Select Page

கட்டுருபன்கள்


தொக்கு (1)

விண்தலம் பொலிய பொலிந்திடுதியேல் உனது வெம் பணி பகை விழுங்கி விக்கிட கக்கிட தொக்கு இடர்ப்படுதி வெயில் விரியும் சுடர் பரிதியின் – மீனாட்சிபிள்ளை:7 66/1

மேல்

தொட்டவள் (1)

கூனல் சிலையின் நெடும் கணை தொட்டவள் கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 38/4

மேல்

தொட்டில் (1)

பால் ஆட்டி வாய் இதழ் நெரித்து ஊட்டி உடலில் பசும் சுண்ணமும் திமிர்ந்து பைம்பொன் குறங்கினில் கண்வளர்த்தி சிறு பரூஉ மணி தொட்டில் ஏற்றி – மீனாட்சிபிள்ளை:4 37/3

மேல்

தொட்டிலாக (1)

அளிக்கும் சுந்தர கடவுள் பொலியும் அறு கால் பீடமும் எம்பிரான் காமர் பரியங்க கவின் தங்கு பள்ளி அம் கட்டிலும் தொட்டிலாக
பண் அளிக்கும் குதலை அமுது ஒழுகு குமுத பசும் தேறல் ஊறல் ஆடும் பைங்குழவி பெருவிரல் சுவைத்து நீ பருகிட பைம் தேறல் ஊறு வண் கை – மீனாட்சிபிள்ளை:4 36/2,3

மேல்

தொட்டு (2)

நீராட்டி ஆட்டு பொன் சுண்ணம் திமிர்ந்து அள்ளி நெற்றியில் தொட்டு இட்ட வெண் நீற்றினொடு புண்டர கீற்றுக்கும் ஏற்றிட ஒர் நித்தில சுட்டி சாத்தி – மீனாட்சிபிள்ளை:2 13/1
முன்றிலின் ஆடல் மறந்து அமராடி ஒர் மூரி சிலை குனியா முரி புருவ சிலை கடை குனிய சில முளரி கணை தொட்டு
குன்ற_விலாளியை வென்ற தடாதகை கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 40/3,4

மேல்

தொடர் (1)

முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மா தொடர் சாபமும் மும்மை தமிழ் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இ தலத்தின் – மீனாட்சிபிள்ளை:7 68/1

மேல்

தொடர்ந்து (1)

மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தை முடி வளர் இளம்பிறையும் நாற மணி நூபுரத்து அவிழும் மென் குரற்கோ அசையும் மட நடைக்கோ தொடர்ந்து உன் – மீனாட்சிபிள்ளை:6 53/2

மேல்

தொடி (1)

மின்னல் தடித்து கரும் பொன் தொடி கடைசி மெல்லியர் வெரீஇ பெயர வான் மீன் கணம் வெருக்கொள்ள வெடி வரால் குதிகொள்ளும் விண் புலம் விளை புலம் என – மீனாட்சிபிள்ளை:5 49/2

மேல்

தொடியார் (1)

வானத்து உருமொடு உடு திரள் சிந்த மலைந்த பறந்தலையில் மண்ணவர் பண்ணவர் வாளின் மறிந்தவர் மற்றவர் பொன் தொடியார்
பானல் கணையும் முலை குவடும் பொரு படையில் பட இமையோர் பைம் குடர் மூளையொடும் புதிது உண்டு பசும் தடி சுவை காணா – மீனாட்சிபிள்ளை:4 38/1,2

மேல்

தொடு (1)

துண்டுபடு மதி நுதல் தோகையொடும் அளவில் பல தொல் உரு எடுத்து அமர்செயும் தொடு சிலை என ககன முகடு முட்டி பூம் துணர் தலை வணங்கி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:6 54/3

மேல்

தொடுக்கும் (1)

தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறை பழுத்த துறை தீம் தமிழின் ஒழுகு நறும் சுவையே அகந்தை கிழங்கை அகழ்ந்து – மீனாட்சிபிள்ளை:6 61/1

மேல்

தொடுத்த (1)

சொல்_கொடியோடு மலர்_கொடி கொய்து தொடுத்த விரை தொடையும் சுந்தரி தீட்டிய சிந்துரமும் இரு துங்க கொங்கைகளின் – மீனாட்சிபிள்ளை:9 91/1

மேல்

தொடுதோல் (1)

பொன் அம் கமல பசும் தோட்டு பொன் தாது ஆடி கற்றை நிலா பொழியும் தரங்கம் பொறை உயிர்த்த பொன் போல் தொடுதோல் அடி பொலன் சூட்டு – மீனாட்சிபிள்ளை:3 23/3

மேல்

தொடை (1)

திருமுன் உருவம் கரந்து எந்தையார் நிற்பது தெரிந்திட நமக்கு இது எனா செம் சிலை கள்வன் ஒருவன் தொடை மடக்காது தெரி கணைகள் சொரிவது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:10 95/2

மேல்

தொடையின் (1)

தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறை பழுத்த துறை தீம் தமிழின் ஒழுகு நறும் சுவையே அகந்தை கிழங்கை அகழ்ந்து – மீனாட்சிபிள்ளை:6 61/1

மேல்

தொடையும் (1)

சொல்_கொடியோடு மலர்_கொடி கொய்து தொடுத்த விரை தொடையும் சுந்தரி தீட்டிய சிந்துரமும் இரு துங்க கொங்கைகளின் – மீனாட்சிபிள்ளை:9 91/1

மேல்

தொண்டர் (2)

வண்டு படு முண்டக மனை குடிபுக சிவ மணம் கமழ விண்ட தொண்டர் மானத தட மலர் பொன் கோயில் குடிகொண்ட மாணிக்கவல்லி வில் வேள் – மீனாட்சிபிள்ளை:6 54/2
உள் ஊறு களி துளும்ப குரவர் இருவீரும் உற்றிடு துவாதசாந்தத்து ஒரு பெரு வெளிக்கே விழித்து உறங்கும் தொண்டர் உழுவல் அன்பு என்பு உருக நெக்கு – மீனாட்சிபிள்ளை:8 75/3

மேல்

தொந்தம் (1)

முற்ற வெளியில் திரியும் மத்த பெரும் பித்தன் முன் நின்று தொந்தம் இடவும் முனியாது வைகலும் எடுத்து அடுக்கி பெரிய மூது அண்ட கூடம் மூடும் – மீனாட்சிபிள்ளை:2 15/3

மேல்

தொந்தமிடும் (1)

சோனை கணை மழை சொரிய பெருகிய குருதி கடலிடையே தொந்தமிடும் பல் கவந்தம் நிவந்து ஒரு சுழியில் பவுரிகொள – மீனாட்சிபிள்ளை:3 29/2

மேல்

தொந்தி (1)

துகிலொடு சோர்தரு கொடி நுண் மருங்குல் துவண்டுதுவண்டு ஆட தொந்தி சரிந்திட உந்தி கரந்து ஒளிர் சூலுடை ஆல் அடை மற்று – மீனாட்சிபிள்ளை:2 18/3

மேல்

தொய்யில் (1)

உழுத பொலன் சீறடிக்கு உடைந்த செந்தாமரையும் பசும் கழுத்துக்கு உடைந்த கமம் சூல் சங்கும் ஒழுகு ஒளிய கமுகும் அழகு தொய்யில்
எழுது தடம் தோட்கு உடைந்த தடம் பணையும் பணை மென் முலைக்கு உடைந்த இணை மா மருப்பும் தரு முத்து உன் திரு முத்து ஒவ்வா இகபரங்கள் – மீனாட்சிபிள்ளை:5 45/2,3

மேல்

தொல் (3)

துண்டுபடு மதி நுதல் தோகையொடும் அளவில் பல தொல் உரு எடுத்து அமர்செயும் தொடு சிலை என ககன முகடு முட்டி பூம் துணர் தலை வணங்கி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:6 54/3
துளி தூங்கு தெள் அமுத வெள் அருவி பொழியும் நின் தொல் மரபு தழைய வந்து தோன்றிடும் கௌரியர் குலக்கொழுந்தை கண்டு துணை விழியும் மனமும் நின்று – மீனாட்சிபிள்ளை:7 70/1
துளிக்கும் பனி திவலை சிதறி குடைந்து ஆடு துறையில் துறை தமிழொடும் தொல் மறை தெளிக்கும் கலை கொடி எனும் துணை தோழி மூழ்கி புனல் மடுத்து – மீனாட்சிபிள்ளை:9 87/1

மேல்

தொலைய (1)

பமர தரு மலர் மிலையப்படு முடி தொலைய கொடுமுடி தாழ் பைம்பொன் தட வரை திரிய கடல் வயிறெரிய படை திரியா – மீனாட்சிபிள்ளை:3 30/3

மேல்

தொழும்-தொறும் (1)

அம் கண் நெடும் புவனங்கள் தொழும்-தொறும் அஞ்சேல் என்று ஓதும் அபயமும் வரதமும் உபயமும் உடைய அணங்கே வெம் கோப – மீனாட்சிபிள்ளை:2 22/2

மேல்

தொழும்பர் (1)

எடுக்கும் தொழும்பர் உள கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர் சிமய இமய பொருப்பில் விளையாடும் இள மென் பிடியே எறி தரங்கம் – மீனாட்சிபிள்ளை:6 61/2

மேல்

தொனியும் (1)

ஒளிக்கும் பதத்து மற்றவள் என அன பேடை ஓடி பிடிப்பது அம்மை ஒண் பரிபுர தொனியும் மட நடையும் வௌவினது உணர்ந்து பின்தொடர்வது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 87/2

மேல்