Select Page

கா (1)

நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா
குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க – நெடு 27,28

மேல்


காக்கும் (1)

உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை – திரு 161

மேல்


காசு (1)

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16

மேல்


காட்சி (2)

துனி இல் காட்சி முனிவர் முன் புக – திரு 137
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு – திரு 166,167

மேல்


காட்சியர் (1)

கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை – திரு 135

மேல்


காட்ட (1)

முன்னோன் முறை_முறை காட்ட பின்னர் – நெடு 177

மேல்


காட்டி (1)

மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி
அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 290,291

மேல்


காடி (1)

காடி கொண்ட கழுவு_உறு கலிங்கத்து – நெடு 134

மேல்


காடும் (1)

காடும் காவும் கவின் பெறு துருத்தியும் – திரு 223

மேல்


காண் (1)

ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 250

மேல்


காண்_தக (1)

ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக
முந்து நீ கண்டு_உழி முகன் அமர்ந்து ஏத்தி – திரு 250,251

மேல்


காண்பு (1)

கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 114

மேல்


காண்வர (2)

வேங்கை நுண் தாது அப்பி காண்வர
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா – திரு 36,37
நான்முக ஒருவர் சுட்டி காண்வர
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி – திரு 165,166

மேல்


காண (1)

அந்தர கொட்பினர் வந்து உடன் காண
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் – திரு 174,175

மேல்


காணிய (1)

ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 172

மேல்


காதலர் (1)

காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து – நெடு 71

மேல்


காதலின் (1)

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் – திரு 94

மேல்


காதின் (2)

பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு – திரு 50
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின்
பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை – நெடு 140,141

மேல்


காதினன் (1)

செயலை தண் தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன் – திரு 207,208

மேல்


காது (1)

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31

மேல்


காந்தள் (1)

சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள்
பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன் – திரு 43,44

மேல்


காமமொடு (1)

தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை – திரு 134,135

மேல்


காமரு (1)

கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75

மேல்


காய் (2)

பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் – திரு 190
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26

மேல்


கார்கோள் (1)

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7

மேல்


கால் (13)

கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள் – திரு 14
செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு – திரு 21
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 82
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு – திரு 202
கைதொழூஉ பரவி கால் உற வணங்கி – திரு 252
பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 15
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 40
மனை உறை புறவின் செம் கால் சேவல் – நெடு 45
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 83
குறும் கால் அன்னமோடு உகளும் முன்கடை – நெடு 92
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால்
ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி – நெடு 157,158
ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி – நெடு 158
நூல் கால் யாத்த மாலை வெண்குடை – நெடு 184

மேல்


காலை-தோறு (1)

அறு_அறு_காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 104

மேல்


காவும் (1)

காடும் காவும் கவின் பெறு துருத்தியும் – திரு 223

மேல்


காழ் (7)

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16
நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்
நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 32,33
அந்தர பல் இயம் கறங்க திண் காழ்
வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 119,120
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 204
இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப – நெடு 56
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ்
செம்பு இயன்று அன்ன செய்வு_உறு நெடும் சுவர் – நெடு 111,112
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176

மேல்


காழகம் (1)

புலரா காழகம் புலர உடீஇ – திரு 184

மேல்


காளை (1)

வாள் தோள் கோத்த வன்கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து – நெடு 182,183

மேல்


கான் (1)

விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான்
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி – திரு 198,199

மேல்


கானத்து (2)

தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து
இருள் பட பொதுளிய பராரை மராஅத்து – திரு 9,10
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து
முல்லை பல் போது உறழ பூ நிரைத்து – நெடு 129,130

மேல்


கானவர் (1)

கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 194,195

மேல்