Select Page

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நெகிழ (1)

தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை
கொடியர் என கூறல் நொந்து – குறள் 124:6

TOP


நெஞ்சத்தர் (1)

துஞ்சும்-கால் தோள் மேலர் ஆகி விழிக்கும்-கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து – குறள் 122:8

TOP


நெஞ்சத்தார் (1)

நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து – குறள் 113:8

TOP


நெஞ்சத்தான் (2)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும் – குறள் 17:9
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையால் காணப்படும் – குறள் 19:5

TOP


நெஞ்சத்து (12)

கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12:5
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு – குறள் 17:1
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு – குறள் 29:8
முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு – குறள் 79:6
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – குறள் 91:10
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் – குறள் 93:8
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
நெஞ்சத்து அவலம் இலர் – குறள் 108:2
யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து
ஓஒ உளரே அவர் – குறள் 121:4
தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – குறள் 121:5
துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ
இன்னும் இழத்தும் கவின் – குறள் 125:10

TOP


நெஞ்சத்தை (1)

காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில் – குறள் 126:2

TOP


நெஞ்சம் (9)

கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவு ஒரீஇ அல்ல செயின் – குறள் 12:6
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம் – குறள் 26:3
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
தான் அறி குற்றப்படின் – குறள் 28:2
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் – குறள் 71:6
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
பேணி புணர்பவர் தோள் – குறள் 92:7
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு – குறள் 126:9
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய
நெஞ்சம் துணை அல்வழி – குறள் 130:9
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய
நெஞ்சம் தமர் அல்வழி – குறள் 130:10
ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா – குறள் 131:10

TOP


நெஞ்சில் (2)

அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு – குறள் 29:8
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
பேணி புணர்பவர் தோள் – குறள் 92:7

TOP


நெஞ்சின் (3)

நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 28:6
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து – குறள் 106:3
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு – குறள் 130:7

TOP


நெஞ்சினார்க்கு (2)

அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல் – குறள் 25:3
நிணம் தீயில் இட்ட அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் – குறள் 126:10

TOP


நெஞ்சு (16)

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – குறள் 29:1
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னை சுடும் – குறள் 30:3
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம் – குறள் 85:2
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – குறள் 109:1
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை
செறாஅய் வாழிய நெஞ்சு – குறள் 120:10
காதல் அவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி என் நெஞ்சு – குறள் 125:2
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – குறள் 125:6
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர்
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – குறள் 125:8
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
யார் உழை சேறி என் நெஞ்சு – குறள் 125:9
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – குறள் 127:4
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து
கூடல்-கண் சென்றது என் நெஞ்சு – குறள் 129:4
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது – குறள் 130:1
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை
செறாஅர் என சேறி என் நெஞ்சு – குறள் 130:2
பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு – குறள் 130:5
தனியே இருந்து நினைத்த-கால் என்னை
தினிய இருந்தது என் நெஞ்சு – குறள் 130:6
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
உள்ளும் உயிர் காதல் நெஞ்சு – குறள் 130:8

TOP


நெஞ்சே (11)

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னை சுடும் – குறள் 30:3
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
பலர் காணும் பூ ஒக்கும் என்று – குறள் 112:2
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
வாடூ தோள் பூசல் உரைத்து – குறள் 124:7
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து – குறள் 125:1
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்-கண் இல் – குறள் 125:3
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை
தின்னும் அவர் காணல் உற்று – குறள் 125:4
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்
உற்றால் உறாஅதவர் – குறள் 125:5
காமம் விடு ஒன்றோ நாண் விடு நன் நெஞ்சே
யானோ பொறேன் இ இரண்டு – குறள் 125:7
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது – குறள் 130:1
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – குறள் 130:3
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
துனி செய்து துவ்வாய் காண் மற்று – குறள் 130:4

TOP


நெடிது (2)

கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டுபவர் – குறள் 57:2
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு – குறள் 95:3

TOP


நெடிய (1)

கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
நெடிய கழியும் இரா – குறள் 117:9

TOP


நெடு (2)

கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து – குறள் 50:6
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் – குறள் 61:5

TOP


நெடும் (3)

நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின் – குறள் 2:7
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்
நீங்கின் அதனை பிற – குறள் 50:5
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் – குறள் 57:6

TOP


நெய்யால் (1)

நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான்
காமம் நுதுப்பேம் எனல் – குறள் 115:8

TOP


நெருஞ்சி (1)

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சி பழம் – குறள் 112:10

TOP


நெருநல் (1)

நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இ உலகு – குறள் 34:6

TOP


நெருநலும் (1)

இன்றும் வருவது-கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு – குறள் 105:8

TOP


நெருநற்று (1)

நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும்
எழு நாளேம் மேனி பசந்து – குறள் 128:8

TOP


நெருப்பினுள் (1)

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாது ஒன்றும் கண்பாடு அரிது – குறள் 105:9

TOP


நெறி (4)

பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் – குறள் 1:6
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி – குறள் 33:4
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி – குறள் 36:6
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி – குறள் 48:7

TOP