Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓ 3
ஓக்கம் 1
ஓகை 1
ஓங்கல் 3
ஓங்கும் 1
ஓச்சல் 1
ஓச்சி 1
ஓச்சை 1
ஓசை 5
ஓசைசெய்தளை 1
ஓசையும் 2
ஓட்டம் 1
ஓட்டி 1
ஓடம் 1
ஓடல் 2
ஓடும் 1
ஓடை 3
ஓணம் 1
ஓத்து 2
ஓதம் 1
ஓதமும் 1
ஓதல் 5
ஓதலும் 1
ஓதன்மையாடல் 1
ஓதனம் 1
ஓதி 3
ஓதிமம் 1
ஓதிய 4
ஓதியும் 1
ஓதினர் 2
ஓதும்பள்ளி 1
ஓதுவார்க்குஉணவு 1
ஓதுவித்தல் 1
ஓதை 3
ஓந்தி 1
ஓம்பலும் 1
ஓமம் 1
ஓமமண்டபம் 1
ஓமவிறகு 1
ஓய்தலை 1
ஓர் 22
ஓர்தல் 2
ஓர்ப்பு 1
ஓர்ப்பும் 1
ஓரி 4
ஓரியும் 1
ஓரை 4
ஓரையும் 1
ஓலே 1
ஓலை 2
ஓலைதீட்டும்படை 1
ஓவரும் 1
ஓவல் 2
ஓவா 1
ஓவியம் 1
ஓவியர் 1

ஓ (3)

ஐயோ அந்தோ அன்னோ ஆ ஓ
என்னும் இ அதிசயம்உறஇரங்கற்கு உரிய – 8.பண்பு:8 108/1,2
ஆ ஏ ஓ அ மூன்றும் வினா – 10.ஒலிப்பெயர்:10 75/1
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனும் – 10.ஒலிப்பெயர்:10 159/1
மேல்

ஓக்கம் (1)

உம்பர் மீப்புலம் வலமே ஓக்கம்
துங்கம் உவணம் பருமம் உந்தி – 5.இடப்பெயர்:5 236/1,2
மேல்

ஓகை (1)

ஓகை மாராயம் உவகை ஆகும் – 8.பண்பு:8 140/1
மேல்

ஓங்கல் (3)

அம்பு வரை வேணு கழை அமை ஓங்கல்
பாதிரி கிளை அரி பாண்டில் உள்பட – 4.மரப்பெயர்:4 76/4,5
தரணி பூதரம் ஓங்கல் பிறங்கல் – 5.இடப்பெயர்:5 16/4
ஓங்கல் நிமிர்தல் புரை பரி ஈர் ஆறும் – 8.பண்பு:8 27/3
மேல்

ஓங்கும் (1)

உச்சம் தாரம் ஓங்கும் வல்இசை – 10.ஒலிப்பெயர்:10 136/1
மேல்

ஓச்சல் (1)

வீசுதல் எறிதல் ஓச்சல் செலவிடல் – 9.செயல்:9 111/1
மேல்

ஓச்சி (1)

ஊழ்முறை உலக்கை ஓச்சி வாழிய – 10.ஒலிப்பெயர்:10 133/1
மேல்

ஓச்சை (1)

வறையல் ஓச்சை – 6.பல்பொருள்:6 95/1
மேல்

ஓசை (5)

வருபவை ஓசை யாழின் பெயரே – 7.செயற்கைவடிவ:7 138/3
அங்க அன்னம் காடை அவற்று ஓசை – 10.ஒலிப்பெயர்:10 155/2
தவளை தேனுவோடு ஆடு இசை ஓசை – 10.ஒலிப்பெயர்:10 158/2
ஓசை கர்ச்சனை ஒலி என் கிளவி – 10.ஒலிப்பெயர்:10 174/3
பல் வகை இயங்கல் ஓசை பாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/1
மேல்

ஓசைசெய்தளை (1)

குடச்சூல் ஞெகிழம் ஓசைசெய்தளை – 7.செயற்கைவடிவ:7 85/1
மேல்

ஓசையும் (2)

இழும்எனல் ஓசையும் இனிமையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/1
வண்ணம் ஓசையும் வடிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 202/1
மேல்

ஓட்டம் (1)

அதரம் பாலிகை இதழே ஓட்டம்
முத்தம் உதடு என மொழிந்தனர் புலவர் – 2.மக்கள்பெயர்:2 197/1,2
மேல்

ஓட்டி (1)

மற குறும்பு ஓட்டி அறத்தின் வழி நின்று – 8.பண்பு:8 266/1
மேல்

ஓடம் (1)

பகடு பஃறி அம்பி ஓடம்
திமிலே தோணி என செப்பினரே – 7.செயற்கைவடிவ:7 218/1,2
மேல்

ஓடல் (2)

திட்கல் ஓடல் தேங்கல் ஞெரேலெனல் – 8.பண்பு:8 171/1
நெரிதரல் பாறல் இரிதல் ஓடல் – 9.செயல்:9 51/1
மேல்

ஓடும் (1)

மேதகு நீர் மேல் ஓடும் மரக்கலம் – 7.செயற்கைவடிவ:7 216/5
மேல்

ஓடை (3)

உலவை ஓடை – 4.மரப்பெயர்:4 68/1
இலஞ்சி தாங்கல் சுனை ஏல்வை ஓடை
வட்டம் தடாகம் மடு குளம் வலயம் – 5.இடப்பெயர்:5 61/2,3
பட்டம் ஓடை – 7.செயற்கைவடிவ:7 74/1
மேல்

ஓணம் (1)

உலக்கை சோனை மாயோன்நாள் ஓணம் – 1.தெய்வப்பெயர்:1 98/2
மேல்

ஓத்து (2)

இருக்கு ஓத்து ஆரணம் வேதம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 84/1
ஓத்து என மொழிப உயர் மொழி புலவர் – 10.ஒலிப்பெயர்:10 103/3
மேல்

ஓதம் (1)

வேலாவலயம் கார்கோள் ஓதம்
வாருணம் சிந்து வாரம் அம்புராசி – 5.இடப்பெயர்:5 41/8,9
மேல்

ஓதமும் (1)

ஓதமும் புணரியும் கடல்திரை ஆகும் – 5.இடப்பெயர்:5 42/1
மேல்

ஓதல் (5)

கட்டுரை விளம்பல் கரைதல் ஓதல்
சொற்றல் வழங்கல் வசநம் காதை – 10.ஒலிப்பெயர்:10 2/3,4
ஓதல் அத்தியயனமும் படித்தல் – 10.ஒலிப்பெயர்:10 81/2
ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 79/1
அரசர்அறுதொழில் ஓதல் வேட்டல் – 12.பல்பொருள்கூட்டம்:12 80/1
வணிகர்அறுதொழில் ஓதல் வேட்டல் – 12.பல்பொருள்கூட்டம்:12 81/1
மேல்

ஓதலும் (1)

நச்சு பேசலும் நல்லுரை ஓதலும்
அச்சு மாறி ஆண் பெண் ஆகியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/2,3
மேல்

ஓதன்மையாடல் (1)

ஓதன்மையாடல் பாடம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 101/1
மேல்

ஓதனம் (1)

அன்னம் ஓதனம் அயினி அடிசில் – 6.பல்பொருள்:6 79/2
மேல்

ஓதி (3)

ஓதி கூழை பரிசாரம் கதுப்பு – 2.மக்கள்பெயர்:2 213/2
குவடு குன்று ஓதி பறம்பு வரை விண்டு – 5.இடப்பெயர்:5 16/5
ஓதி என்பர் உணர்ந்திசினோரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/2
மேல்

ஓதிமம் (1)

ஓதிமம் அஞ்சம் எகினம் அன்னம் – 3.விலங்கு:3 165/1
மேல்

ஓதிய (4)

ஓதிய நான்கும் எருமை பெயரே – 3.விலங்கு:3 21/2
ஓதிய பழுமரம் கோளி ஆலே – 4.மரப்பெயர்:4 8/2
ஓதிய மூலம் மரப்பொதுப்பெயரே – 4.மரப்பெயர்:4 82/2
ஓதிய ஐந்தும் இலாபம் ஆகும் – 8.பண்பு:8 212/2
மேல்

ஓதியும் (1)

உறுதியும் சால்பும் ஓதியும் அறிவும் – 10.ஒலிப்பெயர்:10 78/1
மேல்

ஓதினர் (2)

ஓதினர் நூலோர் உடலின்பெயரே – 2.மக்கள்பெயர்:2 166/4
நள்ளே நடு என்று ஓதினர் நயந்தோர் – 8.பண்பு:8 227/2
மேல்

ஓதும்பள்ளி (1)

அறப்புறம் ஓதும்பள்ளி ஆகும் – 5.இடப்பெயர்:5 150/1
மேல்

ஓதுவார்க்குஉணவு (1)

ஆதுலர்சாலை ஓதுவார்க்குஉணவு அறுசமயத்தோர்க்குஉணவு – 12.பல்பொருள்கூட்டம்:12 172/1
மேல்

ஓதுவித்தல் (1)

ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 79/1
மேல்

ஓதை (3)

ஆரல் ஓதை பிராகாரம் வேலி – 5.இடப்பெயர்:5 196/3
ஓதை நாதம் கம்பலை ஓலே – 10.ஒலிப்பெயர்:10 174/1
கலித்தல் கரைதல் ஓதை பராரை – 10.ஒலிப்பெயர்:10 179/3
மேல்

ஓந்தி (1)

எழில் தண்டு கோம்பி ஓந்தி என்று இசைப்பர் – 3.விலங்கு:3 57/1
மேல்

ஓம்பலும் (1)

போற்றலும் ஓம்பலும் பாதுகாத்தல் – 9.செயல்:9 86/1
மேல்

ஓமம் (1)

ஓமம் கிருது எச்சம் யாகம் – 9.செயல்:9 85/1
மேல்

ஓமமண்டபம் (1)

சமித்தம் ஓமமண்டபம் சாரும் – 5.இடப்பெயர்:5 151/1
மேல்

ஓமவிறகு (1)

சமிதை ஓமவிறகு என சாற்றுவர் – 6.பல்பொருள்:6 62/1
மேல்

ஓய்தலை (1)

ஒசிதலும் தளர்தலும் ஓய்தலை உரைக்கும் – 9.செயல்:9 28/1
மேல்

ஓர் (22)

உபயமும் உகளமும் ஓர் இரண்டு ஆகும் – 6.பல்பொருள்:6 124/1
விரிசிகை ஏழும் ஓர் எட்டும் ஈர் எட்டும் – 7.செயற்கைவடிவ:7 57/2
ஓர் இன பொருளை ஒருவழி வைப்பது – 10.ஒலிப்பெயர்:10 103/2
ஏனை என்பது ஓர் இசை விகற்பம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 135/1
வந்துழி யாழ்க்கண்ணது ஓர் உறுப்பும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/2
கழங்கு ஓர் ஆடலும் கொடி கழலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/1
சேரும் ஏழ் நரம்பில் ஓர் நரம்பும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/2
ஆசை பிசாசம் ஓர் ஆயுதம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/2
மூலம் ஓர் நாளும் வேரும் முதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 198/1
ஓர் இடைச்சொல்லும் உறை எனற்கு உரிய – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/5
ஒருதலைக்காமமும் யாழில் ஓர் நரம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/1
யாமம் ஓர் வேதம் உபாயம் சாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 291/1
உழவு நிலத்தில் எழுவது ஓர் புதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 314/1
கரடியின் பெயரும் கணக்கில் ஓர் குணிப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 331/1
ஓர் கொடி பிறப்பும் அதன் உவமை மாதரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 360/2
ஓர் இனத்து எழுத்தால் உயர்ந்தபாட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/6
புட்கரத்தீவே எனும் ஓர் ஏழும் – 12.பல்பொருள்கூட்டம்:12 104/4
பாதலம் ஓர் ஏழ் உலகு என பகர்வர் – 12.பல்பொருள்கூட்டம்:12 107/3
வேளாண்மை மைந்தர்க்கு ஓர் ஈர்ஐந்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 156/6
உயிரின் வேதனை ஓர் ஈர்ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 161/4
மற்றை புல்லும் மரனும் ஓர் அறிவே – 12.பல்பொருள்கூட்டம்:12 174/2
கால் ஓர் நான்கும் தனி கையும் கோசமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 205/1
மேல்

ஓர்தல் (2)

ஓர்தல் தெளிதல் ஆய்வு ஆராய்தல் – 9.செயல்:9 75/2
தவமொடு தூய்மை தத்துவநூல் ஓர்தல்
மனம் உவந்து இருத்தல் தெய்வம் வழிபடல் – 12.பல்பொருள்கூட்டம்:12 125/1,2
மேல்

ஓர்ப்பு (1)

ஓர்ப்பு கடைப்பிடி குறிக்கோள் தேற்றம் என்று – 10.ஒலிப்பெயர்:10 38/1
மேல்

ஓர்ப்பும் (1)

கமித்தலும் ஆற்றலும் சகித்தலும் ஓர்ப்பும்
மற்று அ பொறையை வகுக்கும் கிளவி – 8.பண்பு:8 157/1,2
மேல்

ஓரி (4)

பங்கி பித்தை ஓரி சிகை என்று – 2.மக்கள்பெயர்:2 212/2
ஓரி பங்கி உளையே உரோமம் – 2.மக்கள்பெயர்:2 215/1
இகலன் ஓரி என்றும் ஆகும் – 3.விலங்கு:3 46/1
ஆடவர்மயிரும் முசுவும் ஓரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/1
மேல்

ஓரியும் (1)

ஓரியும் கலையும் கடுவனும் முசுவே – 3.விலங்கு:3 52/1
மேல்

ஓரை (4)

ஓரை பொய்தல் இகுளை ஆயம் – 2.மக்கள்பெயர்:2 153/1
ஓரை மகளிர்ஆடும்களம் ஆம் – 7.செயற்கைவடிவ:7 232/1
ஓரை பண்ணை கெடவரல் பொய்தல் – 9.செயல்:9 4/1
கூற்றையும் ஓரை கிளவி கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 258/2
மேல்

ஓரையும் (1)

ஓரையும் பண்ணையும் ஆயமும் குழுவும் – 2.மக்கள்பெயர்:2 165/1
மேல்

ஓலே (1)

ஓதை நாதம் கம்பலை ஓலே
ஆகுலம் புலம்பல் கோடணை அரவம் – 10.ஒலிப்பெயர்:10 174/1,2
மேல்

ஓலை (2)

பத்திரம் ஓலை பாசடை தண்ணடை – 4.மரப்பெயர்:4 111/1
ஓலை புளி மா மாழை என்று உரைக்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 355/2
மேல்

ஓலைதீட்டும்படை (1)

ஊசி கண்டம் ஆணி ஓலைதீட்டும்படை – 7.செயற்கைவடிவ:7 175/1
மேல்

ஓவரும் (1)

பண்டரும் ஓவரும் பாடற்கீழ்மக்கள் – 2.மக்கள்பெயர்:2 54/1
மேல்

ஓவல் (2)

பரிகரி சேறல் பாறுதல் ஓவல்
மீளலும் அதற்கே விளம்பலாகும் – 9.செயல்:9 37/1,2
ஓவல் ஒழிதலின் பெயர் – 9.செயல்:9 248/1
மேல்

ஓவா (1)

ஒக்கல் போற்றல் ஓவா முயற்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 156/3
மேல்

ஓவியம் (1)

ஓவியம் வட்டிகை துகிலிகை என்று இவை – 7.செயற்கைவடிவ:7 305/1
மேல்

ஓவியர் (1)

ஓவியர் சித்திரகாரர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 40/1

மேல்