Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 38
சே_மர 1
சே_இழாய் 1
சே_இழை 8
சே_இறவின் 1
சே_இறா 3
சேஎ 1
சேஎப்ப 1
சேஎய் 18
சேஎய 1
சேஎயொடு 1
சேஎர் 1
சேக்கல்லா 1
சேக்கும் 30
சேக்குவம்-கொல்லோ 2
சேக்குவள்-கொல்லோ 1
சேக்குவை 1
சேக்கை 20
சேக்கையில் 1
சேக்கையின் 2
சேக்கையும் 1
சேக்கையுள் 4
சேகா 1
சேட்சென்னி 2
சேட்டு 1
சேட்பட்டது 1
சேடல் 1
சேடு 1
சேண் 90
சேண்பட்ட 1
சேண 1
சேணன் 1
சேணின் 1
சேணின்று 1
சேணும் 2
சேணோர்க்கு 1
சேணோன் 9
சேதா 4
சேதான் 1
சேதிகை 1
சேந்த 2
சேந்தன் 2
சேந்தனிர் 3
சேந்தனை 3
சேந்து 3
சேப்ப 6
சேப்பவும் 1
சேப்பின் 9
சேப்பினுள் 1
சேப்பு 1
சேம்பின் 6
சேம்பு 1
சேம்பும் 1
சேம 4
சேம_செப்பில் 1
சேமம் 1
சேய் 47
சேய்த்து 6
சேய்த்தும் 2
சேய்த்தோ 1
சேய்தா 1
சேய்நாட்டோரே 1
சேய்மையன் 1
சேய்மையின் 1
சேய 4
சேயதால் 1
சேயர் 4
சேயரும் 1
சேயள் 1
சேயார் 1
சேயார்க்கு 1
சேயாற்றின் 1
சேயாற்று 1
சேயின் 1
சேயும் 3
சேயேன்-மன் 1
சேயை 1
சேயோன் 1
சேர் 52
சேர்-மின் 1
சேர்க்குந்து 1
சேர்கம் 1
சேர்கின்ற 1
சேர்குவோர் 1
சேர்த்தலும் 1
சேர்த்தி 20
சேர்த்திய 8
சேர்த்தியது 1
சேர்த்தியும் 1
சேர்த்தின் 1
சேர்தரும் 1
சேர்தல் 2
சேர்தல்-கண்ணும் 1
சேர்தலும் 1
சேர்தி 2
சேர்ந்த 34
சேர்ந்தவர் 2
சேர்ந்தன்று 1
சேர்ந்தன்றே 1
சேர்ந்தன்றோ 1
சேர்ந்தனம் 1
சேர்ந்தனர்-கொல்லோ 1
சேர்ந்தனவே 1
சேர்ந்தனனே 1
சேர்ந்தனை 2
சேர்ந்தார் 1
சேர்ந்தார்-கண் 1
சேர்ந்தார்க்கு 4
சேர்ந்தாரை 2
சேர்ந்தாள் 1
சேர்ந்தான் 1
சேர்ந்திருந்த 1
சேர்ந்து 24
சேர்ந்தோர் 5
சேர்ந்தோர்க்கு 2
சேர்ந்தோள் 1
சேர்ப்ப 26
சேர்ப்பற்கு 5
சேர்ப்பன் 21
சேர்ப்பன்-தன் 1
சேர்ப்பனை 8
சேர்ப்பனொடு 7
சேர்ப்பின் 3
சேர்ப்பினும் 1
சேர்ப்பு 1
சேர்பு 38
சேர்வார் 1
சேர்வித்தல் 1
சேர்வு 1
சேர்வு_இடம் 1
சேர 33
சேரல் 3
சேரலர் 3
சேரலர்க்கு 1
சேரலாத 2
சேரலாதன் 4
சேரலாதனை 1
சேரவும் 1
சேரா 7
சேராது 1
சேரார் 3
சேரி 39
சேரி-தொறும் 2
சேரிய 1
சேரியால் 1
சேரியின் 1
சேரியும் 5
சேரியேனே 1
சேரியொடு 1
சேரியோரும் 1
சேரின் 2
சேரினும் 1
சேருநர்க்கு 1
சேரும் 7
சேரே 1
சேவடி 17
சேவல் 62
சேவலாய் 1
சேவலின் 1
சேவலும் 4
சேவலை 1
சேவலொடு 4
சேவலோய் 1
சேவும் 1
சேற்ற 1
சேற்று 22
சேற்றொடு 1
சேற்றோடு 1
சேறல் 8
சேறலின் 2
சேறலும் 4
சேறி 7
சேறிர் 1
சேறிரோ 2
சேறு 30
சேறுகம் 1
சேறுபட்ட 1
சேறுபடு 1
சேறும் 17
சேனை 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

சே (38)

சே என் மரப்பெயர் ஒடு_மர இயற்றே – தொல்_எழுத். உயி.மயங்:76/1
ஆ மு பெயரும் சே_மர இயல – தொல்_எழுத். உயி.மயங்:80/2
சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை – சிறு 75
சே அடி செறி குறங்கின் – பட் 146
விலங்கு மலைத்து அமர்ந்த சே அரி நாட்டத்து – மலை 45
பகழி அன்ன சே அரி மழை கண் – நற் 13/4
கனம் குழைக்கு அமர்த்த சே அரி மழை கண் – நற் 16/9
சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/6
சே அரி பரந்த மா இதழ் மழை கண் – நற் 75/8
குளம்பினும் சே_இறா ஒடுங்கின – நற் 278/8
பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல் – நற் 358/8
சென்மோ சே_இழை என்றனம் அதன்_எதிர் – நற் 398/7
சே இலை வெள் வேல் விடலையொடு – குறு 15/5
சிறை பனி உடைந்த சே அரி மழை கண் – குறு 86/1
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே – குறு 281/6
வருமே சே_இழை அந்தில் – குறு 293/7
செ விரல் சிவந்த சே அரி மழை கண் – ஐங் 52/2
இரும் கழி சே_இறா இன புள் ஆரும் – ஐங் 188/1
தெண் கழி சே_இறா படூஉம் – ஐங் 196/3
சே இழை மாதரை உள்ளி நோய் விட – ஐங் 481/2
ஊசல் மேவல் சே இழை மகளிர் – பதி 43/2
சேண் நாறு நறு நுதல் சே_இழை கணவ – பதி 65/10
சேண் நாறு நல் இசை சே_இழை கணவ – பதி 88/36
இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே_இழாய் – கலி 59/24
சே இதழ் அனைய ஆகி குவளை – அகம் 19/10
கயிறு இடு கத சே போல மதம் மிக்கு – அகம் 36/7
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும் – அகம் 51/12
பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்க – அகம் 60/1
சே கோள் அறையும் தண்ணுமை – அகம் 63/18
சே இறா துழந்த நுரை பிதிர் படு திரை – அகம் 270/5
சிறுகுடி மறவர் சே கோள் தண்ணுமைக்கு – அகம் 297/16
சே இழை மகளிர் ஆயமும் அயரா – அகம் 369/5
ஒண் பொறி புனை கழல் சே அடி புரள – அகம் 376/7
செயிர் தீர் கற்பின் சே_இழை கணவ – புறம் 3/6
சே இழை பெறுகுவை வாள் நுதல் விறலி – புறம் 105/1
இன மலி கத சே களனொடு வேண்டினும் – புறம் 171/8
கடவுள் சான்ற கற்பின் சே இழை – புறம் 198/3
செறுவில் பூத்த சே இதழ் தாமரை – புறம் 397/19

மேல்


சே_மர (1)

ஆ மு பெயரும் சே_மர இயல – தொல்_எழுத். உயி.மயங்:80/2

மேல்


சே_இழாய் (1)

இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே_இழாய்/செய்ததன் பயம் பற்று விடாது – கலி மேல்


சே_இழை (8)

சேறும் நாம் என சொல்ல சே_இழை/நன்று என புரிந்தோய் நன்று செய்தனையே – நற் 24/6,7
சென்மோ சே_இழை என்றனம் அதன்_எதிர் – நற் 398/7
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே – குறு 281/6
வருமே சே_இழை அந்தில் – குறு 293/7
சேண் நாறு நறு நுதல் சே_இழை கணவ – பதி 65/10
சேண் நாறு நல் இசை சே_இழை கணவ – பதி 88/36
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும் – அகம் 51/12
செயிர் தீர் கற்பின் சே_இழை கணவ – புறம் 3/6

மேல்


சே_இறவின் (1)

பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல் – நற் 358/8

மேல்


சே_இறா (3)

குளம்பினும் சே_இறா ஒடுங்கின – நற் 278/8
இரும் கழி சே_இறா இன புள் ஆரும் – ஐங் 188/1
தெண் கழி சே_இறா படூஉம் – ஐங் 196/3

மேல்


சேஎ (1)

சேஎ செவி முதல் கொண்டு பெயர்த்து ஒற்றும் – கலி 103/51

மேல்


சேஎப்ப (1)

நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை – பரி 8/104

மேல்


சேஎய் (18)

எய்யா நல் இசை செ வேல் சேஎய்/சேவடி படரும் செம்மல் உள்ளமொடு – திரு 61,62
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய்/மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 271,272
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு – பெரும் 458
இன் இசை முரசின் சுடர் பூண் சேஎய்/ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின் – குறி 51,52
வெல் போர் சேஎய் பெரு விறல் உள்ளி – மலை 493
கழல் தொடி சேஎய் குன்றம் – குறு 1/3
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் – பரி 5/13
ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய்/ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய – பரி 6/69
நணி_நணித்து ஆயினும் சேஎய் சேய்த்து – பரி 17/25
பசும் பூண் சேஎய் நின் குன்றம் நன்கு உடைத்து – பரி 21/53
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு – கலி 104/25
செரு மிகு சேஎய் நின் பாடுநர் கையே – புறம் 14/19
வேழ நோக்கின் விறல் வெம் சேஎய்/வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பே – புறம் 22/29,30
செரு வெம் சேஎய் பெரு விறல் நாடே – புறம் 120/21
திரு தகு சேஎய் நின் பெற்றிசினோர்க்கே – புறம் 125/20
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும் – புறம் 198/24
செரு வெம் சேஎய் நின் மகிழ் இருக்கையே – புறம் 209/19

மேல்


சேஎய (1)

காடு இடை கிடந்த நாடு நனி சேஎய/செல்வேம் அல்லேம் என்னார் கல்லென் – புறம் 31/10,11

மேல்


சேஎயொடு (1)

செரு மிகு சேஎயொடு உற்ற சூளே – அகம் 266/21

மேல்


சேஎர் (1)

சேஎர் உற்ற செல் படை மறவர் – பதி 41/11

மேல்


சேக்கல்லா (1)

சென்று சேக்கல்லா புள்ள உள் இல் – அகம் 42/8

மேல்


சேக்கும் (30)

கோழி சேக்கும் கூடு உடை புதவின் – பெரும் 52
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும்/இடு முள் வேலி எரு படு வரைப்பின் – பெரும் 153,154
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும்/வன்_புலம் இறந்த பின்றை மென் தோல் – பெரும் 205,206
தூது_உண்_அம்_புறவொடு துச்சில் சேக்கும்/முது மரத்த முரண் களரி – பட் 58,59
வம்பலர் சேக்கும் கந்து உடை பொதியில் – பட் 249
தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும்/மருங்கூர் பட்டினத்து அன்ன இவள் – நற் 258/9,10
கான மஞ்ஞை கட்சி சேக்கும்/கல் அகத்தது எம் ஊரே செல்லாது – நற் 276/6,7
பைதல் ஒரு தலை சேக்கும் நாடன் – குறு 13/3
வம்ப நாரை சேக்கும்/தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே – குறு 236/5,6
ஆறு செல் மாக்கள் சேக்கும்/கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 253/7,8
யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும்/கடல் சூழ் மண்டிலம் பெறினும் – குறு 300/6,7
பூ கமழ் பொதும்பர் சேக்கும் துறைவனோடு – குறு 313/3
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்/தண் துறை ஊரன் கேண்மை – ஐங் 9/4,5
கழனி மருதின் சென்னி சேக்கும்/மா நீர் பொய்கை யாணர் ஊர – ஐங் 70/2,3
கானல் சேக்கும் துறைவனோடு – ஐங் 154/3
காலை இருந்து மாலை சேக்கும்/தெண் கடல் சேர்ப்பனொடு வாரான் – ஐங் 157/3,4
பூ கமழ் பொதும்பர் சேக்கும்/துறைவன் சொல்லோ பிற ஆயினவே – ஐங் 162/3,4
புன்னை அம் பூ சினை சேக்கும் துறைவன் – ஐங் 169/3
குவி இணர் ஞாழல் மா சினை சேக்கும்/வண்டு இறைகொண்ட தண் கடல் பரப்பின் – பதி 51/5,6
கடத்து இடை பிடவின் தொடை குலை சேக்கும்/வான் பளிங்கு விரைஇய செம் பரல் முரம்பின் – பதி 66/17,18
அக மடல் சேக்கும் துறைவன் – அகம் 40/16
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை – அகம் 91/10
பாறு கிளை சேக்கும் சேண் சிமை – அகம் 247/12
பராரை பெண்ணை சேக்கும் கூர் வாய் – அகம் 305/12
அன்றில் சேக்கும் முன்றில் பொன் என – அகம் 360/17
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்/பொன் அணி யானை தொன் முதிர் வேளிர் – புறம் 24/20,21
மழை கணம் சேக்கும் மா மலை கிழவன் – புறம் 131/1
பொய்கை நாரை போர்வில் சேக்கும்/நெய்தல் அம் கழனி நெல் அரி தொழுவர் – புறம் 209/1,2
இடை மதில் சேக்கும் புரிசை – புறம் 343/16
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும்/ததைந்த புன்னை செழு நகர் வரைப்பின் – புறம் 391/16,17

மேல்


சேக்குவம்-கொல்லோ (2)

சேக்குவம்-கொல்லோ நெஞ்சே சாத்து எறிந்து – அகம் 167/7
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே பூ புனை – அகம் 225/14

மேல்


சேக்குவள்-கொல்லோ (1)

சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின் – அகம் 315/15

மேல்


சேக்குவை (1)

துணை இலை தமியை சேக்குவை அல்லை – நற் 254/9

மேல்


சேக்கை (20)

கோதையின் பொலிந்த சேக்கை துஞ்சி – மது 713
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட – நெடு 131
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை/ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – நெடு 135,136
துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன – மலை 418
பயில் படை நிவந்த பல் பூ சேக்கை/அயலும் மாண் சிறையதுவே அதன்_தலை – நற் 132/6,7
பன் மாண் சேக்கை பகை கொள நினைஇ – நற் 297/3
செ வரை சேக்கை வருடை மான் மறி – குறு 187/1
குறும் கால் கட்டில் நறும் பூ சேக்கை/பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ – குறு 359/3,4
கவை நா அரும் தலை காண்பின் சேக்கை/துளவம் சூடிய அறிதுயிலோனும் – பரி 20/86
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் – கலி 24/6
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை/கவவு இன்புறாமை கழிக வள வயல் – அகம் 13/16,17
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை – அகம் 58/4
நுரை முகந்து அன்ன மென் பூ சேக்கை/நிவந்த பள்ளி நெடும் சுடர் விளக்கத்து – அகம் 93/13,14
மாட மாண் நகர் பாடு அமை சேக்கை/துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற – அகம் 124/6,7
வினை வனப்பு எய்திய புனை பூ சேக்கை/விண் பொரு நெடு நகர் தங்கி இன்றே – அகம் 167/3,4
மை அற விரிந்த படை அமை சேக்கை/ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ – அகம் 289/12,13
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை/பருகு அன்ன காதலொடு திருகி – அகம் 305/5,6
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை/நம்மொடு நன் மொழி நவிலும் – அகம் 353/21,22
நுரை முகந்து அன்ன மென் பூ சேக்கை/அறியாது ஏறிய என்னை தெறுவர – புறம் 50/7,8

மேல்


சேக்கையில் (1)

பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே – குறு 216/4

மேல்


சேக்கையின் (2)

எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின்/அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே – கலி 389/9

மேல்


சேக்கையும் (1)

இறும்பூது சான்ற நறும் பூ சேக்கையும்/குன்று பல குழீஇ பொலிவன தோன்ற – மது 487,488

மேல்


சேக்கையுள் (4)

படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ – கலி 10/10
இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள்/துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் மற்று ஆண்டை – கலி 72/1,2
அன்ன மென் சேக்கையுள் ஆராது அளித்தவன் – கலி 146/4

மேல்


சேகா (1)

சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட – கலி 96/22

மேல்


சேட்சென்னி (2)

கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி – புறம் 27/10
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என – புறம் 225/9

மேல்


சேட்டு (1)

தார் அணி யானை சேட்டு இரும் கோவே – புறம் 201/13

மேல்


சேட்பட்டது (1)

சென்று சேட்பட்டது என் நெஞ்சு – கலி 143/16

மேல்


சேடல் (1)

சேடல் செம்மல் சிறுசெங்குரலி – குறி 82

மேல்


சேடு (1)

சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி – கலி 72/3

மேல்


சேண் (90)

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 19
செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி – திரு 67
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ – திரு 87
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை – சிறு 254
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின் – பெரும் 324
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி – முல் 25
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே – மது 198
கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை – மது 209
சேண் புலம்பு அகல இனிய கூறி – மலை 167
இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர் – மலை 262
புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் – மலை 412
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி – மலை 447
மன்றில் வதியுநர் சேண் புல பரிசிலர் – மலை 492
செம் வரி இதழ சேண் நாறு பிடவின் – நற் 25/2
நெடும் சேண் சென்று வருந்துவர் மாதோ – நற் 41/5
அரும் சுர கவலைய என்னாய் நெடும் சேண்/பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன் – நற் 105/6,7
சென்று சேண் அகறல் வல்லிய நீயே – நற் 137/10
புலம்பு சேண் அகல நீக்கி – நற் 217/8
சேண் நெடும் குன்றம் காணிய நீயே – நற் 222/10
நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினை – நற் 330/4
சேண் உற தோன்றும் குன்றத்து கவாஅன் – நற் 357/4
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க – நற் 381/8
நெடும் சேண் ஆரிடையதுவே நெஞ்சே – குறு 131/3
பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரே – குறு 154/8
செறிவும் சேண் இகந்தன்றே அறிவே – குறு 219/3
நெடும் சேண் நாட்டார் ஆயினும் – குறு 228/5
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே – குறு 231/6
சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க – குறு 358/3
பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக – ஐங் 5/2
சேண் புலம் முன்னிய அசை நடை அந்தணிர் – ஐங் 384/1
தீது சேண் இகந்து நன்று மிக புரிந்து – பதி 22/5
புல் இருள் விடிய புலம்பு சேண் அகல – பதி 59/4
வாரா சேண் புலம் படர்ந்தோன் அளிக்க என – பதி 61/10
சேண் நாறு நறு நுதல் சே_இழை கணவ – பதி 65/10
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படை கொங்கர் – பதி 77/10
வேங்கை விரிந்து விசும்பு உறு சேண் சிமை – பதி 88/34
சேண் நாறு நல் இசை சே_இழை கணவ – பதி 88/36
வளி பொரு சேண் சிமை வரை_அகத்தால் – பரி 8/90
உருமு சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட – பரி 9/3
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை – பரி 11/39
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப – கலி 45/7
செம் விரல் சிவப்பு ஊர சேண் சென்றாய் என்று அவன் – கலி 76/6
நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற – கலி 99/18
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம் – அகம் 3/11
நெடும் சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே – அகம் 3/18
ஆய் நலம் மறப்பெனோ மற்றே சேண் இகந்து – அகம் 39/5
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை – அகம் 42/12
கிளர்ந்த வேங்கை சேண் நெடும் பொங்கர் – அகம் 52/2
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே – அகம் 59/18
தாள் வலம்படுப்ப சேண் புலம் படர்ந்தோர் – அகம் 61/3
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் – அகம் 131/8
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த – அகம் 149/1
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை – அகம் 159/13
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் – அகம் 159/19
சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல் – அகம் 181/21
சென்று சேண் இடையர் ஆயினும் நன்றும் – அகம் 183/4
புலம்பு உறும்-கொல்லோ தோழி சேண் ஓங்கு – அகம் 187/10
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை – அகம் 205/8
நெடும் சேண் நாட்டில் தலைத்தார் பட்ட – அகம் 211/12
நெடும் சேண் இடைய குன்றம் போகி – அகம் 229/7
செலவர துணிந்த சேண் விளங்கு எல் வளை – அகம் 242/13
பிரசம் தூங்கும் சேண் சிமை – அகம் 242/21
பாறு கிளை சேக்கும் சேண் சிமை – அகம் 247/12
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி – அகம் 271/2
நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர் – அகம் 271/6
திரி-வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை – அகம் 283/6
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று – அகம் 285/3
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த – அகம் 289/9
சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர – அகம் 291/15
அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என – அகம் 309/3
சேண் உற சென்று வறும் சுனை ஒல்கி – அகம் 315/9
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரை – அகம் 321/6
மலை சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து – அகம் 333/13
தேர் சேண் நீக்கி தமியன் வந்து நும் – அகம் 380/1
அதர் படு பூழிய சேண் புலம் படரும் – அகம் 390/2
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டு – அகம் 397/14
திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி – புறம் 2/19
செய்து இரங்கா வினை சேண் விளங்கும் புகழ் – புறம் 10/11
உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க – புறம் 31/4
கோள்_மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி – புறம் 58/30
ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர் – புறம் 120/18
கிழவன் சேண் புலம் படரின் இழை அணிந்து – புறம் 151/3
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது – புறம் 174/2
செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி – புறம் 200/3
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை – புறம் 201/9
சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன் – புறம் 228/9
சேண் விளங்கு நல் இசை நிறீஇ – புறம் 282/10
வேட்ட சிறாஅர் சேண் புலம் படராது – புறம் 326/8

மேல்


சேண்பட்ட (1)

நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து – அகம் 264/7

மேல்


சேண (1)

சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள் – பரி 12/48

மேல்


சேணன் (1)

சேணன் ஆயினும் கேள் என மொழிந்து – பதி 44/11

மேல்


சேணின் (1)

சேணின் வருநர் போல பேணா – அகம் 300/13

மேல்


சேணின்று (1)

ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று/இழுமென இழிதரும் அருவி – திரு 315,316

மேல்


சேணும் (2)

சேணும் எம்மொடு வந்த – நற் 15/9
சேணும் சென்று உக்கன்றே அறியாது – நற் 116/9

மேல்


சேணோர்க்கு (1)

சிறுதொழில் மகாஅர் ஏறி சேணோர்க்கு/துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன் – அகம் 206/5,6

மேல்


சேணோன் (9)

சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் – மது 294
கலி கெழு மரம் மிசை சேணோன் இழைத்த – குறி 40
கழுதில் சேணோன் ஏவொடு போகி – மலை 243
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில் – நற் 276/5
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி – குறு 150/1
ஏனல் அம் சிறுதினை காக்கும் சேணோன்/ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை – குறு 357/5,6
ஏனல் அம் சிறுதினை சேணோன் கையதை – அகம் 73/14
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த – அகம் 392/14
செல்வை ஆயின் சேணோன் அல்லன் – புறம் 103/5

மேல்


சேதா (4)

சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து – பெரும் 306
குழவி சேதா மாந்தி அயலது – நற் 213/4
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டு சேதா/அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக – நற் 359/1,2
சேதா எடுத்த செம் நில குரூஉ துகள் – அகம் 79/7

மேல்


சேதான் (1)

சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக – அகம் 394/6

மேல்


சேதிகை (1)

வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி – கலி 96/27

மேல்


சேந்த (2)

ஆ சேந்த வழி மா சேப்ப – மது 157
சேந்த செயலை செப்பம் போகி – மலை 160

மேல்


சேந்தன் (2)

திதலை எஃகின் சேந்தன் தந்தை – நற் 190/3
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை – குறு 258/4

மேல்


சேந்தனிர் (3)

தீ துணை ஆக சேந்தனிர் கழி-மின் – மலை 420
பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும் – மலை 452
சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும் – அகம் 200/12

மேல்


சேந்தனை (3)

கானல் அம் சிறுகுடி சேந்தனை செலினே – நற் 254/12
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை – நற் 276/8
சேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்ப – அகம் 350/9

மேல்


சேந்து (3)

சேந்து வரல் அறியாது செம்மல் தேரே – குறு 242/6
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து/ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி – கலி 57/11

மேல்


சேப்ப (6)

ஆ சேந்த வழி மா சேப்ப/ஊர் இருந்த வழி பாழ் ஆக – மது 157,158
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப/வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ – நற் 120/4,5
சுடர் செல் வானம் சேப்ப படர் கூர்ந்து – குறு 234/1
காமர் சேவல் ஏமம் சேப்ப/முளி அரில் புலம்ப போகி முனாஅது – அகம் 103/4,5
கான மஞ்ஞை கணனொடு சேப்ப/ஈகை அரிய இழை அணி மகளிரொடு – புறம் 127/4,5
குவை இரும் கூந்தல் வரு முலை சேப்ப/என் ஆவது-கொல் தானே நன்றும் – புறம் 347/7,8

மேல்


சேப்பவும் (1)

தீம் பெண்ணை மடல் சேப்பவும்/கோள் தெங்கின் குலை வாழை – பொரு 207,208

மேல்


சேப்பின் (9)

பூ புன்னை சினை சேப்பின்/ஓங்கு திரை ஒலி வெரீஇ – பொரு 205,206
கொடு வில் எயின குறும்பில் சேப்பின்/களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 129,130
மடி வாய் கோவலர் குடி-வயின் சேப்பின்/இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன – பெரும் 166,167
கொடு முடி வலைஞர் குடி-வயின் சேப்பின்/அவையா அரிசி அம் களி துழவை – பெரும் 274,275
மறை காப்பாளர் உறை பதி சேப்பின்/பெரு நல் வானத்து வட-வயின் விளங்கும் – பெரும் 301,302
தண்டலை உழவர் தனி மனை சேப்பின்/தாழ் கோள் பலவின் சூழ் சுளை பெரும் பழம் – பெரும் 355,356
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் – மலை 443
நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே – ஐங் 482/4
சேப்பின் எவனோ பூ கேழ் புலம்ப – அகம் 340/13

மேல்


சேப்பினுள் (1)

நெய்தல் தாது அமர்ந்து ஆடி பாசடை சேப்பினுள்/செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை – கலி மேல்


சேப்பு (1)

சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊர – பரி 7/70

மேல்


சேம்பின் (6)

தீம் பல் தாரம் முனையின் சேம்பின்/முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல் – பெரும் 361,362
முதல் சேம்பின் முளை இஞ்சி – பட் 19
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை – குறு 76/3
கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகா – கலி 41/2
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்/பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி – அகம் 178/4,5
குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை – அகம் 336/1

மேல்


சேம்பு (1)

அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் – பதி 24/20

மேல்


சேம்பும் (1)

சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் – மலை 343

மேல்


சேம (4)

சேம_செப்பில் பெறீஇயரோ நீயே – குறு 277/5
சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர் – பரி 10/34
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் சேம/மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து – பரி 102/5

மேல்


சேம_செப்பில் (1)

சேம_செப்பில் பெறீஇயரோ நீயே – குறு 277/5

மேல்


சேமம் (1)

சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து – குறி 156

மேல்


சேய் (47)

சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும் – தொல்_பொருள். அகத்:40/8
சேய் வரல் வருத்தம் வீட வாயில் – தொல்_பொருள். புறத்:35/3
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று – சிறு 3
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு – மலை 64
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் – மலை 300
சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை – நற் 31/2
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு – நற் 43/4
சேய் விசும்பு இவர்ந்த செழும் கதிர் மண்டிலம் – நற் 67/1
சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய – நற் 69/2
தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர் – நற் 115/8
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம் – நற் 252/2
செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு – நற் 271/4
தாஅம் தேரலர்-கொல்லோ சேய் நாட்டு – நற் 302/6
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த – நற் 384/6
உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு – குறு 262/5
சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது – குறு 269/1
சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல் – குறு 314/1
நனி சேய் நாட்டர் நம் உன்னலரே – குறு 380/4
சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று – குறு 400/1
பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே – ஐங் 70/5
சேய் மலை நாடன் செய்த நோயே – ஐங் 242/5
காவிரி மண்டிய சேய் விரி வனப்பின் – பதி 73/11
சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய – பரி 1/4
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி – பரி 5/2
கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை – பரி 5/36
சேய் உற்ற கார் நீர் வரவு – பரி 11/114
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் – பரி 34/2
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு – கலி 29/23
சேய் உயர் வெற்பனும் வந்தனன் – கலி 39/51
சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும் – கலி 75/3
எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே – கலி 81/16
சேய் நின்று செய்யாத சொல்லி சினவல் நின் – கலி 81/27
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை – கலி 131/24
சேய் உறை காதலர் செய்_வினை முடித்தே – கலி 148/24
வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு – அகம் 1/8
மடந்தை மாண் நலம் புலம்ப சேய் நாட்டு – அகம் 21/5
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு – அகம் 59/16
வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று – அகம் 78/16
எறி படை கழீஇய சேய் அரி சின் நீர் – அகம் 113/19
நன்னர் ஆய் கவின் தொலைய சேய் நாட்டு – அகம் 115/16
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல் – அகம் 152/22
செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர் – அகம் 156/3
நாண் உடைமையின் நீங்கி சேய் நாட்டு – அகம் 187/3
புதுவது புனைந்த சேய் இலை வெள் வேல் – அகம் 221/5
சேய் உயர் சினைய மா சிறை பறவை – அகம் 244/2
இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை – அகம் 373/10
சேய் நாட்டு செல் கிணைஞனை – புறம் 377/14

மேல்


சேய்த்து (6)

நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர் – மலை 487
நனி சேய்த்து என்னாது நல் தேர் ஏறி சென்று – ஐங் 443/1
நணி_நணித்து ஆயினும் சேஎய் சேய்த்து/மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின் – பரி 108/35
ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது – அகம் 9/15
சேய்த்து காணாது கண்டனம் அதனால் – புறம் 196/9

மேல்


சேய்த்தும் (2)

சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே – சிறு 202
சேய்த்தும் அன்றே சிறு கான்யாறே – குறு 113/2

மேல்


சேய்த்தோ (1)

அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே – புறம் 173/12

மேல்


சேய்தா (1)

ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை – பரி 16/40

மேல்


சேய்நாட்டோரே (1)

சேயர் தோழி சேய்நாட்டோரே – குறு 64/5

மேல்


சேய்மையன் (1)

துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளா சேய்மையன்/நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன் – புறம் 380/9,10

மேல்


சேய்மையின் (1)

சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான – தொல்_சொல். விளி:35/3

மேல்


சேய (4)

சேய அம்ம இருவாம் இடையே – குறு 237/4
சேய ஆயினும் நடுங்கு துயர் தருமே – அகம் 152/24
பெரும் பொளி சேய அரை நோக்கி ஊன் செத்து – அகம் 397/12
இடைபட சேய ஆயினும் தொடை புணர்ந்து – புறம் 218/3

மேல்


சேயதால் (1)

சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே – ஐங் 257/4

மேல்


சேயர் (4)

சேயர் தோழி சேய்நாட்டோரே – குறு 64/5
பூசல் கேளார் சேயர் என்ப – ஐங் 315/2
சேயர் என்னாது அன்பு மிக கடைஇ – அகம் 83/11
சேயர் என்றலின் சிறுமை உற்ற என் – அகம் 113/21

மேல்


சேயரும் (1)

சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த – மது 571

மேல்


சேயள் (1)

சேயள் அரியோள் படர்தி – குறு 128/4

மேல்


சேயார் (1)

சேயார் கண் சென்ற என் நெஞ்சினை சில்_மொழி – கலி 29/10

மேல்


சேயார்க்கு (1)

ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு/நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும் – கலி மேல்


சேயாற்றின் (1)

காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்/யாணர் ஒரு கரை கொண்டனிர் கழி-மின் – மலை 476,477

மேல்


சேயாற்று (1)

கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று/வடு வாழ் எக்கர் மணலினும் பலரே – மலை 555,556

மேல்


சேயின் (1)

சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து – நற் 198/1

மேல்


சேயும் (3)

வளையுபு மலிந்த கோடு அணி சேயும்/பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து – கலி 104/14
வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும்/கால முன்பின் பிறவும் சால – கலி மேல்


சேயேன்-மன் (1)

சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை – கலி 37/7

மேல்


சேயை (1)

சேயை ஆயினும் இவணை ஆயினும் – புறம் 381/19

மேல்


சேயோன் (1)

சேயோன் மேய மை வரை உலகமும் – தொல்_பொருள். அகத்:5/2

மேல்


சேர் (52)

மதி சேர் அரவின் மான தோன்றும் – சிறு 185
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை – மது 116
வரை சேர் வகுந்தின் கானத்து படினே – மலை 242
கழி சேர் மருங்கின் கணை கால் நீடி – நற் 27/9
முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை – நற் 33/2
கல் சேர் சிறு நெறி மல்க தாஅம் – நற் 113/3
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி – நற் 140/3
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய – நற் 187/2
தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை – நற் 204/1
தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது – நற் 260/3
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர – நற் 260/4
வரை சேர் சிறு நெறி வாராதீமே – நற் 336/11
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த – குறு 66/4
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடி – குறு 108/1
மன்றல் அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை – குறு 177/3
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை – குறு 220/3
பூ சேர் அணையின் பெரும் கவின் தொலைந்த நின் – குறு 253/3
தாது சேர் நிகர் மலர் கொய்யும் – குறு 311/6
கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும் – ஐங் 12/1
கரை சேர் மருதம் ஏறி – ஐங் 74/3
புலவு சேர் துறுகல் ஏறி அவர் நாட்டு – ஐங் 210/2
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை – பதி 30/23
பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும் – பதி 34/7
அம்பு சேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லது – பதி 42/5
ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் – பதி 43/21
கடல் சேர் கானல் குட புலம் முன்னி – பதி 51/3
திருமருத முன்துறை சேர் புனல்-கண் துய்ப்பார் – பரி 7/83
துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று – பரி 12/93
நனை சேர் கதுப்பினுள் தண் போது மைந்தர் – பரி 16/34
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கை – பரி 23/68
சேர் அணி கொண்டு நிறம் ஒன்று வெவ்வேறு – பரி 24/8
அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல – கலி 13/12
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த-கால் – கலி 15/17
பன் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள் – கலி 70/6
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில் – கலி 129/12
பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற – கலி 145/6
கரை சேர் புள்_இனத்து அம் சிறை படை ஆக – கலி 149/2
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் – அகம் 50/11
குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம் – அகம் 87/10
உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு – அகம் 114/4
கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை – அகம் 141/27
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து – அகம் 199/3
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர் – அகம் 223/5
கழி சேர் புன்னை அழி பூ கானல் – அகம் 290/9
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும் – அகம் 318/6
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து – அகம் 367/2
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம் – அகம் 371/9
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து – அகம் 373/2
அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல் – அகம் 375/9
அம் வரி கொன்ற கறை சேர் வள் உகிர் – அகம் 387/5
மதி சேர் நாள்_மீன் போல நவின்ற – புறம் 160/8
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் – புறம் 378/20

மேல்


சேர்-மின் (1)

எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என – புறம் 9/5

மேல்


சேர்க்குந்து (1)

கழி தோணியான் கரை சேர்க்குந்து/மலை தாரமும் கடல் தாரமும் – புறம் 343/6,7

மேல்


சேர்கம் (1)

வரை நிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே – புறம் 255/6

மேல்


சேர்கின்ற (1)

தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் – பரி 22/35

மேல்


சேர்குவோர் (1)

சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர்/தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்பட – பரி மேல்


சேர்த்தலும் (1)

வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன் – கலி 81/20

மேல்


சேர்த்தி (20)

முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல் – தொல்_சொல். பெயர்:39/2
முலையும் முகனும் சேர்த்தி கொண்டோன் – தொல்_பொருள். புறத்:24/16
அசையும் சீரும் இசையொடு சேர்த்தி – தொல்_பொருள். செய்யு:11/1
வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே – 11/2
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் – தொல்_பொருள். மரபி:110/27
முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து – முல் 76
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா – நெடு 165
இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி/சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு – குறி 163,164
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி/இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி – மலை 26,27
பால் வீ தோல் முலை அகடு நிலம் சேர்த்தி/பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய் – நற் 103/5,6
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி/மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற – நற் 149/2,3
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி/ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும் – குறு 69/3,4
அவல் எறி உலக்கை வாழை சேர்த்தி/வளை கை மகளிர் வள்ளை கொய்யும் – பதி 29/1,2
களன் அறு குப்பை காஞ்சி சேர்த்தி/அரியல் ஆர்கை வன் கை வினைஞர் – பதி 62/15,16
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி/முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி – அகம் 63/4,5
குப்பை வெண் மணல் பக்கம் சேர்த்தி/நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த – அகம் 160/4,5
நிலவு நிற மருப்பின் பெரும் கை சேர்த்தி/வேங்கை வென்ற வெருவரு பணை தோள் – அகம் 295/4,5
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி/மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை – அகம் 353/20,21
ஒள் அழல் பள்ளி பாயல் சேர்த்தி/ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை – புறம் 245/5,6
பரல் உடை மருங்கின் பதுக்கை சேர்த்தி/மரல் வகுந்து தொடுத்த செம் பூ கண்ணியொடு – புறம் 264/1,2
மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி/காயம் கனிந்த கண் அகன் கொழும் குறை – புறம் 364/4,5

மேல்


சேர்த்திய (8)

நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய/குறும் கூரை குடி நாப்பண் – பட் 80,81
மனை சேர்த்திய வல் அணங்கினான் – பட் 87
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய/மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 159,160
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய/கல் போல் பிரியலம் என்ற சொல் தாம் – அகம் 1/5,6
பக்கம் சேர்த்திய செச்சை கண்ணியன் – அகம் 48/10
மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கி – அகம் 169/11
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து – அகம் 257/14
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய/கல் போல் நாவினேன் ஆகி மற்று அது – அகம் 356/9,10

மேல்


சேர்த்தியது (1)

ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை – திரு 108

மேல்


சேர்த்தியும் (1)

அவர் அவர் உறு பிணி தம போல் சேர்த்தியும் – தொல்_பொருள். பொருளி:2/8
அறிவும் புலனும் வேறுபட நிறீஇ – 2/9

மேல்


சேர்த்தின் (1)

சென்னி சேவடி சேர்த்தின்/என் என படுமோ என்றலும் உண்டே – நற் 342/9,10

மேல்


சேர்தரும் (1)

எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து – குறு 275/3

மேல்


சேர்தல் (2)

கிழவோன் சேர்தல் கிழத்திக்கு இல்லை – தொல்_பொருள். பொருளி:9/3
தூது முனிவு இன்மை துஞ்சி சேர்தல் – தொல்_பொருள். மெய்ப்:23/3
காதல் கைம்மிகல் கட்டுரை இன்மை என்று – 23/4

மேல்


சேர்தல்-கண்ணும் (1)

செய் பெரும் சிறப்பொடு சேர்தல்-கண்ணும் – தொல்_பொருள். கற்:5/30
பயம் கெழு துனை அணை புல்லி புல்லாது – 5/31

மேல்


சேர்தலும் (1)

என்று அடி சேர்தலும் உண்டு – கலி 89/15

மேல்


சேர்தி (2)

கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி ஆயின் – கலி 142/37
மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின் – கலி 142/41

மேல்


சேர்ந்த (34)

அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை – தொல்_எழுத். பிறப்:17/1
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் – தொல்_சொல். எச்ச:4/1
மதி சேர்ந்த மக வெண் மீன் – பட் 35
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை – நற் 26/2
கொல்லை கோவலர் குறும் புனம் சேர்ந்த/குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ – நற் 266/1,2
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை – நற் 303/3
அளகம் சேர்ந்த திரு_நுதல் – நற் 377/8
பலவில் சேர்ந்த பழம் ஆர் இன கலை – குறு 385/1
நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி – பதி 25/4
விண்டு சேர்ந்த வெண் மழை போல – பதி 55/15
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் – பரி 2/31
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும் – பரி 7/82
ஒரு_குழை_ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும் – கலி 26/1
நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் – கலி 29/13
சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன் – கலி 68/16
மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை – கலி 72/12
மிக நனி சேர்ந்த அ முகை மிசை அ மலர் – கலி 77/6
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை – கலி 77/18
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின் – கலி 77/19
ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம் – கலி 92/35
பல்லர் பெரு மழை கண்ணர் மடம் சேர்ந்த/சொல்லர் சுடரும் கனம் குழை காதினர் – கலி 104/37
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும் – கலி 145/13
மென் நடை பேடை துனைதர தன் சேர்ந்த/அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் ஒண்_நுதல் – கலி 155/7
வேங்கை சேர்ந்த வெற்பு_அகம் பொலிய – அகம் 162/20
பல்லான்குன்றில் படு நிழல் சேர்ந்த/நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் – அகம் 168/4,5
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் – அகம் 309/4
நும் மனை சேர்ந்த ஞான்றை அ மனை – அகம் 346/17
அத்த எருவை சேவல் சேர்ந்த/அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல் – அகம் 375/8,9
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசை – புறம் 14/8
கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்த/சில் வளை விறலியும் யானும் வல் விரைந்து – புறம் 60/4,5
களிறும் கடி_மரம் சேரா சேர்ந்த/ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே – புறம் 336/4,5
முன் ஊர் பொதியில் சேர்ந்த மென் நடை – புறம் 390/19

மேல்


சேர்ந்தவர் (2)

செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு மற்று அவர் – கலி 25/19
சேர்ந்தவர் தம் கடும்பு ஆர்த்தும் – புறம் 22/27

மேல்


சேர்ந்தன்று (1)

சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை – அகம் 52/12

மேல்


சேர்ந்தன்றே (1)

கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு – அகம் 120/5

மேல்


சேர்ந்தன்றோ (1)

மான்ற மாலை சேர்ந்தன்றோ இலனே – அகம் 190/17

மேல்


சேர்ந்தனம் (1)

நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும் – அகம் 43/12

மேல்


சேர்ந்தனர்-கொல்லோ (1)

சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு – குறு 79/6

மேல்


சேர்ந்தனவே (1)

நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்தனவே/கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே – புறம் 368/6,7

மேல்


சேர்ந்தனனே (1)

நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே/அது கண்டு பரந்தோர் எல்லாம் புகழ தலை பணிந்து – புறம் 285/12,13

மேல்


சேர்ந்தனை (2)

சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ – அகம் 120/13
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ – அகம் 398/21

மேல்


சேர்ந்தார் (1)

மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை – கலி 72/12

மேல்


சேர்ந்தார்-கண் (1)

நீ நீங்கு கன்று சேர்ந்தார்-கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு – கலி 116/8

மேல்


சேர்ந்தார்க்கு (4)

சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி – கலி 10/2
ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/11
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/19
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்கு/காண்_தகு மதி என்ன கதிர் விடு தண்மையும் – கலி மேல்


சேர்ந்தாரை (2)

நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரை தாங்கி தம் – கலி 26/15
உரை செல உயர்ந்து ஓங்கி சேர்ந்தாரை ஒரு நிலையே – கலி 146/1

மேல்


சேர்ந்தாள் (1)

தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக – கலி 147/70

மேல்


சேர்ந்தான் (1)

திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு – கலி 38/20

மேல்


சேர்ந்திருந்த (1)

புல்லென் அடை முதல் புறவு சேர்ந்திருந்த/புன்_புல சீறூர் நெல் விளையாதே – புறம் 328/1,2

மேல்


சேர்ந்து (24)

சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என – சிறு 20
பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒருசார் – மது 314
அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி – மலை 158
அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி – மலை 256
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின் – நற் 170/2
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன் தலை – குறு 124/1
மழை சேர்ந்து எழுதரு மாரி குன்றத்து – குறு 259/1
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து/வேங்கை விரிந்து விசும்பு உறு சேண் சிமை – பதி 88/33,34
சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் – பரி 8/79
கரை மரம் சேர்ந்து கவினி மடவார் – பரி 16/33
உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு – பரி 18/55
செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட – கலி 3/12
களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை – கலி 68/8
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன் – கலி 77/17
எம்மொடு சேர்ந்து சென்றீவாயால் செம்மால் – கலி 83/20
மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல – கலி 94/23
மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப – கலி 118/17
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர் – அகம் 178/7
நிலவு திகழ் மதியமொடு நிலம் சேர்ந்து ஆஅங்கு – புறம் 25/4
புலி சேர்ந்து போகிய கல் அளை போல – புறம் 86/4
மார்பு உற சேர்ந்து ஒல்கா – புறம் 98/9
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை – புறம் 220/3
புரையோர் சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும் – புறம் 354/3
மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி – புறம் 371/2

மேல்


சேர்ந்தோர் (5)

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்/புன்கண் அஞ்சும் பண்பின் – நற் 210/7,8
அம்பு சேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லது – பதி 42/5
வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ – பதி 65/5
யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்/திரு நுதல் பசப்ப நீங்கும் – அகம் 186/18,19
தன் பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்/பசி பகை கடிதலும் வல்லன் மாதோ – புறம் 400/15,16

மேல்


சேர்ந்தோர்க்கு (2)

செல்வர் செல்வ சேர்ந்தோர்க்கு அரணம் – பதி 59/10
செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு/உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும் – அகம் 231/1,2

மேல்


சேர்ந்தோள் (1)

ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே – அகம் 0/7

மேல்


சேர்ப்ப (26)

ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப/பூவின் அன்ன நலம் புதிது உண்டு – நற் 15/3,4
விழவு_களம் கமழும் உரவு நீர் சேர்ப்ப/இன மணி நெடும் தேர் பாகன் இயக்க – நற் 19/5,6
ஊடலும் உடையமோ உயர் மணல் சேர்ப்ப/திரை முதிர் அரைய தடம் தாள் தாழை – நற் 131/3,4
திண் திமில் எண்ணும் தண் கடல் சேர்ப்ப/இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர் – நற் 331/8,9
வம்மோ தோழி மலி நீர் சேர்ப்ப/பைம் தழை சிதைய கோதை வாட – நற் 363/6,7
பல் பூ கானல் மல்கு நீர் சேர்ப்ப/அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த – நற் 375/3,4
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப/இம்மை மாறி மறுமை ஆயினும் – குறு 49/2,3
தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே – குறு 236/6
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப/தாய் உடன்று அலைக்கும்-காலையும் வாய்விட்டு – குறு 397/3,4
பசி தின அல்கும் பனி நீர் சேர்ப்ப/நின் ஒன்று இரக்குவன் அல்லேன் – ஐங் 159/3,4
நல்கு-மதி வாழியோ நளி நீர் சேர்ப்ப/அலவன் தாக்க துறை இறா பிறழும் – ஐங் 179/1,2
தண் கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ – ஐங் 196/4
பள்ளிபுக்கது போலும் பரப்பு நீர் தண் சேர்ப்ப/தாங்க அரும் காமத்தை தணந்து நீ புறம்மாற – கலி 124/4,5
இலங்கு நீர் சேர்ப்ப கொடியை காண் நீ – கலி 125/15
எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர் தண் சேர்ப்ப/அணி சிறை இன குருகு ஒலிக்கும்-கால் நின் திண் தேர் – கலி 127/5,6
உரவு நீர் சேர்ப்ப அருளினை அளிமே – கலி 127/22
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப/புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்த-கால் – கலி 136/4,5
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள் – கலி 149/3
வந்தோய் மன்ற தண் கடல் சேர்ப்ப/நினக்கு எவன் அரியமோ யாமே எந்தை – அகம் 80/3,4
குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப/இன்று இவண் விரும்பாதீமோ சென்று அ – அகம் 310/10,11
கானல் அம் சிறுகுடி பெரு_நீர் சேர்ப்ப/மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் – அகம் 320/5,6
சேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்ப/இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி – அகம் 350/9,10
இரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்ப/இன மீன் அருந்து நாரையொடு பனை மிசை – அகம் 360/15,16

மேல்


சேர்ப்பற்கு (5)

மல்லல் இரும் கழி மலி நீர் சேர்ப்பற்கு/அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை – நற் 239/8,9
பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு/யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து – நற் 275/6,7
மலர்ந்த பூவின் மா நீர் சேர்ப்பற்கு/இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று – குறு 175/4,5
தடவு நிலை தாழை சேர்ப்பற்கு/இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே – குறு 219/6,7
பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு/இனி வரின் எளியள் என்னும் தூதே – குறு 269/7,8

மேல்


சேர்ப்பன் (21)

தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே – நற் 49/10
நீடு நீர் பனி துறை சேர்ப்பன்/ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே – நற் 58/10,11
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலே – நற் 78/11
நெடு_நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே – நற் 91/12
புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன்/என்ன மகன்-கொல் தோழி தன்-வயின் – நற் 94/6,7
கானல் அம் பெரும் துறை சேர்ப்பன்/தானே யானே புணர்ந்த மாறே – நற் 219/9,10
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே – நற் 235/10
பெரும் கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவே – நற் 245/12
பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன்/நாம முதலை நடுங்கு பகை அஞ்சான் – நற் 287/5,6
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன்/இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை – நற் 307/5,6
கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி – குறு 145/2
இனி சென்றனனே இடு மணல் சேர்ப்பன்/யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என் – குறு 205/5,6
இரு நீர் சேர்ப்பன் நீப்பின் ஒரு நம் – குறு 334/4
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன்/எம் தோள் துறந்தனன் ஆயின் – ஐங் 108/2,3
செருந்தி தாய இரும் கழி சேர்ப்பன்/தான் வர காண்குவம் நாமே – ஐங் 112/2,3
தண் கடல் சேர்ப்பன் பிரிந்து என பண்டையின் – ஐங் 183/3
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்/நனவின் வருதலும் உண்டு என – கலி 50/6,7
கணவன் ஓம்பும் கானல் அம் சேர்ப்பன்/முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல – அகம் 160/8,9
சிறு பல் தொல் குடி பெரு_நீர் சேர்ப்பன்/கழி சேர் புன்னை அழி பூ கானல் – அகம் 290/8,9
பாடு இமிழ் பனி கடல் சேர்ப்பன் என்கோ – புறம் 49/2

மேல்


சேர்ப்பன்-தன் (1)

நெடு_நீர் சேர்ப்பன்-தன் நெஞ்சத்தானே – நற் 303/12

மேல்


சேர்ப்பனை (8)

சிறு வீ ஞாழல் பெரும் கடல் சேர்ப்பனை/ஏதிலாளனும் என்ப போது அவிழ் – நற் 74/5,6
துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனை/யானும் காதலென் யாயும் நனி வெய்யள் – குறு 51/3,4
புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனை/உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே – குறு 243/4,5
தெண் கடல் சேர்ப்பனை கண்ட பின்னே – குறு 306/6
மணி நீர் சேர்ப்பனை மறவாதோர்க்கே – ஐங் 117/4
கானல் அம் சேர்ப்பனை கண்டாய் போல – கலி 128/6
ஊதை அம் சேர்ப்பனை அலைப்பேன் போலவும் – கலி 128/19
வால் நீர் கிடக்கை வயங்கு நீர் சேர்ப்பனை/யான் என உணர்ந்து நீ நனி மருள – கலி மேல்


சேர்ப்பனொடு (7)

உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கே – நற் 31/12
மலி திரை சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே – நற் 63/11
நளி கடல் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே – நற் 299/9
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு/நாடாது இயைந்த நண்பினது அளவே – நற் 378/11,12
விரிநீர் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே – குறு 226/7
கைதை அம் தண் புனல் சேர்ப்பனொடு/செய்தனெம் மன்ற ஓர் பகை தரு நட்பே – குறு 304/7,8
தெண் கடல் சேர்ப்பனொடு வாரான் – ஐங் 157/4

மேல்


சேர்ப்பின் (3)

இரும் கழி சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 4/12
தூங்கல் அம்பி தூவல் அம் சேர்ப்பின்/கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு – நற் 354/7,8
இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும் – அகம் 280/8

மேல்


சேர்ப்பினும் (1)

பிறங்கு நீர் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே – புறம் 49/6

மேல்


சேர்ப்பு (1)

சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் – நற் 123/10

மேல்


சேர்பு (38)

மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு/வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை – திரு 169,170
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் – சிறு 71
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து – சிறு 224
இரும் பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு/கல்லும் மரனும் துணிக்கும் கூர்மை – மது 634,635
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு/வில் கிடந்து அன்ன கொடிய பல்-வயின் – நெடு 108,109
பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய – குறி 216
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது – மலை 33
நல் அக வன முலை கரை சேர்பு/மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே – நற் 33/11,12
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு/அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின் – நற் 55/4,5
கல் சேர்பு நண்ணி படர் அடைபு நடுங்க – நற் 117/6
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து – நற் 215/7
அழி_தக்கன்றே தோழி கழி சேர்பு/கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் – நற் 372/1,2
புள்_இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் – நற் 382/4
வார்-உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்பு/அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார் – குறு 82/1,2
தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று – பதி 40/27
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கை – பதி 41/8
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து – பதி 72/11
கல் சேர்பு மா மழை தலைஇ – பதி 84/23
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி – பரி 23/8
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு/காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய – கலி 71/5,6
இஃது ஒத்தன் புள்ளி களவன் புனல் சேர்பு ஒதுக்கம் போல் – கலி 88/10
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின் – கலி 134/4
அகன் சுடர் கல் சேர்பு மறைய மனை-வயின் – அகம் 47/9
ஊர்-வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன் – அகம் 64/13
இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி – அகம் 110/15
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின் – அகம் 122/12
கல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பை – அகம் 129/6
சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கே – அகம் 137/4
கல் சேர்பு இருந்த சில் குடி பாக்கத்து – அகம் 187/12
பொதும்பில் புன்னை சினை சேர்பு இருந்த – அகம் 190/7
நிரை கால் ஒற்றலின் கல் சேர்பு உதிரும் – அகம் 199/2
தடைஇ திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை – அகம் 218/8
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ – அகம் 289/13
பாளை பற்று இழிந்து ஒழிய புறம் சேர்பு/வாள் வடித்து அன்ன வயிறு உடை பொதிய – அகம் 335/15,16
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய – அகம் 367/4
செய்வு-உறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு/எய்திய கனை துயில் ஏல்-தொறும் திருகி – அகம் 379/13,14
கந்து சேர்பு நிலைஇ வழங்க – புறம் 22/9

மேல்


சேர்வார் (1)

சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை – பரி 5/78

மேல்


சேர்வித்தல் (1)

நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும் – பரி 12/74

மேல்


சேர்வு (1)

நீர் காய் வருத்தமொடு சேர்வு_இடம் பெறாது – அகம் 155/10

மேல்


சேர்வு_இடம் (1)

நீர் காய் வருத்தமொடு சேர்வு_இடம் பெறாது – அகம் 155/10

மேல்


சேர (33)

கடும் காலொடு கரை சேர/நெடும் கொடி மிசை இதை எடுத்து – மது 78,79
செழும் கேளிர் நிழல் சேர/நெடு நகர் வீழ்ந்த கரி குதிர் பள்ளி – மது 168,169
குட முதல் குன்றம் சேர குண முதல் – மது 547
கமழ் பூ பொதும்பர் கட்சி சேர/செல் சுடர் மழுங்க சிவந்து வாங்கு மண்டிலம் – நற் 117/4,5
காமர் துணையொடு சேவல் சேர/புலம்பின்று எழுதரு புன்கண் மாலை – நற் 162/2,3
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர/நிறை பறை குருகு_இனம் விசும்பு உகந்து ஒழுக – நற் 369/1,2
பெய்து போகு எழிலி வைகு மலை சேர/தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப – நற் 396/1,2
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர/படர் சுமந்து எழுதரு பையுள் மாலை – குறு 195/1,2
சேரி சேர மெல்ல வந்து_வந்து – குறு 298/1
மா புதல் சேர வரகு இணர் சிறப்ப – ஐங் 496/1
உரும் எறி வரையின் களிறு நிலம் சேர/காஞ்சி சான்ற செரு பல செய்து நின் – பதி 84/18,19
உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர/வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி – பரி 8/5,6
புடைபெயர்ந்து ஒடுங்கவும் புறம் சேர உயிர்ப்பவும் – கலி 17/2
தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை – கலி 31/16
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர/ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன் – கலி 119/2,3
மா வதி சேர மாலை வாள் கொள – கலி 119/11
இருள் தூர்பு புலம்பு ஊர கனை சுடர் கல் சேர/உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை – கலி 121/1
புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று – கலி 121/4
பொன் மலை சுடர் சேர புலம்பிய இடன் நோக்கி – கலி 126/1
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர/போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய் – கலி 143/58,59
மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர/ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் – கலி 40/4,5
தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன் – அகம் 250/7
எக்கர் பெண்ணை அக மடல் சேர/கழி மலர் கமழ் முகம் கரப்ப பொழில் மனை – அகம் 260/7,8
வருக தில் அம்ம எம் சேரி சேர/அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண – அகம் 276/7,8
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை – புறம் 77/12
பொய்யா எழினி பொருது களம் சேர/ஈன்றோள் நீத்த குழவி போல – புறம் 230/6,7
சொல் நிழல் இன்மையின் நன் நிழல் சேர/நுண் பூண் மார்பின் புன் தலை சிறாஅர் – புறம் 373/15,16
உரும் எறி மலையின் இரு நிலம் சேர/சென்றோன் மன்ற கொலைவன் சென்று எறி – புறம் 373/21,22

மேல்


சேரல் (3)

களங்காய்க்கண்ணி நார்முடி சேரல்/எயில் முகம் சிதைய தோட்டி ஏவலின் – பதி 38/4,5
எழுமுடி மார்பின் எய்திய சேரல்/குண்டு கண் அகழிய மதில் பல கடந்து – பதி 45/6,7
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன் – அகம் 36/15

மேல்


சேரலர் (3)

செயல் அமை கண்ணி சேரலர் வேந்தே – பதி 38/8
செல்வக்கோவே சேரலர் மருக – பதி 63/16
வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர்/சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க – அகம் 149/7,8

மேல்


சேரலர்க்கு (1)

ஓரி கொன்று சேரலர்க்கு ஈத்த – அகம் 209/14

மேல்


சேரலாத (2)

போர் அடு தானை சேரலாத/மார்பு மலி பைம் தார் ஓடையொடு விளங்கும் – பதி 11/16,17
போர் வல் யானை சேரலாத/நீ வாழியர் இ உலகத்தோர்க்கு என – பதி 15/23,24

மேல்


சேரலாதன் (4)

சேரலாதன் பொய்யலன் நசையே – பதி 18/12
பொருது புண் நாணிய சேரலாதன்/அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என – அகம் 55/11,12
வலம் படு முரசின் சேரலாதன்/முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து – அகம் 127/3,4
சால் பெரும் தானை சேரலாதன்/மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய – அகம் 347/3,4

மேல்


சேரலாதனை (1)

கடந்து அடு தானை சேரலாதனை/யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம் – புறம் 8/5,6

மேல்


சேரவும் (1)

மை அணி மருங்கின் மலை_அகம் சேரவும்/மாலை வந்தன்று மாரி மா மழை – குறு 319/4,5

மேல்


சேரா (7)

சேரி சேரா வருவோர்க்கு என்றும் – நற் 342/4
சேரா அறத்து சீர் இலோரும் – பரி 5/74
கொடி சேரா திரு கோவை காழ்கொள – பரி 6/15
அரு வரை சேரா தொழுநர் – பரி 8/102
காமர் கழல் அடி சேரா/நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே – கலி 65/3
களிறும் கடி_மரம் சேரா சேர்ந்த – புறம் 336/4

மேல்


சேராது (1)

இரும் கல் இகுப்பத்து இறுவரை சேராது/குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து – மலை 367,368

மேல்


சேரார் (3)

சேரார் இன் உயிர் செகுக்கும் – பரி 2/48
மறுபிறப்பு இல் எனும் மடவோரும் சேரார்/நின் நிழல் அன்னோர் அல்லது இன்னோர் – பரி 141/4

மேல்


சேரி (39)

சேரி மொழியான் செவ்விதின் கிளந்து – தொல்_பொருள். செய்யு:241/1
இலங்கு வளை இரும் சேரி/கள் கொண்டி குடி பாக்கத்து – மது 136,137
துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி/இன் கலி யாணர் குழூஉ பல பயின்று ஆங்கு – மது 329,330
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் – மது 594
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு – மது 619
உறை_கிணற்று புற_சேரி – பட் 76
கல்லென் சேரி புலவர் புன்னை – நற் 63/3
ஊர்_அல்_அம்_சேரி சீறூர் வல்லோன் – நற் 77/8
பராரை புன்னை சேரி மெல்ல – நற் 145/9
கலி_மா கடைஇ வந்து எம் சேரி/தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய – நற் 150/7,8
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய – நற் 171/4
சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பி – நற் 175/7
மல்லல் அம் சேரி கல்லென தோன்றி – நற் 249/9
சேரி சேரா வருவோர்க்கு என்றும் – நற் 342/4
வால் இழை மகளிர் சேரி தோன்றும் – நற் 380/5
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் – குறு 231/1
சேரி வரினும் ஆர முயங்கார் – குறு 231/2
வாரல் எம் சேரி தாரல் நின் தாரே – குறு 258/1
ஊஉர் அலர் எழ சேரி கல்லென – குறு 262/1
சேரி சேர மெல்ல வந்து_வந்து – குறு 298/1
புன்னை அம் சேரி இ ஊர் – குறு 320/7
புன்னை ஓங்கிய புலால் அம் சேரி/இன் நகை ஆயத்தாரோடு – குறு 351/6,7
அம்பல் சேரி அலர் ஆங்கட்டே – ஐங் 279/5
சேரி இளையர் செல அரு நிலையர் – பரி 6/38
ஆடுவார் சேரி அடைந்து என – பரி 7/32
தாரும் ததர் பட்ட சாந்தமும் சேரி/அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின் – கலி 117/6
செறிந்த சேரி செம்மல் மூதூர் – அகம் 15/7
சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம் – அகம் 65/4
தண் துறை ஊரன் எம் சேரி வந்து என – அகம் 76/2
அம் மென் சேரி கேட்பினும் கேட்க – அகம் 110/2
சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக – அகம் 115/4
சேரி விலைமாறு கூறலின் மனைய – அகம் 140/8
ஒள் இழை மகளிர் சேரி பல் நாள் – அகம் 146/6
புலால் அம் சேரி புல் வேய் குரம்பை – அகம் 200/2
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே – அகம் 216/16
வருக தில் அம்ம எம் சேரி சேர – அகம் 276/7
கவ்வை தூற்றும் வெவ் வாய் சேரி/அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய – அகம் 347/6,7
மீன் சீவும் பாண் சேரி/வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன – புறம் 348/4,5

மேல்


சேரி-தொறும் (2)

மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும்/உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ – மது 615,616
கொள்ளீரோ என சேரி-தொறும் நுவலும் – அகம் 390/9

மேல்


சேரிய (1)

கொடு வாய் பேடை குடம்பை சேரிய/உயிர் செல கடைஇ புணர் துணை – நற் 338/10,11

மேல்


சேரியால் (1)

சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன் – கலி 68/16

மேல்


சேரியின் (1)

சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை – கலி 65/8

மேல்


சேரியும் (5)

ஏம பேரூர் சேரியும் சுரத்தும் – தொல்_பொருள். அகத்:37/1
தமர் தமர் அறியா சேரியும் உடைத்தே – நற் 331/12
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு – கலி 44/12
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ – அகம் 220/1
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ – அகம் 383/2

மேல்


சேரியேனே (1)

சேரியேனே அயல் இலாட்டியேன் – அகம் 386/11

மேல்


சேரியொடு (1)

மீன் சீவும் பாண்_சேரியொடு – மது 269

மேல்


சேரியோரும் (1)

ஊரும் அயலும் சேரியோரும் – தொல்_பொருள். செய்யு:191/1
நோய் மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும் – 191/2

மேல்


சேரின் (2)

நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே – குறு 370/5
வான் ஊர் மதியம் வரை சேரின் அ வரை – கலி 39/9

மேல்


சேரினும் (1)

புள்ளு பதி சேரினும் புணர்ந்தோர் காணினும் – நற் 253/1

மேல்


சேருநர்க்கு (1)

தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும் – புறம் 361/10

மேல்


சேரும் (7)

கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை – நற் 321/5
தாம் வேண்டும் பட்டினம் எய்தி கரை சேரும்/ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் – பரி 123/12
அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள் – அகம் 141/8
நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன்_தலை – அகம் 158/14
குட கடல் சேரும் படர் கூர் மாலையும் – அகம் 378/15
முட்டை கொண்டு வன்_புலம் சேரும்/சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப – புறம் 173/6,7

மேல்


சேரே (1)

சேரே திரட்சி – தொல்_சொல். உரி:65/1

மேல்


சேவடி (17)

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு – திரு 62
மா நிலம் சேவடி ஆக தூ நீர் – நற் 0/1
நின் ஒளி எறிய சேவடி ஒதுங்காய் – நற் 297/2
சென்னி சேவடி சேர்த்தின் – நற் 342/9
தாமரை புரையும் காமர் சேவடி/பவழத்து அன்ன மேனி திகழ் ஒளி – குறு 0/1,2
அலங்கல் செல்வன் சேவடி பரவி – பதி 31/9
மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி/மணி திகழ் உருபின் மாஅயோயே – பரி 3/19
மாறு இனி நின் ஆங்கே நின் சேவடி சிவப்ப – கலி 95/4
நலம் மிகு சேவடி நிலம் வடு கொளாஅ – அகம் 5/3
மெல்லென் சேவடி மெலிய ஏக – அகம் 89/18
பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி/சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே – அகம் 117/8,9
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி/மணல் மலி முற்றத்து நிலம் வடு கொளாஅ – அகம் 254/3,4
திருந்து கழல் சேவடி நசைஇ படர்ந்து ஆங்கு – அகம் 309/11
கழல் அணி பொலிந்த சேவடி நிலம் கவர்பு – புறம் 125/12
மிக பொலியர் தன் சேவடி அத்தை என்று – புறம் 387/14
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி – புறம் 387/18

மேல்


சேவல் (62)

சேவல் பெயர் கொடை சிறகொடு சிவணும் – தொல்_பொருள். மரபி:48/1
குதிரையுள் ஆணினை சேவல் என்றலும் – தொல்_பொருள். மரபி:68/5
தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் – திரு 210
கொங்கு கவர் நீல செம் கண் சேவல்/மதி சேர் அரவின் மான தோன்றும் – சிறு 184,185
இறை உறை புறவின் செம் கால் சேவல்/இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் – பெரும் 439,440
கம்புள் சேவல் இன் துயில் இரிய – மது 254
செம் கால் அன்னத்து சேவல் அன்ன – மது 386
மனை உறை புறவின் செம் கால் சேவல்/இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 45,46
அறியாது எடுத்த புன் புற சேவல்/ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்து என – மலை 147,148
கான கோழி கவர் குரல் சேவல்/கான பலவின் முழவு மருள் பெரும் பழம் – மலை 510,511
வண்ண புறவின் செம் கால் சேவல்/வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல் – நற் 71/8,9
காமர் துணையொடு சேவல் சேர – நற் 162/2
உள் இறை குரீஇ கார் அணல் சேவல்/பிற புல துணையோடு உறை புலத்து அல்கி – நற் 181/1,2
கான புறவின் சேவல் வாய் நூல் – நற் 189/8
கடல் அம் காக்கை செ வாய் சேவல்/படிவ மகளிர் கொடி கொய்து அழித்த – நற் 272/1,2
எருவை சேவல் கிளை-வயின் பெயரும் – நற் 298/4
கூகை சேவல் குராலோடு ஏறி – நற் 319/4
அழல் போல் செவிய சேவல் ஆட்டி – நற் 352/4
பைம் புற புறவின் செம் கால் சேவல்/களரி ஓங்கிய கவை முட கள்ளி – நற் 384/1,2
சேவல் அம் கொடியோன் காப்ப – குறு 0/5
உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல்/சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர் – குறு 85/2,3
தொகு செம் நெற்றி கணம்_கொள் சேவல்/நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் – குறு 107/2,3
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி – குறு 154/3
கான கோழி கவர் குரல் சேவல்/ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்ப – குறு 242/1,2
நீர் உறை கோழி நீல சேவல்/கூர் உகிர் பேடை வயாஅம் ஊர – ஐங் 51/1,2
புன் புற பேடை சேவல் இன்புற – ஐங் 425/1
அளகு உடை சேவல் கிளை புகா ஆர – பதி 35/5
புன் புற எருவை பெடை புணர் சேவல்/குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய – பதி 36/9,10
சேவல் அம் கொடியோய் நின் வல-வயின் நிறுத்தும் – பரி 1/11
சேவல் ஊர்தியும் செம் கண் மாஅல் – பரி 3/60
சேவல் ஓங்கு உயர் கொடியோயே – பரி 4/36
சேவல் ஓங்கு உயர் கொடி – பரி 4/37
சேவல் ஓங்கு உயர் கொடி செல்வ நன் புகழவை – பரி 13/42
அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் ஒண்_நுதல் – கலி 147/66
வீளை பருந்தின் கோள் வல் சேவல்/வளை வாய் பேடை வரு_திறம் பயிரும் – அகம் 33/5,6
குறு நடை புறவின் செம் கால் சேவல்/நெடு நிலை வியன் நகர் வீழ் துணை பயிரும் – அகம் 47/11,12
எருவை சேவல் கரிபு சிறை தீய – அகம் 51/6
கரும் தாள் மிடற்ற செம் பூழ் சேவல்/சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண் – அகம் 63/7,8
குடுமி நெற்றி நெடு மர சேவல்/தலை குரல் விடியல் போகி முனாஅது – அகம் 87/5,6
உருத்து எழு குரல குடிஞை சேவல்/புல் சாய் விடர்_அகம் புலம்ப வரைய – அகம் 89/3,4
காமர் சேவல் ஏமம் சேப்ப – அகம் 103/4
வளை கண் சேவல் வாளாது மடியின் – அகம் 122/15
எருவை சேவல் ஈண்டு கிளை பயிரும் – அகம் 161/6
கூர் நுதி செம் வாய் எருவை சேவல்/படு பிண பைம் தலை தொடுவன குழீஇ – அகம் 215/12,13
மனை உறை புறவின் செம் கால் சேவல்/துணையொடு குறும் பறை பயிற்றி மேல் செல – அகம் 254/5,6
பொறி வரி புறவின் செம் கால் சேவல்/சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி – அகம் 271/1,2
மனை உறை கோழி மறன் உடை சேவல்/போர் புரி எருத்தம் போல கஞலிய – அகம் 277/15,16
நுண் ஞாண் அம் வலை சேவல் பட்டு என – அகம் 290/4
எருவை சேவல் இரும் சிறை பெயர்க்கும் – அகம் 297/17
கூரல் கொக்கின் குறும் பறை சேவல்/வெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்து – அகம் 346/3,4
வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல்/கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும் – அகம் 363/13,14
நெற்றி சேவல் அற்றம் பார்க்கும் – அகம் 367/12
அத்த எருவை சேவல் சேர்ந்த – அகம் 375/8
எருவை சேவல் ஈண்டு கிளை தொழுதி – அகம் 381/10
செம் கால் சேவல் பயிரும் ஆங்கண் – அகம் 387/12
வட்ட வரிய செம் பொறி சேவல்/ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் – புறம் 28/8,9
அன்ன சேவல் அன்ன சேவல் – புறம் 67/1
அன்ன சேவல் அன்ன சேவல்/ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் – புறம் 67/1,2
அன்ன சேவல் மாறு எழுந்து ஆலும் – புறம் 128/4
மனை உறை குரீஇ கறை அணல் சேவல்/பாணர் நரம்பின் சுகிரொடு வய_மான் – புறம் 318/4,5
பொறி புற பூழின் போர் வல் சேவல்/மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள் – புறம் 321/1,2
ஒண் பொறி சேவல் எடுப்ப ஏற்றெழுந்து – புறம் 383/1

மேல்


சேவலாய் (1)

சேவலாய் சிறகர் புலர்த்தியோய் எனவும் – பரி 3/26

மேல்


சேவலின் (1)

கவிர் பூ நெற்றி சேவலின் தணியும் – புறம் 326/6

மேல்


சேவலும் (4)

சேவும் சேவலும் இரலையும் கலையும் – தொல்_பொருள். மரபி:2/2
வாவலும் வயின்-தொறும் பறக்கும் சேவலும்/நகை வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும் – நற் 218/3,4
மறியும் மஞ்ஞையும் வாரண சேவலும்/பொறி வரி சாபமும் மரனும் வாளும் – பரி 238/2

மேல்


சேவலை (1)

அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என – கலி 70/2

மேல்


சேவலொடு (4)

யானையங்குருகின் சேவலொடு காமர் – மது 674
சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில் – நற் 118/3
காவல் நீ என்றோளே சேவலொடு/சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம் – நற் 389/7,8
சேவலொடு புணரா சிறு கரும் பேடை – அகம் 270/13

மேல்


சேவலோய் (1)

நிவந்து ஓங்கு உயர் கொடி சேவலோய் நின் – பரி 3/18

மேல்


சேவும் (1)

சேவும் சேவலும் இரலையும் கலையும் – தொல்_பொருள். மரபி:2/2

மேல்


சேற்ற (1)

பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய – அகம் 171/13

மேல்


சேற்று (22)

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72
தகை செய் தீம் சேற்று இன் நீர் பசும் காய் – மது 400
அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும் – மது 532
தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க – மது 627
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180
இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழி – நற் 272/5
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் – நற் 291/1
அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என – நற் 372/4
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான் – குறு 261/3
ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி – குறு 372/4
அறை-உறு கரும்பின் தீம் சேற்று யாணர் – பதி 75/6
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான் – அகம் 46/1
ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல் – அகம் 176/10
இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய – அகம் 290/2
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி பொழுது பட – அகம் 316/4
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப – அகம் 350/4
தண் சேற்று அடைஇய கணை கால் நெய்தல் – அகம் 360/4
இரும் சேற்று அள்ளல் எறி செரு கண்டு – அகம் 366/9
அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண் – அகம் 400/17
சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ் – புறம் 27/1
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப – புறம் 249/1
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின் – புறம் 342/8

மேல்


சேற்றொடு (1)

விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு/பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும் – அகம் 237/12,13

மேல்


சேற்றோடு (1)

சேற்றோடு பட்ட சிறுமைத்து ஆயினும் – புறம் 204/8

மேல்


சேறல் (8)

உடன் சேறல் செய்கையொடு அன்னவை பிறவும் – தொல்_பொருள். கற்:5/43
வன்புறுத்த அல்லது சேறல் இல்லை – தொல்_பொருள். கற்:43/2
இல்லத்து நீ தனி சேறல் இளிவரல் – பரி 11/44
தாய் அ திறம் அறியாள் தாங்கி தனி சேறல்/ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்ப தாக்கிற்றே – பரி 106/42
அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே – அகம் 221/14
வழி நடை சேறல் வலித்திசின் யானே – அகம் 303/20
தாமும் பிறரும் உளர் போல் சேறல்/முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் – அகம் 336/15,16

மேல்


சேறலின் (2)

எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று – குறு 355/3
பருவத்து பல் மாண் நீ சேறலின் காண்டை – பரி 8/85

மேல்


சேறலும் (4)

தானே சேறலும் தன்னொடு சிவணிய – தொல்_பொருள். அகத்:27/1
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே – தொல்_பொருள். அகத்:27/2
அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று – திரு 125
மயங்கி மற்று ஆண்டு_ஆண்டு சேறலும் செல்லாது – கலி 92/4

மேல்


சேறி (7)

செலீஇய சேறி ஆயின் இவளே – நற் 19/7
நடுநரொடு சேறி ஆயின் அவண – நற் 60/8
நின் கிளை மருங்கின் சேறி ஆயின் – நற் 102/6
நில்லா பொருள்_பிணி சேறி/வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினையே – நற் 126/11,12
அண்ணல் நெடு வரை சேறி ஆயின் – குறு 392/3
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண் – கலி 108/39
இரும் பறை இரவல சேறி ஆயின் – புறம் 263/2

மேல்


சேறிர் (1)

உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த – மலை 65

மேல்


சேறிரோ (2)

சேறிரோ என செப்பலும் ஆற்றாம் – குறு 268/1
ஐய சேறிரோ அகன்று செய்பொருட்கே – அகம் 81/15

மேல்


சேறு (30)

இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என – சிறு 28
பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர் – பெரும் 298
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி – பெரும் 341
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் – நெடு 157
ஏறு பொர சேறு ஆகி – பட் 46
நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து – மலை 137
வடி சேறு விளைந்த தீம் பழ தாரம் – மலை 513
தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள் – நற் 8/7
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு – நற் 51/9
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண – நற் 82/8
இரும் சேறு ஆடிய கொடும் கவுள் கய வாய் – நற் 141/1
கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி – நற் 278/7
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய் சேறு புலர்ந்து – நற் 311/3
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து – நற் 340/6
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு – ஐங் 28/2
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம் – பதி 42/12
அம் சேறு அமைந்த முண்டை விளை பழம் – பதி 60/6
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து – பதி 64/6
சேறு செய் மாரியின் அளிக்கும் நின் – பதி 65/16
சேறு ஆடு புனலது செலவு – பரி 6/51
சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து – பரி 7/74
செம் குங்கும செழும் சேறு/பங்கம் செய் அகில் பல பளிதம் – பரி 13/8
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு – அகம் 121/6
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட – அகம் 137/1
நறும் சேறு ஆடிய வறும் தலை யானை – புறம் 68/16
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின் – புறம் 176/2
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய – புறம் 225/1
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் – புறம் 325/4

மேல்


சேறுகம் (1)

யாமும் சேறுகம் நீயிரும் வம்-மின் – பதி 49/1

மேல்


சேறுபட்ட (1)

வேறு பட்ட உடையும் சேறுபட்ட தசும்பும் – புறம் 377/18

மேல்


சேறுபடு (1)

சேறுபடு குருதி செம்மல் உக்கு ஓஒ – புறம் 285/10

மேல்


சேறும் (17)

செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என – பொரு 121
சேறும் நாற்றமும் பலவின் சுளையும் – மது 527
சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/6
சேறும் மடந்தை என்றலின் தான் தன் – நற் 113/6
சிறுதினை காக்குவம் சேறும் அதனால் – நற் 156/5
சேறும் சேறும் என்றலின் பல புலந்து – நற் 229/1
சேறும் சேறும் என்றலின் பல புலந்து – நற் 229/1
சேறும் வாழியோ முதிர்கம் யாமே – நற் 295/9
யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது – குறு 80/3
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்/ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே – குறு 113/5,6
படு கிளி கடிகம் சேறும் அடு போர் – குறு 198/5
சேறும் சேறும் என்றலின் பண்டை தம் – குறு 325/1
சேறும் சேறும் என்றலின் பண்டை தம் – குறு 325/1
சாறும் சேறும் நெய்யும் மலரும் – பரி 6/41
கன்றொடு சேறும் புலத்து – கலி 110/23
சேறும் என்ற சிறு சொற்கு இவட்கே – அகம் 143/9
சேறும் வாழியோ பெரும் பெயர் பறம்பே – புறம் 113/7

மேல்


சேனை (1)

இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல – கலி 108/1

மேல்