Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குகன் 1
குங்குமத்தோடு 1
குச்சில் 1
குச்சினில் 1
குச்சுக்குள்ளே 1
குஞ்சர 1
குஞ்சுக்கு 1
குட்டத்தில் 1
குட்டிகளும் 1
குட்டியை 1
குட்டை 1
குட்டை-தனில் 1
குட்டையில் 2
குட 1
குடத்தில் 1
குடத்தை 2
குடல் 1
குடிக்கும் 1
குடித்த 1
குடித்தரங்கள் 1
குடித்தாலும் 1
குடித்து 1
குடியில் 1
குடில்களையும் 1
குடிலில் 3
குடிலிலிருந்தே 1
குடிலை 1
குடும்பன் 17
குடும்பனுடன் 1
குடும்பனை 2
குடும்பா 6
குடும்பு 1
குடை 3
குடைக்கொம்பன் 1
குடைச்செவியன் 1
குண்டு 1
குண்டுணிக்காரி 1
குத்தி 1
குத்து 2
குத்துக்கல்லு 1
குத்துக்குளம்பன் 1
குத்தும் 1
குதிக்க 2
குதிக்கும் 1
குதிப்பும் 1
குதிரை 1
குப்பை 1
கும்பிட்டு 1
கும்பிட்டே 1
கும்பிட்டேன் 1
கும்மியடிப்பதை 1
குமுக்கா 1
குயில் 1
குயிலே 12
குரங்கு 1
குரம்பினில் 1
குரவமும் 1
குரவை 3
குரவையிட்ட 1
குரவையிட்டு 1
குருகைமாறனை 1
குருகையில் 1
குருசில் 1
குருத்து 1
குருந்தி 2
குல்லை 1
குலங்களுடன் 1
குலங்காள் 1
குலத்தில் 1
குலப்பத்தனார் 1
குலுக்கி 1
குலுங்கவே 1
குலை 2
குலைத்து 1
குலைவாழை 1
குவித்த 1
குவிப்பார் 2
குழகர் 1
குழம்பி 1
குழல் 2
குழலார் 1
குழைந்தே 1
குழைபட்டுள்ளது 1
குழையினும் 1
குளங்கல் 1
குளத்தில் 2
குளத்து 1
குளம் 1
குளவி 2
குளிர் 1
குளிர்ந்த 1
குளிரக்குளிர 1
குளிருகின்றது 1
குற்றால 1
குற்றாலன் 1
குற 1
குறி 2
குறிக்கிறான் 1
குறித்த 1
குறித்தான் 2
குறித்து 1
குறியீர் 1
குறியுண்டாகியதே 1
குறுக்கில் 1
குறுக 1
குறும்பு 1
குறுவை 1
குறைபட்டுள்ளது 1
குறையோ 1
குறைவிலை 1
குன்றாய் 1
குன்றில் 1
குன்று 1
குன்றை 1
குனியும் 1

குகன் (1)

படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும் பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார் – முக்-பள்ளு:128/1

மேல்

குங்குமத்தோடு (1)

குங்குமத்தோடு சந்தனமும் கலந்து குமுக்கா உடையார் அய்யர்-தமக்கு சாத்தும் – முக்-பள்ளு:32/3

மேல்

குச்சில் (1)

காத்திராத பள்ளனை பரமார்த்தி என்பாராம் குச்சில் கண்ணை சாய்ப்பாராம் முக்கூடல் பண்ணைக்காரனார் – முக்-பள்ளு:54/4

மேல்

குச்சினில் (1)

கோனை கண்டவனோ கோன் தலை பேனை கண்டவனோ போய் அவள் குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான் – முக்-பள்ளு:89/3

மேல்

குச்சுக்குள்ளே (1)

குச்சுக்குள்ளே பள்ளனையும் – முக்-பள்ளு:63/1

மேல்

குஞ்சர (1)

நெஞ்சு கவர் கன தன மா மத குஞ்சர இணை கோடுகள் அசைய நீல வட கல்லுடன் கோவை தாலியும் இலங்க – முக்-பள்ளு:8/3

மேல்

குஞ்சுக்கு (1)

ஆனை குட்டியை போல் எருமையை ஞானிச்செட்டி கைக்கே பணம் பதினைஞ்சுக்கு கொடுத்தான் கொழுந்தியார் குஞ்சுக்கு இட்டெடுத்தான் – முக்-பள்ளு:89/1

மேல்

குட்டத்தில் (1)

பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே பகட்டு கமலை வட்டத்தில் புனல் தகட்டு கமல குட்டத்தில்
போயும் எருமை பதறவே உரம் ஈயும் எரு மை சிதறவே புழுதி சாலை நனைத்துமே குளிர் கொழுதி சாலை அனைத்துமே – முக்-பள்ளு:46/1,2

மேல்

குட்டிகளும் (1)

குட்டிகளும் கொண்டு சிறு குடில்களையும் கொண்டு ஆட்டு – முக்-பள்ளு:79/1

மேல்

குட்டியை (1)

ஆனை குட்டியை போல் எருமையை ஞானிச்செட்டி கைக்கே பணம் பதினைஞ்சுக்கு கொடுத்தான் கொழுந்தியார் குஞ்சுக்கு இட்டெடுத்தான் – முக்-பள்ளு:89/1

மேல்

குட்டை (1)

சட்டைபண்ணாது ஏசிக்காட்டு முக்கூடல்பள்ளி குட்டை
சாத்துவாய் கழற்றுவாய் உன் தந்திரமடி – முக்-பள்ளு:159/3,4

மேல்

குட்டை-தனில் (1)

குட்டை-தனில் போட்டதற்கோ மருதூர்ப்பள்ளி அந்த – முக்-பள்ளு:159/1

மேல்

குட்டையில் (2)

பேச்சிட்டு பாரும் மரக்கணு வாச்சிக்கு தீரும் பயப்பட பிடித்தது பிடியாய் குட்டையில் அடித்திடும் ஆண்டே – முக்-பள்ளு:90/4
குட்டையில் போடு உனக்கு அவன் கும்பிட்டு அஞ்சுவான் – முக்-பள்ளு:158/4

மேல்

குட (1)

முன்றில் குட வளை ஊர் முக்கூடல் ஊரர் செய்த – முக்-பள்ளு:47/1

மேல்

குடத்தில் (1)

வாய்த்த சாராயமும் பனை ஊற்று கள்ளும் வடக்கு வாய் செல்லி உண்ண குடத்தில் வையும் – முக்-பள்ளு:33/2

மேல்

குடத்தை (2)

சாதி நால் வளம் நீதி பெருக்கும் தடத்து வாளை குடத்தை நெருக்கும் – முக்-பள்ளு:23/2
தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3

மேல்

குடல் (1)

பிதிரும் காளை விழியுடன் குடல் அதிரும் காளை மொழியுடன் பெரு மறத்தியர் அல்லவே எனும் கரு மறத்தியர் செல்லவே – முக்-பள்ளு:42/3

மேல்

குடிக்கும் (1)

வடிக்கும் மதுவை குடிக்கும் ஆசை மயக்கமும் பெரும் தியக்கமும் வரம்பில் பாய்ந்து பரம்பில் சாய்ந்த வாட்டமும் முக கோட்டமும் – முக்-பள்ளு:129/3

மேல்

குடித்த (1)

தண்ணீர் குடித்த வெறியால் முதல் சொன்னேன் ஆண்டே – முக்-பள்ளு:106/2

மேல்

குடித்தரங்கள் (1)

கொள்ள தமது குடித்தரங்கள் கூறினரே – முக்-பள்ளு:12/4

மேல்

குடித்தாலும் (1)

கொஞ்ச பேச்சுகள் சொல்லாதே வாய் தண்ணீர் குடித்தாலும் கொப்புளித்தாலும் ஆமே – முக்-பள்ளு:99/2

மேல்

குடித்து (1)

மக்கள் ஆணை என் ஆணை உன் ஆணை நீ வார்த்த கஞ்சி குடித்து கிடப்பேன் – முக்-பள்ளு:101/3

மேல்

குடியில் (1)

அத்தனை காலமும்தொட்டு இத்தனை காலமும் கண்டு அடியடி வாழையாய் நான் குடியில் வந்தேன் – முக்-பள்ளு:13/2

மேல்

குடில்களையும் (1)

குட்டிகளும் கொண்டு சிறு குடில்களையும் கொண்டு ஆட்டு – முக்-பள்ளு:79/1

மேல்

குடிலில் (3)

காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:46/4
குடிலில் கிடந்த பள்ளனை முக்கூடல்பள்ளி கூப்பிட்டு எழுப்பி முந்தாநாள் – முக்-பள்ளு:59/1
இடையரை கொண்டே வயலில் ஏவி இளையாள் குடிலில்
கிடை நமக்கு நல்ல கிடை என சென்றான் குடும்பன் – முக்-பள்ளு:84/1,2

மேல்

குடிலிலிருந்தே (1)

குடிலிலிருந்தே அரை – முக்-பள்ளு:64/3

மேல்

குடிலை (1)

காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:46/4

மேல்

குடும்பன் (17)

மறுக்கும் மதுவெறிகொண்டு உறுக்கும் சிரிப்பும் தோன்ற வடிவழக குடும்பன் வந்து தோன்றினானே – முக்-பள்ளு:10/4
பத்திலே பதினொன்றாக வைத்தானில்லை குடும்பன் பண்டே சரடுகட்டி கொண்டான் என்னை – முக்-பள்ளு:13/3
மை கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து உண்டாக்கும் வடிவழக குடும்பன் நானே ஆண்டே – முக்-பள்ளு:15/4
வடிவழக குடும்பன்
குடிலிலிருந்தே அரை – முக்-பள்ளு:64/2,3
வைத்த இருப்பும் குடும்பன் மாறாமல் கூறினனே – முக்-பள்ளு:66/4
கிடை நமக்கு நல்ல கிடை என சென்றான் குடும்பன்
அடைவுபட்ட செய்தி பண்ணை ஆண்டவனார் கேளும் என்றே – முக்-பள்ளு:84/2,3
சீரும் அழக குடும்பன் செய்தி பெற சொல்லிய பின் – முக்-பள்ளு:112/2
உத்தாரம் பண்ணைக்காரன் உரைத்தான் உரையை கேட்ட உடனே குடும்பன் ஏர் கொண்டு உழ சென்றானே – முக்-பள்ளு:113/4
மாட்டு குறும்பு அடங்க மறிப்பன் எனவே வடிவழக குடும்பன் வந்து மறித்தான் – முக்-பள்ளு:115/3
கோட்டு முனையால் அது குத்தும் அளவில் குடும்பன் சற்றே மயக்கம்கொண்டு விழுந்தான் – முக்-பள்ளு:115/4
மறுகிமறுகி சருவ குடும்பன் மச்சினி கூழைப்பிச்சியை வா என்றான் அவள் போ என்றாள் இவன் மறித்தான் அவள் பின் பிரித்து போய் – முக்-பள்ளு:132/3
முத்த குடும்பன் பெற்ற பொத்தாணி மொண்டி சோரன் மாறனூர் மூக்கி தமக்கை காக்கி கறுப்பி மூவிக்கு இளைய நூவி-தன் – முக்-பள்ளு:133/2
எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவ குடும்பன் மருமகன் ஈச்ச குடும்பன் பாச்சக்காலை எட்டி முட்டி தட்டியே – முக்-பள்ளு:134/3
எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவ குடும்பன் மருமகன் ஈச்ச குடும்பன் பாச்சக்காலை எட்டி முட்டி தட்டியே – முக்-பள்ளு:134/3
களம்-தனிலே நின்று பண்ணைக்காரனுடனே குடும்பன்
உளம் தடுமாறாதவகை உள்ளபடி சொன்னானே – முக்-பள்ளு:140/3,4
பெற்றா குடும்பன் புள்ளியில் கண்ட பெருவெள்ளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:144/2
கெட்டி கெட்டி பெண்டு ரெண்டு வைத்த குடும்பன் செய்த கெருவமும் வஞ்சகமும் கேளும் பள்ளீரே – முக்-பள்ளு:150/4

மேல்

குடும்பனுடன் (1)

கூரும் முகிழ்த்தம் குடும்பனுடன் சொன்னானே – முக்-பள்ளு:112/4

மேல்

குடும்பனை (2)

ஆசைப்பட்ட குடும்பனை அஞ்ச சொல்லடி – முக்-பள்ளு:158/2
குடும்பனை பிணைப்பட்டு கொண்டு மீட்டாய் – முக்-பள்ளு:159/2

மேல்

குடும்பா (6)

பூதக்கோன் பொது ஆட்டை வாதுக்கே ஒரு பாம்பும் புலியும் காத்திருக்கும் அது கலி கண்டாய் குடும்பா
வேதக்கோன் கிடை ஆண்டது ஏதுக்காய் அவன் சாதி வீதி-தொறும் கிடந்த கிடை பேதியான் குடும்பா – முக்-பள்ளு:83/1,2
வேதக்கோன் கிடை ஆண்டது ஏதுக்காய் அவன் சாதி வீதி-தொறும் கிடந்த கிடை பேதியான் குடும்பா
தாதக்கோன் ஆட்டை முதல் சோதித்தேன் பணத்துக்கே தனதாக நிறுத்தினது உன் மனது அறியும் குடும்பா – முக்-பள்ளு:83/2,3
தாதக்கோன் ஆட்டை முதல் சோதித்தேன் பணத்துக்கே தனதாக நிறுத்தினது உன் மனது அறியும் குடும்பா
நாதக்கோன் முக்கூடல் ஆதிக்கோன் பண்ணை வயல் நானடா உரம் ஏற்றும் கோனடா குடும்பா – முக்-பள்ளு:83/3,4
நாதக்கோன் முக்கூடல் ஆதிக்கோன் பண்ணை வயல் நானடா உரம் ஏற்றும் கோனடா குடும்பா – முக்-பள்ளு:/117
படுத்த கிடை எழுந்திருந்து கொள்ளாய் வடிவழகர் பாதம் மறவாத பண்ணை குடும்பா – முக்-பள்ளு:மேல்

குடும்பு (1)

ஊருக்குள் ஏற்றம் இவன் இந்த சேரிக்குள் நாற்றம் குடும்பு செய்து ஊராருக்கு உழைத்தான் அழகர் சொம் மாறாக பிழைத்தான் – முக்-பள்ளு:88/2

மேல்

குடை (3)

வென்றல்லோவிடுவேன் என வேள் இருள் வேழம் கூடி மதி குடை தாவ – முக்-பள்ளு:18/1
குன்றை குடை கவித்த கோவலர் முக்கூடலிலே – முக்-பள்ளு:45/1
குடை குன்றாய் பசு கிடை நின்றார் முக்கூடல் அழகர் வயலுள்ளே கொண்டாடிக்கொண்டு நடச்செய்தே இன்று கண்டோம் இது என்ன புதுமையோ – முக்-பள்ளு:128/2

மேல்

குடைக்கொம்பன் (1)

குடைக்கொம்பன் செம்மறையன் குத்துக்குளம்பன் மேழை குடைச்செவியன் குற்றாலன் கூடுகொம்பன் – முக்-பள்ளு:109/1

மேல்

குடைச்செவியன் (1)

குடைக்கொம்பன் செம்மறையன் குத்துக்குளம்பன் மேழை குடைச்செவியன் குற்றாலன் கூடுகொம்பன் – முக்-பள்ளு:109/1

மேல்

குண்டு (1)

கோரை குண்டு ஓடை ஓரத்தில் புரவும் பார்வையான குத்துக்கல்லு குளத்து பற்றும் முத்தன் பகுதியும் – முக்-பள்ளு:92/4

மேல்

குண்டுணிக்காரி (1)

முடுக வா ராசியம் உண்டு குண்டுணிக்காரி மூத்தபள்ளி பார்க்க வருவாள் – முக்-பள்ளு:95/1

மேல்

குத்தி (1)

வயல் உழும் குத்தி ஒன்று வளைமேழி ஒன்று இந்த வகை ஏழும் அந்த எழு மரத்தால் செய்தே – முக்-பள்ளு:110/3

மேல்

குத்து (2)

தறுகி அறுகம் கொடியிலே அடிதட்டி விழுந்தமட்டிலே தலையை தாங்குறா போலே குத்து முலையை தாங்குறான் பள்ளீரே – முக்-பள்ளு:132/4
குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்த சிறுக்கியும் கூசிப்பார்க்கிறாள் அதுக்கு அவன் மெள்ள பேசிப்பார்க்கும் ஆசையால் – முக்-பள்ளு:133/3

மேல்

குத்துக்கல்லு (1)

கோரை குண்டு ஓடை ஓரத்தில் புரவும் பார்வையான குத்துக்கல்லு குளத்து பற்றும் முத்தன் பகுதியும் – முக்-பள்ளு:92/4

மேல்

குத்துக்குளம்பன் (1)

குடைக்கொம்பன் செம்மறையன் குத்துக்குளம்பன் மேழை குடைச்செவியன் குற்றாலன் கூடுகொம்பன் – முக்-பள்ளு:109/1

மேல்

குத்தும் (1)

கோட்டு முனையால் அது குத்தும் அளவில் குடும்பன் சற்றே மயக்கம்கொண்டு விழுந்தான் – முக்-பள்ளு:115/4

மேல்

குதிக்க (2)

பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும் பக்க கொண்டையினும் குழையினும் தைக்க குதிக்க
நெஞ்சு கவர் கன தன மா மத குஞ்சர இணை கோடுகள் அசைய நீல வட கல்லுடன் கோவை தாலியும் இலங்க – முக்-பள்ளு:8/2,3
மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி முடிக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட – முக்-பள்ளு:115/2

மேல்

குதிக்கும் (1)

வதைக்கும் மகரம் குதிக்கும் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன் மடந்தை கடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும் பஞ்சலை கருங்கண்ணி – முக்-பள்ளு:50/3

மேல்

குதிப்பும் (1)

சறுக்கும்-தொறும் குதிப்பும் சுறுக்கும் தலையசைப்பும் தடி சுற்றி ஏப்பமிட்டே அடிவைப்பதும் – முக்-பள்ளு:10/3

மேல்

குதிரை (1)

நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட – முக்-பள்ளு:82/2

மேல்

குப்பை (1)

கொழியல் அரிசி இட்டாலும் குப்பை கிண்டும் கோழி என்பதை புதுக்கினாள் – முக்-பள்ளு:94/3

மேல்

கும்பிட்டு (1)

குட்டையில் போடு உனக்கு அவன் கும்பிட்டு அஞ்சுவான் – முக்-பள்ளு:158/4

மேல்

கும்பிட்டே (1)

வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே
பந்திப்படுத்தி நிரையை வகுத்து பரவை ஒலி போல் குரவை எழுப்பி பயிர் நெருங்காமல் கலந்து போகாமல் பதியும் பள்ளீரே – முக்-பள்ளு:125/3,4

மேல்

கும்பிட்டேன் (1)

ஐயா பராக்கு பராக்கு உம்மை கும்பிட்டேன் ஆண்டே உம்மை – முக்-பள்ளு:103/1

மேல்

கும்மியடிப்பதை (1)

அங்கும் இங்கும் செங்கை நீட்டி அருதியும் சின்ன மருதியும் அரியாளும் கட்டை பெரியாளும் கும்மியடிப்பதை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:130/4

மேல்

குமுக்கா (1)

குங்குமத்தோடு சந்தனமும் கலந்து குமுக்கா உடையார் அய்யர்-தமக்கு சாத்தும் – முக்-பள்ளு:32/3

மேல்

குயில் (1)

கூவாய் என்று அந்த குயில் மொழியை கொண்டாரே – முக்-பள்ளு:27/4

மேல்

குயிலே (12)

கார் பூத்த வண்ணனார் கண்ணனார் அழகர்படி கட்டளைகள் உயரவே கூவாய் குயிலே
பேர் பூத்த முக்கூடல் மிக்க ராமானுச பீடம் மிக விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/1,2
பேர் பூத்த முக்கூடல் மிக்க ராமானுச பீடம் மிக விளங்கவே கூவாய் குயிலே
பார் பூத்த கீர்த்தி பெறும் வைணவரும் தானிகரும் பரிசனமும் வாழவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/2,3
பார் பூத்த கீர்த்தி பெறும் வைணவரும் தானிகரும் பரிசனமும் வாழவே கூவாய் குயிலே
சீர் பூத்த அருவி வரு திருமலைக்கொழுந்து முகில் செங்கோன்மை ஓங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/3,4
சீர் பூத்த அருவி வரு திருமலைக்கொழுந்து முகில் செங்கோன்மை ஓங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/1,2
மா வளத்துடன் அழகர் தாவளக்குடி வாழ மருதூரை வாழ்த்தியே கூவாய் குயிலே
பாவலர்க்கு உபகாரி காவை அம்பலவாணன் பல கிளையும் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/2,3
பாவலர்க்கு உபகாரி காவை அம்பலவாணன் பல கிளையும் தழைக்கவே கூவாய் குயிலே
காவலர்க்கு உயர் பெருமை மேவு தேர்ப்பால்_அழகர் கட்டளைகள் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/3,4
காவலர்க்கு உயர் பெருமை மேவு தேர்ப்பால்_அழகர் கட்டளைகள் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/1,2
அருள் பெறும் தரும நிதி சாத்தூரில் பெரியநம்பிஅய்யங்கார் வாழவே கூவாய் குயிலே
பெரு வளம் தரு நாடு திங்கள் மும்மாரியும் பெய்ய மழை வேண்டியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/2,3
பெரு வளம் தரு நாடு திங்கள் மும்மாரியும் பெய்ய மழை வேண்டியே கூவாய் குயிலே
கரு நெடும் புயல் அழகர் மருவு சந்நிதி கற்பகாலங்கள் விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/3,4
கரு நெடும் புயல் அழகர் மருவு சந்நிதி கற்பகாலங்கள் விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:மேல்

குரங்கு (1)

அழகர் ஏவலினாலே இலங்கை அழித்து மீளும் குரங்கு உள்ளமட்டும் – முக்-பள்ளு:67/3

மேல்

குரம்பினில் (1)

பங்கயம் தலைநீட்டி குரம்பினில் பச்சை இஞ்சியின் பார் சடை தீண்டும் – முக்-பள்ளு:26/1

மேல்

குரவமும் (1)

எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும் இருப்பை ஈந்து கள்ளியும் கரை பொருப்பை ஈர்ந்து தள்ளியும் – முக்-பள்ளு:42/1

மேல்

குரவை (3)

சேரி குரவை எழ தெய்வநிலை போற்றினரே – முக்-பள்ளு:31/4
வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன் மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன் – முக்-பள்ளு:51/2
பந்திப்படுத்தி நிரையை வகுத்து பரவை ஒலி போல் குரவை எழுப்பி பயிர் நெருங்காமல் கலந்து போகாமல் பதியும் பள்ளீரே – முக்-பள்ளு:125/4

மேல்

குரவையிட்ட (1)

முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில் பள்ளர் முழுதும் குரவையிட்ட எழு தினம் ஆடீர் – முக்-பள்ளு:36/4

மேல்

குரவையிட்டு (1)

கூத்தன் முதலாய் உள்ள பள்ளர் எல்லாம் குரவையிட்டு ஏரை பூட்டி கூடி உழுதார் – முக்-பள்ளு:114/4

மேல்

குருகைமாறனை (1)

கூடினால் கூடும் வல் வித்தை எல்லாம் குருகைமாறனை கேளும் காண் ஆண்டே – முக்-பள்ளு:70/4

மேல்

குருகையில் (1)

நத்து ஓல குருகையில் வருகையில் நட்பாக புளி நடு வெளிபடு நல் போதத்து அருள் பொழி திருவிழி ஞான வித்து எனக்கே – முக்-பள்ளு:4/4

மேல்

குருசில் (1)

வான குருசில் வள்ளலாய் வரை கோனை பரிசு கொள்ளலாய் வழங்குமாறும் புறப்பட்டே புனல் முழங்குமாறும் திறப்பட்டே – முக்-பள்ளு:40/1

மேல்

குருத்து (1)

பதிந்த நடவு தேறி பசப்பும் ஏறி பசந்து குருத்து மேன்மேல் பரந்து செறிந்து – முக்-பள்ளு:136/1

மேல்

குருந்தி (2)

சின்னி குருந்தி அருதி மருதி செல்லி இருவி எல்லி கலிச்சி திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி செம்பி வம்பி தம்பிச்சாள் – முக்-பள்ளு:126/1
இடை என்றால் வஞ்சி கொடியை போல் வரும் நடை என்றால் இளம் பிடியை போல் இருந்த சாயலுக்கு இப்பால் குருந்தி திருந்தினாள் அடி பள்ளீரே – முக்-பள்ளு:128/4

மேல்

குல்லை (1)

குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:44/4

மேல்

குலங்களுடன் (1)

குலங்களுடன் மடிந்த கொலை வாள் அரக்கர் வேலும் கூர்வாளும் சேர்த்து அடித்த கொழு ஆயிரம் – முக்-பள்ளு:111/3

மேல்

குலங்காள் (1)

அன்றில் குலங்காள் அவர்க்கு இது நீர் சொல்லீரே – முக்-பள்ளு:47/4

மேல்

குலத்தில் (1)

மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கு ஓர் – முக்-பள்ளு:12/1

மேல்

குலப்பத்தனார் (1)

பாட்டு வளம் சேர குலப்பத்தனார் மாலிகை பூம் – முக்-பள்ளு:16/3

மேல்

குலுக்கி (1)

தாங்கு துயர் நீங்கி தலை அசைத்து தோள் குலுக்கி
பாங்கினொடு முக்கூடல்பள்ளன் எழுந்தானே – முக்-பள்ளு:119/3,4

மேல்

குலுங்கவே (1)

எங்கும் காப்பு ஒலி பொங்கவே அதற்கு எதிராய் சங்கிலி அதிரவே இலங்கும் முலைகள் குலுங்கவே காதில் இசையும் பணிகள் அசையவே – முக்-பள்ளு:130/3

மேல்

குலை (2)

சாய கண்டது காய் குலை செந்நெல் தனிப்ப கண்டது தாபதர் உள்ளம் – முக்-பள்ளு:22/3
ஓதும் அந்த பலாக்கனி வாழை உளுக்கவே சுமந்து ஒண் குலை சாய்க்கும் – முக்-பள்ளு:25/3

மேல்

குலைத்து (1)

அடிக்குள் அடங்கும்படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே ஆடிப்பாடி நாற்று முடியை அலைத்து குலைத்து நடச்செய்தே – முக்-பள்ளு:129/2

மேல்

குலைவாழை (1)

தங்கும் பேரை குலைவாழை காய்த்தது சற்றுமோ நெல் அரிசி காணாது – முக்-பள்ளு:69/2

மேல்

குவித்த (1)

அந்த தொளிக்கு சமைந்த நாற்றை அடுத்த வயலில் பிடுங்கி வேறே அடுக்கி முடிந்து வட்டவட்டங்களாய் குவித்த பின் – முக்-பள்ளு:125/2

மேல்

குவிப்பார் (2)

பொடி வைக்கோலை தவிர்ப்பார் பொலியை குவிப்பார் பொலி தூற்றி ஆற்றி பொலி பொலி என்று அளப்பார் – முக்-பள்ளு:138/4
மனத்துக்கு இனிய காவை வடமலேந்திரன் மடத்துக்கு வேண்டும் செந்நெல் வாரி குவிப்பார்
கனக்கும் சிறப்பு அமைய கட்டி அளப்பார் கங்காணப்படி பண்ணைக்காரனார் முன்னே – முக்-பள்ளு:139/3,4

மேல்

குழகர் (1)

முத்தேவில் பெரியவர் கரியவர் முப்பான்மை தொழிலினர் எழிலினர் முக்கூடல் குழகர் மெய் அழகர் பள் மூவகை தமிழ்க்கே – முக்-பள்ளு:4/2

மேல்

குழம்பி (1)

குறுவை அறு தாளடியையும் பள்ளன் புரவி உழுத தடியையும் குழம்பி பரம்பு தடவி காலிட்டு உழப்பி சம்பா நடச்செய்தே – முக்-பள்ளு:132/2

மேல்

குழல் (2)

கொன்றை குழல் பூங்குழலி செவிக்கு ஆகாதே – முக்-பள்ளு:45/4
எண்ணெய் ஆர் பூந்தயிலம் ஏற்ற குழல் மூத்தபள்ளி – முக்-பள்ளு:55/1

மேல்

குழலார் (1)

பூ வாசனை சேர் புரி_குழலார் பூங்குயிலை – முக்-பள்ளு:மேல்

குழைந்தே (1)

முதிர்ந்த தமிழிசைக்கு முடி அசைக்கும் முதல்வர் என தழைத்து முதல் குழைந்தே
பொதிந்த பொதியை நீட்டி பூட்டி காட்டி புரப்போர் பொன் இணங்கு கை போல் வணங்கி – முக்-பள்ளு:136/2,3

மேல்

குழைபட்டுள்ளது (1)

குறைபட்டுள்ளது கம்மியர் அம்மி குழைபட்டுள்ளது வல்லி அம் கொம்பு – முக்-பள்ளு:21/3

மேல்

குழையினும் (1)

பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும் பக்க கொண்டையினும் குழையினும் தைக்க குதிக்க – முக்-பள்ளு:8/2

மேல்

குளங்கல் (1)

பார தென்மருதூரில் பண்ணைக்கே அழகராச்சிப்படைக்கு தெற்கு வடக்கு குளங்கல் மடைக்கும் உள் பற்றும் – முக்-பள்ளு:92/6

மேல்

குளத்தில் (2)

பற்றா அயிரை கெண்டை கெளிறு பரு வராலும் அணையிலே பாய காலில் பாய குளத்தில் பாய வயலில் பாயவே – முக்-பள்ளு:51/3
நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட – முக்-பள்ளு:82/2

மேல்

குளத்து (1)

கோரை குண்டு ஓடை ஓரத்தில் புரவும் பார்வையான குத்துக்கல்லு குளத்து பற்றும் முத்தன் பகுதியும் – முக்-பள்ளு:92/4

மேல்

குளம் (1)

நெஞ்சில் குறித்த குளம் அஞ்சுக்கும் சக்கரக்கால் நிலையிட்ட நாளில் பண்ணை தலையிட்டேன் நான் – முக்-பள்ளு:14/2

மேல்

குளவி (2)

கான குளவி அலையவே மதுபான குளவி கலையவே காட்டு சாதி வேரில் போய் குற மோட்டு சாதி ஊரில் போய் – முக்-பள்ளு:40/3
கான குளவி அலையவே மதுபான குளவி கலையவே காட்டு சாதி வேரில் போய் குற மோட்டு சாதி ஊரில் போய் – முக்-பள்ளு:40/3

மேல்

குளிர் (1)

போயும் எருமை பதறவே உரம் ஈயும் எரு மை சிதறவே புழுதி சாலை நனைத்துமே குளிர் கொழுதி சாலை அனைத்துமே – முக்-பள்ளு:46/2

மேல்

குளிர்ந்த (1)

கோடை போய்விட்ட சோபனம் கொண்டு குளிர்ந்த கொன்றை முறும் தளிர் ஓட – முக்-பள்ளு:17/3

மேல்

குளிரக்குளிர (1)

சாயும் புயல் அமுத தாரை குளிரக்குளிர
தோயும் பொருப்பர் கலை தோய்ந்து ஈரம் தோயாரே – முக்-பள்ளு:39/3,4

மேல்

குளிருகின்றது (1)

கோவில் பெரிய வடமலேந்திரன் மாவில் கறுத்து பொழிந்த பின் குளிருகின்றது கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே – முக்-பள்ளு:38/4

மேல்

குற்றால (1)

குற்றால திரிகூட மால் வரை உற்றே மேகம் பொழிந்த நீர் கூடி பொருநை நாடி திருமுக்கூடல் பதியை வலம்கொண்டே – முக்-பள்ளு:51/1

மேல்

குற்றாலன் (1)

குடைக்கொம்பன் செம்மறையன் குத்துக்குளம்பன் மேழை குடைச்செவியன் குற்றாலன் கூடுகொம்பன் – முக்-பள்ளு:109/1

மேல்

குற (1)

கான குளவி அலையவே மதுபான குளவி கலையவே காட்டு சாதி வேரில் போய் குற மோட்டு சாதி ஊரில் போய் – முக்-பள்ளு:40/3

மேல்

குறி (2)

செம் சரண படமிடும் கொச்சியின் மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க சிறிய நுதல் பிறை வெண் நீற்று குறி ஒளிவீச – முக்-பள்ளு:8/1
ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே – முக்-பள்ளு:35/1

மேல்

குறிக்கிறான் (1)

குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்த சிறுக்கியும் கூசிப்பார்க்கிறாள் அதுக்கு அவன் மெள்ள பேசிப்பார்க்கும் ஆசையால் – முக்-பள்ளு:133/3

மேல்

குறித்த (1)

நெஞ்சில் குறித்த குளம் அஞ்சுக்கும் சக்கரக்கால் நிலையிட்ட நாளில் பண்ணை தலையிட்டேன் நான் – முக்-பள்ளு:14/2

மேல்

குறித்தான் (2)

உரத்திடும் காளை சுழியன் நரை தலை மோழை புதியவன் ஊட்டுக்கு குறித்தான் வில்லடிப்பாட்டுக்கு பொறித்தான் – முக்-பள்ளு:86/2
ஏச்சுக்கு பிறந்தான் வரவர கூச்சத்தை மறந்தான் இளையவள் இளமையை குறித்தான் முதிரும் என் வளமையை பறித்தான் – முக்-பள்ளு:90/1

மேல்

குறித்து (1)

மாரி பொருட்டால் வரம் குறித்து மள்ளர் எல்லாம் – முக்-பள்ளு:31/3

மேல்

குறியீர் (1)

எடுத்திடும் மடலன் மயல் பேய் தொடுத்திடும் சடலன் களவுகள் இன்னமும் அறியீர் அடியாள் சொன்னதும் குறியீர்
தடுத்து எனை ஆளார் அழகரும் நடுத்-தனை கேளார் கடும் சிறைச்சாலையில் போட்டால் வளைவான் வேலையில் ஆண்டே – முக்-பள்ளு:85/3,4

மேல்

குறியுண்டாகியதே (1)

எத்திசையும் பெய்ய மழையின் குறியுண்டாகியதே – முக்-பள்ளு:மேல்

குறுக்கில் (1)

குறுக்கில் வழுதடி சேர்த்திருக்கும் கச்சையும் செம்பொன் கோல புள்ளி உருமாலும் நீல கொண்டையும் – முக்-பள்ளு:10/2

மேல்

குறுக (1)

தகும் தடம் கடல் இறைவனை தொழ மகிழ்ந்திடும் கடன் முறையினில் சார்ந்து சுறவு நேர்ந்து குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே – முக்-பள்ளு:48/4

மேல்

குறும்பு (1)

மாட்டு குறும்பு அடங்க மறிப்பன் எனவே வடிவழக குடும்பன் வந்து மறித்தான் – முக்-பள்ளு:115/3

மேல்

குறுவை (1)

குறுவை அறு தாளடியையும் பள்ளன் புரவி உழுத தடியையும் குழம்பி பரம்பு தடவி காலிட்டு உழப்பி சம்பா நடச்செய்தே – முக்-பள்ளு:132/2

மேல்

குறைபட்டுள்ளது (1)

குறைபட்டுள்ளது கம்மியர் அம்மி குழைபட்டுள்ளது வல்லி அம் கொம்பு – முக்-பள்ளு:21/3

மேல்

குறையோ (1)

அடுத்து இதுவும் உனக்கு வர முறையோ மலையின் மேல் ஐயா பூலாவுடையார் குறையோ
படுத்த கிடை எழுந்திருந்து கொள்ளாய் வடிவழகர் பாதம் மறவாத பண்ணை குடும்பா – முக்-பள்ளு:118/3,4

மேல்

குறைவிலை (1)

கோர சிறை வீர புய முக்கூடல் பதி ஆடல் கருட கோனை பெரியோனை பரவ குறைவிலை நமக்கே – முக்-பள்ளு:2/4

மேல்

குன்றாய் (1)

குடை குன்றாய் பசு கிடை நின்றார் முக்கூடல் அழகர் வயலுள்ளே கொண்டாடிக்கொண்டு நடச்செய்தே இன்று கண்டோம் இது என்ன புதுமையோ – முக்-பள்ளு:128/2

மேல்

குன்றில் (1)

குன்று எலாம் தரமில்லை என்று ஆடவர் கொம்பு_அனார் முலை குன்றில் பதுங்க – முக்-பள்ளு:18/2

மேல்

குன்று (1)

குன்று எலாம் தரமில்லை என்று ஆடவர் கொம்பு_அனார் முலை குன்றில் பதுங்க – முக்-பள்ளு:18/2

மேல்

குன்றை (1)

குன்றை குடை கவித்த கோவலர் முக்கூடலிலே – முக்-பள்ளு:45/1

மேல்

குனியும் (1)

முட்டிவிட்டு குனியும் பழங்கதை மூதலிக்கிறாய் பேதலித்துப்போய் – முக்-பள்ளு:100/1

மேல்