கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நா 9
நா_மகள் 2
நா_மகளோடு 1
நாகம் 2
நாங்கூழ் 1
நாச 1
நாசம் 1
நாசனே 1
நாசா 1
நாசி 2
நாட்டவர் 1
நாட்டவர்க்கும் 1
நாட்டார் 1
நாட்டார்கள் 1
நாட்டானே 1
நாட்டானை 2
நாட்டி 2
நாட்டில் 1
நாட்டு 3
நாட்டை 1
நாடக 1
நாடகத்தால் 1
நாடகம் 3
நாடகமே 1
நாடர் 4
நாடரால் 1
நாடரும் 2
நாடவர் 2
நாடற்கு 1
நாடற்கு_அரிய 1
நாடனை 1
நாடி 2
நாடு 8
நாடு_அரும் 1
நாடே 2
நாண் 2
நாண்-அது 1
நாண்_ஒணாதது 1
நாணம் 2
நாணாமே 3
நாணுவனே 1
நாத்திகம் 1
நாத 8
நாதம் 2
நாதர் 1
நாதற்கு 1
நாதன் 6
நாதனார் 1
நாதனே 7
நாதனை 1
நாதா 1
நாம் 42
நாமங்கள் 2
நாமத்தானை 1
நாமம் 3
நாமும் 3
நாமே 20
நாய் 14
நாய்_அடியேற்கு 1
நாய்_அடியேன் 3
நாய்_உடல் 1
நாய்க்கு 2
நாய்கள் 1
நாய்கள்-தம் 1
நாயகமே 3
நாயகன் 5
நாயகனுக்கு 1
நாயகனே 4
நாயகனை 3
நாயில் 1
நாயின் 5
நாயினன் 1
நாயினுக்கு 1
நாயினும் 1
நாயினேற்கே 1
நாயினேன் 6
நாயினேன்-தன் 1
நாயினேனை 2
நாயே 1
நாயேற்கு 2
நாயேன் 14
நாயேன்-தனை 1
நாயேனை 14
நார் 3
நாரணணும் 1
நாரணற்கு 1
நாரணன் 1
நாராயணன் 1
நால் 3
நால்_நிலம் 1
நால்வர்க்கும் 1
நால்வேதம் 1
நாவினால் 1
நாவே 1
நாள் 23
நாள்-தொறும் 4
நாள்-தோறும் 3
நாள்_மலர் 4
நாளில் 1
நாளும் 2
நாளை 1
நாற்றத்தின் 1
நாற்றம் 2
நான் 62
நான்-தான் 1
நான்காய் 1
நான்கினையும் 1
நான்கு 2
நான்கும் 1
நான்கே 1
நான்மறை 3
நான்மறைகள் 1
நான்மறையவனும் 1
நான்மறையின் 1
நான்மறையும் 2
நான்மறையோன் 1
நான்மறையோனும் 1
நான்முகத்து 1
நான்முகன் 5
நான்முகனார் 1
நான்முகனும் 4
நானாவிதத்தால் 1
நானும் 3
நானே 1
நானேயோ 1
நானோ 1
நானோ-தான் 1
திருவாசகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்
நா (9)
நாத்திகம் பேசி நா தழும்பு ஏறினர் – திருவா:4/47
இருந்து நல மலர் புனையேன் ஏத்தேன் நா தழும்பு ஏற – திருவா:5 13/2
வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு உன் அருள் பெற்று துன்பத்தின்றும் – திருவா:6 14/1
சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின் – திருவா:9 1/2
கோனை பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நா தழும்பு ஏற வாழ்த்தி – திருவா:9 15/3
நா ஏறு செல்வியும் நாரணணும் நான்மறையும் – திருவா:10 1/2
நா_மகள் நாசி சிரம் பிரமன் பட – திருவா:14 13/1
நா_மகள் நாசி சிரம் பிரமன் கரம் எரியை – திருவா:15 11/2
பை நா பட அரவு ஏர் அல்குல் உமை பாகம்-அது ஆய் என் – திருவா:34 1/1
மேல்
நா_மகள் (2)
நா_மகள் நாசி சிரம் பிரமன் பட – திருவா:14 13/1
நா_மகள் நாசி சிரம் பிரமன் கரம் எரியை – திருவா:15 11/2
மேல்
நா_மகளோடு (1)
சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின் – திருவா:9 1/2
மேல்
நாகம் (2)
அரை ஆடு நாகம் அசைத்த பிரான் அவனியின் மேல் – திருவா:11 6/1
பல் நாகம் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 17/4
மேல்
நாங்கூழ் (1)
எறும்பிடை நாங்கூழ் என புலனால் அரிப்புண்டு அலந்த – திருவா:6 25/1
மேல்
நாச (1)
பன்ன எம்பிரான் வருக என் எனை பாவ_நாச நின் சீர்கள் பாடவே – திருவா:5 99/4
மேல்
நாசம் (1)
பாவம் நாசம் ஆக்கிய பரிசும் – திருவா:2/57
மேல்
நாசனே (1)
ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என் பிறவி_நாசனே – திருவா:5 51/1
மேல்
நாசா (1)
பாவ_நாசா உன் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 9/1
மேல்
நாசி (2)
நா_மகள் நாசி சிரம் பிரமன் பட – திருவா:14 13/1
நா_மகள் நாசி சிரம் பிரமன் கரம் எரியை – திருவா:15 11/2
மேல்
நாட்டவர் (1)
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் – திருவா:3/154
மேல்
நாட்டவர்க்கும் (1)
எ நாட்டவர்க்கும் இறைவா போற்றி – திருவா:4/165
மேல்
நாட்டார் (1)
நாட்டார் நகைசெய்ய நாம் மேலை வீடு எய்த – திருவா:8 6/5
மேல்
நாட்டார்கள் (1)
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே – திருவா:5 28/2
மேல்
நாட்டானே (1)
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல்_பிறவி அறுப்பானே ஓ என்று – திருவா:1/90,91
மேல்
நாட்டானை (2)
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை
பெண் ஆளும் பாகனை பேணு பெருந்துறையில் – திருவா:8 10/3,4
தென் ஆனைக்காவானை தென் பாண்டி நாட்டானை
என்னானை என் அப்பன் என்பார்கட்கு இன் அமுதை – திருவா:8 19/4,5
மேல்
நாட்டி (2)
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும் எழில் சுடர் வைத்து கொடி எடு-மின் – திருவா:9 3/2
வையகம் எல்லாம் உரல்-அது ஆக மா மேரு என்னும் உலக்கை நாட்டி
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி மேதகு தென்னன் பெருந்துறையான் – திருவா:9 9/1,2
மேல்
நாட்டில் (1)
நாட்டில் பரி பாகன் நம் வினையை வீட்டி – திருவா:48 3/2
மேல்
நாட்டு (3)
ஒழித்திடு இ வாழ்வு போற்றி உம்பர் நாட்டு எம்பிரானே – திருவா:5 66/4
நாட்டு தேவரும் நாடு_அரும் பொருளே நாதனே உனை பிரிவுறா அருளை – திருவா:23 5/2
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்-மின் தென்னன் நல் நாட்டு
இறைவன் கிளர்கின்ற காலம் இ காலம் எ காலத்துள்ளும் – திருவா:36 4/1,2
மேல்
நாட்டை (1)
அ பாண்டி நாட்டை சிவலோகம் ஆக்குவித்த – திருவா:8 11/3
மேல்
நாடக (1)
பதஞ்சலிக்கு அருளிய பரம_நாடக என்று – திருவா:2/138
மேல்
நாடகத்தால் (1)
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே – திருவா:5 11/1
மேல்
நாடகம் (3)
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி கதி_இலியாய் – திருவா:5 7/3
ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனை பருக வைத்தவா – திருவா:5 95/3
ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே – திருவா:5 95/4
மேல்
நாடகமே (1)
நகவே தகும் எம்பிரான் என்னை நீ செய்த நாடகமே – திருவா:5 10/4
மேல்
நாடர் (4)
மை அமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்க கூத்தன்-தன்னை – திருவா:9 12/1
வான் நாடர் கோவும் வழி அடியார் சாழலோ – திருவா:12 12/4
வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ – திருவா:13 5/4
பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை – திருவா:17 5/3
மேல்
நாடரால் (1)
பாண்டி நல் நாடரால் அன்னே என்னும் – திருவா:17 5/2
மேல்
நாடரும் (2)
வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ – திருவா:5 95/1
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா – திருவா:5 95/2
மேல்
நாடவர் (2)
நாண்-அது ஒழிந்து நாடவர் பழித்துரை – திருவா:4/69
நாடவர் நம்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப நாமும் அவர்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப – திருவா:9 7/2
மேல்
நாடற்கு (1)
ஞான கரும்பின் தெளியை பாகை நாடற்கு_அரிய நலத்தை நந்தா – திருவா:9 15/1
மேல்
நாடற்கு_அரிய (1)
ஞான கரும்பின் தெளியை பாகை நாடற்கு_அரிய நலத்தை நந்தா – திருவா:9 15/1
மேல்
நாடனை (1)
சீரிய வாயால் குயிலே தென் பாண்டி நாடனை கூவாய் – திருவா:18 2/4
மேல்
நாடி (2)
ஊன் நாடி நாடி வந்து உட்புகுந்தான் உலகர் முன்னே – திருவா:13 5/2
ஊன் நாடி நாடி வந்து உட்புகுந்தான் உலகர் முன்னே – திருவா:13 5/2
மேல்
நாடு (8)
மலை_நாடு உடைய மன்னே போற்றி – திருவா:4/189
நல்-பால் படுத்து என்னை நாடு அறிய தான் இங்ஙன் – திருவா:15 4/3
நாதன் நமை ஆளுடையான் நாடு உரையாய் காதலவர்க்கு – திருவா:19 2/2
அன்பு ஆண்டு மீளா அருள்புரிவான் நாடு என்றும் – திருவா:19 2/3
நாட்டு தேவரும் நாடு_அரும் பொருளே நாதனே உனை பிரிவுறா அருளை – திருவா:23 5/2
நரி எலாம் தெரியாவணம் இந்த நாடு எலாம் அறியும்படி – திருவா:30 9/1
அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல்_படை வாராமே – திருவா:46 2/4
பாண்டி நல் நாடு உடையான் படை_ஆட்சிகள் பாடுதும் ஆகாதே – திருவா:49 1/6
மேல்
நாடு_அரும் (1)
நாட்டு தேவரும் நாடு_அரும் பொருளே நாதனே உனை பிரிவுறா அருளை – திருவா:23 5/2
மேல்
நாடே (2)
பாண்டி நாடே பழம் பதி ஆகவும் – திருவா:2/118
தென் பாண்டி நாடே தெளி – திருவா:19 2/4
மேல்
நாண் (2)
ஏண் நாண் இல்லா நாயினேன் என் கொண்டு எழுகேன் எம்மானே – திருவா:5 84/4
நாண்_ஒணாதது ஒர் நாணம் எய்தி நடு கடலுள் அழுந்தி நான் – திருவா:30 4/2
மேல்
நாண்-அது (1)
நாண்-அது ஒழிந்து நாடவர் பழித்துரை – திருவா:4/69
மேல்
நாண்_ஒணாதது (1)
நாண்_ஒணாதது ஒர் நாணம் எய்தி நடு கடலுள் அழுந்தி நான் – திருவா:30 4/2
மேல்
நாணம் (2)
நகுவேன் பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன் – திருவா:5 60/2
நாண்_ஒணாதது ஒர் நாணம் எய்தி நடு கடலுள் அழுந்தி நான் – திருவா:30 4/2
மேல்
நாணாமே (3)
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ – திருவா:7 6/2,3
நாணாமே உய்ய ஆட்கொண்டருளி நஞ்சு-தனை – திருவா:16 5/3
நன்பே அருளாய் என் உயிர் நாதா நின் அருள் நாணாமே – திருவா:44 3/4
மேல்
நாணுவனே (1)
காணும்-அது ஒழிந்தேன் நீ இனி வரினும் காணவும் நாணுவனே – திருவா:44 5/4
மேல்
நாத்திகம் (1)
நாத்திகம் பேசி நா தழும்பு ஏறினர் – திருவா:4/47
மேல்
நாத (8)
நாத பெரும்பறை நவின்று கறங்கவும் – திருவா:2/108
நாத நாத என்று அழுது அரற்றி – திருவா:2/136
நாத நாத என்று அழுது அரற்றி – திருவா:2/136
நன் புலன் ஒன்றி நாத என்று அரற்றி – திருவா:4/82
நாத பறையினர் அன்னே என்னும் – திருவா:17 1/2
நாத பறையினர் நான்முகன் மாலுக்கும் – திருவா:17 1/3
பரு மிக்க நாத பறை – திருவா:19 8/4
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாத பறை அறை-மின் – திருவா:46 1/1
மேல்
நாதம் (2)
நாதம் உடையது ஒர் நல் கமல போதினில் நண்ணிய நல் நுதலார் – திருவா:43 7/1
நல் மணி நாதம் முழங்கி என் உள் உற நண்ணுவது ஆகாதே – திருவா:49 4/3
மேல்
நாதர் (1)
நாதர் இ நாதனார் அன்னே என்னும் – திருவா:17 1/4
மேல்
நாதற்கு (1)
நயம்-தனை பாடிநின்று ஆடிஆடி நாதற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 18/4
மேல்
நாதன் (6)
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க – திருவா:1/1
அந்தரர் கோன் அயன்-தன் பெருமான் ஆழியான் நாதன் நல் வேலன் தாதை – திருவா:9 3/3
நஞ்சு அமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்
மஞ்சு தோய் மாட மணி உத்தரகோசமங்கை – திருவா:16 4/1,2
நாதன் நமை ஆளுடையான் நாடு உரையாய் காதலவர்க்கு – திருவா:19 2/2
நங்கைமீர் எனை நோக்கு-மின் நங்கள் நாதன் நம் பணி கொண்டவன் – திருவா:42 3/1
நாதன் அணி திருநீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே – திருவா:49 4/4
மேல்
நாதனார் (1)
நாதர் இ நாதனார் அன்னே என்னும் – திருவா:17 1/4
மேல்
நாதனே (7)
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே – திருவா:1/89,90
நாயினேன் ஆதலையும் நோக்கி கண்டும் நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் – திருவா:5 23/2
போற்றி நின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி – திருவா:5 63/2
நச்சு மா மரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே – திருவா:5 96/4
உடைய நாதனே போற்றி நின் அலால் பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி – திருவா:5 97/1
நாட்டு தேவரும் நாடு_அரும் பொருளே நாதனே உனை பிரிவுறா அருளை – திருவா:23 5/2
சடையனே சைவ நாதனே உனை சாரும் தொண்டரை சார்கிலா – திருவா:30 8/3
மேல்
நாதனை (1)
கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி_நாதனை கூவாய் – திருவா:18 6/4
மேல்
நாதா (1)
நன்பே அருளாய் என் உயிர் நாதா நின் அருள் நாணாமே – திருவா:44 3/4
மேல்
நாம் (42)
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இரா_பகல் நாம்
பேசும்போது எப்போது இ போது ஆர் அமளிக்கே – திருவா:7 2/1,2
மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும் – திருவா:7 5/1,2
ஆர்த்த பிறவி துயர் கெட நாம் ஆர்த்து ஆடும் – திருவா:7 12/1
வார் உருவ பூண் முலையீர் வாயார நாம் பாடி – திருவா:7 15/7
நாட்டார் நகைசெய்ய நாம் மேலை வீடு எய்த – திருவா:8 6/5
பற்றி இ பாசத்தை பற்று அற நாம் பற்றுவான் – திருவா:8 20/5
ஒட்டாத பாவி தொழும்பரை நாம் உரு அறியோம் – திருவா:10 7/3
உரு நாம் அறிய ஓர் அந்தணன் ஆய் ஆண்டுகொண்டான் – திருவா:11 1/2
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 1/4
திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 2/4
நவம் ஆய செம் சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து – திருவா:11 4/3
திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 8/4
சீர் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 13/4
திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 15/4
செயலை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 17/4
சிலம்பு ஆடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 20/4
பொந்தை பரவி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 2/4
குணம் கூர பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 7/4
பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 13/4
பொங்கிய சீர் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 15/4
புண் பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 16/4
பல் நாகம் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 17/4
கரு கெட நாம் எல்லாம் உந்தீ பற – திருவா:14 12/3
ஆனந்த கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வணமே – திருவா:15 8/3
எங்கும் பரவி நாம் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 10/4
மாலுக்கு அரியானை வாயார நாம் பாடி – திருவா:16 8/5
புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்த பூமி – திருவா:20 10/1
அற்றிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 1/4
அருவராதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 2/4
அன்பு இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 3/4
அளி இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 4/4
அணிகிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 5/4
ஆள்_அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 6/4
அகம் நெகாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 7/4
அறிவிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 8/4
அஞ்சுவார்-அவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 9/4
ஆண் அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 10/4
அடைவோம் நாம் போய் சிவபுரத்துள் அணி ஆர் கதவு-அது அடையாமே – திருவா:45 5/3
திகழும் சீர் ஆர் சிவபுரத்து சென்று சிவன் தாள் வணங்கி நாம்
நிகழும் அடியார் முன் சென்று நெஞ்சம் உருகி நிற்போமே – திருவா:45 6/3,4
நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோமே – திருவா:45 7/1
வான ஊர் கொள்வோம் நாம் மாய படை வாராமே – திருவா:46 1/4
அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல்_படை வாராமே – திருவா:46 2/4
மேல்
நாமங்கள் (2)
சேவகன் நாமங்கள் பாடிப்பாடி செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 16/4
பிணக்கு இலாத பெருந்துறை பெருமான் உன் நாமங்கள் பேசுவார்க்கு – திருவா:30 1/1
மேல்
நாமத்தானை (1)
சொல்லி பரவும் நாமத்தானை சொல்லும் பொருளும் இறந்த சுடரை – திருவா:27 4/2
மேல்
நாமம் (3)
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் – திருவா:11 1/3
சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன் – திருவா:19 1/2
நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர் – திருவா:21 10/1
மேல்
நாமும் (3)
நாடவர் நம்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப நாமும் அவர்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப – திருவா:9 7/2
ஆவகை நாமும் வந்து அன்பர்-தம்மோடு ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி விண் மேல் – திருவா:9 16/1
நாமும் மேல் ஆம் அடியாருடனே செல நண்ணினும் ஆகாதே – திருவா:49 2/6
மேல்
நாமே (20)
அத்தன் ஐயாறன் அம்மானை பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 1/4
தேவியும் தானும் வந்து எம்மை ஆள செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 2/4
எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 3/4
பாச வினையை பறிந்து நின்று பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 4/4
முறுவல் செம் வாயினீர் முக்கண்_அப்பற்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 5/4
மலைக்கு மருகனை பாடிப்பாடி மகிழ்ந்து பொன்_சுண்ணம் இடிந்தும் நாமே – திருவா:9 6/4
ஆடக மா மலை அன்ன கோவுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 7/4
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 8/4
ஐயன் அணி தில்லைவாணனுக்கே ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 9/4
அத்தன் கருணையொடு ஆடஆட ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 10/4
ஆடு-மின் அம்பலத்து ஆடினானுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 11/4
பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 12/4
பொன்னுடை பூண் முலை மங்கை நல்லீர் பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 13/4
பொங்கிய காதலின் கொங்கை பொங்க பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 14/4
பானல் தடம் கண் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 15/4
சேவகன் நாமங்கள் பாடிப்பாடி செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 16/4
போனகம் ஆக நஞ்சு உண்டல் பாடி பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 17/4
நயம்-தனை பாடிநின்று ஆடிஆடி நாதற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 18/4
இட்டுநின்று ஆடும் அரவம் பாடி ஈசற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 19/4
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 20/4
மேல்
நாய் (14)
குரம்பை-தோறும் நாய்_உடல் அகத்தே – திருவா:3/172
வருந்துவன் நின் மலர் பாதம் அவை காண்பான் நாய்_அடியேன் – திருவா:5 13/1
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய்_அடியேன் – திருவா:5 16/3
நான் யாதும் ஒன்று அல்லா பொல்லா நாய் ஆன – திருவா:5 51/2
தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாய் ஆன – திருவா:5 59/1
கடலினுள் நாய் நக்கி ஆங்கு உன் கருணை கடலின் உள்ளம் – திருவா:6 13/1
நாய் ஆன நம்-தம்மை ஆட்கொண்ட நாயகனை – திருவா:8 7/4
நன்று ஆக வைத்து என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த – திருவா:10 8/2
நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம் – திருவா:10 10/2
நாய் மேல் தவிசு இட்டு நன்றாய் பொருட்படுத்த – திருவா:10 20/3
நாராயணன் அறியா நாள்_மலர் தாள் நாய்_அடியேற்கு – திருவா:16 1/3
அருத்தியினால் நாய்_அடியேன் அணிகொள் தில்லை கண்டேனே – திருவா:31 3/4
பொச்சை ஆன இ பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய் போல – திருவா:41 9/1
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த – திருவா:51 9/3
மேல்
நாய்_அடியேற்கு (1)
நாராயணன் அறியா நாள்_மலர் தாள் நாய்_அடியேற்கு
ஊர் ஆக தந்தருளும் உத்தரகோசமங்கை – திருவா:16 1/3,4
மேல்
நாய்_அடியேன் (3)
வருந்துவன் நின் மலர் பாதம் அவை காண்பான் நாய்_அடியேன்
இருந்து நல மலர் புனையேன் ஏத்தேன் நா தழும்பு ஏற – திருவா:5 13/1,2
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய்_அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னை பரவுவனே – திருவா:5 16/3,4
அருத்தியினால் நாய்_அடியேன் அணிகொள் தில்லை கண்டேனே – திருவா:31 3/4
மேல்
நாய்_உடல் (1)
குரம்பை-தோறும் நாய்_உடல் அகத்தே – திருவா:3/172
மேல்
நாய்க்கு (2)
நான் ஆர் அடி அணைவான் ஒரு நாய்க்கு தவிசு இட்டு இங்கு – திருவா:34 2/1
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே நின் பொன் அருளே – திருவா:38 5/4
மேல்
நாய்கள் (1)
வேவ திரிபுரம் செற்ற வில்லி வேடுவன் ஆய் கடி நாய்கள் சூழ – திருவா:43 6/1
மேல்
நாய்கள்-தம் (1)
பொறுப்பார் அன்றே பெரியோர் சிறு நாய்கள்-தம் பொய்யினையே – திருவா:6 6/4
மேல்
நாயகமே (3)
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே – திருவா:33 7/4
என் நாயகமே பிற்பட்டு இங்கு இருந்தேன் நோய்க்கு விருந்தாயே – திருவா:50 2/4
நடு ஆய் நில்லாது ஒழிந்த-கால் நன்றோ எங்கள் நாயகமே – திருவா:50 4/4
மேல்
நாயகன் (5)
தேவ_தேவன் மெய் சேவகன் தென் பெருந்துறை நாயகன்
மூவராலும் அறி_ஒணா முதல் ஆய ஆனந்த_மூர்த்தியான் – திருவா:42 1/1,2
சிட்டன் மெய் சிவலோக_நாயகன் தென் பெருந்துறை சேவகன் – திருவா:42 2/2
தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன் நாயகன்
மங்கை-மார் கையில் வளையும் கொண்டு எம் உயிரும் கொண்டு எம் பணிகொள்வான் – திருவா:42 3/2,3
ஏறு உடையான் எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே – திருவா:49 2/8
என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே – திருவா:49 3/8
மேல்
நாயகனுக்கு (1)
நானும் என் சிந்தையும் நாயகனுக்கு எ இடத்தோம் – திருவா:10 15/1
மேல்
நாயகனே (4)
நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால் – திருவா:12 4/3
எங்கள் நாயகனே என் உயிர் தலைவா ஏல வார் குழலி-மார் இருவர் – திருவா:29 3/1
தங்கள் நாயகனே தக்க நல் காமன்-தனது உடல் தழல் எழ விழித்த – திருவா:29 3/2
செம் கண் நாயகனே திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 3/3
மேல்
நாயகனை (3)
நாய் ஆன நம்-தம்மை ஆட்கொண்ட நாயகனை
தாயானை தத்துவனை தானே உலகு ஏழும் – திருவா:8 7/4,5
நாயேனை தன் அடிகள் பாடுவித்த நாயகனை
பேயேனது உள்ள பிழை பொறுக்கும் பெருமையனை – திருவா:10 12/1,2
ஞாலம் விளங்க இருந்த நாயகனை வர கூவாய் – திருவா:18 3/4
மேல்
நாயில் (1)
நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நல் நெறி காட்டி – திருவா:5 39/2
மேல்
நாயின் (5)
நாயின் கடையாய் கிடந்த அடியேற்கு – திருவா:1/60
உடையார் உடையாய் நின் பாதம் சேர கண்டு இங்கு ஊர் நாயின்
கடை ஆனேன் நெஞ்சு உருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன் – திருவா:5 56/2,3
நாள் கொண்ட நாள்_மலர் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை – திருவா:9 8/3
நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து – திருவா:13 3/1
நாயின் கடை ஆம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் – திருவா:33 8/1
மேல்
நாயினன் (1)
கீறு இலாத நெஞ்சு உடைய நாயினன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே – திருவா:5 91/4
மேல்
நாயினுக்கு (1)
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே – திருவா:5 28/2
மேல்
நாயினும் (1)
சிட்டனே சிவலோகனே சிறு நாயினும் கடை ஆய வெம் – திருவா:30 2/3
மேல்
நாயினேற்கே (1)
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே
காட்டாதன எல்லாம் காட்டி பின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை – திருவா:5 28/2,3
மேல்
நாயினேன் (6)
நாயினேன் ஆதலையும் நோக்கி கண்டும் நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் – திருவா:5 23/2
அறிவனே அமுதே அடி_நாயினேன் – திருவா:5 50/1
நகுவேன் பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன்
நெகும் அன்பு இல்லை நினை காண நீ ஆண்டு அருள அடியேனும் – திருவா:5 60/2,3
ஏண் நாண் இல்லா நாயினேன் என் கொண்டு எழுகேன் எம்மானே – திருவா:5 84/4
ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத்து ஆடும் நின் கழல் போது நாயினேன்
கூடவேண்டும் நான் போற்றி இ புழுக்கூடு நீக்கு எனை போற்றி பொய் எலாம் – திருவா:5 100/2,3
நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன் அடி பணியா – திருவா:23 7/2
மேல்
நாயினேன்-தன் (1)
சிந்தனை நின்-தனக்கு ஆக்கி நாயினேன்-தன் கண்_இணை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி – திருவா:5 26/1
மேல்
நாயினேனை (2)
நாயினேனை நலம் மலி தில்லையுள் – திருவா:2/127
ஆண்டுகொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ – திருவா:5 74/2
மேல்
நாயே (1)
நகவே ஞாலத்துள் புகுந்து நாயே அனைய நமை ஆண்ட – திருவா:45 2/3
மேல்
நாயேற்கு (2)
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி – திருவா:4/144
ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிடவேண்டும் போற்றி – திருவா:5 69/4
மேல்
நாயேன் (14)
தரியேன் நாயேன் தான் எனை செய்தது – திருவா:3/164
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி – திருவா:4/185
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல்_மாலை கொண்டருள் போற்றி – திருவா:4/219,220
செய்வது அறியா சிறு நாயேன் செம்பொன் பாத_மலர் காணா – திருவா:5 52/1
தரிப்பு ஆய் நாயேன் இருப்பேனோ நம்பி இனி-தான் நல்காயே – திருவா:21 9/4
எய்த்தேன் நாயேன் இனி இங்கு இருக்ககில்லேன் இ வாழ்க்கை – திருவா:25 6/1
நைஞ்சேன் நாயேன் ஞான சுடரே நான் ஓர் துணை காணேன் – திருவா:25 10/2
அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த – திருவா:28 6/3
புறமே கிடந்து புலை_நாயேன் புலம்புகின்றேன் உடையானே – திருவா:32 6/2
இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடி_நாயேன் – திருவா:32 7/2
அழகே புரிந்திட்டு அடி_நாயேன் அரற்றுகின்றேன் உடையானே – திருவா:33 10/1
தரியேன் நாயேன் இன்னது என்று அறியேன் சங்கரா கருணையினால் – திருவா:44 2/2
நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனி-தான் நல்குதியே – திருவா:50 5/2
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய் நான்-தான் வேண்டாவோ – திருவா:50 5/4
மேல்
நாயேன்-தனை (1)
தாதாய் மூ_ஏழ் உலகுக்கும் தாயே நாயேன்-தனை ஆண்ட – திருவா:27 9/1
மேல்
நாயேனை (14)
கிற்ற வா மனமே கெடுவாய் உடையான் அடி_நாயேனை – திருவா:5 34/1
வினை என் போல் உடையார் பிறர் ஆர் உடையான் அடி_நாயேனை – திருவா:5 37/1
தான் வந்து நாயேனை தாய் போல் தலையளித்திட்டு – திருவா:8 4/3
கல்லா மனத்து கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி – திருவா:8 5/1,2
கண் ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட – திருவா:8 10/5
நாயேனை தன் அடிகள் பாடுவித்த நாயகனை – திருவா:10 12/1
தான் அந்தம்_இல்லான் தனை அடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காண் ஏடீ – திருவா:12 10/1,2
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல் பிறவி – திருவா:16 6/3
நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான் – திருவா:19 9/3
கல்லாத புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் ஆய் வந்து வனப்பு எய்தி இருக்கும்வண்ணம் – திருவா:31 4/1,2
ஆதம்_இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு – திருவா:31 5/2
பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை
ஓங்கி உளத்து ஒளி வளர உலப்பு இலா அன்பு அருளி – திருவா:31 9/1,2
ஒன்றும் போதா நாயேனை உய்ய கொண்ட நின் கருணை – திருவா:33 3/1
நாயின் கடை ஆம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் – திருவா:33 8/1
மேல்
நார் (3)
கல் நார் உரித்த கனியே போற்றி – திருவா:4/97
கல் நார் உரித்து என்ன என்னையும் தன் கருணையினால் – திருவா:11 9/1
கல் நார் உரித்து என்னை ஆண்டுகொண்டான் கழல்_இணைகள் – திருவா:13 9/3
மேல்
நாரணணும் (1)
நா ஏறு செல்வியும் நாரணணும் நான்மறையும் – திருவா:10 1/2
மேல்
நாரணற்கு (1)
நலம் உடைய நாரணற்கு அன்று அருளிய ஆறு என் ஏடீ – திருவா:12 18/2
மேல்
நாரணன் (1)
நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரன் அடி கீழ் – திருவா:12 18/3
மேல்
நாராயணன் (1)
நாராயணன் அறியா நாள்_மலர் தாள் நாய்_அடியேற்கு – திருவா:16 1/3
மேல்
நால் (3)
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நால் திசை – திருவா:3/108
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலர – திருவா:4/3
நரகொடு சுவர்க்கம் நால்_நிலம் புகாமல் – திருவா:4/213
மேல்
நால்_நிலம் (1)
நரகொடு சுவர்க்கம் நால்_நிலம் புகாமல் – திருவா:4/213
மேல்
நால்வர்க்கும் (1)
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை – திருவா:12 16/1
மேல்
நால்வேதம் (1)
பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம் – திருவா:5 17/1,2
மேல்
நாவினால் (1)
பின்ன எம்பிரான் வருக என் எனை பெய்_கழல்-கண் அன்பாய் என் நாவினால்
பன்ன எம்பிரான் வருக என் எனை பாவ_நாச நின் சீர்கள் பாடவே – திருவா:5 99/3,4
மேல்
நாவே (1)
கூறும் நாவே முதலாக கூறும் கரணம் எல்லாம் நீ – திருவா:33 5/1
மேல்
நாள் (23)
ஆர்-மின் ஆர்-மின் நாள்_மலர் பிணையலில் – திருவா:3/142
சாவ முன் நாள் தக்கன் வேள்வி தகர் தின்று நஞ்சம் அஞ்சி – திருவா:5 4/1
முழுவதும் கண்டவனை படைத்தான் முடி சாய்ந்து முன் நாள்
செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான் – திருவா:5 7/1,2
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே – திருவா:5 12/4
அறிவு_இலாமை அன்றே கண்டது ஆண்ட நாள்
அறிவனோ அல்லனோ அருள் ஈசனே – திருவா:5 50/3,4
காணும் ஆறு காணேன் உன்னை அ நாள் கண்டேனும் – திருவா:5 84/1
முன்ன எம்பிரான் வருக என் எனை முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள்
பின்ன எம்பிரான் வருக என் எனை பெய்_கழல்-கண் அன்பாய் என் நாவினால் – திருவா:5 99/2,3
செழிகின்ற தீ புகு விட்டிலின் சில் மொழியாரில் பல் நாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால் – திருவா:6 5/1,2
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாள்_மலர் பாதங்கள் சூட தந்த – திருவா:9 6/3
நாள் கொண்ட நாள்_மலர் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை – திருவா:9 8/3
நாள் கொண்ட நாள்_மலர் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை – திருவா:9 8/3
பல் நாள் பரவி பணி செய்ய பாத மலர் – திருவா:13 9/1
நாராயணன் அறியா நாள்_மலர் தாள் நாய்_அடியேற்கு – திருவா:16 1/3
புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்த பூமி – திருவா:20 10/1
வாழி எப்போது வந்து எ நாள் வணங்குவன் வல் வினையேன் – திருவா:24 6/3
எல்லை மூ_உலகும் உருவி அன்று இருவர் காணும் நாள் ஆதி ஈறு இன்மை – திருவா:28 4/3
புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்றது இடர் பின் நாள்
உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்ப சுடர் காண்பான் – திருவா:32 1/2,3
கோனே கூவிக்கொள்ளும் நாள் என்றுஎன்று உன்னை கூறுவதே – திருவா:33 4/4
எ நாள் களித்து எ நாள் இறுமாக்கேன் இனி யானே – திருவா:34 1/4
எ நாள் களித்து எ நாள் இறுமாக்கேன் இனி யானே – திருவா:34 1/4
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி ஐயன் பெருந்துறை ஆதி அ நாள்
ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 4/3,4
பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அ நாள்
உந்து திரை கடலை கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை-அதனில் – திருவா:43 5/2,3
பல் நாள் உன்னை பணிந்து ஏத்தும் பழைய அடியாரொடும் கூடாது – திருவா:50 2/3
மேல்
நாள்-தொறும் (4)
கீடம் புரையும் கிழவோன் நாள்-தொறும்
அருக்கனின் சோதி அமைத்தோன் திருத்தகு – திருவா:3/19,20
சாயா அன்பினை நாள்-தொறும் தழைப்பவர் – திருவா:4/86
பூண்_ஒணாதது ஒர் அன்பு பூண்டு பொருந்தி நாள்-தொறும் போற்றவும் – திருவா:30 4/1
மெய் நாள்-தொறும் பிரியா வினை கேடா விடை பாகா – திருவா:34 1/2
மேல்
நாள்-தோறும் (3)
பொய் ஆய செல்வத்தே புக்கு அழுந்தி நாள்-தோறும்
மெய்யா கருதி கிடந்தேனை ஆட்கொண்ட – திருவா:10 17/1,2
நலம் பாடி நஞ்சு உண்டவா பாடி நாள்-தோறும்
அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:11 20/2,3
நன்று ஆக வானவர் மா முனிவர் நாள்-தோறும்
நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனை கொன்றை – திருவா:13 13/2,3
மேல்
நாள்_மலர் (4)
ஆர்-மின் ஆர்-மின் நாள்_மலர் பிணையலில் – திருவா:3/142
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாள்_மலர் பாதங்கள் சூட தந்த – திருவா:9 6/3
நாள் கொண்ட நாள்_மலர் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை – திருவா:9 8/3
நாராயணன் அறியா நாள்_மலர் தாள் நாய்_அடியேற்கு – திருவா:16 1/3
மேல்
நாளில் (1)
தட மதில்கள்-அவை மூன்றும் தழல் எரித்த அ நாளில்
இடபம்-அது ஆய் தாங்கினான் திருமால் காண் சாழலோ – திருவா:12 15/3,4
மேல்
நாளும் (2)
நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான் – திருவா:19 9/3
வேண்டேன் பிறப்பு இறப்பு சிவம் வேண்டார்-தமை நாளும்
தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறை தாள் – திருவா:34 7/2,3
மேல்
நாளை (1)
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை – திருவா:7 6/1
மேல்
நாற்றத்தின் (1)
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே – திருவா:1/44
மேல்
நாற்றம் (2)
பூவில் நாற்றம் போன்று உயர்ந்து எங்கும் – திருவா:3/115
உற்ற ஆக்கையின் உறு பொருள் நறு மலர் எழுதரு நாற்றம் போல் – திருவா:26 9/1
மேல்
நான் (62)
அவன் எம்பிரான் என்ன நான் அடியேன் என்ன இ பரிசே – திருவா:5 9/3
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே – திருவா:5 11/1
வருந்துவன் அ தமியேன் மற்று என்னே நான் ஆம் ஆறே – திருவா:5 13/4
தரியேன் நான் ஆம் ஆறு என் சாவேன் நான் சாவேனே – திருவா:5 18/4
தரியேன் நான் ஆம் ஆறு என் சாவேன் நான் சாவேனே – திருவா:5 18/4
வினையிலே கிடந்தேனை புகுந்து நின்று போது நான் வினை_கேடன் என்பாய் போல – திருவா:5 22/1
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை – திருவா:5 22/2
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் – திருவா:5 22/3
முனைவனே முறையோ நான் ஆன ஆறு முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே – திருவா:5 22/4
நாயினேன் ஆதலையும் நோக்கி கண்டும் நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் – திருவா:5 23/2
முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலை கீறேன் – திருவா:5 37/3
நான் யாதும் ஒன்று அல்லா பொல்லா நாய் ஆன – திருவா:5 51/2
பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பது ஆனேன் போர் ஏறே – திருவா:5 52/4
நான் நின் அடியேன் நீ என்னை ஆண்டாய் என்றால் அடியேற்கு – திருவா:5 58/3
என்னை நோக்குவார் யாரே என் நான் செய்கேன் எம்பெருமான் – திருவா:5 59/3
பிச்சை தேவா என் நான் செய்கேன் பேசாயே – திருவா:5 81/4
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் ஏது கொண்டு நான் ஏது செய்யினும் – திருவா:5 94/3
ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனை பருக வைத்தவா – திருவா:5 95/3
பாடவேண்டும் நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந்து உருகி நெக்குநெக்கு – திருவா:5 100/1
ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத்து ஆடும் நின் கழல் போது நாயினேன் – திருவா:5 100/2
கூடவேண்டும் நான் போற்றி இ புழுக்கூடு நீக்கு எனை போற்றி பொய் எலாம் – திருவா:5 100/3
வீடவேண்டும் நான் போற்றி வீடு தந்தருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே – திருவா:5 100/4
நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார் – திருவா:10 2/1
பத்து ஏதும் இல்லாது என் பற்று அற நான் பற்றிநின்ற – திருவா:10 5/3
நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து – திருவா:10 10/1
நான் தனக்கு அன்பு இன்மை நானும் தானும் அறிவோம் – திருவா:10 13/1
மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய அ – திருவா:11 8/3
நான் கெட்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 18/4
நான் ஆடிஆடி நின்று ஓலம் இட நடம் பயிலும் – திருவா:13 5/3
நைஞ்சேன் நாயேன் ஞான சுடரே நான் ஓர் துணை காணேன் – திருவா:25 10/2
பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 1/1
வம்பனேன்-தன்னை ஆண்ட மா மணியே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 2/1
பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 3/1
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 4/1
பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 5/1
பஞ்சின் மெல் அடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 6/1
பரிதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 7/1
கருணையே நோக்கி கசிந்து உளம் உருகி கலந்து நான் வாழும் ஆறு அறியா – திருவா:28 7/3
பந்து அணை விரலாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 8/1
பாவ_நாசா உன் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 9/1
பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 10/1
நாண்_ஒணாதது ஒர் நாணம் எய்தி நடு கடலுள் அழுந்தி நான்
பேண்_ஒணாத பெருந்துறை பெரும் தோணி பற்றி உகைத்தலும் – திருவா:30 4/2,3
ஞாலமே கரி ஆக நான் உனை நச்சி நச்சிட வந்திடும் – திருவா:30 5/3
மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே – திருவா:31 6/4
வெருளாவண்ணம் மெய் அன்பை உடையாய் பெற நான் வேண்டுமே – திருவா:32 3/4
நான் ஓர் தோளா சுரை ஒத்தால் நம்பி இனி-தான் வாழ்ந்தாயே – திருவா:32 10/2
எண்ணாது இரவும் பகலும் நான் அவையே எண்ணும்-இது அல்லால் – திருவா:33 9/2
நான் ஆர் அடி அணைவான் ஒரு நாய்க்கு தவிசு இட்டு இங்கு – திருவா:34 2/1
எனை நான் என்பது அறியேன் பகல் இரவு ஆவதும் அறியேன் – திருவா:34 3/1
எச்சம் அறிவேன் நான் எனக்கு இருக்கின்றதை அறியேன் – திருவா:34 9/1
நான் பாவியன் ஆனால் உனை நல்காய் எனல் ஆமே – திருவா:34 10/4
விடையானே விரி பொழில் சூழ் பெருந்துறையாய் அடியேன் நான்
உடையானே உனை அல்லாது உறுதுணை மற்று அறியேனே – திருவா:39 2/3,4
நம்பும் என் சிந்தை நணுகும்வண்ணம் நான் அணுகும் – திருவா:40 6/3
தையலார் எனும் சுழி-தலை பட்டு நான் தலை தடுமாறாமே – திருவா:41 1/2
நடித்து மண்ணிடை பொய்யினை பல செய்து நான் என எனும் மாயம் – திருவா:41 3/1
பிணைந்து வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய் திரிவேனை – திருவா:41 6/2
இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி – திருவா:41 7/1
தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார்-தங்கள் – திருவா:41 7/2
பொச்சை ஆன இ பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய் போல – திருவா:41 9/1
பெண் அலி ஆண் என நான் என வந்த பிணக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/5
படுவேன் படுவது எல்லாம் நான் பட்டால் பின்னை பயன் என்னே – திருவா:50 4/2
உய்ஞ்சேன் நான் உடையானே அடியேனை வருக என்று – திருவா:51 5/3
மேல்
நான்-தான் (1)
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய் நான்-தான் வேண்டாவோ – திருவா:50 5/4
மேல்
நான்காய் (1)
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி – திருவா:4/138
மேல்
நான்கினையும் (1)
அரும் தவருக்கு ஆலின் கீழ் அறம் முதலா நான்கினையும்
இருந்து அவருக்கு அருளும்-அது எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 20/1,2
மேல்
நான்கு (2)
அரும் தவருக்கு அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல் – திருவா:12 20/3
நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 9/4
மேல்
நான்கும் (1)
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு – திருவா:5 75/1
மேல்
நான்கே (1)
மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா – திருவா:12 2/3
மேல்
நான்மறை (3)
மூவா நான்மறை முதல்வா போற்றி – திருவா:4/94
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 4/3
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 9/3
மேல்
நான்மறைகள் (1)
நம்பனையும் ஆமா கேள் நான்மறைகள் தாம் அறியோ – திருவா:12 17/3
மேல்
நான்மறையவனும் (1)
ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையன் ஆய – திருவா:5 23/1
மேல்
நான்மறையின் (1)
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை – திருவா:12 16/1
மேல்
நான்மறையும் (2)
நா ஏறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மா ஏறு சோதியும் வானவரும் தாம் அறியா – திருவா:10 1/2,3
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா மால் அயனும் – திருவா:48 1/1
மேல்
நான்மறையோன் (1)
நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய் – திருவா:2/21
மேல்
நான்மறையோனும் (1)
நான்மறையோனும் மகத்து இயமான் பட – திருவா:14 14/1
மேல்
நான்முகத்து (1)
மன்ன எம்பிரான் வருக என் எனை மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும் – திருவா:5 99/1
மேல்
நான்முகன் (5)
நான்முகன் முதலா வானவர் தொழுது எழ – திருவா:4/1
நாத பறையினர் நான்முகன் மாலுக்கும் – திருவா:17 1/3
வா இங்கே நீ குயில் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி – திருவா:18 8/1
ஞாலம் இந்திரன் நான்முகன் வானோர் நிற்க மற்று எனை நயந்து இனிது ஆண்டாய் – திருவா:23 9/1
ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்_அரிய – திருவா:36 5/2
மேல்
நான்முகனார் (1)
நல்ல மலரின் மேல் நான்முகனார் தலை – திருவா:14 18/1
மேல்
நான்முகனும் (4)
மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம் – திருவா:7 5/1
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் – திருவா:7 20/6
கமல நான்முகனும் கார் முகில் நிறத்து கண்ணனும் நண்ணுதற்கு அரிய – திருவா:29 4/1
நெடியவனும் நான்முகனும் நீர் கான்றும் காண_ஒண்ணா – திருவா:51 11/3
மேல்
நானாவிதத்தால் (1)
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தால் கூத்து நவிற்றி – திருவா:27 8/2
மேல்
நானும் (3)
நச்சு மா மரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே – திருவா:5 96/4
நான் தனக்கு அன்பு இன்மை நானும் தானும் அறிவோம் – திருவா:10 13/1
நானும் என் சிந்தையும் நாயகனுக்கு எ இடத்தோம் – திருவா:10 15/1
மேல்
நானே (1)
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே – திருவா:7 6/2
மேல்
நானேயோ (1)
நானேயோ தவம் செய்தேன் சிவாயநம என பெற்றேன் – திருவா:38 10/1
மேல்
நானோ (1)
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே – திருவா:33 7/4
மேல்
நானோ-தான் (1)
ஆய கடவேன் நானோ-தான் என்னதோ இங்கு அதிகாரம் – திருவா:33 8/3