#
201 குறிஞ்சி பரணர் | #
201 குறிஞ்சி பரணர் |
| |
மலை
உறை குறவன் காதல் மட_மகள் | மலையில்
வசிக்கும் குறவனின் அன்புக்குரிய இள மகள் |
பெறல்
அரும்-குரையள் அரும் கடி காப்பினள் | கிடைக்கமாட்டாதவள்,
கடும் காவலுக்குட்பட்டிருப்பவள், |
சொல்
எதிர் கொள்ளாள் இளையள் அனையோள் | உன்
சொல்லைப் புரிந்துகொள்ளாதவள், இளம்பருவத்தாள், அப்படிப்பட்டவளை |
உள்ளல்
கூடாது என்றோய் மற்றும் | நினைக்கக்கூடாது
என்கிற தோழனே! ஆனாலும், |
செ
வேர் பலவின் பயம் கெழு கொல்லி 5 | சிவந்த
வேர்ப்பலாவின் பழங்கள் நிறைந்த கொல்லிமலையின் |
தெய்வம்
காக்கும் தீது தீர் நெடும் கோட்டு | தெய்வம்
காக்கும் குற்றமற்ற உயர்ந்த உச்சிமலையில் |
அம்
வெள் அருவி குட வரை_அகத்து | அழகிய
வெள்ளைநிறத்த அருவி உள்ள மேற்கு மலையின் அகத்தே |
கால்
பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும் | காற்று
மோதிவீசினாலும், சீறும் பெருமழை ஓங்கியடித்தாலும் |
உரும்
உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும் | இடி
சினந்து அறைந்தாலும், தீங்குகள் பல நேர்ந்தாலும் |
பெரு
நிலம் கிளரினும் திரு நல உருவின் 10 | பெரிய
இந்த நிலம் நடுங்கி மேலே எழுந்தாலும், தன் அழகிய நல்ல வடிவம் |
மாயா
இயற்கை பாவையின் | கெடாத
தன்மையுள்ள கொல்லிப்பாவை போல |
போதல்
ஒல்லாள் என் நெஞ்சத்தானே | நீங்குவாள்
அல்லள் அவள் என்னை நெஞ்சைவிட்டு – |
| |
#
202 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ | #
202 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ |
| |
புலி
பொர சிவந்த புலால் அம் செம் கோட்டு | புலியுடன்
போரிட்டதால் சிவந்துபோன புலால் நாறும் அழகிய செம்மையான கொம்புகளில் |
ஒலி
பன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து | உண்டாயிருக்கும்
பலவான முத்துக்கள் ஒலிக்க, வலிமை மிக்கு, |
வன்
சுவல் பராரை முருக்கி கன்றொடு | கட்டாந்தரையான
மேட்டுநிலத்தில் உள்ள பருத்த அடியினைக் கொண்ட வேங்கையை முறித்து, கன்றோடு |
மட
பிடி தழீஇய தட கை வேழம் | தன்
இளைய பெண்யானைத் தழுவிக்கொண்ட நீண்ட கைகளையுடைய ஆண்யானை, |
தேன்
செய் பெரும் கிளை இரிய வேங்கை 5 | தேனைச்
செய்யும் பெரிய வண்டுக்கூட்டம் சிதறிப்பறந்தோட, வேங்கை மரத்தின் |
பொன்
புரை கவளம் புறந்தருபு ஊட்டும் | பொன்னைப்
போன்ற பூங்கொத்துக்களைக் கவளங்களாகப் பேணி ஊட்டும் |
மா
மலை விடர்_அகம் கவைஇ காண்வர | பெரிய
மலையின் பிளவிடங்களைத் தன்னகத்தே கொண்டு மிக்க அழகாகத் தோன்றுவதைக் |
கண்டிசின்
வாழியோ குறு_மகள் நுந்தை | காண்பாயாக!
வாழ்க சிறுபெண்ணே! உன் தந்தைக்குரிய, |
அறு_மீன்
பயந்த அறம் செய் திங்கள் | கார்த்திகை
மீன்களோடு கூடிய அறம்செய்வதற்கான முழுத்திங்கள் நாளில் |
செல்
சுடர் நெடும் கொடி போல 10 | வரிசையாகச்
செல்லும் சுடர்களைக் கொண்ட நீண்ட கொடி போன்ற விளக்குகளைப் போல |
பல்
பூ கோங்கம் அணிந்த காடே | பலவான
பூக்களைக் கொண்ட கோங்க மரங்கள் அழகுசெய்யும் காடு – |
| |
#
203 நெய்தல் உலோச்சனார் | #
203 நெய்தல் உலோச்சனார் |
| |
முழங்கு
திரை கொழீஇய மூரி எக்கர் | முழங்குகின்ற
கடலலைகள் கொழித்து உருவாக்கிய பெரிதான மணல்மேட்டில் உள்ள |
தடம்
தாள் தாழை முள் உடை நெடும் தோட்டு | பெரிதான
அடிப்பகுதியை உடைய தாழையின் முள்ளையுடைய நீண்ட தாள்களின் |
அக
மடல் பொதுளிய முகை முதிர் வான் பூ | உள்மடலில்
செழித்துத்தழைத்த மொட்டு முதிர்ந்த, தூய்மையான பொலிவுபெற்ற |
கோடு
வார்ந்து அன்ன வெண் பூ தாழை | சங்கினை
நீட்டிவைத்தது போன்ற, வெள்ளையான பூவைக்கொண்ட தாழையானது, |
எறி
திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு 5 | ஓங்கி
வீசும் அலைகள் மோதுவதால் சிலிர்த்து வாய்திறக்கத் தாது உதிர்ந்து |
சிறுகுடி
பாக்கத்து மறுகு புலா மறுக்கும் | சிறிதளவு
மக்கள் உள்ள கடற்கரை ஊரின் தெருவில் எழும் புலவுநாற்றத்தைப் போக்கும் |
மணம்
கமழ் கானல் இயைந்த நம் கேண்மை | மணம்
கமழ்கின்ற கடற்கடைச் சோலையில் ஒன்றிய நமது நட்பு |
ஒரு
நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது | ஒரு
நாள் பிரிந்தாலும் உயிரோடிருப்பது அரிது என்று கருதாமல், |
கதழ்
பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்க | விரைந்து
வரும் ஓட்டத்தையுடைய குதிரை பூட்டிய தேரின் வரவை அங்கு தடுத்துநிறுத்துமாறு |
செய்த
தன் தப்பல் அன்றியும் 10 | செய்த
தன் தவற்றோடு, |
உயவு
புணர்ந்தன்று இ அழுங்கல் ஊரே | அவரைக்
காணாத என் வருத்தத்திலும் சேர்ந்துகொள்கிறது இந்த இரக்கமுள்ள ஊர் – |
| |
#
204 குறிஞ்சி மள்ளனார் | #
204 குறிஞ்சி மள்ளனார் |
| |
தளிர்
சேர் தண் தழை தைஇ நுந்தை | தளிர்கள்
சேர்ந்த குளிர்ச்சியுள்ள தழையுடையை அணிந்து உனது தந்தையின் |
குளிர்
வாய் வியன் புனத்து எல் பட வருகோ | கிளிகடிகருவியால்
காக்கப்படும் அகன்ற தினைப்புனத்திற்கு ஞாயிறு தோன்றும் காலையில் வரவா? |
குறும்
சுனை குவளை அடைச்சி நாம் புணரிய | பறித்த
சுனைக் குவளை மலரைச் சூடி, நாம் முன்பு சேர்ந்திருந்த |
நறும்
தண் சாரல் ஆடுகம் வருகோ | நறிய
குளிர்ந்த மலைச்சாரலில் ஆடுவதற்கு வரவா? |
இன்
சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண 5 | உன்
இனிய மறுமொழியை விரும்பி வருந்திய என் மனம் மகிழுமாறு |
கூறு
இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என | கூறுவாயாக
இனி, மடந்தையே! உன் கூர்மையான பற்களுக்கிடையே ஊறும் அமுதத்தை உண்பேன் என்று |
யான்
தன் மொழிதலின் மொழி எதிர் வந்து | நான்
உனக்குச் சொல்ல, அதற்குப் பதிலாக |
தான்
செய் குறி நிலை இனிய கூறி | தான்
ஏற்படுத்திய குறியிடத்துக்கு வந்து இனிய மொழிகளைக் கூறி, |
ஏறு
பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு | ஆண்மானைப்
பிரியும் இளைய பெண்மானைப் போல நீங்கி |
உறு
கழை நிவப்பின் சிறுகுடி பெயரும் 10 | மிக்க
மூங்கில் உயர்ந்து நிற்கும் தன் சிறுகுடிக்குப் புறப்பட்டுச் செல்லும் |
கொடிச்சி
செல் புறம் நோக்கி | கொடிச்சியாகிய
தலைவி செல்லுகின்ற முதுகினைப் பார்த்து |
விடுத்த
நெஞ்சம் விடல் ஒல்லாதே | அவளைப்
போகவிட்ட என் நெஞ்சம் அவளை நினைத்தலை விடாது. |
| |
#
205 பாலை இளநாகனார் | #
205 பாலை இளநாகனார் |
| |
அருவி
ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து | அருவி
ஆரவாரிக்கும் பெரிய மலைகளின் அடுக்குகளில் |
ஆளி
நன் மான் வேட்டு எழு கோள் உகிர் | ஆளியாகிய
மிகவும் கொடிய விலங்கு வேட்டையாட எழுந்து, கொல்லவல்ல நகங்களையும் |
பூ
பொறி உழுவை தொலைச்சிய வை நுதி | அழகிய
பொறிகளையுமுடைய புலியைக் கொன்ற, கூரிய நுனியையும் |
ஏந்து
வெண் கோட்டு வய களிறு இழுக்கும் | ஏந்திய
வெண்மையான கொம்புகளையும் உடைய வலிமையான ஆண்யானையை இழுத்துச் செல்லும் |
துன்
அரும் கானம் என்னாய் நீயே 5 | நெருங்கமுடியாத
காட்டுவழி என்று கருதாமல், நீ |
குவளை
உண்கண் இவள் ஈண்டு ஒழிய | குவளை
மலர் போன்ற மையுண்ட கண்களையுடைய இவளை இங்கு விட்டுவிட்டு |
ஆள்வினைக்கு
அகறி ஆயின் இன்றொடு | பொருளீட்டச்
செல்வாயானால், இன்றோடே |
போயின்று-கொல்லோ
தானே படப்பை | போய்விடும்,
கொல்லையிலுள்ள |
கொடு
முள் ஈங்கை நெடு மா அம் தளிர் | வளைந்த
முள்ளையுடைய ஈங்கையின் நீண்ட கரிய அழகிய தளிரின் மீது |
நீர்
மலி கதழ் பெயல் தலைஇய 10 | மிக்க
நீருடன் விரைவாகப் பெய்யும் மழை பொழியும்போது உண்டாகும் |
ஆய்
நிறம் புரையும் இவள் மாமை கவினே | அழகிய
நிறம் போன்ற இவளின் மாமையின் அழகுதானே – |
| |
#
206 குறிஞ்சி ஐயூர் முடவனார் | #
206 குறிஞ்சி ஐயூர் முடவனார் |
| |
துய்
தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி | மெல்லிய
பஞ்சினைத் தலையிலே கொண்டு பிஞ்சுவிட்டிருக்கும் கதிர்கள் பால்பிடித்துத்
தலைசாய்க்கக் |
தோடு
அலை கொண்டன ஏனல் என்று | கதிரை
மூடிய தாள்கள் காற்றால் அசைகின்றன தினைப்பயிருக்கு என்று |
துறு
கல் மீமிசை குறுவன குழீஇ | குத்துப்பாறையின்
உச்சியில் கொத்துவதற்காகக் கூட்டங்கூடி |
செம்
வாய் பாசினம் கவரும் என்று அ வாய் | சிவந்த
வாயையுடைய பச்சைக்கிளிகள் கவர்ந்துகொண்டுபோகும் என்று அவ்விடத்தில் |
தட்டையும்
புடைத்தனை கவணையும் தொடுக்க என 5 | தட்டை
எனும் கருவியை அடித்து ஒலித்து, கவண்கல்லும் வீசுக என்று |
எந்தை
வந்து உரைத்தனன் ஆக அன்னையும் | எமது
தந்தை வந்து சொல்ல, எம் தாயும் |
நன்_நாள்
வேங்கையும் மலர்கமா இனி என | நல்ல
நாளைக் காட்டும் வேங்கை மரமும் மலர்க இனி என்று கூறி |
என்
முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி | என்
முகத்தை நோக்கினாள், எதற்கோ தோழி! |
செல்வாள்
என்று-கொல் செறிப்பல் என்று-கொல் | தினைப்புனங்காக்க
இவள் செல்வாள் என்றா? வீட்டுக்குள் இவளைப் பூட்டிவைக்கவேண்டும் என்றா? |
கல்
கெழு நாடன் கேண்மை 10 | மலை
பொருந்திய நாட்டுக்காரனோடு உள்ள நமது உறவை |
அறிந்தனள்-கொல்
அஃது அறிகலென் யானே | அறிந்துகொண்டாளோ?
அதனை அறிந்திலேன் நான் – |
| |
#
207 நெய்தல் | #
207 நெய்தல் ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் |
| |
கண்டல்
வேலி கழி சூழ் படப்பை | கண்டல்
மர வேலியைக் கொண்ட, கழி சூழ்ந்த தோட்டக்காலில் |
முண்டகம்
வேய்ந்த குறி இறை குரம்பை | முள்ளிச்
செடியால் வேயப்பெற்ற குறுகலாய் இறங்கும் கூரையையுடைய குடில்களையுடைய, |
கொழு
மீன் கொள்பவர் பாக்கம் கல்லென | நிறைய
மீன்களைக் கொள்பவர்கள் வசிக்கும் பாக்கம் முழுதும் ஆரவாரிக்க, |
நெடும்
தேர் பண்ணி வரல் ஆனாதே | நெடிய
தேரினைச் செய்துகொண்டு நம் காதலர் வருவது தடுக்கப்படமுடியாதது; |
குன்றத்து
அன்ன குவவு மணல் நீந்தி5 | மலை
போலக் குவிந்துகிடக்கும் மணல் மேடுகளைக் கடந்து |
வந்தனர்
பெயர்வர்-கொல் தாமே அல்கல் | வந்த
காதலர் வெறுங்கையாய்த் திரும்பத்தான் செய்வாரோ? (அவ்வாறாயின்) இரவில் |
இளையரும்
முதியரும் கிளையுடன் குழீஇ | இளையரும்
முதியரும் சுற்றத்தோடு கூடி |
கோள்
சுறா எறிந்து என சுருங்கிய நரம்பின் | கொல்ல
வல்ல சுறா கிழித்துவிட்டதாக, சுருங்கிய மெல்லிய நார்களைக் கொண்டு |
முடி
முதிர் பரதவர் மட மொழி குறு_மகள் | வலையை
முடிதலில் திறமைகொண்ட பரதவரின் மடப்பமுள்ள மொழியையுடைய இளமகள், |
வலையும்
தூண்டிலும் பற்றி பெரும் கால் 10 | வலையையும்
தூண்டிலையும் எடுத்துக்கொண்டு, பெரிய காற்றினால் |
திரை
எழு பௌவம் முன்னிய | அலைகள்
எழுகின்ற பெருங்கடலுக்குச் செல்லும் |
கொலை
வெம் சிறாஅர் பாற்பட்டனளே | கொலைத்
தொழிலையுடைய கொடிய சிறியவரிடம் அகப்பட்டுக்கொள்வாள் |
| |
#
208 பாலை நொச்சி நியமங்கிழார் | #
208 பாலை நொச்சி நியமங்கிழார் |
| |
விறல்
சால் விளங்கு இழை நெகிழ விம்மி | வெற்றி
பொருந்திய ஒளிரும் அணிகலன்கள் நெகிழும்படியாக விம்மி அழுது, |
அறல்
போல் தெண் மணி இடை முலை நனைப்ப | அரித்தோடும்
நீராய் தெளிந்த கண்ணீர்த்துளிகள் முலைகளினிடையே விழுந்து நனைக்க, |
விளிவு
இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து | சற்றும்
குறையாமல் மனமுருகி அழும் கண்ணுடனே பெரிதும் நிலைகெட்டு, |
எவன்
இனைபு வாடுதி சுடர் நுதல் குறு_மகள் | எதற்காக
வருந்தி வாடுகிறாய்? சுடர்விடும் நெற்றியையுடைய இளமங்கையே! |
செல்வார்
அல்லர் நம் காதலர் செலினும் 5 | உன்னைப்
பிரிந்து செல்லமாட்டார் நம் காதலர்; அவ்வாறு சென்றாலும் |
நோன்-மார்
அல்லர் நோயே மற்று அவர் | பொறுத்துக்கொள்ளமாட்டர்
பிரிவெனும் நோயை; மேலும் அவர் |
கொன்னும்
நம்பும்-குரையர் தாமே | மிகவும்
உன்மேல் விருப்பமுள்ளவர்தானே! |
சிறந்த
அன்பினர் சாயலும் உரியர் | உன்மேல்
சிறந்த அன்புகொண்டவர்; மென்மையானவர்; |
பிரிந்த
நம்மினும் இரங்கி அரும் பொருள் | அவரைப்
பிரிந்திருக்கும் நம்மைக்காட்டிலும் மிக வருந்தி, தேடிச் சென்ற அரும் பொருள் |
முடியாது
ஆயினும் வருவர் அதன்_தலை10 | ஈட்டுவது
முற்றுப்பெறாதாயினும் வந்துவிடுவார்; அதற்கு மேலும் |
இன்
துணை பிரிந்தோர் நாடி | இனிய
துணையைப் பிரிந்தவரை நாடிச் சென்று |
தருவது
போலும் இ பெரு மழை குரலே | அவரை
மீண்டும் கொணர்வது போல் உள்ளது இந்தப் பெரிய மழையின் முழக்கம். |
| |
#
209 குறிஞ்சி நொச்சி நியமங்கிழார் | #
209 குறிஞ்சி நொச்சி நியமங்கிழார் |
| |
மலை
இடம்படுத்து கோட்டிய கொல்லை | மலைப்பக்கத்தை
விசாலமாக்கி உருவாக்கிய கொல்லையில் |
தளி
பதம் பெற்ற கான் உழு குறவர் | மழையால்
ஈரப்பதம் பெற்ற காட்டை உழும் குறவர் |
சில
வித்து அகல இட்டு என பல விளைந்து | கொஞ்சம்
விதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக விதைக்க, பலபடியாக விளைந்து |
இறங்கு
குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் | கதிர்
சாய்ந்து விளங்கும் தினைப்புனத்தில் உள்ளவளான |
மழலை
அம் குறு_மகள் மிழலை அம் தீம் குரல் 5 | மழலைச்
சொல் கொண்ட அழகிய இளமகளின் பேச்சான இனிய குரலைக் |
கிளியும்
தாம் அறிபவ்வே எனக்கே | கிளிகளும்
தாம் அறியும்; எனக்கு அது |
படும்_கால்
பையுள் தீரும் படாஅது | செவியிற்படும்போது
காமநோய் தீரும்; அவ்வாறு படாமல் |
தவிரும்
காலை ஆயின் என் | ஒழிந்திருக்கும்
வேளை எனில் என் |
உயிரோடு
எல்லாம் உடன் வாங்கும்மே | உயிரோடு
மற்ற எல்லாவற்றையும் சேர்த்து எடுத்துக்கொள்ளும். |
| |
#
210 மருதம் மிளைகிழான் நல்வேட்டனார் | #
210 மருதம் மிளைகிழான் நல்வேட்டனார் |
| |
அரிகால்
மாறிய அம் கண் அகல் வயல் | அறுவடை
செய்துமுடித்த அழகிய இடம் அகன்ற வயலில் |
மறு
கால் உழுத ஈர செறுவின் | மீண்டும்
சாகுபடிக்காக உழுத ஈரமான வரப்புள்ள பாத்திகளில், |
வித்தொடு
சென்ற வட்டி பற்பல | விதைநெல்லோடு
சென்று, அந்தக் கூடையில் மிகுதியான |
மீனொடு
பெயரும் யாணர் ஊர | மீனைப்
பிடித்து எடுத்துக்கொண்டு திரும்பும் புதுவருவாயைக் கொண்ட ஊரினனே! |
நெடிய
மொழிதலும் கடிய ஊர்தலும் 5 | பெருமொழி
பேசுவதும், விரைவாகத் தேர்களில் வலம்வருவதும் |
செல்வம்
அன்று தன் செய்_வினை பயனே | செல்வம்
இல்லை; அது முன்செய்த நல்வினைப்பயன்; |
சான்றோர்
செல்வம் என்பது சேர்ந்தோர் | சான்றோர்
செல்வம் என்று கூறுவது, தம்மைச் சேர்ந்தோரின் |
புன்கண்
அஞ்சும் பண்பின் | துயரை
நினைத்து அச்சம்கொள்ளும் பண்பினைக்கொண்ட |
மென்
கள் செல்வம் செல்வம் என்பதுவே | பரிவுள்ளமாகிய
செல்வமே செல்வம் என்பது. |
| |
#
211 நெய்தல் கோட்டியூர் நல்லந்தையார் | #
211 நெய்தல் கோட்டியூர் நல்லந்தையார் |
| |
யார்க்கு
நொந்து உரைக்கோ யானே ஊர் கடல் | யாரிடத்தில்
வருந்தி உரைப்பேன் நான்! ஊர்ந்துவரும் கடல்நீர் |
ஓதம்
சென்ற உப்பு உடை செறுவில் | பொங்கிப்
பெருகி உள்ளே சென்ற உப்பினை உடைய வரப்புள்ள பாத்திகளையுடைய |
கொடும்
கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த | வளைந்த
கழியின் பக்கத்தில் இரையை வேட்டையாட எழுந்த |
கரும்
கால் குருகின் கோள் உய்ந்து போகிய | கரிய
காலைக் கொண்ட குருகின் குத்துக்குத் தப்பி ஓடிய |
முடங்கு
புற இறவின் மோவாய் ஏற்றை 5 | வளைந்த
முதுகினைக் கொண்ட இறா மீனின் நீண்ட மீசையையுடைய ஆண், |
எறி
திரை தொகுத்த எக்கர் நெடும் கோட்டு | மோதுகின்ற
அலைகள் தொகுத்துச் சேர்த்த மணல் மேட்டின் நீண்ட கரையில் |
துறு
கடல் தலைய தோடு பொதி தாழை | நெருங்கிய
கடலின் புறத்தில் தலைவைத்துள்ள இலைகள் பொதிந்த தாழையின் |
வண்டு
படு வான் போது வெரூஉம் | வண்டுகள்
மொய்க்கும் வெள்ளையான பூவைக் கண்டு அஞ்சிநடுங்கும் |
துறை
கெழு கொண்கன் துறந்தனன் எனவே | துறை
பொருந்திய கடற்கரைத்தலைவன் என்னைத் துறந்துசென்றான் என்று – |
| |
#
212 பாலை குடவாயில் கீரத்தனார் | #
212 பாலை குடவாயில் கீரத்தனார் |
| |
பார்வை
வேட்டுவன் படு வலை வெரீஇ | பழக்கிய
பறவைகளைக்கொண்டு வேடன் சிக்கவைக்க விரித்திருக்கும் வலையைக் கண்டு அஞ்சி |
நெடும்
கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி | நீண்ட
கால்களையுடைய கணந்துள் பறவை தனித்துக் கத்தும் தெளிந்த அழைப்பு |
சுரம்
செல் கோடியர் கதுமென இசைக்கும் | பாலைவழியில்
செல்லும் கூத்தர்கள் விரைவாக ஒலிக்கும் |
நரம்பொடு
கொள்ளும் அத்தத்து ஆங்கண் | யாழிசையோடு
சேர்ந்து ஒலிக்கும் அரிய நெறியில் |
கடும்
குரல் பம்பை கத நாய் வடுகர்5 | கடும்
ஒலியையுடைய பம்பை எனும் பறையையும் சினங்கொண்ட நாய்களையும் கொண்ட வடுகரின் |
நெடும்
பெரும் குன்றம் நீந்தி நம் வயின் | நீண்ட
பெரிய குன்றுகளைக் கடந்து நம்மிடம் |
வந்தனர்
வாழி தோழி கையதை | வந்துசேர்ந்தார்,
வாழ்க, தோழியே! நம் கையிலுள்ள |
செம்
பொன் கழல் தொடி நோக்கி மா மகன் | செம்
பொன்னாலான கழன்றுவிழும் தொடியைப் பார்த்து, சிறந்த மகன் |
கவவு
கொள் இன் குரல் கேள்-தொறும் | நம்மை
அணைத்துக்கொண்டு அழுகிற இனிய குரலை கேட்கும்பொழுதெல்லாம் |
அவவு
கொள் மனத்தேம் ஆகிய நமக்கே 10 | ஆசைகொள்ளுகிற
மனத்தை உடையவராகிய நம்மிடத்து – |
| |
#
213 குறிஞ்சி கச்சிப்பேட்டு பெருந்தச்சனார் | #
213 குறிஞ்சி கச்சிப்பேட்டு பெருந்தச்சனார் |
| |
அருவி
ஆர்க்கும் பெரு வரை நண்ணி | அருவிகள்
ஆரவாரிக்கும் பெரிய மலையை அடைந்து, |
கன்று
கால்யாத்த மன்ற பலவின் | கன்றுகள்
அடியில் கட்டப்பட்ட, மன்றத்தில் நிற்கும் பலாமரத்தின் |
வேர்
கொண்டு தூங்கும் கொழும் சுளை பெரும் பழம் | வேரில்
காய்த்துத் தொங்கும் கொழுத்த சுளைகளைக் கொண்ட பெரிய பழத்தை |
குழவி
சேதா மாந்தி அயலது | கன்றை
ஈன்ற சிவந்த பசு தின்று, பக்கத்திலிருக்கும் |
வேய்
பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் 5 | மூங்கில்கள்
நிறைந்த சிறிய மலையில் அரித்தோடிவரும் நீரைப் பருகும் |
பெரும்
கல் வேலி சிறுகுடி யாது என | பெரிய
பாறைகளை வேலியாகக் கொண்ட உமது ஊர் யாது என்று |
சொல்லவும்
சொல்லீர் ஆயின் கல்லென | கேட்கவும்
சொல்லமாட்டீர்; அதில்லையென்றால் கல்லென்ற ஓசையுடன் |
கருவி
மா மழை வீழ்ந்து என எழுந்த | முகில்கள்
திரண்டு சேர்ந்து பெரிய மழை வீழ்ந்ததாக, தழைத்தெழுந்த |
செம்
கேழ் ஆடிய செழும் குரல் சிறுதினை | சிவந்த
நிறம் கொண்ட செழுமையான கதிர்களைக் கொண்ட சிறுதினையைக் |
கொய்
புனம் காவலும் நுமதோ10 | கொய்கின்ற
கொல்லைக்காட்டுக் காவலும் உங்களுடையதோ? |
கோடு
ஏந்து அல்குல் நீள் தோளீரே | உயர்ந்து
ஏந்திய அல்குலையும் நீண்ட தோளினையும் உடைய மங்கையரே! |
| |
#
214 பாலை கருவூர் கோசனார் | #
214 பாலை கருவூர் கோசனார் |
| |
இசையும்
இன்பமும் ஈதலும் மூன்றும் | புகழும்,
இன்பமும், கொடையும் ஆகிய இம் மூன்றும் |
அசையுநர்
இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என | சோம்பி
இருப்போர்க்கு அரிதாகவே கிட்டுதலைச் செய்யும் என்று |
வினை_வயின்
பிரிந்த வேறுபடு கொள்கை | பொருளீட்டும்பொருட்டுப்
பிரிந்து சென்ற நம்மிடம் வேறுபட்ட கொள்கையுடனே, |
அரும்பு
அவிழ் அலரி சுரும்பு உண் பல் போது | “அரும்புகள்
அவிழ்ந்து மலராகிச் சுரும்புகள் தேனைப் பருகும் பலவான மலர்களை |
அணிய
வருதும் நின் மணி இரும் கதுப்பு என 5 | சூடுவதற்கு
வருவேன் உன் நீலமணி போன்ற கரிய கூந்தலில்” என்று |
எஞ்சா
வஞ்சினம் நெஞ்சு உண கூறி | குறைவற்ற
சூளுரைகளை என் மனம் கொள்ளுமாறு கூறி |
மை
சூழ் வெற்பின் மலை பல இறந்து | முகில்கள்
சூழ்ந்த சிகரங்களையுடைய மலைகள் பலவற்றைக் கடந்து |
செய்_பொருட்கு
அகன்ற செயிர் தீர் காதலர் | வருமானத்திற்காகச்
சென்ற குறைகள் அற்ற நம் காதலர் |
கேளார்-கொல்லோ
தோழி தோள | கேட்கமாட்டாரோ
தோழி? தோளிலிருக்கும் |
இலங்கு
வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி 10 | ஒளிரும்
வளைகள் நெகிழ்ந்துபோகுமாறு செய்த கலங்கிய துன்பத்தை எள்ளி |
நகுவது
போல மின்னி | நகையாடுவதுபோல
மின்னி |
ஆர்ப்பது
போலும் இ கார் பெயல் குரலே | ஆர்ப்பரிப்பது
போன்ற இந்தக் கார்காலத்து மழையின் இடிக்குரலை – |
| |
#
215 நெய்தல் மதுரை சுள்ளம் போதனார் | #
215 நெய்தல் மதுரை சுள்ளம் போதனார் |
| |
குண
கடல் இவர்ந்து குரூஉ கதிர் பரப்பி | கிழக்குக்
கடற்பரப்பில் ஊர்ந்து, நிறமுள்ள கதிர்களைப் பரப்பி, |
பகல்_கெழு_செல்வன்
குட மலை மறைய | பகல்பொழுதைச்
செய்த ஞாயிறு மேற்குமலையில் மறைய, |
புலம்பு
வந்து இறுத்த புன்கண் மாலை | தனிமைத்துயர்
வந்து தங்கிய துன்பமிக்க மாலைப் பொழுதை |
இலங்கு
வளை மகளிர் வியல் நகர் அயர | ஒளிரும்
வளையணிந்த மகளிர் அகன்ற நகர்களில் தொழுது வணங்க, |
மீன்
நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் 5 | மீனின்
கொழுப்பைச் சேர்த்து உருக்கிய ஊனாகிய நெய்யால் எரியும் ஒள்ளிய விளக்கொளியை |
நீல்
நிற பரப்பில் தயங்கு திரை உதைப்ப | நீல
நிறப் பரப்பில் அலையாடும் திரைகள் எற்றித்தள்ள, |
கரை
சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து | கரையை
ஒட்டி இருக்கும் கல்லென்ற ஒலிமிக்க பாக்கத்தில் |
இன்று
நீ இவணை ஆகி எம்மொடு | இன்று
நீ இங்கே இருந்தவனாகி எம்மோடு |
தங்கின்
எவனோ தெய்ய செம் கோல் | தங்கினால்
என்ன? செம்மையான கோலோடு பிணித்த |
கொடு
முடி அம் வலை பரிய போகிய 10 | வளைவான
முடிகளையுடைய அழகிய வலை கிழியும்படி போன |
கோள்
சுறா குறித்த முன்பொடு | கொலைவல்ல
சுறாவை விரட்டிக்கொண்டு செல்லும் வலிமையுடன், |
வேட்டம்
வாயாது எமர் வாரலரே | தாம்
மேற்கொண்ட வேட்டை வாய்க்காமல் எம் சுற்றத்தார் திரும்ப வரமாட்டார். |
| |
#
216 மருதம் மதுரை மருதன் இளநாகனார் | #
216 மருதம் மதுரை மருதன் இளநாகனார் |
| |
துனி
தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும் | ஊடலைப்
போக்கிக் கூடலுடன் பொருந்தி என்னை நெருங்காராயினும், |
இனிதே
காணுநர் காண்பு_உழி வாழ்தல் | இனியதே,
காணவேண்டியவரைக் கண்டவாறு வாழ்தல்; |
கண்
உறு விழுமம் கை போல் உதவி | கண்
பெற்ற துன்பத்தைக் கை போலச் சென்று உதவி |
நம்
உறு துயரம் களையார் ஆயினும் | நாம்
படுகின்ற துயரத்தைக் களையாராயினும், |
இன்னாது
அன்றே அவர் இல் ஊரே 5 | இனிமை
இல்லாதது அவர் இல்லாத ஊர்; |
எரி
மருள் வேங்கை கடவுள் காக்கும் | தீக்கொழுந்து
போன்ற பூக்களைக் கொண்ட வேங்கை மரத்தில் உறையும் கடவுள் காக்கும், |
குருகு
ஆர் கழனியின் இதணத்து ஆங்கண் | குருகுகள்
ஆரவாரிக்கின்ற வயலின் காவல்பரணின் மேல் |
ஏதிலாளன்
கவலை கவற்ற | அயலான்
ஒருவன் ஏற்படுத்திய கவலை உள்ளத்தை வருத்த, |
ஒரு
முலை அறுத்த திருமாவுண்ணி | ஒரு
முலையை அறுத்த திருமாவுண்ணியின் கதையைக் |
கேட்டோர்
அனையர் ஆயினும் 10 | கேட்டவர்கள்
அத் தன்மையராக ஆயினும் |
வேட்டோர்
அல்லது பிறர் இன்னாரே | நாம்
விரும்புவோரைத் தவிர பிறர் நமக்கு இன்னாதரே ஆவர். |
| |
#
217 குறிஞ்சி கபிலர் | #
217 குறிஞ்சி கபிலர் |
| |
இசை
பட வாழ்பவர் செல்வம் போல | புகழ்பட
வாழ்பவரின் செல்வம் பொலிவுற்று விளங்குவது போல, |
காண்-தொறும்
பொலியும் கதழ் வாய் வேழம் | காணுந்தோறும்
பொலிவுற்று விளங்கும், விரைவான செயற்பாடு வாய்க்கப்பெற்ற யானை |
இரும்
கேழ் வய புலி வெரீஇ அயலது | கரிய
நிறமுள்ள வலிமையான புலியை வெருட்டி ஓடச் செய்து, அருகிலிருக்கும் |
கரும்
கால் வேங்கை ஊறுபட மறலி | கரிய
அடிமரத்தைக் கொண்ட வேங்கை மரம் சிதையுமாறு முறித்துத்தள்ளி |
பெரும்
சினம் தணியும் குன்ற நாடன்5 | தன்னுடைய
பெரும் கோபத்தைத் தணித்துக்கொள்ளும் குன்றுகளையுடைய நாட்டினன், |
நனி
பெரிது இனியன் ஆயினும் துனி படர்ந்து | மிகப்பெரிதும்
இனியவனாயினும், நம்மைவிட்டுச் சென்ற துயரம் மேற்கொண்டு |
ஊடல்
உறுவேன் தோழி நீடு | ஊடல்
கொள்வேன் தோழி! நெடுநாளைய |
புலம்பு
சேண் அகல நீக்கி | தனிமைத்
துயரத்தை வெகுதொலைவுக்கு அகன்று போகச் செய்து, |
புலவி
உணர்த்தல் வன்மையானே | என்
மனப்பிணக்கைப் போக்கப் பணிவுடன் உணர்த்தும் திறன்கொண்டவன் அவன் என்பதால் – |
| |
#
218 நெய்தல் காவிதி கீரங்கண்ணனார் | #
218 நெய்தல் காவிதி கீரங்கண்ணனார் |
| |
ஞாயிறு
ஞான்று கதிர் மழுங்கின்றே | ஞாயிறு
மேற்கு அடிவானத்தில் தொங்கியவாறு தன் கதிர்கள் மழுங்கிப்போயிற்று; |
எல்லியும்
பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே | இரவும்
பூ வாடிய கொடியைப் போல ஞாயிற்றை இழந்து தனிமைத் துயரடைந்தது; |
வாவலும்
வயின்-தொறும் பறக்கும் சேவலும் | வௌவாலும்
இடங்கள்தோறும் பறந்து திரியலாயின; ஆந்தைச் சேவலும் |
நகை
வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும் | மகிழ்ச்சி
மிகப்பெற்று, தனது பேடை நகுவதுபோல கூவுந்தோறும் அதனை அழைக்கும்; |
ஆயா
காதலொடு அதர் பட தெளித்தோர் 5 | குறையாத
காதலோடு முறைமையுடன் நம்மைத் தேற்றிய காதலர் |
கூறிய
பருவம் கழிந்தன்று பாரிய | கூறிய
பருவமும் கழிந்துகொண்டிருக்கிறது; நிழல் நீண்டு பரவிய |
பராரை
வேம்பின் படு சினை இருந்த | பருத்த
அடியினைக் கொண்ட வேம்பின் பெரிய கிளைகளிருந்த |
குராஅல்
கூகையும் இராஅ இசைக்கும் | கபில
நிறங்கொண்ட கூகையும் இரவில் ஒலியெழுப்பும்; |
ஆனா
நோய் அட வருந்தி இன்னும் | குன்றாத
காதல் நோய் வருத்துவதால் வருந்தி, இன்னும் |
தமியேன்
கேட்குவென்-கொல்லோ 10 | தனித்திருக்கும்
நான் கேட்பேனோ? |
பரியரை
பெண்ணை அன்றில் குரலே | பருத்த
அடியைக் கொண்ட பனைமரத்திலிருந்து கூவும் அன்றிலின் குரலை – |
| |
#
219 நெய்தல் தாயங்கண்ணனார் | #
219 நெய்தல் தாயங்கண்ணனார் |
| |
கண்ணும்
தோளும் தண் நறும் கதுப்பும் | கண்ணும்
தோளும் குளிர்ந்த மணம்வீசும் கூந்தலும் |
பழ
நலம் இழந்து பசலை பாய | தம்முடைய
பழைய நலத்தை இழந்து நிறம் மங்கி வெளுத்துப்போக, |
இன்
உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம் | இனிய
உயிர் பிரிந்துபோவதாயினும், எவ்வளவேனும் |
புலவேன்
வாழி தோழி சிறு கால் | பிணக்குக்கொள்ளமாட்டேன்
வாழ்க தோழி! சிறிய காலையுடைய |
அலவனொடு
பெயரும் புலவு திரை நளி கடல் 5 | நண்டுகளை
இழுத்துக்கொண்டு செல்லும் புலால் நாறும் அலைகளைக் கொண்ட பெரிய கடலில் |
பெரு
மீன் கொள்ளும் சிறுகுடி பரதவர் | நிறைய
மீன்களைப் பிடிக்கும், சிறுகுடியைச் சேர்ந்த பரதவர் |
கங்குல்
மாட்டிய கனை கதிர் ஒண் சுடர் | இரவில்
தம் படகில் ஏற்றித்தூக்கிவைத்த செறிவான கதிர்களைக் கொண்ட ஒள்ளிய விளக்குகள் |
முதிரா
ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் | இளம்
ஞாயிற்றின், கடலில் பட்டு எதிர்வரும் ஒளியைப் போல் தோன்றும் |
கானல்
அம் பெரும் துறை சேர்ப்பன் | கடற்கரைச்
சோலையையும் பெரிய கடல் துறையையும் உடைய தலைவனான நம் காதலன் |
தானே
யானே புணர்ந்த மாறே 10 | தனியனாய்
வந்து என்னைச் சேர்ந்துகொண்டதனால் – |
| |
#
220 குறிஞ்சி குண்டுகட்பாலியாதனார் | #
220 குறிஞ்சி குண்டுகட்பாலியாதனார் |
| |
சிறு
மணி தொடர்ந்து பெரும் கச்சு நிறீஇ | சிறிய
மணிகளைத் தொடுத்துத் தொங்கவிட்டு, பெரிய கச்சினைச் சுற்றிக்கட்டி, |
குறு
முகிழ் எருக்கம் கண்ணி சூடி | குறியதாக
முகிழ்ந்திருக்கும் எருக்கம்பூவினால் தலைமாலை சூடிக்கொண்டு, |
உண்ணா
நன் மா பண்ணி எம்முடன் | உண்ணாத
நல்ல (பனைமடல்)குதிரையைச் செய்து அதில் ஊர்ந்து வர, எம்மோடு |
மறுகுடன்
திரிதரும் சிறு குறு_மாக்கள் | தெருக்களில்
சேர்ந்து திரியும் சிறிய பிள்ளைகள் |
பெரிதும்
சான்றோர் மன்ற விசி பிணி5 | மிக்க
சான்றோராவர், நிச்சயமாக; இழுத்து இறுக்கக் கட்டப்பட்ட |
முழவு
கண் புலரா விழவு உடை ஆங்கண் | குடமுழவின்
முகப்பு புலர்ந்துபோகாமல் எந்நேரமும் முழங்கும் விழாவுடைய ஊரில் |
ஊரேம்
என்னும் இ பேர் ஏமுறுநர் | இந்த
ஊரினர் என்று சொல்லிப் பெருமகிழ்ச்சி கொள்ளும் இச்சிறுவர்கள் |
தாமே
ஒப்புரவு அறியின் தே மொழி | தாமே
உலகநடப்பினைத் தெரிந்திருந்ததால், இனிக்கும் சொற்களையும், |
கயல்
ஏர் உண்கண் குறு_மகட்கு | கயல்
போன்ற அழகுடைய மையுண்ட கண்ணும் உடைய இளைய மகளாகிய தலைவிக்கு |
அயலோர்
ஆகல் என்று எம்மொடு படலே 10 | (இத்
தோழிகள்) அயலோராவர் என்ற எம் கருத்தோடு ஒத்துப்போவதால் – |
| |
#
221 முல்லை இடைக்காடனார் | #
221 முல்லை இடைக்காடனார் |
| |
மணி
கண்டு அன்ன மா நிற கருவிளை | நீலமணியைக்
கண்டாற்போன்ற கரிய நிறமுள்ள கருவிளை மலர், |
ஒண்
பூ தோன்றியொடு தண் புதல் அணிய | ஒள்ளிய
பூவாகிய செங்காந்தளோடு குளிர்ச்சியுள்ள புதர்களை அழகுசெய்ய, |
பொன்
தொடர்ந்து அன்ன தகைய நன் மலர் | பொற்காசுகளைத்
தொங்கவிட்டாற்போன்ற அழகுள்ள நல்ல மலராகிய |
கொன்றை
ஒள் இணர் கோடு-தொறும் தூங்க | கொன்றையின்
ஒள்ளிய பூங்கொத்துக்கள் கிளைகள்தோறும் தொங்க, |
வம்பு
விரித்து அன்ன செம் புல புறவில் 5 | ஒரு
புதிய மணத்தைப் பரப்பிவிட்டாற்போன்ற சிவந்த தரையையுடைய முல்லை நிலத்தில் |
நீர்
அணி பெரு வழி நீள் இடை போழ | நீரால்
மூடப்பெற்ற பெருவழியின் நீண்ட இடைவெளி பிளவுபட |
செல்க
பாக நின் செய்வினை நெடும் தேர் | செல்வாயாக
பாகனே! உனது வேலைப்பாடு சிறப்பாக அமைந்த நெடிய தேரில்; |
விருந்து
விருப்பு_உறூஉம் பெரும் தோள் குறு_மகள் | விருந்தோம்பலில்
விருப்பமுள்ள பெரிய தோளையுடைய இளமகளான தலைவி, |
மின்
ஒளிர் அவிர் இழை நன் நகர் விளங்க | மின்னலைப்
போன்று ஒளிர்ந்து பளபளக்கும் அணிகலன்கள் நல்ல மாளிகையைச் சிறப்புறச் செய்ய |
நடை
நாள் செய்த நவிலா சீறடி 10 | நடத்தலைப்
புதிதாகச் செய்து இன்னும் பழகாத சிறிய அடிகளையும், |
பூ
கண் புதல்வன் உறங்கு_வயின் ஒல்கி | பூப்போன்ற
கண்களையும் உடைய புதல்வன் உறங்கும்போது அவன் முன் சாய்ந்து, |
வந்தீக
எந்தை என்னும் | “வருவாய்,
என் அப்பனே!” என்று கூறும் |
அம்
தீம் கிளவி கேட்கம் நாமே | அந்த
இனிய சொற்களைக் கேட்டு மகிழ்வோம் நாம் – |
| |
#
222 குறிஞ்சி கபிலர் | #
222 குறிஞ்சி கபிலர் |
| |
கரும்
கால் வேங்கை செம் வீ வாங்கு சினை | கருமையான
அடிமரத்தையுடைய வேங்கையின் செம்மையான மலர்களையுடைய வளைந்த கிளையில், |
வடு
கொள பிணித்த விடு புரி முரற்சி | தழும்பு
உண்டாகுமாறு இறுகக் கட்டிய சற்றுத்தளர்ந்த முறுக்கினைக் கொண்ட கயிற்றாலாகிய |
கை
புனை சிறு நெறி வாங்கி பையென | கையால்
செய்யப்பட்ட சிறிய வளைவைக் கொண்ட ஊஞ்சலை இழுத்து, மெதுவாக |
விசும்பு
ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று | விசும்பில்
பறக்கும் அழகிய மயிலைப் போன்று, நான் இன்று |
பசும்
காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி 5 | பசும்பொன்னால்
ஆகிய மணிகள் பதித்த வடத்தையுடைய அல்குலைப் பற்றி, தள்ளிவிட்டு |
செலவுடன்
விடுகோ தோழி பல உடன் | உயரே
செல்ல விடுக்கிறேன் தோழி! பலவான |
வாழை
ஓங்கிய வழை அமை சிலம்பில் | வாழை
மரங்கள் உயர்ந்து, சுரபுன்னை மரங்களுடன் பொருந்திய மலைச்சாரலில் |
துஞ்சு
பிடி மருங்கின் மஞ்சு பட காணாது | தூங்கும்
தன் பெண்யானையின் பக்கத்தில் மேகம் சூழ்ந்திருக்க, அதனைக் காணாது |
பெரும்
களிறு பிளிறும் சோலை அவர் | பெரும்
களிறு பிளிறும் சோலையுள்ள தலைவனின் |
சேண்
நெடும் குன்றம் காணிய நீயே 10 | தொலைவிலிருக்கும்
உயர்ந்த குன்றினை நீ காண்பதற்காக – |
| |
#
223 நெய்தல் உலோச்சனார் | #
223 நெய்தல் உலோச்சனார் |
| |
இவள்
தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் | இவள்
தன் காதற்பெருக்கால் களவுக்காலமல்லாத காலை என்றும் நினைக்கமாட்டாள், உன் |
அன்பு
பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி | அன்பு
பெரிதாக உடைமையினாலே இவளுக்குக் கருணைகாட்டல் வேண்டி |
பகலும்
வருதி பல் பூ கானல் | பகலிலும்
வருகிறாய்; பலவான பூக்களைக் கொண்ட இந்தக் கடற்கரைச் சோலையில் |
இ
நீர ஆகலோ இனிதால் எனின் இவள் | இத்தன்மையராக
இருத்தல் இனிதே! எனினும் இவள் |
அலரின்
அரும் கடிப்படுகுவள் அதனால் 5 | ஊராரின்
பழிச்சொல்லுக்கு ஆளாகி அரிய கட்டுக்காவலுக்குட்படுத்தப்படுவாள்; அதனால் |
எல்லி
வம்மோ மெல்லம்புலம்ப | இரவானபின்
வருவாயாக, மென்புலமான நெய்தல்நிலத் தலைவனே! |
சுறவு_இனம்
கலித்த நிறை இரும் பரப்பின் | சுறாமீன்கள்
கலித்துப்பெருகிய நிறைவான பெரிய கடற்பரப்பின் |
துறையினும்
துஞ்சா கண்ணர் | துறையினிடத்தும்
உறங்காத விழியினரான |
பெண்டிரும்
உடைத்து இ அம்பல் ஊரே | பெண்களையும்
கொண்டது இந்தப் பழிதூற்றும் ஊர். |
| |
#
224 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ | #
224 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ |
| |
அன்பினர்
மன்னும் பெரியர் அதன்_தலை | நம்மிடம்
அன்புகொண்டவர் மிகுதியும்; மிகவும் பெரியவர்; ஆனால் அதற்கு மேலும் |
பின்பனி
அமையம் வரும் என முன்பனி | பின்பனிக்
காலம் வரப்போகிறது என்று முன்பனிக்காலத்தில் |
கொழுந்து
முந்துறீஇ குரவு அரும்பினவே | தளிர்களை
முதலில் விட்டு, குராமரங்கள் அரும்புவிடுகின்றனவே! |
புணர்ந்தீர்
புணர்-மினோ என்ன இணர் மிசை | “சேர்ந்திருப்போர்
சேர்ந்தே இருப்பீர்” என்பது போல, பூங்கொத்துகளின் மேலிருந்து |
செம்
கண் இரும் குயில் எதிர் குரல் பயிற்றும்
5 | சிவந்த
கண்களையுடைய கரிய குயில்கள் மாறிமாறிக் குரல் கொடுக்கும் |
இன்ப
வேனிலும் வந்தன்று நம்_வயின் | இன்பமான
இளவேனிலும் வந்தது; நம்மிடம் |
பிரியலம்
என்று தெளித்தோர் தேஎத்து | பிரியமாட்டோம்
என்று தெளிவாகக் கூறியவரிடம் |
இனி
எவன் மொழிகோ யானே கயன் அற | இனி
என்ன சொல்லுவேன் நான்? குளங்கள் வற்றிப்போக, |
கண்
அழிந்து உலறிய பன் மர நெடு நெறி | இடமெல்லாம்
அழிந்து காய்ந்துபோன பல மரங்களையுடைய நீண்ட வழியில் |
வில்
மூசு கவலை விலங்கிய 10 | வில்லேந்தியவர்கள்
மொய்த்துக்கிடக்கும் பல கிளை வழிகள் குறுக்கிட்டுக் கிடக்கும் |
வெம்
முனை அரும் சுரம் முன்னியோர்க்கே | கொடிய
முனையையுடைய செல்வதற்கரிய பாதையில் செல்ல முற்பட்டவருக்கு – |
| |
#
225 குறிஞ்சி கபிலர் | #
225 குறிஞ்சி கபிலர் |
| |
முருகு
உறழ் முன்பொடு கடும் சினம் செருக்கி | முருகனைப்
போன்ற வலிமையோடு கடும் சினத்தைப் பெருக்கிக்கொண்டு |
பொருத
யானை வெண் கோடு கடுப்ப | போரிட்ட
யானையின் வெண்மையான கொம்பினைப் போல |
வாழை
ஈன்ற வை ஏந்து கொழு முகை | வாழை
மரம் ஈன்ற கூர்மையாக ஏந்திநிற்கும் கொழுத்த மொட்டு, |
மெல்
இயல் மகளிர் ஓதி அன்ன | மென்மையான
இயல்புகொண்ட மகளிரின் கூந்தலின் கொண்டை முடிப்பு போன்று |
பூவொடு
துயல்வரும் மால் வரை நாடனை5 | முகையை
ஒட்டிய பூவுடன் மேலும்கீழும் அசையும் பெரிய மலைநாட்டைச் சேந்தவனை |
இரந்தோர்
உளர்-கொல் தோழி திருந்து இழை | இரந்து
வேண்டுவோர் யாரும் உண்டோ? தோழி! திருத்தமான அணிகலன்களைக்கொண்டு, |
தொய்யில்
வன முலை வரி வனப்பு இழப்ப | தொய்யில்
குழம்பால் தீட்டப்பட்ட அழகிய முலைகள் தம் மீது வரைந்த வனப்பை இழக்க, |
பயந்து
எழு பருவரல் தீர | பசலை
பாய்ந்து எழுகின்ற துன்பம் தீர, |
நயந்தோர்க்கு
உதவா நார் இல் மார்பே | காதலித்தோர்க்கு
உதவாத அவனது அன்பில்லாத மார்பினை – |
| |
#
226 பாலை கணி புன்குன்றனார் | #
226 பாலை கணி புன்குன்றனார் |
| |
மரம்
சா மருந்தும் கொள்ளார் மாந்தர் | ஒரு
மருந்துமரம் பட்டுப்போகும் அளவுக்கு அதினின்றும் மருந்தைக் கொள்ளமாட்டார்கள்;
மக்கள் |
உரம்
சா செய்யார் உயர் தவம் வளம் கெட | தம்
உடல்வலிமை கெட்டுப்போகுமாறு செய்யமாட்டார்கள் உயர்ந்த தவத்தை; நாட்டின் வளம்
குன்றிப்போக |
பொன்னும்
கொள்ளார் மன்னர் நன்_நுதல் | மக்களிடமிருந்து
வரிப்பணம் வாங்கமாட்டார் மன்னர்; நல்ல நெற்றியையுடையவளே! |
நாம்
தம் உண்மையின் உளமே அதனால் | நாம்
அவர் இருப்பதால் உயிருடன் இருக்கிறோம்; அதனால் |
தாம்
செய் பொருள் அளவு அறியார் தாம் கசிந்து
5 | தாம்
ஈட்டும் பொருளுக்கு ஓர் எல்லையையும் அறியார்; தாமே அதில் நாட்டங்கொண்டு |
என்றூழ்
நிறுப்ப நீள் இடை ஒழிய | வெயிலின்
வெப்பம் நிலைகொண்டிருக்க, நீண்டுசெல்லும் நெறி பின்னே ஒழிய, |
சென்றோர்
மன்ற நம் காதலர் என்றும் | சென்றுவிட்டார்
நம் காதலர்; என்றுமே |
இன்ன
நிலைமைத்து என்ப | பொருளின்மீது
கொள்ளும் நாட்டம் இப்படிப்பட்ட தன்மையது என்பார்கள்; |
என்னோரும்
அறிப இ உலகத்தானே | இதனை
எல்லோருமே அறிவார்கள் இந்த உலகத்தில் – |
| |
#
227 நெய்தல் தேவனார் | #
227 நெய்தல் தேவனார் |
| |
அறிந்தோர்
அறன் இலர் என்றலின் சிறந்த | நாலும்
தெரிந்தவர்கள் எல்லாரும் நம்மை நல்வழி நடப்பவர் அல்லர் என்பதனால், சிறந்த |
இன்
உயிர் கழியினும் நனி இன்னாதே | இனிய
உயிர் பழிச்சொற்களால் பிரிந்தாலும் அது மிகவும் இன்னாதது; |
புன்னை
அம் கானல் புணர் குறி வாய்த்த | புன்னை
மரத்தின் அழகிய கடற்கரைச் சோலையில் உன்னைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற |
பின்
ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ | பின்னலையுடைய
நெய்ப்பதமிக்க கூந்தலையுடைய என் தோழி, பாவம்! |
படு
மணி யானை பசும் பூண் சோழர் 5 | ஒலிக்கின்ற
மணிகளைக் கொண்ட யானையையுடைய பசிய பூண்களைக் கொண்ட சோழரின் |
கொடி
நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் | கொடிகள்
உயரத்தே மடங்கி ஆடும் தெருமுனைகளுள்ள ஆர்க்காடு என்னும் ஊரில் |
கள்
உடை தடவில் புள் ஒலித்து ஓவா | கள்ளையுடைய
குடத்தில் வண்டினங்கள் மொய்த்து ஒலியெழுப்புதல் நிற்காத, |
தேர்
வழங்கு தெருவின் அன்ன | தேர்கள்
ஓடும் தெருவைப் போல, |
கௌவை
ஆகின்றது ஐய நின் அருளே | ஊராரின்
பழிச்சொல்லாய் எழுகின்றது, ஐயனே, உன் அருள் – |
| |
#
228 குறிஞ்சி முடத்திருமாறனார் | #
228 குறிஞ்சி முடத்திருமாறனார் |
| |
என்
எனப்படுமோ தோழி மின்னு வசிபு | என்னவென்று
சொல்லப்படுமோ? தோழி! மின்னல் பிளக்க, |
அதிர்
குரல் எழிலி முதிர் கடன் தீர | முழங்கும்
இடியையுடைய சூல்கொண்ட மேகம், தன் முதிர்ந்த கடன் தீரும்படியாக |
கண்
தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள் | கண்கள்
தூர்ந்துபோகுமாறு பரந்த, மிக்க இருள் பரவிய நள்ளிரவில் |
பண்பு
இல் ஆரிடை வரூஉம் நம் திறத்து | பண்பற்ற
அரிய வழியில் வருகின்ற நம்மிடம் |
அருளான்-கொல்லோ
தானே கானவன் 5 | இரக்கம்
கொள்ளமாட்டானோ அவன்? வேட்டுவனின் |
சிறுபுறம்
கடுக்கும் பெரும் கை வேழம் | முதுகைப்
போன்ற பெரும் துதிக்கையைக் கொண்ட வேழம் |
வெறி
கொள் சாபத்து எறி கணை வெரீஇ | மிரட்சியூட்டும்
வில்லானது எறிகின்ற அம்பினை அஞ்சி |
அழுந்துபட
விடர்_அகத்து இயம்பும் | ஆழ்ந்துபட
மலைப்பிளவுகளில் பிளிறும், |
எழுந்து
வீழ் அருவிய மலை கிழவோனே | குதித்து
விழும் அருவியைக் கொண்ட மலைக்கு உரிமையாளன். |
| |
#
229 பாலை | #
229 பாலை இளங்கண்ணனார் |
| |
சேறும்
சேறும் என்றலின் பல புலந்து | “செல்வோம்,
செல்வோம்” என்று சொல்வதால் பலவாறாகப் பிணக்குண்டு பேசிச் |
செல்-மின்
என்றல் யான் அஞ்சுவலே | “செல்லுங்கள்”
என்று சொல்வதற்கு அஞ்சுவேன்; |
செல்லாதீம்
என செப்பின் பல்லோர் | செல்லாதீர்
என்று சொன்னால், பலரும் |
நிறத்து
எறி புன் சொலின் திறத்து அஞ்சுவலே | உம்மை
நோக்கி வீசும் புன்மையான சொற்களை நினைத்து அஞ்சுவேன்; |
அதனால்
செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு 5 | அதனால்
செல்லுங்கள், சென்று பொருளீட்டும் வினையை முடியுங்கள், சென்றபின் அங்கு |
அவண்
நீடாதல் ஓம்பு-மின் யாமத்து | அவ்விடத்திலேயே
நீண்டநாள் தங்காமல் காத்துக்கொள்ளுங்கள்; நள்ளிரவில் |
இழை
அணி ஆகம் வடு கொள முயங்கி | அணிகலன்கள்
அணிந்த மார்பில் தழும்பு உண்டாகுமாறு தழுவிப் |
உழையீர்
ஆகவும் பனிப்போள் தமியே | பக்கத்திலேயே
இருப்பவராய் இருந்தாலும் “பிரிவாரே” என்று இவள் நடுங்குவாள்;
தனித்திருந்து |
குழைவான்
கண்ணிடத்து ஈண்டி தண்ணென | வாட்டமுறுமாறு,
இடமெங்கணும் செறிவாய்க்கூடி, குளிரும்படியாக |
ஆடிய
இள மழை பின்றை 10 | அசைந்துவரும்
இலேசான மழைக்குப் பின்னால் |
வாடையும்
கண்டிரோ வந்து நின்றதுவே | வாடைக்காற்றும்
கண்டீரன்றோ வந்து நிற்பதை – |
| |
#
230 மருதம் ஆலங்குடி வங்கனார் | #
230 மருதம் ஆலங்குடி வங்கனார் |
| |
முய
பிடி செவியின் அன்ன பாசடை | நெருக்கமாய்க்கிடக்கும்,
பெண்யானையின் காதைப் போன்ற பசிய இலைகளையும், |
கய
கண கொக்கின் அன்ன கூம்பு முகை | குளத்தில்
கூட்டமாய் நிற்கும் கொக்குகளைப் போன்ற குவிந்த மொட்டுக்களையும் |
கணை
கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது | திரட்சியான
தண்டினையும் உடைய ஆம்பலின் தேன் மணக்கும் குளிர்ந்த விரிநிலை மலரானது |
குணக்கு
தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும் | கிழக்கில்
தோன்றும் வெள்ளியைப் போல இருள் நீங்கிட மலரும் |
கயல்
கணம் கலித்த பொய்கை ஊர 5 | மீன்கூட்டம்
கலித்துப்பெருகிய பொய்கை உள்ள ஊரினனே! |
முனிவு
இல் பரத்தையை என் துறந்து அருளாய் | உன்மேல்
கோபம் இல்லாத உன் பரத்தைக்கு, என்னைத் துறந்து, அருள்செய்வாய்! |
நனி
புலம்பு அலைத்த எல்லை நீங்க | மிகுந்த
தனிமைத் துயரம் வாட்டிய பேரளவு என்னைவிட்டு நீங்க, |
புது
வறம் கூர்ந்த செறுவில் தண்ணென | புதிதாய்
வற்றிக்காய்ந்த வயலுக்குள், மிகவும் குளிர்ச்சியுண்டாக |
மலி
புனல் பரத்தந்து ஆஅங்கு | மிகுந்த
புனல் பாய்ந்து பரவினாற்போன்று |
இனிதே
தெய்ய நின் காணும்_காலே 10 | இன்பமாகவே
இருக்கின்றது உன்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் – |
| |
#
231 நெய்தல் இளநாகனார் | #
231 நெய்தல் இளநாகனார் |
| |
மை
அற விளங்கிய மணி நிற விசும்பில் | மேகங்கள்
சிறிதுமில்லாமல் விளங்கிய நீலமணி நிறத்ததான விசும்பில் |
கைதொழும்
மரபின் எழு மீன் போல | வணங்கக்கூடிய
மரபினதான ஏழு மீன்களான சப்தரிஷிமண்டலம் போல |
பெரும்
கடல் பரப்பின் இரும் புறம் தோய | பெரிய
கடற் பரப்பில் தமது அகன்ற முதுகு நனையுமாறு |
சிறு_வெண்_காக்கை
பல உடன் ஆடும் | சிறிய
வெண்ணிறக் கடற்காக்கைகள் பலவும் சேர்ந்து நீராடும் |
துறை
புலம்பு உடைத்தே தோழி பண்டும் 5 | கடற்கரைத்
துறை தனிமைத்துயரத்தை உடையது, தோழி! இதன் முன்னேயும் |
உள்ளூர்
குரீஇ கரு உடைத்து அன்ன | ஊருள்
வாழும் குருவியின் முட்டை உடைந்தது போல |
பெரும்
போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை | பெரிய
மொட்டு மலர்ந்த கரிய அடியைக் கொண்ட புன்னைமரங்களைக் கொண்ட |
கானல்
அம் கொண்கன் தந்த | கடற்கரைச்
சோலையில் நம் தலைவன் தந்த |
காதல்
நம்மொடு நீங்கா மாறே | காதலானது
நம்மிடமிருந்து நீங்காமையினால் – |
| |
#
232 குறிஞ்சி முதுவெங்கண்ணனார் | #
232 குறிஞ்சி முதுவெங்கண்ணனார் |
| |
சிறு
கண் யானை பெரும் கை ஈர் இனம் | சிறிய
கண்களைக் கொண்ட யானையின், பெரிய கையால் உறிஞ்சி இழுக்கும் கூட்டம் |
குளவி
தண் கயம் குழைய தீண்டி | காட்டு
மல்லிகை உள்ள குளிர்ந்த குளம் கலங்குமாறு அடித்து, |
சோலை
வாழை முணைஇ அயலது | சோலையிலுள்ள
வாழையை வெறுத்து, பக்கத்திலிருக்கும் |
வேரல்
வேலி சிறுகுடி அலற | சிறுமூங்கிலை
வேலியாக உடைய சிறுகுடியினர் அலறும்படி, |
செம்
கால் பலவின் தீம் பழம் மிசையும் 5 | செவ்விய
அடிமரத்தையுடைய பலாமரத்தின் இனிய பழத்தைச் சுவைத்து உண்ணும் |
மா
மலை நாட காமம் நல்கு என | பெரிய
மலை நாட்டினனே! உன் காதலைத் தருவாயாக என்று |
வேண்டுதும்
வாழிய எந்தை வேங்கை | வேண்டுகிறேன்,
வாழ்க நீ! எம் தந்தையின், வேங்கையின் |
வீ
உக வரிந்த முன்றில் | மலர்கள்
உதிரும்படி வரிக்கப்பட்ட முற்றம் உள்ள |
கல்
கெழு பாக்கத்து அல்கினை செலினே | பாறைகள்
நிறைந்த எமது ஊரில் தங்கிச் சென்றால் – |
| |
#
233 குறிஞ்சி அஞ்சில் ஆந்தையார் | #
233 குறிஞ்சி அஞ்சில் ஆந்தையார் |
| |
கல்லா
கடுவன் நடுங்க முள் எயிற்று | தன்
குடும்பத்தைப் பேணுவதைக் கல்லாத ஆண்குரங்கு நடுங்குமாறு, தன் முள் போன்ற
பற்களைக் காட்டி |
மட
மா மந்தி மாணா வன் பறழ் | இளமையுடைய
பெரிய பெண்குரங்கு, வளர்ச்சியுறாத தன் வலிய குட்டியோடு |
கோடு
உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும் | உச்சி
உயர்ந்த மலைப்பக்கத்தில் அசைவாடித்திரியும் மேகத்தில் தன்னை ஒளித்துக்கொள்ளும் |
பெரும்
கல் நாடனை அருளினை ஆயின் | பெரிய
மலைநாடனாகிய தலைமகன் மேல் அன்புடையவளாயின், |
இனி
என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று 5 | இனி
அவ்வாறு நிச்சயமாகக் கொள்ளவேண்டாம்; சிறந்த ஒன்றைக் |
கூறுவென்
வாழி தோழி முன் உற | கூறுவேன்,
வாழ்க, தோழியே! இனி அவன் உன் முன்னால் நிற்கும்போது |
நார்
உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி | உன்
அன்புடைய நெஞ்சத்தில் இருக்கும் காதலை மறைத்து, |
ஆன்றோர்
செல் நெறி வழாஅ | ஆன்றோர்
செல்லும் வழியில் வழுவாது |
சான்றோன்
ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே | சான்றோனாக
அவன் இருத்தலை நன்கு அறிந்து தெளிந்துகொள்வாயாக. |
| |
#
234 குறிஞ்சி | #
234 குறிஞ்சி இறையனார் அகப்பொருள் 28 ஆம் சூத்திர உரை |
| |
சான்றோர்
வருந்திய வருத்தமும் நுமது | தலைவனுக்காகப்
பெண்கேட்டு வந்தோரின் வழிநடை வருத்தத்தையும், உமது |
வான்
தோய்வு அன்ன குடிமையும் நோக்கி | வானத்தைத்
தொடுவதுபோன்ற குலப்பெருமையையும் நினைத்துப்பார்த்து, |
திரு
மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள் | அழகிய
மணிகளைத் தேய்த்து அடித்துக்கொண்டு செல்லும் இவரின் குன்றத்தின் பெருமையைக்
கொண்டு, |
வரு
முலை ஆகம் வழங்கினோ நன்றே | வளர்கின்ற
முலைகளையுடைய மார்பினையுடையவளை வழங்கினால் நல்லது; |
அஃதான்று
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு
5 | அதைவிட்டு,
இவர் கொண்டுவந்த பரிசப்பொருள்களை எண்ணுவீராகில், பகைவரின் வெண்கொற்றக்குடையோடு |
கழுமலம்
தந்த நல் தேர் செம்பியன் | கழுமலம்
என்ற ஊரைக் கைப்பற்றிய நல்ல தேரையுடைய சோழனின் |
பங்குனி
விழவின் உறந்தையொடு | பங்குனி
விழாவின்போதான உறந்தைநகரோடு |
உள்ளி_விழவின்
வஞ்சியும் சிறிதே | உள்ளி
விழாக் காலத்து வஞ்சியும் மிகவும் சிறியதே. |
| |
#
235 நெய்தல் | #
235 நெய்தல் வெள்ளிவீதியார் |
| |
உரவு
திரை பொருத பிணர் படு தடவு முதல் | வலிமையான
அலைகள் மோதுகின்ற சொரசொரப்பான பெரிய அடியையும், |
அரவு
வாள் வாய முள் இலை தாழை | அரத்தின்
வாய்போன்றதாயுள்ள முள்ளாலான இலைகளையும் கொண்ட தாழை |
பொன்
நேர் தாதின் புன்னையொடு கமழும் | பொன்
போன்ற பூந்தாதுக்களையுடைய புன்னையோடு சேர்ந்து மணம்வீசும் |
பல்
பூ கானல் பகற்குறி வந்து நம் | பலவான
பூக்கள் உள்ள கடற்கரைச் சோலையே பகலில்சந்திக்கும் இடமாக வந்து, நமது |
மெய்
கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும் 5 | உடம்பின்
அழகைச் சிதைத்துவிட்டுச் சென்றானாயினும் |
குன்றின்
தோன்றும் குவவு மணல் ஏறி | குன்றைப்
போல உயரமாகத் தோன்றும் குவியலான மணல்மேட்டில் ஏறி |
கண்டனம்
வருகம் சென்மோ தோழி | பார்த்துவிட்டு
வரலாம், போகலாமா தோழி! |
தண்
தார் அகலம் வண்டு இமிர்பு ஊத | குளிர்ந்த
மாலை அணிந்த மார்பினில் வண்டுகள் ஒலிப்புடன் தேனருந்த |
படு
மணி கலி_மா கடைஇ | ஒலிக்கும்
மணிகளையுடைய குதிரைகளைச் செலுத்தியபடி |
நெடு_நீர்
சேர்ப்பன் வரூஉம் ஆறே 10 | நெடிய
நீரையுடைய நெய்தல்நிலத் தலைவன் மணமுடிக்க வருகின்ற வழியை – |
| |
#
236 குறிஞ்சி நம்பி குட்டுவன் | #
236 குறிஞ்சி நம்பி குட்டுவன் |
| |
நோயும்
கைம்மிக பெரிதே மெய்யும் | என்
காதல் நோயும் கைமீறிப் பெரிதாகிவிட்டது; உடம்பும் |
தீ
உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே | நெருப்பு
வெளிவிடும் வெம்மையைக்காட்டிலும் சூடானதாய் உள்ளது; |
ஒய்யென
சிறிது ஆங்கு உயிரியர் பையென | விரைவாக,
நான் சிறிதாகிலும் உயிர்த்திருக்க, “மெல்ல |
முன்றில்
கொளினே நந்துவள் பெரிது என | முற்றத்தில்
இவளை இருத்தினால் நலம்பெறுவாள் பெரிதும்” என்று |
நிரைய
நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு 5 | உள்ளிருப்போரை
வெளிவிடாத நரகக் காவலர் போன்ற நெஞ்சத்தையுடைய அன்னைக்கு அறிவுறுத்தி, அங்கு |
உரை
இனி வாழி தோழி புரை இல் | உரைப்பாயாக
இனியே, வாழ்க தோழி நீ! குற்றமற்ற |
நுண்
நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து | நுண்ணிய
நேரிய ஒளிபொருந்திய வளைகளை நெகிழச்செய்தவனின் குன்றத்து |
அண்ணல்
நெடு வரை ஆடி தண்ணென | மிகப்பெரிய
உயர்ந்த கொடுமுடியில் தவழ்ந்து, குளிர்ச்சியுடன் |
வியல்
அறை மூழ்கிய வளி என் | நம்
மலையின் அகன்ற பாறைகளில் நிரம்பியுள்ள காற்று எனது |
பயலை
ஆகம் தீண்டிய சிறிதே10 | பசலை
பாய்ந்த மார்பினைத் தீண்டுவதற்காக, சிறிதேனும் – |
| |
#
237 பாலை காரிக்கண்ணனார் | #
237 பாலை காரிக்கண்ணனார் |
| |
நனி
மிக பசந்து தோளும் சாஅய் | மிகவும்
அதிகமாகப் பசந்து தோளும் மெலிந்துவிட்டன; |
பனி
மலி கண்ணும் பண்டு போலா | நீர்
நிறைந்து கண்ணும் முன்பு போல் இல்லை; |
இன்
உயிர் அன்ன பிரிவு அரும் காதலர் | இனிய
உயிர் போன்ற பிரிவதற்கு அரிய காதலர் |
நீத்து
நீடினர் என்னும் புலவி | நம்மை
விட்டுப் பிரிந்து நெடுந்தொலைவு சென்றனர் என்ற பிணக்கம் |
உள்
கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை 5 | உள்ளத்தில்
கொண்டு அவரிடத்தில் ஊடல்கொள்ளுதலும் இல்லையோ? பெண்ணே! |
உவ
காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடை | அதோ
அங்கு பார்! தோன்றுகிறதே உயர்ந்து – வியப்பூட்டும் |
இரவலர்
வரூஉம் அளவை அண்டிரன் | இரவலர்கள்
வரும்வரை, அண்டிரன் என்போன் |
புரவு
எதிர்ந்து தொகுத்த யானை போல | அவர்களுக்குக்
கொடை கொடுப்பதற்காகச் சேர்த்துவைத்த யானைகள் போல |
உலகம்
உவப்ப ஓது அரும் | உலகம்
மகிழ்ச்சியுற, சொல்லுதற்கரிய |
வேறு
பல் உருவின் ஏர்தரும் மழையே 10 | வெவ்வேறான
பற்பல உருவங்களில் எழுகின்ற மேகக்கூட்டங்கள் – |
| |
#
238 முல்லை கந்தரத்தனார் | #
238 முல்லை கந்தரத்தனார் |
| |
வறம்
கொல வீந்த கானத்து குறும் பூ | கோடை
வாட்டுவதால் பட்டுப்போன காட்டில், சிறிதளவு பூவேயுள்ள |
கோதை
மகளிர் குழூஉ நிரை கடுப்ப | மாலையை
அணிந்த மகளிர் கூடிநிற்கும் கூட்டத்தைப் போல, |
வண்டு
வாய் திறப்ப விண்ட பிடவம் | வண்டுகள்
கிளறி முறுக்கவிழ்ப்பதனால் மலர்ந்த பிடவ மலர்கள் |
மாலை
அந்தி மால் அதர் நண்ணிய | அந்தி
மாலையில் நான் காமநோய் கொள்ளுமாறு |
பருவம்
செய்த கருவி மா மழை 5 | கார்ப்பருவத்தைத்
தோற்றுவித்த கூட்டமான கார்மேகமே! |
அவர்
நிலை அறியுமோ ஈங்கு என வருதல் | “அவர்
நிலை அறிவாயோ இங்கு” என்று வருதல் |
சான்றோர்
புரைவதோ அன்றே மான்று உடன் | உயர்ந்தவருக்கு
ஒத்தது ஆகாது அன்றோ? மயங்கி ஒன்று சேர்ந்து |
உர
உரும் உரறும் நீரின் பரந்த | வலிய
இடி முழங்கும் இயல்பினால், பரந்த |
பாம்பு
பை மழுங்கல் அன்றியும் மாண்ட | பாம்புகளின்
படங்கள் அடங்கிப்போகின்றன, அதற்குமேலும், மாட்சிமைப் பண்புடைய |
கனியா
நெஞ்சத்தானும் 10 | தலைவரின்
நெஞ்சம் கனிந்துபோகாததினாலும் |
இனிய
அல்ல நின் இடி நவில் குரலே | இனிமையானது
அல்ல உனது இடிமுழக்கம் எழுப்பும் குரல். |
| |
#
239 நெய்தல் குன்றியனார் | #
239 நெய்தல் குன்றியனார் |
| |
ஞான்ற
ஞாயிறு குட மலை மறைய | மேலை
அடிவானத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஞாயிறு மேற்கு மலையில் சென்று மறைய |
மான்ற
மாலை மகிழ்ந்த பரதவர் | இருள்
மயங்கிய மாலையில் கள்குடித்து மகிழ்ந்த மீனவர்கள் |
இனிது
பெறு பெரு மீன் எளிதினின் மாறி | பகலில்
எளிதாகப் பிடித்த நிறைய மீன்களை எளியவிலைக்கு விற்று, |
அலவன்
ஆடிய புலவு மணல் முன்றில் | நண்டுகள்
ஓடித்திரிந்த புலால்நாறும் மணல் பரப்பிய முற்றத்தையுடைய |
காமர்
சிறுகுடி செல் நெறி வழியின்5 | கண்டோர்
விரும்பும் சிறுகுடிக்குச் செல்லும் ஒழுங்குபட்ட வழியில் |
ஆய்
மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல் | அழகான
மணிகள் கொண்ட பொதியை அவிழ்த்துவிட்டாற்போன்ற, நெய்தலின் |
புல்
இதழ் பொதிந்த பூ தப மிதிக்கும் | புல்லிய
புறஇதழ்கள் மூடிக்கொண்டிருக்கும் பூக்கள் கெட்டுப்போகுமாறு மிதித்துச் செல்லும் |
மல்லல்
இரும் கழி மலி நீர் சேர்ப்பற்கு | வளம்
மிக்க கரிய கழிகளில் நிறைந்த நீரையுடைய நெய்தல்நிலத் தலைவனுக்கு, |
அமைந்து
தொழில் கேட்டன்றோ இலமே முன்கை | அவனது
மனமொத்தவராய் அவன் சொற்படி கேட்டோம் இல்லை; முன்கையில் |
வார்
கோல் எல் வளை உடைய வாங்கி 10 | நீண்ட
திரட்சியான ஒளிவிடும் வளைகள் உடைந்துபோகுமாறு இறுக வளைத்துத் |
முயங்கு
என கலுழ்ந்த இ ஊர் | தழுவினாய்
என்று கண்ணீர்விட்ட இந்த ஊர் மக்கள் |
எற்று
ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே | என்னத்திற்கு
ஆவார்கள்? நாம் உடன்போக்கு மேற்கொள்ளுதலான வேறொன்றைச் செய்துவிட்டால். |
| |
#
240 பாலை நப்பாலத்தனார் | #
240 பாலை நப்பாலத்தனார் |
| |
ஐது
ஏகு அம்ம இ உலகு படைத்தோனே | மெதுவாக
நடந்து செல்லட்டும், இந்த உலகைப் படைத்தவன் – |
வை
ஏர் வால் எயிற்று ஒண் நுதல் குறு_மகள் | கூர்மையான
அழகுபொருந்திய வெண்மையான பற்களையும் ஒளிகொண்ட நெற்றியையும் உடைய இளையவளே! |
கை
கவர் முயக்கம் மெய் உற திருகி | நம்
காதலர் தம் கைகளால் வளைத்துத் தழுவுவது உடம்போடு பொருந்துவதை விரும்பாமல்விட, |
ஏங்கு
உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் | அதனால்
ஏங்குகின்ற பெருமூச்சோடு பொருந்திய பருத்த கொங்கையை உடைய எனது மார்பு |
துயில்
இடைப்படூஉம் தன்மையது ஆயினும் 5 | தனித்துக்கிடந்து
துயில் கொள்ளாது வருந்தும் தன்மையதாயினும், |
வெயில்
வெய்து_உற்ற பரல் அவல் ஒதுக்கில் | வெயிலால்
வெப்பமுற்ற பரல் மிக்க பள்ளத்தின் ஒருபக்கத்தில் |
கணிச்சியில்
குழித்த கூவல் நண்ணி | குந்தாலியால்
குழிவு ஏற்படுத்திய கிணற்றை அடைந்து |
ஆன்
வழிப்படுநர் தோண்டிய பத்தல் | பசுக்களை
நடத்திச்செல்பவர்கள் தோண்டிய குழிவான பள்ளத்தின் நீரை |
யானை
இன நிரை வௌவும் | யானைகளின்
கூட்டமான திரள் கவர்ந்துண்ணும் |
கானம்
திண்ணிய மலை போன்றிசினே 10 | கானமானது
திண்ணிய மலை போல் அழியாத தன்மையதாய் உள்ளது – அதில் |
| |
#
241 பாலை மதுரை பெருமருதனார் | #
241 பாலை மதுரை பெருமருதனார் |
| |
உள்ளார்-கொல்லோ
தோழி கொடும் சிறை | நம்மை
நினைத்துப்பார்க்கமாட்டாரோ தோழி? வளைந்த சிறகுகளையுடைய |
புள்
அடி பொறித்த வரி உடை தலைய | பறவைகளின்
உள்ளங்கால் சுவடுகள் பதித்த தடங்களையுடைய மேற்பரப்பினையுடையவாய், |
நீர்
அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற | நீர்
வற்றிக்கொண்டிருக்கும் இடங்கள்தோறும் ஈரமான நுண்மணல் தோன்ற, |
வளரா
வாடை உளர்பு நனி தீண்டலின் | மெல்லென
வீசும் வாடை கோதிவிடுவதாக ஊன்றித் தீண்டுவதால் |
வேழ
வெண் பூ விரிவன பல உடன் 5 | கரும்பின்
வெள்ளையான பூக்கள் பலவும் சேர்ந்து விரிவனவாய், |
வேந்து
வீசு கவரியின் பூ புதல் அணிய | அரசனுக்கு
வீசும் கவரி விசிறியைப் போல பூக்கள் புதர்களை அழகுசெய்ய, |
மழை
கழி விசும்பின் மாறி ஞாயிறு | மேகங்கள்
நீங்கிச் செல்லுகின்ற விசும்பில் மாறிமாறி ஞாயிறு |
விழித்து
இமைப்பது போல் விளங்குபு மறைய | விழித்து
இமைப்பது போல தோன்றித்தோன்றி மறைய, |
எல்லை
போகிய பொழுதின் எல் உற | பகற்பொழுது
சென்ற மாலைப்பொழுதில் இரவு வந்துசேர, |
பனி
கால்கொண்ட பையுள் யாமத்து 10 | பனி
பெய்யத்தொடங்கிய துன்பத்தைத் தரும் நடுயாமத்தில், |
பல்
இதழ் உண்கண் கலுழ | பல
இதழ்களையுடைய மலர்போன்ற மையுண்ட கண்கள் நீர் சொரிய |
நில்லா
பொருள்_பிணி பிரிந்திசினோரே | நிலையில்லாத
பொருளை ஈட்டுதற்காகப் பிரிந்துசென்றோர் – |
| |
#
242 முல்லை விழிக்கட்பேதை பெருங்கண்ணனார் | #
242 முல்லை விழிக்கட்பேதை பெருங்கண்ணனார் |
| |
இலை
இல பிடவம் ஈர் மலர் அரும்ப | இலைகள்
அற்ற பிடவமரங்களில் புதிய மலர்கள் அரும்பிநிற்க, |
புதல்
இவர் தளவம் பூ கொடி அவிழ | புதர்கள்
மேல் ஏறிப்படர்கின்ற முல்லைக் கொடியின் பூக்கள் மலர, |
பொன்
என கொன்றை மலர மணி என | பொற்காசுகள்
போன்று கொன்றை மலர, நீலமணி போன்று |
பன்
மலர் காயாம் குறும் சினை கஞல | பல
மலர்களையுடைய காயா சிறிய கிளைகளில் நெருக்கமாய்ப் பூக்க, |
கார்
தொடங்கின்றே காலை வல் விரைந்து 5 | கார்காலம்
தொடங்கிவிட்டது இன்று காலையில், மிக விரைவாகச் |
செல்க
பாக நின் தேரே உவ காண் | செலுத்துக
பாகனே! உன் தேரை, இதோ பார்! |
கழி
பெயர் களரில் போகிய மட மான் | கழிநீர்
பெருகிப் பரவுகின்ற களர்நிலத்தில் கால்வைத்த இளைய மான் |
விழி
கண் பேதையொடு இனன் இரிந்து ஓட | கண்களை
அகலவைத்துப் பார்க்கும் தன் அறியாக் குட்டியோடு தன் கூட்டத்தை விட்டு வெருண்டு
ஓட, |
காமர்
நெஞ்சமொடு அகலா | விருப்பங்கொண்ட
நெஞ்சத்தோடு இருக்கின்ற இடத்தைவிட்டு அகலாமல் |
தேடூஉ
நின்ற இரலை ஏறே 10 | பார்வையாலேயே
தேடி நிற்கும் ஆண்மானை – |
| |
#
243 பாலை காமக்கணி பசலையார் | #
243 பாலை காமக்கணி பசலையார் |
| |
தேம்
படு சிலம்பில் தெள் அறல் தழீஇய | தேன்
ஒழுகும் மலைச்சாரலில், தெளிந்த ஓடைநீர் சூழ்ந்த |
துறுகல்
அயல தூ மணல் அடைகரை | குத்துப்பாறையின்
அயலில் உள்ள தூய மணலையுடைய அடைகரையில் |
அலங்கு
சினை பொதுளிய நறு வடி மாஅத்து | ஆடுகின்ற
கிளைகளில் நெருக்கமாய்த் தழைத்த நறிய வடுக்களையுடைய மாமரத்துச் |
பொதும்பு-தோறு
அல்கும் பூ கண் இரும் குயில் | சோலைதொறும்
தங்கும் அழகிய கண்களையுடைய கரிய குயில், |
கவறு
பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு
5 | “சூதாடுகருவியை
உருட்டிவிட்டாற்போன்ற நிலையில்லாத வாழ்க்கையை முன்னிட்டுப் |
அகறல்
ஓம்பு-மின் அறிவுடையீர் என | பிரிந்து
செல்வதைத் தவிர்ப்பீர்! அறிவுள்ளவர்களே!” என்று |
கையற
துறப்போர் கழறுவ போல | தம்
காதலியர் செயலற்றுப்போக அவரைத் துறந்துசெல்வோருக்குக் இடித்துரைப்பது போல |
மெய்
உற இருந்து மேவர நுவல | தம்
துணையோடு ஒன்றியிருந்து பொருத்தமானபடி கூற, |
இன்னாது
ஆகிய காலை பொருள்_வயின் | இன்னாததாகிய
இந்த இளவேனிற்காலத்தில், பொருளீட்டுவதற்காகப் |
பிரியல்
ஆடவர்க்கு இயல்பு எனின் 10 | பிரிந்து
செல்லுதல் ஆடவர்க்கு இயல்பு எனின் |
அரிது
மன்று அம்ம அறத்தினும் பொருளே | அரியதாய்ப்
போய்விட்டது உறுதியாக, அறத்தைக்காட்டிலும் பொருள். |
| |
#
244 குறிஞ்சி கூற்றங்குமரனார் | #
244 குறிஞ்சி கூற்றங்குமரனார் |
| |
விழுந்த
மாரி பெரும் தண் சாரல் | விழுந்த
மழையால் பெரிதும் குளிர்ந்துபோன மலைச்சாரலில் |
கூதிர்
கூதளத்து அலரி நாறும் | கூதிர்காலத்துக்
கூதளத்தின் பூக்களுடைய மணத்தைக் கொண்ட, |
மாதர்
வண்டின் நயவரும் தீம் குரல் | அழகிய
வண்டுகள் இசைக்கும் இனிய குரலை |
மணம்
நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் | மணம்
கமழும் மலைச் சரிவில் உள்ள அசுணம் என்ற விலங்கு உற்றுக்கேட்கும் |
உயர்
மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ 5 | உயர்ந்த
மலைகளைக் கொண்டவனுக்கு எடுத்துச் சொல்லுவதையோ, |
துயர்
மருங்கு அறியா அன்னைக்கு இ நோய் | நாம்
அடைந்துள்ள துயருக்கான காரணத்தை அறியாத அன்னைக்கு இந்தக் காதல்நோய் |
தணியும்
ஆறு இது என உரைத்தல் ஒன்றோ | தணிகின்ற
வழி இதுதான் என்று சொல்லுவதையோ |
செய்யாய்
ஆதலின் கொடியை தோழி | செய்யமாட்டாய்;
ஆகவே நீ கொடியவள் தோழி! |
மணி
கெழு நெடு வரை அணி பெற நிவந்த | மணிகள்
ஒளிவீசுகின்ற நெடிய மலை அழகு பெற உயர்ந்துநிற்கும் |
செயலை
அம் தளிர் அன்ன என்10 | அசோகமரத்தின்
அழகிய தளிரைப் போன்ற என் |
மதன்
இல் மா மெய் பசலையும் கண்டே | வலிமை
அற்ற மாமைநிறங்கொண்ட மேனியில் பசலை நோயையும் பார்த்துவிட்டு – |
| |
#
245 நெய்தல் அல்லங்கீரனார் | #
245 நெய்தல் அல்லங்கீரனார் |
| |
நகை
ஆகின்றே தோழி தகைய | சிரிப்பைத்
தருகின்றது தோழி! உயர்ச்சிமிக்க |
அணி
மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை | அழகிய
மலரான கழிமுள்ளியின் ஆய்ந்தெடுத்த பூக்களைக் கொண்ட மாலையை |
மணி
மருள் ஐம்பால் வண்டு பட தைஇ | நீலமணி
போன்ற கூந்தலில் வண்டுகள் மொய்க்கும்படி அணிந்து, |
துணி
நீர் பௌவம் துணையோடு ஆடி | தெளிந்த
நீர் உள்ள கடலில் தோழியரோடு விளையாடி. |
ஒழுகு
நுண் நுசுப்பின் அகன்ற அல்குல் 5 | நேரேஇறங்கும்
நுண்ணிய இடுப்பும், அகன்ற அல்குலும், |
தெளி
தீம் கிளவி யாரையோ என் | தெளிவான
இனிய சொற்களும் உடையவளே! யாரோ, என் |
அரிது
புணர் இன் உயிர் வவ்விய நீ என | அரிதாக
அமைந்திருக்கின்ற இனிய உயிரைக் கவர்ந்த நீ என்று |
பூண்
மலி நெடும் தேர் புரவி தாங்கி | பூண்கள்
நிறைந்த நெடிய தேரின் புரவியை இழுத்துப்பிடித்தவாறு, |
தான்
நம் அணங்குதல் அறியான் நம்மின் | அவன்தான்
நம்மைக் காதல்நோயால் வருத்துகிறான் என்பதனை அறியாதவனாய், நம்மால் |
தான்
அணங்கு உற்றமை கூறி கானல் 10 | தான்
காதல்நோயால் வருத்தமுற்றதைக் கூறி, கடற்கரைச் சோலையில் |
சுரும்பு
இமிர் சுடர் நுதல் நோக்கி | வண்டினம்
ஒலியெழுப்பும் ஒளிவிடும் என் நெற்றியை நோக்கிப் |
பெரும்
கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவே | பெரிய
கடல்பகுதியைச் சேர்ந்தவன் நம்மைத் கைகூப்பித் தொழுது நின்ற காட்சி – |
| |
#
246 பாலை காப்பியம் சேந்தனார் | #
246 பாலை காப்பியம் சேந்தனார் |
| |
இடூஉ
ஊங்கண் இனிய படூஉம் | இது
நடைபெறும் என்று சொன்ன இடங்களில் நல்ல நிமித்தங்கள் தோன்றுகின்றன; |
நெடும்
சுவர் பல்லியும் பாங்கில் தேற்றும் | நெடிய
சுவரில் உள்ள பல்லியும் பக்கத்தில் ஒலித்து அதனை உறுதிப்படுத்தும்; |
மனை
மா நொச்சி மீமிசை மா சினை | வீட்டிலுள்ள
கரிய நொச்சிச்செடியின் உச்சிக்கு மேலேயிருக்கும் மாமரத்தின் கிளைகளில் |
வினை
மாண் இரும் குயில் பயிற்றலும் பயிற்றும் | கூவுதலில்
சிறந்த கரிய குயில்கள் திரும்பத்திரும்பக் கூவவும் செய்கின்றன; |
உரம்
புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி 5 | உறுதியான
நெஞ்சத்தோடு பாலைவழிகள் பலவற்றைக் கடந்து |
செய்_பொருட்கு
அகன்றனர் ஆயினும் பொய்யலர் | பொருளீட்டுவதற்காகப்
பிரிந்த்சென்றாராயினும், பொய்சொல்லமாட்டார், |
வருவர்
வாழி தோழி புறவின் | வந்துவிடுவார்
வாழ்க தோழியே! முல்லைக்காட்டின் |
பொன்
வீ கொன்றையொடு பிடவு தளை அவிழ | பொன்போன்ற
பூக்களையுடைய கொன்றையோடு பிடவமும் கட்டவிழ்ந்து மலர |
இன்
இசை வானம் இரங்கும் அவர் | இனியதாய்
இசைக்கும் வானம் முழங்குகின்ற, அவர் |
வருதும்
என்ற பருவமோ இதுவே 10 | வந்துவிடுவேன்
என்று சொல்லிச்சென்ற, கார்ப்பருவமே இது> |
| |
#
247 குறிஞ்சி பரணர் | #
247 குறிஞ்சி பரணர் |
| |
தொன்றுபடு
துப்பொடு முரண் மிக சினைஇ | இளைமைமுதல்
இருக்கும் வலிமையோடு பகைமையும் மிகுந்து, சினங்கொண்டு |
கொன்ற
யானை செம் கோடு கழாஅ | புலியைக்
கொன்ற யானையின் சிவந்த கொம்புகளைக் கழுவுமாறு |
அழி
துளி பொழிந்த இன் குரல் எழிலி | மிகுந்த
மழை பொழிந்த இனிய குரலையுடைய மேகம் |
எஃகு
உறு பஞ்சிற்று ஆகி வைகறை | இரும்பு
வில்லினால் அடிக்கப்பட்ட பஞ்சைப் போல் ஆகி, விடியற்காலையில் |
கோடு
உயர் நெடு வரை ஆடும் நாட நீ 5 | உச்சி
உயர்ந்த நெடிய மலையில் தவழும் நாடனே! நீ |
நல்காய்
ஆயினும் நயன் இல செய்யினும் | நீ
அன்புசெய்யாவிட்டாலும், பண்புடைமை இல்லாதவற்றைச் செய்தாலும் |
நின்
வழி படூஉம் என் தோழி நன் நுதல் | உன்
வழியில்தான் நடக்கிறாள் என் தோழி; நல்ல நெற்றியில் |
விருந்து
இறைகூடிய பசலைக்கு | புதிதாய்
வந்து நிலையாய்க் குடியிருக்கும் பசலைக்கு |
மருந்து
பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே | மருந்து
வேறு இல்லை என்பதை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக! |
| |
#
248 முல்லை காசிபன் கீரனார் | #
248 முல்லை காசிபன் கீரனார் |
| |
சிறு
வீ முல்லை தேம் கமழ் பசு வீ | சிறிய
பூக்களைக் கொண்ட முல்லைக்கொடியின் தேன் கமழும் புதிய மலர்கள், |
பொறி
வரி நன் மான் புகர் முகம் கடுப்ப | பொறிக்கப்பட்டதைப்
போன்ற வரிகளையுடைய நல்ல யானையின் புள்ளிகளையுடைய முகத்தைப் போன்று |
தண்
புதல் அணி பெற மலர வண் பெயல் | குளிர்ச்சியான
புதர்கள் அழகுபெற மலர்ந்துநிற்க, மிகுந்த மழையுள்ள |
கார்
வரு பருவம் என்றனர்-மன் இனி | கார்காலமே
திரும்பி வருகின்ற பருவம் என்று சொன்னார் உறுதியாக; இப்போது |
பேர்
அஞர் உள்ளம் நடுங்கல் காணியர் 5 | மிகுந்த
துயரத்தால் என் உள்ளம் நடுங்குவதைக் காண்பதற்காக, |
அன்பு
இன்மையின் பண்பு இல பயிற்றும் | என்மீது
அன்பு இல்லாததால், பண்புக்கொவ்வாதவற்றை மீண்டும் மீண்டும் செய்யும்வகையில் |
பொய்
இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் | பொய்யாக
இடிக்கும் அதிர்ந்த குரலை, கார்வாய்த்தது என்று எண்ணி ஆடுகின்ற |
இன
மயில் மட கணம் போல | ஆண்
இன மயில்களின் அறிவில்லாத கூட்டத்தைப் போல |
நினை
மருள்வேனோ வாழியர் மழையே | உன்னை
எண்ணி மயங்குவேனோ? நீ வாழ்க மழையே! |
| |
#
249 நெய்தல் உலோச்சனார் | #
249 நெய்தல் உலோச்சனார் |
| |
இரும்பின்
அன்ன கரும் கோட்டு புன்னை | இரும்பைப்
போன்ற கரிய கிளைகளையுடைய புன்னைமரத்தின், |
நீலத்து
அன்ன பாசிலை அகம்-தொறும் | நீலம்
போன்ற பசிய இலைகளுக்குள்ளேயெல்லாம் |
வெள்ளி
அன்ன விளங்கு இணர் நாப்பண் | வெள்ளியைப்
போன்று ஒளிவிடும் பூங்கொத்துகளுக்கிடையே |
பொன்னின்
அன்ன நறும் தாது உதிர | பொன்னைப்
போன்ற நறிய பூந்தாதுக்கள் உதிர்வதால் |
புலி
பொறி கொண்ட பூ நாறு குரூஉ சுவல் 5 | புலியினதைப்
போன்ற புள்ளிகளைப் பெற்ற பூக்கள் மணக்கும் நிறமுள்ள மணற்குன்றின்மேல் |
வரி
வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ | வரிகளைக்
கொண்ட வண்டுகள் ஒலியெழுப்பிப் பறப்பதால், அதனைப் புலி என்று எண்ணி வெருண்டு |
பரி
உடை வயங்கு தாள் பந்தின் தாவ | குதிரையின்,
ஓட்டத்தையுடைய ஒளிவிடும் கால்கள் பந்தைப்போல் தாவ, |
தாங்கவும்
தகை வரை நில்லா ஆங்கண் | இழுத்துப்பிடிக்கவும்
தடுத்துநிறுத்தமுடியாமல் நிற்காமல் ஓடுகின்ற அந்த இடத்தில் |
மல்லல்
அம் சேரி கல்லென தோன்றி | வளப்பமுள்ள
அழகிய சேரியின் மக்கள் ஆரவாரத்துடன் தோன்ற, |
அம்பல்
மூதூர் அலர் எழ 10 | கூடிக்
குசுகுசுக்கும் இந்த முதிய ஊரில் பலரறிய பழிச்சொற்கள் எழும்ப, |
சென்றது
அன்றோ கொண்கன் தேரே | சென்றது
அல்லவா நம் காதலனின் தேர். |
| |
#
250 மருதம் மதுரை ஓலை கடையத்தார் நல்வெள்ளையார் | #
250 மருதம் மதுரை ஓலை கடையத்தார் நல்வெள்ளையார் |
| |
நகுகம்
வாராய் பாண பகு வாய் | சிரிக்கலாம்,
வாராய் பாணனே! பிளந்த வாயினையுடைய |
அரி
பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில் | உள்ளே
பரல்கள் இடப்பெற்ற கிண்கிணி ஒலியெழுப்ப, தெருவில் |
தேர்
நடைபயிற்றும் தே மொழி புதல்வன் | விளையாட்டுவண்டிகொண்டு
நடைபயின்றுகொண்டிருந்த இனிய மொழிபேசும் என் புதல்வனின் |
பூ
நாறு செம் வாய் சிதைத்த சாந்தமொடு | பூ
மணக்கும் சிவந்த வாயின் நீர் சிதைத்த மார்புச் சந்தனத்தோடு |
காமர்
நெஞ்சம் துரப்ப யாம் தன் 5 | ஆசைகொண்ட
என் நெஞ்சம் தூண்டிவிட, நான் அவளை |
முயங்கல்
விருப்பொடு குறுகினேம் ஆக | அணைத்துக்கொள்ளும்
விருப்பத்தோடு நெருங்கிச் செல்ல, |
பிறை
வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் | பிறையின்
வனப்பைக் கொண்ட மாசில்லாத அழகிய நெற்றியையும் |
நாறு
இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து | மணக்கின்ற
கரிய திரளான கூந்தலையும் உடைய என் மனைவி வேறாக எண்ணி, |
வெரூஉம்
மான் பிணையின் ஒரீஇ | வெருளும்
பெண்மானைப் போல் ஒதுங்கிக்கொண்டு, |
யாரையோ
என்று இகந்து நின்றதுவே 10 | “யாரையா
நீர்” என்று தள்ளி நின்ற கோலத்தை எண்ணி – |
| |
| |