Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செங்கடாயும் 1
செங்கண்மால் 1
செங்கமலம் 1
செங்கரும்புக்கு 1
செங்கான் 1
செங்கை 1
செங்கை-தனில் 1
செங்கோல் 1
செங்கோன்மை 1
செஞ்சம்பா 1
செஞ்சிக்கும் 1
செஞ்சேவல் 1
செட்டி 1
செண்டலங்காரர் 2
செண்டாடிக்கொண்டு 1
செந்தாழை 1
செந்நெல் 3
செந்நெலும் 1
செப்பறை 1
செப்பி 1
செப்பியவாறு 1
செம் 1
செம்பருந்து 1
செம்பி 1
செம்பொன் 2
செம்பொன்நொறுக்கி 1
செம்மறையன் 1
செய் 2
செய்த 3
செய்ததன் 1
செய்ததை 1
செய்தார் 2
செய்தி 4
செய்து 1
செய்தே 1
செய்யான் 1
செய்யினில் 1
செய்யுமோ 1
செய்யுள் 1
செய்வது 1
செய்வதும் 1
செய்வார் 1
செய்வாரே 1
செய்வேன் 3
செருக்கும் 1
செல்லவே 1
செல்லாது 1
செல்லி 2
செல்லும் 1
செல்வமும் 1
செலவிட்டான் 1
செலவு 2
செலவுக்கு 1
செலவும் 2
செவி 2
செவிக்கு 1
செவியில் 1
செழிக்கவே 1
செழும் 1
செறிந்து 1
சென்றாளே 1
சென்றான் 1
சென்றானே 1
சென்று 3

செங்கடாயும் (1)

கங்கணம் கட்டியே எழு செங்கடாயும் கரையடி சாத்தா முன்னே விரைய வெட்டும் – முக்-பள்ளு:32/4

மேல்

செங்கண்மால் (1)

சூலானது முதிர்ந்தால் தோன்றாதோ பேறு செங்கண்மால்
ஆசூர் நல் நாட்டில் மழையும் அந்த வண்ணம் அன்றோ – முக்-பள்ளு:37/1,2

மேல்

செங்கமலம் (1)

வீழி இதழ் செங்கமலம் மேவும் அனை வாழி நெடும் – முக்-பள்ளு:175/1

மேல்

செங்கரும்புக்கு (1)

செங்கரும்புக்கு கைதரும் போல் வளர் சீவலமங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:26/4

மேல்

செங்கான் (1)

செங்கான் எனக்கு மூத்தவன் ஏதுக்கோ தெய்வத்துக்கு ஆக்கிவைத்தானாம் – முக்-பள்ளு:96/2

மேல்

செங்கை (1)

அங்கும் இங்கும் செங்கை நீட்டி அருதியும் சின்ன மருதியும் அரியாளும் கட்டை பெரியாளும் கும்மியடிப்பதை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:130/4

மேல்

செங்கை-தனில் (1)

சங்கமே செங்கை-தனில் சங்கமே தாங்கேனே – முக்-பள்ளு:49/4

மேல்

செங்கோல் (1)

செஞ்சிக்கும் கூடலுக்கும் தஞ்சைக்கும் ஆணை செல்லும் செங்கோல் வடமலேந்த்ரன் எங்கள் ஊரே – முக்-பள்ளு:14/1

மேல்

செங்கோன்மை (1)

சீர் பூத்த அருவி வரு திருமலைக்கொழுந்து முகில் செங்கோன்மை ஓங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/4

மேல்

செஞ்சம்பா (1)

சித்திரக்காலி வாலான் சிறைமீட்டான் மணல்வாரி செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா – முக்-பள்ளு:108/1

மேல்

செஞ்சிக்கும் (1)

செஞ்சிக்கும் கூடலுக்கும் தஞ்சைக்கும் ஆணை செல்லும் செங்கோல் வடமலேந்த்ரன் எங்கள் ஊரே – முக்-பள்ளு:14/1

மேல்

செஞ்சேவல் (1)

பூத்த தலை செஞ்சேவல் சாத்திரத்தாலே புலியூர் உடையார் கொள்ள பலிதானிடும் – முக்-பள்ளு:33/1

மேல்

செட்டி (1)

எதிர் இல்லாத மயிலையும் செட்டி கொண்டு ஏகினான் பெட்டை என்றார் காண் ஆண்டே – முக்-பள்ளு:71/4

மேல்

செண்டலங்காரர் (2)

அண்டர்நாயகர் செண்டலங்காரர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:19/4
செலவு போனதும் போய் சில பூம்பாளை செண்டலங்காரர் தோப்புக்கே காணும் – முக்-பள்ளு:68/2

மேல்

செண்டாடிக்கொண்டு (1)

செண்டாடிக்கொண்டு பள்ளன் சென்று அழைத்த சொற்படியே – முக்-பள்ளு:81/2

மேல்

செந்தாழை (1)

திருவன் பயிரிடும் புள்ளியில் செந்தாழை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:143/2

மேல்

செந்நெல் (3)

சாய கண்டது காய் குலை செந்நெல் தனிப்ப கண்டது தாபதர் உள்ளம் – முக்-பள்ளு:22/3
அங்கு அசைந்திடும் காய் கதிர் செந்நெல் அளாவி நிற்கும் அ செந்நெலும் அப்பால் – முக்-பள்ளு:26/3
மனத்துக்கு இனிய காவை வடமலேந்திரன் மடத்துக்கு வேண்டும் செந்நெல் வாரி குவிப்பார் – முக்-பள்ளு:139/3

மேல்

செந்நெலும் (1)

அங்கு அசைந்திடும் காய் கதிர் செந்நெல் அளாவி நிற்கும் அ செந்நெலும் அப்பால் – முக்-பள்ளு:26/3

மேல்

செப்பறை (1)

சதியிலே செப்பறை புகு மாட்டை சடை அடையாளம் போய் பார்க்கவேணும் – முக்-பள்ளு:71/3

மேல்

செப்பி (1)

சித்தமுற மூத்தபள்ளி செப்பி மறைந்து ஏகிய பின் – முக்-பள்ளு:91/2

மேல்

செப்பியவாறு (1)

செப்பியவாறு ஆயர் மனை தேடி நடந்தானே – முக்-பள்ளு:76/4

மேல்

செம் (1)

செம் சரண படமிடும் கொச்சியின் மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க சிறிய நுதல் பிறை வெண் நீற்று குறி ஒளிவீச – முக்-பள்ளு:8/1

மேல்

செம்பருந்து (1)

பற்றை காத்துக்கிடக்கும் ஒரு செம்பருந்து சாயல் சுமைக்கு தளப்பன் – முக்-பள்ளு:72/3

மேல்

செம்பி (1)

சின்னி குருந்தி அருதி மருதி செல்லி இருவி எல்லி கலிச்சி திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி செம்பி வம்பி தம்பிச்சாள் – முக்-பள்ளு:126/1

மேல்

செம்பொன் (2)

சிற்றிடையும் செம்பொன் இடைக்கிடை பெற்றிடும் பட்டாங்கும் இலங்க திருமுக்கூடல் வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:6/4
குறுக்கில் வழுதடி சேர்த்திருக்கும் கச்சையும் செம்பொன் கோல புள்ளி உருமாலும் நீல கொண்டையும் – முக்-பள்ளு:10/2

மேல்

செம்பொன்நொறுக்கி (1)

வதைக்கும் மகரம் குதிக்கும் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன் மடந்தை கடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும் பஞ்சலை கருங்கண்ணி – முக்-பள்ளு:50/3

மேல்

செம்மறையன் (1)

குடைக்கொம்பன் செம்மறையன் குத்துக்குளம்பன் மேழை குடைச்செவியன் குற்றாலன் கூடுகொம்பன் – முக்-பள்ளு:109/1

மேல்

செய் (2)

சேர செய் பல பேரிட்டு உள்ளது எல்லாம் எருவைத்தே இன்று திரும்பினேன் இன்னம் தேவரீர் ஏவல் விரும்பினேன் ஆண்டே – முக்-பள்ளு:92/8
சேர்த்த மரமும் கழற்றி செய் வரிசை செய்ததன் பின் – முக்-பள்ளு:107/2

மேல்

செய்த (3)

முன்றில் குட வளை ஊர் முக்கூடல் ஊரர் செய்த
நன்றிக்கு இணையில்லை நான் நெடுமால் ஆனேனே – முக்-பள்ளு:47/1,2
பழிகாரி முக்கூடல்பள்ளி சரடு செய்த பள்ளன் என்று முகம் பாராமல் – முக்-பள்ளு:94/1
கெட்டி கெட்டி பெண்டு ரெண்டு வைத்த குடும்பன் செய்த கெருவமும் வஞ்சகமும் கேளும் பள்ளீரே – முக்-பள்ளு:150/4

மேல்

செய்ததன் (1)

சேர்த்த மரமும் கழற்றி செய் வரிசை செய்ததன் பின் – முக்-பள்ளு:107/2

மேல்

செய்ததை (1)

இப்பால் அழகர் செய்ததை காணலாம் என்றே இருக்கிறேன் என் செய்வேன் ஆண்டே – முக்-பள்ளு:60/4

மேல்

செய்தார் (2)

உறு தெய்வநிலை போற்றி உரிமை சாற்றி ஓங்கு நாள் கதிர் செய்தார் உவகை செய்தார் – முக்-பள்ளு:137/3
உறு தெய்வநிலை போற்றி உரிமை சாற்றி ஓங்கு நாள் கதிர் செய்தார் உவகை செய்தார்
நிறுவி நிரை தெரிந்தார் நெருங்கி அரிந்தார் நிரப்பி அரிகள் எங்கும் பரப்பினாரே – முக்-பள்ளு:137/3,4

மேல்

செய்தி (4)

துள்ளாதே பண்ணை செய்தி
விள்ளடா என்றான் – முக்-பள்ளு:65/3,4
அடைவுபட்ட செய்தி பண்ணை ஆண்டவனார் கேளும் என்றே – முக்-பள்ளு:84/3
சீரும் அழக குடும்பன் செய்தி பெற சொல்லிய பின் – முக்-பள்ளு:112/2
அளந்திடா மகிழ்ச்சி கொண்டான் பண்ணை ஆண்டையை போய் அந்த செய்தி விண்டான் – முக்-பள்ளு:123/2

மேல்

செய்து (1)

ஊருக்குள் ஏற்றம் இவன் இந்த சேரிக்குள் நாற்றம் குடும்பு செய்து ஊராருக்கு உழைத்தான் அழகர் சொம் மாறாக பிழைத்தான் – முக்-பள்ளு:88/2

மேல்

செய்தே (1)

வயல் உழும் குத்தி ஒன்று வளைமேழி ஒன்று இந்த வகை ஏழும் அந்த எழு மரத்தால் செய்தே
இயல்பாய் பதனம்பண்ணி இருப்பது உண்டு அத்தனையும் எண்ணி அறிய வல்லார் எவர் காண் ஆண்டே – முக்-பள்ளு:110/3,4

மேல்

செய்யான் (1)

காக்கும் காலணை பார்க்கவும் செய்யான் காலம் செய்வது கோலம் செய்யுமோ – முக்-பள்ளு:56/2

மேல்

செய்யினில் (1)

சீரின் நடு நாற்று நட செய்யினில் நின்று ஓங்கியதே – முக்-பள்ளு:135/4

மேல்

செய்யுமோ (1)

காக்கும் காலணை பார்க்கவும் செய்யான் காலம் செய்வது கோலம் செய்யுமோ
போக்கு நீக்கு இல்லை மூக்கிலே கோபம் என் புத்தியும் கேளான் சத்துரு நீலன் – முக்-பள்ளு:56/2,3

மேல்

செய்யுள் (1)

மறைபட்டுள்ளது அரும் பொருள் செய்யுள் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:21/4

மேல்

செய்வது (1)

காக்கும் காலணை பார்க்கவும் செய்யான் காலம் செய்வது கோலம் செய்யுமோ – முக்-பள்ளு:56/2

மேல்

செய்வதும் (1)

பாதி கேட்பதும் சோதனை செய்வதும் பார்க்கலாம் பின்பு தீர்க்கலாம் என்றே – முக்-பள்ளு:75/2

மேல்

செய்வார் (1)

தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:3/4

மேல்

செய்வாரே (1)

காட்டு வளம் என்ன கள மருதூர் செய்வாரே – முக்-பள்ளு:மேல்

செய்வேன் (3)

இப்பால் அழகர் செய்ததை காணலாம் என்றே இருக்கிறேன் என் செய்வேன் ஆண்டே – முக்-பள்ளு:60/4
ஏது செய்வேன் என்று ஓதிய பள்ளன்-தன் ஏய்ப்பு கேட்டு அந்த பேய் பண்ணைக்காரன் – முக்-பள்ளு:75/1
அழியாத காசு அழியுமோ நான் ஏது செய்வேன் அழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:94/4

மேல்

செருக்கும் (1)

போதில் மேய்ந்து இள மேதி செருக்கும் புனம் எல்லாம் தண் மலர் விண்டிருக்கும் – முக்-பள்ளு:23/3

மேல்

செல்லவே (1)

பிதிரும் காளை விழியுடன் குடல் அதிரும் காளை மொழியுடன் பெரு மறத்தியர் அல்லவே எனும் கரு மறத்தியர் செல்லவே
கதிரும் காலும் போலவே சென்று உதிரம் காலும் சூல வேல் கன்னி முலையில் சுரந்த பால் என முன்னி முலையில் பரந்ததே – முக்-பள்ளு:42/3,4

மேல்

செல்லாது (1)

சொல்லில் உன் காசு செல்லாது சொல்லடி போடி – முக்-பள்ளு:153/2

மேல்

செல்லி (2)

வாய்த்த சாராயமும் பனை ஊற்று கள்ளும் வடக்கு வாய் செல்லி உண்ண குடத்தில் வையும் – முக்-பள்ளு:33/2
சின்னி குருந்தி அருதி மருதி செல்லி இருவி எல்லி கலிச்சி திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி செம்பி வம்பி தம்பிச்சாள் – முக்-பள்ளு:126/1

மேல்

செல்லும் (1)

செஞ்சிக்கும் கூடலுக்கும் தஞ்சைக்கும் ஆணை செல்லும் செங்கோல் வடமலேந்த்ரன் எங்கள் ஊரே – முக்-பள்ளு:14/1

மேல்

செல்வமும் (1)

சீவலப்பேரி தமிழ் மூவகை கல்வியும் செல்வமும் பெருகவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/1

மேல்

செலவிட்டான் (1)

கருதி பெண்ணுக்கும் ஆணுக்கும் காமன் கலப்பை முற்றும் செலவிட்டான் ஆண்டே – முக்-பள்ளு:73/4

மேல்

செலவு (2)

செலவு போனதும் போய் சில பூம்பாளை செண்டலங்காரர் தோப்புக்கே காணும் – முக்-பள்ளு:68/2
சிற்றாற்று அணைக்கல்லு கட்ட செலவு ஆயிரம் கோட்டை பண்ணை – முக்-பள்ளு:144/1

மேல்

செலவுக்கு (1)

வரத்தினை மீறும் செலவுக்கு தரித்திரம் ஏறும் பேய் கொடை மட்டுக்கட்டு இல்லான் கூத்துக்கும் கொட்டுக்கும் நல்லான் – முக்-பள்ளு:86/1

மேல்

செலவும் (2)

கொத்து வகை அத்தனையும் கூட்டி வரத்தும் செலவும்
வைத்த இருப்பும் குடும்பன் மாறாமல் கூறினனே – முக்-பள்ளு:66/3,4
அளந்த பொலி இத்தனை என்று ஆதாயமும் செலவும்
களம்-தனிலே நின்று பண்ணைக்காரனுடனே குடும்பன் – முக்-பள்ளு:140/2,3

மேல்

செவி (2)

சுருதி எண்ணெழுத்து உண்மை பெரியநம்பியை கேளா துட்டர் செவி புற்று எனவே கொட்டால் வெட்டுவேன் – முக்-பள்ளு:11/2
நடுவே தெய்வம் சோதிச்சுது ஐயோ பண்ணை நயினார்க்கும் செவி கண்ணாச்சே – முக்-பள்ளு:95/2

மேல்

செவிக்கு (1)

கொன்றை குழல் பூங்குழலி செவிக்கு ஆகாதே – முக்-பள்ளு:45/4

மேல்

செவியில் (1)

தேங்குதலை வார்த்தை செவியில் புகுதலுமே – முக்-பள்ளு:119/2

மேல்

செழிக்கவே (1)

பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே பகட்டு கமலை வட்டத்தில் புனல் தகட்டு கமல குட்டத்தில் – முக்-பள்ளு:46/1

மேல்

செழும் (1)

செழும் திருப்பதம் தொழும் தவத்தினர் சித்தம் உருகி நித்தமும் தேடி வரும் முக்கூடல் அழகர் சிற்றாற்று கால் பற்றிலே – முக்-பள்ளு:134/1

மேல்

செறிந்து (1)

பதிந்த நடவு தேறி பசப்பும் ஏறி பசந்து குருத்து மேன்மேல் பரந்து செறிந்து
முதிர்ந்த தமிழிசைக்கு முடி அசைக்கும் முதல்வர் என தழைத்து முதல் குழைந்தே – முக்-பள்ளு:136/1,2

மேல்

சென்றாளே (1)

அ திசையில் நின்று பண்ணை ஆண்டவர் முன் சென்றாளே – முக்-பள்ளு:மேல்

சென்றான் (1)

கிடை நமக்கு நல்ல கிடை என சென்றான் குடும்பன் – முக்-பள்ளு:84/2

மேல்

சென்றானே (1)

உத்தாரம் பண்ணைக்காரன் உரைத்தான் உரையை கேட்ட உடனே குடும்பன் ஏர் கொண்டு உழ சென்றானே – முக்-பள்ளு:மேல்

சென்று (3)

கதிரும் காலும் போலவே சென்று உதிரம் காலும் சூல வேல் கன்னி முலையில் சுரந்த பால் என முன்னி முலையில் பரந்ததே – முக்-பள்ளு:42/4
செண்டாடிக்கொண்டு பள்ளன் சென்று அழைத்த சொற்படியே – முக்-பள்ளு:81/2
சொன்னால் எனக்கு என்ன பயம் மருதூர்ப்பள்ளி சென்று
சொல்லில் உன் காசு செல்லாது சொல்லடி போடி – முக்-பள்ளு:153/1,2

மேல்