Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கங்குல் 3
கங்கை 7
கங்கை-இடை 1
கச்சு 1
கச்சையர் 1
கஞ்சம் 1
கட்ட 1
கட்டி 1
கட்டு 2
கட 1
கடக்கும் 1
கடந்து 2
கடந்தோமோ 1
கடப்பார் 2
கடம் 1
கடல் 7
கடலில் 1
கடலும் 2
கடவுள் 2
கடற்கே 1
கடன் 2
கடா 4
கடாம் 1
கடி 2
கடித்து 1
கடிந்த 1
கடிமணமும் 1
கடு 2
கடுக 1
கடும் 2
கடை 5
கடைத்தலை-வாய் 1
கடைவாயில் 1
கடைவார் 1
கண் 46
கண்கடை 1
கண்கள் 1
கண்ட 1
கண்ட-கால் 2
கண்டது 1
கண்டாய் 10
கண்டாயினும் 1
கண்டாயோ 1
கண்டார் 3
கண்டார்கள் 1
கண்டான் 10
கண்டு 16
கண்டேம் 1
கண்ணா 1
கண்ணாள் 5
கண்ணானை 1
கண்ணி 3
கண்ணிக்கும் 1
கண்ணியதை 1
கண்ணியான் 1
கண்ணியுடன் 1
கண்ணில் 1
கண்ணிலே 1
கண்ணின் 2
கண்ணீர் 10
கண்ணீரின்-நின்று 1
கண்ணீரும் 2
கண்ணும் 1
கண்ணுற்றான் 3
கண்ணுற்று 1
கண்ணே 3
கண்ணோட 1
கண்ணோடு 1
கண்மணிகள் 1
கணம் 1
கணி 1
கணை 2
கணைகள் 1
கணையால் 1
கணையே 1
கதவு 1
கதிர் 12
கதிரோன் 3
கதிரோன்-தானும் 1
கதை 1
கதையை 1
கந்தனையும் 1
கந்து 2
கபோல 1
கமல 6
கமலத்தின் 3
கமலத்தை 1
கமழும் 2
கமுகின் 3
கயத்து 1
கயல் 3
கயிலைக்கே 1
கயிற்றில் 1
கரங்கள் 1
கரத்தால் 1
கரத்தை 1
கரந்து 1
கரவு 1
கரி 5
கரியா 1
கரியான் 1
கரியை 1
கரு 3
கருக 1
கருகியவோ 1
கருத்தில் 1
கருத்தை 1
கருதி 1
கருது 1
கருப்பு 1
கரும் 5
கரும்பால் 1
கரும்பு 1
கரும்பை 2
கருவிக்கு 1
கரை 7
கரைய 1
கல் 2
கல்லாதனவும் 1
கல்லும் 1
கலக்கினான் 1
கலக்கு 1
கலங்கலை 1
கலங்காத 1
கலங்கி 2
கலங்கிற்றே 1
கலங்கினாள் 1
கலங்கினான் 1
கலங்குவன 1
கலந்தால் 1
கலந்து 3
கலாப 1
கலி 11
கலிங்கர் 1
கலியால் 4
கலியின் 2
கலியும் 4
கலியை 1
கலுழ்ந்து 2
கலை 1
கலையின் 1
கவட்டின் 1
கவட்டு 1
கவர 1
கவரி 1
கவறாட 1
கவறாடல் 2
கவறாய் 1
கவறு 1
கவிகை 2
கவிழ்ந்த 1
கழல் 5
கழலின் 1
கழலை 1
கழன்று 1
கழி 1
கழித்தான் 1
கழித்து 1
கழிய 1
கழியாத 1
கழியில் 1
கழியும் 1
கழு 2
கழுகு 1
கழுதும் 2
கழுநீரை 1
கழுவ 1
கழுவா 1
கழுவினான் 1
கழை 1
கள் 3
கள்ள 1
கள்ளி 1
களப 2
களவு 1
களி 7
களிற்றாய் 2
களிற்றான் 1
களிற்றின் 1
களிற்று 1
களிறு 1
கற்பான் 1
கற்பின் 2
கற்பினாள் 1
கற்புக்கும் 1
கற்பும் 1
கற்றவனை 1
கறை 1
கன்று 1
கன்னி 8
கன்னி-பால் 1
கன்னி-அவள் 1
கன்னியர்-தம் 1
கன்னியையும் 1
கனக 2
கனல் 1
கனலை 1
கனற்கு 1
கனன்று 1
கனி 4
கனிந்து 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


கங்குல் (3)

கருவிக்கு நீங்காத கார் இருள் வாய் கங்குல்
உருவி புகுந்ததால் ஊதை பருகி கார் – நள:126/1,2
கழுதும் வழி தேடும் கங்குல் பொழுது-இடையே – நள:131/2
இ கங்குல் போக இகல் வேல் நளன் எறி நீர் – நள:416/1

TOP


கங்கை (7)

கலாப மயில் இருந்த பாகத்தார் கங்கை
உலாவு சடை மேல் உறையும் நிலாவை – நள:4/1,2
கடித்து தான் முத்து உமிழும் கங்கை நீர் நாதன் – நள:31/3
கூந்தல் மேல் கங்கை கொழுந்து ஓடும் நல் நாடன் – நள:63/3
கழியாத சிந்தையுடன் கங்கை நதி ஆடி – நள:197/3
கரை ஏறும் கங்கை கரை – நள:204/4
கங்கை திரை நீர் கரை ஏறி செம் கதிர் பைம் – நள:214/2
கங்கை வள நாட்டார்-தம் காவலனை அங்கு – நள:367/2

TOP


கங்கை-இடை (1)

செம் கண் மகரத்தை தீண்டி போய் கங்கை-இடை
சேல் குளிக்கும் கேகயர் கோன் தெவ் ஆடல் கைவரை மேல் – நள:154/2,3

TOP


கச்சு (1)

மன்னன் புயம் நின் வன முலைக்கு கச்சு ஆகும் – நள:58/1

TOP


கச்சையர் (1)

வீக்கிய கச்சையர் வேல் வாளர் காக்க – நள:121/2

TOP


கஞ்சம் (1)

அம் சிலம்பே வாய்விட்டு அறற்றுவன கஞ்சம்
கலங்குவன மாளிகை மேல் காரிகையார் கண்ணே – நள:22/2,3

TOP


கட்ட (1)

தந்துவினால் கட்ட சமைவது ஒக்கும் பைம் தொடையில் – நள:6/2

TOP


கட்டி (1)

இட்ட பசும் குவளை ஏர் அடித்த கட்டி
கரைய தேன் ஊறும் கடல் நாடன் ஊர்க்கு – நள:74/2,3

TOP


கட்டு (2)

கட்டு உரைத்து காண் என்றான் கார் வண்டு காந்தாரம் – நள:313/3
கட்டு உரைத்து போனான் கலி – நள:411/4

TOP


கட (1)

காயும் கட களிற்றாய் கார்க்கோடகன் என் பேர் – நள:346/1

TOP


கடக்கும் (1)

கடக்கும் ஆறு என் என்றான் காம நீர் ஆழி – நள:85/3

TOP


கடந்து (2)

காவல் கடந்து எங்கள் கன்னி மாடம் புகுந்தாய் – நள:92/1
இந்த மலை கடந்து ஏழு மலைக்கு அப்புறமா – நள:415/3

TOP


கடந்தோமோ (1)

கடந்தோமோ என்றார் கலுழ்ந்து – நள:241/4

TOP


கடப்பார் (2)

கடப்பார் எவரே கடு வினையை வீமன் – நள:232/1
பண்டை வினை பயனை பாரிடத்தில் ஆர் கடப்பார்
கொண்டல் நிழலில் குழை தடவும் கெண்டை – நள:272/1,2

TOP


கடம் (1)

கடம் தாழ் களி யானை காவலனை தேடி – நள:364/3

TOP


கடல் (7)

மணி தோகை மேல் தோன்றி மா கடல் சூர் வென்றோன் – நள:5/3
கரைய தேன் ஊறும் கடல் நாடன் ஊர்க்கு – நள:74/3
கடல் தானை முன்னாக கண்டான் அடற்கு அமைந்த – நள:75/2
தேன் கழியில் வீழ திரை கரத்தால் வான் கடல் வந்து – நள:152/2
கடல் போலும் காதலார் கையற்றார் தங்கள் – நள:325/3
காம நீர் ஓத கடல் கிளர்ந்தால் ஒத்ததே – நள:330/3
கார் அடுத்த சோலை கடல் நாடன் தேர் அடுத்த – நள:380/2

TOP


கடலில் (1)

பானு நெடும் தேர் படு கடலில் பாய்ந்ததன் பின் – நள:268/1

TOP


கடலும் (2)

வானும் தேர் வீதி மறி கடலும் மீன – நள:112/2
என்று உரைத்த அவ்வளவில் ஏழு உலகும் சூழ் கடலும்
குன்றும் சுமந்த குல புயத்தான் வென்றி – நள:341/1,2

TOP


கடவுள் (2)

காண்டாவனம் தீ கடவுள் உண கை கணையால் – நள:14/1
தீ கடவுள் தந்த வரத்தை திரு மனத்தில் – நள:338/1

TOP


கடற்கே (1)

வெம் தழலை ஆற்றுவான் மேல் கடற்கே எந்தை – நள:267/2

TOP


கடன் (2)

கண் மேல் துயில்கை கடன் என்றான் கைகொடுத்து – நள:274/3
காவலனுக்கு ஏவல் கடன் பூண்டேன் மற்று அவன்-தன் – நள:375/1

TOP


கடா (4)

அரும் கடா நிற்கும் அவந்தி நாடு ஆளும் – நள:148/3
இரும் கடா யானை இவன் – நள:148/4
கரும்பு ஒடியா மள்ளர் கடா அடிக்கும் நாடா – நள:222/3
கந்து சுளியும் கடா களிற்றின் வந்து – நள:395/2

TOP


கடாம் (1)

காரணம் தான் ஈது அன்றோ என்றான் கடாம் சொரியும் – நள:373/3

TOP


கடி (2)

கன்னி யான் ஆகில் கடி மாலை அன்னம் தான் – நள:159/2
இ கடி கா நீங்கள் உறையும் இளம் மர கா – நள:199/3

TOP


கடித்து (1)

கடித்து தான் முத்து உமிழும் கங்கை நீர் நாதன் – நள:31/3

TOP


கடிந்த (1)

பாம்பின் வாய்-நின்றும் பறித்தான் பகை கடிந்த
காம்பின் வாய் வில் வேடன் கண்டு – நள:306/3,4

TOP


கடிமணமும் (1)

கணி மொழிந்த நாளில் கடிமணமும் செய்தார் – நள:172/1

TOP


கடு (2)

உண்ணா கடு விடத்தை உண்ட ஒரு மூன்று – நள:190/3
கடப்பார் எவரே கடு வினையை வீமன் – நள:232/1

TOP


கடுக (1)

சிந்தையினும் கடுக சென்றதே சந்த விரை – நள:377/2

TOP


கடும் (2)

காதல் இருவரையும் கொண்டு கடும் சுரம் போக்கு – நள:243/1
அடையும் கடும் கானில் ஆடு அரவின் வாய்ப்பட்டு – நள:303/1

TOP


கடை (5)

காவலன் தன் தூதர் கடை காவலர்க்கு அறிவித்து – நள:73/1
நீண்ட கமலத்தை நீல கடை சென்று – நள:89/1
நீரும் கடை சோர நின்று – நள:130/4
பச்சை தாள் மேதி கடை வாயில் பால் ஒழுகும் – நள:147/3
கடை சிவப்ப நின்றாள் கழல் மன்னர் வெள்ளை – நள:200/3

TOP


கடைத்தலை-வாய் (1)

கந்து அடையும் வேழ கடைத்தலை-வாய் வந்து அடைந்த – நள:65/2

TOP


கடைவாயில் (1)

கடைவாயில் கார் நீலம் கண் விழிக்கும் நாடன் – நள:386/3

TOP


கடைவார் (1)

கடைவார் தம் கை போலும் ஆயிற்றே காலன் – நள:283/3

TOP


கண் (46)

கண் இழந்து மாய கவறு ஆடி காவலர் தாம் – நள:17/1
வரி வளையார் தம் கண் மருங்கே ஒருபோழ்தும் – நள:23/2
செம் கண் மால் அல்லனேல் தேர் வேந்தர் ஒப்பரோ – நள:54/3
அம் கண் மா ஞாலத்தவற்கு – நள:54/4
உள்ளும் புறமும் இனிது உறைந்தார் தெள் அரி கண்
பூ மகளை பொன்னை பொரு வேல் விதர்ப்பன்-தன் – நள:66/2,3
நெற்றி தனி கண் நெருப்பை குளிர்விக்கும் – நள:76/1
செம் கண் மத யானை தேர் வேந்தே தே மாலை – நள:83/1
போது அரி கண் மாதராள் பொன் மாலை சூட்டத்தான் – நள:96/1
உள்ளம் போய் நாண் போய் உரை போய் வரி நெடும் கண்
வெள்ளம் போய் வேகின்ற மென் தளிர் போல் பிள்ளை மீன் – நள:102/1,2
புற்கு என்றார் அந்தி புனை மலர் கண் நீர் அரும்ப – நள:107/1
மையிட்ட கண் அருவி வார வளை சோர – நள:119/1
அன்றில் ஒரு கண் துயின்று ஒரு கண் ஆர்வத்தால் – நள:124/1
அன்றில் ஒரு கண் துயின்று ஒரு கண் ஆர்வத்தால் – நள:124/1
சோரும் துயிலும் துயிலா கரு நெடும் கண்
நீரும் கடை சோர நின்று – நள:130/3,4
காசினியும் தாமரையும் கண் விழிப்ப வாசம் – நள:132/2
குறு விழிக்கு நேர் நாடன் கோதை பெரும் கண்
சிறு விழிக்கு நோற்றிருந்த சேய் – நள:135/3,4
மை தடம் கண் செல்ல வய வேந்தர் சித்தம் – நள:136/2
மருங்கின் வெளி வழியே மன்னவர் கண் புக்கு – நள:137/3
சூர் வாய் மதர் அரி கண் தோகாய் கேள் பார்-வாய் – நள:142/2
செம் கண் மகரத்தை தீண்டி போய் கங்கை-இடை – நள:154/2
அங்கை நெடு வேல் கண் ஆய்_இழையாய் வாவியின்-வாய் – நள:156/1
கண் இமைத்தலால் அடிகள் காசினியில் தோய்தலால் – நள:160/1
கண் அகல் ஞாலம் களி கூர மண் அரசர் – நள:161/2
செம் கயல் கண் ஓடி செவி தடவ அம் கை – நள:177/2
காவி பொரு நெடும் கண் காதலியும் காதலனும் – நள:197/1
வெம் கண் சின விடையின் மேல் ஏறி கால் ஏற – நள:214/1
சின கதிர் வேல் கண் மடவாய் செல்வர்-பால் சென்றீ – நள:249/1
தேன் பிடிக்கும் தண் துழாய் செம் கண் கரு முகிலை – நள:259/1
கொற்ற கயல் கண் கொடியே இருவோரும் – நள:261/1
மாதராய் நாம் இந்த மண்டபத்தே கண் துயில – நள:270/3
கேட்டவா என்று அழுதாள் கெண்டை அம் கண் நீர் சோர – நள:271/3
காணேன் இங்கு என்னா கலங்கினாள் கண் பனிப்ப – நள:273/3
கண் மேல் துயில்கை கடன் என்றான் கைகொடுத்து – நள:274/3
தன் கண் துயில்வாளை தான் கண்டு மென் கண் – நள:275/2
தன் கண் துயில்வாளை தான் கண்டு மென் கண்
பொடியாதால் உள் ஆவி போகாதால் நெஞ்சம் – நள:275/2,3
நெறி கண் நெடிது ஊழி வாழ்வீர் பிறித்து எம்மை – நள:297/2
அம் கண் விசும்பின் அவிர் மதி மேல் சென்று அடையும் – நள:299/1
வெம் கண் அரவு போல் மெல்_இயலை கொங்கைக்கு – நள:299/2
தீ கண் புலி தொடர செல்லும் சிறு மான் போல் – நள:310/1
பட்டதே என்ன போய் வீழ்ந்தாள் படை நெடும் கண்
விட்ட நீர் மேலே விழ – நள:331/3,4
கண் படா வேலை கரை – நள:351/4
கடைவாயில் கார் நீலம் கண் விழிக்கும் நாடன் – நள:386/3
கனிந்து உருகி நீர் வார கண் – நள:396/4
தாதையை முன் காண்டலுமே தாமரை கண் நீர் அரும்ப – நள:405/1
வேத நெறி வழுவா வேந்தனையும் பூம் தடம் கண்
கோதையையும் மக்களையும் கொண்டுபோய் தாது – நள:412/1,2
கார் பெற்ற தோகையோ கண் பெற்ற வாள் முகமோ – நள:425/1

TOP


கண்கடை (1)

நெடும் கண்கடை பார்த்து நின்றான் இடம் கண்டு – நள:139/2

TOP


கண்கள் (1)

நெஞ்சு தடவும் நெடும் கண்கள் விஞ்சவே – நள:90/2

TOP


கண்ட (1)

மாதோடு மன்னன் வர கண்ட மா நகருக்கு – நள:425/3

TOP


கண்ட-கால் (2)

பூணுக்கு அழகு அளிக்கும் பொன் தொடியை கண்ட-கால்
நாண் உக்கு நெஞ்சு உடைய நல் வேந்தர் நீள் நிலத்து – நள:158/1,2
அ வண்ணம் கண்ட-கால் ஆற்றுவரோ மெய் வண்ணம் – நள:332/2

TOP


கண்டது (1)

சயம்வரம் தான் கண்டது ஓர் சார்பு – நள:100/4

TOP


கண்டாய் (10)

மாதே இவன் கண்டாய் மான தனி கொடியின் – நள:143/3
செற்றானும் கண்டாய் இ சேய் – நள:144/4
தெரியில் இவன் கண்டாய் செம் கழு நீர் மொட்டை – நள:145/1
தேம் மரு தார் காளை இவன் கண்டாய் செம் மலர் மேல் – நள:146/1
அம் சாயல் மானே இவன் கண்டாய் ஆலை-வாய் – நள:147/1
விட கதிர் வேல் காளை இவன் கண்டாய் மீனின் – நள:149/1
தேர் வேந்தன் கண்டாய் இ சேய் – நள:151/4
ஈதல் மறுத்தல் இவை கண்டாய் போதில் – நள:217/2
எனக்கு என்னும் இ மாற்றம் கண்டாய் தனக்கு உரிய – நள:249/2
வாய்மையே கண்டாய் வலி – நள:394/4

TOP


கண்டாயினும் (1)

கந்தனையும் கன்னியையும் கண்டாயினும் சிறிது – நள:328/1

TOP


கண்டாயோ (1)

காரிகை தான் பட்ட துயர் கண்டாயோ சோர் குழலும் – நள:326/2

TOP


கண்டார் (3)

வருவான் போல் தேர் மேல் வருவானை கண்டார்
பெரு வானில் தேவர் பெரிது – நள:81/3,4
கண்டார் உவப்ப கலந்து – நள:97/4
இரும் கலியை கண்டார் எதிர் – நள:164/4

TOP


கண்டார்கள் (1)

பெருந்தகையை கண்டார்கள் பேர் எழில் தோள் வேந்தர் – நள:9/3

TOP


கண்டான் (10)

நெஞ்சு ஓட வைத்து அயர்வான் கண்டான் நெடு வானில் – நள:67/3
கடல் தானை முன்னாக கண்டான் அடற்கு அமைந்த – நள:75/2
கொடி ஆட கண்டான் ஓர் கூத்து – நள:201/4
பாழ் மண்டபம் கண்டான் பால் வெண்குடை நிழல் கீழ் – நள:269/3
வாழ் மண்டபம் கண்டான் வந்து – நள:269/4
வெண் தோடன் செம்பங்கி வில் வேடன் கண்டான்
கழுகு வாழ் கானகத்து கார் அரவின் வாயில் – நள:304/2,3
கண்டான் ஐயுற்றான் கமல மயிலே என்றான் – நள:312/3
எரிவானை கண்டான் எதிர் – நள:337/4
கனல் புகைய வேகின்றான் கண்டான் பனி குருகு – நள:351/2
இருந்தானை கண்டான் எதிர் – நள:419/4

TOP


கண்டு (16)

கலங்கிற்றே மன்னவனை கண்டு – நள:33/4
கண்டு ஆற்றாது உள்ளம் கலங்கினான் காம நோய் – நள:49/3
நெடும் கண்கடை பார்த்து நின்றான் இடம் கண்டு
பூ வாளி வேந்தன் தன் பொன் ஆவம் பின்னே இட்டு – நள:139/2,3
போர் வேந்தர் கண்டு அறியா பொன் ஆவம் பின் உடைய – நள:151/3
காவலரை தன் சேடி காட்ட கண்டு ஈர் இருவர் – நள:157/1
புல்லும் வரி வண்டை கண்டு புன மயில் போல் – நள:185/1
சந்தி செய தாள் விளக்க தாளின் மறு தான் கண்டு
புந்தி மகிழ புகுந்து கலி சிந்தை எலாம் – நள:210/1,2
இளைக்குமா போல இருந்தது கண்டு அன்றே – நள:260/3
தன் கண் துயில்வாளை தான் கண்டு மென் கண் – நள:275/2
உடுத்த துகில் அரிந்தது ஒண்_தொடியாள் கண்டு
மடுத்த துயிலான் மறுகி அடுத்தடுத்து – நள:289/1,2
காம்பின் வாய் வில் வேடன் கண்டு – நள:306/4
கள்ள வார் கூந்தலாள் கண்டு – நள:319/4
வீமன் மடந்தை விழி முடிய கண்டு அறியா – நள:344/1
கன்னி பெடை உண்ண காத்திருக்கும் இன் அருள் கண்டு
அஞ்சினான் ஆவி அழிந்தான் அற உயிர்த்து – நள:353/2,3
கைத்தொழிற்கு மிக்கானை கண்டு – நள:360/4
கொற்ற குமரனையும் கோதையையும் தான் கண்டு
மற்று அவன் தான் ஆங்கு உரைத்த வாசகத்தை முற்றும் – நள:397/1,2

TOP


கண்டேம் (1)

நின்றாளை கண்டேம் நில வேந்தன் பொன் தேவி – நள:316/3

TOP


கண்ணா (1)

வாளுமே கண்ணா வதன மதி குடை கீழ் – நள:39/3

TOP


கண்ணாள் (5)

மை ஆர் வேல் கண்ணாள் வன முலை மேல் ஆர் அழலை – நள:108/3
கோ மாலை வேலான் குல மாலை வேல் கண்ணாள்
பூ மாலை பெற்று இருந்த போது – நள:162/3,4
பொரு முக வேல் கண்ணாள் புலர்ந்து – நள:301/4
ஒளி ஆர் வேல் கண்ணாள் மேல் உள்ளம் துரப்ப – நள:385/3
பருகிய வேல் கண்ணாள் பதைத்து – நள:398/4

TOP


கண்ணானை (1)

கண்ணானை போன்றனளே காண் – நள:190/4

TOP


கண்ணி (3)

பொர அளித்தான் கண்ணி உனக்கு புலரா – நள:117/3
நின்று உருகு வார் கண்ணி நீர் நோக்கி இன்று இங்கு – நள:236/2
காவி போல் கண்ணிக்கும் கண்ணி அம் தோள் காளைக்கும் – நள:264/1

TOP


கண்ணிக்கும் (1)

காவி போல் கண்ணிக்கும் கண்ணி அம் தோள் காளைக்கும் – நள:264/1

TOP


கண்ணியதை (1)

கண்ணியதை அறிந்து காய் கலியும் பண்ணினுக்கு – நள:281/2

TOP


கண்ணியான் (1)

போது அலரும் கண்ணியான் போர் வேந்தர் சூழ போய் – நள:400/1

TOP


கண்ணியுடன் (1)

செரு கதிர் வேல் கண்ணியுடன் தேர் வேந்தன் கூட – நள:169/1

TOP


கண்ணில் (1)

அஞ்சனம் தோய் கண்ணில் அருவி நீர் ஆங்கு அவர்க்கு – நள:254/1

TOP


கண்ணிலே (1)

வாட்டு நீர் கண்ணிலே வைத்து – நள:252/4

TOP


கண்ணின் (2)

யார் காக்க போல்வது நீ யாங்கு என்றார் தம் கண்ணின்
நீர் வார்த்து கால் கழுவா நின்று – நள:233/3,4
தூறு எலாம் ஆக சுரி குழல் வேல் கண்ணின் நீர் – நள:309/3

TOP


கண்ணீர் (10)

அவிழ்ந்ததே கண்ணீர் அவட்கு – நள:124/4
ஆறாக கண்ணீர் அழுது – நள:253/4
மை புகுந்த கண்ணீர் வர – நள:276/4
எழுந்து ஓட வீழ்ந்தாள் இரும் குழை மேல் கண்ணீர்
கொழுந்து ஓட வீமன் கொடி – நள:291/3,4
அங்கு அவன்-தன் கண்ணீர் அவள் உடல் மேல் பொங்க – நள:325/2
தந்தையை முன் காண்டலுமே தாமரை கண்ணீர் சொரிய – நள:331/1
தலைப்பட்டவாறு உண்டோ சாற்று என்றாள் கண்ணீர்
அலைப்பட்ட ஆகத்தாள் ஆங்கு – நள:367/3,4
உள்ளம் போல் கண்ணீர் உகுத்து – நள:392/4
பொன் அடியை கண்ணீர் புனலால் கழுவினான் – நள:405/3
அலர்ந்ததே கண்ணீர் அவற்கு – நள:406/4

TOP


கண்ணீரின்-நின்று (1)

நீந்தினார் கண்ணீரின்-நின்று – நள:332/4

TOP


கண்ணீரும் (2)

அற்ற துகிலும் அறாது ஒழுகும் கண்ணீரும்
உற்ற துயரும் உடையவளாய் மற்று ஒருத்தி – நள:316/1,2
பாதி துகிலோடு பாய்ந்து இழியும் கண்ணீரும்
சீத களப தனம் சேர் மாசும் போத – நள:406/1,2

TOP


கண்ணும் (1)

அறம் கிடந்த நெஞ்சும் அருள் ஒழுகு கண்ணும்
மறம் கிடந்த திண் தோள் வலியும் நிலம் கிடந்த – நள:54/1,2

TOP


கண்ணுற்றான் (3)

காரிகையும் தானும் போய் கண்ணுற்றான் மூரி – நள:204/2
காலில் போய் தேவியொடும் கண்ணுற்றான் ஞாலம் சேர் – நள:257/2
காதலி தன் காதலனை கண்ணுற்றான் ஓதம் – நள:400/2

TOP


கண்ணுற்று (1)

காவல் குடை வேந்தை கண்ணுற்று விண்ணவர் கோன் – நள:82/1

TOP


கண்ணே (3)

கலங்குவன மாளிகை மேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய் நெறியை விட்டு – நள:22/3,4
கனி சூத வார் பொழிலின் கண்ணே பனி சூத – நள:230/2
பேர் அருளின் கண்ணே பெருமானே பாரிடத்தை – நள:233/2

TOP


கண்ணோட (1)

காதலவர் மேலே கண்ணோட விண்ணோடும் – நள:256/1

TOP


கண்ணோடு (1)

நீர் உயிர்க்கும் கண்ணோடு நெஞ்சு உருகி வீழ்வார்-தம் – நள:131/3

TOP


கண்மணிகள் (1)

கள்ளி வேகத்து அரவின் கண்மணிகள் தாம் பொடியாய் – நள:257/3

TOP


கணம் (1)

கணம் கவிழ்ந்த வேலன் இவன் காண் – நள:141/4

TOP


கணி (1)

கணி மொழிந்த நாளில் கடிமணமும் செய்தார் – நள:172/1

TOP


கணை (2)

வில்லி கணை தெரிந்து மெய் காப்ப முல்லை எனும் – நள:106/2
வில்லி கணை இழப்ப வெண் மதியம் சீர் இழப்ப – நள:133/1

TOP


கணைகள் (1)

பொருந்த அன்பால் ஓதி மலர் பூம் கணைகள் பாய – நள:58/3

TOP


கணையால் (1)

காண்டாவனம் தீ கடவுள் உண கை கணையால்
நீண்ட முகில் தடுத்து நின்றாற்கு மீண்டு அமரர் – நள:14/1,2

TOP


கணையே (1)

தேன் இருந்த பூம் கணையே தீ ஆக தே_மொழியாள் – நள:119/3

TOP


கதவு (1)

கற்பின் தாழ் வீழ்த்த கதவு – நள:89/4

TOP


கதிர் (12)

காலை இருள் சீக்கும் காய் கதிர் போல் சோலை – நள:5/2
காமரு சங்கு ஈன்ற கதிர் முத்தை தாமரை தன் – நள:146/2
விட கதிர் வேல் காளை இவன் கண்டாய் மீனின் – நள:149/1
செரு கதிர் வேல் கண்ணியுடன் தேர் வேந்தன் கூட – நள:169/1
கதிர் கொண்ட பூண் முலையாய் காண் – நள:182/4
கங்கை திரை நீர் கரை ஏறி செம் கதிர் பைம் – நள:214/2
அடல் கதிர் வேல் மன்னன் அவன் ஏற்றின் முன் போய் – நள:215/1
திறையில் கதிர் முத்தம் சிந்தும் துறையில் – நள:222/2
சின கதிர் வேல் கண் மடவாய் செல்வர்-பால் சென்றீ – நள:249/1
காணாது அழுகின்றேன் என்றாள் கதிர் இமைக்கும் – நள:314/3
புரை கதிர் வேல் வேந்தன் புரோகிதனுக்கு இந்த – நள:362/3
தே நீர் அளித்து அருகு செந்நெல் கதிர் விளைக்கும் – நள:414/3

TOP


கதிரோன் (3)

வெம் வாய் விரி கதிரோன் வெற்பு – நள:104/4
வெம் கதிரோன் தன்னை விழுங்கி புழுங்கியோ – நள:114/1
குண வாயில் செம் கதிரோன் குன்று – நள:133/4

TOP


கதிரோன்-தானும் (1)

வெம் கதிரோன்-தானும் விதர்ப்பன் திருமடந்தை – நள:170/1

TOP


கதை (1)

கலியால் விளைந்த கதை – நள:18/4

TOP


கதையை (1)

தேன் பாடும் தார் நளன்-தன் தெய்வ திரு கதையை
யான் பாடலுற்ற இது – நள:6/3,4

TOP


கந்தனையும் (1)

கந்தனையும் கன்னியையும் கண்டாயினும் சிறிது – நள:328/1

TOP


கந்து (2)

கந்து அடையும் வேழ கடைத்தலை-வாய் வந்து அடைந்த – நள:65/2
கந்து சுளியும் கடா களிற்றின் வந்து – நள:395/2

TOP


கபோல (1)

கையில் கபோல தலம் வைத்து மெய் வருந்தி – நள:119/2

TOP


கமல (6)

செய்ய கமல திருவை நிகரான – நள:35/1
புள் உறையும் சோலைகளும் பூம் கமல வாவிகளும் – நள:66/1
செய்ய தாள் வெள்ளை சிறை அன்னம் செம் கமல
பொய்கை-வாய் போவதே போன்று – நள:138/3,4
சங்கம் புடைபெயர தான் கலங்கி செம் கமல
பூ சிந்தும் நாள் தேறல் பொன் விளைக்கும் தண் பணை சூழ் – நள:156/2,3
எம் பதிக்கே போந்து அருளுக என்றாள் எழில் கமல
செம் பதிக்கே வீற்றிருந்த தேன் – நள:248/3,4
கண்டான் ஐயுற்றான் கமல மயிலே என்றான் – நள:312/3

TOP


கமலத்தின் (3)

வெம் தறுகண் வேழத்தை வேரி கமலத்தின்
தந்துவினால் கட்ட சமைவது ஒக்கும் பைம் தொடையில் – நள:6/1,2
பொய்தல் கமலத்தின் போது இரண்டை காது இரண்டில் – நள:192/1
கன்னி நறும் தேறல் மாந்தி கமலத்தின்
மன்னி துயின்ற வரி வண்டு பின்னையும் போய் – நள:384/1,2

TOP


கமலத்தை (1)

நீண்ட கமலத்தை நீல கடை சென்று – நள:89/1

TOP


கமழும் (2)

என்று மகிழ் கமழும் என்பரால் தென்றல் – நள:21/2
ஆக்கையே நோக்கின் அவன் அல்லன் பூ கமழும்
கூந்தலாய் மற்று அ குல பாகன் என்று உரைத்தான் – நள:368/2,3

TOP


கமுகின் (3)

எங்கும் அறைக என்று இயம்பினான் பைம் கமுகின்
கூந்தல் மேல் கங்கை கொழுந்து ஓடும் நல் நாடன் – நள:63/2,3
பொன்னி அமுத புது கொழுந்து பூம் கமுகின்
சென்னி தடவும் திருநாடன் பொன்னில் – நள:141/1,2
தொடக்கு ஒழிய போய் நிமிர்ந்த தூண்டில் மடல் கமுகின்
செம் தோடு பீறி தேன் செந்நெல் பசும் தோட்டில் – நள:149/2,3

TOP


கயத்து (1)

மா நீர் நெடும் கயத்து வள்ளை கொடி மீது – நள:155/1

TOP


கயல் (3)

காமர் கயல் புரள காவி முகை நெகிழ – நள:19/1
செம் கயல் கண் ஓடி செவி தடவ அம் கை – நள:177/2
கொற்ற கயல் கண் கொடியே இருவோரும் – நள:261/1

TOP


கயிலைக்கே (1)

அம் பொன் கயிலைக்கே ஆகத்து அரவு அணிவார் – நள:13/1

TOP


கயிற்றில் (1)

தான் ஏகும் அன்னம் தனி கயிற்றில் போம் நீள் – நள:155/2

TOP


கரங்கள் (1)

தையல் தளிர் கரங்கள் தன் தட கையால் பற்றி – நள:178/1

TOP


கரத்தால் (1)

தேன் கழியில் வீழ திரை கரத்தால் வான் கடல் வந்து – நள:152/2

TOP


கரத்தை (1)

நீட்டுவான் செம் கரத்தை நின்று – நள:294/4

TOP


கரந்து (1)

கானகத்தே காதலியை நீத்து கரந்து உறையும் – நள:404/3

TOP


கரவு (1)

கல்லாதனவும் கரவு – நள:23/4

TOP


கரி (5)

கரி ஆனனத்தான் கழல் – நள:1/4
மான கரி வழுக்கும் மா விந்தம் என்பது ஓர் – நள:20/3
குழியில் படு கரி போல் கோமான் கிடந்தான் – நள:71/3
யாமம் கரி ஆக இன்று – நள:118/4
அன்ன கரி ஒன்று உடையான் ஆங்கு – நள:382/4

TOP


கரியா (1)

தாமம் கரியா தனியே தளர்கின்றாள் – நள:118/3

TOP


கரியான் (1)

கரியான் அனத்தான் கருது புகழ் பூண்ட – நள:1/3

TOP


கரியை (1)

வேட்ட கரியை விழுங்கி பெரும் பசியால் – நள:298/1

TOP


கரு (3)

சோரும் துயிலும் துயிலா கரு நெடும் கண் – நள:130/3
குவளை கரு நிழலும் கொள்ள பவள – நள:181/2
தேன் பிடிக்கும் தண் துழாய் செம் கண் கரு முகிலை – நள:259/1

TOP


கருக (1)

கோல நிறம் விளர்ப்ப கொங்கை முகம் கருக
நீல நிற மயிர்க்கால் நின்று எறிப்ப நூல் என்ன – நள:208/1,2

TOP


கருகியவோ (1)

கருகியவோ என்று அழுதாள் காதலனை முன் நாள் – நள:398/3

TOP


கருத்தில் (1)

கைதவம் தான் நீக்கி கருத்தில் கறை அகற்றி – நள:245/1

TOP


கருத்தை (1)

உள்ள கருத்தை ஒழித்து ஏகுதி என்றான் – நள:166/3

TOP


கருதி (1)

சிந்தை கருதி சிலை வேடன் பைம் தொடி நீ – நள:308/2

TOP


கருது (1)

கரியான் அனத்தான் கருது புகழ் பூண்ட – நள:1/3

TOP


கருப்பு (1)

மல்லிகையே வெண் சங்கா வண்டு ஊத வான் கருப்பு
வில்லி கணை தெரிந்து மெய் காப்ப முல்லை எனும் – நள:106/1,2

TOP


கரும் (5)

கரும் குழலார் செம் கையினால் வெண் கவரி பைம் கால் – நள:60/1
பழகு கரும் கூந்தல் பாவை மழ களிற்று – நள:79/2
கரும் பாம்பு வெண் மதியை கைக்கொண்ட காட்சி – நள:194/3
வேரி மழை துளிக்கும் மேக கரும் கூந்தல் – நள:204/1
செம் சுடரின் வந்த கரும் சுடர் போல் விஞ்ச – நள:279/2

TOP


கரும்பால் (1)

கொங்கை இள நீரா குளிர்ந்த இளம் சொல் கரும்பால்
பொங்கு சுழி என்னும் பூம் தடத்தில் மங்கை நறும் – நள:51/1,2

TOP


கரும்பு (1)

கரும்பு ஒடியா மள்ளர் கடா அடிக்கும் நாடா – நள:222/3

TOP


கரும்பை (2)

மேதி குலம் ஏறி மென் கரும்பை கோதி – நள:31/2
என்ன போய் வீழ்ந்தாள் இன மேதி மெல் கரும்பை
தின்ன போம் நாடன் திரு – நள:290/3,4

TOP


கருவிக்கு (1)

கருவிக்கு நீங்காத கார் இருள் வாய் கங்குல் – நள:126/1

TOP


கரை (7)

உய்ஞ்சு கரை ஏற ஒட்டும்-கொல் ஒண்_தொடியாள் – நள:90/1
கரை ஏறும் கங்கை கரை – நள:204/4
கரை ஏறும் கங்கை கரை – நள:204/4
கங்கை திரை நீர் கரை ஏறி செம் கதிர் பைம் – நள:214/2
வேலை கரை இறந்தால் வேத நெறி பிறழ்ந்தால் – நள:234/1
எய்து துயர் கரை காணேன் என்னும் பையவே – நள:295/2
கண் படா வேலை கரை – நள:351/4

TOP


கரைய (1)

கரைய தேன் ஊறும் கடல் நாடன் ஊர்க்கு – நள:74/3

TOP


கல் (2)

கல் ஏய்க்கும் நாடன் கவறாட போயினான் – நள:213/3
கல் நிறத்த சிந்தை கலியும் அவன் முன்பாக – நள:258/1

TOP


கல்லாதனவும் (1)

கல்லாதனவும் கரவு – நள:23/4

TOP


கல்லும் (1)

அறத்தை வேர் கல்லும் அரு நரகில் சேர்க்கும் – நள:218/1

TOP


கலக்கினான் (1)

கலக்கினான் வஞ்ச கலி – நள:278/4

TOP


கலக்கு (1)

கலக்கு அலை நீர் நாடன் கனன்று – நள:221/4

TOP


கலங்கலை (1)

கலங்கலை நீ என்று உரைத்தான் கா மருவு நாடற்கு – நள:16/3

TOP


கலங்காத (1)

காட்டு நீ என்றான் கலங்காத உள்ளத்தை – நள:252/3

TOP


கலங்கி (2)

சங்கம் புடைபெயர தான் கலங்கி செம் கமல – நள:156/2
சிந்தை கலங்கி திகைத்து அலமந்து எந்தாய் யான் – நள:331/2

TOP


கலங்கிற்றே (1)

கலங்கிற்றே மன்னவனை கண்டு – நள:33/4

TOP


கலங்கினாள் (1)

காணேன் இங்கு என்னா கலங்கினாள் கண் பனிப்ப – நள:273/3

TOP


கலங்கினான் (1)

கண்டு ஆற்றாது உள்ளம் கலங்கினான் காம நோய் – நள:49/3

TOP


கலங்குவன (1)

கலங்குவன மாளிகை மேல் காரிகையார் கண்ணே – நள:22/3

TOP


கலந்தால் (1)

புனற்கே புனல் கலந்தால் போன்று – நள:174/4

TOP


கலந்து (3)

கண்டார் உவப்ப கலந்து – நள:97/4
காலை முரசும் கலந்து – நள:134/4
புலர்ந்து அசைந்து பூ அணை மேல் புல்லி கலந்து ஒசிந்த – நள:188/2

TOP


கலாப (1)

கலாப மயில் இருந்த பாகத்தார் கங்கை – நள:4/1

TOP


கலி (11)

பொரும் கலி நீர் ஞாலத்தை புல் நெறியில் ஆக்கும் – நள:164/3
புந்தி மகிழ புகுந்து கலி சிந்தை எலாம் – நள:210/2
கற்றவனை சேர்ந்தான் கலி – நள:211/4
கவறாய் புரண்டான் கலி – நள:224/4
கலக்கினான் வஞ்ச கலி – நள:278/4
வஞ்ச கலி வலியான் மாகத்து அரா வளைக்கும் – நள:279/1
வெம் கலி வாய் நின்று உலகம் மீட்டால் போல் மங்கையை வெம் – நள:306/2
மேல் கொண்டான் ஏறிவர வெம்மை கலி சூதில் – நள:378/3
காவலன்-பால் நின்ற கலி – நள:381/4
கட்டு உரைத்து போனான் கலி – நள:411/4
தீது தரு கலி முன் செய்ததனை ஓராதே – நள:421/1

TOP


கலிங்கர் (1)

வண்டு இரிய செல்லும் மணி நீர் கலிங்கர் கோன் – நள:153/3

TOP


கலியால் (4)

கலியால் விளைந்த கதை – நள:18/4
வெல்லும் கொடி என்றான் வெம் கலியால் அங்கு அவன் மேல் – நள:215/3
வலித்ததே தீ கலியால் வந்து – நள:284/4
தீ கலியால் செற்ற திரு மனத்தான் பூம் கழலை – நள:343/2

TOP


கலியின் (2)

மொழி வழியே சென்றான் முரண் கலியின் வஞ்ச – நள:336/3
போர்த்தான் பொரு கலியின் வஞ்சனையால் பூண்டு அளிக்கும் – நள:403/3

TOP


கலியும் (4)

தீங்கு தரும் கலியும் செப்பினான் நீங்கள் – நள:165/2
காண் தகைய வெம் கலியும் காண்கிலான் நீண்ட புகழ் – நள:209/2
கல் நிறத்த சிந்தை கலியும் அவன் முன்பாக – நள:258/1
கண்ணியதை அறிந்து காய் கலியும் பண்ணினுக்கு – நள:281/2

TOP


கலியை (1)

இரும் கலியை கண்டார் எதிர் – நள:164/4

TOP


கலுழ்ந்து (2)

கடந்தோமோ என்றார் கலுழ்ந்து – நள:241/4
காரேனும் ஒவ்வாள் கலுழ்ந்து – நள:302/4

TOP


கலை (1)

ஞான கலை வாழ் நகர் – நள:20/4

TOP


கலையின் (1)

சொன்ன கலையின் துறை அனைத்தும் தோய்ந்தாலும் – நள:247/1

TOP


கவட்டின் (1)

கற்பின் மகளிர்-பால் நின்றும் தமை கவட்டின்
விற்கும் மகளிர்-பால் மீண்டான் போல் நிற்கும் – நள:228/1,2

TOP


கவட்டு (1)

கான அடம்பின் கவட்டு இலைகள் மானின் – நள:268/2

TOP


கவர (1)

உள்ளம் கவர ஒளி இழந்த வெள்ளை – நள:55/2

TOP


கவரி (1)

கரும் குழலார் செம் கையினால் வெண் கவரி பைம் கால் – நள:60/1

TOP


கவறாட (1)

கல் ஏய்க்கும் நாடன் கவறாட போயினான் – நள:213/3

TOP


கவறாடல் (2)

காதல் கவறாடல் கள் உண்டல் பொய் மொழிதல் – நள:217/1
நிறை இல் கவறாடல் நீ நினைந்தாய்-ஆகில் – நள:222/1

TOP


கவறாய் (1)

கவறாய் புரண்டான் கலி – நள:224/4

TOP


கவறு (1)

கண் இழந்து மாய கவறு ஆடி காவலர் தாம் – நள:17/1

TOP


கவிகை (2)

திசை முகந்த வெண் கவிகை தேர் வேந்தே உன்றன் – நள:36/1
நின்று கவிகை நிழல் வேந்தே ஒன்றி – நள:41/2

TOP


கவிழ்ந்த (1)

கணம் கவிழ்ந்த வேலன் இவன் காண் – நள:141/4

TOP


கழல் (5)

கரி ஆனனத்தான் கழல் – நள:1/4
கடை சிவப்ப நின்றாள் கழல் மன்னர் வெள்ளை – நள:200/3
சந்த கழல் தாமரையும் சதங்கை அணி – நள:241/1
மங்கை விழி நீர் மறையோன் கழல் கழுவ – நள:325/1
எந்தை கழல் இணையில் எ மருங்கும் காணலாம் – நள:395/1

TOP


கழலின் (1)

பூம் கழலின் மீதே புரண்டு அழுதாள் தாங்கும் – நள:318/2

TOP


கழலை (1)

தீ கலியால் செற்ற திரு மனத்தான் பூம் கழலை
மண்ணின் மேல் வைத்து தச என்று வாய்மையால் – நள:343/2,3

TOP


கழன்று (1)

கைக்கு உள் வருமா கழன்று ஓடி எய்க்கும் – நள:260/2

TOP


கழி (1)

கானலே வேலை கழி குருகே யானுடைய – நள:355/2

TOP


கழித்தான் (1)

ஆறிரண்டு ஆண்டு எல்லை கழித்தான் அடையலரை – நள:207/3

TOP


கழித்து (1)

கை ஆழி வைத்தான் கழித்து – நள:421/4

TOP


கழிய (1)

கழிய ஆர்த்தார் நமக்கு ஓர் காப்பு – நள:4/4

TOP


கழியாத (1)

கழியாத சிந்தையுடன் கங்கை நதி ஆடி – நள:197/3

TOP


கழியில் (1)

தேன் கழியில் வீழ திரை கரத்தால் வான் கடல் வந்து – நள:152/2

TOP


கழியும் (1)

பொய்கையும் நீள் கழியும் புள் இழப்ப பையவே – நள:104/2

TOP


கழு (2)

தெரியில் இவன் கண்டாய் செம் கழு நீர் மொட்டை – நள:145/1
சாதி மணி துகில் நீ சாத்தினால் தண் கழு நீர் – நள:348/1

TOP


கழுகு (1)

கழுகு வாழ் கானகத்து கார் அரவின் வாயில் – நள:304/3

TOP


கழுதும் (2)

தோன்றும் கழுதும் துயின்றதே தான் தன் – நள:123/2
கழுதும் வழி தேடும் கங்குல் பொழுது-இடையே – நள:131/2

TOP


கழுநீரை (1)

முழு நீலம் என்று அயிர்த்து முன்னர் கழுநீரை
கொய்யாது போவாளை கோல் வளைக்கு காட்டினான் – நள:196/2,3

TOP


கழுவ (1)

மங்கை விழி நீர் மறையோன் கழல் கழுவ
அங்கு அவன்-தன் கண்ணீர் அவள் உடல் மேல் பொங்க – நள:325/1,2

TOP


கழுவா (1)

நீர் வார்த்து கால் கழுவா நின்று – நள:233/4

TOP


கழுவினான் (1)

பொன் அடியை கண்ணீர் புனலால் கழுவினான்
மின் இடையாளோடும் விழுந்து – நள:405/3,4

TOP


கழை (1)

கழை கோதையர் ஏய்க்கும் காந்தார நாடன் – நள:155/3

TOP


கள் (3)

கள் வார்ந்த தாமரையின் காடு உழக்கி புள்ளோடு – நள:153/2
காதல் கவறாடல் கள் உண்டல் பொய் மொழிதல் – நள:217/1
கள் வேட்டு வண்டு உழலும் கானத்து-இடை கனக – நள:264/3

TOP


கள்ள (1)

கள்ள வார் கூந்தலாள் கண்டு – நள:319/4

TOP


கள்ளி (1)

கள்ளி வேகத்து அரவின் கண்மணிகள் தாம் பொடியாய் – நள:257/3

TOP


களப (2)

சீத களப செழும் சேற்றால் வீதி வாய் – நள:20/2
சீத களப தனம் சேர் மாசும் போத – நள:406/2

TOP


களவு (1)

நல் நெறியில் சூதால் நளன் களவு இயற்றி – நள:212/1

TOP


களி (7)

காண பிடித்தது காண் என்றான் களி வண்டு – நள:34/3
காந்தாரம் பாடி களி வண்டு நின்று அரற்றும் – நள:61/3
கண் அகல் ஞாலம் களி கூர மண் அரசர் – நள:161/2
கன்னியர்-தம் வேட்கையே போலும் களி மழலை – நள:199/1
உழலும் களி மயில் போல் ஓடி குழல் வண்டு – நள:291/2
கடம் தாழ் களி யானை காவலனை தேடி – நள:364/3
வன்ம களி யானை மன் – நள:390/4

TOP


களிற்றாய் (2)

வடம் தோய் களிற்றாய் வழியானது எல்லாம் – நள:241/3
காயும் கட களிற்றாய் கார்க்கோடகன் என் பேர் – நள:346/1

TOP


களிற்றான் (1)

மா முத்த வெண்குடையான் மால் களிற்றான் வண்டு இரைக்கும் – நள:64/1

TOP


களிற்றின் (1)

கந்து சுளியும் கடா களிற்றின் வந்து – நள:395/2

TOP


களிற்று (1)

பழகு கரும் கூந்தல் பாவை மழ களிற்று
வீமன் குலத்துக்கு ஓர் மெய் தீபம் மற்று அவளே – நள:79/2,3

TOP


களிறு (1)

சேமம் களிறு புக தீம் பாலின் செவ்வழி யாழ் – நள:122/1

TOP


கற்பான் (1)

நடை கற்பான் வந்தடைந்தோம் நாம் – நள:44/4

TOP


கற்பின் (2)

கற்பின் தாழ் வீழ்த்த கதவு – நள:89/4
கற்பின் மகளிர்-பால் நின்றும் தமை கவட்டின் – நள:228/1

TOP


கற்பினாள் (1)

குறையாத கற்பினாள் கொண்டானுக்கு அல்லால் – நள:372/1

TOP


கற்புக்கும் (1)

தேவி இவள் கற்புக்கும் செங்கோல் முறைமைக்கும் – நள:409/1

TOP


கற்பும் (1)

நெடும் கற்பும் மற்றவற்கு நின்று உரைத்து போனான் – நள:168/3

TOP


கற்றவனை (1)

கற்றவனை சேர்ந்தான் கலி – நள:211/4

TOP


கறை (1)

கைதவம் தான் நீக்கி கருத்தில் கறை அகற்றி – நள:245/1

TOP


கன்று (1)

கன்று குதட்டிய கார் நீலம் முன்றில் – நள:135/2

TOP


கன்னி (8)

கன்னி மன கோயில் கைக்கொள்ள சொன்ன மயில் – நள:37/2
அன்னம் போய் கன்னி அருகு அணைய நல்_நுதலும் – நள:52/2
காவல் கடந்து எங்கள் கன்னி மாடம் புகுந்தாய் – நள:92/1
கன்னி யான் ஆகில் கடி மாலை அன்னம் தான் – நள:159/2
கன்னி மண மாலை கைக்கொண்டான் உன்னுடைய – நள:166/2
கன்னி இளம் மேதி கால் குளம்பு பொன் உரைத்த – நள:213/2
கன்னி பெடை உண்ண காத்திருக்கும் இன் அருள் கண்டு – நள:353/2
கன்னி நறும் தேறல் மாந்தி கமலத்தின் – நள:384/1

TOP


கன்னி-பால் (1)

மேவும் இளம் கன்னி-பால் மீண்டு ஏகும் பாவில் – நள:84/2

TOP


கன்னி-அவள் (1)

கார் ஆரும் மெல் ஓதி கன்னி-அவள் காதல் எனும் – நள:176/3

TOP


கன்னியர்-தம் (1)

கன்னியர்-தம் வேட்கையே போலும் களி மழலை – நள:199/1

TOP


கன்னியையும் (1)

கந்தனையும் கன்னியையும் கண்டாயினும் சிறிது – நள:328/1

TOP


கனக (2)

கள் வேட்டு வண்டு உழலும் கானத்து-இடை கனக
புள் வேட்டை ஆதரித்த போது – நள:264/3,4
ஆக அயோத்தி நகர் அடைந்து மா கனக
தேர் தொழிற்கு மிக்கான் நீ ஆகு என்றான் செம் மனத்தால் – நள:349/2,3

TOP


கனல் (1)

கனல் புகைய வேகின்றான் கண்டான் பனி குருகு – நள:351/2

TOP


கனலை (1)

தணியாத வெம் கனலை தாங்கினாய் இந்த – நள:347/3

TOP


கனற்கு (1)

கனற்கு ஏயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார் – நள:174/3

TOP


கனன்று (1)

கலக்கு அலை நீர் நாடன் கனன்று – நள:221/4

TOP


கனி (4)

தொண்டை கனி வாய் துடிப்ப சுடர் நுதல் மேல் – நள:200/1
சூத கனி ஊறல் ஏற்ற சுருள் வாழை – நள:205/1
கனி சூத வார் பொழிலின் கண்ணே பனி சூத – நள:230/2
கொண்டுவா என்றாள் தன் கொவ்வை கனி திறந்து – நள:317/3

TOP


கனிந்து (1)

கனிந்து உருகி நீர் வார கண் – நள:396/4

TOP