கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வெகுண்டவர்க்கும் 1
வெகுண்டு 2
வெகுளேன் 1
வெஞ்சமாக்கூடல் 10
வெஞ்சின 1
வெஞ்சுரத்து 1
வெட்டனராய் 1
வெட்டென 1
வெடிபட 1
வெண் 72
வெண்காடனீரே 9
வெண்காடு 1
வெண்குழையனை 1
வெண்ணி 2
வெண்ணிக்கூற்றத்து 1
வெண்ணிநாட்டு 1
வெண்ணியே 1
வெண்ணெய் 1
வெண்ணெய்நல்லூர் 10
வெண்ணெய்நல்லூரில் 10
வெண்ணெயூர் 1
வெண்தலைஏந்தீ 1
வெண்நீற்றன் 3
வெண்நீற்றானே 1
வெண்நீற்றானை 1
வெண்பாக்கம் 1
வெண்பிறையாய் 1
வெண்பொடியாய் 1
வெண்மதியினானை 1
வெண்மருப்பா 1
வெந்த 2
வெந்தார் 1
வெந்து 2
வெப்பொடு 1
வெம் 20
வெம்மையினான் 1
வெய்து 1
வெய்ய 5
வெயிலாய் 2
வெருட்டி 3
வெருட்டிட 1
வெருவ 3
வெருவி 3
வெருவிட 2
வெல்லும் 1
வெல்லுமா 1
வெள் 15
வெள்ள 1
வெள்ளடை 11
வெள்ளத்து 1
வெள்ளத்துள் 1
வெள்ளம் 5
வெள்ளாடை 1
வெள்ளாற்று 1
வெள்ளிடை 1
வெள்ளை 12
வெள்ளைத்தலையன்தான் 1
வெள்ளைநீற்றரோ 1
வெளி 1
வெளிப்பட்ட 1
வெளிப்பட்டு 1
வெளிப்படுத்தானை 1
வெளிய 1
வெளியாய் 1
வெளியும் 1
வெளியை 1
வெளிறு 1
வெளை 1
வெற்பில் 1
வெற்பு 4
வெற்பு_அரையன் 1
வெற்றி 1
வெற்றியூர் 1
வெற்று 1
வெறி 3
வெறிக்கும் 1
வெறுத்தேன் 1
வெறுப்பனவே 1
வென்ற 5
வென்றனன் 2
வென்றி 2
வென்றியினானை 1
வெகுண்டவர்க்கும் (1)
வேதியர்-தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன் – தேவா-சுந்:744/2
மேல்
வெகுண்டு (2)
மெய்ம்மையே திரு மேனி வழிபடாநிற்க வெகுண்டு எழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த – தேவா-சுந்:395/3
வில்-வாய் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டு போய் – தேவா-சுந்:512/3
மேல்
வெகுளேன் (1)
வேதியர்-தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன் – தேவா-சுந்:744/2
மேல்
வெஞ்சமாக்கூடல் (10)
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:425/4
விளங்கும் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:426/4
விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:427/4
விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:428/4
வெளை மால் விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:429/4
விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:430/4
விட வார் அரவா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:431/4
வேடர் விரும்பும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:432/4
வெம் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:433/4
வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே என்று தான் விரும்பி – தேவா-சுந்:434/2
மேல்
வெஞ்சின (1)
வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1022/4
மேல்
வெஞ்சுரத்து (1)
கமர் பயில் வெஞ்சுரத்து கடும் கேழல் பின் கானவனாய் – தேவா-சுந்:1003/1
மேல்
வெட்டனராய் (1)
பீறல் கூறை உடுத்து ஓர் பத்திரம் கட்டி வெட்டனராய்
சூறை பங்கியர் ஆகி நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:501/1,2
மேல்
வெட்டென (1)
வெட்டென பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:448/4
மேல்
வெடிபட (1)
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி வெடிபட கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் – தேவா-சுந்:751/1
மேல்
வெண் (72)
மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய் – தேவா-சுந்:13/1
நெல்வாயில் அரத்துறை நீடு உறையும் நில வெண் மதி சூடிய நின்மலனே – தேவா-சுந்:22/2
சிரித்த பல் வாய் வெண் தலை போய் ஊர்ப்புறம் சேரா முன் – தேவா-சுந்:66/2
மத்தம் மத யானையின் வெண் மருப்பு உந்தி – தேவா-சுந்:124/1
மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி – தேவா-சுந்:129/1
பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:139/4
மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/2
துணிப்படும் உடையும் சுண்ண வெண் நீறும் தோற்றமும் சிந்தித்து காணில் – தேவா-சுந்:143/1
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/3
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி – தேவா-சுந்:166/1
சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர் பாடுவர் தூய நெய்யால் – தேவா-சுந்:179/2
பல் அயர் வெண் தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா – தேவா-சுந்:203/2
வெண் திங்கள் வெண் மழுவன் விரை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:220/3
வெண் திங்கள் வெண் மழுவன் விரை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:220/3
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:223/3
வெற்று அரை கற்ற அமணும் விரையாது வெண் தாலம் உண்ணும் – தேவா-சுந்:227/1
படை ஆர் வெண் மழுவா பகலோன் பல் உகுத்தவனே – தேவா-சுந்:261/1
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய் – தேவா-சுந்:266/3
படை ஆர் வெண் மழுவா பரம் ஆய பரம்பரனே – தேவா-சுந்:269/2
சந்து ஆர் வெண் குழையாய் சரி கோவண ஆடையனே – தேவா-சுந்:273/1
நரி ஆரும் சுடலை நகு வெண் தலை கொண்டவனே – தேவா-சுந்:285/2
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து – தேவா-சுந்:331/3
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட வெண் தலை ஓடு கொண்டு – தேவா-சுந்:361/1
பாறு வெண் தலை கையில் ஏந்தி பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:365/3
மொய்த்த வெண் தலை கொக்கு இறகொடு வெள் எருக்கம் உம் சடைய தாம் – தேவா-சுந்:368/2
சூழும் ஓடி சுழன்று உழலும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:374/1
இலை கொள் சோலை தலை இருக்கும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:376/1
சுற்றுமுற்றும் சுழன்று உழலும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:379/1
பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன் – தேவா-சுந்:384/2
வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி – தேவா-சுந்:388/3
இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட – தேவா-சுந்:411/1
துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில் துளங்கும்படியாய் – தேவா-சுந்:429/1
துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில் துளங்கும்படியாய் – தேவா-சுந்:429/1
வேதம் ஓதி வெண் நீறு பூசி வெண் கோவணம் தற்று அயலே – தேவா-சுந்:504/1
வேதம் ஓதி வெண் நீறு பூசி வெண் கோவணம் தற்று அயலே – தேவா-சுந்:504/1
சாந்தம் ஆக வெண் நீறு பூசி வெண் பல் தலை கலனா – தேவா-சுந்:506/1
சாந்தம் ஆக வெண் நீறு பூசி வெண் பல் தலை கலனா – தேவா-சுந்:506/1
வேய்ந்த வெண் பிறை கண்ணி-தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:506/2
விண்ணோர் தலைவர் வெண் புரி நூல் மார்பர் வேத கீதத்தர் – தேவா-சுந்:541/1
உய்ய கொள்க மற்று எங்களை என்ன ஒலி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும் – தேவா-சுந்:561/2
கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற – தேவா-சுந்:562/2
அந்தி வெண் பிறை சூடும் எம்மானே ஆரூர் மேவிய அமரர்கள்_தலைவா – தேவா-சுந்:617/3
வெல்லும் வெண் மழு ஒன்று உடையானை வேலை நஞ்சு உண்ட வித்தகன்-தன்னை – தேவா-சுந்:628/1
சங்க வெண் குழை காது உடையானை சாமவேதம் பெரிது உகப்பானை – தேவா-சுந்:629/2
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை கரிய கண்டனை மால் அயன் காணா – தேவா-சுந்:688/1
மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல் – தேவா-சுந்:704/1
வெந்த வெண் பொடி பூச வல்லானே வேடனாய் விசயற்கு அருள்புரிந்த – தேவா-சுந்:713/2
வெண் தலை பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவி முன் முடிந்த – தேவா-சுந்:718/1
சிகரத்திடை இள வெண் பிறை வைத்தான் இடம் தெரியில் – தேவா-சுந்:720/1
மடலிடை இடை வெண் குருகு எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:724/4
சோதியில் சோதி எம்மானை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட – தேவா-சுந்:744/3
மறு இலாத வெண் நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே – தேவா-சுந்:772/4
வள்ளை வெண் மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில் – தேவா-சுந்:774/2
பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே – தேவா-சுந்:775/4
வெளிறு தீர தொழு-மின் வெண் பொடிஆடியை – தேவா-சுந்:825/1
பாறு அணி வெண் தலையில் பிச்சை கொள் நச்சு அரவன் – தேவா-சுந்:849/2
ஊர்-தொறும் வெண் தலை கொண்டு உண் பலி இடும் என்று – தேவா-சுந்:864/1
வித்தக வீணையொடும் வெண் புரி நூல் பூண்டு – தேவா-சுந்:867/1
முத்து அன வெண் முறுவல் மங்கையொடும் உடனே – தேவா-சுந்:867/2
மெய்யன் வெண் பொடி பூசும் விகிர்தன் வேதமுதல்வன் – தேவா-சுந்:878/1
வெண் நிலா சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ – தேவா-சுந்:889/3
ஈன்றவனே வெண் கோயில் இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:911/3
கரு மானின் உரி ஆடை செம் சடை மேல் வெண் மதிய கண்ணியானை – தேவா-சுந்:917/1
ஊன் ஆர் உடை வெண் தலை உண் பலி கொண்டு – தேவா-சுந்:948/1
பலம் கிளர் பைம் பொழில் தண் பனி வெண் மதியை தடவ – தேவா-சுந்:996/3
வெண் பொடி மேனியினான் கரு நீல மணி_மிடற்றான் – தேவா-சுந்:1000/1
தொடை மலி கொன்றை துன்றும் சடையன் சுடர் வெண் மழுவாள் – தேவா-சுந்:1001/1
ஒருவர்க்கு ஒருவர் அரிதாகில் உடை வெண் தலை கொண்டு ஊர்ஊரன் – தேவா-சுந்:1031/1
மேல்
வெண்காடனீரே (9)
விடங்கர் ஆகி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:52/4
விழித்து உகந்த வெற்றி என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:53/4
விடை அது ஏறி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:54/4
விண் உளீராய் நிற்பது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:55/4
விடம் மிடற்றில் வைத்தது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:56/4
வேறுபட்டு திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:57/4
வேதம் ஓதி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:58/4
வெருவ வேழம் செற்றது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:59/4
வேடம் காட்டி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:60/4
மேல்
வெண்காடு (1)
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய – தேவா-சுந்:61/1
மேல்
வெண்குழையனை (1)
காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/4
மேல்
வெண்ணி (2)
விடங்களூர் திரு வெண்ணி அண்ணாமலை வெய்ய – தேவா-சுந்:312/2
கருகல் குரலாய் வெண்ணி கரும்பே கானூர் கட்டியே – தேவா-சுந்:482/3
மேல்
வெண்ணிக்கூற்றத்து (1)
வேலனூர் வெற்றியூர் வெண்ணிக்கூற்றத்து வெண்ணியே – தேவா-சுந்:114/4
மேல்
வெண்ணிநாட்டு (1)
மிழலைநாட்டு மிழலை வெண்ணிநாட்டு புரிசையே – தேவா-சுந்:116/4
மேல்
வெண்ணியே (1)
வேலனூர் வெற்றியூர் வெண்ணிக்கூற்றத்து வெண்ணியே – தேவா-சுந்:114/4
மேல்
வெண்ணெய் (1)
ஏற்றாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:8/3
மேல்
வெண்ணெய்நல்லூர் (10)
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:1/3
வேய் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:2/3
மின் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:3/3
செடி ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:4/3
தாது ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:5/3
மண் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:6/3
தேன் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:7/3
செழு வார் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:9/3
சீர் ஊர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:10/3
நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த நித்தில திரள் தொத்தினை முத்திக்கு – தேவா-சுந்:639/2
மேல்
வெண்ணெய்நல்லூரில் (10)
ஏவலனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:167/3
ஆகம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார் – தேவா-சுந்:169/2
நெஞ்சம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டு – தேவா-சுந்:170/3
எம்பிரானார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:171/3
வேட்டம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார் – தேவா-சுந்:172/2
வேயவனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:173/3
வேய் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:174/3
இடம் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:175/3
சொல் பத பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய்நல்லூரில்
அற்புத பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆள் அது கொண்ட – தேவா-சுந்:693/2,3
நம்பனே அன்று வெண்ணெய்நல்லூரில் நாயினேன்-தன்னை ஆட்கொண்ட – தேவா-சுந்:705/1
மேல்
வெண்ணெயூர் (1)
அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும்கொண்டார் – தேவா-சுந்:176/2
மேல்
வெண்தலைஏந்தீ (1)
நஞ்சு ஏர் கண்டா வெண்தலைஏந்தீ நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:148/4
மேல்
வெண்நீற்றன் (3)
படுத்தவன் பால் வெண்நீற்றன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:225/4
விடை உடையான் விட நாகன் வெண்நீற்றன் புலியின் தோல் – தேவா-சுந்:903/3
படை ஆர் மழுவன் பால் வெண்நீற்றன்
விடை ஆர் கொடியன் வேத நாவன் – தேவா-சுந்:928/1,2
மேல்
வெண்நீற்றானே (1)
சுரும்பு உடை மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றானே
அரும்பு உடை மலர் பொய்கை அல்லியும் மல்லிகையும் – தேவா-சுந்:293/2,3
மேல்
வெண்நீற்றானை (1)
பனி உதிரும் சடையானை பால் வெண்நீற்றானை பல உருவும் தன் உருவே ஆய பெருமானை – தேவா-சுந்:412/2
மேல்
வெண்பாக்கம் (1)
ஏர் ஆரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடம்கொண்ட – தேவா-சுந்:912/1
மேல்
வெண்பிறையாய் (1)
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுவதற்கு அரியாய் – தேவா-சுந்:429/3
மேல்
வெண்பொடியாய் (1)
வெந்தார் வெண்பொடியாய் விடை ஏறிய வித்தகனே – தேவா-சுந்:245/2
மேல்
வெண்மதியினானை (1)
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/1,2
மேல்
வெண்மருப்பா (1)
காறு ஆர் வெண்மருப்பா கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:286/3
மேல்
வெந்த (2)
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை – தேவா-சுந்:583/1
வெந்த வெண் பொடி பூச வல்லானே வேடனாய் விசயற்கு அருள்புரிந்த – தேவா-சுந்:713/2
மேல்
வெந்தார் (1)
வெந்தார் வெண்பொடியாய் விடை ஏறிய வித்தகனே – தேவா-சுந்:245/2
மேல்
வெந்து (2)
வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர் அது அன்றியும் வேய் புரையும் – தேவா-சுந்:19/2
கொடி உடை மும்மதில் வெந்து அழிய குன்றம் வில்லா நாணியின் கோல் ஒன்றினால் – தேவா-சுந்:86/1
மேல்
வெப்பொடு (1)
வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய் – தேவா-சுந்:292/1
மேல்
வெம் (20)
வில்லி இடம் விரவாது உயிர் உண்ணும் வெம் காலனை கால்கொடு வீந்து அவிய – தேவா-சுந்:101/2
வரிந்த வெம் சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும் – தேவா-சுந்:138/1
கொற்றவனார் குறுகாதவர் ஊர் நெடு வெம் சரத்தால் – தேவா-சுந்:188/3
போர்த்தவர் ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகல – தேவா-சுந்:193/2
கை ஆர் வெம் சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே – தேவா-சுந்:215/1
வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி – தேவா-சுந்:388/3
மேவிய வெம் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியை தான் காட்டும் வேதமுதலானை – தேவா-சுந்:413/2
வெம் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:433/4
விளைப்பு அறியாத வெம் காலனை உயிர் வீட்டினீர் – தேவா-சுந்:438/2
கொடுகு வெம் சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:498/1
கள்ளி வற்றி புல் தீந்து வெம் கானம் கழிக்கவே – தேவா-சுந்:515/3
வெம் கனல் மா மேனியனை மான் மருவும் கையானை – தேவா-சுந்:521/3
விட்ட வேட்கை வெம் நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானை – தேவா-சுந்:604/2
புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும் – தேவா-சுந்:616/1
வெம் கண் ஆனையின் ஈர் உரியானை விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும் – தேவா-சுந்:636/3
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/3
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும் – தேவா-சுந்:656/3
தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே – தேவா-சுந்:660/2
வான் உயர் வெம் கதிரோன் வண் தமிழ் வல்லவர்கள் – தேவா-சுந்:847/2
கோடு உயர் வெம் களிற்று திகழ் கோச்செங்கணான் செய் கோயில் – தேவா-சுந்:1005/1
மேல்
வெம்மையினான் (1)
தண் இயல் வெம்மையினான் தலையில் கடை-தோறும் பலி – தேவா-சுந்:995/1
மேல்
வெய்து (1)
வெய்து ஆய வினை கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம் – தேவா-சுந்:389/1
மேல்
வெய்ய (5)
வெய்ய விரி சுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் – தேவா-சுந்:246/1
விடங்களூர் திரு வெண்ணி அண்ணாமலை வெய்ய
படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான் பரஞ்சோதி – தேவா-சுந்:312/2,3
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று – தேவா-சுந்:336/3
வெய்ய மா கரி ஈர் உரியானே வேங்கை ஆடையினாய் விதி முதலே – தேவா-சுந்:715/1
வெய்ய வினை ஆய அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:817/1
மேல்
வெயிலாய் (2)
பருத்திநியமத்து உறைவாய் வெயிலாய் பலவாய் காற்று ஆனாய் – தேவா-சுந்:485/2
வெயிலாய் காற்று என வீசி மின்னாய் தீ என நின்றான் – தேவா-சுந்:877/2
மேல்
வெருட்டி (3)
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் – தேவா-சுந்:468/2
வில்லை காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:499/1
ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன் – தேவா-சுந்:1018/2
மேல்
வெருட்டிட (1)
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடி தழுவ வெளிப்பட்ட – தேவா-சுந்:633/3
மேல்
வெருவ (3)
வெருவ வேழம் செற்றது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:59/4
கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவ கண்டானை கருப்பறியலூர் – தேவா-சுந்:299/2
குன்ற மலை குமரி கொடி ஏர் இடையாள் வெருவ
வென்றி மத கரியின் உரி போர்த்ததும் என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1009/1,2
மேல்
வெருவி (3)
வண்டு அலம்பும் மலர் கொன்றையன் என்றும் வாய் வெருவி தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:597/2
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடி தழுவ வெளிப்பட்ட – தேவா-சுந்:633/3
தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென இடி குரல் வெருவி
செறுவில் வாளைகள் ஓட செங்கயல் பங்கயத்து ஒதுங்க – தேவா-சுந்:772/1,2
மேல்
வெருவிட (2)
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் – தேவா-சுந்:700/1
விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை – தேவா-சுந்:708/1
மேல்
வெல்லும் (1)
வெல்லும் வெண் மழு ஒன்று உடையானை வேலை நஞ்சு உண்ட வித்தகன்-தன்னை – தேவா-சுந்:628/1
மேல்
வெல்லுமா (1)
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
மேல்
வெள் (15)
புற்று ஆடு அரவம் அரை ஆர்த்து உகந்தாய் புனிதா பொரு வெள் விடைஊர்தியினாய் – தேவா-சுந்:24/1
ஆன் நல் வெள் ஏற்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:74/4
வேகம்கொண்டு ஓடிய வெள் விடை ஏறி ஓர் மெல்லியலை – தேவா-சுந்:169/1
தேறுவார் சிந்தை தேறும் இடம் செம் கண் வெள் ஏறு – தேவா-சுந்:319/2
புரை வெள் ஏறு உடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:343/3
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் – தேவா-சுந்:355/3
சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும் – தேவா-சுந்:362/1
மொய்த்த வெண் தலை கொக்கு இறகொடு வெள் எருக்கம் உம் சடைய தாம் – தேவா-சுந்:368/2
செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை – தேவா-சுந்:408/1
பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர் பரிசு என்-கொலோ – தேவா-சுந்:443/3
கூறு அன்றி கூறு மற்று இல்லையோ கொல்லை சில்லை வெள்
ஏறு அன்றி ஏறுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:447/3,4
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:626/3
ஆறு அணி அவிர் சடை அழல் வளர் மழலை வெள்
ஏறு அணி அடிகள்-தம் இடம் வலம்புரமே – தேவா-சுந்:731/3,4
மேல்
வெள்ள (1)
காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள
ஆற்றானை பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவு அரிய செம் கண் – தேவா-சுந்:386/2,3
மேல்
வெள்ளடை (11)
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:289/4
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:290/4
வேடனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:291/4
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:292/4
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:293/4
விண்ணிடை குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:294/4
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:295/4
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:296/4
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:297/4
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை – தேவா-சுந்:298/2
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
மேல்
வெள்ளத்து (1)
விடை அரவ கொடி ஏந்தும் விண்ணவர்-தம் கோனை வெள்ளத்து மால் அவனும் வேதமுதலானும் – தேவா-சுந்:409/1
மேல்
வெள்ளத்துள் (1)
இறந்துபோக்கு இல்லை வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே – தேவா-சுந்:697/4
மேல்
வெள்ளம் (5)
தலைக்கு தலை மாலை அணிந்தது என்னே சடை மேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே – தேவா-சுந்:32/1
பெய்யும் மா மழை பெரு வெள்ளம் தவிர்த்து பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும் – தேவா-சுந்:561/3
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடி தழுவ வெளிப்பட்ட – தேவா-சுந்:633/3
பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் – தேவா-சுந்:649/2
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி – தேவா-சுந்:789/3
மேல்
வெள்ளாடை (1)
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய் – தேவா-சுந்:941/2
மேல்
வெள்ளாற்று (1)
நால் தானத்து ஒருவனை நான் ஆய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியை – தேவா-சுந்:386/1
மேல்
வெள்ளிடை (1)
நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி – தேவா-சுந்:20/2
மேல்
வெள்ளை (12)
கொடி கொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடை உடை – தேவா-சுந்:64/3
நடுதலையே புரிந்தான் நரி கான்றிட்ட எச்சில் வெள்ளை
படுதலையே புரிந்தான் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:222/3,4
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான் – தேவா-சுந்:224/2
படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை – தேவா-சுந்:584/2
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
சள்ளை வெள்ளை அம் குருகு தான் அது ஆம் என கருதி – தேவா-சுந்:774/1
வெள்ளை நுண் பொடி பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே – தேவா-சுந்:774/4
கறங்கு வெள்ளை அருவி தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:823/4
கல்லில் வெள்ளை அருவி தண் கழுக்குன்றினை – தேவா-சுந்:831/2
விடம் கொள் மா மிடற்றீர் வெள்ளை சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர் என்று – தேவா-சுந்:893/1
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல் – தேவா-சுந்:1021/3
வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே – தேவா-சுந்:1034/2
மேல்
வெள்ளைத்தலையன்தான் (1)
பல் இல் வெள்ளைத்தலையன்தான் பயிலும் இடம் – தேவா-சுந்:831/1
மேல்
வெள்ளைநீற்றரோ (1)
தேனை ஆடு முக்கண்ணரோ மிக செய்யரோ வெள்ளைநீற்றரோ
பால் நெய் ஆடலும் பயில்வரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:333/1,2
மேல்
வெளி (1)
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும் – தேவா-சுந்:284/1
மேல்
வெளிப்பட்ட (1)
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடி தழுவ வெளிப்பட்ட
கள்ள கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:633/3,4
மேல்
வெளிப்பட்டு (1)
எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளிய இறைவனே என்றும் – தேவா-சுந்:707/2
மேல்
வெளிப்படுத்தானை (1)
அன்று அயன் சிரம் அரிந்து அதில் பலி கொண்டு அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை
துன்று பைம் கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை சுடர் போல் ஒளியானை – தேவா-சுந்:641/1,2
மேல்
வெளிய (1)
செய்யனை வெளிய திருநீற்றில் திகழும் மேனியன் மான் மறி ஏந்தும் – தேவா-சுந்:591/3
மேல்
வெளியாய் (1)
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:421/4
மேல்
வெளியும் (1)
கல் குன்றும் தூறும் கடு வெளியும் கடல் கானல்-வாய் – தேவா-சுந்:511/3
மேல்
வெளியை (1)
பூவில் வாசத்தை பொன்னினை மணியை புவியை காற்றினை புனல் அனல் வெளியை
சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை – தேவா-சுந்:690/1,2
மேல்
வெளிறு (1)
வெளிறு தீர தொழு-மின் வெண் பொடிஆடியை – தேவா-சுந்:825/1
மேல்
வெளை (1)
வெளை மால் விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:429/4
மேல்
வெற்பில் (1)
பளிக்கு தாரை பவள வெற்பில்
குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம் – தேவா-சுந்:957/1,2
மேல்
வெற்பு (4)
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார் – தேவா-சுந்:176/1
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
மேல்
வெற்பு_அரையன் (1)
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
மேல்
வெற்றி (1)
விழித்து உகந்த வெற்றி என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:53/4
மேல்
வெற்றியூர் (1)
வேலனூர் வெற்றியூர் வெண்ணிக்கூற்றத்து வெண்ணியே – தேவா-சுந்:114/4
மேல்
வெற்று (1)
வெற்று அரை கற்ற அமணும் விரையாது வெண் தாலம் உண்ணும் – தேவா-சுந்:227/1
மேல்
வெறி (3)
விடை ஆரும் கொடியாய் வெறி ஆர் மலர் கொன்றையினாய் – தேவா-சுந்:269/1
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:345/3
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:636/4
மேல்
வெறிக்கும் (1)
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:425/4
மேல்
வெறுத்தேன் (1)
வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன் விளங்கும் குழை காது உடை வேதியனே – தேவா-சுந்:39/1
மேல்
வெறுப்பனவே (1)
மிண்டாடி திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பல பேசி வேண்டியவா திரிவீர் – தேவா-சுந்:471/1
மேல்
வென்ற (5)
குழலை வென்ற மொழி மடவாளை ஓர்கூறன் ஆம் – தேவா-சுந்:116/1
கூடா மன்னரை கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி – தேவா-சுந்:155/1
தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற
வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி – தேவா-சுந்:388/2,3
நிறை கொண்ட சிந்தையான் நெய்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/2
வென்ற விகிர்தன் வினையை வீட்ட – தேவா-சுந்:929/2
மேல்
வென்றனன் (2)
வென்றனன் வென்றனன் வேள்வியில் விண்ணவர்-தங்களை – தேவா-சுந்:460/1
வென்றனன் வென்றனன் வேள்வியில் விண்ணவர்-தங்களை – தேவா-சுந்:460/1
மேல்
வென்றி (2)
முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் போன்ற வென்றி மால் வரை அரி அம்பா – தேவா-சுந்:635/3
வென்றி மத கரியின் உரி போர்த்ததும் என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1009/2
மேல்
வென்றியினானை (1)
அரக்கன் ஆற்றலை அழித்து அவன் பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை
பரக்கும் கார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை – தேவா-சுந்:643/1,2