கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பிடி 1
பிடிக்க 2
பிடிக்கும் 1
பிடித்த 2
பிடித்தது 1
பிடித்தாரின் 1
பிடித்தாரும் 2
பிடித்து 2
பிடிப்பான் 1
பிணை 1
பித்தரே 1
பிரிக்க 1
பிரிந்து 3
பிரிய 3
பிரியாத 2
பிழை 1
பிழைத்த 1
பிழைத்தார் 2
பிழைத்தால் 1
பிழைத்தேன் 1
பிழைப்பித்தாய் 1
பிழையாமல் 1
பிள்ளை 3
பிறந்த 1
பிறந்து 1
பிறவி 1
பிறழ்ந்தால் 1
பிறித்து 1
பிறை 4
பிறை_நுதலாள் 1
பின் 10
பின்னா 1
பின்னாக 1
பின்னு 1
பின்னும் 1
பின்னே 1
பின்னேயும் 1
பின்னை 1
பின்னையும் 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
பிடி (1)
பின் தோற்று தோற்றான் பிடி – நள:226/4
பிடிக்க (2)
மான் பிடிக்க சொன்ன மயிலே போல் தான் பிடிக்க – நள:259/2
மான் பிடிக்க சொன்ன மயிலே போல் தான் பிடிக்க
பொன் புள்ளை பற்றி தா என்றாள் புது மழலை – நள:259/2,3
பிடிக்கும் (1)
தேன் பிடிக்கும் தண் துழாய் செம் கண் கரு முகிலை – நள:259/1
பிடித்த (2)
மாண பிடித்த தார் மன் – நள:34/4
தையல் பிடித்த தனி அன்னம் வெய்ய – நள:35/2
பிடித்தது (1)
காண பிடித்தது காண் என்றான் களி வண்டு – நள:34/3
பிடித்தாரின் (1)
பிடித்தாரின் வேறு அல்லர் என்று உரைப்பது அன்றே – நள:220/3
பிடித்தாரும் (2)
ஆயம் பிடித்தாரும் அல்லல் பொதுமகளிர் – நள:220/1
நேயம் பிடித்தாரும் நெஞ்சிடையே மாயம் – நள:220/2
பிடித்து (2)
பிடித்து தா என்றான் பெயர்ந்து – நள:31/4
அன்னம்-தனை பிடித்து அங்கு ஆய்_இழையார் கொண்டுபோய் – நள:33/1
பிடிப்பான் (1)
பொன் புள்-அதனை பிடிப்பான் நலன் புகுத – நள:260/1
பிணை (1)
பேதை மட மயிலை சூழும் பிணை மான் போல் – நள:137/1
பித்தரே (1)
பெரும் பேடிகள் அலரேல் பித்தரே அன்றோ – நள:250/3
பிரிக்க (1)
இருக்க தரியேன் இவரை பிரிக்க
உடனாக என்றான் உடனே பிறந்த – நள:169/2,3
பிரிந்து (3)
மல் தொடுத்த தோள் பிரிந்து மாயாத வல் வினையேன் – நள:302/1
பெற்றெடுத்த மக்காள் பிரிந்து ஏகும் கொற்றவனை – நள:302/2
என்னை தனி வனத்து இட்டு எம் கோன் பிரிந்து ஏக – நள:320/1
பிரிய (3)
பேதை பிரிய பிரியாத பேர் அன்பின் – நள:252/1
பெய் மலர் பூம் கோதை பிரிய பிரியாத – நள:278/1
என்னை பிரிய இரும் கானில் அன்னவனை – நள:314/2
பிரியாத (2)
பேதை பிரிய பிரியாத பேர் அன்பின் – நள:252/1
பெய் மலர் பூம் கோதை பிரிய பிரியாத
செம்மை உடை மனத்தான் செங்கோலன் பொய்ம்மை – நள:278/1,2
பிழை (1)
செய்த பிழை ஏது என்னும் தேர் வேந்தே என்று அழைக்கும் – நள:295/1
பிழைத்த (1)
வண் தமிழ்வாணர் பிழைத்த வான் குடி போல் தீ தழல் மீ – நள:311/1
பிழைத்தார் (2)
அறம் பிழைத்தார் பொய்த்தார் அருள் சிதைத்தார் மான – நள:265/1
திறம் பிழைத்தார் தெய்வம் இகழ்ந்தார் புறங்கடையில் – நள:265/2
பிழைத்தால் (1)
பிழைத்தால் வந்தேன் என்னும் பேர் – நள:110/4
பிழைத்தேன் (1)
பிழைத்தேன் யான் என்றான் அ பேர்_ஆழியானை – நள:11/3
பிழைப்பித்தாய் (1)
பேர் அரவின் வாயில் பிழைப்பித்தாய் தேரில் – நள:307/2
பிழையாமல் (1)
பேதை மட அன்னம் தன்னை பிழையாமல்
மேதி குலம் ஏறி மென் கரும்பை கோதி – நள:31/1,2
பிள்ளை (3)
வெள்ளம் போய் வேகின்ற மென் தளிர் போல் பிள்ளை மீன் – நள:102/2
பிள்ளை குருகு இரங்க பேதை புள் தாலாட்டும் – நள:145/3
கூன் சங்கின் பிள்ளை கொடி பவள கோடு இடறி – நள:152/1
பிறந்த (1)
உடனாக என்றான் உடனே பிறந்த
விட நாகம் அன்னான் வெகுண்டு – நள:169/3,4
பிறந்து (1)
பேர் உவமையாக பிறந்து உடையீர் வாரீர் – நள:50/2
பிறவி (1)
பிறவி பெரும் துயரம் எல்லாம் அறவே – நள:11/2
பிறழ்ந்தால் (1)
வேலை கரை இறந்தால் வேத நெறி பிறழ்ந்தால்
ஞாலம் முழுதும் நடு இழந்தால் சீலம் – நள:234/1,2
பிறித்து (1)
நெறி கண் நெடிது ஊழி வாழ்வீர் பிறித்து எம்மை – நள:297/2
பிறை (4)
பேர் அழகு சோர்கின்றது என்ன பிறை நுதல் மேல் – நள:62/1
பெய்வான் அமைந்த பிறை – நள:108/4
விரை கொண்டு எழுந்த பிறை மேகத்திடையே – நள:195/3
பிறை_நுதலாள் பேதமையை நோக்கி முறுவலியா – நள:238/2
பிறை_நுதலாள் (1)
பிறை_நுதலாள் பேதமையை நோக்கி முறுவலியா – நள:238/2
பின் (10)
மாது உவந்து பின் போன வன் நெஞ்சால் யாதும் – நள:101/2
முரைசு எறிந்த நாள் ஏழும் முற்றிய பின் கொற்ற – நள:134/1
போர் வேந்தர் கண்டு அறியா பொன் ஆவம் பின் உடைய – நள:151/3
மணந்தான் முடித்ததன் பின் வாள் நுதலும் தானும் – நள:178/3
பின் ஒழிய போந்தான் பெயர்ந்து – நள:214/4
சொல்லார் மணி தேரும் தோற்றதன் பின் வில் ஆட்கள் – நள:226/2
பின் தோற்று தோற்றான் பிடி – நள:226/4
சேல் உற்ற வாவி திருநாடு பின் ஒழிய – நள:257/1
பானு நெடும் தேர் படு கடலில் பாய்ந்ததன் பின்
கான அடம்பின் கவட்டு இலைகள் மானின் – நள:268/1,2
வில் தானை முன் செல்ல வேல் வேந்தர் பின் செல்ல – நள:414/1
பின்னா (1)
சடை செந்நெல் பொன் விளைக்கும் தன் நாடு பின்னா
கடல் தானை முன்னாக கண்டான் அடற்கு அமைந்த – நள:75/1,2
பின்னாக (1)
பொன் வாயில் பின்னாக போயினான் முன் நாளில் – நள:239/2
பின்னு (1)
பாவையரை செவ்வழி யாழ் பண்ணின் மொழி பின்னு குழல் – நள:227/3
பின்னும் (1)
என்ன முயங்குவிப்பேன் என்று அன்னம் பின்னும்
பொருந்த அன்பால் ஓதி மலர் பூம் கணைகள் பாய – நள:58/2,3
பின்னே (1)
பூ வாளி வேந்தன் தன் பொன் ஆவம் பின்னே இட்டு – நள:139/3
பின்னேயும் (1)
காலிக்கு பின்னேயும் காணலாம் மால் யானை – நள:334/2
பின்னை (1)
பொன் அமரும் தாராய் பொறுக்க என்று பின்னை தான் – நள:413/2
பின்னையும் (1)
மன்னி துயின்ற வரி வண்டு பின்னையும் போய் – நள:384/2