Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேக 2
வேங்கையும் 1
வேட்கை 13
வேட்கை-தனை 1
வேட்கையின் 4
வேட்கையேன் 1
வேட்கையொடு 1
வேட்டது 1
வேட்டம் 1
வேட்டனை 1
வேட்டு 2
வேட்டுவர் 1
வேட்டுவன் 1
வேடமொடு 1
வேண்ட 1
வேண்டல் 1
வேண்டா 3
வேண்டாது 1
வேண்டார் 1
வேண்டி 2
வேண்டினம் 1
வேண்டும் 10
வேண்டுவ 1
வேண்டேன் 1
வேணவா 2
வேத்தவையாரொடும் 1
வேத்தியல் 2
வேத 1
வேதக்கு 1
வேதனை 1
வேதாளிகர் 1
வேதிகை 1
வேதியன் 1
வேந்தர் 1
வேந்தர்-தம் 1
வேந்தரை 2
வேந்தற்கு 1
வேந்தன் 24
வேந்தனின் 2
வேந்தனும் 1
வேந்து 5
வேந்தே 9
வேய் 4
வேய்ந்த 1
வேய்ந்து 1
வேல் 9
வேலும் 1
வேலை 2
வேலையின் 1
வேலையுள் 1
வேலோன் 2
வேவேன் 1
வேழத்து 1
வேழம் 1
வேள் 1
வேள்வி 1
வேள்வியில் 1
வேற்று 8
வேற்று_ஊண் 1
வேற்றுமை 2
வேறாக 1
வேறாகி 2
வேறாயின 2
வேறு 19
வேறுபாட்டினையும் 1
வேறுவேறு 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வேக (2)

வேக வெம் திறல் நாக நாட்டு அரசர் – மணி:9/58
வேக வெம் தீ நாகம் கிடந்த – மணி:20/98

TOP


வேங்கையும் (1)

செருந்தியும் வேங்கையும் பெரும் சண்பகமும் – மணி:3/165

TOP


வேட்கை (13)

கூற்று-கண் விளிக்கும் குருதி வேட்கை
முரசு கடிப்பு இகூஉம் முது குடி பிறந்தோன் – மணி:1/30,31
களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான் – மணி:20/83
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினை பயன் – மணி:24/106,107
தணியா வேட்கை தணித்தற்கு அரிதால் – மணி:25/121
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து – மணி:26/5
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் – மணி:30/46,47
வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை – மணி:30/91
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் – மணி:30/110
வேட்கை சார்ந்து பற்று ஆகுமே – மணி:30/111
நுகர்ச்சி மீள வேட்கை மீளும் – மணி:30/125
வேட்கை மீள பற்று மீளும் – மணி:30/126
மூன்றாம் கண்டம் வேட்கை பற்று – மணி:30/141
நுகர்வே வேட்கை பற்றே பவமே – மணி:30/164

TOP


வேட்கை-தனை (1)

தங்கா வேட்கை-தனை அவண் தணித்ததூஉம் – மணி:18/96

TOP


வேட்கையின் (4)

கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட – மணி:0/10
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி – மணி:16/12
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் – மணி:17/35
நீர் நசை வேட்கையின் நெடும் கடம் உழலும் – மணி:23/112

TOP


வேட்கையேன் (1)

முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என – மணி:11/118

TOP


வேட்கையொடு (1)

வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும் – மணி:15/85

TOP


வேட்டது (1)

கேட்டனை ஆயின் வேட்டது செய்க என – மணி:18/142

TOP


வேட்டம் (1)

புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என – மணி:18/168

TOP


வேட்டனை (1)

உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின் – மணி:25/113

TOP


வேட்டு (2)

வேழம் வேட்டு எழும் வெம் புலி போல – மணி:20/95
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு
பல் கலன் கொண்டு பலர் அறியாமல் – மணி:26/20,21

TOP


வேட்டுவர் (1)

கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி – மணி:13/31

TOP


வேட்டுவன் (1)

கான வேட்டுவன் கடு கணை துரப்ப – மணி:23/114

TOP


வேடமொடு (1)

கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமொடு
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும் – மணி:28/68,69

TOP


வேண்ட (1)

கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன்-தனாது – மணி:0/10,11

TOP


வேண்டல் (1)

வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும் – மணி:30/222

TOP


வேண்டா (3)

துறக்கம் வேண்டா தொல்லோய் நின் அடி – மணி:11/64
இள வேய் தோளாய்க்கு இது என வேண்டா
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை – மணி:23/127,128
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா
மனக்கு இனியீர் என்று அவரையும் வணங்கி – மணி:24/157,158

TOP


வேண்டாது (1)

வேறு சாதிக்க வேண்டாது ஆகும் – மணி:29/190

TOP


வேண்டார் (1)

அழியல் வேண்டார் அது உறற்பாலார் – மணி:27/156

TOP


வேண்டி (2)

எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
மாலை வாங்க ஏறிய செம் கை – மணி:22/152,153
கிள்ளிவளவனொடு கெழு_தகை வேண்டி
கள் அவிழ் தாரோய் கலத்தொடும் போகி – மணி:25/14,15

TOP


வேண்டினம் (1)

விடியல் வேலை வேண்டினம் என்றலும் – மணி:21/52

TOP


வேண்டும் (10)

எ உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்
மற்று உன் மகனை மாபெருந்தேவி – மணி:23/79,80
துன்பம் தருவன துறத்தல் வேண்டும்
கற்ற கல்வி அன்றால் காரிகை – மணி:23/129,130
அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப – மணி:26/9
பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும்
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் – மணி:27/13,14
அது மண்டலம் என்று அறியல் வேண்டும்
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் – மணி:27/158,159
தாமே நெருப்பை சாதிக்க வேண்டும்
அன்னுவயம் சாதிக்கின் முன்னும் – மணி:29/95,96
அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு – மணி:29/101
இறந்த காலம் என்னல் வேண்டும்
மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை – மணி:30/160,161
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும்
பொன்ற கெடா பொருள் வழி பொருள்களுக்கு – மணி:30/222,223
புரிவு_இன்மை நயம் என புகறல் வேண்டும்
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல் – மணி:30/226,227

TOP


வேண்டுவ (1)

வெம் களும் ஊனும் வேண்டுவ கொடும் என – மணி:16/77

TOP


வேண்டேன் (1)

வெவ் உரை கேட்டேன் வேண்டேன் என்றலும் – மணி:16/79

TOP


வேணவா (2)

வேணவா தீர்த்த விளக்கே வா என – மணி:0/18
வேணவா மிகுக்கும் விரை மர காவும் – மணி:28/63

TOP


வேத்தவையாரொடும் (1)

வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின் – மணி:28/118

TOP


வேத்தியல் (2)

வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து – மணி:2/18
வேத்தியல் பொதுவியல் என்று இ இரண்டின் – மணி:28/46

TOP


வேத (1)

வேத வியாதனும் கிருத கோடியும் – மணி:27/5

TOP


வேதக்கு (1)

சார்பின் தோன்றா ஆரண வேதக்கு
ஆதி அந்தம் இலை அது நெறி எனும் – மணி:27/103,104

TOP


வேதனை (1)

வீற்று_வீற்றாக வேதனை கொள்வது – மணி:30/221

TOP


வேதாளிகர் (1)

மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும் – மணி:28/50

TOP


வேதிகை (1)

பத்தி வேதிகை பசும் பொன் தூணத்து – மணி:1/48

TOP


வேதியன் (1)

வேதியன் உரையின் விதியும் கேட்டு – மணி:27/105

TOP


வேந்தர் (1)

கனக விசயர் முதல் பல வேந்தர்
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை – மணி:26/86,87

TOP


வேந்தர்-தம் (1)

வேந்தர்-தம் செவி உறுவதன் முன்னம் – மணி:22/212

TOP


வேந்தரை (2)

வேந்தரை அட்டோன் மெல்_இயல் தேர்வுழி – மணி:24/45
வேந்தரை அட்டோய் மெய் என கொண்டு இ – மணி:24/67

TOP


வேந்தற்கு (1)

ஆர் புனை வேந்தற்கு பேர் அளவு இயற்றி – மணி:5/116

TOP


வேந்தன் (24)

அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை – மணி:0/79
இளங்கோ வேந்தன் அருளி கேட்ப – மணி:0/95
மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் – மணி:7/11,12
கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என – மணி:7/79
அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன்
மைத்துனன் ஆகிய பிரமதருமன் – மணி:9/14,15
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன் – மணி:10/53,54
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
துச்சயன்-தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் – மணி:12/39,40
சாவகம் ஆளும் தலை தாள் வேந்தன்
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என் – மணி:14/103,104
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் – மணி:15/40
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன்-தான் – மணி:15/45
துறக்க வேந்தன் துய்ப்பு இலன்-கொல்லோ – மணி:15/46
அறக்கோல் வேந்தன் அருள் இலன்-கொல்லோ – மணி:15/47
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி – மணி:18/42
அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை – மணி:19/42
ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய என – மணி:19/142
வேந்தன் கூற மெல்_இயல் உரைக்கும் – மணி:19/156
வீயா விழு சீர் வேந்தன் பணித்ததூஉம் – மணி:20/10
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன்
மைந்தற்கு உற்றதும் மன்ற பொதியில் – மணி:21/5,6
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து – மணி:22/10
வீயா விழு சீர் வேந்தன் கேட்டனன் – மணி:22/162
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப – மணி:22/166
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் – மணி:26/77,78
விடர் சிலை பொறித்த வேந்தன் முன் நாள் – மணி:28/104
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற – மணி:28/215

TOP


வேந்தனின் (2)

வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து – மணி:19/92
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின்
எட்டி பூ பெற்று இரு_முப்பதிற்று யாண்டு – மணி:22/112,113

TOP


வேந்தனும் (1)

இதன்-பால் ஒழிக என இரு நில வேந்தனும்
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் – மணி:9/23,24

TOP


வேந்து (5)

வாழ்க நின் கண்ணி வாய் வாள் வேந்து என – மணி:18/63
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் – மணி:19/162
தீது இன்று ஆக செங்கோல் வேந்து என – மணி:22/167
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் – மணி:22/215
சிறை தக்கன்று செங்கோல் வேந்து என – மணி:23/30

TOP


வேந்தே (9)

வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி – மணி:5/28
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க என – மணி:5/79
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே
பூமி நடுக்கு உறூஉம் போழ்தத்து இ நகர் – மணி:9/19,20
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர் – மணி:14/43,44
விரை தார் வேந்தே நீ நீடு வாழி – மணி:19/146
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே
இன்றே அல்ல இ பதி மருங்கில் – மணி:22/18,19
பார் ஆள் வேந்தே பண்டும் பலரால் – மணி:22/24
இ பதி புகுந்தனன் இரு நில வேந்தே
மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு – மணி:22/122,123
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே
தாங்கா நரகம் தன்னிடை உழப்போர் – மணி:22/175,176

TOP


வேய் (4)

வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்து – மணி:17/91
வீழ்ந்தன இள வேய் தோளும் காணாய் – மணி:20/58
இள வேய் தோளாய்க்கு இது என வேண்டா – மணி:23/127
வேய் ஆய் துளைபடும் பொருளா முளைக்கும் – மணி:27/136

TOP


வேய்ந்த (1)

தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் – மணி:19/114

TOP


வேய்ந்து (1)

வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த – மணி:25/218

TOP


வேல் (9)

காய் வேல் வென்ற கரும் கயல் நெடும் கண் – மணி:18/75
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை – மணி:19/124
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன் – மணி:21/5
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப – மணி:22/166
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர – மணி:24/88
செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க – மணி:25/80
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப – மணி:25/193
வடி வேல் தட கை வானவன் போல – மணி:25/202
வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் – மணி:29/3

TOP


வேலும் (1)

வேலும் கோலும் அருட்கண் விழிக்க – மணி:22/15

TOP


வேலை (2)

விடியல் வேலை வேண்டினம் என்றலும் – மணி:21/52
வேலை பிழைத்த வெகுளி தோன்ற – மணி:21/58

TOP


வேலையின் (1)

காலை தோன்ற வேலையின் வரூஉ – மணி:21/54

TOP


வேலையுள் (1)

மன் உயிர் முதல்வன் மகர வேலையுள்
முன்னிய வங்கம் முங்கி கேடு உற – மணி:29/15,16

TOP


வேலோன் (2)

மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம் – மணி:0/71
வாகை வேலோன் வளைவணன் தேவி – மணி:24/55

TOP


வேவேன் (1)

உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து – மணி:11/101

TOP


வேழத்து (1)

பொலம் தேர் மீமிசை புகர் முக வேழத்து
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி – மணி:3/142,143

TOP


வேழம் (1)

வேழம் வேட்டு எழும் வெம் புலி போல – மணி:20/95

TOP


வேள் (1)

வெம் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்-கொல் – மணி:4/102

TOP


வேள்வி (1)

ஒரு_நூறு வேள்வி உரவோன் தனக்கு – மணி:0/33

TOP


வேள்வியில் (1)

புக்கோன் ஆங்கு புலை சூழ் வேள்வியில்
குரூஉ தொடை மாலை கோட்டிடை சுற்றி – மணி:13/28,29

TOP


வேற்று (8)

கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து – மணி:8/41
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும் – மணி:10/80
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ என – மணி:12/52
ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன் – மணி:14/7
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என – மணி:26/69
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால் – மணி:27/125
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் – மணி:28/3
வேற்று உரு கொண்டு வெவ்வேறு உரைக்கும் – மணி:29/41

TOP


வேற்று_ஊண் (1)

ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன் – மணி:14/7

TOP


வேற்றுமை (2)

ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க – மணி:30/218
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும் – மணி:30/222

TOP


வேறாக (1)

தோளும் தலையும் துணிந்து வேறாக
வாளின் தப்பிய வல் வினை அன்றே – மணி:21/59,60

TOP


வேறாகி (2)

தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய் – மணி:20/41,42
ஈன்ற குழவியொடு தான் வேறாகி
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி – மணி:23/106,107

TOP


வேறாயின (2)

இறவின் உணங்கல் போன்று வேறாயின
கழுநீர் கண் காண் வழுநீர் சுமந்தன – மணி:20/46,47
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி – மணி:20/56,57

TOP


வேறு (19)

நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில் – மணி:1/37
பால் வேறு தேவரும் இ பதி படர்ந்து – மணி:1/38
நால் வேறு வருண பால் வேறு காட்டி – மணி:6/56
நால் வேறு வருண பால் வேறு காட்டி – மணி:6/56
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப – மணி:7/86
வேறு இடத்து பிறந்த உயிரே போன்று – மணி:8/14
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி:10/77
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி:21/101
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து – மணி:22/10
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி – மணி:25/97
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் – மணி:27/94
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் – மணி:27/272
மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை – மணி:27/282
பால் வேறு ஆக எண் வகை பட்ட – மணி:28/48
பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும் – மணி:29/115
வேறு சாதிக்க வேண்டாது ஆகும் – மணி:29/190
குண கண்மத்து உண்மையின் வேறு ஆதலால் – மணி:29/308
நின்றவற்றின் இடை உண்மை வேறு ஆதலால் என்று – மணி:29/311
வேறு புலன்களை மேவுதல் என்ப – மணி:30/89

TOP


வேறுபாட்டினையும் (1)

பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும்
தன் கண் சார்த்திய நயம் தருதல் உடையது – மணி:29/115,116

TOP


வேறுவேறு (2)

வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை – மணி:1/56
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை – மணி:1/56

TOP