Select Page


நேசத்தால் (1)

நிறைந்த அந்தணர் நித்தம் நாள்-தொறும் நேசத்தால் உமை பூசிக்கும் இடம் – தேவா-சுந்:897/3
மேல்


நேசத்தினால் (1)

நேசத்தினால் என்னை ஆளும்கொண்டார் நெடு மால் கடல் சூழ் – தேவா-சுந்:189/3
மேல்


நேசம் (1)

நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறை மறையோர் உறை வீழிமிழலை-தனில் நித்தல் – தேவா-சுந்:473/3
மேல்


நேசனுக்கும் (1)

மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் – தேவா-சுந்:403/1
மேல்


நேடவே (1)

நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்தூரையும் எனையும் ஆள் – தேவா-சுந்:461/2,3
மேல்


நேடியும் (1)

மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான் மலர்மேலவன் நேடியும் காண்பு அரியாய் – தேவா-சுந்:30/1
மேல்


நேத்திரங்கள் (1)

காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:468/4
மேல்


நேர் (7)

ஊன் நேர் இ உடலம் புகுந்தாய் என் ஒண் சுடரே – தேவா-சுந்:214/2
விடையும் கொடியும் சடையும் உடையாய் மின் நேர் உருவத்து ஒளியானே – தேவா-சுந்:418/1
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய் – தேவா-சுந்:428/1
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழ சிலை கோலினாய் – தேவா-சுந்:495/1
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு மதி மயங்கி – தேவா-சுந்:533/1
நீல வண்டு அறை கொன்றை நேர் இழை மங்கை ஒர் திங்கள் – தேவா-சுந்:763/1
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி – தேவா-சுந்:766/2
மேல்


நேர்ந்து (1)

உசிர் கொலை பல நேர்ந்து நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:500/2

மேல்