Select Page

துகள் (2)

துவர முடித்த துகள் அறும் முச்சி – திரு 26
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து – நெடு 127

மேல்


துகில் (3)

கோபத்து அன்ன தோயா பூ துகில்
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 15,16
பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் – நெடு 145
புடை வீழ் அம் துகில் இட_வயின் தழீஇ – நெடு 181

மேல்


துகிலின் (1)

வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து – திரு 296

மேல்


துகிலினன் (1)

மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்
முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி – திரு 214,215

மேல்


துஞ்சி (1)

முள் தாள் தாமரை துஞ்சி வைகறை – திரு 73

மேல்


துணங்கை (1)

நிணம் தின் வாயள் துணங்கை தூங்க – திரு 56

மேல்


துணர் (1)

கறி கொடி கரும் துணர் சாய பொறி புற – திரு 309

மேல்


துணை (5)

இணைப்பு_உறு பிணையல் வளைஇ துணை தக – திரு 30
துணை_உற அறுத்து தூங்க நாற்றி – திரு 237
துணை மாண் கதவம் பொருத்தி இணை மாண்டு – நெடு 81
துணை புணர் அன்ன தூ நிற தூவி – நெடு 132
பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து – நெடு 137

மேல்


துணை_உற (1)

துணை_உற அறுத்து தூங்க நாற்றி – திரு 237

மேல்


துணையோர் (2)

துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி – திரு 20
இன்னே வருகுவர் இன் துணையோர் என – நெடு 155

மேல்


துமிய (1)

வாழை முழு_முதல் துமிய தாழை – திரு 307

மேல்


துயல்வர (1)

வாடா மாலை ஓடையொடு துயல்வர
படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை – திரு 79,80

மேல்


துயல்வரும் (1)

செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 207

மேல்


துயல்வரூஉம் (1)

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 86

மேல்


துருத்தியும் (1)

காடும் காவும் கவின் பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறு பல் வைப்பும் – திரு 223,224

மேல்


துவர (1)

துவர முடித்த துகள் அறும் முச்சி – திரு 26

மேல்


துவலை (3)

அகல் இரு விசும்பில் துவலை கற்ப – நெடு 20
துவலை தண் துளி பேணார் பகல் இறந்து – நெடு 34
கல்லென் துவலை தூவலின் யாவரும் – நெடு 64

மேல்


துளி (5)

நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை – திரு 116
குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க – நெடு 28
துவலை தண் துளி பேணார் பகல் இறந்து – நெடு 34
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப – நெடு 185

மேல்


துறந்து (1)

பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து
நன் நுதல் உலறிய சின் மெல் ஓதி – நெடு 137,138

மேல்


துறப்ப (2)

தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப
கூந்தல் மகளிர் கோதை புனையார் – நெடு 52,53
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப
கல்லென் துவலை தூவலின் யாவரும் – நெடு 63,64

மேல்


துனி (1)

துனி இல் காட்சி முனிவர் முன் புக – திரு 137

மேல்