கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
திகழ்கின்ற 1
திகைத்து 4
திங்கள் 4
திசை 5
திசையில் 1
திண் 3
திணிந்த 1
திமிர்ந்த 1
திரண்டு 1
திரள் 1
திரித்த 1
திரிந்து 2
திரிந்தேயும் 1
திரியா 1
திரியும் 1
திரிவான் 1
திரு 18
திருத்தி 1
திருந்தாரை 1
திருந்தி 1
திருந்து 1
திருநகர்க்கு 1
திருநகர்க்கே 2
திருநகரில் 1
திருநகரும் 1
திருநாடர் 1
திருநாடன் 4
திருநாடா 1
திருநாடாம் 1
திருநாடு 3
திருநாடும் 1
திருமகள்-பால் 1
திருமகளாம் 1
திருமடந்தை 6
திருமடந்தையோடும் 1
திருவடி 1
திருவின் 1
திருவுக்கு 1
திருவும் 1
திருவுள்ளம் 1
திருவை 2
திரை 5
திறக்க 1
திறத்தையே 1
திறந்ததே 1
திறந்து 1
திறம் 1
திறம்பா 1
திறை 1
திறையில் 1
தின்று 1
தின்ன 1
தின்னும் 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
திகழ்கின்ற (1)
மன்னன் விடுத்த வடிவில் திகழ்கின்ற
அன்னம் போய் கன்னி அருகு அணைய நல்_நுதலும் – நள:52/1,2
திகைத்து (4)
தெரிந்தான் இருந்தான் திகைத்து – நள:282/4
சேதி கோன் தேவி திகைத்து – நள:327/4
சிந்தை கலங்கி திகைத்து அலமந்து எந்தாய் யான் – நள:331/2
தெரிவு அரிதா நின்றான் திகைத்து – நள:400/4
திங்கள் (4)
கோட்டு மண் கொண்ட குளிர் திங்கள் ஈட்டு மணி – நள:109/2
செப்பு இளம் கொங்கைமீர் திங்கள் சுடர் பட்டு – நள:111/1
கொங்கை அனலில் கொளுந்தியோ திங்கள்
விரிகின்ற வெண் நிலவால் வேகின்றதேயோ – நள:114/2,3
செக்கர் நெடு வானில் திங்கள் நிலா துளும்பி – நள:180/1
திசை (5)
திசை முகந்த வெண் கவிகை தேர் வேந்தே உன்றன் – நள:36/1
திசை முகந்தால் அன்ன தெருவும் வசை இறந்த – நள:87/2
தீய வனமும் துயின்று திசை துயின்று – நள:274/1
திண் நாகம் ஓர் எட்டும் தாங்கும் திசை அனைத்தும் – நள:350/3
எங்கண் உறைந்தனை-கொல் எ திசை போய் நாடினை-கொல் – நள:367/1
திசையில் (1)
வண்டு இரியும் தெள் நீர் மகதர் கோன் எண் திசையில்
போர் வேந்தர் கண்டு அறியா பொன் ஆவம் பின் உடைய – நள:151/2,3
திண் (3)
மறம் கிடந்த திண் தோள் வலியும் நிலம் கிடந்த – நள:54/2
திண் தோள் வய வேந்தர் செந்தாமரை முகம் போய் – நள:162/1
திண் நாகம் ஓர் எட்டும் தாங்கும் திசை அனைத்தும் – நள:350/3
திணிந்த (1)
விழுது பட திணிந்த வீங்கு இருள் வாய்ப்பட்டு – நள:131/1
திமிர்ந்த (1)
கோதை மடவார் தம் கொங்கை மிசை திமிர்ந்த
சீத களப செழும் சேற்றால் வீதி வாய் – நள:20/1,2
திரண்டு (1)
அள்ளி கொளலாய் அடைய திரண்டு ஒன்றாய் – நள:120/1
திரள் (1)
முந்நீர் மடவார் முறுவல் திரள் குவிப்ப – நள:357/1
திரித்த (1)
திரித்த கோ இங்கு இருந்த சேய் – நள:142/4
திரிந்து (2)
தேவர் பணி தலைமேல் செல்லும் திரிந்து ஒருகால் – நள:84/1
செய் குன்றும் ஆறும் திரிந்து ஆடி தையலுடன் – நள:207/2
திரிந்தேயும் (1)
ஆண்டு இரண்டாறு எல்லை அளவும் திரிந்தேயும்
காண் தகைய வெம் கலியும் காண்கிலான் நீண்ட புகழ் – நள:209/1,2
திரியா (1)
ஆரும் திரியா அரை இருளில் அங்ஙனே – நள:337/1
திரியும் (1)
வெம் கானகம் திரியும் வேளைதனில் அங்கே ஓர் – நள:269/2
திரிவான் (1)
திரிவான் அ தீ கானில் செம் தீயின் வாய்ப்பட்டு – நள:337/3
திரு (18)
சோதி திரு தூணில் தோன்றினான் வேதத்தின் – நள:3/2
தேன் பாடும் தார் நளன்-தன் தெய்வ திரு கதையை – நள:6/3
மெய் திரு வந்து உற்றாலும் வெம் துயர் வந்து உற்றாலும் – நள:12/1
மன்னன் திரு முன்னர் வைத்தலுமே அன்னம் – நள:33/2
தேன் ஆடும் தெய்வ தருவும் திரு மணியும் – நள:76/3
பூணாள் திரு முகத்தை புண்டரிகம் என்று அயிர்த்து – நள:193/3
திரு அழிக்கும் மானம் சிதைக்கும் மருவும் – நள:219/2
சிறியானை சேர்ந்தாள் திரு – நள:228/4
தந்தை திரு முகத்தை நோக்கி தமை பயந்தாள் – நள:253/1
மண் மேல் திரு மேனி வைத்து – நள:274/4
தின்ன போம் நாடன் திரு – நள:290/4
திரு முகம் நான் காண்கிலேன் தேர் வேந்தே என்றாள் – நள:301/3
தீ கடவுள் தந்த வரத்தை திரு மனத்தில் – நள:338/1
தீ கலியால் செற்ற திரு மனத்தான் பூம் கழலை – நள:343/2
விடாதான் திரு மேனி வெந்து – நள:344/4
தேன் இறால் பாயும் திரு நாடா கானில் – நள:347/2
தெளியாது இருக்கும் திரு நாடா உன்னை – நள:402/3
தே மாரி பெய்யும் திரு மலர் தார் வேந்தன் மேல் – நள:408/3
திருத்தி (1)
கொங்கை அளைந்து குழல் திருத்தி கோலம் செய் – நள:398/1
திருந்தாரை (1)
தே_மொழிக்கு தீது இலவே என்றான் திருந்தாரை
ஏம் ஒழிக்கும் வேலான் எடுத்து – நள:69/3,4
திருந்தி (1)
திருந்தி அவாம் மெய் தவத்தோன் தேர்ந்து – நள:12/4
திருந்து (1)
தேரின் துகளை திருந்து இழையார் பூ குழலின் – நள:29/1
திருநகர்க்கு (1)
விண் நாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு
மண் நாடு நோக்கி மகிழ்ந்து – நள:80/3,4
திருநகர்க்கே (2)
வீமன் திருநகர்க்கே மீள் என்றான் விண்ணவர் முன் – நள:243/3
மற்று இ திருநகர்க்கே வந்தடைந்த மன்னவற்கு – நள:399/1
திருநகரில் (1)
தேவர் கோனே அ திருநகரில் காவல் – நள:85/2
திருநகரும் (1)
செப்பு அரிய செல்வ திருநகரும் ஒப்பு அரிய – நள:422/2
திருநாடர் (1)
செந்நெல் விளைக்கும் திருநாடர் மன்ன – நள:361/2
திருநாடன் (4)
சென்னி தடவும் திருநாடன் பொன்னில் – நள:141/2
வெள் வளைத்தாய் ஓடும் நீர் வேலை திருநாடன்
புள் வளைத்தான் ஆடையால் போந்து – நள:262/3,4
திறக்க தேன் ஊறும் திருநாடன் பொன்னை – நள:352/3
வள்ளம் போல் கோங்கு மலரும் திருநாடன்
உள்ளம் போல் கண்ணீர் உகுத்து – நள:392/3,4
திருநாடா (1)
சினை ஆமை வைகும் திருநாடா செம்மை – நள:217/3
திருநாடாம் (1)
போதில் திருநாடும் பொய்கை திருநாடாம்
சேதி திருநாடு சென்று – நள:323/3,4
திருநாடு (3)
சேல் உற்ற வாவி திருநாடு பின் ஒழிய – நள:257/1
சேதி திருநாடு சென்று – நள:323/4
செய்க்கு அங்கு பாயும் திருநாடு புக்கு அங்கு – நள:416/2
திருநாடும் (1)
போதில் திருநாடும் பொய்கை திருநாடாம் – நள:323/3
திருமகள்-பால் (1)
விண்ணவர் தம் ஏவலுடன் வீமன் திருமகள்-பால்
நண்ணு புகழ் நளனும் நன்கு உரைத்த பெண் அணங்கின் – நள:98/1,2
திருமகளாம் (1)
வில்லியரும் பொன் தாம வீமன் திருமகளாம்
நல் உயிரும் வாழும் நகர் – நள:75/3,4
திருமடந்தை (6)
வீமன் திருமடந்தை மென் முலையை உன்னுடைய – நள:46/1
புள் அரிக்கும் நாடன் திருமடந்தை பூ வாளி – நள:102/3
வேலை பெறா அமுதம் வீமன் திருமடந்தை
மாலை பெறாது அகலும் வான் நாடர் வேலை – நள:164/1,2
வெம் கதிரோன்-தானும் விதர்ப்பன் திருமடந்தை
மங்கல நாள் காண வருவான் போல் செம் குமுதம் – நள:170/1,2
வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலா – நள:277/1
மீண்டு ஓர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை
பூண்டாள் என்று அந்தண நீ போய் உரைத்தால் நீண்ட – நள:369/1,2
திருமடந்தையோடும் (1)
விருப்பான வீமன் திருமடந்தையோடும்
இருப்பான் வருகின்றேன் யான் – நள:165/3,4
திருவடி (1)
தாதை திருவடி மேல் தான் வீழ்ந்தாள் மீது எல்லாம் – நள:61/2
திருவின் (1)
செம் திருவின் கொங்கையினும் தேர் வேந்தன் ஆகத்தும் – நள:173/1
திருவுக்கு (1)
காமன் திருவுக்கு ஓர் காப்பு – நள:79/4
திருவும் (1)
பேர் அரசும் எங்கள் பெரும் திருவும் கைவிட்டு – நள:15/1
திருவுள்ளம் (1)
செங்கோலாய் உன்றன் திருவுள்ளம் ஈது ஆயின் – நள:251/1
திருவை (2)
செய்ய கமல திருவை நிகரான – நள:35/1
சேதி நகர்க்கே திருவை செலவிட்டு அப்போதில் – நள:315/1
திரை (5)
தேன் கழியில் வீழ திரை கரத்தால் வான் கடல் வந்து – நள:152/2
அம் கை வரி வளையாய் ஆழி திரை கொணர்ந்த – நள:154/1
திரை ஏற மென் கிடங்கில் சேல் ஏற வாளை – நள:204/3
கங்கை திரை நீர் கரை ஏறி செம் கதிர் பைம் – நள:214/2
எற்றி திரை பொர நொந்து ஏறி இள மணலில் – நள:262/1
திறக்க (1)
திறக்க தேன் ஊறும் திருநாடன் பொன்னை – நள:352/3
திறத்தையே (1)
திறத்தையே கொண்டு அருளை தேய்க்கும் மறத்தையே – நள:218/2
திறந்ததே (1)
தீண்டும் அளவில் திறந்ததே பூண்டது ஓர் – நள:89/2
திறந்து (1)
கொண்டுவா என்றாள் தன் கொவ்வை கனி திறந்து
வண்டு வாழ் கூந்தல் மயில் – நள:317/3,4
திறம் (1)
திறம் பிழைத்தார் தெய்வம் இகழ்ந்தார் புறங்கடையில் – நள:265/2
திறம்பா (1)
ஒழிவரோ செம்மை உரை திறம்பா செய்கை – நள:234/3
திறை (1)
செழியனையும் சென்னியையும் சேர திறை கொள் – நள:7/3
திறையில் (1)
திறையில் கதிர் முத்தம் சிந்தும் துறையில் – நள:222/2
தின்று (1)
ஊன் தின்று உவகையால் உள்ள உயிர் புறம்பே – நள:123/1
தின்ன (1)
தின்ன போம் நாடன் திரு – நள:290/4
தின்னும் (1)
வரையோ எனும் நெடும் தோள் மன்னாவோ தின்னும்
இரையோ இரவுக்கு யான் – நள:125/3,4