கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நெக்குருகி 1
நெகிழ்த்த 1
நெகிழ 2
நெஞ்சத்து 1
நெஞ்சத்தை 1
நெஞ்சம் 5
நெஞ்சன் 1
நெஞ்சால் 2
நெஞ்சாள் 1
நெஞ்சிடையே 2
நெஞ்சில் 2
நெஞ்சினால் 1
நெஞ்சு 7
நெஞ்சும் 1
நெடிது 3
நெடிதுயிரா 1
நெடு 11
நெடும் 22
நெய்தற்கு 1
நெருங்கினவே 1
நெருங்கு 1
நெருப்பு 1
நெருப்பை 1
நெல்லில் 1
நெற்றி 2
நெறி 8
நெறிக்கே 1
நெறியால் 2
நெறியாளர் 1
நெறியில் 2
நெறியை 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
நெக்குருகி (1)
நெக்குருகி நீ அழுதற்கு என் நிமித்தம் மை குழலாய் – நள:313/2
நெகிழ்த்த (1)
அங்கு அணைக்க வாய் நெகிழ்த்த ஆம்பல் பூ கொங்கு அவிழ் தேன் – நள:189/2
நெகிழ (2)
காமர் கயல் புரள காவி முகை நெகிழ
தாமரையின் செம் தேன் தளை அவிழ பூ மடந்தை – நள:19/1,2
நீலம் அளவே நெகிழ நிரை முத்தின் – நள:288/1
நெஞ்சத்து (1)
மதித்த தேர் தானை வய வேந்தன் நெஞ்சத்து
உதித்ததே வேறோர் உணர்வு – நள:279/3,4
நெஞ்சத்தை (1)
விலக்கினான் நெஞ்சத்தை வேறு ஆக்கி நின்று – நள:278/3
நெஞ்சம் (5)
இற்றது நெஞ்சம் எழுந்தது இரும் காதல் – நள:45/1
கொடியார் என செம் கை கூப்பினான் நெஞ்சம்
துடியா நெடிதுயிரா சோர்ந்து – நள:50/3,4
பொடியாதால் உள் ஆவி போகாதால் நெஞ்சம்
வெடியாதால் என்றான் விழுந்து – நள:275/3,4
ஒலித்த தேர் தானை உயர் வேந்தன் நெஞ்சம்
வலித்ததே தீ கலியால் வந்து – நள:284/3,4
நீதி நெறியாளர் நெஞ்சம் போல் யாதும் – நள:387/2
நெஞ்சன் (1)
மாய நெடும் சூதில் வஞ்சித்த வன் நெஞ்சன்
தூய நறு மலர் பூம் சோலை-வாய் ஆய – நள:419/1,2
நெஞ்சால் (2)
மாது உவந்து பின் போன வன் நெஞ்சால் யாதும் – நள:101/2
நெஞ்சால் இ மாற்றம் நினைந்து உரைக்க நீ அல்லாது – நள:394/1
நெஞ்சாள் (1)
நைகின்ற நெஞ்சாள் நயந்து – நள:388/4
நெஞ்சிடையே (2)
நேயம் பிடித்தாரும் நெஞ்சிடையே மாயம் – நள:220/2
நினைப்பு என்னும் காற்று அசைப்ப நெஞ்சிடையே மூளும் – நள:351/1
நெஞ்சில் (2)
வாய் அடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நல் நெஞ்சில்
தீ அடங்க ஏறினான் தேர் – நள:170/3,4
அரிந்தான் அரிந்திட்டு அவள் நிலைமை நெஞ்சில்
தெரிந்தான் இருந்தான் திகைத்து – நள:282/3,4
நெஞ்சினால் (1)
நெஞ்சினால் எல்லாம் நினைந்து – நள:353/4
நெஞ்சு (7)
தீ உடைய நெஞ்சு உடையான் தேர்ந்து – நள:45/4
நெஞ்சு ஓட வைத்து அயர்வான் கண்டான் நெடு வானில் – நள:67/3
நிழல் போலும் தண் குடையான் நெஞ்சு – நள:84/4
நெஞ்சு தடவும் நெடும் கண்கள் விஞ்சவே – நள:90/2
நீர் உயிர்க்கும் கண்ணோடு நெஞ்சு உருகி வீழ்வார்-தம் – நள:131/3
நாண் உக்கு நெஞ்சு உடைய நல் வேந்தர் நீள் நிலத்து – நள:158/2
மஞ்சன நீர் ஆக வழிந்து ஓட நெஞ்சு உருகி – நள:254/2
நெஞ்சும் (1)
அறம் கிடந்த நெஞ்சும் அருள் ஒழுகு கண்ணும் – நள:54/1
நெடிது (3)
நெடிது இரா வாய் புலரா நின்று – நள:113/4
தாங்கும் தளரும் தழலே நெடிது உயிர்க்கும் – நள:128/3
நெறி கண் நெடிது ஊழி வாழ்வீர் பிறித்து எம்மை – நள:297/2
நெடிதுயிரா (1)
துடியா நெடிதுயிரா சோர்ந்து – நள:50/4
நெடு (11)
நெஞ்சு ஓட வைத்து அயர்வான் கண்டான் நெடு வானில் – நள:67/3
அங்கை நெடு வேல் கண் ஆய்_இழையாய் வாவியின்-வாய் – நள:156/1
செக்கர் நெடு வானில் திங்கள் நிலா துளும்பி – நள:180/1
மின் நெடு வேல் கையான் விரைந்து – நள:183/4
முறுக்கு நெடு மூரி குழலும் குறிக்கின் – நள:194/2
வான நெடு வீதி செல்லும் மணி தேரோன் – நள:294/1
நெல்லில் படு வரால் ஓடும் நெடு நாடா – நள:372/3
காமர் நெடு நாடு கைவிட்டு வீமன்-தன் – நள:382/2
நெய்தற்கு அவாவும் நெடு நாட நீ என்-பால் – நள:384/3
கோதை நெடு வேல் குமரனையும் தங்கையையும் – நள:389/1
தானவரை வெல்ல தரித்த நெடு வை வேலாய் – நள:415/1
நெடும் (22)
நீல நெடும் கொண்மூ நெற்றி நிழல் நாறி – நள:5/1
நின்று புயல் வானம் பொழிந்த நெடும் தாரை – நள:21/1
வாம நெடும் புயத்தே வைகுவிப்பேன் சேம – நள:46/2
நெடும் குடையாய் என்று உரைத்து நீங்கியதே அன்னம் – நள:46/3
நெஞ்சு தடவும் நெடும் கண்கள் விஞ்சவே – நள:90/2
உள்ளம் போய் நாண் போய் உரை போய் வரி நெடும் கண் – நள:102/1
வரையோ எனும் நெடும் தோள் மன்னாவோ தின்னும் – நள:125/3
சோரும் துயிலும் துயிலா கரு நெடும் கண் – நள:130/3
நெடும் கண்கடை பார்த்து நின்றான் இடம் கண்டு – நள:139/2
மா நீர் நெடும் கயத்து வள்ளை கொடி மீது – நள:155/1
நெடும் கற்பும் மற்றவற்கு நின்று உரைத்து போனான் – நள:168/3
புணர்ந்தார் நெடும் காலம் புக்கு – நள:178/4
வெள்ளத்தான் வெள்ளி நெடும் கிரியான் மெய் அன்பர் – நள:180/3
காவி பொரு நெடும் கண் காதலியும் காதலனும் – நள:197/1
அந்த நெடும் சுரத்தின் மீது ஏக ஆங்கு அழலும் – நள:267/1
பானு நெடும் தேர் படு கடலில் பாய்ந்ததன் பின் – நள:268/1
பட்டதே என்ன போய் வீழ்ந்தாள் படை நெடும் கண் – நள:331/3
வாம நெடும் தோள் வறியோருக்கு ஏமம் – நள:344/2
கொற்ற நெடும் தேர் கொடுவந்தேன் மற்று இதற்கே – நள:376/2
ஆதி நெடும் தேர் பரி விட்டு அவை ஆற்றி – நள:386/1
வென்றி மணி நெடும் தேர் மேல் ஏறி சென்று அடைந்தான் – நள:417/2
மாய நெடும் சூதில் வஞ்சித்த வன் நெஞ்சன் – நள:419/1
நெய்தற்கு (1)
நெய்தற்கு அவாவும் நெடு நாட நீ என்-பால் – நள:384/3
நெருங்கினவே (1)
நெருங்கினவே மேன்மேல் நிறைந்து – நள:137/4
நெருங்கு (1)
மருங்கு உலவ வார் முரசம் ஆர்ப்ப நெருங்கு
புரி வளை நின்று ஏங்க போய் புக்கான் பெற்ற – நள:60/2,3
நெருப்பு (1)
நீள் நிலா என்னும் நெருப்பு – நள:109/4
நெருப்பை (1)
நெற்றி தனி கண் நெருப்பை குளிர்விக்கும் – நள:76/1
நெல்லில் (1)
நெல்லில் படு வரால் ஓடும் நெடு நாடா – நள:372/3
நெற்றி (2)
நீல நெடும் கொண்மூ நெற்றி நிழல் நாறி – நள:5/1
நெற்றி தனி கண் நெருப்பை குளிர்விக்கும் – நள:76/1
நெறி (8)
கொற்றவனை பார் மடந்தை கோமானை வாய்மை நெறி
கற்றவனை சேர்ந்தான் கலி – நள:211/3,4
நினையாமை பூண்டார் நெறி – நள:217/4
நெறி யானை மெய்ம்மை-வாய் நின்றானை நீங்கி – நள:228/3
வேலை கரை இறந்தால் வேத நெறி பிறழ்ந்தால் – நள:234/1
தான மடந்தைக்கு தார் வேந்தன் போன நெறி
காட்டுவான் போல் இருள் போய் கை வாங்க கான்-ஊடே – நள:294/2,3
நெறி கண் நெடிது ஊழி வாழ்வீர் பிறித்து எம்மை – நள:297/2
வேத நெறி வழுவா வேந்தனையும் பூம் தடம் கண் – நள:412/1
ஏனை நெறி தூரம் இனி எத்தனையோ மானே கேள் – நள:415/2
நெறிக்கே (1)
பொன் நிறத்த புள் வடிவாய் போந்து இருந்தான் நல் நெறிக்கே
அஞ்சி பார் ஈந்த அரசனையும் தேவியையும் – நள:258/2,3
நெறியால் (2)
செம் நெறியால் பார் காத்த செங்கோல் நில வேந்தன் – நள:209/3
தன் நெறியால் வேறோர் தவறு – நள:209/4
நெறியாளர் (1)
நீதி நெறியாளர் நெஞ்சம் போல் யாதும் – நள:387/2
நெறியில் (2)
பொரும் கலி நீர் ஞாலத்தை புல் நெறியில் ஆக்கும் – நள:164/3
நல் நெறியில் சூதால் நளன் களவு இயற்றி – நள:212/1
நெறியை (1)
விலங்குவன மெய் நெறியை விட்டு – நள:22/4