தௌவு
(வி) குன்றிப்போ, lessen, decrease, shrink;
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று
கண்ணும் காட்சி தௌவின – நற் 397/2,3
நீண்ட பாலைநிலத்திடை அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளியிழந்து
கண்களும் காணும்திறம் குன்றிப்போயின.
இது தவ்வு என்றும் சில பதிப்புகளில் காணப்படுகிறது.