Select Page

கட்டுருபன்கள்


கோட்டமும் (1)

வடிக்கும் மதுவை குடிக்கும் ஆசை மயக்கமும் பெரும் தியக்கமும் வரம்பில் பாய்ந்து பரம்பில் சாய்ந்த வாட்டமும் முக கோட்டமும்
துடிக்கும் இதழை கடிக்கும் எயிறும் சோர்ந்து விரிந்த கூந்தலும் தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த கிடையும் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:129/3,4

மேல்

கோட்டி (1)

மெள்ள புருவம் கோட்டி நெரித்தான் மாட்டை மீளவும் பூட்டி உழ தரித்தான் – முக்-பள்ளு:120/2

மேல்

கோட்டு (2)

கோட்டு வளம் கூறிய முக்கூடல் அலங்காரர் திரு – முக்-பள்ளு:16/1
கோட்டு முனையால் அது குத்தும் அளவில் குடும்பன் சற்றே மயக்கம்கொண்டு விழுந்தான் – முக்-பள்ளு:115/4

மேல்

கோட்டை (6)

ஆடி திருநாளுக்கு நெல் ஆறாயிரம் கோட்டை நெட்டை – முக்-பள்ளு:142/1
வரு பங்குனி திருநாள் படி வகைக்கு ஆயிரம் கோட்டை சின்ன – முக்-பள்ளு:143/1
சிற்றாற்று அணைக்கல்லு கட்ட செலவு ஆயிரம் கோட்டை பண்ணை – முக்-பள்ளு:144/1
மண்டகப்படி சாத்துக்கு ஒரு வகை ஆயிரம் கோட்டை கட்டை – முக்-பள்ளு:145/1
நாவாணர்க்கும் மறையோருக்கும் நாலாயிரம் கோட்டை பச்சை – முக்-பள்ளு:146/1
இது அன்றியும் தின பூசை நெல் எண்ணாயிரம் கோட்டை மொண்டி – முக்-பள்ளு:147/1

மேல்

கோடி (4)

சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே மழை தேடி ஒரு கோடி வானம்பாடி ஆடுதே – முக்-பள்ளு:35/3
முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை – முக்-பள்ளு:44/1
முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை – முக்-பள்ளு:44/1
கனக நீள் வடம் கோடி கொடுத்தேன் கார் வரைக்கும் உழும் வடம் ஒன்றே – முக்-பள்ளு:74/2

மேல்

கோடு (1)

வெற்றி விழிக்கு எதிர்கொண்டு இரு கோடு உற்ற கருப்பு இன்னும் எதிர்ந்தால் விரிந்திடும் என்று எண்ணி சற்றே சரிந்த தனமும் – முக்-பள்ளு:6/3

மேல்

கோடுகள் (1)

நெஞ்சு கவர் கன தன மா மத குஞ்சர இணை கோடுகள் அசைய நீல வட கல்லுடன் கோவை தாலியும் இலங்க – முக்-பள்ளு:8/3

மேல்

கோடை (1)

கோடை போய்விட்ட சோபனம் கொண்டு குளிர்ந்த கொன்றை முறும் தளிர் ஓட – முக்-பள்ளு:17/3

மேல்

கோணப்பூவன் (1)

போத்தன் அருதன் கோணப்பூவன் மருதன் பூலான் வயித்தி வேலான் புலியன் கலியன் – முக்-பள்ளு:114/2

மேல்

கோணாமல் (1)

சத்தியமாய் சொன்ன பள்ளன் சற்றும் மனம் கோணாமல்
புத்திசொல்லி உன் சிறை நான் போய் மீட்பேன் என்று எழுந்து – முக்-பள்ளு:102/1,2

மேல்

கோதிலான் (1)

கோதிலான் அந்த சாதி இடையனை கூட்டிவா பள்ளா கூட்டிவா என்றான் – முக்-பள்ளு:75/4

மேல்

கோப்பை (1)

கள்ளால் உற்றது மீறியே நிலைகொள்ளாமல் தடுமாறியே காப்பை காட்டு என்று கையை பிடிக்கும் கோப்பை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:131/4

மேல்

கோபம் (2)

போக்கு நீக்கு இல்லை மூக்கிலே கோபம் என் புத்தியும் கேளான் சத்துரு நீலன் – முக்-பள்ளு:56/3
வாராதோ எனக்கு கோபம் முக்கூடல்பள்ளி முந்த – முக்-பள்ளு:172/3

மேல்

கோபுரம் (1)

கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும் – முக்-பள்ளு:19/1

மேல்

கோர (1)

கோர சிறை வீர புய முக்கூடல் பதி ஆடல் கருட கோனை பெரியோனை பரவ குறைவிலை நமக்கே – முக்-பள்ளு:2/4

மேல்

கோரை (1)

கோரை குண்டு ஓடை ஓரத்தில் புரவும் பார்வையான குத்துக்கல்லு குளத்து பற்றும் முத்தன் பகுதியும் – முக்-பள்ளு:92/4

மேல்

கோல் (2)

தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:3/4
கோல் ஒரு கை கொண்டு கடைக்காலும் ஒரு கை தூக்கி கோனேரிக்கோன் ஆட்டு கிடை கொண்டுவந்தான் – முக்-பள்ளு:82/4

மேல்

கோல (1)

குறுக்கில் வழுதடி சேர்த்திருக்கும் கச்சையும் செம்பொன் கோல புள்ளி உருமாலும் நீல கொண்டையும் – முக்-பள்ளு:10/2

மேல்

கோலம் (1)

காக்கும் காலணை பார்க்கவும் செய்யான் காலம் செய்வது கோலம் செய்யுமோ – முக்-பள்ளு:56/2

மேல்

கோலுவீர் (1)

கரத்தொடு மரமும் பசும் புரை மரத்தொடு கரமும் சேர்த்து இரு காலினில் விலங்கும் பருக்கவே கோலுவீர் ஆண்டே – முக்-பள்ளு:86/4

மேல்

கோவலர் (2)

மணி மரகத சோதியர் ஆதியர் மனு மரபினில் காவலர் கோவலர் மறை முதல்வர் முக்கூடலர் ஏடலர் வாசத்துளவோர் – முக்-பள்ளு:1/1
குன்றை குடை கவித்த கோவலர் முக்கூடலிலே – முக்-பள்ளு:45/1

மேல்

கோவித்து (1)

தாவி பறந்து பணிகள் பதுங்க கோவித்து எழுந்த கருடனும் தானே ஆகி உலகுக்கு உரிமை ஊனே ஆகி உயிருமாய் – முக்-பள்ளு:38/3

மேல்

கோவில் (3)

வித்தார கமலையை விமலையை மெய் கோவில் புரம் மிசை உரம் மிசை மிக்காக பரிபவர் தெரிபவர் வேத சிற்பரத்தார் – முக்-பள்ளு:4/1
கோவில் பெரிய வடமலேந்திரன் மாவில் கறுத்து பொழிந்த பின் குளிருகின்றது கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே – முக்-பள்ளு:38/4
அடியனும் நாயனுமாய் கோவில் புறகே தொண்டன் – முக்-பள்ளு:167/1

மேல்

கோவிலுக்குள்ளே (1)

ஒற்றை கொம்பனை தாண்டவராயன் உள்ளூர் கோவிலுக்குள்ளே அடைத்தான் – முக்-பள்ளு:72/1

மேல்

கோவை (1)

நெஞ்சு கவர் கன தன மா மத குஞ்சர இணை கோடுகள் அசைய நீல வட கல்லுடன் கோவை தாலியும் இலங்க – முக்-பள்ளு:8/3

மேல்

கோழி (3)

வாடை ஓடிவர கோழி கூவும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:17/4
தென்றல் ஓடிவர கோழி கூவும் சீவல மங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:18/4
கொழியல் அரிசி இட்டாலும் குப்பை கிண்டும் கோழி என்பதை புதுக்கினாள் – முக்-பள்ளு:94/3

மேல்

கோளை (1)

வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன் மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன் – முக்-பள்ளு:51/2

மேல்

கோன் (2)

கோவில் பெரிய வடமலேந்திரன் மாவில் கறுத்து பொழிந்த பின் குளிருகின்றது கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே – முக்-பள்ளு:38/4
கோனை கண்டவனோ கோன் தலை பேனை கண்டவனோ போய் அவள் குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான் – முக்-பள்ளு:89/3

மேல்

கோனடா (1)

நாதக்கோன் முக்கூடல் ஆதிக்கோன் பண்ணை வயல் நானடா உரம் ஏற்றும் கோனடா குடும்பா – முக்-பள்ளு:83/4

மேல்

கோனேரிக்கோன் (2)

கொண்டாடும் கோனேரிக்கோன் வந்து தோன்றினனே – முக்-பள்ளு:81/4
கோல் ஒரு கை கொண்டு கடைக்காலும் ஒரு கை தூக்கி கோனேரிக்கோன் ஆட்டு கிடை கொண்டுவந்தான் – முக்-பள்ளு:82/4

மேல்

கோனை (3)

கோர சிறை வீர புய முக்கூடல் பதி ஆடல் கருட கோனை பெரியோனை பரவ குறைவிலை நமக்கே – முக்-பள்ளு:2/4
வான குருசில் வள்ளலாய் வரை கோனை பரிசு கொள்ளலாய் வழங்குமாறும் புறப்பட்டே புனல் முழங்குமாறும் திறப்பட்டே – முக்-பள்ளு:40/1
கோனை கண்டவனோ கோன் தலை பேனை கண்டவனோ போய் அவள் குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான் – முக்-பள்ளு:89/3

மேல்