கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஞாஞணம் 1
ஞாணம் 1
ஞாயிறாய் 1
ஞாயிறு 3
ஞாயிறும் 1
ஞாலம் 2
ஞாலம்தான் 1
ஞாழல் 2
ஞான்கு 1
ஞான 2
ஞானக்கண்ணாய் 1
ஞானசம்பந்தற்கு 1
ஞானசம்பந்தன் 2
ஞானசம்பந்தனுக்கு 1
ஞானசம்பந்தனும் 1
ஞானம் 2
ஞானமும் 1
ஞானமூர்த்தி 1
ஞானன் 1
ஞானி 3
ஞாஞணம் (1)
ஞமணம் ஞாஞணம் ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாண் இலா – தேவா-சுந்:338/3
மேல்
ஞாணம் (1)
ஞமணம் ஞாஞணம் ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாண் இலா – தேவா-சுந்:338/3
மேல்
ஞாயிறாய் (1)
நாளை இன்று நெருநல்லாய் ஆகாயம் ஆகி ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை – தேவா-சுந்:407/2
மேல்
ஞாயிறு (3)
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள் – தேவா-சுந்:565/1
மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல் – தேவா-சுந்:567/1
மின்னானே செக்கர் வானத்து இள ஞாயிறு
அன்னானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:976/3,4
மேல்
ஞாயிறும் (1)
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார் கழல் பேண வல்லார் – தேவா-சுந்:196/1
மேல்
ஞாலம் (2)
படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா – தேவா-சுந்:236/1
வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே – தேவா-சுந்:414/4
மேல்
ஞாலம்தான் (1)
ஞாலம்தான் பரவப்படுகின்ற நான்மறை அங்கம் ஓதிய நாவன் – தேவா-சுந்:559/2
மேல்
ஞாழல் (2)
முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/3
தகரத்திடை தாழை திரள் ஞாழல் திரள் நீழல் – தேவா-சுந்:720/3
மேல்
ஞான்கு (1)
வலி சேர் அரக்கன் தட கை ஐ_ஞான்கு அடர்த்த மதிசூடீ – தேவா-சுந்:486/3
மேல்
ஞான (2)
குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை – தேவா-சுந்:689/3
நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
மேல்
ஞானக்கண்ணாய் (1)
ஆனை தோலாய் ஞானக்கண்ணாய் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:422/4
மேல்
ஞானசம்பந்தற்கு (1)
ஊனம் இல் காழி-தன்னுள் உயர் ஞானசம்பந்தற்கு அன்று – தேவா-சுந்:993/3
மேல்
ஞானசம்பந்தன் (2)
நல் தமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கரையன் நாளைப்போவானும் – தேவா-சுந்:563/1
நாவின்மிசைஅரையனொடு தமிழ் ஞானசம்பந்தன்
யாவர் சிவன் அடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன் – தேவா-சுந்:801/1,2
மேல்
ஞானசம்பந்தனுக்கு (1)
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் – தேவா-சுந்:642/1
மேல்
ஞானசம்பந்தனும் (1)
நல் இசை ஞானசம்பந்தனும் நாவுக்குஅரசரும் பாடிய நல் தமிழ் மாலை – தேவா-சுந்:681/1
மேல்
ஞானம் (2)
கற்றிலேன் கலைகள் பல ஞானம் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் – தேவா-சுந்:619/2
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:993/4
மேல்
ஞானமும் (1)
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி – தேவா-சுந்:594/3
மேல்
ஞானமூர்த்தி (1)
ஞானமூர்த்தி நட்டம் ஆடி நவிலும் இடம் – தேவா-சுந்:828/2
மேல்
ஞானன் (1)
நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய் – தேவா-சுந்:812/1
மேல்
ஞானி (3)
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய் – தேவா-சுந்:166/3
என்பினையே கலன் ஆக அணிந்தானை எங்கள் எருது ஏறும் பெருமானை இசை ஞானி சிறுவன் – தேவா-சுந்:392/1
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன் இசை ஞானி காதலன் திரு நாவலூர் கோன் – தேவா-சுந்:403/3