முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பைதல் (6)
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா
பைதல் உழப்பது எவன் – குறள் 118:2
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
காம நோய் செய்த என் கண் – குறள் 118:5
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி
துன்பம் வளர வரும் – குறள் 123:3
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு
மாலை படர்தரும் போழ்து – குறள் 123:9
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்-கண் இல் – குறள் 125:3
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
பைதல் நோய் எல்லாம் கெட – குறள் 127:6
பைதலும் (1)
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் – குறள் 120:7
பைம் (3)
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
களை கட்டதனொடு நேர் – குறள் 55:10
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:4
முயங்கிய கைகளை ஊக்க பசந்தது
பைம் தொடி பேதை நுதல் – குறள் 124:8
பைய (1)
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
பசையினள் பைய நகும் – குறள் 110:8