Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்க 2
புக்கார் 1
புக்கு 11
புக்குநிற்பது 1
புக 7
புகல் 2
புகலிடம் 1
புகலிடமே 1
புகலும் 1
புகலேன் 1
புகவிட்டு 1
புகவிடுமே 1
புகவே 3
புகழ் 7
புகழ்-மின் 1
புகழ்களையே 1
புகழ்ச்சியை 1
புகழ்ந்திருந்து 1
புகழ்ந்து 3
புகழ்ந்தும் 1
புகழ்வது 1
புகழ்வார் 1
புகழப்பெறுவது 1
புகழாள் 1
புகழின் 1
புகழும் 2
புகழே 3
புகழேனே 1
புகன்று 1
புகாமல் 1
புகாவணம் 1
புகினும் 1
புகு 2
புகு-மின்கள் 1
புகுகின்றேனை 1
புகுத்த 1
புகுதப்பெற்று 1
புகுதவிட்டு 1
புகுந்த 6
புகுந்தருளி 4
புகுந்தவருக்கு 1
புகுந்தவா 2
புகுந்தனன் 1
புகுந்தான் 1
புகுந்திடிலே 1
புகுந்திடுவான் 1
புகுந்து 27
புகுந்துநின்றது 1
புகுந்துநின்று 1
புகும் 1
புகுவது 1
புகுவரால் 1
புகுவானே 1
புகுவிப்பாய் 1
புகுவேன் 1
புகுவேனே 2
புகை 2
புகைந்து 1
புங்கம் 1
புஞ்சம் 1
புடை 3
புடைசூழ்தரு 1
புடைபட்டு 2
புண் 4
புண்டரிகம் 1
புண்ணியன் 2
புண்ணியனே 1
புண்ணியா 1
புணர் 1
புணர்க்கையானே 1
புணர்கிலா 1
புணர்ந்துநின்றான் 1
புணர்ந்தே 10
புணர்ப்பது 4
புணர்வது 1
புணர்வும் 1
புணரிய 1
புணரும் 1
புணை 2
புணையாளன் 1
புத்தன் 2
புத்தி 2
புத்து 1
புத்தேளிர் 1
புது 2
புதுக்கும் 1
புதுமைக்கும் 1
புந்தி 1
புயங்க 3
புயங்கள் 2
புயங்களே 1
புயங்கன் 5
புயங்கன்-தன் 1
புயங்கா 1
புயல் 1
புரங்கள் 1
புரண்டிடினும் 1
புரண்டு 3
புரண்டும் 1
புரந்தரன் 2
புரந்தரனார் 1
புரந்தரனும் 1
புரந்தராதி 1
புரந்தராதிகள் 1
புரந்தராதியர் 1
புரம் 7
புரவி 1
புரவியின் 1
புரள்வார் 1
புரள்வேனை 2
புரள 3
புரளாதே 1
புரளாமல் 1
புராண 3
புராண_காரண 1
புரி 5
புரி-மின் 1
புரிதலும் 1
புரிந்த 2
புரிந்திட்டு 1
புரிந்திலன் 1
புரிந்து 2
புரிநூலான் 1
புரியாய் 1
புரியாயே 2
புரியாயேல் 1
புரியும் 2
புருவம் 2
புரை 4
புரைபுரை 2
புரைய 1
புரையும் 3
புரைவித்து 1
புல் 6
புல்லி 1
புல 1
புலம் 1
புலம்புகின்ற 1
புலம்புகின்றேன் 1
புலர்ந்தது 1
புலர்ந்தின்றோ 2
புலர்ந்து 1
புலர 1
புலவோர் 1
புலன் 11
புலன்கள் 1
புலன்களில் 1
புலனால் 4
புலால் 2
புலி 5
புலி_உரி 1
புலியூர் 3
புலை 1
புலை_நாயேன் 1
புலையனேன்-தனக்கு 1
புலையனேனை 1
புலையனேனையும் 1
புவன் 1
புவனம் 2
புவனியல் 1
புவனியில் 1
புவனியை 1
புவி 1
புழு 7
புழுக்கூடு 1
புழுக்கூடு-இது 2
புழுத்து 1
புழுவினால் 1
புள்ளி 2
புளியம்பழம் 1
புற்றில் 1
புற்று 1
புற்றும் 1
புற 1
புறத்தது 1
புறத்தன் 1
புறத்தார் 1
புறத்தே 1
புறந்தார்க்கு 1
புறம் 6
புறம்பயம்-அதனில் 1
புறம்புறம் 1
புறம்போகல் 1
புறமே 5
புன் 4
புன்மை 1
புன்மைகளால் 1
புன்மையரை 1
புன்மையேனை 1
புன 1
புனல் 13
புனலில் 1
புனலொடு 1
புனிதா 1
புனை 2
புனை-மின் 1
புனைந்து 2
புனையப்பெறுவது 1
புனையேன் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

புக்க (2)

தேன் புக்க தண் பனை சூழ் தில்லை சிற்றம்பலவன் – திருவா:12 14/1
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம் காண் சாழலோ – திருவா:12 14/4
மேல்


புக்கார் (1)

போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் – திருவா:5 87/2
மேல்


புக்கு (11)

பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் – திருவா:2/145
மொய் ஆர் தடம் பொய்கை புக்கு முகேர் என்ன – திருவா:7 11/1
தில்லை நகர் புக்கு சிற்றம்பலம் மன்னும் – திருவா:8 5/5
பொய் ஆய செல்வத்தே புக்கு அழுந்தி நாள்-தோறும் – திருவா:10 17/1
தான் புக்கு நட்டம் பயிலும்-அது என் ஏடீ – திருவா:12 14/2
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணி எல்லாம் – திருவா:12 14/3
அறுக்கிலேன் உடல் துணிபட தீ புக்கு ஆர்கிலேன் திருவருள் வகை அறியேன் – திருவா:23 6/1
குப்பாயம் புக்கு இருக்ககில்லேன் கூவிக்கொள்ளாய் கோவே ஓ – திருவா:25 2/2
செடி ஆர் ஆக்கை திறம் அற வீசி சிவபுர நகர் புக்கு
கடி ஆர் சோதி கண்டுகொண்டு என் கண்_இணை களிகூர – திருவா:25 9/1,2
கருத்து இருத்தி ஊன் புக்கு கருணையினால் ஆண்டுகொண்ட – திருவா:31 3/2
அருள் ஆர் அமுத பெரும் கடல்-வாய் அடியார் எல்லாம் புக்கு அழுந்த – திருவா:32 3/1
மேல்


புக்குநிற்பது (1)

புக்குநிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 8/4
மேல்


புக (7)

கால் விசைத்து ஓடி கடல் புக மண்டி – திருவா:2/135
புகுவது ஆவதும் போதரவு இல்லதும் பொன்_நகர் புக போதற்கு – திருவா:5 36/1
தேன் நிலாவிய திருவருள் புரிந்த என் சிவன் நகர் புக போகேன் – திருவா:5 40/3
பொங்கும் மடுவில் புக பாய்ந்துபாய்ந்து நம் – திருவா:7 13/5
பிலமுகத்தே புக பாய்ந்து பெரும் கேடு ஆம் சாழலோ – திருவா:12 7/4
நீக்கி முன் எனை தன்னொடு நிலாவகை குரம்பையில் புக பெய்து – திருவா:26 8/1
ஊனே புக என்-தனை நூக்கி உழல பண்ணுவித்திட்டாய் – திருவா:33 4/2
மேல்


புகல் (2)

பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று – திருவா:10 20/1
இ பாடே வந்து இயம்பு கூடு புகல் என் கிளியே – திருவா:19 6/1
மேல்


புகலிடம் (1)

போற்றி ஓ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை – திருவா:5 62/2
மேல்


புகலிடமே (1)

பொருளே தமியேன் புகலிடமே நின் புகழ் இகழ்வார் – திருவா:6 17/1
மேல்


புகலும் (1)

உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து உளம் புகலும்
கரை மாண்ட காம பெரும் கடலை கடத்தலுமே – திருவா:15 14/1,2
மேல்


புகலேன் (1)

போற்றா ஆக்கையை பொறுத்தல் புகலேன்
மரகத குவாஅல் மா மணி பிறக்கம் – திருவா:3/123,124
மேல்


புகவிட்டு (1)

அறவை என்று அடியார்கள்-தங்கள் அருள்_குழாம் புகவிட்டு நல் – திருவா:42 7/2
மேல்


புகவிடுமே (1)

பொடி சேர் மேனி புயங்கன்-தன் பூ ஆர் கழற்கே புகவிடுமே – திருவா:45 4/4
மேல்


புகவே (3)

புகவே தகேன் உனக்கு அன்பருள் யான் என் பொல்லா மணியே – திருவா:5 10/1
போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே – திருவா:45 1/4
புகவே வேண்டா புலன்களில் நீர் புயங்க பெருமான் பூம் கழல்கள் – திருவா:45 2/1
மேல்


புகழ் (7)

பொருளே தமியேன் புகலிடமே நின் புகழ் இகழ்வார் – திருவா:6 17/1
பொன் ஆர் கழல் பணித்து ஆண்டபிரான் புகழ் பாடி – திருவா:11 9/2
போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 11/4
துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ் பாடி – திருவா:16 4/5
செந்நாவலர் பசும் புகழ் திருப்பெருந்துறை உறைவாய் – திருவா:34 1/3
வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் – திருவா:34 7/1
ஏது_இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் இரும் கடல் வாணற்கு தீயில் தோன்றும் – திருவா:43 8/3
மேல்


புகழ்-மின் (1)

புகழ்-மின் தொழு-மின் பூ புனை-மின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு – திருவா:45 6/1
மேல்


புகழ்களையே (1)

புடைபட்டு உருகி போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே – திருவா:45 5/4
மேல்


புகழ்ச்சியை (1)

பொருள் உடை கலையே புகழ்ச்சியை கடந்த போகமே யோகத்தின் பொலிவே – திருவா:37 4/2
மேல்


புகழ்ந்திருந்து (1)

போற்றி புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய் ஆனார் – திருவா:1/86
மேல்


புகழ்ந்து (3)

பூ_மாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர் – திருவா:5 14/2
தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி – திருவா:9 4/3
போற்றி என் அமுதே என நினைந்து ஏத்தி புகழ்ந்து அழைத்து அலறி என்னுள்ளே – திருவா:44 6/3
மேல்


புகழ்ந்தும் (1)

போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்தும் நின்று – திருவா:5 45/1
மேல்


புகழ்வது (1)

போற்றி புகழ்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 2/4
மேல்


புகழ்வார் (1)

புரள்வார் தொழுவார் புகழ்வார் ஆய் இன்றே வந்து ஆள் ஆகாதீர் – திருவா:45 10/1
மேல்


புகழப்பெறுவது (1)

புகழப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 5/4
மேல்


புகழாள் (1)

பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 10/1
மேல்


புகழின் (1)

பொன்னை அழித்த நல் மேனி புகழின் திகழும் அழகன் – திருவா:18 7/2
மேல்


புகழும் (2)

பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் – திருவா:1/25
பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 3/1
மேல்


புகழே (3)

சுற்றிய சுற்ற தொடர்வு அறுப்பான் தொல் புகழே
பற்றி இ பாசத்தை பற்று அற நாம் பற்றுவான் – திருவா:8 20/4,5
மன்னி பொலிந்து இருந்த மா மறையோன்-தன் புகழே
பன்னி பணிந்து இறைஞ்ச பாவங்கள் பற்று அறுப்பான் – திருவா:16 7/2,3
புகழே பெரிய பதம் எனக்கு புராண நீ தந்தருளாதே – திருவா:33 10/3
மேல்


புகழேனே (1)

பூம் கழல்கள்-அவை அல்லாது எவை யாதும் புகழேனே – திருவா:39 1/4
மேல்


புகன்று (1)

பொருந்தும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய் – திருவா:41 4/1
மேல்


புகாமல் (1)

நரகொடு சுவர்க்கம் நால்_நிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி – திருவா:4/213,214
மேல்


புகாவணம் (1)

போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொன் கழல்_இணை காட்டி – திருவா:41 2/3
மேல்


புகினும் (1)

நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறின் இறைவா – திருவா:5 2/2,3
மேல்


புகு (2)

செழிகின்ற தீ புகு விட்டிலின் சில் மொழியாரில் பல் நாள் – திருவா:6 5/1
பொருந்த வா கயிலை புகு நெறி இது காண் போதராய் என்று அருளாயே – திருவா:29 10/4
மேல்


புகு-மின்கள் (1)

ஆன நீற்று கவசம் அடைய புகு-மின்கள்
வான ஊர் கொள்வோம் நாம் மாய படை வாராமே – திருவா:46 1/3,4
மேல்


புகுகின்றேனை (1)

பொருள் என களித்து அரு நரகத்திடை விழ புகுகின்றேனை
தெருளும் மு_மதில் நொடி வரை இடிதர சின பதத்தொடு செம் தீ – திருவா:26 10/2,3
மேல்


புகுத்த (1)

முன்பு உள்ளவற்றை முழுது அழிய உள் புகுத்த
அன்பின் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 3/3,4
மேல்


புகுதப்பெற்று (1)

பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையை போக்க பெற்று – திருவா:6 10/1
மேல்


புகுதவிட்டு (1)

பொய்யில் இங்கு எனை புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே – திருவா:5 92/4
மேல்


புகுந்த (6)

வந்து எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை மால் அமுத பெரும் கடலே மலையே உன்னை – திருவா:5 26/3
வாரா வழி அருளி வந்து என் உளம் புகுந்த
ஆரா_அமுது ஆய் அலை கடல்-வாய் மீன் விசிறும் – திருவா:8 2/4,5
கரு வெந்து வீழ கடைக்கணித்து என் உளம் புகுந்த
திரு வந்தவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 5/3,4
உண்ண புகுந்த பகன் ஒளித்து ஓடாமே – திருவா:14 12/1
ஊனே புகுந்த உனை உணர்ந்த உருகி பெருகும் உள்ளத்தை – திருவா:32 10/3
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 4/3
மேல்


புகுந்தருளி (4)

புன வேய் அன வளை தோளியோடும் புகுந்தருளி
நனவே எனை பிடித்து ஆட்கொண்டவா நயந்து நெஞ்சம் – திருவா:11 10/2,3
மா ஆர ஏறி மதுரை நகர் புகுந்தருளி
தே ஆர்ந்த கோலம் திகழ பெருந்துறையான் – திருவா:13 20/1,2
நிற்பானை போல என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி
நல்-பால் படுத்து என்னை நாடு அறிய தான் இங்ஙன் – திருவா:15 4/2,3
அன்பால் நீ அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது – திருவா:38 7/3
மேல்


புகுந்தவருக்கு (1)

போய் அறும் இ பிறப்பு என்னும் பகைகள் புகுந்தவருக்கு
ஆய அரும் பெரும் சீர் உடை தன் அருளே அருளும் – திருவா:36 7/2,3
மேல்


புகுந்தவா (2)

சித்தம் புகுந்தவா தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 16/4
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ – திருவா:13 19/4
மேல்


புகுந்தனன் (1)

முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும் – திருவா:5 47/3
மேல்


புகுந்தான் (1)

ஊன் ஆர் உடல் புகுந்தான் உயிர் கலந்தான் உளம் பிரியான் – திருவா:34 2/2
மேல்


புகுந்திடிலே (1)

ஏறு உடையான் எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே – திருவா:49 2/8
மேல்


புகுந்திடுவான் (1)

வீடகத்தே புகுந்திடுவான் மிக பெரிதும் விரைகின்றேன் – திருவா:5 11/2
மேல்


புகுந்து (27)

ஊன் எலாம் நின்று உருக புகுந்து ஆண்டான் இன்று போய் – திருவா:5 19/3
வினையிலே கிடந்தேனை புகுந்து நின்று போது நான் வினை_கேடன் என்பாய் போல – திருவா:5 22/1
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர – திருவா:5 29/2
அறிவு இலாத எனை புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி மெய்ந்நெறி – திருவா:5 32/1
தேனை பழ சுவை ஆயினானை சித்தம் புகுந்து தித்திக்க வல்ல – திருவா:9 15/2
புகுந்து பரிந்து உருக்கும் பாவகத்தால் – திருவா:11 14/3
என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம் – திருவா:13 17/3
ஐயம் புகுந்து அவர் போதலும் என் உள்ளம் – திருவா:17 9/3
வான் பழித்து இ மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் – திருவா:18 4/2
ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு-அது ஆய ஒருத்தன் – திருவா:18 4/3
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 10/4
பொருளா என்னை புகுந்து ஆண்ட பொன்னே பொன்னம்பல கூத்தா – திருவா:21 8/2
பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும் – திருவா:23 1/1
புன் கணன் ஆய் புரள்வேனை புரளாமல் புகுந்து அருளி – திருவா:24 7/2
உரு தெரியா காலத்தே உள் புகுந்து என் உளம் மன்னி – திருவா:31 3/1
துணியா உருகா அருள் பெருக தோன்றும் தொண்டரிடை புகுந்து
திணி ஆர் மூங்கில் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றேன் – திருவா:32 8/1,2
எனை தான் புகுந்து ஆண்டான் எனது அன்பின் புரை உருக்கி – திருவா:34 4/2
பினை தான் புகுந்து எல்லே பெருந்துறையில் உறை பெம்மான் – திருவா:34 4/3
உடலும் எனது உயிரும் புகுந்து ஒழியாவண்ணம் நிறைந்தான் – திருவா:34 6/2
பூசனை உகந்து என் சிந்தையுள் புகுந்து பூம் கழல் காட்டிய பொருளே – திருவா:37 7/2
புன் புலால் யாக்கை புரைபுரை கனிய பொன் நெடும் கோயிலா புகுந்து என் – திருவா:37 10/1
பூத்தானே புகுந்து இங்கு புரள்வேனை கருணையினால் – திருவா:38 8/3
தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள்செய்தான் – திருவா:38 10/3
ஆடுவித்து எனது அகம் புகுந்து ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே – திருவா:41 5/4
எத்தன் ஆகி வந்து இல் புகுந்து எமை ஆளுங்கொண்டு எம் பணிகொள்வான் – திருவா:42 4/3
சித்தமே புகுந்து எம்மை ஆட்கொண்டு தீ வினை கெடுத்து உய்யல் ஆம் – திருவா:42 6/1
நகவே ஞாலத்துள் புகுந்து நாயே அனைய நமை ஆண்ட – திருவா:45 2/3
மேல்


புகுந்துநின்றது (1)

புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்றது இடர் பின் நாள் – திருவா:32 1/2
மேல்


புகுந்துநின்று (1)

புரைபுரை கனிய புகுந்துநின்று உருக்கி பொய் இருள் கடிந்த மெய் சுடரே – திருவா:22 3/2
மேல்


புகும் (1)

மண் மேல் யாக்கை விடும் ஆறும் வந்து உன் கழற்கே புகும் ஆறும் – திருவா:33 9/3
மேல்


புகுவது (1)

புகுவது ஆவதும் போதரவு இல்லதும் பொன்_நகர் புக போதற்கு – திருவா:5 36/1
மேல்


புகுவரால் (1)

ஐயம் புகுவரால் அன்னே என்னும் – திருவா:17 9/2
மேல்


புகுவானே (1)

பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே – திருவா:5 35/4
மேல்


புகுவிப்பாய் (1)

போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பில் – திருவா:1/43
மேல்


புகுவேன் (1)

புகுவேன் எனதே நின் பாதம் போற்றும் அடியார் உள் நின்று – திருவா:5 60/1
மேல்


புகுவேனே (2)

தீயில் வீழ்கிலேன் திண் வரை உருள்கிலேன் செழும் கடல் புகுவேனே – திருவா:5 39/4
பொன்னே திகழும் திருமேனி எந்தாய் எங்கு புகுவேனே – திருவா:5 59/4
மேல்


புகை (2)

மா புகை கரை சேர் வண்டு உடை குளத்தின் – திருவா:3/91
புகை முகந்து எரி கை வீசி பொலிந்த அம்பலத்துள் ஆடும் – திருவா:35 7/2
மேல்


புகைந்து (1)

பொதும்புறு தீ போல் புகைந்து எரிய புலன் தீ கதுவ – திருவா:6 36/1
மேல்


புங்கம் (1)

புணர்ப்பது ஆக அம் கணாள புங்கம் ஆன போகமே – திருவா:5 71/4
மேல்


புஞ்சம் (1)

புஞ்சம் ஆர் வெள் வளையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 4/6
மேல்


புடை (3)

எய்த்து இடை வருந்த எழுந்து புடை பரந்து – திருவா:4/33
தீட்டு ஆர் மதில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 6/2
செம் தார் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 15/5
மேல்


புடைசூழ்தரு (1)

சேற்று ஆர் வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும் – திருவா:34 8/3
மேல்


புடைபட்டு (2)

புடைபட்டு இருப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 1/4
புடைபட்டு உருகி போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே – திருவா:45 5/4
மேல்


புண் (4)

புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 8/6
புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 4/4
புண் பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 16/4
அளி புண் அகத்து புறம் தோல் மூடி அடியேனுடை யாக்கை – திருவா:25 5/1
மேல்


புண்டரிகம் (1)

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள் – திருவா:7 20/6,7
மேல்


புண்ணியன் (2)

போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து – திருவா:43 1/3
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றி – திருவா:43 7/3
மேல்


புண்ணியனே (1)

போக்கும் வரவும் புணர்வும் இலா புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பு_அரிய பேர் ஒளியே – திருவா:1/77,78
மேல்


புண்ணியா (1)

புரி கொள் நூல் அணி மார்பனே புலியூர் இலங்கிய புண்ணியா
கரிய மால் அயன் தேட நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 9/3,4
மேல்


புணர் (1)

பொய் எல்லாம் மெய் என்று புணர் முலையார் போகத்தே – திருவா:51 3/1
மேல்


புணர்க்கையானே (1)

போற்றி ஐம்புலன்கள் நின்னை புணர்கிலா புணர்க்கையானே – திருவா:5 70/4
மேல்


புணர்கிலா (1)

போற்றி ஐம்புலன்கள் நின்னை புணர்கிலா புணர்க்கையானே – திருவா:5 70/4
மேல்


புணர்ந்துநின்றான் (1)

புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய புணர்ந்துநின்றான்
உலகு ஏழ் என திசை பத்து என தான் ஒருவனுமே – திருவா:15 5/2,3
மேல்


புணர்ந்தே (10)

புடைபட்டு இருப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 1/4
போற்றி புகழ்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 2/4
பூண்டு கிடப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 3/4
புல்லி புணர்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 4/4
புகழப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 5/4
புரிந்து நிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 6/4
புனையப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 7/4
புக்குநிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 8/4
போது ஆய்ந்து அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 9/4
பூ போது அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 10/4
மேல்


புணர்ப்பது (4)

புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய் – திருவா:5 71/1
புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என் இது ஆம் – திருவா:5 71/2
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின் கழல்-கணே – திருவா:5 71/3
புணர்ப்பது ஆக அம் கணாள புங்கம் ஆன போகமே – திருவா:5 71/4
மேல்


புணர்வது (1)

புல்லி புணர்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 4/4
மேல்


புணர்வும் (1)

போக்கும் வரவும் புணர்வும் இலா புண்ணியனே – திருவா:1/77
மேல்


புணரிய (1)

தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மா பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் – திருவா:3/8,9
மேல்


புணரும் (1)

ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 8/4
மேல்


புணை (2)

இனி என்னே உய்யும் ஆறு என்றுஎன்று எண்ணி அஞ்சு_எழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை – திருவா:5 27/3
பொழிகின்ற துன்ப புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு – திருவா:24 4/1
மேல்


புணையாளன் (1)

புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 1/4
மேல்


புத்தன் (2)

புத்தன் புரந்தராதியர் அயன் மால் போற்றி செயும் – திருவா:11 16/1
புத்தன் முதல் ஆய புல் அறிவின் சில் சமயம் – திருவா:15 6/1
மேல்


புத்தி (2)

புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ – திருவா:13 19/4
புரவியின் மேல் வர புத்தி கொளப்பட்ட பூங்கொடியார் – திருவா:36 9/3
மேல்


புத்து (1)

புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ – திருவா:7 3/5
மேல்


புத்தேளிர் (1)

பூ_மாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்
கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் – திருவா:5 14/2,3
மேல்


புது (2)

போற்றி நின் கருணை வெள்ள புது மது புவனம் நீர் தீ – திருவா:5 63/3
பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும் – திருவா:23 1/1
மேல்


புதுக்கும் (1)

அங்கு அ பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால் – திருவா:7 19/2
மேல்


புதுமைக்கும் (1)

பின்னை புதுமைக்கும் பேர்த்தும் அ பெற்றியனே – திருவா:7 9/2
மேல்


புந்தி (1)

புகழ்-மின் தொழு-மின் பூ புனை-மின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு – திருவா:45 6/1
மேல்


புயங்க (3)

போற்றி போற்றி புயங்க பெருமான் – திருவா:4/223
பூ ஆர் சென்னி மன்னன் எம் புயங்க பெருமான் சிறியோமை – திருவா:45 1/1
புகவே வேண்டா புலன்களில் நீர் புயங்க பெருமான் பூம் கழல்கள் – திருவா:45 2/1
மேல்


புயங்கள் (2)

தென்னவன் சேரவன் சோழன் சீர் புயங்கள் வர கூவாய் – திருவா:18 7/4
புடைபட்டு உருகி போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே – திருவா:45 5/4
மேல்


புயங்களே (1)

போற்றி ஓ நமச்சிவாய புயங்களே மயங்குகின்றேன் – திருவா:5 62/1
மேல்


புயங்கன் (5)

போம் ஆறு அமை-மின் பொய் நீக்கி புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே – திருவா:45 3/4
புகழ்-மின் தொழு-மின் பூ புனை-மின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு – திருவா:45 6/1
பொற்பால் ஒப்பாம் திருமேனி புயங்கன் ஆவான் பொன் அடிக்கே – திருவா:45 7/2
திருமால் அறியா திரு புயங்கன் திரு தாள் சென்று சேர்வோமே – திருவா:45 8/4
போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன் புயங்கன் அருள் அமுதம் – திருவா:45 9/2
மேல்


புயங்கன்-தன் (1)

பொடி சேர் மேனி புயங்கன்-தன் பூ ஆர் கழற்கே புகவிடுமே – திருவா:45 4/4
மேல்


புயங்கா (1)

திரை சேர் மடந்தை மணந்த திரு பொன் பத புயங்கா
வரை சேர்ந்து அடர்ந்து என்ன வல்வினை-தான் வந்து அடர்வனவே – திருவா:6 37/3,4
மேல்


புயல் (1)

பொழிகின்ற துன்ப புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு – திருவா:24 4/1
மேல்


புரங்கள் (1)

மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேலவர் புரங்கள் மூன்று எரித்த – திருவா:29 7/1
மேல்


புரண்டிடினும் (1)

வாள் உலாம் எரியும் அஞ்சேன் வரை புரண்டிடினும் அஞ்சேன் – திருவா:35 6/1
மேல்


புரண்டு (3)

பூதலம்-அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும் – திருவா:2/134
தலை தடுமாறா வீழ்ந்து புரண்டு அலறி – திருவா:3/152
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் – திருவா:7 1/6
மேல்


புரண்டும் (1)

போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்தும் நின்று – திருவா:5 45/1
மேல்


புரந்தரன் (2)

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடி கெடினும் – திருவா:5 2/1
புரந்தரன் வேள்வியில் உந்தீ பற – திருவா:14 14/3
மேல்


புரந்தரனார் (1)

புரந்தரனார் ஒரு பூம் குயில் ஆகி – திருவா:14 9/1
மேல்


புரந்தரனும் (1)

பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த – திருவா:10 1/1
மேல்


புரந்தராதி (1)

போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி இன்பமும் – திருவா:5 72/1
மேல்


புரந்தராதிகள் (1)

போது சேர் அயன் பொரு கடல் கிடந்தோன் புரந்தராதிகள் நிற்க மற்று என்னை – திருவா:23 8/1
மேல்


புரந்தராதியர் (1)

புத்தன் புரந்தராதியர் அயன் மால் போற்றி செயும் – திருவா:11 16/1
மேல்


புரம் (7)

புரம் பல எரித்த புராண போற்றி – திருவா:4/221
வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே – திருவா:6 10/4
சே வலன் ஏந்திய வெல் கொடியான் சிவபெருமான் புரம் செற்ற கொற்ற – திருவா:9 16/3
கொன்றான் காண் புரம் மூன்றும் கூட்டோடே சாழலோ – திருவா:12 16/4
புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ – திருவா:13 6/4
நிலையனே அலை நீர் விடம் உண்ட நித்தனே அடையார் புரம் எரித்த – திருவா:23 3/3
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 4/1
மேல்


புரவி (1)

வான் புரவி ஊரும் மகிழ்ந்து – திருவா:19 6/4
மேல்


புரவியின் (1)

புரவியின் மேல் வர புத்தி கொளப்பட்ட பூங்கொடியார் – திருவா:36 9/3
மேல்


புரள்வார் (1)

புரள்வார் தொழுவார் புகழ்வார் ஆய் இன்றே வந்து ஆள் ஆகாதீர் – திருவா:45 10/1
மேல்


புரள்வேனை (2)

புன் கணன் ஆய் புரள்வேனை புரளாமல் புகுந்து அருளி – திருவா:24 7/2
பூத்தானே புகுந்து இங்கு புரள்வேனை கருணையினால் – திருவா:38 8/3
மேல்


புரள (3)

அன்பு எனும் ஆறு கரை-அது புரள
நன் புலன் ஒன்றி நாத என்று அரற்றி – திருவா:4/81,82
மை ஆர் குழல் புரள தேன் பாய வண்டு ஒலிப்ப – திருவா:8 13/2
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இரு நிலத்தே – திருவா:36 4/4
மேல்


புரளாதே (1)

போர புரி-மின் சிவன் கழற்கே பொய்யில் கிடந்து புரளாதே – திருவா:45 9/4
மேல்


புரளாமல் (1)

புன் கணன் ஆய் புரள்வேனை புரளாமல் புகுந்து அருளி – திருவா:24 7/2
மேல்


புராண (3)

புரம் பல எரித்த புராண போற்றி – திருவா:4/221
போற்றி போற்றி புராண_காரண – திருவா:4/224
புகழே பெரிய பதம் எனக்கு புராண நீ தந்தருளாதே – திருவா:33 10/3
மேல்


புராண_காரண (1)

போற்றி போற்றி புராண_காரண
போற்றி போற்றி சயசய போற்றி – திருவா:4/224,225
மேல்


புரி (5)

சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு – திருவா:24 5/1
இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மை தடம் கண் – திருவா:24 5/2
வெருள் புரி மான் அன்ன நோக்கி-தன் பங்க விண்ணோர் பெருமான் – திருவா:24 5/3
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி-தனில் இள மதி-அது வைத்த – திருவா:26 3/3
புரி கொள் நூல் அணி மார்பனே புலியூர் இலங்கிய புண்ணியா – திருவா:30 9/3
மேல்


புரி-மின் (1)

போர புரி-மின் சிவன் கழற்கே பொய்யில் கிடந்து புரளாதே – திருவா:45 9/4
மேல்


புரிதலும் (1)

புலையனேனையும் பொருள் என நினைந்து உன் அருள்புரிந்தனை புரிதலும் களித்து – திருவா:23 3/1
மேல்


புரிந்த (2)

தாயில் ஆகிய இன் அருள் புரிந்த என் தலைவனை நனி காணேன் – திருவா:5 39/3
தேன் நிலாவிய திருவருள் புரிந்த என் சிவன் நகர் புக போகேன் – திருவா:5 40/3
மேல்


புரிந்திட்டு (1)

அழகே புரிந்திட்டு அடி_நாயேன் அரற்றுகின்றேன் உடையானே – திருவா:33 10/1
மேல்


புரிந்திலன் (1)

தவமே புரிந்திலன் தண் மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன் – திருவா:5 5/1
மேல்


புரிந்து (2)

பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் போத என்று எனை புரிந்து நோக்கவும் – திருவா:5 93/1
புரிந்து நிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 6/4
மேல்


புரிநூலான் (1)

கொண்ட புரிநூலான் கோல மா ஊர்தியான் – திருவா:8 9/2
மேல்


புரியாய் (1)

அடியார் நடுவுள் இருக்கும் அருளை புரியாய் பொன்னம்பலத்து எம் – திருவா:21 1/3
மேல்


புரியாயே (2)

வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே – திருவா:28 6/4
வந்து உய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே – திருவா:28 8/4
மேல்


புரியாயேல் (1)

பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல்
வருந்துவன் அ தமியேன் மற்று என்னே நான் ஆம் ஆறே – திருவா:5 13/3,4
மேல்


புரியும் (2)

என்னையும் ஆண்டுகொண்டு இன் அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 4/4
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 5/4
மேல்


புருவம் (2)

பொன் அம் சிலம்பில் சிலம்பி திரு புருவம்
என்ன சிலை குலவி நம்-தம்மை ஆள் உடையாள்-தன்னில் – திருவா:7 16/4,5
சிரம் மூன்று அற தன் திரு புருவம் நெரித்தருளி – திருவா:13 6/2
மேல்


புரை (4)

பூ புரை அஞ்சலி காந்தள் காட்ட – திருவா:3/75
செம் தழல் புரை திருமேனியும் காட்டி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி – திருவா:20 8/3
எனை தான் புகுந்து ஆண்டான் எனது அன்பின் புரை உருக்கி – திருவா:34 4/2
செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை உறைவான் – திருவா:34 9/3
மேல்


புரைபுரை (2)

புரைபுரை கனிய புகுந்துநின்று உருக்கி பொய் இருள் கடிந்த மெய் சுடரே – திருவா:22 3/2
புன் புலால் யாக்கை புரைபுரை கனிய பொன் நெடும் கோயிலா புகுந்து என் – திருவா:37 10/1
மேல்


புரைய (1)

இல் நுழை கதிரின் துன் அணு புரைய
சிறிய ஆக பெரியோன் தெரியின் – திருவா:3/5,6
மேல்


புரையும் (3)

கீடம் புரையும் கிழவோன் நாள்-தொறும் – திருவா:3/19
செச்சை மா மலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர்_கோவே – திருவா:5 29/4
தேன் புரையும் சிந்தையர் ஆய் தெய்வ பெண் ஏத்து இசைப்ப – திருவா:19 6/3
மேல்


புரைவித்து (1)

செழும் தண் பாற்கடல் திரை புரைவித்து
உவா கடல் நள்ளும் நீர் உள்_அகம் ததும்ப – திருவா:3/168,169
மேல்


புல் (6)

புல் ஆகி பூடு ஆய் புழு ஆய் மரம் ஆகி – திருவா:1/26
புல் வரம்பு ஆய பல துறை பிழைத்தும் – திருவா:4/41
புலி முலை புல் வாய்க்கு அருளினை போற்றி – திருவா:4/207
புல் வரம்பு இன்றி யார்க்கும் அரும் பொருள் – திருவா:5 48/2
புத்தன் முதல் ஆய புல் அறிவின் சில் சமயம் – திருவா:15 6/1
கல்லாத புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை – திருவா:31 4/1
மேல்


புல்லி (1)

புல்லி புணர்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 4/4
மேல்


புல (1)

கள்ள புல குரம்பை கட்டழிக்க வல்லானே – திருவா:1/88
மேல்


புலம் (1)

எலாம் புலம் ஆக்கிய எந்தையை பந்தனை அறுப்பானை – திருவா:5 32/2
மேல்


புலம்புகின்ற (1)

பொய் தேவு பேசி புலம்புகின்ற பூதலத்தே – திருவா:10 5/2
மேல்


புலம்புகின்றேன் (1)

புறமே கிடந்து புலை_நாயேன் புலம்புகின்றேன் உடையானே – திருவா:32 6/2
மேல்


புலர்ந்தது (1)

போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம் கழற்கு இணை துணை மலர் கொண்டு – திருவா:20 1/1
மேல்


புலர்ந்தின்றோ (2)

ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ண கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ – திருவா:7 4/1,2
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவு_அரியான் – திருவா:7 6/3,4
மேல்


புலர்ந்து (1)

புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்றது இடர் பின் நாள் – திருவா:32 1/2
மேல்


புலர (1)

இரும் புலன் புலர இசைந்தனை போற்றி – திருவா:4/210
மேல்


புலவோர் (1)

பூதங்கள்-தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கு_இலன் வரவு_இலன் என நினை புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனை கண்டு அறிவாரை – திருவா:20 5/1,2
மேல்


புலன் (11)

மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய – திருவா:1/55
நன் புலன் ஒன்றி நாத என்று அரற்றி – திருவா:4/82
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி – திருவா:4/210
பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே – திருவா:5 44/4
பொள்ளல் நல் வேழத்து உரியாய் புலன் நின்-கண் போதல் ஒட்டா – திருவா:6 24/3
கழு மணியே இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே – திருவா:6 27/4
மத்து உறு தண் தயிரின் புலன் தீ கதுவ கலங்கி – திருவா:6 30/1
பொதும்புறு தீ போல் புகைந்து எரிய புலன் தீ கதுவ – திருவா:6 36/1
புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய புணர்ந்துநின்றான் – திருவா:15 5/2
மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்ச புலன் ஐந்தின் வழி அடைத்து அமுதே – திருவா:22 1/1
பூதங்கள் ஐந்து ஆகி புலன் ஆகி பொருள் ஆகி – திருவா:31 10/1
மேல்


புலன்கள் (1)

புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து இங்கு ஒர் பொய் நெறிக்கே – திருவா:6 28/1
மேல்


புலன்களில் (1)

புகவே வேண்டா புலன்களில் நீர் புயங்க பெருமான் பூம் கழல்கள் – திருவா:45 2/1
மேல்


புலனால் (4)

கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன் – திருவா:3/113
ஆனை வெம் போரில் குறும் தூறு என புலனால் அலைப்புண்டேனை – திருவா:6 21/1
எறும்பிடை நாங்கூழ் என புலனால் அரிப்புண்டு அலந்த – திருவா:6 25/1
அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்-அவர்-தம் – திருவா:6 38/1
மேல்


புலால் (2)

வன் புலால் வேலும் அஞ்சேன் வளை கையார் கடைக்கண் அஞ்சேன் – திருவா:35 3/1
புன் புலால் யாக்கை புரைபுரை கனிய பொன் நெடும் கோயிலா புகுந்து என் – திருவா:37 10/1
மேல்


புலி (5)

கான புலி_உரி அரையோன் காண்க – திருவா:3/32
புலி முலை புல் வாய்க்கு அருளினை போற்றி – திருவா:4/207
கோயில் சுடுகாடு கொல் புலி தோல் நல் ஆடை – திருவா:12 3/1
கான் ஆர் புலி தோல் உடை தலை ஊண் காடு பதி – திருவா:12 12/1
பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன் போர் உகிர் வன் புலி கொன்ற வீரன் – திருவா:43 8/1
மேல்


புலி_உரி (1)

கான புலி_உரி அரையோன் காண்க – திருவா:3/32
மேல்


புலியூர் (3)

பொலிதரு புலியூர் பொதுவினில் நடம் நவில் – திருவா:2/141
பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் – திருவா:2/145
புரி கொள் நூல் அணி மார்பனே புலியூர் இலங்கிய புண்ணியா – திருவா:30 9/3
மேல்


புலை (1)

புறமே கிடந்து புலை_நாயேன் புலம்புகின்றேன் உடையானே – திருவா:32 6/2
மேல்


புலை_நாயேன் (1)

புறமே கிடந்து புலை_நாயேன் புலம்புகின்றேன் உடையானே – திருவா:32 6/2
மேல்


புலையனேன்-தனக்கு (1)

பொய்ம்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் புழு தலை புலையனேன்-தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 3/2,3
மேல்


புலையனேனை (1)

வைச்சு வாங்குவாய் வஞ்சக பெரும் புலையனேனை உன் கோயில் வாயிலில் – திருவா:5 96/2
மேல்


புலையனேனையும் (1)

புலையனேனையும் பொருள் என நினைந்து உன் அருள்புரிந்தனை புரிதலும் களித்து – திருவா:23 3/1
மேல்


புவன் (1)

புவன் எம்பிரான் தெரியும் பரிசு ஆவது இயம்புகவே – திருவா:5 9/4
மேல்


புவனம் (2)

போற்றி நின் கருணை வெள்ள புது மது புவனம் நீர் தீ – திருவா:5 63/3
போற்றி இ புவனம் நீர் தீர் காலொடு வானம் ஆனாய் – திருவா:5 70/1
மேல்


புவனியல் (1)

புவனியல் சேவடி தீண்டினன் காண்க – திருவா:3/61
மேல்


புவனியில் (1)

புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்த பூமி – திருவா:20 10/1
மேல்


புவனியை (1)

ஏறு உடை ஈசன் இ புவனியை உய்ய – திருவா:2/25
மேல்


புவி (1)

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் – திருவா:4/21
மேல்


புழு (7)

புல் ஆகி பூடு ஆய் புழு ஆய் மரம் ஆகி – திருவா:1/26
புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி – திருவா:1/53
செல்வம் நல்குரவு இன்றி விண்ணோர் புழு
புல் வரம்பு இன்றி யார்க்கும் அரும் பொருள் – திருவா:5 48/1,2
புழு கண் உடை புன் குரம்பை பொல்லா கல்வி ஞானம் இலா – திருவா:24 1/3
பொத்தை ஊன் சுவர் புழு பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய் கூரை – திருவா:26 7/1
முடை விடாது அடியேன் மூத்து அற மண் ஆய் முழு புழு குரம்பையில் கிடந்து – திருவா:37 2/2
பொய்ம்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் புழு தலை புலையனேன்-தனக்கு – திருவா:37 3/2
மேல்


புழுக்கூடு (1)

கூடவேண்டும் நான் போற்றி இ புழுக்கூடு நீக்கு எனை போற்றி பொய் எலாம் – திருவா:5 100/3
மேல்


புழுக்கூடு-இது (2)

ஊன் ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே – திருவா:5 55/4
முடை ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆக முடித்தாயே – திருவா:5 56/4
மேல்


புழுத்து (1)

பொச்சை ஆன இ பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய் போல – திருவா:41 9/1
மேல்


புழுவினால் (1)

புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய்-தனை ஒழிவித்திடும் – திருவா:42 8/1
மேல்


புள்ளி (2)

அம்பரம் ஆம் புள்ளி தோல் ஆலாலம் ஆர் அமுதம் – திருவா:12 19/1
பொடி கொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே – திருவா:29 5/2
மேல்


புளியம்பழம் (1)

புளியம்பழம் ஒத்திருந்தேன் இருந்தும் விடையாய் பொடி ஆடி – திருவா:25 5/2
மேல்


புற்றில் (1)

புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்-தம் மெய்யும் அஞ்சேன் – திருவா:35 1/1
மேல்


புற்று (1)

கான் நின்று வற்றியும் புற்று எழுந்தும் காண்பு_அரிய – திருவா:8 4/2
மேல்


புற்றும் (1)

புற்றும் ஆய் மரம் ஆய் புனல் காலே உண்டி ஆய் அண்ட வாணரும் பிறரும் – திருவா:23 2/1
மேல்


புற (1)

கூவு-மின் தொண்டர் புற நிலாமே குனி-மின் தொழு-மின் எம் கோன் எம் கூத்தன் – திருவா:9 2/3
மேல்


புறத்தது (1)

எனைத்து எனைத்து அது எ புறத்தது எந்தை பாதம் எய்தவே – திருவா:5 76/4
மேல்


புறத்தன் (1)

உம்பரான் உலகு ஊடறுத்து அ புறத்தன் ஆய் நின்ற எம்பிரான் – திருவா:42 9/2
மேல்


புறத்தார் (1)

பாரார் விசும்பு உள்ளார் பாதாளத்தார் புறத்தார்
ஆராலும் காண்டற்கு அரியான் எமக்கு எளிய – திருவா:8 2/1,2
மேல்


புறத்தே (1)

கரு ஆய் உலகினுக்கு அப்புறம் ஆய் இ புறத்தே
மரு ஆர் மலர் குழல் மாதினொடும் வந்தருளி – திருவா:10 14/1,2
மேல்


புறந்தார்க்கு (1)

புறந்தார்க்கு சேயோன்-தன் பூம் கழல்கள் வெல்க – திருவா:1/8
மேல்


புறம் (6)

புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி – திருவா:1/53
போற்றி ஓ நமச்சிவாய புறம் எனை போக்கல் கண்டாய் – திருவா:5 62/3
உள்ளேன் புறம் அல்லேன் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 2/3
போர் ஆர் புறம் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 10/4
அளி புண் அகத்து புறம் தோல் மூடி அடியேனுடை யாக்கை – திருவா:25 5/1
பூண்டேன் புறம் போகேன் இனி புறம்போகல் ஒட்டேனே – திருவா:34 7/4
மேல்


புறம்பயம்-அதனில் (1)

புறம்பயம்-அதனில் அறம் பல அருளியும் – திருவா:2/90
மேல்


புறம்புறம் (1)

தேனினை சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 9/3
மேல்


புறம்போகல் (1)

பூண்டேன் புறம் போகேன் இனி புறம்போகல் ஒட்டேனே – திருவா:34 7/4
மேல்


புறமே (5)

புன்மையேனை ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ – திருவா:5 59/2
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே – திருவா:5 85/4
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு – திருவா:5 86/1
போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் – திருவா:5 87/2
புறமே கிடந்து புலை_நாயேன் புலம்புகின்றேன் உடையானே – திருவா:32 6/2
மேல்


புன் (4)

புழு கண் உடை புன் குரம்பை பொல்லா கல்வி ஞானம் இலா – திருவா:24 1/3
புன் கணன் ஆய் புரள்வேனை புரளாமல் புகுந்து அருளி – திருவா:24 7/2
புன் புலால் யாக்கை புரைபுரை கனிய பொன் நெடும் கோயிலா புகுந்து என் – திருவா:37 10/1
தாள் செய்ய தாமரை சைவனுக்கு என் புன் தலையால் – திருவா:40 9/3
மேல்


புன்மை (1)

புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ – திருவா:7 3/5
மேல்


புன்மைகளால் (1)

தாணுவே அழிந்தேன் நின் நினைந்து உருகும் தன்மை என் புன்மைகளால்
காணும்-அது ஒழிந்தேன் நீ இனி வரினும் காணவும் நாணுவனே – திருவா:44 5/3,4
மேல்


புன்மையரை (1)

தகவே எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை எ புன்மையரை
மிகவே உயர்த்தி விண்ணோரை பணித்தி அண்ணா அமுதே – திருவா:5 10/2,3
மேல்


புன்மையேனை (1)

புன்மையேனை ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ – திருவா:5 59/2
மேல்


புன (1)

புன வேய் அன வளை தோளியோடும் புகுந்தருளி – திருவா:11 10/2
மேல்


புனல் (13)

சச்சையனே மிக்க தண் புனல் விண் கால் நிலம் நெருப்பு ஆம் – திருவா:6 31/1
கொங்கைகள் பொங்க குடையும் புனல் பொங்க – திருவா:7 13/7
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 13/8
சீத புனல் ஆடி சிற்றம்பலம் பாடி – திருவா:7 14/3
ஏர் உருவ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 15/8
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 17/8
பெண்ணே இ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 18/8
அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:11 20/3
அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:13 1/3
பூத்து ஆரும் பொய்கை புனல் இதுவே என கருதி – திருவா:15 1/1
புற்றும் ஆய் மரம் ஆய் புனல் காலே உண்டி ஆய் அண்ட வாணரும் பிறரும் – திருவா:23 2/1
சிறை-கணே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 6/4
சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 8/4
மேல்


புனலில் (1)

பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆக பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு – திருவா:5 21/2
மேல்


புனலொடு (1)

உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் – திருவா:5 8/1
மேல்


புனிதா (1)

பொருளனே புனிதா பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செம் சடையாய் – திருவா:29 9/2
மேல்


புனை (2)

போது ஆர் புனை முடியும் எல்லா பொருள் முடிவே – திருவா:7 10/2
நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனை கொன்றை – திருவா:13 13/3
மேல்


புனை-மின் (1)

புகழ்-மின் தொழு-மின் பூ புனை-மின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு – திருவா:45 6/1
மேல்


புனைந்து (2)

பூ_மாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர் – திருவா:5 14/2
தாள தாமரைகள் ஏத்தி தட மலர் புனைந்து நையும் – திருவா:35 6/3
மேல்


புனையப்பெறுவது (1)

புனையப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 7/4
மேல்


புனையேன் (1)

இருந்து நல மலர் புனையேன் ஏத்தேன் நா தழும்பு ஏற – திருவா:5 13/2

மேல்