கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மா 9
மாக்கள் 2
மாசு 12
மாட்சி 3
மாட்சித்து 1
மாட்சித்து-ஆயினும் 1
மாட்சியின் 1
மாட்டு 7
மாட்டும் 5
மாடு 1
மாண் 7
மாண்_இழை 1
மாண்ட 6
மாண்டது 3
மாண்டற்கு 1
மாண்டார் 2
மாண்பு 3
மாண 3
மாணா 7
மாணா-கடை 1
மாணாத 1
மாணார்க்கு 1
மாத்திரையர் 1
மாதர் 4
மாதர்-கொல் 1
மாந்தர் 6
மாந்தர்-தம் 1
மாந்தர்க்கு 3
மாய்ந்து 1
மாய்வது 1
மாய்வர் 1
மாய 2
மாயா 1
மாயும் 2
மார்பு 2
மாரி 2
மாலும் 1
மாலை 8
மாலைக்கு 2
மாலையவர் 1
மாலையாளரை 1
மாலையோ 1
மாழ்கும் 1
மாற்ற 1
மாற்றம் 3
மாற்றல் 1
மாற்றலர் 1
மாற்றார்க்கு 1
மாற்றாரை 1
மாற்றான் 1
மாற்றும் 1
மாற்றுவார் 1
மாறா 1
மாறு 2
மாறுபாடு 1
மானம் 5
மானமும் 1
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மா (9)
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – குறள் 7:8
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி – குறள் 25:5
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்கு உடையார் மா நிலத்து இல் – குறள் 53:6
குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன்
அடி தழீஇ நிற்கும் உலகு – குறள் 55:4
மடி உளான் மா முகடி என்ப மடி இலான்
தாள் உளான் தாமரையினாள் – குறள் 62:7
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை – குறள் 82:4
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும் பால் பட்டன்று இருள் – குறள் 100:9
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மர_பாவை சென்று வந்த அற்று – குறள் 106:8
தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
அ மா அரிவை முயக்கு – குறள் 111:7
மாக்கள் (2)
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
புன்மை தெரிவார் அகத்து – குறள் 33:9
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என் – குறள் 42:10
மாசு (12)
மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற – குறள் 4:4
மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – குறள் 11:6
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர் – குறள் 20:9
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – குறள் 28:8
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள் 32:1
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள் 32:2
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசு அறு காட்சியவர்க்கு – குறள் 36:2
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
மாசு ஊர மாய்ந்து கெடும் – குறள் 61:1
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள் – குறள் 65:6
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசு அற்ற
சில சொல்லல் தேற்றாதவர் – குறள் 65:9
மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பு இலார் நட்பு – குறள் 80:10
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார் – குறள் 96:6
மாட்சி (3)
மணை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
எனை மாட்சித்து-ஆயினும் இல் – குறள் 6:2
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு – குறள் 6:10
எனை மாட்சித்து ஆகிய-கண்ணும் வினை மாட்சி
இல்லார்-கண் இல்லது அரண் – குறள் 75:10
மாட்சித்து (1)
எனை மாட்சித்து ஆகிய-கண்ணும் வினை மாட்சி
இல்லார்-கண் இல்லது அரண் – குறள் 75:10
மாட்சித்து-ஆயினும் (1)
மணை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
எனை மாட்சித்து-ஆயினும் இல் – குறள் 6:2
மாட்சியின் (1)
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள் – குறள் 65:6
மாட்டு (7)
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – குறள் 1:5
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னை-கொல் ஏதிலார் மாட்டு – குறள் 19:8
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு
என் ஆற்றும்-கொல்லோ உலகு – குறள் 22:1
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்பு உள பாடு அறிவார் மாட்டு – குறள் 100:5
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார் மாட்டு – குறள் 106:4
அறி-தொறு அறியாமை கண்டு அற்றால் காமம்
செறி-தோறும் சே_இழை மாட்டு – குறள் 111:10
நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு
இசையும் இனிய செவிக்கு – குறள் 120:9
மாட்டும் (5)
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும்
வெஃகி வெறிய செயின் – குறள் 18:5
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் – குறள் 31:3
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃது ஒப்பது இல் – குறள் 54:6
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை – குறள் 55:1
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு – குறள் 100:1
மாடு (1)
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை – குறள் 40:10
மாண் (7)
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நில மிசை நீடு வாழ்வார் – குறள் 1:3
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று – குறள் 41:7
படி உடையார் பற்று அமைந்த-கண்ணும் மடி உடையார்
மாண் பயன் எய்தல் அரிது – குறள் 61:6
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
வேண்டா பொருளும் அது – குறள் 91:1
வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா
பூரியர்கள் ஆழும் அளறு – குறள் 92:9
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
மாண்_இழை கண் ஒவ்வேம் என்று – குறள் 112:4
மாண்_இழை (1)
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
மாண்_இழை கண் ஒவ்வேம் என்று – குறள் 112:4
மாண்ட (6)
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இலவர்க்கு – குறள் 61:4
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
மாண்ட உஞற்று இலர் – குறள் 61:7
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு – குறள் 77:6
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் – குறள் 90:7
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர் – குறள் 92:5
மாண்டது (3)
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு – குறள் 64:1
வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு – குறள் 64:2
முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து
வீறு எய்தி மாண்டது அரண் – குறள் 75:9
மாண்டற்கு (1)
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன் – குறள் 18:7
மாண்டார் (2)
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – குறள் 28:8
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண்
ஊறு எய்தி உள்ளப்படும் – குறள் 67:5
மாண்பு (3)
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை – குறள் 6:1
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
இல்லவள் மாணா-கடை – குறள் 6:3
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு – குறள் 44:2
மாண (3)
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாண பெரிது – குறள் 11:2
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாண பெரிது – குறள் 13:4
உள் பகை அஞ்சி தன் காக்க உலைவு இடத்து
மண் பகையின் மாண தெறும் – குறள் 89:3
மாணா (7)
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை – குறள் 32:7
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 36:1
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு – குறள் 44:2
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும் – குறள் 89:4
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 101:2
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு – குறள் 130:7
மாணா-கடை (1)
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
இல்லவள் மாணா-கடை – குறள் 6:3
மாணாத (1)
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து
மாணாத செய்வான் பகை – குறள் 87:7
மாணார்க்கு (1)
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது – குறள் 83:3
மாத்திரையர் (1)
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா
களர் அனையர் கல்லாதவர் – குறள் 41:6
மாதர் (4)
கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில் – குறள் 109:7
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல
மறு உண்டோ மாதர் முகத்து – குறள் 112:7
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி – குறள் 112:8
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சி பழம் – குறள் 112:10
மாதர்-கொல் (1)
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – குறள் 109:1
மாந்தர் (6)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும் – குறள் 3:8
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – குறள் 28:8
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறை நிலத்தொடு ஒட்டல் அரிது – குறள் 50:9
எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான்
வேறு ஆகும் மாந்தர் பலர் – குறள் 52:4
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்த-கடை – குறள் 97:4
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
நாண் உடைமை மாந்தர் சிறப்பு – குறள் 102:2
மாந்தர்-தம் (1)
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு – குறள் 60:5
மாந்தர்க்கு (3)
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்று அனைத்து ஊறும் அறிவு – குறள் 40:6
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு – குறள் 46:2
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் – குறள் 46:3
மாய்ந்து (1)
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
மாசு ஊர மாய்ந்து கெடும் – குறள் 61:1
மாய்வது (1)
பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண் புக்கு மாய்வது மன் – குறள் 100:6
மாய்வர் (1)
குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்று அன்னார் மாய்வர் நிலத்து – குறள் 90:8
மாய (2)
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
மாய மகளிர் முயக்கு – குறள் 92:8
பல மாய கள்வன் பணி மொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை – குறள் 126:8
மாயா (1)
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயும் என் மாயா உயிர் – குறள் 123:10
மாயும் (2)
வகை அறிந்து தன் செய்து தன் காப்ப மாயும்
பகைவர்-கண் பட்ட செருக்கு – குறள் 88:8
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயும் என் மாயா உயிர் – குறள் 123:10
மார்பு (2)
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு
கள் அற்றே கள்வ நின் மார்பு – குறள் 129:8
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு – குறள் 132:1
மாரி (2)
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு
என் ஆற்றும்-கொல்லோ உலகு – குறள் 22:1
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்த அனையது உடைத்து – குறள் 101:10
மாலும் (1)
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – குறள் 109:1
மாலை (8)
தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர் – குறள் 114:5
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி
துன்பம் வளர வரும் – குறள் 123:3
காதலர் இல் வழி மாலை கொலை_களத்து
ஏதிலர் போல வரும் – குறள் 123:4
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன் – குறள் 123:6
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இ நோய் – குறள் 123:7
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு
மாலை படர்தரும் போழ்து – குறள் 123:9
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயும் என் மாயா உயிர் – குறள் 123:10
வினை கலந்து வென்று ஈக வேந்தன் மனை கலந்து
மாலை அயர்கம் விருந்து – குறள் 127:8
மாலைக்கு (2)
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
மாலைக்கு செய்த பகை – குறள் 123:5
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை – குறள் 123:8
மாலையவர் (1)
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கை செய்து ஊண் மாலையவர் – குறள் 104:5
மாலையாளரை (1)
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயும் என் மாயா உயிர் – குறள் 123:10
மாலையோ (1)
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ வாழி பொழுது – குறள் 123:1
மாழ்கும் (1)
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னுமவர் – குறள் 66:3
மாற்ற (1)
குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
மடி ஆண்மை மாற்ற கெடும் – குறள் 61:9
மாற்றம் (3)
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன் – குறள் 69:9
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
மாற்றம் கொடுத்தல் பொருட்டு – குறள் 73:5
மாற்றல் (1)
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மன கவலை மாற்றல் அரிது – குறள் 1:7
மாற்றலர் (1)
முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து
வீறு எய்தி மாண்டது அரண் – குறள் 75:9
மாற்றார்க்கு (1)
குணம் இலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து – குறள் 87:8
மாற்றாரை (1)
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை – குறள் 99:5
மாற்றான் (1)
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கி செயல் – குறள் 48:1
மாற்றும் (1)
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை – குறள் 99:5
மாற்றுவார் (1)
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் – குறள் 23:5
மாறா (1)
கூறாமை நோக்கி குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும்
மாறா நீர் வையக்கு அணி – குறள் 71:1
மாறு (2)
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை – குறள் 87:1
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல
துய்க்க துவர பசித்து – குறள் 95:4
மாறுபாடு (1)
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு – குறள் 95:5
மானம் (5)
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
மானம் உடையது அரசு – குறள் 39:4
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு – குறள் 77:6
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் – குறள் 97:9
இளி வரின் வாழாத மானம் உடையார்
ஒளி தொழுது ஏத்தும் உலகு – குறள் 97:10
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
மானம் கருத கெடும் – குறள் 103:8
மானமும் (1)
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு – குறள் 44:2