முடி தலை முத்து உதிர்ந்தாங்கு நெற்றி மேல் – சூளாமணி:7 682/1
ஏக மா மலையின் நெற்றி இரும் சுனை தடங்கள் எல்லாம் – சூளாமணி:7 761/2
தொடர் ஒளி சுடர் ஞாயில் சூளிகை சூழும் நெற்றி
படர் ஒளி நெடு வாயில் பள்ளியம்பலங்கள் சேர்ந்தார் – சூளாமணி:7 826/3,4
அம் பொன் செய் கொடுஞ்சி நெற்றி கொடி எடுத்து அணைந்த அன்றே – சூளாமணி:8 914/4
கண் இயல் விலங்கல் நெற்றி கதிர் என்னும் கையின் ஊன்றி – சூளாமணி:8 1026/2
விழு மலர் பிணை_அன்னாளும் விடலையும் மேரு நெற்றி
செழும் மணி சிலை சென்று ஏறும் தெய்வ மா மிதுனம் ஒத்தார் – சூளாமணி:8 1109/3,4
நிழல் அவிர் விலங்கல் நெற்றி நிமிர்ந்தது ஓர் காள மேகம் – சூளாமணி:9 1462/3
மேல்
நெற்றிய (1)
கவரி நெற்றிய புரவி தம் காவிடம் புகுக – சூளாமணி:7 709/2
மேல்
நெற்றியும் (1)
மறம் கிளர் மன்னர்-தம் மகுட நெற்றியும்
உறங்கல்_இல் கடா களிற்று உச்சி மேலுமாய் – சூளாமணி:9 1276/2,3
மேல்
நெறி (63)
நெறி கண்டு ஊர்ந்தனர் நீலமலை என – உதயணகுமார:1 40/4
நல் நெறி வத்தவன்-தான் நல் பிடி ஏறி நிற்ப – உதயணகுமார:1 110/3
வரும் நெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு – உதயணகுமார:4 189/3
நூல் நெறி வகையில் துய்த்தார் நுண் இடை துவள அன்றே – நாககுமார:4 115/4
பங்கு அவிழ் பங்கம் ஆடி பரம நல் நெறி பயின்றிட்டு – யசோதர:1 55/2
வான் உயர் இன்பம் மேலால் வரும் நெறி திரியும் அன்றி – யசோதர:2 140/2
இந்திர உலகம் காணும் நெறி அவை யாவை என்னின் – சூளாமணி:5 272/2
நாம நூல் கலை விச்சையின் நல் நெறி இவை-தாம் – சூளாமணி:6 459/1
மோட்டு எழில் முகில் சூழ் நெறி முன்னினார் – சூளாமணி:7 650/4
கழல் கொள் சேவடி கரு வரை இடை நெறி கலந்த – சூளாமணி:7 711/2
எங்கு போவது என்று உடை நெறி இறுவரை நெரிய – சூளாமணி:7 714/1
களிறு காத்திரம் உறுத்தலின் நெறி தலை கரு முகில் நெரிவுற்ற – சூளாமணி:8 874/2
வழுவு_இல் நெறி வாமன மா நகர்-வாய் – சூளாமணி:8 1074/1
வான நெறி எங்கும் வளர் சோதி வடமீனை – சூளாமணி:8 1106/1
நெறி ஆர் நிரை மாவொடு தேர்கள் எடுத்து – சூளாமணி:9 1237/1
வேற்றவரை வீர நெறி காண்-மின் இது என்று – சூளாமணி:9 1280/3
வந்தனவும் சென்றனவும் வானத்தின் மேலும் மணி நிலத்து மீதும் நெறி மறிகுவன ஆகி – சூளாமணி:10 1755/2
நினை-மின்மோ நெறி நின்று நீர்மை மிக்கீர் – சூளாமணி:10 1839/4
நின்ற நாள் நிலவுமேனும் நெறி நின்று வருந்தவேண்டா – சூளாமணி:11 1845/2
இருள் புரி உலகம் சேரா இயல் நெறி பயந்த பெம்மான் – சூளாமணி:11 1866/3
நொவ் வகை வினை பகை அகற்றி நூல் நெறி
செவ் வகை மொழிந்தவன் செல்வ சேவடிக்கு – சூளாமணி:11 1888/1,2
நிரை தழுவிய நெறி கழியிடை நிகர் அலரன நெய்தல் – நீலகேசி:1 14/4
நின்று அ கோள்-மினம் என சொல்லி நெறி அறிவுறுவோன் – நீலகேசி:1 35/3
நீலகேசி தன் நெறி_இன்மை இது என நினைந்தான் – நீலகேசி:1 48/4
அருள் திறம் நல அற நெறி பெறுதலும் அறிந்தான் – நீலகேசி:1 49/4
தொடர்ந்த பல் வினைகளை துணிக்கும் சுத நெறி முறைமையும் அறிவான் – நீலகேசி:1 64/2
நுனித்தகு நல் நெறி நோக்கினள் ஆகி – நீலகேசி:1 146/1
சித்த நல் நெறி பயந்தான் திரு_அடிக்கு அருச்சனை செய்தாள் – நீலகேசி:2 152/4
தீது_இல் நல் நெறி பயந்து திரை செய் நீள் கரை ஒருவி – நீலகேசி:2 155/3
ஈண்டு இனி அற நெறி உறுக என ஏந்து_இழை இயம்பினளே – நீலகேசி:2 230/4
இந்திரன் அனைய நின் இறைமையின் அற நெறி இகழல் என்று ஆங்கு – நீலகேசி:2 231/2
அந்தர நெறி செலற்கு ஆய்_இழை அரசனை விடுத்து அருக்கசந்திரன் – நீலகேசி:2 231/3
அனையதே நும் அற நெறி என்றனள் – நீலகேசி:3 239/3
முனைவன்-தன் நெறி முன்னம் உணர்ந்தவள் – நீலகேசி:3 239/4
யாதும் இல்லை உயிர் என்று அற நெறி
ஓதினான் அ உயிரிலி-தன்னொடு – நீலகேசி:3 246/1,2
புல் நெறி அவைகள் எல்லாம் போக்கிய பாக்கியத்தாய் – நீலகேசி:3 264/1
நல் நெறி நல் ஞானம் காட்சியும் நன்கு கொண்டு என் – நீலகேசி:3 264/2
சொல் நெறி திரிவாயேல் சோர்வு_இல் பேர்_இன்பம் எய்தி – நீலகேசி:3 264/3
நெறி என்னை இந்திரன்-தன் நெடு நகர்க்கு அவன் தேவி – நீலகேசி:4 300/3
நீ சொல் அறியாய் அறிவார் நெறி நேடுகில்லாய் – நீலகேசி:4 411/3
மனை இருள் நெறி பெற மதி கெட அடைவன – நீலகேசி:4 455/3
நெறி ஆம் இவை நீலம் நிகர்த்த கணாய் – நீலகேசி:5 489/4
சிறிது நெறி காட்டின் அது செல்லும் என சொல்லும் – நீலகேசி:5 523/4
இன்மை ஆய நெறி மொழி நீ இனி – நீலகேசி:5 528/4
மிக்கதே என் நெறி என்று வேண்டல் எவன் – நீலகேசி:5 555/4
ஏம நல் நெறி கண்டிலரே பிற – நீலகேசி:5 557/4
சென்று சென்று உன செம் நெறி கண்டவர் – நீலகேசி:5 560/1
நில்லாதாக கூறுதல்-தன்னை நெறி என்றீர் – நீலகேசி:5 566/1
நீதி_இலா நெறி நேரலன் என்றாள் – நீலகேசி:5 572/4
நினையின் மற்று என்றான் நெறி பயந்தானே – நீலகேசி:5 574/4
நல் நெறி நின்னால் அறிவு அரிது என்றான் – நீலகேசி:5 602/4
நின் சென்ற ஆற்றால் உரைத்தால் நெறி ஆற்ற நன்றே – நீலகேசி:6 720/4
நின்றாள் அவன்-தான் நெறி பகர்கின்றனன் – நீலகேசி:7 731/2
நல்_நுதலாய் இது என் நெறி என்றனன் – நீலகேசி:7 734/2
வீட்டின் ஆர் நெறி என விரித்த மேலையோர் – நீலகேசி:8 783/2
நெறி எனப்படுவது நின்ற மெய்ம்மை அங்கு – நீலகேசி:8 785/1
இ நெறி அமைதி_இன்று என்னும் சொல்லினாய் – நீலகேசி:8 790/2
துணிக்கலாம் துரு நெறி துன்னும் நன்மையே – நீலகேசி:8 819/4
அருள் உடை அற நெறி அண்ணல் சேவடி – நீலகேசி:8 821/3
காம்பு உடை கட நெறி கடப்பன் என்னவே – நீலகேசி:8 822/2
செல்கதி உளது என்ப தீர்த்திக நெறி என்றும் தீய என்று – நீலகேசி:9 833/3
அன்புபட்டவர்களும் அற நெறி அறிவித்த ஆர்வத்தினால் – நீலகேசி:9 853/3
நாதன் நல் நெறி நல் வினை நற்பயன் – நீலகேசி:10 864/3
மேல்
நெறி-கண் (4)
சிந்தையால் நெறி-கண் தீமை தீர்த்திடும் நியமம் முற்றி – யசோதர:1 24/2
அறைந்தவர் அறிவிலாமை அது விடுத்து அற நெறி-கண்
சிறந்தன முயலப்பண்ணும் செப்பும் இ பொருண்மை என்றான் – யசோதர:1 72/3,4
வான் நெறி-கண் வந்தவன் மகிழ்ந்து கண்மலர்ந்து தன் – சூளாமணி:6 497/3
நூல் நெறி-கண் மிக்க நீர்மை ஒக்க நின்று நோக்கினான் – சூளாமணி:6 497/4
மேல்
நெறி-தலை (1)
நெறி-தலை திரிவு_இலான் மேல் நினைவு_இலான் மொழியப்பட்ட – சூளாமணி:9 1463/1
மேல்
நெறி-தாம் (1)
போதியில் பணிந்திருந்தாள் புல் நெறி-தாம் பல அவற்றுள் – நீலகேசி:2 162/3
மேல்
நெறி-வயின் (1)
நினக்கு இனி நெறி-வயின் நின்ற மெய்ம்மையை – நீலகேசி:8 784/3
மேல்
நெறி_இன்மை (1)
நீலகேசி தன் நெறி_இன்மை இது என நினைந்தான் – நீலகேசி:1 48/4
மேல்
நெறிக்-கண் (1)
நெறிக்-கண் சென்று ஆறலைப்பார் ஒப்பன் நேர் நீ – நீலகேசி:4 336/4
மேல்
நெறிக்கு (1)
இருந்து நின்று நல் நெறிக்கு இடைப்படாத சிந்தையால் – நீலகேசி:4 358/3
மேல்
நெறிக்கும் (2)
காதி அம் கிளைகள் சீறும் காமரு நெறிக்கும் கண்ணாய் – சூளாமணி:4 200/1
மல்லினால் சென்று மறித்திடுவேன் என நெறிக்கும்
பல்லினால் பல பிணங்களின் நிணங்களை பகிரும் – நீலகேசி:1 53/3,4
மேல்
நெறிகள்-தம்மே (1)
சார்த்தி பிறவா தவ நெறிகள்-தம்மே போல் – நீலகேசி:6 661/3
மேல்
நெறிகள்-தாம் (1)
சார்த்தி பிறவா தவ நெறிகள்-தாம் உளவோ – நீலகேசி:6 661/2
மேல்
நெறித்த (1)
வயல் ஆம்பல் நெறித்த வகை தழையள் – சூளாமணி:7 809/1
மேல்
நெறிப்பட்டு (1)
ஒள் எரி நெறிப்பட்டு அன்ன சுரி உளை மலை கண் போழும் – சூளாமணி:7 697/1
மேல்
நெறிப்பர் (1)
நெறிப்பர் எலும்பு நிரந்து உடன் வீழ – சூளாமணி:11 1940/3
மேல்
நெறிபடு (1)
நெறிபடு நீதி மேல் நிறைந்த சிந்தையன் – சூளாமணி:9 1511/2
மேல்
நெறிமைப்படுதலும் (1)
நீதி வகையால் நெறிமைப்படுதலும்
வாதுசெய்வார்கள் பிறராய் வருவதும் – நீலகேசி:7 767/2,3
மேல்
நெறிமைய (1)
நிறை பொறி உள அவை அறிதல்_இல் நெறிமைய
முறை பொருள் நிகழினும் முறைபடும் அறிவு_இலன் – நீலகேசி:4 451/1,2
மேல்
நெறிமையினால் (2)
நிலையாது எனவும் உயிர் இல்லை என்றும் நெறிமையினால்
தொலையா துயரொடு தூய்து_அன்மை என்று இன்ன தொக்கு உளவா – நீலகேசி:4 382/1,2
நீத்தற்கு அரியன நீத்த அருக்க நெறிமையினால்
ஏத்தற்கு இயைந்த இரண்டு அணு ஆதியின் இன்னணம் ஆம் – நீலகேசி:4 395/2,3
மேல்
நெறியது (1)
திருவற நெறியது செவ்வி காண்-மினே – யசோதர:5 329/4
மேல்
நெறியாக (2)
மாதிரம்-தான் நெறியாக மனம் போல சென்று எய்தி – நீலகேசி:4 267/2
நின்ற ஆறே நெறியாக நேர்கின்றாய் நீ யாவனோ – நீலகேசி:5 568/2
மேல்
நெறியில் (6)
நிலைபெற நெறியில் துய்த்தார் நிகர்_இன்றி செல்லும் நாளுள் – நாககுமார:4 116/3
நீ இடை அறி சொல் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான் – சூளாமணி:3 103/4
நெறியில் நீதிக்-கண் நேர் இவை ஒப்பவும் – சூளாமணி:7 629/1
அரசர்கள் நெறியில் கண்டீர் யாம் பிழைப்பு இலாமை என்று – சூளாமணி:9 1174/1
நில_மகள் நிலைமையும் நெறியில் கேட்டிரேல் – சூளாமணி:12 2087/1
தம்தம் நெறியில் திரிதல்-தானும் இலர் ஆகி – நீலகேசி:1 19/3
மேல்
நெறியின் (3)
மருவு நூல் நெறியின் அன்றி வன்மையால் சூழ்ச்சிசெய்தேன் – உதயணகுமார:4 198/3
சேதியின் நெறியின் வேறு சிறந்தது சிந்தைசெய்யா – யசோதர:1 56/3
தாதையை தலைவனை தத்துவதரிசியை தவ நெறியின்
நீதியை அருளிய நிருமலன் தகை நினக்கு உரைப்பன் என்றாள் – நீலகேசி:4 448/3,4
மேல்
நெறியினாலே (1)
எறிபட்டு என் நெறியினாலே அடக்குவன் நினையும் என்றான் – நீலகேசி:5 571/4
மேல்
நெறியினில் (1)
நெறியினில் அறிவது ஊற நின்றனர் விலகி நிற்பர் – யசோதர:5 308/2
மேல்
நெறியும் (1)
நேர் இடத்தால் பன்மை எய்தி உருவு ஆம் நெறியும் என்றாள் – நீலகேசி:4 397/4
மேல்
நெறியே (1)
செய்த தீமை கெட கடல் நாட்டில் சினவரன் நெறியே தெருட்டு என்றான் – நீலகேசி:1 148/4
மேல்
நெறியை (2)
அரு மாலை நல் நெறியை முன் பயந்தாய் என்றும் அடியேம் உன் அடி பரவும் ஆறு அறிவது அல்லால் – சூளாமணி:11 1904/2
போன்று இருந்து பொதி அறுக்கும் புத்தன்-தன் புல் நெறியை
யான் சென்று அஃது அடிப்படுப்பன் அற கருமம் இது என்றாள் – நீலகேசி:2 163/3,4