Select Page

சுட்டி (1)

நான்முக ஒருவர் சுட்டி காண்வர – திரு 165

மேல்


சுட்டிய (1)

இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி – திரு 178

மேல்


சுடர் (4)

சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள் – திரு 43
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு – திரு 105
பாண்டில்_விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 175

மேல்


சுணங்கின் (1)

தளிர் ஏர் மேனி தாய சுணங்கின்
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 148,149

மேல்


சுதை (1)

வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ – நெடு 110

மேல்


சுமந்து (1)

வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து
ஆர முழு_முதல் உருட்டி வேரல் – திரு 296,297

மேல்


சுருக்கி (1)

செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி – நெடு 58

மேல்


சுரும்பு (1)

சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை – திரு 203

மேல்


சுரும்பும் (1)

சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள் – திரு 43

மேல்


சுவர் (1)

செம்பு இயன்று அன்ன செய்வு_உறு நெடும் சுவர்
உருவ பல் பூ ஒரு கொடி வளைஇ – நெடு 112,113

மேல்


சுவல் (1)

சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து – நெடு 183

மேல்


சுழல் (1)

சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின் – திரு 48

மேல்


சுளை (1)

ஆசினி முது சுளை கலாவ மீமிசை – திரு 301

மேல்


சுனை (3)

கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி – திரு 199
நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப – திரு 253,254

மேல்