Select Page

கட்டுருபன்கள்


சீக்கும் (1)

சீக்கும் சுடர் தூங்கு அழல் மணியின் செம் தீ மடுத்த சூட்டு அடுப்பில் செழும் தாள் பவள துவர் அடுக்கி தெளிக்கும் நறும் தண் தேறல் உலை – மீனாட்சிபிள்ளை:3 24/2

மேல்

சீர் (1)

அண்டு படு சீர் இது அன்று ஆதலால் இவளுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 63/4

மேல்

சீராட்டி (1)

சீராட்டி வைத்து முத்தாடும் பசுங்கிள்ளை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 13/4

மேல்

சீவன் (1)

தன் பெருந்தன்மையை உணர்ந்திலை-கொல் சிவ ராசதானியாய் சீவன் முத்தி தலமுமாய் துவாதசாந்த தலமும் ஆனது இ தலம் இ தலத்து அடைதியேல் – மீனாட்சிபிள்ளை:7 68/2

மேல்

சீறடி (3)

பஞ்சு ஊட்டு சீறடி பதைத்தும் அதன் வெம் கதிர் படும் இளவெயிற்கு உடைந்தும் பைம் துழாய் காடு விரி தண் நிழல் ஒதுங்கும் ஒர் பசுங்கொடியை அஞ்சலிப்பாம் – மீனாட்சிபிள்ளை:1 8/2
தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் – மீனாட்சிபிள்ளை:1 9/2
அம் சிலம்பு ஓலிட அரி குரல் கிண்கிணி அரற்று செம் சீறடி பெயர்த்து அடியிடும்-தொறும் நின் அலத்தக சுவடு பட்டு அம்புவி அரம்பையர்கள்-தம் – மீனாட்சிபிள்ளை:6 53/1

மேல்

சீறடிக்கு (2)

உழுத பொலன் சீறடிக்கு உடைந்த செந்தாமரையும் பசும் கழுத்துக்கு உடைந்த கமம் சூல் சங்கும் ஒழுகு ஒளிய கமுகும் அழகு தொய்யில் – மீனாட்சிபிள்ளை:5 45/2
தேன் ஒழுகு கஞ்ச பொலன் சீறடிக்கு ஊட்டு செம்பஞ்சியின் குழம்பால் தெள் அமுது இறைக்கும் பசுங்குழவி வெண் திங்கள் செக்கர் மதியா கரை பொரும் – மீனாட்சிபிள்ளை:6 57/1

மேல்

சீறடிகள் (3)

கண் துஞ்சாது இருப்பதும் மரு பொங்கு கோதை இவள் சீறடிகள் நின் குடர் குழம்பிடவே குமைப்பதும் பெறுதியேல் கோமாட்டி-பால் அடைந்தால் – மீனாட்சிபிள்ளை:7 66/3
செம்பஞ்சு உறுத்தவும் பதைபதைத்து ஆர் அழல் சிகை என கொப்பளிக்கும் சீறடிகள் கன்றி சிவந்திடச்செய்வதும் திருவுளத்து அடையாது பொன் – மீனாட்சிபிள்ளை:7 69/2
ஏடகத்து எழுதாத வேத சிரத்து அரசு இருக்கும் இவள் சீறடிகள் நின் இதய தடத்தும் பொலிந்தவா திருவுளத்து எண்ணி அன்றே கபடமா – மீனாட்சிபிள்ளை:7 72/1

மேல்

சீறா (1)

தகர கரிய குழல் சிறு பெண்பிள்ளை நீயோ தூயோன் வாழ் சயிலத்து எயிலை வளைப்பவள் என்று எதிர் சீறா வீறு ஓதா – மீனாட்சிபிள்ளை:3 32/1

மேல்

சீறி (1)

குழையொடு பொருது கொலை கணையை பிணையை சீறி குமிழொடு பழகி மதர்த்த கயல் கண் மட பாவாய் – மீனாட்சிபிள்ளை:4 41/2

மேல்