Select Page


பை (9)

பை கொள் வாள் அரவு ஆட்டி திரியும் பரமன் ஊர் – தேவா-சுந்:121/2
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:140/3
பை ஆரும் அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:253/3
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:531/3
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:817/3
பை அரவு இள அல்குல் பாவையொடும் உடனே – தேவா-சுந்:863/2
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:878/3
பை அரவா இங்கு இருந்தாயோ என்ன பரிந்து என்னை – தேவா-சுந்:904/3
அளை பை அரவு ஏர் இடையாள் அஞ்ச – தேவா-சுந்:944/1
மேல்


பைஞ்ஞீலி (1)

பந்தை ஊர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி
எந்தை ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:310/3,4
மேல்


பைஞ்ஞீலியில் (3)

அலைக்கும் பைம் புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:362/4
ஆய பைம் பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:363/4
அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை – தேவா-சுந்:371/1
மேல்


பைஞ்ஞீலியீர் (3)

பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர்
ஆரம் ஆவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:361/3,4
பைம் தண் மா மலர் உந்து சோலைகள் கந்தம் நாறும் பைஞ்ஞீலியீர்
அந்தி வானம் உம் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:364/3,4
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர்
அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:366/3,4
மேல்


பைஞ்ஞீலியேன் (5)

பாறு வெண் தலை கையில் ஏந்தி பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:365/3
பாடல் வண்டு இசை ஆலும் சோலை பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால் – தேவா-சுந்:367/3
பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால் – தேவா-சுந்:368/3
பக்கமே குயில் பாடும் சோலை பைஞ்ஞீலியேன் என நிற்றிரால் – தேவா-சுந்:369/3
பையவே விடங்கு ஆக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:370/3
மேல்


பைத்த (2)

பைத்த பட தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம் பயில புகுவார் – தேவா-சுந்:98/1
பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:134/3
மேல்


பைத்து (1)

பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும் – தேவா-சுந்:918/3
மேல்


பைதல் (1)

பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே – தேவா-சுந்:775/4
மேல்


பைம் (17)

பணையிடை சோலை-தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள் – தேவா-சுந்:78/3
செய் ஆர் பைம் கமல திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:215/3
அலைக்கும் பைம் புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:362/4
பாயும் நீர் கிடங்கு ஆர் கமலமும் பைம் தண் மாதவி புன்னையும் – தேவா-சுந்:363/3
ஆய பைம் பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:363/4
பைம் தண் மா மலர் உந்து சோலைகள் கந்தம் நாறும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:364/3
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை – தேவா-சுந்:408/1
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் – தேவா-சுந்:431/3
பாடு மா மறை பாட வல்லானை பைம் பொழில் குயில் கூவிட மாடே – தேவா-சுந்:573/2
துன்று பைம் கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை சுடர் போல் ஒளியானை – தேவா-சுந்:641/2
திணை கொள் செந்தமிழ் பைம் கிளி தெரியும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:666/4
பரு வரால் குதிகொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:777/3
அறையும் பைம் கழல் ஆர்ப்ப அரவு ஆட அனல் ஏந்தி – தேவா-சுந்:873/1
பைம் கண் வாளைகள் பாய் பழன திரு பனையூர் – தேவா-சுந்:884/2
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன் – தேவா-சுந்:922/1
பலம் கிளர் பைம் பொழில் தண் பனி வெண் மதியை தடவ – தேவா-சுந்:996/3
மேல்


பைம்பொனே (1)

பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:705/4
மேல்


பையவே (1)

பையவே விடங்கு ஆக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:370/3

மேல்