Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்கிரம் 1
வகுத்தனை 1
வகுத்து 2
வகுளம் 1
வகை 9
வகையாலே 1
வகையினரேனும் 1
வங்கங்களும் 1
வங்கத்தொடு 1
வங்கம் 6
வசம் 1
வசவுணும் 1
வசுக்கள் 1
வஞ்ச 3
வஞ்சம் 5
வஞ்சம்கொண்டார் 1
வஞ்சர் 2
வஞ்சர்கள் 1
வஞ்சனை 3
வஞ்சனைக்கு 1
வஞ்சனையுள் 1
வஞ்சி 2
வஞ்சியாது 2
வஞ்சியும் 1
வட்ட 3
வட 12
வட-பால் 11
வட-பாலின் 1
வட-பாலை 1
வடக்கு 1
வடகத்தொடு 1
வடபேறூர் 1
வடம் 2
வடி 6
வடிக்கின்றன 1
வடிவிலான் 1
வடிவு 2
வடிவே 1
வடுக 1
வடுகர் 1
வண் 8
வண்டின் 1
வண்டு 40
வண்டுகள் 1
வண்டுகாள் 3
வண்டும் 1
வண்ண 1
வண்ணத்த 1
வண்ணத்தராய் 3
வண்ணத்தின் 1
வண்ணம் 8
வண்ணமும் 1
வண்ணர் 3
வண்ணன் 2
வண்ணா 2
வண்மையும் 1
வண 1
வணக்கியும் 1
வணங்க 3
வணங்கார் 1
வணங்கி 4
வணங்கிட 1
வணங்குதல் 1
வணங்கும் 8
வணங்குவார்க்கு 2
வணம் 2
வணா 1
வதையும் 1
வந்த 7
வந்தாய் 1
வந்தாலும் 1
வந்திப்பார்-தம் 1
வந்து 96
வந்தும் 1
வந்துவந்து 1
வம்-மின் 1
வம்பனை 1
வம்பு 5
வயப்பட்டு 1
வயல் 53
வயலில் 1
வயிர 1
வயிரத்தை 1
வயிரம் 2
வயிரமே 1
வயிறுதாரி 1
வர 1
வரங்கள் 1
வரம் 4
வரவு 1
வரன்றி 2
வரன்றியும் 1
வரால் 4
வரி 15
வரிஞ்சையர் 1
வரிஞ்சையர்_கோன் 1
வரிதரு 1
வரிந்த 1
வரிய 1
வரியானை 1
வரிவளையாள் 1
வரு 12
வருக்கை 1
வருடியும் 1
வருணர் 1
வருத்த 1
வருத்தம் 3
வருத்தி 1
வருந்தல் 1
வருந்தல்செய்யாது 1
வருந்தலுற்றேன் 2
வருந்தவே 1
வருந்தாமல் 1
வருந்தாமே 1
வருந்தாமை 1
வருந்தி 5
வருந்தும் 1
வரும் 21
வரும்போது 1
வருமேலும் 1
வருவ 1
வருவதும் 1
வருவர் 1
வருவார் 1
வருவான் 2
வருவானை 1
வருவீர்காள் 1
வருவேன் 1
வரூடை 1
வரை 23
வரைகள் 1
வரையால் 1
வரையின் 2
வரையின்பாவை 1
வரையின்பாவை_மணாளன் 1
வரையின்மடமகள் 1
வரையின்மடமகள்_கேள்வன் 1
வரையை 2
வல் 10
வல்ல 14
வல்லது 1
வல்லர் 1
வல்லவர் 3
வல்லவர்கள் 2
வல்லவர்தாம் 1
வல்லவன் 1
வல்லவா 2
வல்லாய் 2
வல்லார் 46
வல்லார்-தங்கள் 1
வல்லார்-தம் 1
வல்லார்க்கு 6
வல்லார்கள் 5
வல்லான் 3
வல்லானே 2
வல்லானை 19
வல்லிரே 1
வல்லிரோ 3
வல்லீர் 1
வல்லீர்களே 10
வல்லீராய் 1
வல்லேன் 3
வல்லேன்அல்லேன் 1
வல்லை 1
வல்வார் 1
வல்வானை 1
வல்வினை 8
வல்வினைக்கு 3
வல்வினைகள் 4
வல்வினைதானே 1
வல்வினையுள் 1
வலங்கை 1
வலஞ்சுழி 2
வலம் 2
வலம்கொள்வார் 1
வலம்செய்து 2
வலம்செயும் 2
வலம்புரத்தினை 1
வலம்புரமே 10
வலம்புரி 5
வலம்புரிகளும் 1
வலம்புரியொடு 1
வலன் 1
வலி 3
வலித்து 3
வலிது 1
வலிய 2
வலியேயாகிலும் 1
வலியை 1
வலிவலம்-தனில் 11
வலை 2
வலைப்பட்டு 2
வலையம் 1
வலையில் 2
வலையுள் 1
வவ்வி 1
வவ்வினாய்க்கு 1
வழக்கிலியை 1
வழக்கு 1
வழக்கே 1
வழங்கும் 1
வழி 15
வழித்தலை 1
வழித்துணை 1
வழிதந்து 1
வழிதான் 1
வழிப்போவார்-தம்மோடும் 1
வழிபட்டு 1
வழிபட 3
வழிபடப்பெற்ற 9
வழிபடாநிற்க 1
வழிபாடு 3
வழியடியார் 1
வழியே 2
வழுக்கி 1
வழுவா 5
வழுவேன் 1
வள் 1
வள்ளல் 3
வள்ளலே 2
வள்ளலை 2
வள்ளை 1
வள 13
வளம் 8
வளம்பட 2
வளர் 17
வளர்க்கும் 1
வளர்த்த 1
வளர்த்து 1
வளராத 1
வளரும் 4
வளாகத்து 1
வளி 3
வளை 12
வளைக்கப்பட்டு 1
வளைக்கலுற்றேன் 1
வளைக்கின்றேன் 1
வளைகள் 3
வளைத்த 1
வளைத்தான் 2
வளைத்து 1
வளைந்த 1
வளையார் 1
வளையாள் 4
வளையாளை 1
வளையும் 1
வளையொடு 1
வளைவித்து 1
வற்கென்று 1
வற்றி 1
வறிதே 1
வன் 36
வன்தொண்டன் 1
வன்பார்த்தான் 4
வன்முகவன் 1
வன்மை 1
வன்மைகள் 1
வன்னி 2
வன்னியும் 3
வன 1
வனத்து 1
வனப்பகை 9
வனப்பினால் 1
வனம் 1
வனமுலையாள் 1
வனமுலையாள்-தன்னோடு 1


வக்கிரம் (1)

வக்கிரம் இல்லாமையும் வளைகள் நில்லாமையும் – தேவா-சுந்:375/3
மேல்


வகுத்தனை (1)

வறிதே நிலையாத இ மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை நான் நிலையேன் – தேவா-சுந்:23/3
மேல்


வகுத்து (2)

வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி – தேவா-சுந்:88/3
சாதலும் பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்து தன் அருள் தந்த எம் தலைவனை மலையின் – தேவா-சுந்:593/1
மேல்


வகுளம் (1)

கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை – தேவா-சுந்:101/3
மேல்


வகை (9)

உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
கேட்டேன் கேட்பது எல்லாம் பிறவா வகை கேட்டொழிந்தேன் – தேவா-சுந்:210/2
வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே – தேவா-சுந்:414/4
அறிவினால் மிக்க அறு வகை சமயம் அவ்வவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து – தேவா-சுந்:568/1
துன்னு வார் சடை தூ மதியானை துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை – தேவா-சுந்:571/1
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை – தேவா-சுந்:593/3
அ வகை அவர் வேண்டுவதானால் அவரவர் வழி ஒழுகி நான் வந்து – தேவா-சுந்:621/2
எ வகை எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:621/4
சடசட விடு பெணை பழம் படும் இட வகை
பட வடகத்தொடு பல கலந்து உலவிய – தேவா-சுந்:737/1,2
மேல்


வகையாலே (1)

தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/1,2
மேல்


வகையினரேனும் (1)

வரிந்த வெம் சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும்
புரிந்த அ நாளே புகழ்தக்க அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகி – தேவா-சுந்:138/1,2
மேல்


வங்கங்களும் (1)

வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே – தேவா-சுந்:721/4
மேல்


வங்கத்தொடு (1)

வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:723/4
மேல்


வங்கம் (6)

வங்கம் மலி கடல் நஞ்சை வானவர்கள்தாம் உய்ய – தேவா-சுந்:528/1
வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ வஞ்சர்கள் கூடி – தேவா-சுந்:762/1
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:814/2
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:816/2
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:1016/3
தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட – தேவா-சுந்:1034/3
மேல்


வசம் (1)

விடுக்ககிற்றிலேன் வேட்கையும் சினமும் வேண்டில் ஐம்புலன் என் வசம் அல்ல – தேவா-சுந்:620/2
மேல்


வசவுணும் (1)

எரிய வசவுணும் தன்மையோ இமவான்மகள் – தேவா-சுந்:454/2
மேல்


வசுக்கள் (1)

மயக்கம் இல் புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் – தேவா-சுந்:565/2
மேல்


வஞ்ச (3)

வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:65/1
வஞ்ச நெஞ்சனை மா சழக்கனை பாவியை வழக்கிலியை – தேவா-சுந்:344/1
வாழைதான் பழுக்கும் நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு – தேவா-சுந்:622/2
மேல்


வஞ்சம் (5)

மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:63/2
வரி கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும் – தேவா-சுந்:66/3
வாசம் மல்கு குழலினார்கள் வஞ்சம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:68/2
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சுந்:134/1
வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியை – தேவா-சுந்:879/1
மேல்


வஞ்சம்கொண்டார் (1)

வஞ்சம்கொண்டார் மனம் சேரகில்லார் நறு நெய் தயிர் பால் – தேவா-சுந்:192/1
மேல்


வஞ்சர் (2)

துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று – தேவா-சுந்:656/2
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை – தேவா-சுந்:858/1
மேல்


வஞ்சர்கள் (1)

வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ வஞ்சர்கள் கூடி – தேவா-சுந்:762/1
மேல்


வஞ்சனை (3)

மறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய – தேவா-சுந்:601/1
மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல் – தேவா-சுந்:607/2
வஞ்சனை என் மனமே வைகி வான நல் நாடர் முன்னே – தேவா-சுந்:1022/2
மேல்


வஞ்சனைக்கு (1)

வடி கொள் கண் இணை மடந்தையர்-தம்-பால் மயல் அது உற்று வஞ்சனைக்கு இடம் ஆகி – தேவா-சுந்:657/1
மேல்


வஞ்சனையுள் (1)

வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே – தேவா-சுந்:64/2
மேல்


வஞ்சி (2)

வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் – தேவா-சுந்:434/1
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:891/1
மேல்


வஞ்சியாது (2)

வஞ்சியாது உரைசெய்ய வல்லவர் வல்லர் வான்_உலகு ஆளவே – தேவா-சுந்:360/4
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
மேல்


வஞ்சியும் (1)

வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:891/3
மேல்


வட்ட (3)

வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் – தேவா-சுந்:179/3
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/3
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:489/3
மேல்


வட (12)

நாளும் நன்னிலம் தென் பனையூர் வட கஞ்சனூர் – தேவா-சுந்:119/1
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:383/4
என்னே என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:384/4
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/4
ஏற்றானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:386/4
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:387/4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:388/4
எய்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:389/4
என்னானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:390/4
இருந்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:391/4
என் பொன்னை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:392/4
வந்து இழி பாலி வட கரை முல்லைவாயிலாய் மாசு இலா மணியே – தேவா-சுந்:702/3
மேல்


வட-பால் (11)

குலை ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:123/2,3
முத்தம் கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர் – தேவா-சுந்:124/2,3
செம் தண் புனல் வந்து இழி பெண்ணை வட-பால்
மந்தி பல மா நடம் ஆடும் துறையூர் – தேவா-சுந்:125/2,3
சுரும்பு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:126/2,3
நாடு ஆர வந்து எற்றி ஒர் பெண்ணை வட-பால்
மாடு ஆர்ந்தன மாளிகை சூழும் துறையூர் – தேவா-சுந்:127/2,3
மொட்டு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா துறையூர் – தேவா-சுந்:128/2,3
தாது ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர் – தேவா-சுந்:129/2,3
செய் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
மை ஆர் தடங்கண்ணியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:130/2,3
மண் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
பண் ஆர் மொழி பாவையர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:131/2,3
அச்சம் இல்லா கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:416/4
அறவே ஒழியாய் கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:420/4
மேல்


வட-பாலின் (1)

தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
மேல்


வட-பாலை (1)

கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை
ஆலக்கோயில் கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே – தேவா-சுந்:417/3,4
மேல்


வடக்கு (1)

தெளியீர் உளம் சீபர்ப்பதம் தெற்கு வடக்கு ஆக – தேவா-சுந்:797/3
மேல்


வடகத்தொடு (1)

பட வடகத்தொடு பல கலந்து உலவிய – தேவா-சுந்:737/2
மேல்


வடபேறூர் (1)

பிச்சை ஊர் திரிவான் கடவூர் வடபேறூர்
கச்சி ஊர் கச்சி சிக்கல் நெய்த்தானம் மிழலை – தேவா-சுந்:313/2,3
மேல்


வடம் (2)

வடம் எடுத்த கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் கடல்-வாய் – தேவா-சுந்:56/3
வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள் – தேவா-சுந்:175/2
மேல்


வடி (6)

வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே – தேவா-சுந்:64/2
வடி ஆர் மூ இலை வேல் வளர் கங்கை இன் மங்கையொடும் – தேவா-சுந்:279/2
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:427/1
வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் – தேவா-சுந்:434/1
வடி கொள் கண் இணை மடந்தையர்-தம்-பால் மயல் அது உற்று வஞ்சனைக்கு இடம் ஆகி – தேவா-சுந்:657/1
குழை விரவு வடி காதா கோயில் உளாயே என்ன – தேவா-சுந்:902/3
மேல்


வடிக்கின்றன (1)

வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:40/3
மேல்


வடிவிலான் (1)

வடிவிலான் திரு நாவலூரான் வனப்பகை அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:339/2
மேல்


வடிவு (2)

வாசத்தின் ஆர் மலர் கொன்றை உள்ளார் வடிவு ஆர்ந்த நீறு – தேவா-சுந்:189/1
வடிவு உடை மழு ஏந்தி மத கரி உரி போர்த்து – தேவா-சுந்:862/1
மேல்


வடிவே (1)

வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே – தேவா-சுந்:229/4
மேல்


வடுக (1)

கொடுகு வெம் சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:498/1
மேல்


வடுகர் (1)

முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:498/3
மேல்


வண் (8)

வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண் தமிழ்களே – தேவா-சுந்:309/4
நெருங்கி வண் பொழில் சூழிந்து எழில் பெற நின்ற காவிரி கோட்டிடை – தேவா-சுந்:494/2
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார் போய் – தேவா-சுந்:770/3
வான் உயர் வெம் கதிரோன் வண் தமிழ் வல்லவர்கள் – தேவா-சுந்:847/2
வான் ஆர் மதியம் பதி வண் பொழில்-வாய் – தேவா-சுந்:948/3
மடை மலி வண் கமல மலர் மேல் மட அன்னம் மன்னி – தேவா-சுந்:1001/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு வண் தேன் முரல – தேவா-சுந்:1012/3
மேல்


வண்டின் (1)

கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
மேல்


வண்டு (40)

மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே – தேவா-சுந்:24/3
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:76/4
கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை – தேவா-சுந்:97/1
அல்லியிடை பெடை வண்டு உறங்கும் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:101/4
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர்பங்கு உடையாய் – தேவா-சுந்:200/1
வண்டு ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:242/3
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே – தேவா-சுந்:259/2
களி ஆர் வண்டு அறையும் திரு காளத்தியுள் இருந்த – தேவா-சுந்:267/3
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:303/3
பாடல் வண்டு இசை ஆலும் சோலை பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால் – தேவா-சுந்:367/3
குரவம் நாற குயில் வண்டு இனம் பாட நின்று – தேவா-சுந்:380/1
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/4
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை – தேவா-சுந்:497/3
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா – தேவா-சுந்:536/1
வண்டு அலம்பும் மலர் கொன்றையன் என்றும் வாய் வெருவி தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:597/2
பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:607/3
வண்டு அலம்பும் மலர் கொன்றையினானை வாள் அரா மதி சேர் சடையானை – தேவா-சுந்:627/2
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட – தேவா-சுந்:701/1
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் செம்பொனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:714/3
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:727/4
நீல வண்டு அறை கொன்றை நேர் இழை மங்கை ஒர் திங்கள் – தேவா-சுந்:763/1
களங்கள் ஆர்தரு கழனி அளி தர களிதரு வண்டு
உளங்கள் ஆர்கலி பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி – தேவா-சுந்:778/1,2
வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:815/2
மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:819/2
சிறை ஆர் பொழில் வண்டு யாழ்செயும் கேதீச்சுரத்தானை – தேவா-சுந்:821/2
தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும் திரு சுழியல் – தேவா-சுந்:832/3
கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:866/3
பாடல் வண்டு அறையும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:882/2
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ் – தேவா-சுந்:901/3
அற இலகும் அருளான் மருள் ஆர் பொழில் வண்டு அறையும் – தேவா-சுந்:986/3
திரிதரு வண்டு பண்செய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1013/4
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய – தேவா-சுந்:1014/3
கொங்கு அணை வண்டு அரற்ற குயிலும் மயிலும் பயிலும் – தேவா-சுந்:1016/1
துன்னா மயூரம் சோலை-தொறும் ஆட தூர துணை வண்டு
தென்னா என்னும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1027/3,4
சிறை வண்டு அறையும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1036/4
மேல்


வண்டுகள் (1)

சிறை அணி வண்டுகள் சேர் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1006/4
மேல்


வண்டுகாள் (3)

வண்டுகாள் கொண்டல்காள் வார் மணல் குருகுகாள் – தேவா-சுந்:377/1
தேன் நலம் கொண்ட தேன் வண்டுகாள் கொண்டல்காள் – தேவா-சுந்:378/1
கூடும் அன்ன பெடைகாள் குயில் வண்டுகாள்
ஆடும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:381/1,2
மேல்


வண்டும் (1)

தேனும் வண்டும் மது உண்டு இன்னிசை பாடியே – தேவா-சுந்:828/3
மேல்


வண்ண (1)

செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
மேல்


வண்ணத்த (1)

பிணி வண்ணத்த வல்வினை தீர்ந்து அருளீர் பெருங்காட்டகத்தில் பெரும் பேயும் நீரும் – தேவா-சுந்:18/1
மேல்


வண்ணத்தராய் (3)

மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய் – தேவா-சுந்:18/3
மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய்
அணி வண்ணத்தராய் நிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:18/3,4
அணி வண்ணத்தராய் நிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:18/4
மேல்


வண்ணத்தின் (1)

மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய் – தேவா-சுந்:18/3
மேல்


வண்ணம் (8)

கண் உளீராய் கருத்தில் உம்மை கருதுவார்கள் காணும் வண்ணம்
மண் உளீராய் மதியம் வைத்தீர் வானநாடர் மருவி ஏத்த – தேவா-சுந்:55/2,3
நடம் எடுத்து ஒன்று ஆடி பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம்
வடம் எடுத்த கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் கடல்-வாய் – தேவா-சுந்:56/2,3
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ஙனேதான் – தேவா-சுந்:60/2
நாடும் காட்டில் அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய – தேவா-சுந்:60/3
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே – தேவா-சுந்:61/4
சிம்மாந்து சிம்புளித்து சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம்
கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவ கண்டானை கருப்பறியலூர் – தேவா-சுந்:299/1,2
நாடா வண்ணம் செரு செய்து ஆவ நாழி நிலை அருள்செய் – தேவா-சுந்:547/3
உலை அணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1023/4
மேல்


வண்ணமும் (1)

கொண்டல் என திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறும் சடை மேல் வண்ணமும் கண்குளிர – தேவா-சுந்:852/3
மேல்


வண்ணர் (3)

செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர் – தேவா-சுந்:924/2
மேல்


வண்ணன் (2)

அடிகள் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:96/4
அத்தன் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:98/4
மேல்


வண்ணா (2)

வைச்சே இடர்களை களைந்திட வல்ல மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:147/3
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/3
மேல்


வண்மையும் (1)

திருவும் வண்மையும் திண் திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு – தேவா-சுந்:665/1
மேல்


வண (1)

பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/4
மேல்


வணக்கியும் (1)

வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது – தேவா-சுந்:757/1
மேல்


வணங்க (3)

மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க
நீல நஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:196/3,4
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற – தேவா-சுந்:270/1
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/4
மேல்


வணங்கார் (1)

நாள்நாளும் மலர் இட்டு வணங்கார் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார் – தேவா-சுந்:610/2
மேல்


வணங்கி (4)

வணங்கி தொழுவார் அவர் மால் பிரமன் மற்றும் வானவர் தானவர் மா முனிவர் – தேவா-சுந்:87/1
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி – தேவா-சுந்:387/3
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் – தேவா-சுந்:829/2
தொண்டு இரைத்து வணங்கி தொழில் பூண்டு அடியார் பரவும் – தேவா-சுந்:1015/3
மேல்


வணங்கிட (1)

தேசத்து அடியவர் வந்து இரு போதும் வணங்கிட
பூசல் துடி பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:514/3,4
மேல்


வணங்குதல் (1)

வலியேயாகிலும் வணங்குதல் ஒழியேன் மாட்டேன் மறுமையை நினையேன் – தேவா-சுந்:153/3
மேல்


வணங்கும் (8)

முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர்-தம்மை – தேவா-சுந்:258/2
சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:667/4
வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமலனை அடியேற்கு எளிவந்த – தேவா-சுந்:695/2
மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி-தன் மேல் மதியாதே – தேவா-சுந்:706/1
வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே – தேவா-சுந்:721/4
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:748/3,4
வணங்கும் இடை மென்மடவார் இட்ட – தேவா-சுந்:927/3
பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும்
நண்பு உடை நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1000/3,4
மேல்


வணங்குவார்க்கு (2)

நறு மலர் பூவும் நீரும் நாள்-தொறும் வணங்குவார்க்கு
அறிவினை கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:75/3,4
முத்தினை தொழுது நாளும் முடிகளால் வணங்குவார்க்கு
அ தன்மைத்து ஆகும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:81/3,4
மேல்


வணம் (2)

ஓ வணம் ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன்தளி உளார்தாம் – தேவா-சுந்:51/1
நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் – தேவா-சுந்:857/3
மேல்


வணா (1)

செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/3
மேல்


வதையும் (1)

வதையும் செய்த மைந்தன் இடம் ஆம் – தேவா-சுந்:958/2
மேல்


வந்த (7)

அழிக்க வந்த காமவேளை அவனுடைய தாதை காண – தேவா-சுந்:53/3
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றை – தேவா-சுந்:57/1
வந்த சாயினை அறிவரோ தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:335/2
வந்த காலன்-தன் ஆருயிர்-அதனை வவ்வினாய்க்கு உன்தன் வன்மை கண்டு அடியேன் – தேவா-சுந்:560/2
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை உருள – தேவா-சுந்:691/1
கட்டுவான் வந்த காலனை மாள காலினால் ஆருயிர் செகுத்த – தேவா-சுந்:706/2
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய் வழி முதலே – தேவா-சுந்:713/1
மேல்


வந்தாய் (1)

வந்தாய் போய் அறியாய் மனமே புகுந்து நின்ற – தேவா-சுந்:209/2
மேல்


வந்தாலும் (1)

கலக்குவான் வந்தாலும் கடும் துயர் வாராமே – தேவா-சுந்:296/3
மேல்


வந்திப்பார்-தம் (1)

வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:683/4
மேல்


வந்து (96)

நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:30/2
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் – தேவா-சுந்:43/1
வலையம் வைத்த கூற்றம் மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு – தேவா-சுந்:49/1
அரித்து நம் மேல் ஐவர் வந்து இங்கு ஆறலைப்பான்-பொருட்டால் – தேவா-சுந்:66/1
வந்து நம்மோடு உள் அளாவி வான நெறி காட்டும் – தேவா-சுந்:70/2
அகத்து அடிமை செயும் அந்தணன்தான் அரிசில் புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான் – தேவா-சுந்:88/1
செம் தண் புனல் வந்து இழி பெண்ணை வட-பால் – தேவா-சுந்:125/2
நாடு ஆர வந்து எற்றி ஒர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:127/2
குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான் – தேவா-சுந்:142/1
உய்வான் எண்ணி வந்து உம் அடி அடைந்தேன் உகவீராகிலும் உகப்பன் – தேவா-சுந்:152/3
வாய் ஆடி மா மறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து
தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய் – தேவா-சுந்:174/1,2
வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள் – தேவா-சுந்:175/2
வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே – தேவா-சுந்:211/2
சூடு-மின் தொண்டருள்ளீர் உமரோடு எமர் சூழ வந்து
வாடும் இ வாழ்க்கை-தன்னை வருந்தாமல் திருந்த சென்று – தேவா-சுந்:221/2,3
அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி – தேவா-சுந்:230/2
தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ – தேவா-சுந்:240/2
நாளார் வந்து அணுகி நலியா முனம் நின்-தனக்கே – தேவா-சுந்:244/1
ஆளா வந்து அடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள் நீ – தேவா-சுந்:244/2
முடியால் வந்து இறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:254/2
வந்து அணவும் மதி சேர் சடை மா முதுகுன்று உடையாய் – தேவா-சுந்:255/2
முரசார் வந்து அதிர முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:256/2
முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர்-தம்மை – தேவா-சுந்:258/2
செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே – தேவா-சுந்:264/2
எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான் – தேவா-சுந்:267/2
கடிதாய் கடற்காற்று வந்து எற்ற கரை மேல் – தேவா-சுந்:320/1
இட்டிது ஆக வந்து உரை-மினோ நமக்கு இசையுமா நினைத்து ஏத்துவீர் – தேவா-சுந்:331/1
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து
அட்டி ஆளவும்கிற்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:331/3,4
ஒன்றினீர்கள் வந்து உரை-மினோ நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:332/1
வந்து சொல்லு-மின் மூடனேனுக்கு வல்லவா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:335/1
அங்கம் ஓதியோர் ஆறைமேற்றளி-நின்றும் போந்து வந்து இன்னம்பர் – தேவா-சுந்:351/1
முன்னை செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே – தேவா-சுந்:357/1
சலம் எலாம் ஒழி நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர் – தேவா-சுந்:358/2
வந்து நிற்கும் இது என்-கொலோ பலி மாற்றமாட்டோம் இடகிலோம் – தேவா-சுந்:364/2
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நட-மினோ – தேவா-சுந்:365/2
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/4
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:427/1
வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் – தேவா-சுந்:434/1
தூசு உடைய அகல் அல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடாய் வந்து
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/1,2
திருத்தி திருத்தி வந்து என் சிந்தை இடம்கொள் கயிலாயா – தேவா-சுந்:485/3
பெற்றலும் பிறந்தேன் இனி பிறவாத தன்மை வந்து எய்தினேன் – தேவா-சுந்:488/2
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:490/3
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:493/3
தேசத்து அடியவர் வந்து இரு போதும் வணங்கிட – தேவா-சுந்:514/3
சங்கு அலக்கும் தடம் கடல்-வாய் விடம் சுட வந்து அமரர் தொழ – தேவா-சுந்:520/1
இங்ஙனம் வந்து இடர் பிறவி பிறந்து அயர்வேன் அயராமே – தேவா-சுந்:521/1
அங்ஙனம் வந்து எனை ஆண்ட அருமருந்து என் ஆரமுதை – தேவா-சுந்:521/2
மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே – தேவா-சுந்:531/2
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:552/4
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:558/4
ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும் – தேவா-சுந்:559/1
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:560/4
ஆர்ந்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசை கரந்த – தேவா-சுந்:566/3
வந்து என் உள்ளம் புகும் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:583/4
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவினான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:586/3,4
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி – தேவா-சுந்:620/3
அ வகை அவர் வேண்டுவதானால் அவரவர் வழி ஒழுகி நான் வந்து
செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/2,3
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆள் அது ஆக என்று ஆவணம் காட்டி – தேவா-சுந்:639/1
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி – தேவா-சுந்:665/3
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/3
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்க என அருளி – தேவா-சுந்:669/1
மறையவன் ஒரு மாணி வந்து அடைய வாரமாய் அவன் ஆருயிர் நிறுத்த – தேவா-சுந்:672/1
அரண்டு என் மேல் வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:673/4
அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:674/4
ஆர்வத்தோடும் வந்து அடி இணை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:675/4
மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/4
வல் அடியார் மனத்து இச்சை உளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:678/4
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:679/4
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:680/4
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/4
வாடி நீ வாளா வருந்தல் என்பானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:682/4
வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:683/4
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/4
வரையின்பாவை_மணாளன் எம்மானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:685/4
மான்று சென்று அணையாதவன்-தன்னை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:686/4
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:687/2
அ நலம் கமல தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் – தேவா-சுந்:701/2
வந்து இழி பாலி வட கரை முல்லைவாயிலாய் மாசு இலா மணியே – தேவா-சுந்:702/3
மண்ணின் மேல் மயங்கி கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே – தேவா-சுந்:710/1
இழிந்து இழிந்து அருவிகள் கடும் புனல் ஈண்டி எண்திசையோர்களும் ஆட வந்து இங்கே – தேவா-சுந்:755/2
எங்கே போவேனாயிடினும் அங்கே வந்து என் மனத்தீராய் – தேவா-சுந்:782/1
அழைத்து ஓடியும் பிளிறீ அவை அலமந்து வந்து எய்த்து – தேவா-சுந்:803/3
கன்னி கிளி வந்து கவை கோலி கதிர் கொய்ய – தேவா-சுந்:804/2
அப்போது வந்து உண்டீர்களுக்கு அழையாது முன் இருந்தேன் – தேவா-சுந்:808/1
எப்போதும் வந்து உண்டால் எமை எமர்கள் சுளியாரோ – தேவா-சுந்:808/2
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் – தேவா-சுந்:829/2
மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் – தேவா-சுந்:893/3
வந்து நாடகம் வான நாடியர் ஆட மால் அயன் ஏத்த நாள்-தொறும் – தேவா-சுந்:895/3
வழிப்போவார்-தம்மோடும் வந்து உடன்கூடிய மாணி நீ – தேவா-சுந்:934/1
வந்து எம்பெருமான் முறையோ என்றால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:968/4
எனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து – தேவா-சுந்:1017/3
அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:1023/3
விரவிய வேத ஒலி விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப – தேவா-சுந்:1024/2
வரம் மலி வாணன் வந்து வழிதந்து எனக்கு ஏறுவது ஓர் – தேவா-சுந்:1024/3
வந்து எதிர்கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து – தேவா-சுந்:1025/2
மேல்


வந்தும் (1)

வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:973/4
மேல்


வந்துவந்து (1)

வந்துவந்து இழி வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:587/4
மேல்


வம்-மின் (1)

வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்-மின் மனத்தீரே – தேவா-சுந்:62/3
மேல்


வம்பனை (1)

வம்பனை எ உயிர்க்கும் வைப்பினை ஒப்பு அமரா – தேவா-சுந்:848/2
மேல்


வம்பு (5)

வம்பு அமரும் குழலாள் ஒருபாகம் அமர்ந்தவனே – தேவா-சுந்:205/2
வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:250/3
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
வம்பு உலாம் குழலாளை பாகம் அமர்ந்து காவிரி கோட்டிடை – தேவா-சுந்:495/2
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
மேல்


வயப்பட்டு (1)

ஏழை மானுட இன்பினை நோக்கி இளையவர் வயப்பட்டு இருந்து இன்னம் – தேவா-சுந்:622/1
மேல்


வயல் (53)

ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:29/2
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனை – தேவா-சுந்:31/1
வாயினால் கூறி மனத்தினால் நினைவான் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:145/3
நண்டு ஆடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:154/4
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே – தேவா-சுந்:190/4
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:200/3
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:207/3
மறையார்-தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:258/3
கரை ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:274/3
கரும்பு ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:277/3
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய – தேவா-சுந்:298/1
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் – தேவா-சுந்:355/3
அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை – தேவா-சுந்:371/1
அருகு பாயும் வயல் அம் தண் ஆரூரரை – தேவா-சுந்:372/2
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த – தேவா-சுந்:419/3
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை – தேவா-சுந்:424/1
மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன் – தேவா-சுந்:424/3
வெம் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:433/4
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
அல்லல் இல் அருளே புரிவானை ஆரும் நீர் வயல் சூழ் புனல் நீடூர் – தேவா-சுந்:572/3
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/4
மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:581/4
வாளை பாய் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:589/4
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த – தேவா-சுந்:592/3
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:603/4
குரக்கு இனம் குதிகொண்டு உகள் வயல் சூழ் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:643/4
செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:661/4
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/3
பார் ஊர் பல புடை சூழ் வள வயல் நாவலர் வேந்தன் – தேவா-சுந்:728/1
மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது – தேவா-சுந்:736/3
மந்த முழவம் இயம்பும் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:750/3
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன் – தேவா-சுந்:811/1
செந்நெல் வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:844/3
செல்வ வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:845/3
கண்டு தொழப்பெறுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:852/4
காதல் உற தொழுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:853/4
கானிடை மாநடன் என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:854/4
கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/4
கல்லவட பரிசும் காணுவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:856/4
கண்நுதலை கனியை காண்பதும் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:857/4
காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:858/4
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/4
காதனை நாய் அடியேன் எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:860/4
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர – தேவா-சுந்:890/1
செங்கயல் பாயும் வயல் திரு ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:991/4
கோல மலர் குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில் – தேவா-சுந்:1008/3
செங்கயல் பாய் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1012/4
தெண் திரை தண் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1015/4
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:1016/3
மேல்


வயலில் (1)

வையகம் முற்றும் மா மழை மறந்து வயலில் நீர் இலை மா நிலம் தருகோம் – தேவா-சுந்:561/1
மேல்


வயிர (1)

முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/3
மேல்


வயிரத்தை (1)

முத்தனை மா மணி-தன்னை வயிரத்தை மூர்க்கனேன் – தேவா-சுந்:518/3
மேல்


வயிரம் (2)

சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி – தேவா-சுந்:552/3
கண்ணின் ஒளி கனக சுனை வயிரம் அவை சொரிய – தேவா-சுந்:798/2
மேல்


வயிரமே (1)

பொன்னே மணிதானே வயிரமே பொருது உந்தி – தேவா-சுந்:3/2
மேல்


வயிறுதாரி (1)

கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறுதாரி
அம் கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அடியாளால் – தேவா-சுந்:43/2,3
மேல்


வர (1)

வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி – தேவா-சுந்:387/3
மேல்


வரங்கள் (1)

வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர்-தம் வாலிய புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:632/1
மேல்


வரம் (4)

விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன் மறவா வரம் பெற்றேன் – தேவா-சுந்:594/1
வரம் முன்னம் அருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:876/3
வரம் மலி வாணன் வந்து வழிதந்து எனக்கு ஏறுவது ஓர் – தேவா-சுந்:1024/3
மேல்


வரவு (1)

இறந்துபோக்கு இல்லை வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே – தேவா-சுந்:697/4
மேல்


வரன்றி (2)

விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி
அழிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:89/3,4
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:552/3,4
மேல்


வரன்றியும் (1)

புகழும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நல் மலர் உந்தி – தேவா-சுந்:756/1
மேல்


வரால் (4)

நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர் – தேவா-சுந்:570/3
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு அரிய சோதியை வரி வரால் உகளும் – தேவா-சுந்:655/3
பரு வரால் குதிகொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:777/3
வாளை பாய மலங்கு இளம் கயல் வரி வரால் உகளும் கழனியுள் – தேவா-சுந்:885/1
மேல்


வரி (15)

வரி கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும் – தேவா-சுந்:66/3
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை – தேவா-சுந்:497/3
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் – தேவா-சுந்:505/1
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:626/3
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு அரிய சோதியை வரி வரால் உகளும் – தேவா-சுந்:655/3
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட – தேவா-சுந்:701/1
வரி புரி பாட நின்று ஆடும் எம்மான் இடம் – தேவா-சுந்:735/2
புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து – தேவா-சுந்:735/3
கடு வரி மா கடலுள் காய்ந்தவன் தாதையை முன் – தேவா-சுந்:846/1
வாளை பாய மலங்கு இளம் கயல் வரி வரால் உகளும் கழனியுள் – தேவா-சுந்:885/1
சரம் கோலை வாங்கி வரி சிலை நாணியில் சந்தித்து – தேவா-சுந்:937/2
வரி அர நாண் அது ஆக மா மேரு வில் அது ஆக – தேவா-சுந்:1013/1
மேல்


வரிஞ்சையர் (1)

கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
மேல்


வரிஞ்சையர்_கோன் (1)

கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
மேல்


வரிதரு (1)

வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும் – தேவா-சுந்:453/2
மேல்


வரிந்த (1)

வரிந்த வெம் சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும் – தேவா-சுந்:138/1
மேல்


வரிய (1)

வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:815/2
மேல்


வரியானை (1)

வரியானை வருத்தம் களைவானை மறையானை குறை மா மதி சூடற்கு – தேவா-சுந்:609/2
மேல்


வரிவளையாள் (1)

மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் – தேவா-சுந்:403/1
மேல்


வரு (12)

மலைக்கு மகள் அஞ்ச மத கரியை உரித்தீர் எரித்தீர் வரு முப்புரங்கள் – தேவா-சுந்:83/1
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும் – தேவா-சுந்:284/1
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
மாதினை மதித்து அங்கு ஒர்பால் கொண்ட மணியை வரு புனல் சடையிடை வைத்த எம்மானை – தேவா-சுந்:593/2
அருந்தும் நம்பி அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி பொருளால் வரு நட்டம் – தேவா-சுந்:647/2
கொதியினால் வரு காளி-தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே – தேவா-சுந்:712/1
மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது – தேவா-சுந்:736/3
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:815/3
கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்வி – தேவா-சுந்:840/1
மிண்டாடிய அது செய்ததுவானால் வரு விதியே – தேவா-சுந்:840/4
மான் திகழும் சங்கிலியை தந்து வரு பயன்கள் எல்லாம் – தேவா-சுந்:911/1
மேல்


வருக்கை (1)

வாழை இன் கனிதானும் மது விம்மி வருக்கை இன் சுளையும் – தேவா-சுந்:779/1
மேல்


வருடியும் (1)

வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது – தேவா-சுந்:757/1
மேல்


வருணர் (1)

இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள் – தேவா-சுந்:565/1
மேல்


வருத்த (1)

வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம் – தேவா-சுந்:647/1
மேல்


வருத்தம் (3)

மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:201/2
பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:204/2
வரியானை வருத்தம் களைவானை மறையானை குறை மா மதி சூடற்கு – தேவா-சுந்:609/2
மேல்


வருத்தி (1)

வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:967/4
மேல்


வருந்தல் (1)

வாடி நீ வாளா வருந்தல் என்பானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:682/4
மேல்


வருந்தல்செய்யாது (1)

வாடி இருந்து வருந்தல்செய்யாது அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:25/4
மேல்


வருந்தலுற்றேன் (2)

மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன் மறவா வரம் பெற்றேன் – தேவா-சுந்:594/1
வரும் பெரும் வல்வினை என்று இருந்து எண்ணி வருந்தலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:598/1
மேல்


வருந்தவே (1)

திண்ணென என் உடல் விருத்தி தாரீரேயாகில் திரு மேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளை – தேவா-சுந்:475/3
மேல்


வருந்தாமல் (1)

வாடும் இ வாழ்க்கை-தன்னை வருந்தாமல் திருந்த சென்று – தேவா-சுந்:221/3
மேல்


வருந்தாமே (1)

வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:199/2,3
மேல்


வருந்தாமை (1)

நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறை மறையோர் உறை வீழிமிழலை-தனில் நித்தல் – தேவா-சுந்:473/3
மேல்


வருந்தி (5)

வாரி-கண் சென்று வளைக்கப்பட்டு வருந்தி போய் – தேவா-சுந்:436/3
மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:555/1
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:557/3
வல்லை நம்பி அடியார்க்கு அருள்செய்ய வருந்தி நம்பி உனக்கு ஆட்செயகில்லார் – தேவா-சுந்:652/2
வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:973/4
மேல்


வருந்தும் (1)

வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான் – தேவா-சுந்:27/3
மேல்


வரும் (21)

கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:22/1
கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:23/1
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:25/1
ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:27/1
சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:28/1
வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி – தேவா-சுந்:88/3
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:159/3
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
வரும் காலன் உயிரை மடிய திரு மெல்விரலால் – தேவா-சுந்:277/1
வரும் பழி வாராமே தவிர்த்து எனை ஆட்கொண்டாய் – தேவா-சுந்:293/1
செற்று ஒருவரை செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே – தேவா-சுந்:354/2
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
வன் சயமாய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய – தேவா-சுந்:524/1
வரும் பெரும் வல்வினை என்று இருந்து எண்ணி வருந்தலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:598/1
செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல் – தேவா-சுந்:607/1
நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன் – தேவா-சுந்:615/1
கும்ப மா கரியின் உரியானை கோவின் மேல் வரும் கோவினை எங்கள் – தேவா-சுந்:688/3
சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை – தேவா-சுந்:690/2
வரும் கலமும் பல பேணுதல் கரும் கடல் – தேவா-சுந்:739/1
மலை சாரலும் பொழில் சாரலும் புறமே வரும் இனங்கள் – தேவா-சுந்:803/1
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும்
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/1,2
மேல்


வரும்போது (1)

பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே – தேவா-சுந்:362/2
மேல்


வருமேலும் (1)

சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட – தேவா-சுந்:295/3
மேல்


வருவ (1)

வருவ மாய கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:80/2
மேல்


வருவதும் (1)

மருவனார் மருவார்-பால் வருவதும் இல்லை நம் அடிகள் – தேவா-சுந்:771/2
மேல்


வருவர் (1)

பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால் – தேவா-சுந்:776/2
மேல்


வருவார் (1)

வருவார் விடை மேல் மாதொடு மகிழ்ந்து பூத படை சூழ – தேவா-சுந்:540/2
மேல்


வருவான் (2)

உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திரலோகன் – தேவா-சுந்:740/2
வானாய் அதன் மதியாய் விதி வருவான் இடம் பொழிலின் – தேவா-சுந்:832/2
மேல்


வருவானை (1)

விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை – தேவா-சுந்:872/1
மேல்


வருவீர்காள் (1)

மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்-மின்கள் – தேவா-சுந்:62/1,2
மேல்


வருவேன் (1)

மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே – தேவா-சுந்:1023/2
மேல்


வரூடை (1)

கலை அமைத்த காம செற்ற குரோத லோப மத வரூடை
உலை அமைத்து இங்கு ஒன்றமாட்டேன் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:49/3,4
மேல்


வரை (23)

பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி – தேவா-சுந்:20/1
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் – தேவா-சுந்:20/3
சந்தி தட மால் வரை போல் திரைகள் தணியாது இடறும் கடல் அம் கரை மேல் – தேவா-சுந்:34/3
மழலை ஏற்று மணாளன் இடம் தட மால் வரை
கிழவன் கீழைவழி பழையாறு கிழையமும் – தேவா-சுந்:116/2,3
தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற – தேவா-சுந்:388/2
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:427/1
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
வல் நாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி – தேவா-சுந்:523/1
கோலம் மால் வரை மத்து என நாட்டி கோள் அரவு சுற்றி கடைந்து எழுந்த – தேவா-சுந்:564/1
எறியும் மா கடல் இலங்கையர்_கோனை துலங்க மால் வரை கீழ் அடர்த்திடடு – தேவா-சுந்:568/2
துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சுந்:585/2
காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் – தேவா-சுந்:589/1
முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் போன்ற வென்றி மால் வரை அரி அம்பா – தேவா-சுந்:635/3
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை – தேவா-சுந்:689/3
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:722/4
பண்டு அங்கு இலங்கையர்_கோனை பரு வரை கீழ் அடர்த்திட்ட – தேவா-சுந்:747/3
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க வரை அடர்த்து – தேவா-சுந்:800/3
மற கொள் அரக்கன் வரை தோள் வரையால் – தேவா-சுந்:946/1
கரு வரை போல் அரக்கன் கயிலை மலை கீழ் கதற – தேவா-சுந்:1004/1
வரை தரு மா மணியும் வரை சந்து அகிலோடும் உந்தி – தேவா-சுந்:1010/3
வரை தரு மா மணியும் வரை சந்து அகிலோடும் உந்தி – தேவா-சுந்:1010/3
வரை கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டானால் மனை-தோறும் – தேவா-சுந்:1028/1
மேல்


வரைகள் (1)

வரைகள் போல் திரள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:343/2
மேல்


வரையால் (1)

மற கொள் அரக்கன் வரை தோள் வரையால்
இற கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம் – தேவா-சுந்:946/1,2
மேல்


வரையின் (2)

வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே – தேவா-சுந்:414/4
வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது – தேவா-சுந்:757/1
மேல்


வரையின்பாவை (1)

வரையின்பாவை_மணாளன் எம்மானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:685/4
மேல்


வரையின்பாவை_மணாளன் (1)

வரையின்பாவை_மணாளன் எம்மானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:685/4
மேல்


வரையின்மடமகள் (1)

வரையின்மடமகள்_கேள்வன் வானவர் தானவர்க்கு எல்லாம் – தேவா-சுந்:740/3
மேல்


வரையின்மடமகள்_கேள்வன் (1)

வரையின்மடமகள்_கேள்வன் வானவர் தானவர்க்கு எல்லாம் – தேவா-சுந்:740/3
மேல்


வரையை (2)

கற்பகத்தினை கனக மால் வரையை காம கோபனை கண்நுதலானை – தேவா-சுந்:693/1
பற்றி வரையை எடுத்த அரக்கன் – தேவா-சுந்:931/1
மேல்


வல் (10)

கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:23/1
மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
அடர்த்தாய் வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய – தேவா-சுந்:236/3
மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர் – தேவா-சுந்:388/1
வல் நாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி – தேவா-சுந்:523/1
கொல்லை வல் அரவம் அசைத்தானை கோலம் ஆர் கரியின் உரியானை – தேவா-சுந்:579/2
ஒன்றினான்-தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெட சீறும் – தேவா-சுந்:639/3
வல் அடியார் மனத்து இச்சை உளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:678/4
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/4
மங்க திரு விரலால் அடர்த்தான் வல் அரக்கனையும் – தேவா-சுந்:992/3
மேல்


வல்ல (14)

படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே – தேவா-சுந்:21/3
வைச்சே இடர்களை களைந்திட வல்ல மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:147/3
பாட வல்ல பரமன் அடியார்க்கு அடிமை வழுவா – தேவா-சுந்:187/2
நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படும் ஆறு சொல்லி – தேவா-சுந்:187/3
வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே – தேவா-சுந்:211/2
எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான் – தேவா-சுந்:267/2
தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல
எங்களூர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:315/3,4
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா – தேவா-சுந்:530/1
சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:559/3
நல் தமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கரையன் நாளைப்போவானும் – தேவா-சுந்:563/1
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார் போய் – தேவா-சுந்:770/3
என்ன வல்ல பெருமானே இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:910/3
காணாத கண்கள் காட்ட வல்ல கறை_கண்டனே – தேவா-சுந்:940/4
மேல்


வல்லது (1)

வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று – தேவா-சுந்:45/1
மேல்


வல்லர் (1)

வஞ்சியாது உரைசெய்ய வல்லவர் வல்லர் வான்_உலகு ஆளவே – தேவா-சுந்:360/4
மேல்


வல்லவர் (3)

சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர்
அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:350/3,4
வஞ்சியாது உரைசெய்ய வல்லவர் வல்லர் வான்_உலகு ஆளவே – தேவா-சுந்:360/4
அன்பினால் சொன்ன அரும் தமிழ் ஐந்தோடு ஐந்தும் வல்லவர் அருவினை இலரே – தேவா-சுந்:569/4
மேல்


வல்லவர்கள் (2)

வான் உயர் வெம் கதிரோன் வண் தமிழ் வல்லவர்கள்
ஏழ்இசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர் புக்கு – தேவா-சுந்:847/2,3
ஆரூரன் சொல் இவை வல்லவர்கள்
ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே – தேவா-சுந்:953/3,4
மேல்


வல்லவர்தாம் (1)

பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே – தேவா-சுந்:559/4
மேல்


வல்லவன் (1)

நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன் இடம் – தேவா-சுந்:733/2
மேல்


வல்லவா (2)

வந்து சொல்லு-மின் மூடனேனுக்கு வல்லவா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:335/1
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:491/4
மேல்


வல்லாய் (2)

முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய்
விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:430/3,4
நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சுந்:431/2
மேல்


வல்லார் (46)

ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார்
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/3,4
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே – தேவா-சுந்:41/4
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய – தேவா-சுந்:61/1
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே – தேவா-சுந்:61/4
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே – தேவா-சுந்:72/4
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே – தேவா-சுந்:82/3,4
பாடும் இடத்து அடியான் புகழ் ஊரன் உரைத்த இ மாலைகள் பத்தும் வல்லார்
கூடும் இடம் சிவலோகன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:103/3,4
பொய்யா தமிழ் ஊரன் உரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்கள் தவ நெறிதானே – தேவா-சுந்:133/3,4
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே – தேவா-சுந்:187/4
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார் கழல் பேண வல்லார்
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார் அடி போற்றி இசைப்ப – தேவா-சுந்:196/1,2
உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய் – தேவா-சுந்:198/3
நெல் இட ஆட்கள் வேண்டி நினைந்து ஏந்திய பத்தும் வல்லார்
அல்லல் களைந்து உலகின் அண்டர் வான்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:208/3,4
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சுந்:218/4
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும் – தேவா-சுந்:228/3
வழுவா மாலை வல்லார் வானோர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:238/4
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:248/4
விலை ஆர் மாலை வல்லார் வியல் மூஉலகு ஆள்பவரே – தேவா-சுந்:278/4
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:288/4
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார்
சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:329/3,4
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார்
வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே – தேவா-சுந்:414/3,4
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே – தேவா-சுந்:424/4
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே – தேவா-சுந்:434/4
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அரும் தமிழ்கள் இவை வல்லார் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:477/4
மடியாது கற்று இவை ஏத்த வல்லார் வினை மாய்ந்து போய் – தேவா-சுந்:517/3
ஊர்ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே – தேவா-சுந்:529/4
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே – தேவா-சுந்:580/4
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/4
ஆரூரன் அடி நாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:613/4
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/4
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/4
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சுந்:687/3
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசி – தேவா-சுந்:703/1
சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே – தேவா-சுந்:750/4
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார் போய் – தேவா-சுந்:770/3
பாவின் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:801/4
அல்லல் அவை தீர சொன தமிழ் மாலைகள் வல்லார்
ஒல்லை செல உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே – தேவா-சுந்:811/3,4
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே – தேவா-சுந்:833/4
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார்
பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே – தேவா-சுந்:851/3,4
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/3
ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:882/4
ஆறு சூட வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:883/4
ஆளும் ஆறு வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:885/4
பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே – தேவா-சுந்:901/4
பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே – தேவா-சுந்:1005/4
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:1016/4
மேல்


வல்லார்-தங்கள் (1)

உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார்-தங்கள் உச்சியாய் – தேவா-சுந்:936/1
மேல்


வல்லார்-தம் (1)

பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:871/4
மேல்


வல்லார்க்கு (6)

பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/4
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம் சிவலோகம் அதே – தேவா-சுந்:258/4
குடி ஆக பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை குற்றமே – தேவா-சுந்:517/4
சிறந்த மாலைகள் அஞ்சினொடுஅஞ்சும் சிந்தையுள் உருகி செப்ப வல்லார்க்கு
இறந்துபோக்கு இல்லை வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே – தேவா-சுந்:697/3,4
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா வல்வினைதானே – தேவா-சுந்:912/4
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:942/4
மேல்


வல்லார்கள் (5)

உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே – தேவா-சுந்:623/3,4
உரைதரு மாலை ஓர்அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள்
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே – தேவா-சுந்:708/3,4
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும் அறுப்பாரே – தேவா-சுந்:718/4
ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:763/4
எண்ணும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:766/4
மேல்


வல்லான் (3)

சிந்தைசெயும் திறம் வல்லான் திரு மருவும் திரள் தோளான் – தேவா-சுந்:750/2
தெரியும் மறை வல்லான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:815/4
உய்ய அருள்செய்ய வல்லான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:904/4
மேல்


வல்லானே (2)

முப்புரங்களை தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள்செய்ய வல்லானே
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:711/2,3
வெந்த வெண் பொடி பூச வல்லானே வேடனாய் விசயற்கு அருள்புரிந்த – தேவா-சுந்:713/2
மேல்


வல்லானை (19)

பன்னு நான்மறை பாட வல்லானை பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை – தேவா-சுந்:571/2
பாடு மா மறை பாட வல்லானை பைம் பொழில் குயில் கூவிட மாடே – தேவா-சுந்:573/2
அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன் – தேவா-சுந்:581/3
படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:582/1
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை – தேவா-சுந்:583/1
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை
அந்தம் ஆதி அறிதற்கு அரியானை ஆறு அலைத்த சடையானை அம்மானை – தேவா-சுந்:583/1,2
தடம் கையால் மலர் தூய் தொழுவாரை தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை
படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை – தேவா-சுந்:584/1,2
எந்தையை எந்தை தந்தை பிரானை ஏதம் ஆய இடர் தீர்க்க வல்லானை
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:587/1,2
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை – தேவா-சுந்:588/2
திருந்த நான்மறை பாட வல்லானை தேவர்க்கும் தெரிதற்கு அரியானை – தேவா-சுந்:590/1
பொருந்த மால் விடை ஏற வல்லானை பூதிப்பை புலி தோல் உடையானை – தேவா-சுந்:590/2
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை அரு மறை அவை அங்கம் வல்லானை – தேவா-சுந்:628/2
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை அரு மறை அவை அங்கம் வல்லானை
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:628/2,3
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன்-தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:630/1,2
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை பெரிய எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:634/1
மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/4
சிந்தித்தற்கு எளிதாய் திரு பாதம் சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை
வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:683/3,4
பரசுவார் வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை
குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை – தேவா-சுந்:689/2,3
இகழும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை – தேவா-சுந்:756/4
மேல்


வல்லிரே (1)

இரவும் இ மனை அறிதிரே இங்கே நடந்து போகவும் வல்லிரே
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:366/2,3
மேல்


வல்லிரோ (3)

செந்தமிழ் திறம் வல்லிரோ செம் கண் அரவம் முன்கையில் ஆடவே – தேவா-சுந்:364/1
அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:366/4
ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:367/4
மேல்


வல்லீர் (1)

பூதம் பாட புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர்
நீதி ஆக எழில் ஓசை நித்தர் ஆகி சித்தர் சூழ – தேவா-சுந்:58/2,3
மேல்


வல்லீர்களே (10)

உருகும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:372/4
உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:373/4
ஊழும் மாறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:374/4
உக்கிரம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:375/4
முலைகள் பீர் கொண்டதும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:376/4
உண்ட ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:377/4
ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:378/4
முற்றும் மற்று இன்மையும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:379/4
உருகி நாடுமதும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:380/4
ஊடும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:381/4
மேல்


வல்லீராய் (1)

மறி ஏறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர் – தேவா-சுந்:476/1
மேல்


வல்லேன் (3)

அஞ்சாதே உமக்கு ஆட்செய வல்லேன் யாதினுக்கு ஆசைப்படுகேன் – தேவா-சுந்:148/1
குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன்
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/3,4
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/3
மேல்


வல்லேன்அல்லேன் (1)

வல்லேன்அல்லேன் பொன் அடி பரவ மாட்டேன் மறுமையை நினைய – தேவா-சுந்:149/3
மேல்


வல்லை (1)

வல்லை நம்பி அடியார்க்கு அருள்செய்ய வருந்தி நம்பி உனக்கு ஆட்செயகில்லார் – தேவா-சுந்:652/2
மேல்


வல்வார் (1)

அரங்கில் ஆட வல்வார் அவரே அழகியரே – தேவா-சுந்:888/4
மேல்


வல்வானை (1)

கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
மேல்


வல்வினை (8)

பிணி வண்ணத்த வல்வினை தீர்ந்து அருளீர் பெருங்காட்டகத்தில் பெரும் பேயும் நீரும் – தேவா-சுந்:18/1
மலம் எலாம் அறும் இம்மையே மறுமைக்கும் வல்வினை சார்கிலா – தேவா-சுந்:358/1
மற்று ஏதும் வேண்டா வல்வினை ஆயின மாய்ந்து அற – தேவா-சுந்:516/2
வரும் பெரும் வல்வினை என்று இருந்து எண்ணி வருந்தலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:598/1
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை – தேவா-சுந்:683/1
வலம்கொள்வார் அவர்-தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து – தேவா-சுந்:769/1
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன் – தேவா-சுந்:842/2
வாழ்வை உகந்த நெஞ்சே மடவார்-தங்கள் வல்வினை பட்டு – தேவா-சுந்:1020/1
மேல்


வல்வினைக்கு (3)

மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:555/1
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:557/3
அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:674/4
மேல்


வல்வினைகள் (4)

பறையாத வல்வினைகள் பறைந்து ஒழிய பல் நாளும் பாடி ஆடி – தேவா-சுந்:306/1
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை – தேவா-சுந்:577/3
பண்டை வல்வினைகள் கெடுப்பானை பாகம் மா மதி ஆயவன்-தன்னை – தேவா-சுந்:578/3
முளை வளர் இள மதி உடையவன் முன் செய்த வல்வினைகள்
களை களைந்து எனை ஆளலுறு கண்டன் இடம் செந்நெல் – தேவா-சுந்:725/1,2
மேல்


வல்வினைதானே (1)

ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா வல்வினைதானே – தேவா-சுந்:912/4
மேல்


வல்வினையுள் (1)

வாழைதான் பழுக்கும் நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு – தேவா-சுந்:622/2
மேல்


வலங்கை (1)

வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல் – தேவா-சுந்:696/3
மேல்


வலஞ்சுழி (2)

மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணன் வலஞ்சுழி
பை கொள் வாள் அரவு ஆட்டி திரியும் பரமன் ஊர் – தேவா-சுந்:121/1,2
மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த – தேவா-சுந்:314/3
மேல்


வலம் (2)

கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும் – தேவா-சுந்:687/1
வலம் கிளர் மா தவம் செய் மலைமங்கை ஒர்பங்கினனாய் – தேவா-சுந்:996/1
மேல்


வலம்கொள்வார் (1)

வலம்கொள்வார் அவர்-தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து – தேவா-சுந்:769/1
மேல்


வலம்செய்து (2)

துன்று மலர் இட்டு சூழும் வலம்செய்து
தென்றல் மணம் கமழும் தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:843/2,3
வானை மதித்த அமரர் வலம்செய்து எனை ஏற வைக்க – தேவா-சுந்:1018/3
மேல்


வலம்செயும் (2)

முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரே – தேவா-சுந்:444/4
முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரை – தேவா-சுந்:445/1
மேல்


வலம்புரத்தினை (1)

இரும் குல பிறப்பர்-தம் இடம் வலம்புரத்தினை
அரும் குலத்து அரும் தமிழ் ஊரன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:739/2,3
மேல்


வலம்புரமே (10)

மனக்கு இனியவன்-தனது இடம் வலம்புரமே – தேவா-சுந்:729/4
இரவு எரிஆடி-தன் இடம் வலம்புரமே – தேவா-சுந்:730/4
ஏறு அணி அடிகள்-தம் இடம் வலம்புரமே – தேவா-சுந்:731/4
எங்களது அடிகள் நல் இடம் வலம்புரமே – தேவா-சுந்:732/4
இடு மணல் அடைகரை இடம் வலம்புரமே – தேவா-சுந்:733/4
இரும் கடல் அணைகரை இடம் வலம்புரமே – தேவா-சுந்:734/4
எரி எரிஆடி-தன் இடம் வலம்புரமே – தேவா-சுந்:735/4
ஏறு உடை அடிகள்-தம் இடம் வலம்புரமே – தேவா-சுந்:736/4
இடிகரை மணல் அடை இடம் வலம்புரமே – தேவா-சுந்:737/4
எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே – தேவா-சுந்:738/4
மேல்


வலம்புரி (5)

மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:32/3
மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:35/3
உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:37/3
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:40/3
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து – தேவா-சுந்:734/3
மேல்


வலம்புரிகளும் (1)

சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி – தேவா-சுந்:721/3
மேல்


வலம்புரியொடு (1)

வலம்புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:726/4
மேல்


வலன் (1)

மழுவாள் வலன் ஏந்தீ மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:9/1
மேல்


வலி (3)

வலி சேர் அரக்கன் தட கை ஐ_ஞான்கு அடர்த்த மதிசூடீ – தேவா-சுந்:486/3
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய் வழி முதலே – தேவா-சுந்:713/1
பிலம் தரு வாயினொடு பெரிதும் வலி மிக்கு உடைய – தேவா-சுந்:999/1
மேல்


வலித்து (3)

மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:32/3
மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:35/3
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:40/3
மேல்


வலிது (1)

காடேல் மிக வலிது காரிகை அஞ்ச – தேவா-சுந்:323/1
மேல்


வலிய (2)

மண்ணின் மேல் மயங்கி கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே – தேவா-சுந்:710/1
கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும் புலவாணர் – தேவா-சுந்:742/2
மேல்


வலியேயாகிலும் (1)

வலியேயாகிலும் வணங்குதல் ஒழியேன் மாட்டேன் மறுமையை நினையேன் – தேவா-சுந்:153/3
மேல்


வலியை (1)

மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார் – தேவா-சுந்:176/1
மேல்


வலிவலம்-தனில் (11)

மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/4
வல் அடியார் மனத்து இச்சை உளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:678/4
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:679/4
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:680/4
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/4
வாடி நீ வாளா வருந்தல் என்பானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:682/4
வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:683/4
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/4
வரையின்பாவை_மணாளன் எம்மானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:685/4
மான்று சென்று அணையாதவன்-தன்னை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:686/4
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:687/2
மேல்


வலை (2)

மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:555/1
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
மேல்


வலைப்பட்டு (2)

வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் – தேவா-சுந்:30/3
வாழைதான் பழுக்கும் நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு
கூழை மாந்தர்-தம் செல்கதி பக்கம் போகமும் பொருள் ஒன்று அறியாத – தேவா-சுந்:622/2,3
மேல்


வலையம் (1)

வலையம் வைத்த கூற்றம் மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு – தேவா-சுந்:49/1
மேல்


வலையில் (2)

மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு மதி மயங்கி – தேவா-சுந்:533/1
வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில் அழுந்தாதே – தேவா-சுந்:796/1
மேல்


வலையுள் (1)

வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து – தேவா-சுந்:534/1
மேல்


வவ்வி (1)

வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/4
மேல்


வவ்வினாய்க்கு (1)

வந்த காலன்-தன் ஆருயிர்-அதனை வவ்வினாய்க்கு உன்தன் வன்மை கண்டு அடியேன் – தேவா-சுந்:560/2
மேல்


வழக்கிலியை (1)

வஞ்ச நெஞ்சனை மா சழக்கனை பாவியை வழக்கிலியை
பஞ்சதுட்டனை சாதுவே என்று பாடினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:344/1,2
மேல்


வழக்கு (1)

வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம் – தேவா-சுந்:647/1
மேல்


வழக்கே (1)

வழக்கே எனில் பிழைக்கேம் என்பர் மதி மாந்திய மாந்தர் – தேவா-சுந்:795/2
மேல்


வழங்கும் (1)

இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும் – தேவா-சுந்:408/3
மேல்


வழி (15)

நில்லேன்அல்லேன் நின் வழி நின்றார் தம்முடை நீதியை நினைய – தேவா-சுந்:149/2
மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழி அடியேன் உமக்கு – தேவா-சுந்:474/1
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
அ வகை அவர் வேண்டுவதானால் அவரவர் வழி ஒழுகி நான் வந்து – தேவா-சுந்:621/2
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய் வழி முதலே – தேவா-சுந்:713/1
மருவி பிரியமாட்டேன் நான் வழி நின்று ஒழிந்தேன் ஒழிகிலேன் – தேவா-சுந்:783/1
அடிகள் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:862/4
ஐயன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:863/4
ஆர்வன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:864/4
அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:865/4
ஆதி இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:866/4
அத்தன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:867/4
அழகன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:868/4
அறவன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:869/4
ஆலன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:870/4
மேல்


வழித்தலை (1)

வழித்தலை படுவான் முயல்கின்றேன் உன்னை போல் என்னை பாவிக்கமாட்டேன் – தேவா-சுந்:554/1
மேல்


வழித்துணை (1)

வான நாடனே வழித்துணை மருந்தே மாசு இலா மணியே மறைப்பொருளே – தேவா-சுந்:717/1
மேல்


வழிதந்து (1)

வரம் மலி வாணன் வந்து வழிதந்து எனக்கு ஏறுவது ஓர் – தேவா-சுந்:1024/3
மேல்


வழிதான் (1)

வழிதான் காணாது அலமந்து இருந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:971/4
மேல்


வழிப்போவார்-தம்மோடும் (1)

வழிப்போவார்-தம்மோடும் வந்து உடன்கூடிய மாணி நீ – தேவா-சுந்:934/1
மேல்


வழிபட்டு (1)

வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி – தேவா-சுந்:675/3
மேல்


வழிபட (3)

உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை வழிபட சென்ற நின்றவா கண்டு – தேவா-சுந்:633/2
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்க என அருளி – தேவா-சுந்:669/1
சந்திகள்-தோறும் சல புட்பம் இட்டு வழிபட
புந்தி உறைவாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:939/2,3
மேல்


வழிபடப்பெற்ற (9)

ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
காலகாலனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:624/3,4
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற
கற்றை வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:625/3,4
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற
பெரிய கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:626/3,4
கெண்டை அம் தடம் கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற
கண்டம் நஞ்சு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:627/3,4
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:628/3,4
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற
கங்கையாளனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:629/3,4
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
கண்ணு மூன்று உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:630/3,4
அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற
கந்த வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:631/3,4
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற
கரங்கள் எட்டு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:632/3,4
மேல்


வழிபடாநிற்க (1)

மெய்ம்மையே திரு மேனி வழிபடாநிற்க வெகுண்டு எழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த – தேவா-சுந்:395/3
மேல்


வழிபாடு (3)

வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
எள்கல் இன்றி இமையவர்_கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல் – தேவா-சுந்:633/1
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார் – தேவா-சுந்:834/3
மேல்


வழியடியார் (1)

மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன் – தேவா-சுந்:1021/1,2
மேல்


வழியே (2)

மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும் வினையால் – தேவா-சுந்:800/2
மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே – தேவா-சுந்:1023/2
மேல்


வழுக்கி (1)

வழுக்கி வீழினும் திரு பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம் – தேவா-சுந்:550/3
மேல்


வழுவா (5)

பாட வல்ல பரமன் அடியார்க்கு அடிமை வழுவா
நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படும் ஆறு சொல்லி – தேவா-சுந்:187/2,3
வழுவா மாலை வல்லார் வானோர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:238/4
வாழியர்க்கே வழுவா நெறி காட்டி மறுபிறப்பு என்னை மாசு அறுத்தானை – தேவா-சுந்:679/3
குறியில் வழுவா கொடும் கூற்று உதைத்த – தேவா-சுந்:952/1
நெறியில் வழுவா நியமத்தவர்கள் – தேவா-சுந்:952/3
மேல்


வழுவேன் (1)

நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண்டகம் செய்து வாழ்வேன் – தேவா-சுந்:744/1
மேல்


வள் (1)

வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர்-தம் கோனை – தேவா-சுந்:404/1
மேல்


வள்ளல் (3)

மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன் எஞ்சாத வாள் தாயன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/3
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன் – தேவா-சுந்:398/2
வள்ளல் எம்தமக்கே துணை என்று நாள்நாளும் அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:608/3
மேல்


வள்ளலே (2)

வள்ளலே எங்கள் மைந்தனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:347/2
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசி – தேவா-சுந்:703/1
மேல்


வள்ளலை (2)

வானம் கைத்தவர்க்கும் அளப்பரிய வள்ளலை அடியார்கள்-தம் உள்ள – தேவா-சுந்:677/2
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல் – தேவா-சுந்:696/3
மேல்


வள்ளை (1)

வள்ளை வெண் மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில் – தேவா-சுந்:774/2
மேல்


வள (13)

வாயினால் கூறி மனத்தினால் நினைவான் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:145/3
காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/4
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:594/4
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
கறை அணி மிடறு உடை அடிகளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:601/4
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/3
பார் ஊர் பல புடை சூழ் வள வயல் நாவலர் வேந்தன் – தேவா-சுந்:728/1
மந்த முழவம் இயம்பும் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:750/3
மேல்


வளம் (8)

மங்கை ஓர்பாகர் மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல் – தேவா-சுந்:190/3
கொல்லை வளம் புறவில் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:202/3
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:203/3
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி மேயவனை – தேவா-சுந்:208/1
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய – தேவா-சுந்:298/1
வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும் மணி மண்டபமும் இவை மஞ்சு-தன்னுள் – தேவா-சுந்:426/3
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய் கரை – தேவா-சுந்:491/2
வளம் கிளர் பொழில் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேன் என்று – தேவா-சுந்:592/1
மேல்


வளம்பட (2)

அகழும் மா அரும் கரை வளம்பட பெருகி ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி – தேவா-சுந்:756/2
புலங்களை வளம்பட போக்கற பெருகி பொன்களே சுமந்து எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப – தேவா-சுந்:759/1
மேல்


வளர் (17)

மடித்து ஓட்டந்து வன் திரை எற்றியிட வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய – தேவா-சுந்:33/3
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/3
மழை கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர் வளர் புன் சடை கங்கையை வைத்து உகந்தீர் – தேவா-சுந்:91/1
வாழை காய்க்கும் வளர் மருகல்நாட்டு மருகலே – தேவா-சுந்:112/4
வடி ஆர் மூ இலை வேல் வளர் கங்கை இன் மங்கையொடும் – தேவா-சுந்:279/2
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர்-தம் கோனை – தேவா-சுந்:404/1
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/4
இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டிடை – தேவா-சுந்:440/1
குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே – தேவா-சுந்:440/2
முழை வளர் ஆளி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:440/4
மை அணவு கண்டத்து வளர் சடை எம் ஆரமுதை – தேவா-சுந்:519/3
முளை வளர் இள மதி உடையவன் முன் செய்த வல்வினைகள் – தேவா-சுந்:725/1
ஆறு அணி அவிர் சடை அழல் வளர் மழலை வெள் – தேவா-சுந்:731/3
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:882/1
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:891/1
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:891/3
மேல்


வளர்க்கும் (1)

கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:304/2
மேல்


வளர்த்த (1)

திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
மேல்


வளர்த்து (1)

வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் – தேவா-சுந்:179/3
மேல்


வளராத (1)

வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
மேல்


வளரும் (4)

மழை வளரும் நெடும் கோட்டிடை மத யானைகள் – தேவா-சுந்:440/3
திங்கள் தங்கிய சடை உடையானை தேவதேவனை செழும் கடல் வளரும்
சங்க வெண் குழை காது உடையானை சாமவேதம் பெரிது உகப்பானை – தேவா-சுந்:629/1,2
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:882/1
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:891/1
மேல்


வளாகத்து (1)

பணையிடை சோலை-தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள் – தேவா-சுந்:78/3
மேல்


வளி (3)

நிலனே நீர் வளி தீ நெடு வானகம் ஆகி நின்ற – தேவா-சுந்:276/1
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள் – தேவா-சுந்:565/1
சூழ் ஒளி நீர் நிலம் தீ தாழ் வளி ஆகாசம் – தேவா-சுந்:847/1
மேல்


வளை (12)

மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
கை ஆர் வளை காடுகாளோடும் உடனாய் – தேவா-சுந்:324/3
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் – தேவா-சுந்:366/1
வாழும் ஆறும் வளை கழலும் ஆறும் எனக்கு – தேவா-சுந்:374/3
கலைகள் சோர்கின்றதும் கன வளை கழன்றதும் – தேவா-சுந்:376/3
வளை கை முன்கை மலைமங்கை_மணாளன் மாரனார் உடல் நீறு எழ செற்று – தேவா-சுந்:585/1
நீறு தாங்கிய திருநுதலானை நெற்றிக்கண்ணனை நிரை வளை மடந்தை – தேவா-சுந்:655/1
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/3
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:725/4
வளை கை பொழி மழை கூர்தர மயில் மான் பிணை நிலத்தை – தேவா-சுந்:799/3
கலவ மயில் போல் வளை கை நல்லார் – தேவா-சுந்:930/1
வளை கை மடவார் மடுவில் தட நீர் – தேவா-சுந்:944/3
மேல்


வளைக்கப்பட்டு (1)

வாரி-கண் சென்று வளைக்கப்பட்டு வருந்தி போய் – தேவா-சுந்:436/3
மேல்


வளைக்கலுற்றேன் (1)

மழைக்கு அரும்பும் மலர் கொன்றையினானை வளைக்கலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:596/1
மேல்


வளைக்கின்றேன் (1)

திண்ணென என் உடல் விருத்தி தாரீரேயாகில் திரு மேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளை – தேவா-சுந்:475/3
மேல்


வளைகள் (3)

மறக்ககில்லாமையும் வளைகள் நில்லாமையும் – தேவா-சுந்:373/3
வக்கிரம் இல்லாமையும் வளைகள் நில்லாமையும் – தேவா-சுந்:375/3
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
மேல்


வளைத்த (1)

வளைத்த வில்லியை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:585/4
மேல்


வளைத்தான் (2)

உண்டே புரம் எரிய சிலை வளைத்தான் இமையவர்க்கா – தேவா-சுந்:833/2
வான மதிள் அரணம் மலையே சிலையா வளைத்தான்
ஊனம் இல் காழி-தன்னுள் உயர் ஞானசம்பந்தற்கு அன்று – தேவா-சுந்:993/2,3
மேல்


வளைத்து (1)

முப்புரங்களை தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள்செய்ய வல்லானே – தேவா-சுந்:711/2
மேல்


வளைந்த (1)

புரம் அவை எரிதர வளைந்த வில்லினன் அவன் – தேவா-சுந்:730/1
மேல்


வளையார் (1)

குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
மேல்


வளையாள் (4)

கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:300/3
குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:302/3
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:305/3
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:626/3
மேல்


வளையாளை (1)

கூற்றானே கோல் வளையாளை ஒர்பாகம் ஆம் – தேவா-சுந்:982/2
மேல்


வளையும் (1)

கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக – தேவா-சுந்:765/1
மேல்


வளையொடு (1)

வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:725/4
மேல்


வளைவித்து (1)

திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
மேல்


வற்கென்று (1)

வற்கென்று இருத்தி கண்டாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:511/1
மேல்


வற்றி (1)

கள்ளி வற்றி புல் தீந்து வெம் கானம் கழிக்கவே – தேவா-சுந்:515/3
மேல்


வறிதே (1)

வறிதே நிலையாத இ மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை நான் நிலையேன் – தேவா-சுந்:23/3
மேல்


வன் (36)

மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:32/3
மடித்து ஓட்டந்து வன் திரை எற்றியிட வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய – தேவா-சுந்:33/3
மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:35/3
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:40/3
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றை – தேவா-சுந்:57/1
தண்டம் உடை தருமன் தமர் என் தமரை செயும் வன் துயர் தீர்க்கும் இடம் – தேவா-சுந்:99/1
நாணி ஊரன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:122/3
வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார் – தேவா-சுந்:168/2
ஓத நல் தக்க வன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:177/3
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் – தேவா-சுந்:235/1
ஊறி வாயினன் நாடிய வன் தொண்டன் ஊரன் – தேவா-சுந்:319/1
வடிவிலான் திரு நாவலூரான் வனப்பகை அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:339/2
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து – தேவா-சுந்:371/3
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
மாடுவன் மாடுவன் வன் கை பிடித்து மகிழ்ந்து உளே – தேவா-சுந்:464/3
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல் – தேவா-சுந்:466/3
வன் சயமாய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய – தேவா-சுந்:524/1
சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:559/3
உம்பர் ஆளியை உமையவள்_கோனை ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து – தேவா-சுந்:569/3
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன் – தேவா-சுந்:592/2
பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:644/2
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை – தேவா-சுந்:662/1
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:664/3
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/3
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:687/2
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன் – தேவா-சுந்:697/2
அண்டவாணனை சிங்கடி அப்பன் அணுக்க வன் தொண்டன் ஆர்வத்தால் உரைத்த – தேவா-சுந்:718/3
அரும் குலத்து அரும் தமிழ் ஊரன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:739/3
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார் போய் – தேவா-சுந்:770/3
சுடு பொடி மெய்க்கு அணிந்த சோதியை வன் தலை வாய் – தேவா-சுந்:846/2
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:891/3
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ் – தேவா-சுந்:901/3
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் – தேவா-சுந்:1031/3
சீர் ஆர் மாட திரு நாவலூர் கோன் சிறந்த வன் தொண்டன் – தேவா-சுந்:1037/2
மேல்


வன்தொண்டன் (1)

மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன்
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே – தேவா-சுந்:424/3,4
மேல்


வன்பார்த்தான் (4)

மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:872/3
வரம் முன்னம் அருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:876/3
மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:877/3
மஞ்சு உற்ற மணி மாட வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:879/3
மேல்


வன்முகவன் (1)

திரங்கல் வன்முகவன் புக பாய் திரு பனையூர் – தேவா-சுந்:888/2
மேல்


வன்மை (1)

வந்த காலன்-தன் ஆருயிர்-அதனை வவ்வினாய்க்கு உன்தன் வன்மை கண்டு அடியேன் – தேவா-சுந்:560/2
மேல்


வன்மைகள் (1)

வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார் – தேவா-சுந்:168/2
மேல்


வன்னி (2)

மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த – தேவா-சுந்:163/1
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும் – தேவா-சுந்:453/2
மேல்


வன்னியும் (3)

மட்டு ஆர் மலர் கொன்றையும் வன்னியும் சாடி – தேவா-சுந்:128/1
மத்தம் மா மலர் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும் – தேவா-சுந்:368/1
கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம் – தேவா-சுந்:984/1
மேல்


வன (1)

வார் ஊர் வன முலையாள் உமை_பங்கன் மறைக்காட்டை – தேவா-சுந்:728/2
மேல்


வனத்து (1)

மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றை – தேவா-சுந்:57/1
மேல்


வனப்பகை (9)

நாணி ஊரன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:122/3
இளம் கிளை ஆரூரன் வனப்பகை அவள் அப்பன் – தேவா-சுந்:298/3
மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண் தமிழ்களே – தேவா-சுந்:309/4
வடிவிலான் திரு நாவலூரான் வனப்பகை அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:339/2
நறவம் பூம் பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்-தன் – தேவா-சுந்:350/2
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன் – தேவா-சுந்:592/2
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன் – தேவா-சுந்:697/2
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:891/3
மேல்


வனப்பினால் (1)

மல்லின் மல்கு திரள் தோள் ஊரன் வனப்பினால்
சொல்லல் சொல்லி தொழுவாரை தொழு-மின்களே – தேவா-சுந்:831/3,4
மேல்


வனம் (1)

கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
மேல்


வனமுலையாள் (1)

வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் – தேவா-சுந்:398/1
மேல்


வனமுலையாள்-தன்னோடு (1)

வார் இடம் கொள் வனமுலையாள்-தன்னோடு மயானத்து – தேவா-சுந்:909/1

மேல்