மிக (1)
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து – நெடு 156
மிகு (4)
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி – திரு 84
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் – திரு 154
போர் மிகு பொருந குருசில் என பல – திரு 276
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய – நெடு 162
மிசை (4)
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109
புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசை
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக – நெடு 159,160
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள – நெடு 170
சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து – நெடு 183
மிலைந்த (1)
பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன் – திரு 44
மின் (2)
மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப – திரு 85
இன்னே முடிக தில் அம்ம மின் அவிர் – நெடு 168