Select Page

கட்டுருபன்கள்


மேக (3)

மேக பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும் விண்புலம் விருந்து அரவும் வெள் அமுதம் வீசும் கரும் திரை பைம் துகில் விரித்து உடுத்து உத்தி விரியும் – மீனாட்சிபிள்ளை:1 6/1
விண்ணம் பொதிந்த மேக படாம் மிசை தூக்கிய பல் மணி கொத்து விரிந்தால் என கால் நிமிர்ந்து தலை விரியும் குலை நெல் கற்றை பல – மீனாட்சிபிள்ளை:6 59/3
வெம் கண் கடும் கொலைய வேழ குழாம் இது என மேக குழாத்தை முட்டி விளையாடு மழ களிறு கடைவாய் குதட்ட முகை விண்ட அம்பு ஐந்து கோத்த – மீனாட்சிபிள்ளை:8 74/3

மேல்

மேகலையோடு (1)

இசைந்திடு தேவை நினைந்தன என்ன இரங்கிடு மேகலையோடு இடுகு இடை ஆட இயற்கை மணம் பொதி இதழ் வழி தேறலினோடு – மீனாட்சிபிள்ளை:2 19/3

மேல்

மேடையும் (1)

வெயரா மனம் புழுங்கிடும் அமரர் தச்சனும் வியப்ப செயும் தவள மா மேடையும் தண் தரள மாடமும் தெள் நிலா வீச திசைக்களிறு எலாம் – மீனாட்சிபிள்ளை:8 78/3

மேல்

மேய்ந்து (2)

ஓடும் படலை முகில் படலம் உவர் நீத்து உவரி மேய்ந்து கரு ஊறும் கமம் சூல் வயிறு உடைய உகைத்து கடவுள் கற்பக பூம் – மீனாட்சிபிள்ளை:3 25/1
தூர்க்கும் பொதும்பில் முயல் கலை மேல் துள்ளி உகளும் முசுக்கலையின் துழனிக்கு ஒதுங்கி கழினியின் நெல் சூட்டு படப்பை மேய்ந்து கதிர் – மீனாட்சிபிள்ளை:3 27/2

மேல்

மேரு (3)

இமிழ் திரை முற்றத்து மேரு மத்து ஆர்த்து முள் எயிறு உகு நச்சு பணாடவி தாம்பு இசைத்து இறுக இறுக்கி துழாய் முடி தீர்த்தனொடு எவரும் மதித்து பராபவ தீ சுட – மீனாட்சிபிள்ளை:1 5/3
சுற்று நெடு நேமி சுவர்க்கு இசைய எட்டு சுவர்க்கால் நிறுத்தி மேரு தூண் ஒன்று நடு நட்டு வெளி முகடு மூடி இரு சுடர் விளக்கு இட்டு முற்ற – மீனாட்சிபிள்ளை:2 15/1
பொய்வந்த நுண் இடை நுடங்க கொடிஞ்சி பொலம் தேரொடு அமரகத்து பொன் மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்று அம்மை பொம்மல் முலை மூன்றில் ஒன்று – மீனாட்சிபிள்ளை:4 34/1

மேல்

மேல் (10)

தூர்க்கும் பொதும்பில் முயல் கலை மேல் துள்ளி உகளும் முசுக்கலையின் துழனிக்கு ஒதுங்கி கழினியின் நெல் சூட்டு படப்பை மேய்ந்து கதிர் – மீனாட்சிபிள்ளை:3 27/2
தழைக்கும் துகில் கொடி முகில் கொடி திரைத்து மேல் தலம் வளர் நகில் கொடிகளை தாழ் குழலும் நீவி நுதல் வெயர்வும் துடைத்து அம்மை சமயம் இது என்று அலுவலிட்டு – மீனாட்சிபிள்ளை:7 71/3
திங்கள்_கொழுந்தை கொழுந்துபடு படர் சடை செருகு திரு மணவாளன் மேல் செழு மண பந்தரில் எடுத்து எறியும் அமுத வெண் திரளையில் புரளும் அறுகால் – மீனாட்சிபிள்ளை:8 74/1
நிமிரா முன் அம்மனை ஒர் ஆயிரம் எடுத்து எறிய நிரைநிரையவாய் ககன மேல் நிற்கின்றது அம்மை நீ பெற்ற அகிலாண்டமும் நிரைத்து வைத்தது கடுப்ப – மீனாட்சிபிள்ளை:8 77/2
பெயராது இருந்து விளையாடுவது கண்டு எந்தை பிறை முடி துளக்க முடி மேல் பெருகு சுர கங்கை நுரை பொங்கல் அம்மானை அ பெண்கொடியும் ஆடல் மான – மீனாட்சிபிள்ளை:8 78/2
பிள்ளை வெள் ஓதிமமும் முறைமுறையால் பெருகிய காதலை மேல் பேச விடுப்ப கடுப்ப அணைத்து ஒரு பெடையோடு அரச அனம் – மீனாட்சிபிள்ளை:8 82/3
தூங்கு சிறை அறுகால் உறங்கு குழல் நின் துணை தோழியர்கள் மேல் குங்குமம் தோயும் பனி துறை சிவிறி வீச குறும் துளி எம்மருங்கும் ஓடி – மீனாட்சிபிள்ளை:9 86/1
துங்க முலை பொன் குடம் கொண்டு தூ நீர் நீந்தி விளையாடும் துணை சேடியர்கள் மேல் பசும்பொன் சுண்ணம் எறிய அற சேந்த – மீனாட்சிபிள்ளை:9 88/1
சேர்க்கும் சுவை பாடல் அமுது ஒழுக ஒழுகு பொன் திரு ஊசல் பாடி ஆட சிவபிரான் திருமுடி அசைப்ப முடி மேல் பொங்கு செம் கண் அரவு அரசு அகிலம் வைத்து – மீனாட்சிபிள்ளை:10 97/1
மின் செய்த சாயலவர் மேல் தலத்து ஆடிய விரை புனலின் அருவி குடையும் வெள் ஆனை குங்கும செம் சேறு நாற மட மென் பிடியை அஞ்சி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:10 101/3

மேல்

மேலே (1)

சிகர பொதிய மிசை தவழும் சிறுதேர் மேலே போய் ஓர் சிவனை பொருத சமர்த்தன் உகந்து அருள் சேல் போல் மாயாமே – மீனாட்சிபிள்ளை:3 32/3

மேல்

மேவவும் (1)

கடவி விண்ணரசு நடவும் வெம் முனைய களிறு கைம்மலை செல் கொப்பத்து வீழவும் கனக மன்னு தட நளினி துன்னி இரு கமல மின்னும் ஒரு பத்மத்துள் மேவவும்
இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு என பெற்று வாழவும் எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு என தட்டுமாறவும் – மீனாட்சிபிள்ளை:1 12/6,7

மேல்

மேவு (1)

முத்தமிழ் தேர்தரு மதுரை தலத்து உறை மு தனம் மேவு பெண் அரசை புரக்கவே – மீனாட்சிபிள்ளை:1 4/4

மேல்