கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஓ 1
ஓங்காரத்து 1
ஓங்கி 1
ஓங்கிய 2
ஓங்கு 3
ஓங்கும் 1
ஓசை 3
ஓசையை 2
ஓட்டந்து 1
ஓட்டும் 1
ஓட 4
ஓடி 11
ஓடிய 3
ஓடியும் 1
ஓடு 7
ஓடும் 2
ஓடுவித்தாய் 1
ஓடை 1
ஓணகாந்தன்தளி 10
ஓத 6
ஓதம் 8
ஓதல் 1
ஓதி 5
ஓதிய 2
ஓதியன் 1
ஓதியை 1
ஓதியோர் 1
ஓது 1
ஓதுதிர் 1
ஓதும் 2
ஓதுவர் 1
ஓதுவார் 1
ஓப்பி 1
ஓம்பி 3
ஓம்பும் 3
ஓம்புமே 1
ஓம 2
ஓயும் 1
ஓர் 108
ஓர்க்கின்ற 1
ஓர்கூறன் 1
ஓர்கூறு 4
ஓர்ந்தனன் 2
ஓர்பங்கு 4
ஓர்பாகத்து 1
ஓர்பாகம் 7
ஓர்பாகமா 1
ஓர்பாகர் 1
ஓர்அஞ்சினோடு 1
ஓராது 1
ஓரார் 1
ஓரி 3
ஓரீர் 2
ஓரேன் 2
ஓவா 2
ஓவாது 1
ஓவு 1
ஓ (1)
ஓ வணம் ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன்தளி உளார்தாம் – தேவா-சுந்:51/1
மேல்
ஓங்காரத்து (1)
ஊன் அங்கத்து உயிர்ப்பாய் உலகு எல்லாம் ஓங்காரத்து உருவாகி நின்றானை – தேவா-சுந்:677/1
மேல்
ஓங்கி (1)
உம்பரான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலர் உறைவான் – தேவா-சுந்:185/1
மேல்
ஓங்கிய (2)
ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர் பொய்கை – தேவா-சுந்:292/2
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/4
மேல்
ஓங்கு (3)
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வனை – தேவா-சுந்:350/1
ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ உன்னை உன்னிய மூவர் நின் சரணம் – தேவா-சுந்:676/1
ஒழிவது அழகோ சொல்லாய் அருள் ஓங்கு சடையானே – தேவா-சுந்:934/2
மேல்
ஓங்கும் (1)
ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப – தேவா-சுந்:667/2
மேல்
ஓசை (3)
நீதி ஆக எழில் ஓசை நித்தர் ஆகி சித்தர் சூழ – தேவா-சுந்:58/3
ஓசை பெரிதும் உகப்பேன் ஒலி கடல் நஞ்சு அமுது உண்ட – தேவா-சுந்:749/3
நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
மேல்
ஓசையை (2)
ஏழ்இசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர் புக்கு – தேவா-சுந்:847/3
ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா விரசும் ஓசையை பாடலும் நீ – தேவா-சுந்:853/2
மேல்
ஓட்டந்து (1)
மடித்து ஓட்டந்து வன் திரை எற்றியிட வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய – தேவா-சுந்:33/3
மேல்
ஓட்டும் (1)
ஓட்டும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:923/4
மேல்
ஓட (4)
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் – தேவா-சுந்:20/3
செறுவில் வாளைகள் ஓட செங்கயல் பங்கயத்து ஒதுங்க – தேவா-சுந்:772/2
உரும் அன்ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம் – தேவா-சுந்:917/2
உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து உகந்து – தேவா-சுந்:989/3
மேல்
ஓடி (11)
ஓடி போகீர் பற்றும் தாரீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:46/4
இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு அருவி இருபாலும் ஓடி இரைக்கும் திரை கை – தேவா-சுந்:92/3
குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான் – தேவா-சுந்:142/1
மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார் – தேவா-சுந்:176/1
கடுத்தவன் தேர் கொண்டு ஓடி கயிலாய நல் மா மலையை – தேவா-சுந்:225/1
சூழும் ஓடி சுழன்று உழலும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:374/1
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடி தழுவ வெளிப்பட்ட – தேவா-சுந்:633/3
திகைத்து ஓடி தன் பிடி தேடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:803/4
கை பாவிய கவணால் மணி எறிய இரிந்து ஓடி
செம் வாயன கிளி பாடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:805/3,4
ஆனை குலம் இரிந்து ஓடி தன் பிடி சூழலில் திரிய – தேவா-சுந்:806/1
இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி அ கிளியை – தேவா-சுந்:808/3
மேல்
ஓடிய (3)
வேகம்கொண்டு ஓடிய வெள் விடை ஏறி ஓர் மெல்லியலை – தேவா-சுந்:169/1
வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில் அழுந்தாதே – தேவா-சுந்:796/1
நாள் ஓடிய நமனார் தமர் நணுகா முனம் நணுகி – தேவா-சுந்:796/2
மேல்
ஓடியும் (1)
அழைத்து ஓடியும் பிளிறீ அவை அலமந்து வந்து எய்த்து – தேவா-சுந்:803/3
மேல்
ஓடு (7)
ஓடு புனல் கரை ஆம் இளமை உறங்கி விழித்தால் ஒக்கும் இ பிறவி – தேவா-சுந்:25/3
ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே – தேவா-சுந்:291/2
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட வெண் தலை ஓடு கொண்டு – தேவா-சுந்:361/1
காடு நும் பதி ஓடு கையது காதல்செய்பவர் பெறுவது என் – தேவா-சுந்:367/2
விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை – தேவா-சுந்:576/3
ஓடு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:752/3
ஓடு உடையன் கலனா உடை கோவணவன் உமை ஓர் – தேவா-சுந்:988/1
மேல்
ஓடும் (2)
உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லைவாயிலாய் அடியேன் – தேவா-சுந்:703/3
மேல்
ஓடுவித்தாய் (1)
உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா – தேவா-சுந்:430/2
மேல்
ஓடை (1)
ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறங்கை அனம் – தேவா-சுந்:1032/3
மேல்
ஓணகாந்தன்தளி (10)
உய்யும் ஆறு ஒன்று அருளிச்செய்யீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:42/4
உங்களுக்கு ஆட்செய்யமாட்டோம் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:43/4
ஒற்றிவைத்து இங்கு உண்ணல் ஆமோ ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:44/4
ஒல்லை வாழ்க்கை ஒழியமாட்டீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:45/4
ஓடி போகீர் பற்றும் தாரீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:46/4
ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:47/4
உம்மை அன்றே எம்பெருமான் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:48/4
உலை அமைத்து இங்கு ஒன்றமாட்டேன் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:49/4
ஊரும் காடு உடையும் தோலே ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:50/4
ஓ வணம் ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன்தளி உளார்தாம் – தேவா-சுந்:51/1
மேல்
ஓத (6)
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய – தேவா-சுந்:61/1
ஓத நல் தக்க வன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:177/3
ஓத கண்டேன் உன்னை மறவேன் உமையாள்_கணவா எனை ஆள்வாய் – தேவா-சுந்:423/3
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை – தேவா-சுந்:630/1
பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே – தேவா-சுந்:901/4
ஓத கடல் நஞ்சினை உண்டிட்ட – தேவா-சுந்:959/1
மேல்
ஓதம் (8)
ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர் – தேவா-சுந்:504/2
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:552/4
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:558/4
ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும் – தேவா-சுந்:559/1
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
முகரத்திடை முத்தின் ஒளி பவள திரள் ஓதம்
தகரத்திடை தாழை திரள் ஞாழல் திரள் நீழல் – தேவா-சுந்:720/2,3
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:931/3,4
மேல்
ஓதல் (1)
ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா விரசும் ஓசையை பாடலும் நீ – தேவா-சுந்:853/2
மேல்
ஓதி (5)
வேதம் ஓதி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:58/4
வாய் ஆடி மா மறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து – தேவா-சுந்:174/1
ஞமணம் ஞாஞணம் ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாண் இலா – தேவா-சுந்:338/3
வேதம் ஓதி வெண் நீறு பூசி வெண் கோவணம் தற்று அயலே – தேவா-சுந்:504/1
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
மேல்
ஓதிய (2)
ஞாலம்தான் பரவப்படுகின்ற நான்மறை அங்கம் ஓதிய நாவன் – தேவா-சுந்:559/2
அங்கம் ஓதிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:762/3
மேல்
ஓதியன் (1)
ஓதியன் உம்பர்-தம் கோன் உலகத்தினுள் எ உயிர்க்கும் – தேவா-சுந்:985/3
மேல்
ஓதியை (1)
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம் – தேவா-சுந்:859/3
மேல்
ஓதியோர் (1)
அங்கம் ஓதியோர் ஆறைமேற்றளி-நின்றும் போந்து வந்து இன்னம்பர் – தேவா-சுந்:351/1
மேல்
ஓது (1)
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ் – தேவா-சுந்:901/3
மேல்
ஓதுதிர் (1)
மெய் எலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும் – தேவா-சுந்:370/2
மேல்
ஓதும் (2)
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
அல்லல் பெரிதும் அறுப்பான் அரு மறை ஆறு அங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:742/3,4
மேல்
ஓதுவர் (1)
மந்திரம் ஓதுவர் மா மறை பாடுவர் மான் மறியர் – தேவா-சுந்:186/2
மேல்
ஓதுவார் (1)
வேத வேதியர் வேத நீதியர் ஓதுவார் விரி நீர் மிழலையுள் – தேவா-சுந்:901/1
மேல்
ஓப்பி (1)
குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டம்தர – தேவா-சுந்:783/3
மேல்
ஓம்பி (3)
வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் – தேவா-சுந்:179/3
கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:304/2
கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும் – தேவா-சுந்:679/2
மேல்
ஓம்பும் (3)
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும் – தேவா-சுந்:687/1
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும்
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:687/1,2
எங்கும் இருந்து அந்தணர் எரி மூன்று அவை ஓம்பும் இடம் – தேவா-சுந்:991/2
மேல்
ஓம்புமே (1)
பேணியே விருந்து ஓம்புமே என்று பேசினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:342/2
மேல்
ஓம (2)
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
ஓம கடலார் உகந்த இடம் ஆம் – தேவா-சுந்:961/2
மேல்
ஓயும் (1)
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை – தேவா-சுந்:577/3
மேல்
ஓர் (108)
கோத்திட்டையும் கோவலும் கோவில்கொண்டீர் உம்மை கொண்டு உழல்கின்றது ஓர் கொல்லை சில்லை – தேவா-சுந்:11/1
கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் கடலை கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர் – தேவா-சுந்:12/2
பண்ஆர்மொழியானை ஓர்பங்கு உடையீர் படுகாட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர் – தேவா-சுந்:16/3
துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி – தேவா-சுந்:18/2
மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய் – தேவா-சுந்:18/3
முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒற்றினையும் – தேவா-சுந்:21/2
முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒற்றினையும் – தேவா-சுந்:21/2
குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:21/4
சொல்லாய் கழிகின்றது அறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:22/4
அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:24/4
வாடி இருந்து வருந்தல்செய்யாது அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:25/4
புலன் ஐந்தும் மயங்கி அகம் குழைய பொரு வேல் ஓர் நமன் தமர்தாம் நலிய – தேவா-சுந்:26/3
அலமந்து மயங்கி அயர்வதன் முன் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:26/4
ஆல நிழலில் அமர்ந்தாய் அமரா அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:27/4
அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:28/4
அண்டா அமரர்க்கு அமரர் பெருமான் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:29/4
மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான் மலர்மேலவன் நேடியும் காண்பு அரியாய் – தேவா-சுந்:30/1
ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:30/4
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் – தேவா-சுந்:31/3
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால் – தேவா-சுந்:35/2
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால் – தேவா-சுந்:35/2
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் – தேவா-சுந்:43/1
மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்யீர் – தேவா-சுந்:44/2
உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர் உண்மை அன்றே – தேவா-சுந்:54/2
மானுட பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:74/3
நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன்அல்லேன் – தேவா-சுந்:76/2
வருவ மாய கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:80/2
ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவு ஆக ஓர் கண் மலர் சூட்டலுமே – தேவா-சுந்:84/3
மானை இடத்தது ஓர் கையன் இடம் மதம் மாறுபட பொழியும் மலை போல் – தேவா-சுந்:94/3
அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து – தேவா-சுந்:102/3
கனல் உடை மா மழு ஏந்தி ஓர் கையில் – தேவா-சுந்:107/2
குலை ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:123/2
முத்தம் கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:124/2
சுரும்பு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:126/2
மொட்டு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:128/2
தாது ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:129/2
செய் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:130/2
மண் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:131/2
பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:134/3
பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:134/4
நா சில பேசி நமர் பிறர் என்று நன்று தீது என்கிலர் மற்று ஓர்
பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/1,2
பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர்தாம் பலரையும் ஆட்கொள்வர் பரிந்து ஓர்
பேச்சு இலர் ஒன்றை தரஇலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:137/3,4
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:140/4
பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன் புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன் – தேவா-சுந்:146/1
எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணைதர நினைத்தேன் உள்ளம் உள்ளளவும் – தேவா-சுந்:152/2
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/2
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் – தேவா-சுந்:167/2
வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார் – தேவா-சுந்:168/2
வேகம்கொண்டு ஓடிய வெள் விடை ஏறி ஓர் மெல்லியலை – தேவா-சுந்:169/1
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
வாய் ஆடி மா மறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து – தேவா-சுந்:174/1
தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய் – தேவா-சுந்:174/2
மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார் – தேவா-சுந்:176/1
தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை – தேவா-சுந்:176/3
பேரும் ஓர் ஆயிரம் பேர் உடையார் பெண்ணோடு ஆணும் அல்லர் – தேவா-சுந்:180/1
ஏன கொம்பும் இள ஆமையும் பூண்டு அங்கு ஓர் ஏறும் ஏறி – தேவா-சுந்:181/1
ஊட்டிக்கொண்டு உண்பது ஓர் ஊண் இலர் ஊர் இடு பிச்சை அல்லால் – தேவா-சுந்:182/1
பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால் – தேவா-சுந்:182/2
மறவனாராய் அங்கு ஓர் பன்றி பின் போவது மாயம் கண்டீர் – தேவா-சுந்:183/2
இறைவனார் ஆதியார் சோதியராய் அங்கு ஓர் சோர்வு படா – தேவா-சுந்:183/3
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படரும் சடை கங்கை வைத்தாய் – தேவா-சுந்:201/1
மோறாந்து ஓர் ஒரு-கால் நினையாது இருந்தாலும் – தேவா-சுந்:211/1
எற்றும் ஓர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:311/4
தேறனுர் திருமாமகள்_கோன் திருமால் ஓர்
கூறன் ஊர் குரங்காடுதுறை திரு கோவல் – தேவா-சுந்:318/2,3
பாறு தாங்கிய காடரோ படு தலையரோ மலைப்பாவை ஓர்
கூறு தாங்கிய குழகரோ குழை காதரோ குறும் கோட்டு இள – தேவா-சுந்:330/1,2
குன்றி போல்வது ஓர் உருவரோ குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ – தேவா-சுந்:332/2
மானை மேவிய கண்ணினாள் மலைமங்கை நங்கையை அஞ்ச ஓர்
ஆனை ஈர் உரி போர்ப்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:333/3,4
ஊர் எலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓர் இடத்திலே கொள்ளும் நீர் – தேவா-சுந்:361/2
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய் – தேவா-சுந்:428/1
பேரும் ஓர் ஆயிரம் என்பரால் எம்பிரானுக்கே – தேவா-சுந்:452/4
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால் விரல் – தேவா-சுந்:464/2
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
தூசு உடைய அகல் அல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடாய் வந்து – தேவா-சுந்:473/1
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
பீறல் கூறை உடுத்து ஓர் பத்திரம் கட்டி வெட்டனராய் – தேவா-சுந்:501/1
வேய்ந்த வெண் பிறை கண்ணி-தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:506/2
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம் அதுவே புகல் – தேவா-சுந்:511/2
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர் உமை ஓர் ஒருபாகம் – தேவா-சுந்:541/3
ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால் யாவராகில் என் அன்பு உடையார்கள் – தேவா-சுந்:553/1
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஓர் உறைவானே – தேவா-சுந்:556/4
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய் மைந்தனே மணியே மணவாளா – தேவா-சுந்:558/1
மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ மணி முழா முழங்க அருள்செய்த – தேவா-சுந்:567/3
கம்பம் மால் களிற்றின் உரியானை காமன் காய்ந்தது ஓர் கண் உடையானை – தேவா-சுந்:569/1
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை ஒண் நுதல் தனி கண்நுதலானை – தேவா-சுந்:570/1
பேர் ஓர் ஆயிரமும் உடையானை பேசினால் பெரிதும் இனியானை – தேவா-சுந்:580/1
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:613/1
இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:614/4
இரைப்பனேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:615/4
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் – தேவா-சுந்:619/3
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி – தேவா-சுந்:620/3
ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:622/4
காட்டகத்து உறு புலி உரியானை கண் ஓர் மூன்று உடை அண்ணலை அடியேன் – தேவா-சுந்:637/3
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்க என அருளி – தேவா-சுந்:669/1
நெஞ்சில் ஓர் உதைகொண்ட பிரானை நினைப்பவர் மனம் நீங்ககில்லானை – தேவா-சுந்:691/2
தந்தை தாய் உலகுக்கு ஓர் தத்துவன் மெய்த்தவத்தோர்க்கு – தேவா-சுந்:764/1
வள்ளை வெண் மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில் – தேவா-சுந்:774/2
ஊன்றுவது ஓர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:911/4
தம்மானே தண் தமிழ் நூல் புலவாணர்க்கு ஓர்
அம்மானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:980/3,4
நீற்றானே நீள் சடை மேல் நிறை உள்ளது ஓர்
ஆற்றானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:982/3,4
ஆனிடை ஐந்து அமர்ந்தான் அணு ஆகி ஓர் தீ உரு கொண்டு – தேவா-சுந்:987/2
ஓடு உடையன் கலனா உடை கோவணவன் உமை ஓர்
பாடு உடையன் பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன் பயில – தேவா-சுந்:988/1,2
அரும் தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி ஓர் ஆல் அதன் கீழ் – தேவா-சுந்:1007/1
வரம் மலி வாணன் வந்து வழிதந்து எனக்கு ஏறுவது ஓர்
சிரம் மலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1024/3,4
மேல்
ஓர்க்கின்ற (1)
ஓர்க்கின்ற செவியை சுவை-தன்னை உணரும் நாவினை காண்கின்ற கண்ணை – தேவா-சுந்:605/3
மேல்
ஓர்கூறன் (1)
குழலை வென்ற மொழி மடவாளை ஓர்கூறன் ஆம் – தேவா-சுந்:116/1
மேல்
ஓர்கூறு (4)
உடைத்தாய் வேள்வி-தனை உமையாளை ஓர்கூறு உடையாய் – தேவா-சுந்:236/2
மங்கை ஓர்கூறு அமர்ந்தீர் மறை நான்கும் விரித்து உகந்தீர் – தேவா-சுந்:252/1
உமை ஓர்கூறு உடையாய் உருவே திரு காளத்தியுள் – தேவா-சுந்:260/3
மங்கை ஓர்கூறு உகந்து ஏறு உகந்து ஏறி மாறலார் திரிபுரம் நீறு எழ செற்ற – தேவா-சுந்:760/1
மேல்
ஓர்ந்தனன் (2)
ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள் – தேவா-சுந்:459/1
ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள் – தேவா-சுந்:459/1
மேல்
ஓர்பங்கு (4)
பண்ஆர்மொழியானை ஓர்பங்கு உடையீர் படுகாட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர் – தேவா-சுந்:16/3
தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர் உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர் – தேவா-சுந்:19/3
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர்பங்கு உடையாய் – தேவா-சுந்:200/1
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய் – தேவா-சுந்:428/1
மேல்
ஓர்பாகத்து (1)
இடக்கிலேன் பரவை திரை கங்கை சடையானை உமையாளை ஓர்பாகத்து
அடக்கினானை அம் தாமரை பொய்கை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:611/3,4
மேல்
ஓர்பாகம் (7)
வடம் எடுத்த கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் கடல்-வாய் – தேவா-சுந்:56/3
மழை கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர் வளர் புன் சடை கங்கையை வைத்து உகந்தீர் – தேவா-சுந்:91/1
தழலும் மேனியன் தையல் ஓர்பாகம் அமர்ந்தவன் – தேவா-சுந்:120/1
அரவு ஏர் அல்குலாளை ஓர்பாகம் அமர்ந்து – தேவா-சுந்:325/1
பெண் அவன் பெண் அவன் மேனி ஓர்பாகம் ஆம் பிஞ்ஞகன் – தேவா-சுந்:462/3
மடவரல் உமை நங்கை-தன்னை ஓர்பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:505/2
பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை – தேவா-சுந்:507/2
மேல்
ஓர்பாகமா (1)
பள்ளம் பாறும் நறும் புனலை சூடி பெண் ஓர்பாகமா
வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே – தேவா-சுந்:1034/1,2
மேல்
ஓர்பாகர் (1)
மங்கை ஓர்பாகர் மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல் – தேவா-சுந்:190/3
மேல்
ஓர்அஞ்சினோடு (1)
உரைதரு மாலை ஓர்அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:708/3
மேல்
ஓராது (1)
ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:914/3
மேல்
ஓரார் (1)
நாள்நாளும் மலர் இட்டு வணங்கார் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி – தேவா-சுந்:610/2,3
மேல்
ஓரி (3)
கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
முது வாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே – தேவா-சுந்:415/1
நரி தலை கவ்வ நின்று ஓரி கூப்பிட நள்ளிருள் – தேவா-சுந்:449/1
மேல்
ஓரீர் (2)
ஆடி பாடி அழுது நெக்கு அங்கு அன்புடையவர்க்கு இன்பம் ஓரீர்
தேடித்தேடி திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்கமாட்டீர் – தேவா-சுந்:46/2,3
எம்மை பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதும் தாரீர் ஏதும் ஓரீர்
உம்மை அன்றே எம்பெருமான் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:48/3,4
மேல்
ஓரேன் (2)
நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன் நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன் – தேவா-சுந்:141/1
துறையுற குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தகவின்மையை ஓரேன்
பிறையுடை சடையனை எங்கள் பிரானை பேர் அருளாளனை கார் இருள் போன்ற – தேவா-சுந்:601/2,3
மேல்
ஓவா (2)
கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா துறையூர் – தேவா-சுந்:128/3
பறையும் சங்கு ஒலி ஓவா படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:873/3
மேல்
ஓவாது (1)
அரிய நான்மறை அந்தணர் ஓவாது அடி பணிந்து அறிதற்கு அரியானை – தேவா-சுந்:685/3
மேல்
ஓவு (1)
ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல் – தேவா-சுந்:490/1