கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வெஃகா 1
வெஃகாமை 1
வெஃகி 6
வெஃகின் 2
வெஃகுதல் 1
வெகுளாமை 2
வெகுளி 6
வெகுளியின் 1
வெகுளியை 1
வெகுளும் 1
வெண்மை 1
வெம் 2
வெய்து 2
வெயர்ப்ப 1
வெயில் 1
வெருவந்த 1
வெருவந்து 1
வெரூஉம் 1
வெல் 1
வெல்லல் 1
வெல்லும் 5
வெல்வது 1
வெள்ள 1
வெள்ளத்து 2
வெளிப்படும்-தோறும் 1
வெளியார் 1
வெளிறு 1
வெறி 1
வெறிய 1
வெறுக்கை 2
வெறுக்கையுள் 1
வெறுத்தக்க 1
வெறுப்பு 1
வென்ற 1
வென்றதூஉம் 1
வென்றார் 1
வென்றி 2
வென்றிடினும் 1
வென்று 1
வென்றுவிடல் 1
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வெஃகா (1)
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
திறன் அறிந்து ஆங்கே திரு – குறள் 18:9
வெஃகாமை (1)
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப்பொருள் – குறள் 18:8
வெஃகி (6)
படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார்
நடுவு அன்மை நாணுபவர் – குறள் 18:2
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்டுபவர் – குறள் 18:3
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும்
வெஃகி வெறிய செயின் – குறள் 18:5
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
பொல்லாத சூழ கெடும் – குறள் 18:6
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன் – குறள் 18:7
வெஃகின் (2)
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
குற்றமும் ஆங்கே தரும் – குறள் 18:1
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு – குறள் 18:10
வெஃகுதல் (1)
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
புன்மை இல் காட்சியவர் – குறள் 18:4
வெகுளாமை (2)
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று – குறள் 31:8
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி – குறள் 106:10
வெகுளி (6)
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணம் ஏயும் காத்தல் அரிது – குறள் 3:9
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் – குறள் 4:5
உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின் – குறள் 31:9
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் – குறள் 36:10
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்கு உடையார் மா நிலத்து இல் – குறள் 53:6
நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது – குறள் 87:4
வெகுளியின் (1)
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு – குறள் 54:1
வெகுளியை (1)
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் – குறள் 31:3
வெகுளும் (1)
கல்லான் வெகுளும் சிறு பொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி – குறள் 87:10
வெண்மை (1)
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
உடையம் யாம் என்னும் செருக்கு – குறள் 85:4
வெம் (2)
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லை கெடும் – குறள் 57:3
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
வேந்து செறப்பட்டவர் – குறள் 90:5
வெய்து (2)
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும் – குறள் 57:9
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து – குறள் 113:8
வெயர்ப்ப (1)
ஊடி பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்ப
கூடலின் தோன்றிய உப்பு – குறள் 133:8
வெயில் (1)
என்பு இலதனை வெயில் போல காயுமே
அன்பு இலதனை அறம் – குறள் 8:7
வெருவந்த (1)
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லை கெடும் – குறள் 57:3
வெருவந்து (1)
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும் – குறள் 57:9
வெரூஉம் (1)
பரியது கூர் கோட்டது-ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின் – குறள் 60:9
வெல் (1)
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை – குறள் 77:1
வெல்லல் (1)
சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது – குறள் 65:7
வெல்லும் (5)
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது – குறள் 49:1
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்
நீங்கின் அதனை பிற – குறள் 50:5
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து – குறள் 65:5
சிறுமையும் செல்லா துனியும் வறுமையும்
இல் ஆயின் வெல்லும் படை – குறள் 77:9
வெல்வது (1)
முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றி
பற்றியார் வெல்வது அரண் – குறள் 75:8
வெள்ள (1)
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
நீந்தல-மன்னோ என் கண் – குறள் 117:10
வெள்ளத்து (2)
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு – குறள் 60:5
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ள கெடும் – குறள் 63:2
வெளிப்படும்-தோறும் (1)
களி-தொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம்
வெளிப்படும்-தோறும் இனிது – குறள் 115:5
வெளியார் (1)
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
வான் சுதை வண்ணம் கொளல் – குறள் 72:4
வெளிறு (1)
அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியும்-கால்
இன்மை அரிதே வெளிறு – குறள் 51:3
வெறி (1)
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேத்தோள் அவட்கு – குறள் 112:3
வெறிய (1)
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும்
வெஃகி வெறிய செயின் – குறள் 18:5
வெறுக்கை (2)
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
மரம் மக்கள் ஆதலே வேறு – குறள் 60:10
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
அஃது இறந்து வாழ்தும் எனல் – குறள் 98:1
வெறுக்கையுள் (1)
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை – குறள் 77:1
வெறுத்தக்க (1)
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு – குறள் 100:3
வெறுப்பு (1)
குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பு இல
வேண்டுப வேட்ப சொலல் – குறள் 70:6
வென்ற (1)
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
புன்மை இல் காட்சியவர் – குறள் 18:4
வென்றதூஉம் (1)
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று – குறள் 94:1
வென்றார் (1)
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலின் காணப்படும் – குறள் 133:7
வென்றி (2)
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல் அதூஉம் கோடாது எனின் – குறள் 55:6
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு – குறள் 69:3
வென்றிடினும் (1)
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று – குறள் 94:1
வென்று (1)
வினை கலந்து வென்று ஈக வேந்தன் மனை கலந்து
மாலை அயர்கம் விருந்து – குறள் 127:8
வென்றுவிடல் (1)
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம்
தகுதியான் வென்றுவிடல் – குறள் 16:8