கீழே உள்ள
சொல்லின் மேல்
சொடுக்கவும்
நை
(வி) 1. அழி, ruin, destroy
2. வருந்து, be distressed
3. (துணி) இற்றுப்போ, இழை இழையாகப்பிரி, (cloth) be worn out
4. சுட்டுப்பொசுக்கு, சுட்டு வதக்கு, roast and make dwindle
1.
நனம் தலை பேரூர் எரியும் நைக்க – புறம் 57/7
அகன்ற இடம் அமைந்த பெரிய ஊரினைத் தீ எரிப்பதானாலும் எரித்து அழிக்கட்டும்
2.
நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி
உகுவது போலும் என் நெஞ்சு – கலி 33/16,17
இதுகாறும் நொந்திருந்த மரக்கிளைகள் இப்போது நம்மைப்பார்த்துச் சிரிப்பது போல் மலர்களால் நிறைந்துள்ளன,
வருந்தி அதை நினைந்து
உடைந்து சிதறுவது போல் ஆனது என் நெஞ்சம்
3.
நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி – புறம் 376/11
இற்றுப்போய் கரைகிழிந்து கிடந்த எனது உடையையும் பார்த்து
4.
இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302
பெரிய மூங்கிலின் பசிய புதரினை மிக்க நெருப்பு சுட்டுவதக்க,
நைவரு(தல்)
(வி) 1. இரங்கு, pity, be compassionate
2. வருந்து, be distressed
3. இற்றுப்போ, become threadbare
1.
நல்காமையின் நைவர சாஅய் – புறம் 146/6
நீ அருளாமையால் கண்டார் இரங்க மெலிந்து
2.
ஐ_வாய்_அரவின் இடைப்பட்டு நைவாரா
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை – கலி 62/13,14
ஐந்து வாய்களைக் கொண்ட பாம்பின் பார்வையில் அகப்பட்டு வருந்தி,
மாசற்ற திங்கள் போன்று விளங்கும் முகத்தையுடையவரை
3.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து
நைவாரா ஆய_மகள் தோள் – கலி 103/65-67
“அஞ்சாதவராய்க் கொலைத்தொழிலையுடைய காளையை அடக்குபவரை அன்றி
உள்ளத்தில் உரம் இல்லாதவர்கள் அணைத்துக்கொள்வதற்கு அரியது, உயிரைத் துறந்து
நைந்துபோகும் நிலையிலிருந்தாலும், ஆயர் மகளிரின் தோள்கள்” என்றும்
நைவளம்
(பெ) பாலைநிலப் பண்வகை. a melody type of the desert-tract
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை – சிறு 36
நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை