# 6 தோழி
கூற்று பத்து | # 6 தோழி கூற்று
பத்து |
# 51 | # 51 |
நீர் உறை கோழி
நீல சேவல் | நீரில் வாழும்
சம்பங்கோழியின் நீல நிறச் சேவலை |
கூர் உகிர்
பேடை வயாஅம் ஊர | கூர்மையான நகத்தைக்
கொண்ட அதன் பேடை வேட்கை மிகுதியால் நினைக்கும் ஊரனே! |
புளிங்காய்
வேட்கைத்து அன்று நின் | புளியங்காய்க்கு
ஆசைப்பட்டது போன்றது அல்ல, உன்னுடைய |
மலர்ந்த மார்பு
இவள் வயாஅ நோய்க்கே | அகன்ற மார்பானது
இவளின் வேட்கை நோய்க்கு – |
| |
# 52 | # 52 |
வயலை செம் கொடி
பிணையல் தைஇ | வயலையின் சிவந்த
கொடியைப் பிணைத்து மாலையாகக் கட்டியதால் |
செ விரல்
சிவந்த சே அரி மழை கண் | சிவந்த இவளின்
விரல்கள் மேலும் சிவந்துபோனவளும், சிவந்த வரிகளைக் கொண்ட குளிர்ந்த கண்களையும், |
செ வாய்
குறு_மகள் இனைய | சிவந்த வாயையும்
உடையவளுமான இந்த இளைய மகள், இவ்வாறு அழுதழுது நிற்க |
எ வாய்
முன்னின்று மகிழ்ந நின் தேரே | எவ்விடத்திற்குப் போக
முனைந்ததோ, தலைவனே! உனது தேர்? |
| |
# 53 | # 53 |
துறை எவன்
அணங்கும் யாம் உற்ற நோயே | இந்த நீர்த்துறையின்
தெய்வம் எதற்காக என்னை வருத்தப்போகிறது? நான் உற்ற நோய்க்குக் காரணம், |
சிறை அழி புது
புனல் பாய்ந்து என கலங்கி | தடுப்புகளை
உடைத்துக்கொண்டு புதிய நீர்ப்பெருக்கு பாய்வதால் கலங்கிப்போய் |
கழனி தாமரை
மலரும் | கழனியில் உள்ள தாமரை
மலரும் |
பழன ஊர நீ உற்ற
சூளே | நீர்நிலைகளையுடைய
ஊரனே! நீ கூறிய பொய்யான வாக்குறுதிகளே! |
| |
# 54 | # 54 |
திண் தேர்
தென்னவன் நன் நாட்டு உள்ளதை | திண்மையான தேரினையுடைய
பாண்டியனின் நல்ல நாட்டில் உள்ள |
வேனில் ஆயினும்
தண் புனல் ஒழுகும் | கோடைக் காலத்திலும்
குளிர்ந்த நீர் வழிந்தோடும் |
தேனூர் அன்ன
இவள் தெரி வளை நெகிழ | தேனூரைப் போன்ற இவளின்
தெரிந்தெடுத்த வளையல்கள் கழன்றுபோகுமாறு |
ஊரின் ஊரனை நீ
தர வந்த | ஊரிலிருந்தும்
சேரியில் வாழும் பெருமானே! உன்னால் தேடிக்கொள்ளப்பட்டு வந்த |
பஞ்சாய் கோதை
மகளிர்க்கு | பஞ்சாய்க் கோரை
மாலையணிந்த மகளிர்க்காக |
அஞ்சுவல் அம்ம
அ முறை வரினே | அஞ்சுகிறேன், என்னுடைய
அந்த நிலை வருமே என்று – |
| |
# 55 | # 55 |
கரும்பின்
எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் | கரும்பினைப் பிழியும்
எந்திரமானது களிறு பிளிறும் குரலுக்கு எதிராக ஒலிக்கும் |
தேர் வண்
கோமான் தேனூர் அன்ன இவள் | தேரினையும்,
வள்ளண்மையையும் கொண்ட பாண்டியனின் தேனூரைப் போன்ற இவளின் |
நல் அணி நயந்து
நீ துறத்தலின் | நல்ல அழகை விரும்பிப்
பாராட்டிப் பின்னர் நீ இவளைத் துறந்து செல்வதால் |
பல்லோர் அறிய
பசந்தன்று நுதலே | பலரும்
அறியும்படியாகப் பசந்துபோனது இவளின் நெற்றி. |
| |
# 56 | # 56 |
பகல் கொள்
விளக்கோடு இரா நாள் அறியா | பகலாக எரியும்
விளக்குகளால், இரவுக்காலம் என்பதையே அறியாத |
வெல் போர்
சோழர் ஆமூர் அன்ன இவள் | வெல்கின்ற போரையுடைய
சோழரின் ஆமூரைப் போன்ற, இவளின் |
நலம் பெறு
சுடர் நுதல் தேம்ப | அழகு பெற்ற ஒளிவிடும்
நெற்றி வாடிப்போக, |
எவன் பயம்
செய்யும் நீ தேற்றிய மொழியே | என்ன பயனைத் தரும் நீ
ஆறுதலாகக் கூறும் பொய்மொழிகள்? |
| |
# 57 | # 57 |
பகலின்
தோன்றும் பல் கதிர் தீயின் | பகலைப் போலத் தோன்றும்
பல கதிர்களையுடைய வேள்வித்தீயையும், |
ஆம்பல் அம்
செறுவின் தேனூர் அன்ன | ஆம்பல் மலர்கள் உள்ள
கொண்ட வயல்களையும் கொண்ட தேனூரைப் போல |
இவள் நலம்
புலம்ப பிரிய | இவளின் பெண்மை
நலத்தைத் தனிமையில் வாடவிட்டுப் பிரிந்துசெல்ல |
அனை நலம்
உடையளோ மகிழ்ந நின் பெண்டே | அந்த அளவுக்குப்
பெருநலம் உடையவளோ, தலைவனே! உன் பரத்தை? |
| |
# 58 | # 58 |
விண்டு அன்ன
வெண்ணெல் போர்வின் | மலை போலக் குவித்த
வெண்ணெல் அறுத்த கதிர்க்குவியல்களையும், |
கைவண் விராஅன்
இருப்பை அன்ன | கொடைத்தன்மையிலும்
சிறந்த விரான் என்பானின் இருப்பை நகரைப் போன்ற |
இவள் அணங்கு
உற்றனை போறி | இவள்மீது காதல்வேட்கை
பெருகித் துன்பப்பட்டாய் போலும்! |
பிறர்க்கும்
அனையையால் வாழி நீயே | பிற மகளிர் மீதும் நீ
அவ்வாறே இருக்கிறாய், வாழ்க நீ. |
| |
# 59 | # 59 |
கேட்டிசின்
வாழியோ மகிழ்ந ஆற்று_உற | கேட்பாயாக! வாழ்க
தலைவனே! ஆறுதலாக |
மையல்
நெஞ்சிற்கு எவ்வம் தீர | உனது மயக்கங்கொண்ட
நெஞ்சிற்கு, அதன் துன்பமெல்லாம் தீர, |
நினக்கு
மருந்து ஆகிய யான் இனி | இவளை உன்னிடம்
சந்திக்கவைத்து, உனக்கு மருந்தாக அமைந்த நான், இப்போது |
இவட்கு மருந்து
அன்மை நோம் என் நெஞ்சே | உன்னைப்
பிரிந்துவாடும் இவளுக்கு மருந்தாக இருக்கமுடியாததை எண்ணி நோகின்றது என் நெஞ்சம். |
| |
# 60 | # 60 |
பழன கம்புள்
பயிர் பெடை அகவும் | நீர்நிலைகளில் வாழும்
சம்பங்கோழி, விருப்பத்தோடு தன்னை அழைக்கும் தன் பெடையை நோக்கிக் கூவுகின்ற |
கழனி ஊர நின்
மொழிவல் என்றும் | வயல்வெளிகளைக் கொண்ட
ஊரனே! உன்னை ஒன்று கேட்பேன். எப்பொழுதும் |
துஞ்சு மனை
நெடு நகர் வருதி | வீட்டிலுள்ளோர்
தூங்கிக்கொண்டிருக்கும் பெரிய இல்லத்திற்கு வருகிறாய்; |
அஞ்சாயோ இவள்
தந்தை கை வேலே | அஞ்சமாட்டாயோ, இவளின்
தந்தையின் கையிலுள்ள வேலுக்கு? |
| |
<=””
r1b=”” style=”box-sizing: border-box;”> | <=””
r1b=”” style=”box-sizing: border-box;”> |
# 61 | # 61 |
நறு வடி
மாஅத்து விளைந்து உகு தீம் பழம் | மணமுள்ள
வடுக்களைக்கொண்ட மாமரத்தில் விளைந்து கனிந்து கீழே விழுகின்ற இனிய பழம் |
நெடு நீர்
பொய்கை துடுமென விழூஉம் | ஆழமான நீரையுடைய
பொய்கையில் துடும் என்று விழுகின்ற, |
கைவண் மத்தி
கழாஅர் அன்ன | வள்ளண்மை உள்ள மத்தி
என்பானின் கழார் என்னும் ஊரைப் போன்ற |
நல்லோர்
நல்லோர் நாடி | நல்ல நல்ல பரத்தையரைத்
தேடி |
வதுவை அயர
விரும்புதி நீயே | மணம் செய்துகொள்ள
விரும்புகின்றாய் நீ. |
| |
# 62 | # 62 |
இந்திர விழவின்
பூவின் அன்ன | இந்திர விழாவில்
கூடுவதைப் போன்று, பூவைப் போன்ற, |
புன் தலை பேடை
வரி நிழல் அகவும் | புல்லிய தலையைக் கொண்ட
பெண்மயில் வரிவரியான நிழலின்கீழிருந்து அகவுகின்ற |
இ ஊர் மங்கையர்
தொகுத்து இனி | இந்த ஊரின் பரத்தை
மகளிரை ஒன்றுசேர்த்துக்கொண்டு இனிமேல் |
எ ஊர்
நின்றன்று மகிழ்ந நின் தேரே | எந்த ஊரில் போய்
நிற்கப்போகிறது தலைவனே, உனது தேர்? |
| |
# 63 | # 63 |
பொய்கை பள்ளி
புலவு நாறு நீர்நாய் | பொய்கையில் வாழும்
புலவு நாற்றத்தையுடைய நீர்நாயானது |
வாளை நாள் இரை
பெறூஉம் ஊர | வாளை மீனை தன் அன்றைய
இரையாகப் பெறும் ஊரைச் சேர்ந்த தலைவனே! |
எம் நலம்
தொலைவது ஆயினும் | என்னுடைய அழகெல்லாம்
முற்றிலும் இல்லாமற்போனாலும் |
துன்னலம் பெரும
பிறர் தோய்ந்த மார்பே | நாடமாட்டோம் பெருமானே!
பிற மகளிர் அணைந்திருந்த மார்பினை. |
| |
# 64 | # 64 |
அலமரல் ஆயமோடு
அமர் துணை தழீஇ | தன்னைச் சுற்றிச்
சூழ்ந்தவராய் வரும் மகளிரோடு, விருப்பமுள்ள துணையைத் தழுவிக்கொண்டு |
நலம் மிகு புது
புனல் ஆட கண்டோர் | இன்பம் மிகுந்த புதிய
வெள்ளத்தில் நீ ஆடுவதைக் கண்டவர்கள் |
ஒருவரும்
இருவரும் அல்லர் | ஒருவரோ, இருவரோ அல்லர் |
பலரே தெய்ய எம்
மறையாதீமே | மிகப் பலராவர்,
என்னிடமிருந்து மறைக்கவேண்டாம். |
| |
# 65 | # 65 |
கரும்பு நடு
பாத்தியில் கலித்த ஆம்பல் | கரும்பு நட்ட
பாத்தியில் தானாகச் செழித்து வளர்ந்த ஆம்பல் மலரில் |
சுரும்பு பசி
களையும் பெரும் புனல் ஊர | வண்டினங்கள் தம்
பசியைப் போக்கிக்கொள்ளும் பெரிய நீர்வளத்தையுடைய ஊரனே! |
புதல்வனை ஈன்ற
எம் மேனி | அண்மையில் புதல்வனை
ஈன்ற என் மேனியைத் |
முயங்கன்மோ
தெய்ய நின் மார்பு சிதைப்பதுவே | தழுவவேண்டாம், அதனால்,
தீம்பால் பட்டு, உன் மார்பின் அழகு குலைந்துபோகும். |
| |
# 66 | # 66 |
உடலினேன்
அல்லேன் பொய்யாது உரைமோ | கோபங்கொள்ளமாட்டேன்,
பொய்சொல்லாமல் கூறு, |
யார் அவள்
மகிழ்ந தானே தேரொடு | யார் அவள் தலைவனே? நீ
தானாகத் தேருடன், |
தளர் நடை
புதல்வனை உள்ளி நின் | வீட்டில் தளர் நடை
போடும் உன் புதல்வனை எண்ணியவனாய், உன் |
வள மனை
வருதலும் வௌவியோளே | வளம் பொருந்திய
வீட்டுக்கு வந்தபோது பின்னாலேயே வந்து உன்னைப் பற்றிக்கொண்டு போனவள். |
| |
# 67 | # 67 |
மடவள் அம்ம நீ
இனி கொண்டோளே | அறியாமையுடையவள், நீ
இப்பொழுது கொண்டிருப்பவள்; |
தன்னொடு நிகரா
என்னொடு நிகரி | தன்னோடு ஒப்பிடமுடியாத
என்னைத் தனக்கு ஒப்பாகக் கூறிக்கொண்டு |
பெரு நலம்
தருக்கும் என்ப விரி மலர் | தன்னுடைய பெண்மைநலம்
பெரிது என்று பெருமைபேசிக்கொண்டிருக்கிறாள் என்கிறார்கள்; மலர்ந்த மலரில் |
தாது உண்
வண்டினும் பலரே | பூந்தாதுக்களை உண்ணும்
வண்டுகளைக் காட்டிலும் பலர் இருக்கிறார்கள், |
ஓதி ஒண் நுதல்
பசப்பித்தோரே | கூந்தல் தவழும்,
ஒளிவிடும் நெற்றியைப் பசந்துபோகச் செய்பவர்கள் – |
| |
# 68 | # 68 |
கன்னி விடியல்
கணை கால் ஆம்பல் | உதயத்திற்கு முற்பட்ட
அதிகாலை வேளையில் திரண்ட தண்டினையுடைய ஆம்பல் |
தாமரை போல
மலரும் ஊர | தாமரையைப் போல மலரும்
ஊரினைச் சேர்ந்த தலைவனே! |
பேணாளோ நின்
பெண்டே | அடக்கமாய்
இருக்கமாட்டாளோ உன் காதற்பரத்தை? |
யான் தன்
அடக்கவும் தான் அடங்கலளே | நானே என்னை
அடக்கிக்கொண்டிருக்கும்போது, அவள் அடங்காமல் என்னைப் பழித்துக் கூறுகிறாள். |
| |
# 69 | # 69 |
கண்டனெம்
அல்லமோ மகிழ்ந நின் பெண்டே | நேராகவே
பார்த்துவிட்டேன் தலைவனே! உன் காதற் பரத்தையை; |
பலர் ஆடு
பெரும் துறை மலரொடு வந்த | பலரும் நீராடும் பெரிய
நீர்த்துறையில் மலர்களை அடித்துக்கொண்டு வந்த |
தண் புனல்
வண்டல் உய்த்து என | குளிர்ந்த வெள்ளநீர்,
தன் மணல்வீட்டை அழித்துவிட்டதாகத் |
உண்கண் சிவப்ப
அழுது நின்றோளே | தன் மையுண்ட கண்கள்
சிவந்துபோகும்படி அழுதுகொண்டிருந்தாள். |
| |
# 70 | # 70 |
பழன பன் மீன்
அருந்த நாரை | நீர்நிலைகளிலுள்ள
பலவான மீன்களை உண்ட நாரை |
கழனி மருதின்
சென்னி சேக்கும் | வயல்வெளியிலுள்ள
மருதமரத்தின் உச்சியில் சென்று தங்கும் |
மா நீர் பொய்கை
யாணர் ஊர | மிக்க நீரையுடைய
பொய்கையினையும், புதுவருவாயையும் உடைய ஊரனே! |
தூயர் நறியர்
நின் பெண்டிர் | தூய்மையும், நறுமணமும்
கொண்டவர் உன் காதற்பரத்தையர், |
பேஎய் அனையம்
யாம் சேய் பயந்தனமே | பேயைப்
போன்றவளாகிவிட்டேன் நான், ஒரு சேயைப் பெற்றதால். |
| |
# 8 புனலாட்டு
பத்து | # 8 புனலாட்டு பத்து |
# 71 | # 71 |
சூது ஆர்
குறும் தொடி சூர் அமை நுடக்கத்து | வஞ்சனை நிறைந்தவளும்,
குறிய வளையல்களை அணிந்தவளும், அஞ்சும்படியான அசைவுகளையுடையவளுமான |
நின் வெம்
காதலி தழீஇ நெருநை | உனது
விருப்பத்திற்குரிய காதலியைத் தழுவியவாறு நேற்று |
ஆடினை என்ப
புனலே அலரே | மகிழ்ந்தாடியிருக்கிறாய்
என்கிறார்கள் ஆற்றுவெள்ளத்தில், இதனால் எழுந்த பழிச்சொற்களை |
மறைத்தல்
ஒல்லுமோ மகிழ்ந | மறைத்துவிட முடியுமா?
தலைவனே! |
புதைத்தல்
ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே | புதைத்துவிட முடியுமா
ஞாயிற்றின் ஒளியை? |
| |
# 72 | # 72 |
வயல் மலர்
ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை | வயலில் மலர்ந்த ஆம்பல்
மலரால் தொடுக்கப்பட்டு மூட்டுவாய் அமைந்த அசைகின்ற தழையினையும், |
திதலை அல்குல்
துயல்வரும் கூந்தல் | தேமல் படர்ந்த
அல்குலில் அசைந்தாடும் கூந்தலையும், |
குவளை உண்கண்
ஏஎர் மெல் இயல் | குவளை போன்ற மையுண்ட
கண்களையும் அழகும் மென்மையும் பொருந்திய இயல்பினையும் உடைய தலைவி |
மலர் ஆர் மலிர்
நிறை வந்து என | மலர்களைச்
சுமந்துகொண்டு பெருவெள்ளம் வந்தபோது |
புனல் ஆடு
புணர் துணை ஆயினள் எமக்கே | அந்தப் புனலில்
விளையாடுகையில் தழுவி விளையாடும் துணையாக இருந்தாள் எனக்கு. |
| |
# 73 | # 73 |
வண்ண ஒண் தழை
நுடங்க வால் இழை | நிறமமைந்த ஒளியையுடைய
தழையுடை அசையும்படி, தூய அணிகலன்களையும் |
ஒண் நுதல்
அரிவை பண்ணை பாய்ந்து என | ஒளிபொருந்திய
நெற்றியையும் உடைய தலைவி, நீர்விளையாட்டு ஆடினபோது |
கள் நறும்
குவளை நாறி | தேனையுடைய மணங்கமழும்
குவளை மலரின் நறுமணமே கமழ்ந்து |
தண்ணென்றிசினே
பெரும் துறை புனலே | மிகவும்
குளிர்ச்சியுடையதாயிற்று பெரிய துறையின் நீர்முழுதும். |
| |
# 74 | # 74 |
விசும்பு இழி
தோகை சீர் போன்றிசினே | வானத்திலிருந்து
இறங்கும் மயிலின் தோகை அழகைப் போல இருந்தது |
பசும்_பொன்
அவிர் இழை பைய நிழற்ற | பைம்பொன்னாலான
ஒளிவிடும் அணிகலன்கள் மெல்லென ஒளிவீச, |
கரை சேர்
மருதம் ஏறி | கரையைச் சேர்ந்த
மருதமரத்தில் ஏறி, |
பண்ணை பாய்வோள்
தண் நறும் கதுப்பே | நீருக்குள் பாய்பவளின்
குளிர்ந்த நறிய கூந்தல். |
| |
# 75 | # 75 |
பலர் இவண்
ஒவ்வாய் மகிழ்ந அதனால் | (கண்டவர்)பலர், இங்கு
ஒத்துக்கொள்ளமாட்டாய், அதனால் |
அலர்
தொடங்கின்றால் ஊரே மலர | பழிச்சொற்களைப்
பேசத்தொடங்கிவிட்டது ஊர், மலர்களையுடைய |
தொல் நிலை
மருதத்து பெரும் துறை | நெடுங்காலம் நிற்கும்
மருதமரங்களைக் கொண்ட பெரிய துறையில் |
நின்னோடு
ஆடினள் தண் புனல் அதுவே | உன்னோடு ஒருத்தி
நீர்விளையாட்டு ஆடினாள் குளிர்ந்த நீர்ப்பெருக்கில், என்பதனைக் – |
| |
# 76 | # 76 |
பஞ்சாய்
கூந்தல் பசு மலர் சுணங்கின் | பஞ்சாய்க் கோரை போன்ற
கூந்தலையும், புதிய மலர் போன்ற தேமலையும் கொண்டு, |
தண் புனல் ஆடி
தன் நலம் மேம்பட்டனள் | குளிர்ந்த
நீர்ப்பெருக்கில் ஆடித் தன்னுடைய பெண்மை நலத்தில் மேன்மையுற்றாள் |
ஒண் தொடி
மடவரால் நின்னோடு | ஒளிரும் வளையல்களையும்
இளைமையையும் கொண்ட அவள், உன்னுடன் – |
அந்தர_மகளிர்க்கு
தெய்வமும் போன்றே | வானவர் மகளிர்க்குத்
தெய்வமே போன்று – |
| |
# 77 | # 77 |
அம்ம வாழியோ
மகிழ்ந நின் மொழிவல் | வாழ்க தலைவனே! உனக்கு
ஒன்று சொல்வேன்! |
பேர் ஊர் அலர்
எழ நீர் அலை கலங்கி | இந்தப் பெரிய ஊரில்
நம்மைப்பற்றிய பேச்சு எழும்படியாக, நீர் அலைத்தலால் கலங்கி |
நின்னொடு தண்
புனல் ஆடுதும் | உன்னுடன் குளிர்ந்த
நீர்ப்பெருக்கில் விளையாடுவேன்; |
எம்மோடு சென்மோ
செல்லல் நின் மனையே | என்னுடன் வா,
செல்லவேண்டாம் உன் வீட்டுக்கு. |
| |
# 78 | # 78 |
கதிர் இலை நெடு
வேல் கடு மான் கிள்ளி | ஒளியையுடைய இலை அமைந்த
நெடிய வேலையும், விரைந்து செல்லும் குதிரையையும் உடைய கிள்ளியின் |
மதில் கொல்
யானையின் கதழ்பு நெறி வந்த | பகைவரின் மதிலை
அழிக்கின்ற யானையைப் போல விரைவாகத் தன் வழியிலே வந்த |
சிறை அழி புது
புனல் ஆடுகம் | அணையை அழிக்கின்ற
புதிய நீர்ப்பெருக்கில் விளையாடலாம், |
எம்மொடு கொண்மோ
எம் தோள் புரை புணையே | என்னோடு சேர்ந்து
பற்றிக்கொள்வாயாக, எனது தோளைப் போன்ற தெப்பத்தை. |
| |
# 79 | # 79 |
புது புனல் ஆடி
அமர்த்த கண்ணள் | புதிய
நீர்ப்பெருக்கில் ஆடியதால் மாறுபட்டுத்தோன்றும் கண்களையுடையவள் |
யார் மகள் இவள்
என பற்றிய மகிழ்ந | யாருடைய மகள் இவள்
என்று கையைப் பற்றிய தலைவனே! |
யார் மகள்
ஆயினும் அறியாய் | இவள் யார் மகளாயினும்
நீ அறியமாட்டாய்! |
நீ யார் மகனை
எம் பற்றியோயே | நீ யாருடைய மகனோ? எம்
கையைப் பற்றியிருப்பவனே! |
| |
# 80 | # 80 |
புலக்குவேம்
அல்லேம் பொய்யாது உரைமோ | கோபித்துக்கொள்ளமாட்டேன்!
பொய்யில்லாமல் சொல்க! |
நல_தகு
மகளிர்க்கு தோள் துணை ஆகி | அழகு நலத்தில்
தகுதியுடைய மகளிர்க்கு உமது தோளைத் துணையாக ஆக்கி |
தலை பெயல் செம்
புனல் ஆடி | முதல் மழையில் வந்த
சிவந்த நீர்ப்பெருக்கில் ஆடி |
தவ நனி சிவந்தன
மகிழ்ந நின் கண்ணே | மிக மிகச்
சிவந்துபோயுள்ளன, தலைவனே! உனது கண்கள். |
| |
# 9 புலவி
விராய பத்து | # 9 புலவி விராய பத்து |
# 81 | # 81 |
குருகு உடைத்து
உண்ட வெள் அகட்டு யாமை | நாரை உடைத்து உண்டு
கழித்த வெள்ளை வயிற்றினைக் கொண்ட ஆமையின் தசையை |
அரி_பறை
வினைஞர் அல்கு மிசை கூட்டும் | அரித்து எழும் ஓசையைக்
கொண்ட பறையையுடைய உழவர்கள் தமக்கு வைத்துண்ணும் உணவாகக் கொண்டுச் செல்லும் |
மலர் அணி
வாயில் பொய்கை ஊர நீ | மலர்களால் அழகுபெற்ற
நீர்த்துறை அமைந்த பொய்கையை உடைய ஊரைச் சேர்ந்தவனே! நீ |
என்னை
நயந்தனென் என்றி நின் | என்னைப் பெரிதும்
விரும்புவதாகக் கூறுகிறாய்; உனது |
மனையோள்
கேட்கின் வருந்துவள் பெரிதே | மனைவி இதனைக் கேட்டால்
வருந்துவாள் மிகவும். |
| |
# 82 | # 82 |
வெகுண்டனள்
என்ப பாண நின் தலைமகள் | வெகுண்டாள் என்று
கூறுகின்றனர், பாணனே! உனது தலைவியாகிய பரத்தை, |
மகிழ்நன்
மார்பின் அவிழ் இணர் நறும் தார் | தலைவனது மார்பில் உள்ள
கட்டவிழ்ந்த பூங்கொத்துகளோடு கூடிய மணமுள்ள மாலையில் மொய்த்த |
தாது உண் பறவை
வந்து எம் | தேனுண்ணும் வண்டுகள்
வந்து எமது |
போது ஆர்
கூந்தல் இருந்தன எனவே | மலரும் நிலையிலுள்ள
மொட்டுக்கள் நிறைந்த என் கூந்தலிலும் இருந்தன என்பதற்கே! |
| |
# 83 | # 83 |
மணந்தனை
அருளாய் ஆயினும் பைபய | என்னை நீ மணந்தாய்,
ஆயினும் என்மீது அருள்செய்யவில்லை; மெல்ல மெல்ல |
தணந்தனை ஆகி
உய்ம்மோ நும் ஊர் | என்னைவிட்டுப்
பிரிந்தவனாகி வாழக்கடவாய்! உனது ஊரில் உள்ள |
ஒண் தொடி
முன்கை ஆயமும் | ஒளிவிடும் வளையல்களை
அணிந்த முன்கையையுடைய பரத்தை மகளிரெல்லாம் |
தண் துறை ஊரன்
பெண்டு எனப்படற்கே | குளிர்ந்த துறையையுடைய
ஊரனின் பெண்டுகள் என்று சொல்லப்படுவதற்காக – |
| |
# 84 | # 84 |
செவியின்
கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள் | காதால் கேட்டாலும்
பேச்சிழக்குமளவுக்குப் பெருஞ்சினங்கொள்வோள், |
கண்ணின் காணின்
என் ஆகுவள்-கொல் | கண்ணால் கண்டால் என்ன
ஆவாளோ? |
நறு வீ ஐம்பால்
மகளிர் ஆடும் | நறிய மலரணிந்த
கூந்தலையுடைய மகளிர் ஆடும் |
தைஇ தண் கயம்
போல | தைமாதத்துக் குளிர்ந்த
குளத்தைப் போன்று |
பலர் படிந்து
உண்ணும் நின் பரத்தை மார்பே | பலரும் தழுவிக்கிடந்து
நுகரும் உன் பரத்தமை அடையாளமுள்ள மார்பினை – |
| |
# 85 | # 85 |
வெண் நுதல்
கம்புள் அரி குரல் பேடை | வெண்மையான
நெற்றியையுடைய கம்புள் பறவையின் அரித்தெழும் குரலையுடைய பேடை |
தண் நறும்
பழனத்து கிளையோடு ஆலும் | குளிர்ந்த நறிய
நீர்நிலையில் தன் கிளைகளோடு மகிழ்ந்து ஆரவாரிக்கும் |
மறு இல் யாணர்
மலி கேழ் ஊர நீ | குறை சொல்லமுடியாத
புதுவருவாயை மிகுதியாகப் பொருந்திய ஊரனே! நீ |
சிறுவரின் இனைய
செய்தி | சிறுவரைப் போல இத்தகைய
செயல்களைச் செய்கிறாய்! |
நகாரோ பெரும
நின் கண்டிசினோரே | நகைக்கமாட்டார்களோ
பெருமானே! உன்னைக் கண்டவர்கள்? |
| |
# 86 | # 86 |
வெண் தலை
குருகின் மென் பறை விளி குரல் | வெண்மையான தலையையுடைய
நாரை மென்மையாகப் பறந்துகொண்டே அழைக்கும் குரலானது |
நீள் வயல்
நண்ணி இமிழும் ஊர | நீண்ட வயல்வெளியை
அடைந்து ஒலிக்கும் ஊரினைச் சேர்ந்த தலைவனே! |
எம் இவண்
நல்குதல் அரிது | எமக்கு இங்கு இன்பம்
நல்குதல் அரிது; |
நும் மனை
மடந்தையொடு தலைப்பெய்தீமே | உம்முடைய வீட்டுப்
பெண்ணோடே ஒன்றுசேர்ந்து இருப்பாயாக. |
| |
# 87 | # 87 |
பகன்றை கண்ணி
பல் ஆன் கோவலர் | பகன்றைப்பூ மாலையைத்
தலையில் சூடியவரும், பல பசுக்களை மேய்ப்பவருமான கோவலர்கள் |
கரும்பு குணிலா
மாங்கனி உதிர்க்கும் | தாம் கடித்துத்
தின்னும் கரும்புத் தட்டையைக் கொண்டு மாங்கனிகளை உதிர்க்கும் |
யாணர் ஊர நின்
மனையோள் | புதுவருவாயையுடைய
ஊரனே! உன் மனைவி |
யாரையும்
புலக்கும் எம்மை மற்று எவனோ | யாரையுமே சினந்து
பேசுவாள் – என்னை மட்டும் சும்மா விடுவாளா? |
| |
# 88 | # 88 |
வண் துறை
நயவரும் வள மலர் பொய்கை | வளம் நிரம்பிய
நீர்த்துறைகளில் யாவரும் விரும்பும் வளமையான மலர்கள் பூத்துள்ள பொய்கையின் |
தண் துறை ஊரனை
எவ்வை எம்_வயின் | தண்ணிய
நீர்த்துறையுள்ள ஊரைச் சேர்ந்தவனை, எமது தமக்கை என்னிடத்திற்கு |
வருதல்
வேண்டுதும் என்ப | வரவேண்டும் என்று
கூறுகிறாள்; |
ஒல்லேம் போல்
யாம் அது வேண்டுதுமே | அதனை
விரும்பமாட்டாதவள் போல் நான் அதனையே வேண்டுகிறேன். |
| |
# 89 | # 89 |
அம்ம வாழி பாண
எவ்வைக்கு | கேட்பாயாக! வாழ்க!
பாணனே! எம் தமக்கைக்கு |
எவன் பெரிது
அளிக்கும் என்ப பழனத்து | எதற்காகப் பெரிதும்
அருள்செய்கின்றான் என்கிறார்கள்? நீர்நிலைகளில் |
வண்டு தாது
ஊதும் ஊரன் | வண்டுகள் தேனுண்ணும்
ஊரைச் சேர்ந்த தலைவன் |
பெண்டு என
விரும்பின்று அவள் தன் பண்பே | மனைவி என்று அவளை
விரும்பியது அவளின் நற்பண்புகளுக்காகமட்டும்தான். |
| |
# 90 | # 90 |
மகிழ்நன் மாண்
குணம் வண்டு கொண்டன-கொல் | புதுப்புதுப் பெண்டிரை
நாடிச் செல்லும் தலைவனின் சிறந்த குணத்தை வண்டுகள் பற்றிக்கொண்டனவோ? |
வண்டின் மாண்
குணம் மகிழ்நன் கொண்டான்-கொல் | புதுப்புதுப்
மலர்களைத் தேடிச் செல்லும் வண்டுகளின் சிறந்த குணத்தைத் தலைவன் பற்றிக்கொண்டானோ? |
அன்னது ஆகலும்
அறியாள் | அவன் குணம்
அப்படிப்பட்டது என்பதனை அறியாள், |
எம்மொடு
புலக்கும் அவன் புதல்வன் தாயே | என்னோடு
கோபித்துக்கொள்ளும் அவனுடைய மகனின் தாய். |
| |
# 10 எருமை
பத்து | # 10 எருமை பத்து |
# 91 | # 91 |
நெறி மருப்பு
எருமை நீல இரும் போத்து | அலையலையாய்
வளைந்திருக்கும் கொம்பினையுடைய எருமையின் கரிய பெரிய கடாவானது |
வெறி மலர்
பொய்கை ஆம்பல் மயக்கும் | மணம் மிக்க
மலர்களையுடைய பொய்கையில் உள்ள ஆம்பலைச் சிதைத்தழிக்கும் |
கழனி ஊரன் மகள்
இவள் | வயல்வெளிகளையுடைய
ஊரைச் சேர்ந்தவனின் மகளான இவள் |
பழன வெதிரின்
கொடி பிணையலளே | நீர்நிலைகளின்
மூங்கிலான கரும்பின் நீண்டமைந்த மணமற்ற பூவினால் தொடுத்த மாலையையுடையவள். |
| |
# 92 | # 92 |
கரும் கோட்டு
எருமை செம் கண் புனிற்று ஆ | கரிய கொம்பினையுடைய
எருமையின் சிவந்த கண்ணையுடைய அண்மையில் ஈன்ற பெண்ணெருமை |
காதல்
குழவிக்கு ஊறு முலை மடுக்கும் | தன் அன்புக்குரிய
கன்றினுக்குப் பால் சுரக்கும் தன் முலையைத் தந்து ஊட்டிவிடும் |
நுந்தை நும்
ஊர் வருதும் | உனது தந்தை இருக்கும்
உன் ஊருக்கு வருகிறேன், |
ஒண் தொடி
மடந்தை நின்னை யாம் பெறினே | ஒளிவிடும் வளையல்களை
அணிந்த மடந்தையாகிய உன்னை நான் பெறுதல் கூடுமாயின். |
| |
# 93 | # 93 |
எருமை நல்
ஏற்று_இனம் மேயல் அருந்து என | எருமையின் நல்ல
கடாக்களின் கூட்டம் மேய்ந்து நிறைய உண்டுவிட்டதாக, |
பசு மோரோடமோடு
ஆம்பல் ஒல்லா | பசிய
செங்கருங்காலியோடு, ஆம்பலும் தேனுண்ண ஒவ்வாமல்போய்விட்டன; |
செய்த வினைய
மன்ற பல் பொழில் | இனி செய்யத்தக்க
செயலாகத் தேர்ந்து, பல பொழில்களிலும் |
தாது உண்
வெறுக்கைய ஆகி இவள் | தேனுண்ணுவதை
வெறுத்தனவாகி, இவளின் |
போது அவிழ்
முச்சி ஊதும் வண்டே | அரும்பாக இருந்து
அப்போதுதான் மலர்ந்த பூக்களுள்ள தலையுச்சியை மொய்க்கின்றன வண்டுக்கூட்டம். |
| |
# 94 | # 94 |
மள்ளர் அன்ன
தடம் கோட்டு எருமை | மள்ளரைப் போன்ற வலிய
பெரிய கொம்புகளையுடைய எருமை |
மகளிர் அன்ன
துணையோடு வதியும் | மகளிரைப் போன்ற
துணையோடு சேர்ந்து தங்கியிருக்கும் |
நிழல் முதிர்
இலஞ்சி பழனத்ததுவே | நிழல் செறிந்த
வாவியினைக் கொண்ட நீர்நிலையில் இருப்பதுவே |
கழனி தாமரை
மலரும் | வயல்வெளியில் தாமரை
மலர்ந்திருக்கும் |
கவின் பெறு
சுடர்_நுதல் தந்தை ஊரே | அழகுபெற்ற ஒளிவிடும்
நெற்றியையுடையவளின் தந்தையின் ஊர். |
| |
# 95 | # 95 |
கரும் கோட்டு
எருமை கயிறு பரிந்து அசைஇ | கரிய கொம்பினையுடைய
எருமை, தன்னைக் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக்கொண்டு சென்று, |
நெடும் கதிர்
நெல்லின் நாள் மேயல் ஆரும் | நீண்ட கதிர்களையுடைய
நெற்பயிரை அன்றைக்கு உணவாக மேய்ந்து வயிற்றை நிரப்பும் |
புனல் முற்று
ஊரன் பகலும் | நீர்வளம் சூழ்ந்த
ஊரைச் சேர்ந்த தலைவன், பகல்பொழுதிலும் |
படர் மலி அரு
நோய் செய்தனன் எமக்கே | படர்ந்து பெருகும்
தீராத நோயைச் செய்தான் எனக்கு. |
| |
# 96 | # 96 |
அணி நடை எருமை
ஆடிய அள்ளல் | அழகான நடையைக் கொண்ட
எருமை புரண்டெழுந்த சேற்றில் |
மணி நிற
நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் | மணி போன்ற நீல நிற
நெய்தல் ஆம்பலுடன் செழித்து வளரும் |
கழனி ஊரன் மகள்
இவள் | வயல்வெளியைக் கொண்ட
ஊரினைச் சேர்ந்தவனின் மகளான இவள் |
பழன ஊரன் பாயல்
இன் துணையே | நீர்நிலைகள் சார்ந்த
ஊரினைச் சேர்ந்தவனின் படுக்கைக்கு இனிய துணையாவாள். |
| |
# 97 | # 97 |
பகன்றை வான்
மலர் மிடைந்த கோட்டை | பகன்றையின் வெண்மையான
மலர்கள் சுற்றியிருந்த கொம்பினைக் |
கரும் தாள்
எருமை கன்று வெரூஉம் | கரிய கால்களையுடைய
எருமைக் கன்று கண்டு அஞ்சும் |
பொய்கை ஊரன்
மகள் இவள் | பொய்கை இருக்கும்
ஊரைச் சேர்ந்தவனின் மகளான இவள் |
பொய்கை
பூவினும் நறும் தண்ணியளே | அந்தப் பொய்கையில்
பூத்திருக்கும் பூவைக்காட்டிலும் குளிர்ச்சியும் நறுமணமும் கொண்டவள். |
| |
# 98 | # 98 |
தண் புனல்
ஆடும் தடம் கோட்டு எருமை | குளிர்ந்த புனலில்
நீராடிக் களிக்கும் பெரிய கொம்பினையுடைய எருமை |
திண் பிணி
அம்பியின் தோன்றும் ஊர | திண்ணிய பிணிப்புடன்
செய்யப்பட்ட தோணியைப் போலத் தோன்றும் ஊரினனே! |
ஒண் தொடி
மட_மகள் இவளினும் | ஒளிவிடும் வளையல்களை
அணிந்த இளமையான மகளான இவளைக் காட்டிலும் |
நுந்தையும்
யாயும் துடியரோ நின்னே | உன் தந்தையும் தாயும்
கடுமையானவர்களோ, உன்னிடத்தில். |
| |
# 99 | # 99 |
பழன பாகல்
முயிறு மூசு குடம்பை | நீர்நிலைகளை ஒட்டிப்
படர்ந்திருக்கும் பாகல் கொடியில், முசுற்றெறும்புகள் மொய்த்திருக்கும் கூட்டினை |
கழனி எருமை
கதிரொடு மயக்கும் | வயல்வெளிகளில் மேயும்
எருமை, நெற்கதிரோடு சேர்த்து உழப்பிவிடும், |
பூ கஞல் ஊரன்
மகள் இவள் | பூக்கள் நெருக்கமாய்
அமைந்துள்ள ஊரைச் சேர்ந்தவனின் மகளான இவள் |
நோய்க்கு
மருந்து ஆகிய பணை தோளோளே | என் காம நோய்க்கு
மருந்தாக அமையும் பெருத்த தோள்களையுடையவள். |
| |
# 100 | # 100 |
புனல் ஆடு
மகளிர் இட்ட ஒள் இழை | நீர்ப்பெருக்கில்
விளையாடும் பெண்கள் கழற்றி வைத்த ஒளிரும் அணிகலன்கள் |
மணல் ஆடு
சிமையத்து எருமை கிளைக்கும் | மணல் பரந்து
மூடிக்கிடக்கும் உச்சியில் எருமை கிளைத்து வெளிப்படுத்தும் |
யாணர் ஊரன்
மகள் இவள் | புதுவருவாயையுடைய
ஊரைச் சேர்ந்தவனின் மகளான இவள் |
பாணர்
நரம்பினும் இன் கிளவியளே | பாணரின் யாழ்நரம்பு
எழுப்பும் இசையிலும் இனிய சொற்களையுடையவள். |
| |