Select Page

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பேஎய் (1)

அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்
பேஎய் கண்ட அன்னது உடைத்து – குறள் 57:5

TOP


பேடி (2)

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாள் ஆண்மை போல கெடும் – குறள் 62:4
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல் – குறள் 73:7

TOP


பேணப்படும் (1)

காணா சினத்தான் கழி பெரும் காமத்தான்
பேணாமை பேணப்படும் – குறள் 87:6

TOP


பேணலர் (1)

நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியல் ஞாலம்
பேணலர் மேலாயவர் – குறள் 102:6

TOP


பேணா (1)

நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
பேணா பெரும் குற்றத்தார்க்கு – குறள் 93:4

TOP


பேணாது (5)

அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான் – குறள் 17:3
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் – குறள் 90:2
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணும் தரும் – குறள் 91:2
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்
காணாது அமைவு இல கண் – குறள் 118:8
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை
காணாது அமையல கண் – குறள் 129:3

TOP


பேணாமை (2)

நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும்
பேணாமை பேதை தொழில் – குறள் 84:3
காணா சினத்தான் கழி பெரும் காமத்தான்
பேணாமை பேணப்படும் – குறள் 87:6

TOP


பேணான் (1)

பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்கு உடையார் மா நிலத்து இல் – குறள் 53:6

TOP


பேணி (6)

தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் – குறள் 6:6
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
பிறவும் தம போல் செயின் – குறள் 12:10
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார் பேணி கொளல் – குறள் 45:2
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை
பேணி தமரா கொளல் – குறள் 45:3
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
பேணி புணர்பவர் தோள் – குறள் 92:7
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரை
பேணி கொள்வேம் என்னும் நோக்கு – குறள் 98:6

TOP


பேணிக்கொளலும் (1)

பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்
பொருத்தலும் வல்லது அமைச்சு – குறள் 64:3

TOP


பேணியார் (1)

நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான்
பேணியார் பெட்ப செயின் – குறள் 126:7

TOP


பேதை (13)

பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
ஆகல்_ஊழ் உற்ற-கடை – குறள் 38:2
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து – குறள் 61:3
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏது இன்மை கோடி உறும் – குறள் 82:6
நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும்
பேணாமை பேதை தொழில் – குறள் 84:3
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்
தான் புக்கு அழுந்தும் அளறு – குறள் 84:5
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா
பேதை வினை மேற்கொளின் – குறள் 84:6
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்ற-கடை – குறள் 84:7
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்
கை ஒன்று உடைமை பெறின் – குறள் 84:8
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
குழாஅத்து பேதை புகல் – குறள் 84:10
முயங்கிய கைகளை ஊக்க பசந்தது
பைம் தொடி பேதை நுதல் – குறள் 124:8
முயக்கு-இடை தண் வளி போழ பசப்பு உற்ற
பேதை பெரு மழை கண் – குறள் 124:9
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர்
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – குறள் 125:8
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – குறள் 128:4

TOP


பேதைக்கு (4)

கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
பேதைக்கு அமர்த்தன கண் – குறள் 109:4
உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் – குறள் 111:6
மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண் – குறள் 114:6
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
பெண் நிறைந்த நீர்மை பெரிது – குறள் 128:2

TOP


பேதைமை (10)

பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்-கண் இல் – குறள் 15:1
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
செம் பொருள் காண்பது அறிவு – குறள் 36:8
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர் – குறள் 42:7
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் – குறள் 43:8
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும் – குறள் 51:7
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க
நோ தக்க நட்டார் செயின் – குறள் 81:5
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு
ஊதியம் போகவிடல் – குறள் 84:1
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கை அல்லதன்-கண் செயல் – குறள் 84:2
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – குறள் 91:10
காதல் அவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி என் நெஞ்சு – குறள் 125:2

TOP


பேதைமையுள் (1)

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கை அல்லதன்-கண் செயல் – குறள் 84:2

TOP


பேதையார் (5)

அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை
நின்றாரின் பேதையார் இல் – குறள் 15:2
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி
பின் நீர பேதையார் நட்பு – குறள் 79:2
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார்
கேண்மை ஒரீஇ விடல் – குறள் 80:7
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா
பேதையின் பேதையார் இல் – குறள் 84:4
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல் – குறள் 84:9

TOP


பேதையின் (1)

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா
பேதையின் பேதையார் இல் – குறள் 84:4

TOP


பேர் (7)

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – குறள் 15:8
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
பேர் அறிவாளன் திரு – குறள் 22:5
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை
ஊக்கம் அழிப்பது அரண் – குறள் 75:4
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்ற-கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு – குறள் 78:3
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
கழி பேர் இரையான்-கண் நோய் – குறள் 95:6
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
பெண் தகையான் பேர் அமர் கட்டு – குறள் 109:3
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின் – குறள் 119:10

TOP


பேர்த்து (1)

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு – குறள் 36:7

TOP


பேரா (2)

ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே
பேரா இயற்கை தரும் – குறள் 37:10
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் – குறள் 90:2

TOP


பேராண்மை (1)

சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர் – குறள் 97:2

TOP


பேரும் (1)

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்கு பேரும் தகைத்து – குறள் 49:6

TOP


பேற்றின் (1)

விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் – குறள் 17:2

TOP


பேறு (2)

மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு – குறள் 6:10
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கள் பேறு அல்ல பிற – குறள் 7:1

TOP