கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தூ 9
தூக்கி 2
தூகேன் 1
தூசி 1
தூண் 1
தூண்டா 1
தூண்டிய 1
தூண்டு 1
தூபம் 1
தூய்மைகள் 1
தூய்மைசெய்து 1
தூய 5
தூயாய் 1
தூரும் 1
தூலத்து 1
தூவி 2
தூவேன் 1
தூறு 1
திருவாசகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்
தூ (9)
தூ வண மேனி காட்டிய தொன்மையும் – திருவா:2/51
சோலை பசும் கிளியே தூ நீர் பெருந்துறை கோன் – திருவா:19 10/1
திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ ஒளியே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 4/3
துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு நின் தூ மலர் கழல் தந்து எனை – திருவா:30 7/3
துடி ஏர் இடுகு இடை தூ மொழியார் தோள் நசையால் – திருவா:40 2/1
தொழுத கையினர் ஆகி தூ மலர் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு – திருவா:42 8/3
தூ வெள்ளை நீறு அணி எம்பெருமான் சோதி மயேந்திரநாதன் வந்து – திருவா:43 9/1
சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே – திருவா:49 7/1
சுண்ண வெண்ணீறு அணிவித்து தூ நெறியே சேரும்வண்ணம் – திருவா:51 4/3
மேல்
தூக்கி (2)
முத்து நல் தாமம் பூ_மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வை-மின் – திருவா:9 1/1
தூக்கி முன் செய்த பொய் அற துகள் அறுத்து எழுதரு சுடர் சோதி – திருவா:26 8/3
மேல்
தூகேன் (1)
கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் – திருவா:5 14/3
மேல்
தூசி (1)
தொண்டர்காள் தூசி செல்லீர் பக்தர்காள் சூழ போகீர் – திருவா:46 2/1
மேல்
தூண் (1)
ஏதிலார் தூண் என்ன மேல் விளங்கி ஏர் காட்டும் – திருவா:19 10/3
மேல்
தூண்டா (1)
தூண்டா விளக்கின் சுடர் அனையாய் தொண்டனேற்கும் உண்டாம்-கொல் – திருவா:32 4/3
மேல்
தூண்டிய (1)
தூண்டிய சோதியை மீனவனும் சொல்ல வல்லன் அல்லன் – திருவா:36 6/2
மேல்
தூண்டு (1)
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் – திருவா:2/41
மேல்
தூபம் (1)
முத்து நல் தாமம் பூ_மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வை-மின் – திருவா:9 1/1
மேல்
தூய்மைகள் (1)
தூய்மைகள் செய்தவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 11/4
மேல்
தூய்மைசெய்து (1)
துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்பு உள்ளவற்றை முழுது அழிய உள் புகுத்த – திருவா:40 3/2,3
மேல்
தூய (5)
தூய மேனி சுடர் விடு சோதி – திருவா:2/112
சுந்தர நீறு அணிந்து மெழுகி தூய பொன் சிந்தி நிதி நிரப்பி – திருவா:9 3/1
துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ் பாடி – திருவா:16 4/5
துப்பனே தூயாய் தூய வெண்ணீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து – திருவா:29 6/1
தூய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி சுடருமே – திருவா:42 1/4
மேல்
தூயாய் (1)
துப்பனே தூயாய் தூய வெண்ணீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து – திருவா:29 6/1
மேல்
தூரும் (1)
தூரும் பரிசு துரிசு அறுத்து தொண்டர் எல்லாம் – திருவா:40 5/2
மேல்
தூலத்து (1)
சூக்கமொடு தூலத்து சூறை மாருதத்து – திருவா:3/10
மேல்
தூவி (2)
வேண்டும்தனையும் வாய்விட்டு அலறி விரை ஆர் மலர் தூவி
பூண்டு கிடப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 3/3,4
ஓதி பணிந்து அலர் தூவி ஏத்த ஒளி வளர் சோதி எம் ஈசன் மன்னும் – திருவா:43 7/2
மேல்
தூவேன் (1)
விரை ஆர்ந்த மலர் தூவேன் வியந்து அலறேன் நயந்து உருகேன் – திருவா:5 18/3
மேல்
தூறு (1)
ஆனை வெம் போரில் குறும் தூறு என புலனால் அலைப்புண்டேனை – திருவா:6 21/1